• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
வ்ருக அஸுர கதா2

ப4த்3ரம் தே சா’குநேய ப்4ரமாஸி கிமது4னா
த்வம் பிசா’சஸ்ய வாசா
ஸந்தே3ஹச்’சேன்மதுக்தௌ தவ கிமு ந
கரேஷ்யங்கு3லீ மங்க3 மௌலௌ|
இத்த2ம் த்வத்3 வாக்ய மூட4ச்’சி’ரஸி
க்ருதகரஸ்ஸோsபதச்சின்ன பாதம்
ப்ரம்சோ’ ஹ்யேவம் பரோபாஸிது ரபி
ச கதி: சூ’லினோsபி த்வமேவ || ( 89 – 6 )

“ஹே விருகாசுரனே! நீ க்ஷேமமா? நீ இந்தப் பிசாசின் சொல்லைக் கேட்டுக் கொண்டு ஏன் வீணாக ஓடித் திரிகின்றாய்? அப்பனே! உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே ஏன் கையை வைக்கவில்லை?” இவ்வாறு தாங்கள் சொல்லக் கேட்டு மதி மயங்கிய அந்த விருகாசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டான். வேரறுந்த மரம் போல விழுந்து இறந்தான். வேறு கடவுளை உபாசிப்பவனுக்கு இவ்விதமாக நாசம் உண்டாகிறது. அது மட்டுமல்ல! சூலபாணிக்குக் கூட தாங்களே அபயம். ( 89 – 6 )


ப்3ருகு3ம் கில ஸரஸ்வதி நிகட வாஸினஸ் தாபஸாஸ்
த்ரிமூர்த்திஷு ஸமாதிச’ன்னதி4க ஸத்வதாம் வேதி3தும்|
அயம் புன ரனாத3ராத் உதி3த ருத்3த4 ரோஷே விதௌ4
ஹரேsபி ச ஜிஹீம்ஸிஷௌ கி3ரிஜயா த்4ருதே த்வாமகா3த் || (89 – 7 )


சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த தபஸ்விகள் மும்மூர்த்திகளில் அதிகமான சத்துவ குணம் உடையவரைக் கண்டறிவதற்கு ப்ருகு முனிவரை அனுப்பினார்கள் அல்லவா? அவரும் பிரம்ம தேவர் தன்னை ஆதரிக்காததால் முதலில் கோபம் அடைந்து பிறகு சாந்தம் அடைந்தார். பரமேஸ்வரனும் அவரைக் கொல்ல விரும்பியபோது பார்வதியால் தடுக்கப்பட்டார். அதன் பின் தங்களை வந்து அடைந்தார் அல்லலவா?
( 89 – 7 )

ஸுப்தம் ரமாங்கபு4வி பங்கஜ லோசனம் த்வாம்
விப்ரே விநிக்4னதி பதே3ன முதோத்திதஸ்த்வம்|
ஸர்வம் க்ஷமஸ்வ முனிவர்ய ப4வேத்ஸதா3 மே
த்வத் பாத3சிஹ்ன மிஹ பூ4ஷணமித்யவாதீ3: || ( 89 – 8 )


லக்ஷ்மி தேவியின் மடியில் நித்திரை செய்கிறவரும், தாமரைக் கண்ணனும் ஆகிய தங்களை அந்த ப்ருகு முனிவர் காலால் எட்டி உதைத்த போது தாங்கள் மிகவும் சந்தோஷத்தோடு எழுந்து, “ஹே முனிஸ்ரேஷ்டரே! எல்லாவற்றையும் பொறுக்க வேண்டும். தங்கள் திருவடியின் அடையாளம் எனது மார்பில் எப்போதும் அலங்காரமாக இருக்கட்டும்” என்று சொன்னீ ர்கள் அல்லவா? ( 89 – 8)

நிச்’சித்ய தே ச ஸுத்3ருட4ம் த்வயி ப3த்3த4பா4வா:
ஸாரஸ்வதா முனிவர த3தி4ரே விமோக்ஷம்|
த்வாமேவ மச்யுத புனச்’ ச்யுதி தோ3ஷஹீனம்
ஸத்வாச்சயைக தனுமேவ வயம் ப4ஜாம:|| ( 89 – 9 )

சரஸ்வதிநதி தீரவாசிகாளான அம்முனிஸ்ரேஷ்டர்களும் நிச்சயம் பண்ணிக் கொண்டு தங்களிடத்தில் திடமான பக்தி கொண்டு மோக்ஷம் அடைந்தார்கள். ஹே அச்யுதா! இவ்விதம் ச்யுதி அல்லது நழுவுதல் என்ற தோஷம் இல்லாத சத்வ குணப் பிரதான சரீரத்தை உடைய உங்கள் ஒருவரையே நாங்கள் சேவிக்கின்றோம். ( 89 – 9 )

ஜக3த் ஸ்ருஷ்ட்யாதௌ3 த்வாம் நிக3ம நிவஹைர் வந்தி3பி4ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித் பரம ரஸ நிர்த்3வைத வபுஷம்|
பராத்மானம் பூ4மான் பசு’ப வனிதா பா4க்3ய நிவஹம்
பரீதாபச்’ராந்த்யை பவனபுர வாஸின் பரிப4ஜே || ( 89 – 10)


ஹே குருவாயூரப்பா! உலக சிருஷ்டியின் துவக்கத்தில் ஸ்துதி செய்யும் பாடகர்கள் போல தேவ சமூஹத்தினரால் துதிகப்பட்டவரும்; சச்சிதானந்தரூபியும்; பரமார்த்தரூபியும்;கோபஸ்த்ரீக்களின் பாக்கியக் குவியலுமான தங்களைத் தாபத்த்ரய நிவர்த்திக்காக நான் நன்றாக சேவிக்கின்றேன். ( 89 – 10 )
 
த3ச’கம் 90 ( 1 to 5)

த3ச’கம் 90 : விஷ்ணு மஹத்வ ஸ்தா2பனம்

வ்ருக ப்4ருகு3 மோஹின்யம்ப3ரீஷாதி3 வ்ருத்தேஷு

அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ ச’ர்வாதி3 ஜைத்ரம் |
ஸ்தித மிஹ பரமாத்மன் நிஷ் கலார்வாக3 பி4ன்னம்
கிமபி தத3வபா4தம் தத்3தி4 ரூபம் தவைவ || (90 – 1)

ஹே பரமாத்மா! விருகாசுரன், பிருகு முனிவர், அம்பரீஷன். போன்றவர்களின் சரித்திரத்தால், பரமசிவன் முதலான பிற தேவதைகளைக் காட்டிலும் தங்கள் மஹிமை உயர்ந்தது என்று ஸ்தாபிக்கப்பட்டது. நிஷ்களப் பரமாத்மாவாகிய தாங்கள் சகளர்களாகிய மற்ற தெய்வங்களைக் காட்டிலும் இன்னவிதம் என்று சொல்ல முடியாதபடி வேறுபட்டுப் பிரகாசிக்கின்றீர்கள்.

மூர்த்தி த்ரயேச்’வர ஸதா3சி’வ பஞ்சகம் யத் ப்ராஹு :
பராத்மா வபுரேவ ஸதா3சி’வோSஸ்மின் |
தத்ரேச்’வரஸ்து ஸ விகுண்ட2 பத3ஸ்த்வ மேவ
த்ரித்வம் புனர் ப4ஜஸி ஸத்யபதே3 த்ரிபா4கே3 || (90 – 2)


மூர்த்திப் பஞ்சகம் என்று பிரமன், விஷ்ணு, ருத்திரன், ஈச்வரன், சதாசிவன் என்ற ஐந்து தெய்வங்களைக் கூறுகின்றனர். அவர்களில் சதாசிவன் என்னும் பரமாத்மா ஸ்வரூபி தாங்களே. ஈஸ்வரனும் தாங்களே. வைகுண்ட வாசியாகிய தாங்களே பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்ற மும்மூர்த்திகளாகவும் திகழ்கின்றீர்கள்.

தத்ராபி ஸாத்விக தனும் தவ விஷ்ணுமாஹூ
தா4தா து ஸத்வ விரலோ ராஜசைவ பூர்ண: |
ஸத்வோத் கட த்வமபி சாஸ்தி தமோ விகார
சேஷ்டாதி3 கஞ்ச தவ ச’ங்கர நாம்னி மூர்த்தௌ || (90 – 3 )


அந்த மும்மூர்த்திகளில் தங்களின் சுத்த சத்துவ ஸ்வரூபத்தை விஷ்ணு என்று கூறுவர். பிரமன் சத்துவ குணம் குறைந்தும் ரஜோ குணம் மிகுந்தும் உள்ளார். சங்கரன் தமோ குணம் மிகுந்து காணப் படுகின்றார்.

தம் ச த்ரிமூர்த்யதிக3ம் பரபூருஷம் த்வாம்
ச’ர்வாத்மனாSபி க2லு ஸர்வ மயத்வ ஹேதோ: |
ச’ம் ஸந்த்யுபாஸான விதௌ4 தத3பி ஸ்வதஸ்து
த்வத்3ரூப மித்யதி த்3ருட4ம் ப3ஹு ந: ப்ரமாணம் || (90 – 4)


மும்மூர்த்திகளுக்கு அதீதனக இருக்கும் அந்த ஈஸ்வரனையும், பிரம்மாண்டத்துக்கு உள்ளும் வெளியும் வியாபித்து உள்ள ஸர்வ ஸ்வ்ரூபியும் பரமாத்மாவும் ஆகிய தங்களையும் உபாசன விதியில் சிவ ஸ்வரூபமாகக் கூறுகின்றனர். இதற்குத் திடமான பிரமாணங்களும் உள்ளன.

ஸ்ரீ ச’ங்கரோSபி ப4க3வன் ஸகலேஷு தாவத்
த்வாமேவ மானயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வன் நிஷ்ட2மேவ ஸ ஹி நாம ஸஹஸ்ரகாதி3
வ்யாக்2யத்3 ப4வத் ஸ்துதி பரச்’ச க3திம் க3தோSந்தே || (90 – 5 )


ஸ்ரீ சங்கர பகவத் பாதரும் மும் மூர்த்திகளாகிய சகளர்களில் தங்களையே வெகுமானிக்கின்றார். அவர் பக்ஷ பாதி அல்ல. அவர் தங்களின் சஹஸ்ர நாமத்துக்கு வியாக்கியானம் செய்தார். தாங்களையே துதித்து நற்கதியும் அடைந்தார்.
 
த3ச’கம் 90 ( 6 to 11)

த3ச’கம் 90 : விஷ்ணு மஹத்வ ஸ்தா2பனம்

மூர்த்தி த்ரயாதிக3ம் உவாச ச மந்த்ர சா’ஸ்த்ர
ஸ்யாதௌ3 கலாய ஸுஷுமம் ஸகலேச்’வரம் த்வாம் |
த்4யானம் ச நிஷ்கல மசௌ ப்ரணவே க2லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா3த3 நான்யம் || (90 – 6 )


சங்கர பகவத்பாதர் மந்திர சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் மும்மூர்த்திகளுக்கும் அதீதனாகிய தங்களைக் காசாம்பூ நிறமுடையவராக வர்ணிக்கின்றார். பிரணவத்தில் நிஷ்கள தியானத்தையும் உரைத்து அங்கு நிஷ்களனாகவும், சகளனாகவும் தங்களையே கூறியுள்ளார். வேறு எவரையும் அல்ல.

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்3ரஹே
விஸம்ச’யம் த்வன் மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்த்தி யுக் ஸத்யபத3 த்ரிபா4க3த:
பரம் பத3ம் தே கதி2தம் ந சூ’லின : || (90 – 7 )


எல்லாவற்றினுடைய சாரத்தை கூறுகின்ற புராண சங்க்ரஹம் என்ற கிரந்தத்திலும் சந்தேகமே இல்லாமல் தங்கள் மகிமை தான் வர்ணிக்கப்படுகின்றது. தங்கள் ஸ்தானமே உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது. பரமேச்வரனுடைய ஸ்தானம் பற்றிக் கூறப் படவில்லை.

யத் ப்3ரஹ்ம கல்பம் இஹ பா4க3வத த்3விதீய
ஸ்கந்தோ4தி3தம் வபு ரனாவ்ருத மீச’ தா4த்ரே |
தஸ்யைவ நாம ஹரிச’ர்வ முக2ம் ஜகா3த3
ஸ்ரீ மாத4வ: சி’வ பரோSபி புராணஸாரே || (90 – 8 )


பிரம்மகல்பத்தில் பிரம்மதேவனுக்கு பிரத்தியக்ஷமாகக் கண்பிக்கப் பட்ட தங்கள் சரீரத்துக்கே ஹரி, சர்வன் முதலிய திரு நாமங்களை மாதவாச்சாரியார் (சிவபக்தனாக இருந்த போதிலும்) புராண சாரம் என்ற கிரந்தத்தில் உரைத்துள்ளார்.

யே ஸ்வ ப்ரக்ருத்யனுகுண கி3ரிச’ம் ப4ஜந்தே
தேஷாம் ப2லம் ஹி த்3ருட4யைவ ததீ3ய ப4க்த்யா |
வ்யாஸோ ஹி தேன க்ருத்வா நாதி4காரி ஹேதோ:
ஸ்காந்தா3தி3கேஷு தவ ஹானிவசோS ர்த்தவாதை3: || (90 – 9
)

எவர் எவர் தம் தம் வாசனைக்கு ஏற்பப் பரமேச்வரனைச் சேவிக்கின்றார்களோ அவர்களின் பலம் அந்த பரமேச்வர பக்தியினால் உண்டாகின்றது. அதனால் தான் வியாச முனிவர் ஸ்காந்தம் முதலியவற்றில் அதன் அதிகாரிக்கு உயர்வையும், தங்களுக்குத் தாழ்வையும் கூறியுள்ளார்.

பூ4தார்த்த2 கீர்த்தி ரனுவாத3 விருத்3த4 வாதௌ3
த்ரேதா4Sர்த்த2 வாத3 க3தய: க2லு ரோசனார்த்தா2: |
ஸ்காந்தா4தி3கேஷு ப3ஹவோத்ர விருத்3த4வாதா3
ஸ்த்வத்தாமஸத்வ பரிபூ4த்யுபசி’க்ஷணாத்3யா: || (90 – 10)


நடந்ததைச் சொல்லுவது, விரோதமில்லாத அர்த்தத்தைச் சொல்லுவது, விருத்தமான அர்த்தத்தைச் சொல்வது என்று மூன்று வித அர்த்தவாதங்களும் கூறும் விஷயத்தில் ருசியை உண்டு பண்ணுவதற்காகவே. தங்களுக்குத் தாமசத்தையும், பராஜயத்தையும் கூறுகின்ற ஸ்காந்தம் முதலியவை விருத்தவாதம் என்னும் அர்த்த வாதங்களே.

யத் கிஞ்சித3ப்யவிது3ஷாSபி விபோ4 மயோக்தம்
தன்மாத்ர சா’ஸ்த்ர வசனாத்3யபி4 த்3ருஷ்ட மேவ |
வ்யாஸோக்தி ஸாரமய பா4க3வதோபகீ3த
க்லேசா’ன் விதூ4ய குரு ப4க்திப4ரம் பராத்மன் || (90 – 11
)

அறிவில்லாதவனாக இருந்தாலும் என்னால் கூறப்பட்டவை மந்திர சாஸ்திரம் முதலிவற்றில் காணப் படுகின்ற விஷயங்களே. வியாச முனிவரின் வசன சாரங்கள் நிறைந்த பாகவதத்தில் துதிக்கப்படும் பரமாத்மாவே! என் கஷ்டங்களை மாற்றி எனக்குத் திடமான பக்தியைத் தந்தருள்வீர்!
 
த3ச’கம் 91 : ப4க்தி மஹத்வம்

ஸ்ரீக்ருஷ்ண த்வத்பா3தோபாஸன
மப4யதமம் பு3த்3தி4மித்2யார்த்த2 த்ரு3ஷ்டே:
மர்த்யஸ்யார்தஸ்ய மன்யே வ்யபஸரதி
ப4யம் யேன ஸர்வாத்மனைவ |
யத்தாவத் த்வத்ப்ரணீ தனிஹா ப4ஜன விதீ4
நாஸ்தி2தோ மோஹமார்கே3
தா4வன்னப்யாவ்ருதாக்ஷ: ஸ்க2லதி ந குஹசித்
தே3வதே3வாகி2லாத்மன் || ( 91 -1)


தேவர்களின் தேவனே! சர்வாத்மனே! ஸ்ரீ கிருஷ்ணா ! பொய்யான சரீரத்தில் “நான்” என்ற தேக அபிமானம் கொண்டவனுக்கும், உடமைப் பொருட்களின் மேல் “இவை என்னுடையவை” என்று உறுதியான அபிமானத்தை உடையவனுக்கும், இந்தக் காரணங்களால் மரணம் அடையும்படி விதிக்கப்பட்டவனுக்கும், அதனால் மிகுந்த மன வருத்தம் உற்றவனுக்கும், பயத்தைப் போக்கடிக்கும் ஒரே சாதனம் தங்கள் திருவடிகளைத் தொழுவது என்று நான் கருதுகின்றேன். தங்கள் பாத சேவையால் பயம் முற்றிலுமாக விலகுகின்றது. பஜன மார்க்கங்களில், தங்களால் உபதேசிக்கப்பட்ட பஜனை முறைகள் மேற்கொள்பவன், மயக்கம் தரும் பாதையில், கண்களை மூடிக் கொண்டு ஓடினாலும், எங்குமே இடறி விழமாட்டான்.

