சிரிக்கும் புத்தர்
போரை வெறுத்த உன் பெயரில்
இங்கு அணு வெடி சோதனை ஒன்று
அரங்கேறியது 'சிரிக்கும் புத்தர்'-என்றே!
நாற்பது சதம் கஞ்சிக்கு ஏங்கும்
மக்கள் உள்ள நாட்டிலே நிதம்
ஒரு அணு ஆயுத சோதனை!
அக்கினி ஐந்தாம்! இங்கிருந்து தாக்குமாம்
உலகிற்கு சவால் விடும் செஞ்சீனாவை!
போதுமடா போராட்டம் வேண்டாம் விபரீதம்!
பொதுவுடைமை நாடடா அது வெடித்தால்
வரும் மூன்றாம் உலகப் போரடா!
சொல்வேன் நானடா கொஞ்சம் கேளடா!
திரைக் கதா நாயகர்களை நம்பாதே!
திரை அரங்கைத் தேவாலயமாக நினையாதே!
முன்னெடுத்த காலைப் பின் வைக்காதே!
சீனத்தின் வளர்ச்சியை நிதம் பாரு
அது எப்படி வந்தது என்றே கேளு
வந்துவிடும் வளர்ச்சி உன் நாட்டில்!
சீரழிச்ச சினிமாவும் இல்லை அங்கு
புழுத்துப் போன இலஞ்சமும் இல்லை
கேளடா அங்கு பஞ்சமும் இல்லை
புது உலகம் படைப்போம் வாடா
புதிய இந்தியாவில் நடிகனும் இல்லை
நாசகார நடிகைகளும் இல்லை என்றே!