Brain drain
The following incident is just one example of the order of the day. I know innumerable cases of students after doing their M.Sc or BE taking up jobs for which either they are over qualified or totally unconnected to their qualifications. But no use blaming them? There are not enough jobs to cater to all those qualified in a particular field. Unemployment is looming so large that people flock to any job that is available or they get.
என் நண்பரின் மகன், படிப்பில் சுட்டி. பள்ளி இறுதி வகுப்பில், 95 சதவீதம் மதிப்பெண் வாங்கி, கல்லூரியில், பி.எஸ்சி., பவுதீகம் எடுத்துப் படித்தான்.
அதில், சிறப்பாக தேர்ச்சி பெற்று, எம்.எஸ்.சி.,யும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பவுதீகத்தில் ஆராய்ச்சி மாணவனாகவும் சேர்ந்தான்.
நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்த நான், அவனை சந்தித்த போது, 'ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருக்கிறது?' என்று கேட்டேன், 'ஆராய்ச்சி எல்லாம் விட்டுட்டேன் அங்கிள்... இப்போ, வங்கி தேர்வு எழுதி, எழுத்தராக பணிபுரிகிறேன்...' என்று சொன்ன போது, தூக்கி வாரி போட்டது.
'வங்கியில் எழுத்தாளராக பணிபுரியவா, ஐன்ஸ்டைன் தியரியையும், அணு அமைப்பையும் படித்தாய்... பரிசோதனை சாலைகளில், எண்ணற்ற பரிசோதனைகளை செய்தாய்...' என்று கேட்டேன். அதற்கு அவன் கூறிய பதில் என்னை வியப்பட வைத்தது.
'அங்கிள்... வங்கிப் பணியில் எடுத்தவுடன், 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், 10 மணி நேர வேலை. ஏகப்பட்ட சலுகைகள்... இதெல்லாம் எங்கே கிடைக்கும்...' என்று கூறியவன், 'நிலையான வேலை என்றால் மட்டுமே திருமணத்துக்கு பெண் தருகின்றனர்...' என்றான்.
இது ஒரு உதாரணம் தான்; ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும் இதுபோன்ற, வெள்ளை, 'காலர்' வேலைகளிலும், 'டிவி' சினிமா துறைகளில் சாதாரண வேலைகளிலும் உள்ளனர்.
அரசு, கோடி கோடியாக செலவழித்து, பல்கலைக் கழகங்களை உருவாக்குவது, அந்தந்த துறைகளில் பங்களிப்பை தரத்தானே தவிர, சம்பளம் மட்டும் பெறுவதற்கு இல்லை என்பதை இவரைப் போன்றவர்கள் உணர வேண்டும்.
இத்தகைய சிந்தனையும் ஒருவகையில், மூளைக்கழிவு தான். மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர் மற்றும் அரசு சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பிரச்னை இது!
— எம்.கே.நாராயணன், கோயம்புத்தூர்
தின மலர் ( இது உங்கள் இடம்)