பூ4மன் காயேன வாசா முஹுரபி
மனஸா த்வத்3ப3லப்ரேரிதாத்மா
யத்3யத் குர்வே ஸமஸ்தம் ததி3ஹ
பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ச்’வபாகஸ்த்வயி நிஹித மன:
கர்மவாகி3ந்த்3ரியார்த்த2
ப்ராணோ விச்வம் புனீதே ந து விமுக2
மனாஸ் த்வத்3 பதா3த்3விப்ரவர்ய : || (91 – 2 )


எங்கும் நிறைந்துள்ள ஈசா! தங்களுடைய சக்தியால் பிரேரணை செய்யப்பட்டுள்ளது என் மனம். அதனால் சரீரத்தினாலும், வாக்கினாலும் மனத்தினாலும் நான் எதை எதைச் செய்கின்றேனோ அவற்றை எல்லாம் பரமாத்மாவாகிய தங்களிடம் அர்ப்பணம் செய்கின்றேன். மனம், கர்மங்கள், வாக்கு, இந்திரியங்கள், அவற்றின் விஷயங்கள், பிராணன் இவற்றைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்பவன் தாழ்ந்த பிறவி எடுத்திருந்தாலும் உலகையே பரிசுத்தம் ஆக்குகின்றான். தங்களிடம் பராமுகமாக இருக்கும் அந்தணன் அவ்வாறு பரிசுத்தம் ஆக்குவதில்லை அல்லவா?

பீ4திர் நாம த்3விதீயாத்3 ப4வதி
நனு மன கல்பிதஞ்ச த்3விதீயம்
தேனைக்யாப்4யாஸ சீ’லோ ஹ்ருத3யமிஹ
யதா2ச’க்தி பு3த்3த்4யா நிருந்த்4யாத் |
மாயா வித்3தே4ஷு தஸ்மின் புனரபி ந
ததா2 பா4தி மாயாதி4நாத2ம்
தம் த்வாம் ப4க்த்யா மஹத்யா
ஸததமனுப4ஜனீச’ பீதி4ம் விஜஹ்யாம் || (91 – 3)


பயம் என்பது தன்னிடமிருந்து வேறுபட்ட ஒரு இரண்டாவது வஸ்துவிடம் தான் தோன்றுகின்றது. அந்த இரண்டாவது வஸ்துவும் சங்கல்ப விகல்ப ரூபமான அந்தக்கரண விருத்தியால் மட்டுமே அவ்வாறு மாறுபட்டதாகக் கற்பிக்கப் படுகின்றது. காரண காரியங்கள் ஒன்று என்பதை நான் எப்போதும் அப்பியாசம் செய்வேன். மனத்தை அந்தக்கரண விருத்தியால் ஒரு வஸ்துவில் நிலை நிறுத்துவேன். அந்த மனம் மாயையின் காரியங்களாகிய காம குரோதங்களால் வியாபிக்கப் பட்டு விட்டால், முன் போல நிலை நிறுத்தப் பட்டபோதிலும், அது முன் போலப் பிரகாசிப்பதில்லை. அதனால் மாயைக்கு அதிபதியான தங்களைத் திடமான பக்தியுடன் தொழுவேன். பயம் என்பதை முற்றிலுமாக விட்டு விடுவேன்.

ப4க்தேருத்பத்தி வ்ருத்3தி4
தவ சரணஜுஷாம் ஸங்க3மேனைவ பும்ஸாம்
ஆஸாத்3யே புண்யபா4ஜாம் ச்’ரிய இவ
ஜக3தி ஸ்ரீமதாம் ஸங்க3மேன |
தத்ஸங்கோ3 தே3வ பூ4யான்மம க2லு ஸததம்
தன்முகா2துன்மிஷத்3பி4 :
த்வன் மாஹத்ம்ய ப்ரகாரைர் ப4வதி ச
ஸுத்3ருடா4 ப4க்தி ருத்3தூ4த பாபா |(91 – 4 )


உலகில் செல்வந்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம் செல்வம் பெருகும். அது போன்றே தங்களுடைய திருவடிகளைச் சேவிக்கும் பக்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம் பக்தி உற்பத்தியாகி அது வளரும். தேவா! எப்போதும் எனக்குத் தங்கள் பக்தர்களின் சகவாசம் உண்டாகட்டும். அவர்கள் கூறுகின்ற தங்களின் மஹிமா விசேஷங்களால், எனக்குத் தங்களிடம் திடமான, என் பாவங்களைப் போக்க வல்ல உறுதியான பக்தி உண்டாகட்டும்.

ச்’ரேயோ மார்கே3ஷு ப4க்தாவதி4க
ப3ஹுமதிர் ஜன்ம கர்மாணி பூ4யோ
கா3யன் க்ஷேமாணி நமான்யபி தது3ப4யத:
ப்ரத்3ருதம் ப்ரத்3ருதாத்மா |
உத்3யத்3தாஸ: கதா3சித் குஹசித3பி ருத3ன்
க்வாபி க3ர்ஜன் ப்ரகா3யன்
உன்மாதீ3வ ப்ரந்ருத்யன்னயி குரு கருணாம்
லோகபா3ஹ்யச்’சரேயம் || (91 – 5)


முக்கியமான புருஷார்த்தமான மோக்ஷத்தைத் தரும் மார்க்கங்களில் ஒன்று பக்தி. அதில் அதிக ஆதரவு கொண்டவனாக நான்; க்ஷேமத்தையே தருகின்ற தங்களின் திரு அவதார லீலைகளையும், அவற்றினால் தங்களுக்கு உண்டான நாமங்களையும் கானம் செய்து கொண்டும், அவற்றால் மனம் உருகிச் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும், சில சமயங்களில் அழுது கொண்டும், சில சமயங்களில் கர்ஜித்துக் கொண்டும், பாடி கொண்டும், பித்தனைப் போல ஆடிக் கொண்டும், உலகில் பற்றின்றி சஞ்சரிபேனாகுக! அதற்குக் கருணை புரிவீர்!
 
த3ச’கம் 91 ( 6 to 10)

த3ச’கம் 91 : ப4க்தி மஹத்வம்

பூ4தான்யேதானி பூ4தாத்மகமபி
ஸகலம் பக்ஷி மத்ஸ்யான் ம்ருகா3தீ3ன்
மர்த்யான் மித்ராணி ச’த்ரூனபி யமித
மதிஸ்த்வன் மயான்யானமானி |
த்வத்ஸேவாயம் ஹி ஸித்3த்யேன்மம
தவ க்ருபயா ப4க்தி தா3ர்ட்4யம் விராக3:
த்வத்தத்வ ஸ்யாவபோ4தோ4Sபி ச பு4வனபதே
யத்ன பே4த3ம் வினைவ || (91 – 6)


பஞ்ச பூதங்கள், அவற்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சங்கள், பறவைகள், மீன்கள், மான் முதலிய மிருகங்கள், மனிதர்கள், நண்பர்கள், பகைவர்கள், அனைவருமே தங்களின் ஸ்வரூபம் என்று நிச்சயமான மனத்துடன் அவர்களை வணங்குவேனாகுக. லோகநாதா! தங்களுக்குச் சேவை புரியும் போது, தங்களின் கருணையால், திடமான பக்தியும், வைராக்கியமும், பகவத் தத்துவத்தின் மெய்யான ஞானமும் வேறு கடின முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே எனக்குச் சித்திக்கும்.

நோ முஹ்யன் க்ஷுத்ரு டா3த்3யைர்
ப4வஸரணி ப4வைஸ்த்வன்நிலீனாச’யத்வாத்
சிந்தாஸாதத்யசா’லீ நிமிஷலவமபி
த்வத் பதா3த3ப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டி வ்யஸன விரஹிதோ
மாயிகத்வாவ போ3தா4த்
ஜ்யோத்ஸ்னாபி4ஸ்த்வன் நகே2ந்தோ ரதி4க
சி’சி’ரி தேனாத்மனா ஸஞ்சரேயம் || (91 -7 )


தங்களிடம் லயித்த மனம் கொண்டு; அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பசி, தாகம் போன்றவைகளால் மயக்கம் அடையாது; தங்களை இடைவிடாது தியானம் செய்து கொண்டு; ஒரு நிமிடம் கூடத் தங்கள் திருவடியிருந்து சலியாது; இவை மாயா காரியங்கள் என்ற அறிவினால் பிரியமான வஸ்துக்களால் மன மகிழ்ச்சியும், பிரியமில்லாத வஸ்துக்களால் மன வருத்தமும் அடையாமல், தங்கள் திருவடிகளின் நகங்கள் வீசுகின்ற சந்திரிகையால் குளிர்ந்த மனத்துடன் சஞ்சரிப்பேன் ஆகுக!

பூ4தேஷ்வேஷு த்வதை3க்ய ஸ்ம்ருதி
ஸமதி4க3தௌ நாதி4காரோSது4னா சேத்
த்வத்ப்ரேம த்வத்கமைத்ரி ஜட3மதிஷு
க்ருபா த்3விட்ஸு பூ4யாது3பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்ச்சா
குதுகமருதரச்’ரத்3த4யா வர்த்த4தாம் மே
த்வத்ஸம்ஸேவி ததா2Sபி த்3ருதமுபலப4தே
ப4க்தலோகோத்தமத்வம் || (91 – 8 )


எல்லாப் பிராணிகளிடமும் தங்களுடைய ஐக்கிய அனுசந்தானம் அடைவதற்கு எனக்கு இன்னமும் தகுதி ஏற்படாமல் இருக்கலாம். அப்படியென்றால் தங்களிடம் பிரேமையும், தங்கள் அடியவர்களிடம் நட்பும், மூடர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் உபேக்ஷையும் எனக்கு உண்டாகட்டும். இதற்கும் நான் தகுதி பெறவில்லை என்றால், தங்கள் பிரதிமைக்குப் பூஜை செய்வதில் எனக்கு உள்ள விருப்பம் அதிக சிரத்தையுடன் கூட இன்னமும் விருத்தி அடையட்டும். தங்களைச் சேவிக்கின்றவன் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக விரைவாக மாறிவிடுகிறான்.

ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம்
க்ஷிதி ஜல மருதா3த்3யாத்மனா விக்ஷிபந்தீ
ஜீவான் பூ4யிஷ்டகர்மாவலி விவச’
க3தீன் துக்க2ஜாலே க்ஷிபன்தீ |
த்வன்மாயா மாS பி4பூ4ன் மாமயி
புவ4னபதே கல்பதே தத்ப்ரசா’ந்தை
த்வத்பாதே3 ப4க்திரேவேதி அவத3தி2 விபோ4
ஸித்3த4 யோகீ3 ப்ரபு3த்3த4 : || (91 – 9 )


ஹே ஜகன்நாதா! தங்களுடைய பரமார்த்த ரூபத்தை மறைத்துக் கொண்டு, தங்களின் விக்ஷேப சக்தியால் பூமி, ஜலம், வாயு போன்ற பல ரூபங்களில் தோன்றுகின்றீர்கள் . பலவகைப்பட்ட கர்மங்களால் ஜீவாத்மாக்களைத் தன் வசம் இழக்கச் செய்து, துக்க வலையில் கொண்டு தள்ளுகின்றீர்கள். தங்களின் இந்த மாயை என்னை அடிமைப் படுத்தக் கூடாது. ஹே பிரபு ! தங்களின் திருவடி பக்தி ஒன்றே மாயையை வெல்லும் சாதனம் என்று பிரபுத்தர் என்ற சித்த யோகி விதேக ராஜனுக்குக் கூறினார் அல்லவா?

துக்கா2ன்யாலோக்ய ஜந்துஷு அலமுதி3த
விவேகோSஹம் ஆசார்யவர்யாத்
லப்த்வா த்வத்3 த்ரூப தத்வம் கு3ண
சரிதகதா2த்3யுத்3ப4வத்3 ப4க்தி பூ4மா |
மாயாமேனாம் தரித்வா பரமஸுக2மயே
த்வத் பதே3 மோதி3தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க3: பவனபுரபதே
நாச’யாசே’ஷ ரோகா3ன் || ( 91 – 10)


நான் ஜீவர்களின் பற்பல துக்கங்களைக் கண்டு விவேகத்தைப் பெறுவேனாகுக! சிறந்த ஒரு குருவிடம் இருந்து தங்கள் ஸ்வரூபத்தின் உண்மையை அறிவேனாகுக! தங்கள் குணங்ளையும், சரிதங்களையும், கானம் செய்து பக்திப் பெருக்கை அடைவேனாகுக! இந்த மாயைத் தாண்டிப் பரமானந்த மயமான தங்கள் திருவடிகளில் மகிழ்ச்சி அடைவேன் ஆகுக! இந்த மாயா ஜயம் அதற்கு நாந்தி போல அமையட்டும்!. ஹே குருவாயூரப்பா என் ரோகங்கள் அனைத்தையும் நாசம் செய்வீர்!
 
த3ச’கம் 92 ( 1 to 5)

த3ச’கம் 92 : கர்ம மிச்’ர ப4க்தி

வேதை3ஸ்ஸர்வாணி கர்மாணி அபல பர தயா
வர்ணிதாநீதி பு3த்3த்4வா
தானி த்வய்யர்பிதான்யேவ ஹி
ஸமனு சரன் யானி நைஷ்கர்ம்யமீச’|
மா பூ4த்3வேதை3ர் நிஷித்3தே4 குஹ சித3பி
மன: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி
து3ர்வர்ஜம்சேத3வாப்தம் ததபி க2லு
ப4வத்யர்ப்பயே சித்ப்ரகாசே’ || (92 – 1)


வேதங்கள் எல்லாக் கர்மங்களையும் பலனில் விருப்பம் இல்லாமல் செய்யச் சொல்கின்றன. அதை அறிந்து கொண்டு நான் செய்யும் எல்லாக் கர்மங்களையும் தங்களுக்கு அர்ப்பணிப்பேன். நிஷ்காம கர்மம் செய்து ஞானம் பெறுவேனாகுக! வேதங்கள் தடை செய்த எந்த ஒரு கர்மத்திலும் என் மனம், வாக்கு, கர்மம் இவற்றில் பிரவிருத்தி உண்டாகக் கூடாது. விலக்க முடியாத காரணத்தால் நான் ஒரு விலக்கப்பட்ட கர்மத்தைச் செய்ய நேர்ந்தால் அதையும் தங்களுக்கு அர்ப்பணம் செய்வேனாகுக!

யஸ்த்வ்ன்ய: கர்மயோகஸ்தவ ப4ஜனமயஸ்
தத்ர சாபீ4ஷ்ட மூர்த்திம்
ஹ்ருத்3யாம் ஸத்வைகரூபாம் த்3ருஷதி3 ம்ருதி3
க்வாபி வா பா4வயித்வா |
புஷ்பைர் க3ந்தை4ர் நிவேத்3யைரபி ச விரசிதைச்’
ச’க்தி தோ ப4க்தி பூதை :
நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித3த4த3யி
விபோ4 த்வத்ப்ரஸாத3ம் ப4ஜேயம் || (92 – 2)


தங்களின் பஜன ரூபமானதும், வைதீகக் கர்மயோகத்திலிருந்து வேறுபட்ட ஒரு கர்மத்தில், நான் ஒரு அழகானதும், எனக்குப் பிரியமானதும் ஆகிய ஒரு மூர்த்தியைக் கல்லில் அல்லது மனதில் அல்லது மண்ணில் அல்லது வேறு பிரதிமையில் தியானம் செய்வேன். என் சக்திக்கு ஏற்ப ஈட்டிய பொருளைக் கொண்டு பக்தியுடன், புஷ்பம், சந்தனம், நிவேதனம் இவற்றால் தினமும் தங்களைப் பூசித்துத் தங்கள் பிரசாதத்தை அடைவேனாகுக!

ஸ்திரீசூ’த்3ரா ஸ்த்வத்கதா2தி3 ச்’ரவண
விரஹிதா ஆஸதாம் தே த3யார்ஹா
ஸ்த்வத்பாதா3 ஸன்னயாதான் த்3விஜகுலஜனுஷோ
ஹந்த சோ’சாம்ய சா’ந்தான் |
வ்ருத்யர்த்தம் தே யஜந்தோ ப3ஹு கதி2தமபி
த்வாமனா கர்ண யந்தோ
த்3ருப்தா வித்3யா பி4 ஜாத்யை: கிமு ந
வித3த4தே தாத்3ருச’ம் மா க்ருதா2 மாம் | (92 – 3 )


ஸ்த்ரீக்களும், சூத்திரர்களும் தங்களின் கதைகள், நாமங்கள் இவற்றைக் கேட்கவும் கீர்த்தனம் செய்யவும் அனுமதி இல்லாதவர்கள். அதனால் அவர்கள் இரங்கத் தகுந்தவர்கள். தங்களின் திருவடிகளின் சமீபத்தை அடைந்தவர்களில் பலரும் சாந்தி அடையாமல் பிராமண, க்ஷத்திரிய, வைஸ்ய குலத்தில் பிறந்துள்ளனர். அவர்களுக்காகவும் நான் வருந்துகின்றேன். அவர்கள் ஜீவனத்துக்காக யாகங்கள் செய்கிறார்கள். பலர் உபதேசம் செய்த பிறகும் கூடத் தங்களைப் பற்றிக் கேட்காமலும், வித்தை, உயர்குலப் பிறப்பு இவற்றால் கர்வம் கொண்டவர்களாகவும் அவர்கள் என்ன என்ன தான் செய்யவில்லை? என்னையும் அது போல ஆக்கிவிடாதீர்கள்.

பாபோSயம் க்ருஷ்ண ராமேதி அபி4லபதி
நிஜம் கூ3ஹிதும் து3ச்’சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப3ஹுதர
கத2னீயானி மே விக்4நிதானி |
ப்4ராதா மீ வந்த்4யசீ’லோ ப4ஜதி கில
ஸதா3 விஷ்ணு மித்த2ம் பு3தா4ம்ஸ்தே
நிந்த3ன்த்யுச்சைர் ஹஸந்தி த்வயி நிஹித மதீம்
ஸ்தாத்3ருச’ம் மாக்ருதா2 மாம் || (92 – 4)


“பாவியான இவன் தன் துஷ்ட சரிதத்தை மறைத்து வைப்பதற்காகக் கிருஷ்ணா! ராமா! என்று பிதற்றுகின்றான். வெட்கம் இல்லாத இவன் பேச்சினால் நான் சொல்ல வேண்டியவை கெடுக்கப் படுகின்றன . வீண் வேலை செய்யும் என் சகோதரன் விஷ்ணுவை பஜிக்கின்றானம்!” என்று இவர்கள் தங்களிடம் மனத்தைச் செலுத்தும் அறிவாளிகளை நிந்திக்கின்றனர். பரிஹசித்து உரக்கச் சிரிக்கின்றனர். என்னையும் அப்படிப் பட்டவனாகச் செய்து விடாதீர்கள்.

ச்வேதச்சா2யம் க்ருதே த்வாம் முனிவர வபுஷம்
ப்ரீணயந்தே தபோபி4:
த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்3யங்கிதம்
அருணதனும் யக்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ர மார்கை3ர் விலஸத3ரிக3த3ம்
த்3வாபரே ச்யாமளாங்கம்
நீலம் ஸங்கீர்த்தனாத்யை ரிஹ கலிஸமயே
மானுஷாஸ் த்வாம் ப4ஜந்தே || ( 92 – 5)


மனிதர்கள் கிருத யுகத்தில், வெண்ணிறமுடைய பிரம்மசாரியாகத் தங்களைத் தவம் செய்து வழிபட்டனர். திரேதா யுகத்தில் ஸ்ருக், ஸ்ருவம் முதலியவற்றால் அடையாளம் செய்யப்பட்ட தங்களைச் சிவந்த நிறமுடைய யக்ஞரூபியாக வழிபடுகின்றனர். துவாபர யுகத்தில் பிரகாசிக்கும் சக்கரம் கதையுடன் கூடிய சியாமள வர்ணனாகத் தங்களை தந்திர சாஸ்திரம் கூறும் மார்க்கங்களால் வழிபடுகின்றனர். கலி யுகத்தில் நீல வர்ணனான தங்களை நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் பஜிக்கின்றனர்.
 
த3ச’கம் 92 ( 6 to 10)

த3ச’கம் 92 : கர்ம மிச்’ர ப4க்தி

ஸோSயம் காலேய காலோ ஜயதி முரரிபோ
யத்ர ஸங்கீர்த்தனாத்3யை:ர்
நிர்யத்னைரேவ மார்கை3ரகி2லத3 ந சிராத்
த்வத்ப்ரஸாத3ம் ப4ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதா க்ருதாதா3வபி ஹி கில
கலௌ ஸம்ப4வம் காமயந்தே
தை3வாத் தத்ரைவ ஜாதான் விஷய விஷரசைர்
மா விபோ4 வஞ்சயாஸ்மான் || ( 92 – 6 )


இந்த விதமாகக் கலிகாலம் மேன்மை பெற்று விளங்குகிறது. இந்தக் கலிகாலத்தில் மக்கள் நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் அதிக பிரயத்தனம் இல்லாமலேயே வெகு சீக்கிரத்தில் தங்கள் பிரசாதத்தை அடைகின்றனர். அதனால் திரேதா, கிருத யுகங்களில் பிறந்தவர்கள் கூடக் கலியுகத்தில் வந்து பிறக்க விரும்புகின்றனர் அல்லவா? எல்லாவற்றையும் கொடுக்கும் இறைவா! பாக்கிய வசத்தால் அந்தக் கலியுகத்தில் பிறந்துள்ள எங்களை விஷய சுகங்கள் என்னும் விஷ ரசத்தால் வஞ்சித்து விடாதீர்கள்.

ப4க்தாஸ்தாவத் கலௌ ஸ்யூர்த்3ரமிள பு4வி
ததோ பூ4ரிச’ஸ் தத்ரசோச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீமனு கில
க்ருதமாலாஞ்ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத3ந்தர் ப4வமபி ச விபோ4
கிஞ்சித3ஞ்சத்3 ரஸம் த்வயி
ஆசா’பாசை’ர் நிப3த்4ய ப்4ரமய ந ப4க3வன்
பூரய த்வன்னி ஷேவாம் || (92 – 7)


கலியுகத்தில் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள். அதிலும் அவர்கள் திராவிட தேசத்தில் மிகவும் அதிகமாக இருப்பார்கள். திராவிட தேசத்தில் பல புண்ணிய நதிகள் காவேரி, தாமிரபர்ணீ, வைகை போன்றவை உள்ளன. நான் இந்த திராவிட தேசத்தில் பிறந்தவன் என்பதால் மட்டுமல்ல. தங்களிடம் சிறிதளவு பக்தி கொண்டவன் என்பதால் என்னை, ஆசை என்னும் கயிற்றால் இறுகக் கட்டிச் சுழற்றாதீர்கள் . தங்களிடம் ஏற்பட்டுள்ள என் பக்தியைப் பூரணமாக்குவீர்.

த்3ருஷ்ட்வா த4ர்மத்3ருஹம் தம் கலிமபகருணாம்
ப்ராங்மஹீக்ஷித் பரக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்ட க2ட்3கோ3பி ந விநிஹிதவான்
ஸாரவேதீ3 கு3ணாம்சா’த் |
த்வத்ஸேவாத்3யாசு’ ஸித்3த4யேத் அஸதி3ஹ
ந ததா2 த்வத்பரே சைஷ பீ4ரு :
யத்து ப்ராகே3வ ரோகா3தி3பி4: அபஹரதே
தத்ர ஹாசி’க்ஷயேனம் || (92 – 8 )


முன்னொரு காலத்தில் பரீக்ஷித் என்ற அரசன், விருஷப ரூபியாகிய தர்மத்தைச் சிறிதும் கருணையின்றித் துன்புறுத்திய கலிபுருஷனைக் கண்டான். உருவிய வாள் கையில் இருந்த போதிலும், கலியிடம் குணாம்சம் இருந்ததால் பரீக்ஷித் அவனைக் கொல்லவில்லை .இந்தக் கலியுகத்தில் தங்களுக்குச் செய்யும் சேவை விரைந்து பலனை அளிக்கும். ஆனால் செய்யும் பாவம் விரைந்து பலனைக் கொடுப்பதில்லை கலிபுருஷன் தங்கள் பக்தர்களிடம் அஞ்சுகின்றான். அதனால் அவர்கள் தங்களை வழிபடும் முன்பே ரோகம் முதலியவற்றால் அவர்களைத் தடுக்கின்றான். இதற்காகவேனும் நீங்கள் கலியைத் தண்டிக்க வேண்டும்.

க3ங்கா3 கீ3தா ச கா3யத்ர்யபி ச
துலஸிகா கோ3பிகா சந்த3னம் தத்
ஸாலக்3ராமாபி4 பூஜா பரபுருஷ
ததை2காத3சி’ நாமவர்ணா: |
எதான்யஷ்டாப்ய யத்னான்யபி கலி ஸமயே
த்வத் ப்ரஸாதா ப்ரவ்ருத்3த்4யா
க்ஷிப்ரம் முக்தி ப்ரதா3னீத் யபி4 த3து4:
ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா: || (92 – 8 )


பரம புருஷா! கங்கை, கீதை, காயத்ரீ, துலஸீ, கோபி சந்தனம், சாளக் கிராம பூஜை, ஏகாதசி, பகவன் நாமாக்ஷரங்கள் என்ற எட்டும் கலி காலத்தில் அதிகப் பிரயத்தனம் இன்றியே தங்கள் பிரசாதத்தைத் தருகின்றன என்று மஹரிஷிகள் உபதேசித்துள்ளனர் ஈசா! இந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யுங்கள்.

தே3வர்ஷீணாம் பித்ரூணாமபி ந புனர்ருணீ
கிங்கரோ வா ஸ பூ4மன்
யோSசௌ ஸர்வாத்மனா த்வாம் ச’ரண
முபக3தஸ் ஸர்வ க்ருத்யானி ஹித்வா |
தஸ்யோத்பன்னம் விகர்மாண்யகி2ல
மபனுதஸ்யேவ சித்தாஸ்திதஸ்த்வம்
தன்மேபாபோத்த2 தாபான் பவனபுரபதே
ருந்தி4 ப4க்திம் ப்ரணீயா: || (92 – 10)


எங்கும் நிறைந்துள்ள இறைவா ! எந்த பக்தன் எல்லாப் பிரவிருத்திகளையும் விட்டு விட்டுத் தங்களையே முற்றிலுமாகச் சரண் அடைகின்றானோ அவன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் இவர்களுக்குக் கடன்காரனாகவோ அல்லது ஒரு கிங்கரனாகவோ ஆவதில்லை. அவன் மனத்தில் இருந்து கொண்டு தாங்கள் அவன் செய்யும் நிஷித்த கர்மங்களால் உண்டாகும் பாவங்கள் அனைத்தையும் நிச்சயமாக அகற்றி விடுகின்றீர். ஹே குருவாயூரப்பா! என் பாபங்களால் உண்டாகும் தாபங்களைப் போக்க வேண்டும். எனக்கு பக்தியை உண்டு பண்ண வேண்டும்.
 
த3ச’கம் 93 ( 1 to 5)

சதுர்விம்ச’தி கு3ரவ:
ப3ந்துஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி
கருணயா த்வய்யுபாவேசி’தாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி
ஜக3த்3 வீக்ஷ்ய மாயாவிலாஸம்|
நானாத்வாத்3 ப்4ராந்தி ஜன்யாத் ஸதி க2லு
கு3ணத்தோ3ஷாவ போ3தே4 விதி4ர்வா
வ்யாஸேதோ4 வா கத2ம் தௌ த்வயி
நிஹிதமதேர் வீத வைஷம்யபு3த்3தே4 || ( 93 – 1 )


தங்களுடைய கருணையாலே பந்துக்களிடம் கொண்டுள்ள ஸ்நேஹத்தை விடுவேனாகுக. தங்களிடதிலேயே மனத்தைச் செலுத்தி, உலகம் அனைத்தும் மாயா கல்பிதம் என்று அறிந்து, எல்லாவற்றையும் தியாகம் செய்து திரிவேனாகுக. மனபிரம்மையினால் ஏற்படுகின்ற பேதங்களால், குணங்களையும் தோஷங்களை அறியும் ஞானம் இருக்கும்போது அல்லவா விதி அல்லது நிஷேதம் ஏற்படுகின்றது? அதனால் அத்தகைய வைஷம்ய புத்தி இல்லாத ஒருவனுக்கு அவ்வித நிஷேதங்கள் எப்படி உண்டாக முடியும்? ( 93 – 1)

க்ஷுத்துஷ்ணா லோபமாத்ரே ஸததக்ருததி4யோ
ஜந்தவ: ஸந்த்யனந்தாஸ்
தேப்யோ4 விஞ்ஞானவத்வாத் புருஷ இஹ
வரஸ் தஜ்ஜனிர் து3ர்லபை4வ|
தத்ராப்யாத்மாSSத்மன: ஸ்யாத் ஸுஹ்ருத3பி
ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தாசேதாஸ்
தாபோச்சி2த்தேருபாயம் ஸ்மாரதி ஸ ஹி
ஸுஹ்ருத்ஸ்வாத்மவைரி ததோSன்ய:|| ( 93 – 2 )

பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்வதில் மட்டும் எப்போதும் மனதைச் செலுத்தும் பிராணிகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. இந்த உலகில் பகுத்தறிவு படைத்த மனிதன் அவற்றை விடவும் மேலானவன். அந்த மனிதப் பிறவியும் கிடைப்பதற்கு அரியதே. அந்த அரிய மனிதப் பிறவியிலும் ஆத்மாவே (தானே) ஆத்மாவுக்கு ( தனக்கு) பந்துவாகவும் அல்லது சத்ருவாகவும் விளங்குவான். எந்த ஒரு ஆத்மா தங்களிடம் மனதைச் செலுத்தியவனாக, தன்னுடைய தாப நிவர்த்திக்காக முயற்சி செய்கின்றனோ, அவன் தான் ஆத்மாவின் பந்து. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆத்மாவுக்குச் சத்ருவே! ( 93 – 2 )

த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி
கு3ரூர் லோகவ்ருத்தேS விபூ4மன்
ஸர்வ க்ராந்தாSபி பூ4மிர் ந ஹி சலதி
ததஸ்ஸத்க்ஷமாம் சி’க்ஷயேயம்|
க்3ருஹ்ணீயாமீச’ தத்தத்3 விஷய
பரிசயேSப்ய ப்ரஸக்திம் ஸமீராத்3
வ்யாப்தத்வஞ்சாத்மனே மே
க3க3ன கு3ரு வசா’த்3 பா4து நிர்லேபதா ச || (93 – 3)


ஹே பரமாத்மாவே! தங்கள் கருணைக்குப் பாத்திரம் ஆனால் உலக நடத்தையில் யார் தான் என்னுடைய குருவாக ஆக மாட்டார்கள்? பூமியானது எல்லோராலும் எல்லாவற்றாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்றாலும் அது சலித்துக் கொள்வது இல்லையல்லவா? அந்த பூமியிடம் இருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொள்வேனாகுக. ஹே ஈசா! எல்லா விஷயங்களுடனும் சம்பந்தம் ஏற்பட்ட போதிலும் அவற்றில் பற்றில்லாமல் இருக்கும் தன்மையை நான் வாயுவிடமிருந்து கிரஹித்துக் கொள்வேனகுக!ஆத்மாவிடமிருந்து எங்கும் நிறைந்து இருக்கும் அதன் தன்மையையும்; ஆகாயத்திடமிருந்து ஒன்றிலும் பற்றிலாமல் இருப்பதையும் நான் கற்றுக் கொள்வேனாகுக. ( 93 – 3 )

ஸ்வச்ச2: ஸ்யாம் பாவனோSஹம் மது4ர
உத3கவத்3 வஹ்னிவன் மாஸ்ம க்3ருஹ்ணாம்
ஸர்வான் நீனோSபி தோ3ஷம் தருஷு தாமிவ
மாம் ஸர்வ பூ4தேஷ்வ வேயாம்|
புஷ்டிர் நஷ்டி: கலானாம் ச’சி’ன இவ
தனோர்நாத்மனோSஸ்தீதி வித்3யாம்
தோயா தி3வ்யஸ்த மார்த்தாண்ட வதபி ச
தனஷ்வேகதாம் த்வத் ப்ரஸாதா3த் || ( 93 – 4 )

நான் ஜலம் போல தெளிந்த நிர்மலனாகவும், பாபங்களை அழிப்பவனாகவும், இனிப்பானவனாகவும் மாறுவேனாகுக! நான் அக்னி போல எல்லாவற்றையும் பக்ஷிப்பவனாக இருந்தாலும், அவற்றின் தோஷத்தைக் கிரகிக்காது இருப்பேனாகுக! மரக்கட்டைகளில் அக்னி மறைந்து இருப்பதைப் போலவே, ஆத்மாவாகிய நானும் எல்லா சரீரங்களிலும் மறைந்து இருப்பதை அறிவேனாகுக. சந்திரனுடைய கலைகளுக்குத் தான் வளர்ச்சியும் தேய்வும் அன்றி சந்திரனுக்கு அல்ல. அதுபோலவே மனிதனுடைய வளர்ச்சியும் தளர்ச்சியும் அவன் சரீரத்துக்கே அன்றி அவன் ஆத்மாவுக்கு இல்லை என்று நான் அறிவேனாகுக! ஒவ்வொரு நீர்ப் பரப்பிலும் வெவ்வேறாகத் தோன்றும் சூரியனைப் போலவே வெவ்வேறு சரீரங்களில் தோன்றும் ஆத்மா என்பது ஒன்றே என்று அறிவேனாகுக. ( 93 – 4 )

ஸ்னேஹாத்3 வ்யாதா4ஸ் த புத்ர வ்யஸன
ம்ருத கபோதாயிதோ மாஸ்ம பூ4வம்
ப்ராப்தம் ப்ராச்’னன் ஸஹேய க்ஷுத4மபி
ச’யுவத் ஸிந்து4 வத் ஸ்யாமாகா3த4:|
மா பப்தம் யோஷிதாதௌ3 சி’கி2னி ச’லப4வத்3
ப்4ருங்க3வத் ஸாரபா4கீ3
பூ4யாஸம் கிந்து தத்3வத்3 த3ன சயன
வசா’ன்மாSஹமீச’ ப்ரணேச’ம்|| ( 93 – 5 )


சினேஹம் காரணமாக வேடனால் கொல்லப்பட்டத் தன் புத்திரர்களை எண்ணி வருந்தி இறந்து போன மாடப்புறா போல ஆகாது இருப்பேனாகுக! மலைப்பாம்பு போலத் தற்செயலாகக் கிடைத்ததை உண்டு பசியாறுவேனாகுக!
சமுத்திரம் போல கம்பீரமாக இருப்பேனாகுக! தீயில் சென்று வெட்டுக்கிளி விழுவது போல, ஸ்த்ரீ முதலியவற்றில் விழாமல் இருப்பேனாகுக! வண்டு போல சாரம்சத்தை மட்டும் கிரஹிப்பேனாகுக! ஆனால் அந்த வண்டு போலப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு நாசம் அடையாமல் இருப்பேனாகுக. ( 93 – 5)
 
[h=1]இயற்கையே நம் குரு[/h]

அகழ்வாரைத் தாங்கும் நில மடந்தையிடம்,
இகழ்வாரைத் தாங்கும் பொறுமை கற்போம்;
அனைத்தையும் புனிதமாக்கிய பின் தெளிந்து,
இனிக்கும் நீர் போல மாறிவிடக் கற்போம்.

பொருட்கள் அனைத்திலும் மறைந்து நிற்கும்,
நெருப்பைப் போன்றது ஆத்மா என்று அறிவோம்;
மாற்றம் அடையாமல் மணங்களைப் பரப்பும்,
காற்றிடம் கற்போம் பற்று அறுக்கும் தன்மையை.

நிர்மலமாக எங்கும் என்றும் நிறைந்திருக்கும்
மர்மம் என்ன என்று ஆகாசத்திடம் கற்போம்;
ஆழம் காண முடியாத கம்பீரத்தை அங்கு
ஆழ்ந்து விளங்கும் கடலிடம் கற்போம்.

நூறு குடங்களில் வேறு வேறாகத் தெரியும்
சூரியன் போன்றதே ஆத்மா, அறிந்திடுவோம்;
வளர்ந்து தேயும் சந்திர கலைகள் போன்றே
வளர்ந்து தேயும் மனித சரீரமும், அறிவோம்.

தன் உடலில் இருந்தே உற்பத்தி செய்து,
தன் உடலுள் வலையை மீண்டும் மறைக்கும்
சிலந்தியிடம் காண்போம் நம் இறைவனின்
சிருஷ்டி, பிரளய ரகசியங்களை எல்லாம்!

நினைக்கும் பொருளாக நாம் மாறுவதை,
தினமும் காணும் குளவியிடம் கற்போம்;
தினவு எடுத்து திரியாமல், கிடைத்தைத்
தின்பதை மலைப் பாம்பிடம் கற்போம்.

மலருக்கு மலர் தாவிச் சென்று பல
மலர்களின் தேனைச் சேர்த்து வைத்து,
தேனாலேயே அழியும் தேனீ கற்பிப்பது
தேவைக்கு மீறின செல்வத்தின் ஆபத்து.

கண்களால் நன்கு காணும் திறனையும்,
காதுகளால் நன்கு கேட்கும் திறனையும்
அழகாய் வளர்த்தால், நமக்கு இறைவனும்
அழகிய இயற்கையும் குருவாகவே ஆவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 93 ( 6 to 10)

சதுர்விம்ச’தி கு3ரவ:

மா ப3த்3த்4யாஸம் தருண்யா கஜ இவ
வச’யா நார்ஜயேயம் த4னௌக4ம்
ஹர்தான்யஸ்தம் ஹி மாத்4வீ ஹர இவ
ம்ருக3வன்மா முஹம் க்3ராம கீ3தை:|
நாத்யா ஸஜ்ஜேய போ4ஜ்யே ஜஷ இவ
ப3டி3சே’ பிங்க3லாவன் நிராச’:
ஸுப்யாம் ப4ர்தவ்ய யோகா3த் குரர இவ
விபோ4 ஸாமிஷோSன்யைர் ந ஹன்யை || (93–6)

பெண் யானையால் ஆண் யானை பந்தம் அடைவதைப் போல, ஸ்த்ரீ காரணமாக பந்தத்தை அடையாது இருப்பேனாகுக. பணக் குவியலை சம்பாதிக்காமல் இருப்பேனாகுக. தேன் எடுப்பவன் தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை எடுத்துக் கொள்வது போல வேறொருவன் அதை அபகரிப்பான். மான் போல ஆபாசமான பாட்டுக்களுக்கு நான் மயங்காது இருப்பேனாகுக. தூண்டிலில் மீன் போல ஆகாரத்தில் அதிகப் பற்றுக் கொள்ளாமல் இருப்பேனாகுக பிங்களை என்ற வேசியைப் போல ஆசையற்றவனாகத் தூங்குவேனாகுக மாமிசத்துடன் கூடிய குரரம் என்ற பறவையைப் போல, என்னால் காப்பாற்றப்படவேண்டிய பொருளின் சேர்க்கையால், நான் மற்றவர்களால் துன்புறுத்தப் படாமல் இருப்பேனாகுக.(93–6)

வர்தய த்யக்தமானஸ் ஸுக2மதி சி’சு’வன்
நிஸ்ஸஹாயச்’சரேயம்
கன்யாயா ஏகசே’ஷோ வலய இவ விபோ4
வர்ஜிதான் யோன்ய கோ4ஷ:|
த்வத்சித்தோ நாவ புத்3த்4யை பரமிஷு க்ருதீ3வ
க்ஷ்மாப்4ருதாயான கோ4ஷம்
கே3ஹேஷ்வன்ய ப்ரணீ தேஷு அஹரிவ
நிவாஸன் யுந்தி3ரோர் மந்தி3ரேஷு || (93-7)
)

சிறு குழந்தையைப் போல என் அபிமானத்தை விட்டு விட்டுச் சுகமாக இருப்பேனாகுக. கன்னிகையின் ஒற்றை வளையல் போலச் சஹாயமற்றவனாகவும், வீண் விவாதங்களை விட்டவனாகவும் நான் சஞ்சரிப்பேன் ஆகுக.
பாணத்தை உண்டு பண்ணும் கருமான் அரசன் வரும்போது உண்டாகும் சத்தத்தை அறியாமல் இருப்பது போலத் தங்களிடம் மனத்தை செலுத்திய நான் வேறு ஒன்றும் அறியாமல் இருப்பேன் ஆகுக.எலியின் வளையில் பாம்பு வசிப்பது போல, பிறரால் உண்டுபண்ணப்பட்ட வீட்டில் நான் வசிப்பேன் ஆகுக. (93-7)

த்வய்யேவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி
ஜக3தீ3த் யூர்ண நாபா4த் ப்ரதீயாம்
த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி
த்ருட4ம் சி’க்ஷயே பேச’காராத்|
விடப4ஸ்மாத்மா ச தே3ஹோ ப4வதி
கு3ருவரோ யோ விவேகம் விரக்திம்
த4த்தே ஸன்சிந்த்ய மானோ மம து ப3ஹுருஜா
பீடி3தோயம் விசே’ஷாத் || (93-8)


தாங்கள், தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைத் தங்களிடமே லயிக்கச் செய்கிறீர்கள் என்ற உண்மையை நான் சிலந்தியிடமிருந்து அறிவேனாகுக. தங்கள் மீது செய்யும் தியானம் தங்கள் ஸ்வரூபத்தை உண்டு பண்ணுகிறது என்ற உண்மையை நான் குளவியிடம் இருந்து கற்றுக் கொள்வேனாகுக. மலமாகவோ, சாம்பலாகவோ மாறும் தன்மை வாய்ந்த இந்தச் சரீரமும் சிறந்த குருவாக ஆகிவிடுகிறது. இந்தச் சரீரம் நன்கு ஆலோசித்து விவேகத்தையும் விரக்தியையும் உண்டு பண்ணுகிறது என்னுடைய இந்த தேஹமோ பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு விசேஷமான விவேகத்தையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகிறது. (93-8)

ஹீ ஹீ மே தே3ஹ மோஹம் த்யஜ
பவன புராதீ4ச’ யத் ப்ரேமஹேதோர்
கே3ஹே வித்தே கலத்ராதி3ஷு ச விவசி’தாஸ்
த்வத் பத3ம் விஸ்மரந்தி|
ஸோSயம் வஹ்னேச்’ சு’னோ வா பரமிஹ பரத:
ஸாம்ப்ரதஞ்சாக்ஷி கர்ண
த்வக்3 ஜிஹ்வாத்3யா விகர்ஷ ந்யவச’மத இத:
கோபி ந த்வத் பதா3ப்ஜே || (93-9)


ஹே குருவாயூரப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! என்னுடைய சரீரத்தில் இருக்கும்
மோஹத்தைப் போக்கடிபீராகுக.
எந்த சரீரத்தின் மீது இருக்கும் பிரேமை காரணமாக வீட்டிலும், பணத்திலும், பத்தினி முதலியவரிடத்திலும் பரவசம் அடைந்து, தங்கள் திருவடிகளை மறக்கின்றார்களோ; அந்த சரீரமானது இவ்வுலகில் இறந்த பிறகு அக்கினிக்கு அல்லது நாய்களுக்கு உணவாகிறது. உயிருடன் இருக்கும் பொழுது தன் வசம் அற்ற இந்த சரீரத்தைக் கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்பவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றன.
ஒன்றாவது தங்கள் பதாரவிந்தங்களுக்கு இழுப்பதில்லை (93-9)

து3ர்வரோ தே3ஹ மோஹோ யதி3 புனரது4னா
தார்ஹி நிரசே’ஷ ரோகா3ன்
ஹத்வா ப4க்திம் த்3ரடி4ஷ்டாம் குரு தவ
பத3 பங்கேருஹ பங்கஜாக்ஷ |
நூனம் நானா பா4வந்தே ஸமதி4க3த மிமம்
முக்தித3ம் விப்ர தே3ஹம்
க்ஷுத்3ரோ ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸோ
பாஹிமாம் மாருதேச’ || (93-10)


ஹே தாமைரைக் கண்ணனே! சரீரத்தில் இருக்கும் மோஹமானது தடுக்க முடியாததாக இருக்குமேயானால், இந்த ஜென்மத்திலேயே என்னுடைய சமஸ்த ரோகங்களையும் போக்கடித்துத் தங்கள் பாதாரவிந்தங்களில் திடமான பக்தியை உண்டு பண்ண வேண்டும். நிச்சயமாக அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் என்னால் அடையப்பட்ட, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய இந்த பிராமண சரீரத்தைத் துச்சமான விஷய சுகங்களில் தள்ள வேண்டாம்! தள்ள வேண்டாம்! ஹே குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்றுவீராகுக ( 93 – 10 )
 
த3ச’கம் 94 : தத்வ ஞான உத்பத்தி

சு’த்3தா4 நிஷ்காமத4ர்மை : ப்ரவரகு3ருகி3ரா
தத்ஸ்வரூபம் பரம் தே
சு’த்3த4ம் தே3ஹேந்த்3ரியாதி வ்யபக3த மகி2ல
வ்யாப்த மாவேத3யந்தே |
நானாத்வ ஸ்தௌல்ய கார்ச்’யாதி து கு3ணஜ
வபுஸ்ஸங்க3த்தோத்4யாஸிதம் தே
வஹ்னே தா3ரு ப்ரபே4தே3ஷ்விவ மஹத3ணுதா
தீ3ப்திததா சாந்ததாதி3 || (94 – 1)


பலனில் பற்றில்லாமல் அனுஷ்டிக்கப்பட்ட நிஷ்காம கர்மங்களால் அந்தக்கரணங்கள் சுத்தமாகின்றன. குருவின் உபதேசத்தால்; தேஹம் இந்திரியங்கள் இவற்றிலிருந்து வேறானதும்; மாயை, காரியம் இவற்றுடன் எவ்விதத் தொடர்பு இல்லாததும்; பரப் பிரம்மம் என்ற பெயர் உடையதும்; எங்கும் நிறைந்துள்ளதுமான தங்களின் நிஷ்கள ஸ்வரூபத்தை அறிகின்றனர். ஆத்மாவாகிய தாங்கள் சரீரங்களில் மாறுபட்டு இருப்பது போலத் தோன்றுவது பலவகையான விறகுகளில் உள்ள அக்கினி பெரியதும், சிறியதுமாக இருப்பது போல குணங்கள், சரீரங்கள் இவற்றின் சம்பந்தத்தால் தோற்றம் தருவது.

ஆசார்யாக்2யாத4ர ஸ்தா2ரணி
ஸமனுமிலச்சி2ஷ்ய ரூபோத்தரா
ரண்யாவேதோ3த்பா4ஸிதேன ஸ்புடதர
பரிபோ3தா3க்3னினா த3ஹ்யமானோ |
கர்மாலீவாஸனா தத்க்ருத தானுபு4வன
ப்4ராந்தி காந்தார பூரே
தா3ஹ்யாபா4வேன வித்3யாசி’கி2னி ச
விரதோ த்வன்மயீ க2ல்வவஸ்தா2 || ( 94 – 2)


ஆச்சாரியன், சிஷ்யன் இவர்களின் சம்பந்தத்தால் பிரகாசிக்கின்ற தெளிவான ஞானாக்கினியில் கர்மங்கள், அவற்றின் வாசனைகள், இவற்றால் உருவன் சரீரம், லோகம், பிரம்மை என்று எல்லாமே எரிக்கப்படும் போது, எரிக்கப்பட வேண்டிய வஸ்து எதுவும் இல்லாத போது ஞானாக்கினி ஓய்ந்து விடுகின்றது. அப்போது மிஞ்சி இருப்பது தங்கள் ரூபமாகவே ஆகி விடுகின்றது.

ஏவம் த்வத்ப்ராப்திதோன்யோ ந ஹி க2லு
நிகி2லக்லேச’ஹானேருபாயோ
நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத3க3த3
ஷாட்3கு3ண்ய ஷட்கர்ம யோகா3: |
துர்வைகல்யேரகல்யா அபி நிக3மபதா2:
தத்ப2லான்யப்யவாப்தா
மத்தாஸ்தவாம் விஸ்மரந்த :ப்ரஜயதி பதனே
யான்த்யனந்தான் விஷாதா3ன் || ( 94 – 3)


அனைத்துத் துக்கங்களும் நிவிருத்தி ஆவதற்கு ஒரே உபாயம் தங்களைத் தவிர வேறு ஒன்று இல்லை. ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட மருந்துகள், நீதி சாஸ்திரங்கள் கூறும் ஆறு உபாயங்கள், தர்ம சாஸ்திரம் கூறும் ஆறு கர்மங்கள், வேதங்களில் கூறப்படும் பிறவும் துக்கத்தை நாசம் செய்வதற்கோ, அவை மீண்டும் வராமல் தடுப்பதற்கோ ஆற்றல் இல்லாதவை. திரவியம், காலம், கர்த்தா இவற்றில் உள்ள குறைபாடுகளால் வேத மார்க்கங்களை நன்றாக அனுஷ்டிக்க முடிவதில்லை. கஷ்டப்பட்டு அந்தக் கர்மங்களைப் புரிந்து, அவற்றால் பலன் அடைந்தவர்களும் கூட, அதன் பின்னர் மதம் கொண்டு, தங்களை மறந்து, கீழே விழுந்து, முடிவில்லாத துன்பங்களை அடைகின்றனர்.
த்வல்லோகாத3ன்ய லோக: க்வனு ப4யரஹிதோ

யத் பரார்த்த4 த்3வயாந்தே
த்வத்3பீ4தஸ் ஸத்யலோகேsபி ந ஸுக2வஸதி:
பத்3மபூ4: பத்3மநாப4 |
ஏவம் பாவே த்வத4ர்மார்ஜித ப3ஹுதமஸாம்
கா கதா2 நாரகாணாம்
தன்மே த்வம் சி2ந்தி4 ப3ந்த4ம் வரத3 க்ருபணப3ந்தோ4
க்ருபாபூர ஸிந்தோ4 || ( 94 – 4 )


ஹே பத்மநாபா! தங்களின் வைகுண்டத்தை விடவும் பயமற்ற லோகம் வேறு எது உள்ளது? பிரம்ம தேவன் தங்களிடம் கொண்ட பயத்தினால் இரண்டு பரார்த்தங்களின் முடிவில் சத்யலோகத்திலும் சுகமாக வசிப்பது இல்லை. அப்படியானால் அதர்மங்கள் செய்து பல பாவங்களை செய்துள்ள நரகவாசிகளின் நிலை என்னவாக இருக்கும்? வரங்களை அளிப்பவரே! ஏழைகளின் துணைவரே! என் சரீர பந்தத்தை அகற்றுவீராகுக!

யதா2ர்த்2யா த்வன்மயஸ்யைவ ஹி மம ந விபோ4
வஸ்துதோ ப3ந்த4 மோக்ஷௌ
மாயா வித்3யா தனுப்4யாம் தவ து விரசிதௌ
ஸ்வப்ன போ3தோ4பமௌ தௌ |
ப3த்3தே4 ஜீவத்3விமுக்திம் க3தவதி ச பி4தா3
தாவதீ தாவதே3கோ
பு4ங்க்தே தே3ஹத்3ருமஸ்தோ விஷயப2ல
ரஸான்னாபரோ நிர்வ்யதா2த்மா || ( 94 – 5)


ஹே பிரபு! தங்கள் மயமாக இருக்கும் எனக்கு உண்மையில் பந்தமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. ஆனால் அவைகள் தங்களின் மாயையினாலும், வித்தையினாலும் உருவாக்கப்பட்டு, ஸ்வப்ன அவஸ்தைக்கும், ஜாக்கிரத அவஸ்தைக்கும் ஒப்பானவைகள் ஆகின்றன . பத்தனாகிய சம்சாரியிடத்திலும், ஜீவன் முத்தனாகிய பக்தனிடத்திலும் உள்ள வேறுபாடு இவ்வளவே. சம்சாரி சரீரம் என்னும் மரத்தில் இருந்து கொண்டு விஷயங்கள் என்னும் பழங்களின் ரசத்தை அனுபவிக்கின்றான். ஜீவன் முக்தன் அந்த விஷயங்களை அனுபவிப்பதில்லை.
 
த3ச’கம் 94 : தத்வ ஞான உத்பத்தி

ஜீவன்முக்தத்வ மேவம் வித4மிதி
வசஸா கிம் ப2லம் தூ3ரதூ3ரே
தந்நாமாசு’த்3த4 பு3த்3தே4ர்ன ச லகு4 மனஸ்
ச்’சோ’த4னம் ப4க்திதோsன்யத் |
தன்மே விஷ்ணோ க்ருஷீஷ்டா2ஸ்த்வயி
க்ருதஸகல ப்ரார்ப்பணம் ப4க்தி பா4ரம்
யேன ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்3 கு3ருவசன
மிலத்த்வத்ப்ரபோ3த4ஸ் த்வதா3த்மா || ( 94 – 6)


ஜீவன் முக்தனின் நிலை இது என்று கூறுவதால் மட்டும் என்ன பயன் ? அந்தக்கரண சுத்தி பெறாதவன் ஜீவன் முக்தனின் நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளான். மனத்தை சோதனம் செய்வதற்கு பக்தியைத் தவிர வேறு வழி இல்லை. ஆகையால் எல்லாவற்றையும் தங்களிடம் சமர்ப்பணம் செய்யும் திடமான பக்தியை உண்டு பண்ணுவீர். அந்த திடமான பக்தியாலும், குருவின் உபதேசத்தாலும் பிரம்ம ஞானத்தை அடைந்து தாங்களாகவே நான் பவிப்பேன் ஆகுக!

ச’ப்3த3 ப்3ரஹ்மண்யபீஹ ப்ரயதிதமனஸஸ்த்வாம்
ந ஜானந்தி கேசித்
கஷ்டம் வந்த4ய ச்’ரமாஸ்தே சிரதரமிஹ
கா3ம்பி3ப்4ரதே நிஷ்ப்ரஸூதிம் |
யஸ்யாம் விச்’வாபி4ராமாஸ் ஸகலமலஹரா
தி3வ்யலீலாவதரா:
ஸச்சித்ஸாந்த்3ரம் ச ரூபம் தவ ந நிகதி3தம்
தாம் ந வாசம் ப்4ரியாஸம் || ( 94 – 7)


சிலர் வேதத்தில் பிரயத்தனம் செய்த மனத்தை உடையவராக இருந்தும் தங்களை அறிவதில்லை. கன்று போடாத பசுவைப் போல பக்தியையும், ஞானத்தையும் உண்டு பண்ணாத வேதத்தை அவர்கள் வீணாகச் சுமக்கின்றார்கள். எந்த வாக்கு எல்லோருடைய மனத்தைக் கவருவதாகவும், எல்லோருடைய பாவங்களைப் போக்குவதாகவும், தங்களின் லீலைகள் அவதாரங்கள் திருவுருவம் இவற்றைக் கூறுவதாகவும் இல்லையோ அந்த வாக்கை நான் சுமக்காமல் இருப்பேன் ஆகுக!

யோ யாவான் யாத்3ருசோ’ வா த்வமிதி கிமபி
நைவாவ க3ச்சா2மி பூ4மன்
ஏவஞ்சானன்ய பா4வஸ்த்வத3னு
ப4ஜனமேவாத்3ரியே சைத்3ய வைரின் |
த்வல்லிங்கா3னாம் த்வத3ங்க்4ரி ப்ரியஜன
ஸ3தஸாம் த3ர்ச’னஸ்பர்ச’னாதி3:
பூ4யான்மே த்வத்பூஜா நதி நுதி கு3ண
கர்மானு கீர்த்யாத3ரே || (94 – 8)


எங்கும் நிறைந்துள்ள ஈசா! தங்களின் ஸ்வரூபம், மகிமை, தர்மங்கள் என்ற எதையுமே நான் அறியவில்லை. சிசுபாலனின் வைரியாகிய கிருஷ்ணா! அப்படி இருந்த போதிலும் வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் தங்களைச் சேவிப்பதையே நான் ஆதரிக்கின்றேன். தங்களின் மூர்த்திகள், தங்களின் பக்தர்களின் சபை, தங்களின் தரிசனம், ஸ்பரிசனம், பூஜை, நமஸ்காரம், ஸ்தோத்திரம், தங்கள் குணங்கள் சரிதங்கள் இவற்றின் கீர்த்தனம் இவற்றில் எனக்கு ஆதரவு உண்டாகட்டும்.

யத்3யல்லப்4யதே தத்தத்தவ ஸமுபஹ்ருதம்
தே3வ தா3ஸோsஸ்மி தேsஹம்
த்வத்3 கே3ஹான்மார்ஜனாத்3யம் ப4வது
மம முஹு: கர்ம நிர்மாயமேவ |
ஸூர்யாக்3னி ப்3ராஹ்மணாத்மாதி3ஷு லஸித
சதுர்பா3ஹுமாராத4யே த்வாம்
த்வத்ப்ரேமார்த்3ரத்வ ரூபோ மமஸதத
மபி4ஷ்யந்ததாம் ப4க்தி யோக3: || ( 94 – 9)


ஹே ஸ்வயம் பிரகாசியே! அடையப்படும் பொருள் அனைத்தும் தங்களுக்கு சமர்பிக்கப் படட்டும். நான் தங்களின் அடிமை. தங்களின் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் கைங்கர்யம் களங்கம்ற்றதாக எனக்கு உண்டகட்டும். சூரியன், அக்கினி, பிராமணன், ஆத்மா இவைகளில் விளங்கும் நான்கு கரங்கள் உடைய தங்களை நான் ஆராதிப்பேன் ஆகுக. தங்கள் மீது கொண்ட பிரேமையால் உருகும் பக்தியை என்னிடம் இடைவிடாது பெருக்குவீர்.

ஐக்யம் தே தா3ன ஹோம வ்ரத நியம
தபஸ் ஸாங்க்2யயோக3ர் து3ராபம்
த்வத்ஸங்கே3னைவ கோ3ப்ய: கில ஸுக்ருதிதமா
ப்ராபுரானந்த ஸாந்த்3ரம் |
பக்தேஷ்வன்யேஷு பூ4யஸ்ஸ்வபி ப3ஹுமனுஷே
ப4க்திமேவ த்வமாஸாம்
தன்மே த்வத்3 ப4க்திமேவ த்3ருட4ய ஹர க3தா3ன்
க்ருஷ்ண வாதாலயேசா’ || ( 94 -10)


தானம், ஹோமம், விரதம், நியமம், தபஸ், தத்வ ஞானம், அஷ்டாங்க யோகம் இவைகளால் அடைவதற்கு அரியதான, ஆனந்தமயமான தங்களுடன் ஐக்கியத்தை புண்ணியசாலிகளாகிய கோபிகைகள் தங்கள் சேர்க்கையினலே எளிதாக அடைந்தார்கள். எத்தனையோ பக்தர்கள் இருந்த போதிலும் தாங்கள் அந்த கோபிகளின் பக்தியியே மிகவும் மதிக்கின்றீர்கள். ஹே கிருஷ்ணா! என்னிடம் தங்கள் பக்தியைத் திடமாக்க வேண்டும். ஹே குருவாயூரப்பா ! என் ரோகங்களை விலக்கி விடுவீர்!
 
த3ச’கம் 95 ( 1 to 5)

த3ச’கம் 95 : த்4யான யோக3:

ஆதௌ3 ஹைரண்யக3ர்ப்பீ4 தனுமவிகல

ஜீவாத்மிகா மாஸ்த்தி3தஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு3ணக3ண கசிதோ
வர்த்தஸே விச்’வயோனே |
தத்ரோத்3வ்ருத்3தே4ன ஸத்வேன து
கு3ணயுக3ளம் ப4க்தி பா4வம் க3தேன
ச்சி2த்வா ஸத்வம் ச ஹித்வா புனரனுபஹிதோ
வர்த்திதாஹே த்வமேவ || (95 – 1)

பிரபஞ்சத்திற்குக் காரணமாகிய ஈசா ! சிருஷ்டியின் ஆரம்பத்தில் தாங்கள் சூக்ஷ்ம சரீரங்களின் சமஷ்டி ரூபத்தையும், ஹிரண்ய கர்ப்பனின் சரீரத்தையும் அடைந்து இருந்தீர்கள். பிறகு வியஷ்டித் தன்மையை அடைந்தீர்கள். மாயா காரியங்கள் ஆகிய மஹத் தத்துவம், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்சப் பிராணன்கள் என்ற தத்துவங்களின் கூட்டமாகிய சரீரத்துடன் சம்பத்தப் பட்டுள்ளீர்கள். அந்த மாயா குணங்களுள், நன்கு விருத்தி அடைந்த, பக்தி ரூபமாகப் பரிணமித்த, சத்துவ குணத்தினால் நான் ராஜஸ, தாமஸ குணங்களை அழித்துவிடுவேன். பிறகு சத்துவ குணத்தையும் விட்டு விட்டுப் பரிபூர்ணன் ஆகிய தாங்களாகவே நான் இருக்கப் போகின்றேன்.

ஸத்வோன்மேஷாத் கதா3சித் க2லு விஷயரஸே
தோ3ஷபோ3தோ4Sபி பூ4மன்
பூ4யோSப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி
ரஜஸி ப்ரோத்3த4தே து3ர்நிவாரா |
சித்தம் தாவத் கு3ணாச்’ச க்3ரதி2தமிஹ
மித2ஸ்தானி ஸர்வாணி ரோத்3து4ம்
துர்யே த்வய்யேக ப4க்திச்’சரணமிதி ப4வான்
ஹம்ஸரூபி ந்யகா3தீ3த் || ( 95 – 2)


பரிபூர்ண ஸ்வரூபியே! சத்துவ குணத்தின் அபிவிருத்தியால், விஷய அனுபவத்தில் உள்ள தோஷங்களின் ஞானம் உண்டாகும். ஆனால் ரஜோ குணத்துடன் கூடிய தமோ குணம் விருத்தி அடையும் போது இந்த விஷயங்களில் பிரவிருத்தி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. இவ்வாறு இருக்கும் வரையில் நான்கு அந்தக்கரணங்களும் மூன்று குணங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். மூன்று அவஸ்தைகளையும் கடந்து நிற்கும் தங்களிடம் கொள்ளும் ஏகாக்கிரா பக்தி ஒன்றே இவற்றை யெல்லாம் தடுக்கும் என்பதை ஹம்ச ரூபியாகத் தாங்கள் சனகாதியருக்கு உபதேசித்தீர்கள் அல்லவா ?

ஸந்தி ச்’ரேயாம்ஸி பூ4மாம்ஸ்யபி ருசிபி4த3யா
கர்மிணாம் நிர்மிதானி
க்ஷுத்3ரானந்தா3ச்’ச ஸாந்தா ப3ஹுவித4: க3தய:
க்ருஷ்ண தேப்4யோ ப4வேயு: |
த்வஞ்சாசக்2யாத2 ஸக்2யோ நனு மஹிததமாம்
ச்’ரேயஸாம் ப4க்திமேகாம்
த்வத்3 ப4க்த்யானந்த3 துல்ய: க2லு விஷய ஜுஷாம்
ஸம்மத3: கேன வா ஸ்யாத்3 || ( 95 – 3)


ஹே கிருஷ்ணா! கர்மத்தின் அதிகாரிகளின் ருசி பேதங்களை அனுசரித்துப் பலப்பல சிரேயஸாகிய சாதனங்கள் உபதேசிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அற்ப சந்தோஷமும், அநித்தியமான பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் தங்கள் பக்தன் உத்தவனுக்குச் சிரேயஸ் ஆன மார்க்கங்களில் மிகச் சிறந்தது பக்தி ஒன்றே என்று தாங்கள் உபதேசித்தீர்கள். விஷய சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தங்களின் பக்தி தரும் ஆனந்தத்துக்குத் துல்லியமான ஆனந்தம் எப்படிக் கிடைக்கும்?

த்வத்3ப4க்த்யா துஷ்டபுத்3தே4ஸ் ஸுக2மிஹசரதோ
விச்யுதாச’ஸ்ய சாசா’ :
ஸர்வாஸ்யு: சௌக்2யமய்ய: ஸலிலகுஹரக3ஸ்யேவ
தோயைகமய்ய : |
ஸோSயம் க2ல்விந்த்3ரலோகம் கமலஜப4வனம்
யோக3ஸித்3தீ4 ச்’ச ஹ்ருத்3யா :
நாகாங்க்ஷத்யேத தா3ஸ்தாம் ஸ்வயமனுபதிதே
மோக்ஷ சௌக்யேSப்யனீஹா : || ( 95 – 4)


தங்களிடம் கொண்ட பக்தியில் ஆனந்தம் அடைந்து, எல்லா விதமான ஆசைகளையும் ஒழித்து, இவ்வுலகில் சுகமாகச் சஞ்சரிப்பவன் ஒருவனுக்கு, மடுவின் நடுவில் உள்ளவனுக்கு எல்லாப் பக்கங்களிளும் நீர்மயமாக இருப்பதைப் போல, எல்லாப் பக்கங்களிலும் சுகமயமாக இருக்கும். இது போன்ற பக்தன் இந்திரலோகம் , பிரம்மலோகம், அணிமாதி சித்திகள், அஷ்ட ஐஸ்வரியங்கள் என்ற எதையும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்? தானாக வந்து சேருகின்ற மோக்ஷ சுகத்திலும் கூட அவனுக்கு விருப்பம் இராது.

த்வத்3ப4க்தோ பா3த்4யமானோSபி ச விஷய ரசை:
இந்த்3ரியா சா’ந்தி ஹேதோ:
ப4க்த்யைவாக்ரமய மாணை: புனரபி க2லு
தைர்து3ர்பலைர்நாபி4ஜய்ய : |
ஸப்தார்சிர் தீ3பிதார்சிர் த3ஹதி கில
யதா பூ4ரிதா3ரு ப்ரபஞ்சம்
த்வத்3ப4க்த்யோகே4 ததை3வ ப்ரத3ஹதி து3ரிதம்
து3ர்மத3: க்வேந்த்3ரியாணாம் || ( 95 – 5)


தங்களுடைய பக்தனின் இந்திரியங்கள் சாந்தி அடையாததால் அவன் விஷய சுகங்களால் பாதிக்கப் படலாம். ஆனால் பக்தி அவனை ஆக்கிரமிக்கும்போது அந்த விஷய சுகங்கள் பலமிழந்து போய் விடும். அவற்றால் அவனை ஜெயிக்க முடியாது. ஜுவாலைகளை உடைய அக்கினி பெரும் விறகுக் கூட்டத்தை எரிப்பது போலவே தங்களிடம் கொண்ட பக்தி அந்த இந்திரியங்களின் கொட்டத்தை அழித்து விடும்.
 
த3ச’கம் 95 ( 6 to 10)

த3ச’கம் 95 : த்4யான யோக3:

சித்தார்த்3ரீபா4வ முச்சைர் வபுஷி ச
புலகம் ஹர்ஷ பா3ஷ்பஞ்ச ஹித்வா
சித்தம் சுத்3த்4யேத்கத2ம் வா கிமு
ப3ஹுதமஸா வித்3யயா வீதப4க்தே: |
த்வத்3கா3தா2 ஸ்வாத3 ஸித்3தா4ஞ்ஜன ஸதத
மரீம்ருஜ்யமானோSயமாத்மா
சக்ஷூர்வத்தத்வஸூக்ஷ்மம் ப4ஜதி ந து
ததா2Sப்யஸ்தயா தர்க்க கோட்யா || (95 – 6 )


உள்ளம் உருகாமல், உடலில் மயிர் கூச்சம் அடையாமல், ஆனந்தக் கண்ணீர் பெருகாமல் சித்தம் எங்கனம் சுத்தி அடையும்? பக்தி இல்லாதவனுக்குத் தவம், ஞானம் இவற்றால் என்ன பயன்? இந்த ஆத்மா தங்களுடைய கதைகளை அனுபவிப்பதால் சித்தாஞ்சனம் தீட்டப்பட்ட கண்கள் தத்துவங்களின் உண்மையை அறிவதைப் போல பிற யுக்திகளால் அறிவதே இல்லை.

த்4யானம் தே சீ’லயேயம் ஸமதனு ஸுக2
ப3த்3தா4ஸனோ நாஸிகாக்3ரன்
யஸ்தாக்ஷ: பூரகாத்3யைர் ஜிதபவனபத2ச்’
சித்தபத்3மன்தவ வாஞ்சம் |
ஊர்த்4வாக்3ரம் பா4வயித்வா ரவிவிது4 சி’கி2னஸ்
ஸம்விசிந்த்யோ பரிஷ்டாத்
தத்ராஸ்த2ம் பா4வயே த்வாம் ஸஜலஜலத4ர
ச்’யாமலம் கோமளாங்க2ம் || ( 95 – 7 )


தங்களுடைய தியானத்தை நான் நன்கு அப்பியாசிப்பேன். சரீரத்தைச் சமமாக நிலை நிறுத்திச் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் அமைத்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் வாயு மார்க்கத்தை ஜெயித்து, கீழ் முகமாக உள்ள இதயகமலம் மேல் முகமாக மாறியதாகப் பாவித்து, ஒன்றின் மேல் ஒன்றாகச் சூரியன், சந்திரன் அக்கினி இவைகளைத் தியானித்து, அக்கினியின் நடுவில் நீருண்ட மேகத்தின் சியாமளா வர்ணமும் அழகிய அவ்வயவங்களும் கொண்ட தங்களைத் தியானிப்பேன்.

ஆநீலச்’லக்ஷ்ண கேச’ம் ஜ்வலிதமகர
ஸத்குண்ட3லம் மந்த3ஹாஸ
ஸ்யன்தா3ர்த்3ரம் கௌஸ்துப4 ஸ்ரீ பரிக3த
வனமாலோருஹாராபி4 ராமம் |
ஸ்ரீவத்ஸாங்க3ம் ஸுபா3ஹும் ம்ருது3லஸது3த3ரம்
காஞ்சனச்சா2ய சேலம்
சாருஸ்நிக்3தோ4ரு மம்போருஹ லலித
பத3ம் பா4வயேஹம் ப4வந்தம் || (95 – 8 )


நன்கு கறுத்த மினுமினுப்பான கேசங்களை உடையவரும்; பிரகாசிக்கும் மகர குண்டலங்களை அணிந்தவரும்; புன்னகைப் பெருக்கினால் நனைந்தவரும், கௌஸ்துபத்தின் காந்தியால் சூழப்பட்டவரும்; வனமாலை, முத்து மாலை இவற்றால் அழகு பெற்றவரும்; ஸ்ரீ வத்சம் என்ற அடையாளத்தை உடையவரும்; அழகிய திருக் கரங்களை உடையவரும், மிருதுவான, பிரகாசிக்கும் வயிற்றை உடையவரும்; தங்க நிறப் பட்டாடைகள் அணிந்தவரும்; அழகான புஷ்டியான தொடைகளை உடையவரும்; தாமரை மலர் போன்ற மிருதுவான திருவடிகளை உடையவரும்; ஆகிய தங்களைத் தியானிப்பேன்.

ஸர்வாங்கே3ஷ்வங்க3 ரங்க3த் குதுகமதி
முஹுர்தா4ரயன்னீச’ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத3னஸரஸிஜே
ஸுந்த3ரே மந்த3ஹாஸே |
தாத்ராலீனந்து சேத: பரமஸுக2
சித3த்3வைத ரூபே விதன்வன்
அன்யன்னோ சிந்தயேயம் முஹுரிதி
ஸமுபாரூட4யோகோ3 ப4வேயம் || (95 – 9 )


ஹே ஈசா விருப்பத்தை அடைந்த மனத்தைத் தங்களுடைய எல்லா அவயவங்களிலும் நிலை நிறுத்துவேன். அவை அனைத்திலும் மிக அழகான புன்னகை தவழும் தங்கள் முக கமலத்தில் மனதைச் சேர்த்து வைப்பேன். அந்த மனத்தை வேறு எதுவும் சிந்தியாமல் சத் சித் ஆனந்ததமயமான பிரம்மத்திடத்தில் செலுத்துவேன். இப்படி அடிக்கடித் தங்கள் தியான யோகத்தை நான் அடைந்து பவிப்பேன் ஆகுக!

இத்தம் த்வத்3த்4யான யோகே3 ஸதி
புனரணிமா3த்யஷ்ட ஸம்ஸித்3த4யஸ்தா:
தூ3ரச்’ருத்யாத3யோSபி ஹ்யஹமஹமிகயா
ஸம்பதேயுர் முராரே |
த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா3வஹம் அகிலமிதம்
நாத்3ரியே காமயேSஹம்
த்வாமேவானந்த பூர்ணம் பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வதாபாத் || ( 95 – 10)


ஹே முராரி! இவ்வாறு தங்கள் மீது செய்யும் தியான யோகம் சித்தி அடைந்த பிறகு அணிமா சக்திகள் எட்டும்
” நான் முந்தி! நீ முந்தி ! ” என்று போட்டி போட்டுக் கொண்டு என்னிடம் வந்து சேரும். தங்களை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் அவற்றை நான் விரும்பவே மாட்டேன். ஆனந்த மயமான தங்களையே நான் விரும்புவேன். ஹே குருவாயூரப்பா! அனைத்துத் தாபங்களில் இருந்தும் என்னை காப்பாற்றுவீர்!
 
த3ச’கம் 96 ( 1 to 5)

ப4கவத் விபூ4தய:
தவம் ஹி ப்3ரஹ்மைவ ஸாக்ஷாத்
பரமுருமஹிமன்னக்ஷராணாமகார:
தாரோ மந்த்ரேஷு ராஞாம் மனுரஸி முனிஷு
த்வம் ப்4ருகுர் நாரதோ3பி |
ப்ரஹ்லாதோ3 தா3னவனாம் பசு’ஷுச
ஸுரபி4 பக்ஷிணாம் வைனதேயோ
நாகா3னாமஸ்யனந்தச் ஸுரஸரித3பி
ச ஸ்ரோதஸாம் விஸ்வமூர்த்தே || ( 96 – 1)

அதிக மகிமை உடைய விஸ்வமூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் பரப்ரம்மம் ஆவீர்கள். அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்; முனிவர்களுக்குள் ப்ருகு மற்றும் நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்; பட்சிகளில் கருடனகவும்; நாகங்களில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள் ( 96 – 1 )

ப்3ரஹ்மண்யானம் ப3லிஸ்த்வ்ம் க்ரதுஷு ச
ஜப யக்ஞோஸி வீரேஷு பார்த்தோ2
ப4க்தானாமுத்3த்4வஸ்தம் பலமஸி ப3லினாம்
தா4ம தேஜஸ்வினாம் த்வம்|
நாத்ஸ்யந்தஸ் த்வத் விபூ4தேர் விகாஸ
த3திச’யம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா3னம் யதி3ஹ
ப4வத்3ருதே தன்ன கிஞ்சித் ப்ரபஞ்சே || ( 96 – 2 )

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்; வீரர்களுக்குள் அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்; தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை. விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்! ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே, இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா? ( 96 – 2 )

த4ர்மம் வர்ணாச்’ரமாணாம் ச்’ருதி பத2 விஹிதம்
த்வத் பரத்வேன ப4க்த்யா
குர்வன்தோSந்தர் விராகே3 விகஸதி
ச’னகைஸ் ஸந்த்யஜந்தோ லப4ந்தே|
ஸத்தாஸ்பூர்த்தி ப்ரியத் வாத்மகம்
அகி2ல பதா3ர்தேஷு பி4ன்னேஷ்வ பி4ன்னம்
நிர்மூலம் விச்’வமூலம் பரமமஹமிதி
த்வத்3 விபோ4த4ம் விசு’த்3த4ம் || ( 96 – 3 )

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேதமார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும்போது கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள்; சச்சிதானந்த ரூபமானதும், வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும், தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் பரமாத்மாவாகிய தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள். ( 96 – 3 )

ஞானம் கர்மாபி ப4க்திஸ் த்ரிதயமிஹ
ப4வத்3 ப்ராபகம் தத்ரதாவன்
நிர்விண்ணானா மசே’ஷே விஷய இஹ
ப4வேத் ஞான யோகோ3Sதி4கார:|
ஸக்தானாம் கர்மயோக3ஸ் த்வயி ஹி
விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா:
நாப்யப்யந்தம் விரக்தாஸ் த்வயி ச
த்3ருத ரஸா ப4க்தி யோகோ3 ஹ்யமீச’ம்|| ( 96 – 4 )


இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும். இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷயசுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும். விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது. எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ , தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது ( 96 – 4 )

ஞானம் த்வத்3 ப4க்தானாம் வா லகு4
ஸுக்ருதவசா’ன் மர்த்யலோகே லப4ந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி
ப4கவன் நாககோ3 நாரகோ வா|
ஆவிஷ்டம் மாம் து தை3வாத்3 ப4வஜலநிதி4
போதாயிதோ மர்த்ய தே3ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா3ரம் கு3ருமனுகு3ண
வாதாயிதஸ் தாரயேதா2:|| ( 96 – 5)

ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் பிரயாசை இன்றி அடைகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும், மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான். சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும், ஆச்சாரியானைப் படகோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து, என்னைக் கரை சேர்ப்பீர் ஆகுக. ( 96 – 5 )
 
த3ச’கம் 96 ( 6 to 10)

ப4கவத் விபூ4தய:

அவ்யக்தம் மார்க3யந்த: ச்’ருதிபி4ரபி நயை:
கேவல ஞான லுப்தா4:
க்லிச்’யன்தேSதீவ ஸித்3தி4ம் ப3ஹுதர
ஜனுஷா மந்த ஏவாப்னுவந்தி|
தூ3ரஸ்த2: கர்மயோகோ3பி ச பரமப2லே
நன்வயம் ப4க்தியோகஸ்
த்வா மூலாதே3வ ஹ்ருத்யஸ் த்வரிதமயி
ப4க3வத் ப்ராபகோ வர்த்த4தாம் மே|| ( 96 – 6 )


வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும், அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. ஹே பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது. ( 96 – 6 )

ஞானாயை வாதியத்னம் முனிரப வத3தே
ப்3ரஹ்ம தத்வம் து ச்’ருண்வன்
கா3ட4ம் த்வத் பாத3ப4க்திம் ச’ரணமயதி
யஸ் தஸ்ய முக்தி: கராக்3ரே |
த்வத்3 த்4யானேSபோஹ துல்யா புனரஸுகரதா
சித்த சாஞ்சல்ய ஹேதோ:
அப்4யாஸாதா3சு’ ச’க்யம் தத3பி வச’யிதும்
த்வத் க்ருபா சாருதாப்4யாம்|| ( 96 – 7 )


வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும் அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார். ஆனால் எவன் ஒருவன் பிரம்மதத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன் உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்ய முடியாது என்பது துல்லியமே. ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும் தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும். ( 96 – 7 )

நிர்விண்ண: கர்ம மார்கே3 க2லு விஷமதமே
த்வத்கதா2 யாதௌ3 ச கா3ட4ம்
ஜாதச்’ரத்3தோ4Sபி காமனயி பு4வனபதே
நைவ ச’க்னோமி ஹாதும்|
தத்3 பூ4யோ நிச்’சயேன த்வயி நிஹிதமனா
தோ3ஷபு3த்3த4யா ப4ஜஸ்தான்
புஷ்ணீயாம் ப4க்திமேவ த்வயி ஹ்ருத3ய க3தே
மங்க்ஷு நங்க்ஷயந்தி ஸங்கா3 || ( 96 – 8 )


ஹே லோகநாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்; தங்கள் சரித்திரம் முதலியவற்றில் திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்; கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன். ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக்கொண்டும், தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும் அனுபவித்துக் கொண்டும், பக்தியை வளர்ப்பேன் ஆகுக தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா? ( 96 – 8 )

கச்’சித் க்லேசா’ர்ஜிதார்த்த2க்ஷய
விமலமதிர் நுத்3யமானோ ஜனௌ கை4:
ப்ராகே3வம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜன:
கால கர்மாக்ர ஹாவா|
சேதோ மே து3:க2ஹேதுஸ் ததி3ஹ கு3ணக3ணாம்
பா4வயத்ஸர்வகாரீ
த்யுக்த்வா சா’ந்தோ க3தஸ்த்வாம் மம ச குரு விபோ4
தாத்3ருசீ’ம் சித்த சா’ந்திம் || ( 96 – 9 )


முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து, அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
“என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல. . மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது” என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத் தங்களை வந்து அடைந்தான் ஹே பிரபு! அந்த மனச்சாந்தியை எனக்கும் தந்தருள்வீர் ( 96 – 9 )

ஐல: ப்ராகு3ர்வசீ’ம் ப்ரத்யதிவிவச’மனாஸ்
ஸேவமானச்’ சிரம் தாம்
கா3ட4ம் நிர்வித்3ய பூ4யோ யுவதி ஸுக2மித3ம்
க்ஷுத்3ர மேவேதி கா3யன்|
த்வத்3 ப4க்தீம் ப்ராப்ய பூர்ணஸ்
ஸுக2தரமசரத் தத்3 வது3த்3தூ4யஹ ஸங்க3ம்
ப4க்தோத்தம்ஸம் க்ரியாமாம் பவனபுரபதே
ஹந்தமேருந்தி3 ரோகா3ன் || ( 96 – 10 )


முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து, வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான வைராக்கியத்தை அடைந்து, “இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!” என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து, பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான்.
ஹே குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து, என்னையும் பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக! முதலில் என் வியாதிகளை அகற்ற வேண்டும்.( 96 – 10)
 
த3ச’கம் 97 ( 1 to 5)

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்ரைகுண்யாத்3 பி4ன்னரூபம் ப4வதி ஹி

பு4வனே ஹீன மத்4யோத்தமம் யத்3
ஞானம் ச்’ரத்3தா4 ச கர்த்தா வலதிரிதி
ஸுக2ம் கர்ம சாஹாரபே4தா3 : |
த்வத்க்ஷேத்ர த்வம்நிஷேவாதி3 து யதி3ஹ
புனஸ்த்வத்பரம் தத்துஸர்வம்
ப்ராஹுர்நைர்கு3ண்ய நிஷ்ட2ம் தத3னு பஜனதோ
மங்க்க்ஷு ஸித்3தௌ4 ப4வேயம் || ( 97 – 1)

இந்த உலகில் ஞானம், சிரத்தை, கர்த்தா, வாசஸ்தலம், சுகம், கர்மம், ஆகாரம் போன்ற அனைத்துமே சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் பேதத்தால் வேறுபடுகின்றன என்பது பிரசித்தி. ஆனல் தங்களையும், தங்கள் பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களையும் சேவிப்பது தங்கள் விஷயமாகவே நடைபெற்றால் அவைகளை மட்டும் நிர்குணம் என்று கூறுவதுண்டு,. அதன்படி அவற்றை அடிக்கடி சேவிக்கும் நான் விரைவில் முக்திடைவேன் ஆகுக.

த்வய்யேவ ந்யஸ்தசித்தஸ்ஸுக2மயி
விசரன் ஸர்வசேஷ்டாஸ் த்வத3ர்த்த2ம்
த்வத்3 ப4க்தைஸ் ஸேவ்ய மானானபி
சரிதசராநாச்’ரயன் புண்ய தே3சா’ன் |
த3ஸ்யௌ விப்ரே ம்ருகா3தி3ஷ்வபி ச
ஸமமதிர் முச்ய மானாவமான
ஸ்பர்தா4ஸூயாதி3 தோ3ஷஸ் ஸததம்
அகி2ல பூ4தேஷு ஸம்பூஜயே த்வாம் || ( 97 – 2)


ஹே ஈசா! தங்களிடம் மனத்தைச் செலுத்தி விட்டு; சுகமாகச் சஞ்சரித்துக் கொண்டு; சகல பிரவிருத்திகளையும் தங்களுக்காகவே செய்து கொண்டு; தங்கள் பக்தர்களால் இப்போது செய்யப்படும், முன்னர் செயப்பட்ட புண்ணிய கர்மங்களைச் செய்து கொண்டு; புண்ணிய க்ஷேத்திரங்களைச் சேவித்துக் கொண்டு; திருடன், பிராமணன், மிருகம் போன்ற எல்லோரிடமும் சமபுத்தியுடன் இருந்து கொண்டு; அவமானம், விரோதம், அசூயை போன்ற குணங்களை விட்டு விட்டு; எல்லா உயிர்களிடமும் தங்களை பூஜிப்பேனாகுக!

த்வத்3பா4வோ யாவதே3ஷு ஸ்புரதி ந
விச’த3ம் தாவதேவம் ஹ்யுபாஸிதம்
குர்வன் நைகாத்ம்யபோ3தே4 ஜ்ஜடிதி விகஸதி
த்வன்மயோSஹம் சரேயம் |
த்வத்3 த4ர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந
ப4க3வன் ப்ரஸ்து தஸ்ய ப்ரணாச’:
தஸ்மாத் ஸர்வாத்மனைவ ப்ரதி3ச’
மம விபோ4 ப4க்தி மார்க்க3ம் மனோக்ஞம் || ( 97 – 3)


இந்தத் திருடன், பிராமண, பசு போன்றவற்றில் ஈஸ்வர பாவம் ஸ்பஷ்டமாக விளங்கும் வரையில், எல்லாவற்றிலும் உள்ள ஆத்மா ஒன்றே என்று எண்ணிக் கொண்டு நான் சஞ்சரிப்பேனாகுக. ஐஸ்வர்யம் ஆதி குணங்கள் நிறைந்த தேவா! இந்த பாகவத கர்மத்துக்கு தொடக்கம் முதல் முடிவு வரை குறைவு என்பதே இல்லை. ஆகையால் எனக்கு மனத்தைக் கவரும் பக்தி மார்க்க்கதைத் தந்தருள்வீர்.

தச்சைனம் ப4க்தியோக3ம் த்3ரட4யிதுமயி மே
ஸாத்4யமாரோக்3ய மாயு:
தி3ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ
பே4ஷஜாயேவ து3க்3த4ம் |
மார்கண்டே3யோ ஹி பூர்வம் க3ணகநிக3தி3த
த்3வாத3சா’ப்3தா3யு ருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப4டநிவஹைர்
த்3ராவயாமாஸ ம்ருத்யும் || (97 – 4 )


ஹே ஈசா! இந்த பக்தி யோகம் உறுதி அடைவதற்கு என்னுடைய ரோகம் நீங்கவேண்டும்; ஆயுள் கூட வேண்டும். அவற்றைப் பெறுவதற்கும் தங்கள் திருவடிகளே மருதுக்கான பால் போல ஆகின்றன. அதுவும் கூட நன்மைக்கே! முன்னொரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவருக்கு ஜோசியர்கள் பன்னிரண்டு ஆண்டு ஆயுளைக் கூறினார்கள். அவர் தங்களை ஒரு வருஷம் நன்றாகச் சேவித்துத் தங்கள் படர்களின் உதவியுடன் யமனையே விரட்டினார்.

மார்கண்டே3யச்’சிராயுஸ்ஸ க2லு புனரபி
த்வத்பர: புஷ்ப ப4த்3ரா
தீரே நின்யே தபஸ்யன்னதுல ஸுக2ரதி :
ஷட் து மன்வந்தராணி |
தே3வேந்த்3ரஸ் ஸப்தமஸ்தம் ஸுரயுவதி
மருந்மன்மதை2ர் மோஹயிஷ்யன்
யோகோ3ஷ்மப்லுஷ்ய மாணைர் ந து
புனரச’க்த்வஜ்ஜனம் நிர்ஜயேத் க: || ( 97 – 5 )


சிரஞ்சீவியான மார்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்ற பின்னரும் தங்கள் பக்தனாகவே இருந்தார்.புஷ்ப பத்திரா நதிக் கரையில் தபஸ் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார். ஏழாவது மன்வந்தரத்தில் தேவேந்திரன் மார்க்கண்டேயரை அப்சரஸ்கள், வசந்த மாருதன், மன்மதன் இவர்கள் உதவியுடன் மயக்க எண்ணினான். மார்க்கண்டேயரின் யோகக்கினியால் தகிக்கப்பட்ட அவர்களால் அவரை மயக்க முடியவில்லை. தங்கள் பக்தனை யாரால் ஜெயிக்க முடியும்?
 
த3ச’கம் 97 ( 6 to 10)

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

ப்ரீத்யா நாராயணாக்2ய ஸ்த்வமத2 நரஸக2:
ப்ராப்த வானஸ்ய பார்ச்’வம்
துஷ்ட்யா தோஷ்டூய மானஸ்ஸது விவித4வரை:
லோபி4தோ நானுமேனே |
த்3ரஷ்டும் மாயாம் த்வதீ3யாம் கில
புனரவ்ருணோத் ப4க்தித்ருப்தாந்தராத்மா
மாயாது:கா2னபி3க்ஞ ஸ்தத3பி ம்ருக3யதே
நூன மாச்’சர்யஹேதோ: || ( 97 – 6 )


பிறகு நாராயணன் மற்றும் நரன் ஆன தாங்கள் அந்த மார்க்கண்டேயன் அருகில் வந்தீர்கள். மிகுந்த சந்தோஷத்துடன் துதித்த மார்க்கண்டேயன் பல வரங்களால் ஆசை மூட்டப் பட்ட போதும், பக்தியினால் திருப்தி அடைந்து இருந்ததால் அந்த வரங்களைக் கேட்க வில்லை. ஆனால் அவர் தங்கள் மாயையைப் பார்க்க விரும்பினார். மாயையினால் உண்டாகும் வருத்தத்ததை அவர் அறியாததால் அதைக் காண விரும்பி இருக்க வேண்டும்.

யாதே த்வய்யாசு’ வாதாகுல ஜலத3க3லத்
தோயபூர்ணாதிகூ4ர்ணத்
ஸப்தார்ணோராசி’ மக்3னே ஜக3தி ஸ து
ஜலே ஸம்ப்4ரமன் வர்ஷ கோடி: |
தீ3ன: ப்ரைக்ஷிஷ்ட தூ3ரே வடத3லச’யனம்
கஞ்சிதா3ச்’ச்ர்யா பாலம்
த்வாமேவ ச்’யாமளாங்க3ம் வத3னஸரஸி
ஜன்யஸ்த பாதா3ங்கு3லீகம் || ( 97 – 7 )


தாங்கள் சென்றவுடன், தாமதியாமல் பிரளய மேகங்கள் பொழிந்த கன மழையால் நிரம்பிய சப்த சாகரங்களில், பூமி மூழ்கிவிட்டது. மார்க்கண்டேயர் அந்தப் பிரளய ஜலத்தில் அனேக கோடி வருஷங்கள் சுழன்று திரிந்து வருந்தினார். நீரின் மேல் ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, சியாமள வர்ணத்துடன், கால் விரலை வாயில் வைத்துச் சுவைக்கும் ஒரு அற்புதக் குழந்தையான தங்களை வெகு தொலைவில் கண்டார்.

த்3ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமபி4க3த :
ஸ்ப்ரஷ்டு காமோ முநீந்த்3ர:
ச்’வாஸேனாந்தர் நிவிஷ்ட: புனரிஹ ஸகலம்
த்3ருஷ்டவான் விஷ்ட பௌக4ம் |
பூ4யோSபி ச்’வாஸவாதைர் ப3ஹிரனுபதிதோ
வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை:
மோதா3தா3ச்’லேஷ்டு காமஸ்த்வயி பிஹிததனௌ
ஸ்வாச்’ரமே ப்ராக3வதா3ஸீத் || ( 97 – 8 )


தங்களைக் கண்டு மயிர் கூச்சம் அடைந்து, தங்களைத் தொட விரும்பி, விரைவாகத் தங்கள் பக்கம் வந்தார். தங்களின் மூச்சுக் காற்றுடன் உள்ளே சென்றவர் அங்கே உலகம் அனைத்தையும் பார்த்தார். மறுபடியும் மூச்சுக் காற்றுடன் வெளியே வந்தவர் தங்களை ஆலிங்கனம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் தாங்கள் தங்கள் சரீரத்தை உடனே மறைத்துவிடவே அவர் தான் முன் போலவே தன் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டார்.

கௌ3ர்யா ஸார்த்த4ம் தத3க்3ரே புரபி4த3த2
க3தஸ்த்வத்ப்ரிய ப்ரேக்ஷ ணாரத்தீ2
ஸித்3தா4னேவாஸ்ய த3த்வா ஸ்வயமய
மஜராம்ருத்யுதாதீ3ன் கா3தோSபூ4த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி
ஸ ப்ரயதே யேன தஸ்மாத்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ்த்வம் நனு ஸகல
நியன்தேதி ஸவ்யக்தமாஸீத் ( 97- 9)


அதற்குப் பிறகு பரமேஸ்வரன் தங்கள் பக்தனைக் காண்பதற்குப் பார்வதி தேவியுடன் வந்தார். மார்க்கண்டேயன் முன் சென்று, அவர் தன் தவ மகிமையால் முன்பே பெற்றிருந்த ஜனன மரணமின்மையை அவருக்கு தான் அளிக்கும் வரமாக அருளிவிட்டுச் சென்றார். பரமேஸ்வரன் கூடத் தங்களைச் சேவிப்பதில் பிரீத்தி அடைகின்றார் என்பதால் தாங்களே மும் மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி என்பது தெளிவாகின்றது அல்லவா?

த்ர்யம்சோ’Sஸ்மின் ஸத்யலோகே விதி4ஹரி
புரபி4ன்மந்தி3ராண்யூர்த்4வ மூர்த்4வம்
தேப்4யோSப்யூர்த்4வம் து மாயா விக்ருதி விரஹிதோ
பா4தி வைகுண்ட2 லோக: |
தத்ர த்வம் காரணாம்ப4ஸ்யாபி பசு’பகுலே
சு’த்3த4 ஸத்வைகரூபி
ஸச்சித் ப்3ரஹ்மாத்3வயாத்மா பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வ ரோகா3த் || (97 -10)


பிரம்ம லோகம் , விஷ்ணு லோகம், சிவலோகம் என்னும் மூன்று பாகங்களையுடைய அந்த சத்திய லோகத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களின் லோகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உள்ளன. தங்களின் வைகுண்டமோ எனில் மாயையும் அதன் காரியங்களாகிய மஹத், அஹங்காரம் முதலிய பதினாறு விகாரங்களும் அற்றதாக அந்த மூன்று லோகங்களுக்குள் மேலே பிரகாசிக்கின்றது. அந்த வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், கோகுலத்திலும், தாங்கள் சுத்த சத்துவ ஸ்வரூபியாகவும், சத் சித் ஆனந்த பிரம்ம ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள். ஹே குருவாயூரப்பா! எல்லா வியாதிகளில் இருந்தும் என்னைக் காப்பாற்றுவீர்!
 
த3ச’கம் 98 ( 1 to 4)

த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

யஸ்மின்நேதத்3 விபா4தம் யத இத3
மப4வத்3யேன சேத3ம் யஏதத்
யோSஸ்மாது3த்தீர்ண ரூப : க2லு
ஸகலமித3ம் பா4ஸிதம் யஸ்ய பாஸா|
யோ வாசம் தூ3ர தூ3ரே புனரபி மனஸாம்
யஸ்ய தே3வா முனீந்த்3ரா :
நோ வித்யு3ஸ் தத்வ ரூபம் கிமுபுனரபதே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || (98-1)


அதிஷ்டான ரூபியான எவரிடம் இந்தப் பிரபஞ்சம் ஆரோபிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்றதோ; உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் உள்ள எவரிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ; எவரிடம் சென்று இந்தப் பிரபஞ்சம் ஐக்கியம் ஆகின்றதோ; எவர் இந்தப் பிரபஞ்சமாகவே தோன்றுகின்றாரோ; எவர் இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் வேறான உருவம் கொண்டவரோ; எவருடைய பிரகாசத்தால் இந்தப் பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ; எவர் வாக்குக்கும், மனோ விருத்திக்கும் வெகு தூரத்தில் இருக்கின்றாரோ; எவருடைய உண்மை ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லையோ; எவருடைய உண்மை ஸ்வரூபத்தை எவருமே அறியவில்லையோ; அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனுக்கு என்னுடைய நமஸ்காரம்.

ஜன்மாதோ2 கர்ம நாம ஸ்புடமிஹ
கு3ண தோ3ஷாதி3கம் வா ந யஸ்மின்
லோகானாமூதயே ய: ஸ்வய மனு பஜதே
தானி மாயானுஸாரீ |
பிப்ரச் சக்தீர ரூ போபி ச
பஹுதர ரூபோSவ பாத்யத்புதாத்மா
தஸ்மை கைவல்ய தாம்னே பர ரஸ
பரிபூர்ணாயவிஷ்ணோ நமஸ்தே || ( 98-2)


எங்கும் நிறைந்துள்ள கிருஷ்ணா! இவ்வுலகில் எவரிடத்தில் பிறப்பு, கர்மம், பெயர், குணம், தோஷம் முதலியவை இல்லையோ: எவர் லோக அனுக்கிரஹத்துக்காக மாயையை அனுசரித்து அதைச் சுதந்திரனாக அங்கீகரிக்கின்றாரோ; எவர் வித்யை, அவித்யை, ஞானம் ஐஸ்வர்யம் என்னும் சக்திகளை தரித்தவரோ; எவர் உருவமே இல்லாத போதிலும் தாவர ஜங்கமங்களின் உருவங்களைத் தரிக்கின்றாரோ; எவர் மத்ஸ்யம் கூர்மம் போன்ற அற்புத வடிவங்களில் பிரகாசிக்கின்றாரோ; எவர் மோக்ஷமும், பரமானந்தமும் அளிப்பவரோ அவருக்கு என் நமஸ்காரம்.

நோ திர்ய்ஞ்சன்ன மர்த்யம் ந ச ஸுரமஸுரம்
ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்3ரவ்யம் கர்ம ஜாதிம் கு3ணமபி
ஸத3ஸத்3வாSபிதே ரூப மாஹு: |
சி’ஷ்டம் யத் ஸ்யான் நிஷேதே4 ஸதி
நிக3மச’தைர்லக்ஷணா வ்ருத்தி தஸ்தத்
க்ருச்2ரேணாவேத்3யமானம் பரமஸுக2மயம்
பா4தி தஸ்மை நமஸ்தே || ( 98 – 3 )


தங்கள் ஸ்வரூபம் பசு, பக்ஷி போன்ற திரியக் அல்ல; மனிதன் அல்ல; தேவன் அல்ல; அசுரன் அல்ல; ஸ்த்ரீ அல்ல; புருஷன் அல்ல; திரவியம் அல்ல; கர்மம் அல்ல; ஜாதி அல்ல; குணம் அல்ல; அந்தக்கரணம் அல்ல; அவ்யக்தம் அல்ல; என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. “நேதி! நேதி! ” என்று ஒவ்வொன்றாக நிஷேதம் பண்ணும்போது எது கடைசியில் மிஞ்சுகின்றதோ, அதுவே உபநிஷத்துக்களால் லக்ஷண விருத்தி அடைகின்றது. வாச்ய, வாசக பாவம் இவற்றின் சம்பந்தம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அறிவிக்கப்படும் பிரம்மானந்த மயமாக அது பிரகாசிக்கின்றது.. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை உடைய தங்களுக்கு என் நமஸ்காரம்.

மாயாயாம் பி3ம்பி3தஸ்த்வம் ஸ்ருஜதி
மஹத3ஹங்கார தன்மாத்ரபே4தே3ர:
பூ4தக்3ராமேந்ந்த்ரியாத்யைரபி ஸகல ஜக3த்
ஸ்வப்ன ஸங்கல்ப கல்பம் |
பூ4ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட2 இவ
பதா3ன்யாத்மனா காலச’க்த்யா
க3ம்பீ4ரே ஜாயமானே தமஸி விதிமிரோ
பா4ஸி தஸ்மை நமஸ்தே || ( 98 – 4)


மாயையில் பிரதிபலிக்கும் தாங்கள்; மஹத் தத்வம், அஹம் தத்வம் இவற்றுடன்; சப்தம், ஸ்பரிசம், முதலான ஐந்து தன்மாத்திரைகளைக் கொண்டும்; ஐந்து மஹா பூதங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனஸ் இவைகளைக் கொண்டும்; ஸ்வப்பனத்துக்கும் சங்கல்பத்துக்கும் ஒப்பான பிரபஞ்சத்தைப் படைக்கின்றீர்கள். ஆமை தன் கால்களை உள்ளுக்கிழுப்பது போலவே, கால சக்தியால் இவை எல்லாவற்றையும் மீண்டும் தங்களிடம் அடக்கிக் கொள்கின்றீர்கள். சுஷுப்தியில் ஆழ்ந்த இருளில் தாமஸ சம்பந்தம் இல்லாத பிரகாச ரூபியாகத் தாங்கள் ஸ்வ ஸ்வரூபத்துடன் விளங்குகின்றீர்கள். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்!
 
த3ச’கம் 98 ( 5 to 8)

த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

ச’ப்3த3 ப்3ரஹ்மேதி கர்மேத்யணுரிதி
ப4க3வன் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விச்’வஹேதும் ஸகலமயதயா
ஸர்வதா2 கல்ப்யமானம் |
வேதா3ந்தைர் யத்து கீ3தம் புருஷபரசித்3
ஆத்மாபி4த4ம் தத்துதத்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதி விக்ருதிக்ருத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 5 )


சர்வ ஸ்வரூபியாக இருப்பதால், தாங்கள் எல்லா விதங்களிலும் கல்பிக்கப் படுகின்றீர்கள். சப்தப் பிரம்மம், கர்மம், பரமாணு, காலம் என்று தங்களையே பிரபஞ்சத்துக்குக் காரணமாகக் கூறுகின்றனர். உபநிஷத்துக்கள் புருஷன், பரன், சித், ஆத்மா என்று யாரைக் கூறுமோ அந்தத் தத்துவம் தன் பார்வையாலேயே மூலப் பிரகிருதியையும் அதன் விகாரங்களையும் சிருஷ்டிக்கின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

ஸத்வேனாஸத்தயா வா ந ச க2லு
ஸத3ஸத்வேன நிர்வாச்யரூபா
த4த்தே யாஸாவவித்3யா கு3ண
பணிமதிவத்3 விச்’வத்3ருச்யாவபா4ஸம் |
வித்3யாத்வம் சைவ யாத ச்’ருதிவசனலவைர்
யத்க்ருபாஸ்யந்த3 லாபே4
ஸம்ஸாராரண்ய ஸத்3யஸ் த்ருடன
பரசு’தாமேதி தஸ்மை நமஸ்தே || ( 98 – 6 )


சத் ( இருப்பது) என்றோ, அசத் (இல்லாதது) என்றோ, சதசத் ( இருந்தும் இல்லாதது ) என்றோ, வார்த்தைகளால் கூற முடியாத அவித்யை; ஒரு வெறும் கயிற்றில் ஒரு பாம்பைத் தோற்றுவிப்பதுபோல அனைத்து த்ருச்ய வஸ்துக்களையும் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கின்றது. அதே அவித்யை பகவானுடைய கருணைக் கடாக்ஷம் கிடைக்கும் போது உடனே வித்தையாக மாறிவிடுகிறது. சம்சாரம் என்னும் வனத்தை வெட்டும் கோடாரியாக மாறி விடுகின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

பூ4ஷாஸு ஸ்வர்ணவத்3வா ஜக3தி
க4டச’ராவாதி3கே ம்ருத்திகாவத்
தத்வே ஸஞ்சிந்த்யமானே ஸ்புரதி
தத3து4னாSபய த்3விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்ன த்3ரஷ்டு: ப்ரபோ3தே4 திமிரலயவிதௌ4
ஜீர்ண ராஜ்ஜோச்’ச யத்3வத்
வித்3யாலாபே4 ததை2வ ஸ்புடமபி விகஸேத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 7 )


ஹே கிருஷ்ணா! உண்மையை ஆராயும் போது குண்டலம் முதலிய ஆபரணங்களில் உள்ள சுவர்ணத்தைப் போலவும், குடம் முதலியவற்றில் உள்ள மண்ணைப் போலவும், ஜகத்துக்குக் காரணமான தங்களின் ரூபம் பிரகாசிக்கின்றது. கனவு விழித்து எழும் போது கனவுலகு அழிந்து விடுகின்றது. தீபத்தின் ஒளி கிடைக்கும் போது கயிற்றில் தெரியும் பாம்பு மறைந்து போகின்றது. அது போன்றே பிரம்ம ஞானம் ஏற்படும் போது பிரபஞ்சத்தின் தொடர்பு அழிந்து அந்த பிரம்மமும் சத் சித் ஆனந்த மயமாகப் பிரகாசிக்கும். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.

யத்3பீ4த்யோதே3தி ஸூர்யோ த3ஹதி
ச த3ஹனோ வாதி வாயுஸ் ததா3Sன்யே
யத்3பீ4தா: பத்3மஜாத்3யா: புனருசித
ப3லீனாஹரந்தேSனுகாலம் |
யேனை வாரோபிதா: ப்ராங்க் நிஜபத3மபி
தே ச்யாவிதாரச்’ச பச்’யாத்
தஸ்மை விச்’வம் நியந்த்ரே வயமபி
ப4வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || (98 – 8 )


ஹே கிருஷ்ணா! யாரிடம் கொண்ட பயத்தினால் சூரியன் உதிக்கின்றானோ, அக்கினி எரிக்கின்றானோ, காற்று வீசிகின்றதோ, பிரமன் முதலானவர்கள் காலம் தவறாமல் செயல் புரிகின்றார்களோ, யாரால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களுக்கு நியமிக்கப் படுகின்றார்களோ, யாரால் பிறகு அங்கிருந்து தள்ளப் படுகின்றார்களோ அப்படி எல்லாவற்றையும் நியமனம் செய்யும் தங்களுக்கு நமஸ்காரம்.
 
த3ச’கம் 98 ( 9 to 11)

த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

த்ரைலோக்யம் பா4வயந்தம் த்ரிகு3ண மயமித3ம்
த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீசா’னாமைக்யரூபம் த்ரிபி4ரபி
நிக3மைர் கி3யமானஸ்வரூபம் |
திஸ்ரோSவஸ்தா வித3ந்தம் த்ரியுக3 ஜனிஜுஷம்
த்ரிகர்மா க்ராந்த விச்’வம்
த்ரைகால்யே பே4தஹீனம் த்ரிபி4ரஹ மனிச’ம்
யோகபே4தை3ர் ப4ஜே த்வாம் || ( 98 – 9 )


சத்வம், ரஜஸ், தமஸ், என்ற முக்குணங்களின் விகாரமாக இந்த மூவுலகை சிருஷ்டிப்பவரும்;
அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று அக்ஷரங்களை உடைய பிரணவத்தின் முக்கிய பூதரும்;
பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவத்தை உடையவரும்;
ருக், யஜுர், ஸாம என்ற மூன்று வேதங்களால் கானம் செய்யப்படும் ஸ்வரூபத்தை உடையவரும்;
ஜாக்கிரதை, ஸ்வப்பனம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளை அறிகின்றவரும்;
திரேதா, துவாபரம், கலி என்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவரும்;
மூன்றடிகளால் மூவுலகங்களை முழுமையாக ஆக்கிரமித்தவரும்;
பூதம், வர்த்தமானம், பவிஷ்யம் என்ற மூன்று காலங்களிலும் பேதமற்றவரும்;
ஆகிய தங்களை நான் கர்ம, ஞான, பக்தி என்ற மூன்று யோகங்களாலும் வழிபடுவேன் ஆகுக!

ஸத்யம் சு’த்3த4ம் விபு3த்3த4ம் ஜயதி தவ வபு:
நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்3வந்த்3வம் நிர்விகாரம் நிகி2லகு3ணக3ண
வ்யஞ்ஜனாதா4ர பூ4தம் |
நிர்மூலம் நிர்மலம் தாந்நிரவதி4
மஹிமோல்லாஸி நிர்லீனமந்த:
நிஸ்ஸங்கா3னாம் முனீனாம் நிருபம
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம் || ( 98 – 10)


பரமார்த்த சத்யம் ஆனதும்; மாயையின் சம்பந்தம் இல்லாததும்; ஸ்வயம் பிரகாசமானதும்; எப்போதும் சுதந்திரமாக இருப்பதும், கர்த்துருத்வம் போன்றவை இல்லாததும்; ஸ்வஜாதீய பேதம் இல்லாததும்; சமஸ்த ஜீவர்களின் நற் குணங்களுக்கு ஆதாரமாக இருப்பதும்; தனக்கு காரணமாக எவருமில்லாததும்; ஆளவில்லாத மகிமையுடன் பிரகாசிப்பதும்; பற்றற்ற முனிவர்கள் தம் அந்தக்கரணத்தில் பற்றி இருப்பதும்; பரமானந்தமும், பிரகாசமும் கொண்ட தங்கள் ஸ்வரூபம் மேன்மை பெற்று விளங்குகின்றது.

து3ர்வாரம் த்3வாத3சா’ரம் த்ரிச’தபரிமிலத்
ஷஷ்டி பர்வாபி4வீதம்
ஸம்ப்4ராம்யத் க்ரூரவேக3ம் க்ஷணமனு
ஜக3தா3ச்சி2த்3ய ஸந்தா4வமானம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத2யது ந து மாம்
த்வத்பதை3காவலம்ப3ம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ4
பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகா4த்|| ( 98 – 11)


ஹே விஷ்ணோ! யாராலும் தடுக்க முடியாததும், பன்னிரண்டு மாதங்கள் என்னும் ஆரங்களை உடையதும்; முன்னூற்று அறுபது நாட்கள் என்னும் முனைகள் சூழந்ததும், கொடிய வேகத்துடன் நன்கு சுழல்வதும் ; ஒவ்வொரு க்ஷணத்திலும் உலகை பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்து ஓடும் தங்கள் காலச் சக்கரம் தங்கள் திருவடிகளில் அவலம்பிதிருக்கும் என்னை வருத்தக் கூடாது. கருணைக் கடலான குருவாயூரப்பா! என்னை வியாதிக் கூட்டத்திலிருந்து காப்பாற்றுவீர்.
 
த3ச’கம் 99 ( 1 to 5)

வேத3 ஸ்துதி

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கத2யது
த4ரணே: கச்’ய ரேணூன்மிமீதே
யஸ்யை வாங்க்4ரி த்ரயேண த்ரிஜக3த3பி4 மிதம்
மோத3தே பூர்ண ஸம்பத் |
யோSசௌ விச்வானி த4த்தே ப்ரியமிஹ
பரமம் தா4ம தஸ்யாபி4யாயாம்
தத்3 ப4க்தா யத்ர மாத்யந்த்
யம்ருதரஸ மரந்தஸ்யத்ர ப்ரவாஹ:|| ( 99 – 1)


எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த விஷ்ணுவின் வீரியங்களை
யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!( 99 – 1)

ஆத்3யாயாசே’ஷகர்தே ப்ரதி நிமிஷ
நவீனாய பர்த்ரே விபூ4தே :
ப4க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி3ச’தி
ஹவிராதீ3னி யக்ஞார்சனாதௌ3 |
க்ருஷ்ணாத்3யம் ஜன்ம யோ வா மஹதி3ஹ
மஹதோ வர்ணயேத் சஸோSயமேவ
பீத: பூர்ணே யசோ’பி4ஸ் த்வரித
மபி4ஸரேத் ப்ராப்யமந்தே பத3ம் தே || ( 99 – 2)


பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்
(எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்;
ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய)
ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில்
ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது
எவன் ஒருவன் மஹானான விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான
கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ; அவனே இந்த உலகில்
சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில்
தங்கள் வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான். ( 99 – 2)

ஹே ஸ்தோதார: கவீந்த்3ராஸ்தமிஹ
க2லு யதா2 சேதய்த்4வே ததை2வ
வ்யக்தம் வேத3ஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜனனோ பாத்த லீலா கதா2பி:|
ஜானந்தஸ் சாஸ்ய நாமானி அகில ஸுக2
கராணீதி ஸங்கீர்த்த யத்4வம்
ஹே விஷ்ணோ கீர்த்த நாத்3யைஸ் தவ க2லு
மஹதஸ் தத்வ போ3த4ம் ப4ஜேயம் || ( 99 –
3)

துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த மஹாவிஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ, அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு துதியுங்கள்!
ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!
ஹே விஷ்ணுவே! நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக! ( 99 – 3 )

விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்’யத மனஸி
ஸதா3 யைஸ்ஸ தர்மானபத்4னா
த்3யானீந்த்3ரஸ்யைஷ ப்4ருத்ய ப்ரியாஸக2
இவ ச வ்யாதனோத் க்ஷேமகாரீ|
ஈக்ஷந்தே யோகா3 ஸித்3தா4: பரபத3 மனிச’ம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாச’ம்
விப்ரேந்த்3ரா ஜாக3ரூகா க்ருத ப3ஹு நுதயோ
யச்ச நிர்பா4ஸயந்தே || ( 99 – 4)


எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ அந்த விஷ்ணு பகவான் – தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும், க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோஅந்த விஷ்ணு பகவான்; யோகசித்தி பெற்றவர்கள் எந்த விஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை எப்போதும் பார்கின்றர்களோ அந்த விஷ்ணு பகவான்; எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ அந்த விஷ்ணு பகவான்; அப்படிப்பட்ட அந்த விஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர்! ( 99-4)

நோ ஜாதோ ஜாயமானோSபி ச ஸமதி4க3தஸ்
த்வன் மஹிம்னோSவஸானம்
தே3வ ச்’ரேயாம்ஸி வித்3வான் ப்ரதிமுஹுரபி
தே நாம ச’ம்சாபி4 விஷ்ணோ |
தந்த்வாம் ஸமஸ்தௌமி நானாவித4நுதி
வசனைரஸ்ய லோக த்ரயஸ்யாபி
ஊர்த்4வம் விப்4ராஜமானோ விரசித வஸதீம்
தத்ர வைகுண்ட2 லோகே || ( 99 – 5)


ஹே தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் திருநாமத்தை ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன். இந்த மூவுலகங்களுக்கும் மேலே வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன். ( 99 – 5 )
 
த3ச’கம் 99 ( 6 to 10)

வேத3 ஸ்துதி
ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2மமயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹித மப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க்பத்ரம் யத் கிலாஹு: கனகத4ரணிப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)


ஹே பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர். அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில் ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா? அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர் ( 99 – 6 )

ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2மமயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹித மப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க்பத்ரம் யத் கிலாஹு: கனகத4ரணிப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)

ஹே பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர். அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில் ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா? அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர் ( 99 – 6 )

மூர்த்த்4னாமக்ஷ்ணாம் பதா3னி வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்’வம்
தத்ப்ரோத்கம்யாபி திஷ்ட2ன் பரிமிதவிவரே
பா4ஸி சித்தாந்தரேSபி |
பூ4தம் ப4வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப4வான்
கிஞ்ச தேஹேந்த்3ரியாதி3ஷு
ஆவிஷ்டோ ஹ்யுத்3க3தத்வாத்3 அம்ருதமுக2ரஸம்
சானுபு4ங்க்ஷே த்வமேவ || ( 99 – 8 )


தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள்.
இந்த பிராமாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள். ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள். ஹே புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனி வரப் போவதும் எல்லாம் தாங்களே! தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும் அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான் மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள். ( 99 – 8 )

யஸ்து த்ரைலோக்ய ரூபம் த3த4த3பி ச
ததோ நிர்க3தோSனந்த சு’த்3த4
ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க2லு
மஹிமா ஸோSபி தாவான் கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா4க3 ஏவாகி2ல பு4வனா தயா
த்3ருஷ்யதே த்ரயம்ச’கல்பம்
பூ4யிஷ்ட2ம் ஸாந்த்3ர மோதா3த்மக முபரி
ததோ பா4தி தஸ்மை நமஸ்தே || ( 99 – 9 )


ஹே அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்தபோதிலும், அம் மூவுலகங்களில் இருந்து வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள். எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான். தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது. முக்கால் பாகம் பிரம்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது. அத்தகைய அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம். ( 99 – 9 )

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து3ரதி4க3மதமம்
தத்து சு’த்3தை4க ஸத்வம்
வ்யக்தஞ்சாப்யே ததே3வ ஸ்புட மம்ருத
ரஸாம்போ4தி4 கல்லோல துல்யம்
ஸர்வாத் க்ருஷ்டாம பீ4ஷ்டாம் ததி3ஹ
கு3ணரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ச்’ரயேஹம் பவனபுரபதே
பாஹிமாம் க்ருஷ்ண ரோகா3த் || (99 -10)


எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் நிர்குண ஸ்வரூபமானது பிரயத்தனப்பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது. சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது. மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே பிரம்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின் அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது. ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும், பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய தங்கள் மூர்த்தியை நான் ஆசிரயிக்கிறேன். ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! என்னை சமஸ்த ரோகங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் ( 99 – 10 )
 
த3ச’கம் 100 ( 1 to 5)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அக்3ரே பச்’யாமி தேஜோ நிபி3ட3தர
கலாயாவலி லோப4நீயம்
பீயூஷாப்லவிதோஹம் தத3னு தது3த3ரே
தி3வ்ய கைசோ’ர வேஷம் |
தாருண்யாரம்ப4 ரம்யம் பரமஸுக
ரஸாஸ்வாத் ரோமாஞ்சிதாங்கை3:
ஆவீதம் நாரதா3த்4யை விலஸத்3
உபநிஷத் ஸுந்த3ரி மண்ட3லைச்’ச|| ( 100 – 1)


நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன். பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)

நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் க4னமமலதரம்
ஸம்யதம் சாரு ப4ங்க்3யா
ரத்னோத்தம் ஸாபி4ராமம் வலயித
முத3யச் சந்த்3ரகை: பிஞ்ச2 ஜாலை:|
மந்தார ஸ்ரங்நிவீதம் தவ
ப்ருது2கபரீபா4ரமாலோகயேஹம்
ஸ்நிக்3த4 ஸ்வேதோர்த்4வ புண்ட்3ராமபி
ச ஸுலலிதாம் பா2ல பா3லேந்து3வீதீ2ம் || ( 100 – 2)


நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.
( 100 – 2)

ஹ்ருத்3யம் பூர்ணானு கம்பார்ணவ
ம்ருது3லஹரி சஞ்சல ப்4ரூவிலாசை:
ஆநீல ஸ்நிக்3த4 பக்ஷ்மாவலி
பரிலஸிதம் நேத்ர யுக்3மம் விபோ4 தே|
ஸாந்த்3ரச்சாயம் விசா’லாருண
கமலத3லாகர மாமுக்3த4 தாரம்
காருண்யா லோகலீலா சி’சி’ரித
பு4வனம் க்ஷிப்யதாம் மய்யநாதே2 || ( 100 – 3)


ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)

உத்துங்கோ3ல்லாஸி நாஸம் ஹரிமணி
முகுர ப்ரோல்லஸத்3 க3ண்ட3பாலீ
வ்யாலோலத்கர்ண பாசா’ஞ்சித
மகரமணி குண்டல த்3வந்த்3வ தீப்ரம்|
உன்மீலத்3 த3ந்த பங்க்தி ஸ்புரத3ருணதரச்
சாய பி3ம்பா3த4ராந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி3 மந்த3ஸ்மித மது4ரதரம்
வக்த்ரமுத்3 பா4ஸதாம் மே || ( 100 – 4)


உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)

பா3ஹு த்3வந்த்3வேன ரத்னோஜ்ஜ்வல
வலயப்4ருதா சோண பாணி ப்ரவாலேன்
உபாத்தம் வேணு நாலீம் ப்ரஸ்ருத
நக2மயூகா2ங்கு3லீ ஸங்க3 ஸார
க்ருத்வா வக்த்ராரவிந்தே3 ஸுமது4ர விகஸத்3
த்3ராகமுத்3பா4வ்யமானை:
ச’ப்த3 ப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சி’சி’ரித பு4வனை:
ஸிஞ்ச மே கர்ண வீதீம்||(100- 5)


ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாதபிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்கவேண்டும்.(100-5 )
 
த3ச’கம் 100 ( 6 to 8)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

உத்ஸர்பத் கௌஸ்துப4 ஸ்ரீததிபி4ரருணிதம்
கோமலம் கண்ட2 தே3ச’ம்
வக்ஷ: ஸ்ரீ வத்ஸரம்யம் தரலதர
ஸமுத்3 தீ3ப்ர ஹார ப்ரதானம்|
நானவர்ண ப்ரஸூனாவலி கிஸலயிநீம்
வன்யமலாம் விலோல
லோலம்பா3ம் லம்ப3 மானா முரஸி
தவ ததா2 பா4வயே ரத்னமாலாம் || ( 100- 6)


உயரக் கிளம்புகின்ற கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்; ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்; பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும், அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய வனமாலையையும், அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.(100-6 )

அங்கே3 பஞ்சாங்க3ராகை 3: அதிச’ய
விகஸத் சௌரபா4 க்ருஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபி
க்ருசா’ம் பி3ப்4ரதம்மத்3ய வல்லீம் |
ச’க்ராச்’மன்யஸ்த தப்தோஜ்ஜ்வல
கனகநிப4ம் பீத சேலம் த3தா4னம்
த்4யாயாமோ தீப்தரச்’மி ஸ்புட மணிரச’னா
கிங்கிணீ மண்டி3தம் த்வாம் || ( 100 – 7 )

சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால் ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக பிரம்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில் லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்; இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின் கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன். ( 100 – 7 )

ஊரூ சாரூ தவோரூ க4னமஸ்ருணா ருசௌ
சித்தசோரௌ ராமாயா:
விச்’வ க்ஷோப4ம் விசங்க்ய த்4ருவமணி ச’முபௌ4
பீத சேலா வ்ருதாங்கௌ3 |
ஆனம்ராணாம் புரஸ்தான்னயஸன்
த்3ருத ஸமஸ்தார்த்த2 பாலி ஸமுத்3க3
ச்சா2யம் ஜானுத்3வயஞ்ச க்ரம ப்ருது2ல
மனோக்ஞே சஜங்கே4 நிஷேவே|| ( 100 – 8 )


மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த, (அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால் மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட, புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்; கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக்கால்களையும் சேவிகின்றேன்.( 100 – 8 )
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top