• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 66 ( 1 to 5)

கோ3பி ஜன ஆஹ்லாத3னம்

உபயாதானாம் ஸுத்3ருசா’ம் குசுமாயூத4 பா3ணபாத விவசா’னாம்|
அபி4வாஞ்சி2தம் விதா4தும் க்ருதமதி ரபிதா ஜகாத2 வாமிவ || ( 66 -1)

மன்மத பாணத்தால் அடிபட்டு, பரவசர்களாகி, அதனால் சமீபத்தில் வந்த, கட்டழகிகளின் ஆசைகளை நிறைவேற்றத் தீர்மானித்து இருந்தும், அவர்களிடம் விபரீத வார்த்தைகளைக் கூறினீர்கள் அல்லவா? ( 66 – 1)

க3க3னக3ம் முனி நிவஹம் ச்’ராவயிதும் ஜகி3த2 குலவதூ4 த4ர்மம் |
த4ர்ம்யம் க2லு தே வசனம் கர்மது நோ நிர்மலஸ்ய விச்’வாஸ்யம்|| ( 66 – 2)

ஆகாயத்தில் வந்து நிற்கும் முனிவர் கூட்டத்தை கேட்கச் செய்வதற்காக குலஸ்திரீக்களின் தர்மத்தை எடுத்து உரைத்தீர்கள் அல்லவா? தங்கள் திருவாக்கு தர்மத்தை விட்டு அகன்றதே இல்லை. ஆனால் மாசற்ற, புண்ய பாப சம்பந்தம் இல்லாத தங்களுடைய பிரவ்ருத்தி நம்பத் தகுந்தது அல்ல! ( 66 – 2)

ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீ மேணீத்3ருஷ: பரம்தீ3னா |
மா மா கருணாஸிந்தோ4 பரித்ய ஜேத்யதிசிரம் விலேபுஸ்தா:|| ( 66 – 3)

அந்த மான் கண்ணியர் தங்களுடைய விபரீதமான திருவாக்கினைக் கேட்டு, “கருணைக் கடலே! எங்களைக் கை விடாதீர்கள் !” என்று வெகு நேரம் புலம்பினார்கள அல்லவா?
( 66 – 3)

தாஸாம் ருதி3தைர் லபிதை: கருணாகுலமானஸோ முராரே த்வம்|
தாபிஸ் ஸமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலினேஷு காமமாபி4ரந்தும் || (66 – 4)

முராரியே! தாங்கள் அவர்கள் வருந்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் கருணை பொங்கிய மனத்துடன் அந்தப் பெண்களுடன் யமுனையின் மணல் திட்டுக்களில் இஷ்டம் போல விளையாடத் தொடங்கினீர்கள். ( 66 – 4)

சந்த்ரகர ஸ்யந்த3ல ஸத்ஸுந்த3ர யமுனா தடாந்த வீதீ2ஷு |
கோ3பி ஜனோத்தரீயை: ஆபாதி3த ஸம்ஸ்தரே ந்யஷீத3ஸ்த்வம் || ( 66 – 5)

நிலவொளி பொழிந்த அழகிய யமுனைநதிக் கரையில் கோபஸ்த்ரீக்களின் மேலாடைகளால் உண்டு பண்ணப்பட்ட விரிப்பில் தாங்கள் அமர்ந்தீர்கள் அல்லவா?
( 66 – 5)
 
த3ச’கம் 66 ( 6 to 10)

கோ3பி ஜன ஆஹ்லாத3னம்

ஸுமது4ர நர்மலாபனை: கரஸங்க்ரஹணைச்’ச சும்பனோல்லாசை:|
கா4டா4லிங்க3ன ஸங்கை3; தவ மங்க3னாலோக மாகுலீ சக்ருஷே || ( 66 – 6)

காதுகளுக்கு இனிமையான பரிஹாச வசனங்களாலும்; கைகளைப் பிடித்துக் கொண்டு, பலவகை முத்தங்கள் தந்து கெட்டியாகத் தழுவிக் கொண்டு, தாங்கள் அந்தப் பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? ( 66 – 6 )

வாஸோ ஹரண தி3னே யத்3வாஸோ ஹரணம் ப்ரதி ச்’ருதம் தாஸாம் |
தத3பி விபோ4 ரஸ விவச’ ஸ்வாந்தானாம் காந்த ஸுப்ருவாமத3தா3:|| ( 66 – 7)

பிரபுவே! வஸ்த்ராபஹாரம் செய்த தினத்தில் இடுப்பில் இருந்து எந்த வஸ்திரத்தை அவிழ்ப்பது பிரதிக்ஞை செய்யப்பட்டிருந்ததோ, சிருங்கார ரசத்தில் மூழ்கிய அந்தக் கட்டழகிகளுக்குத தாங்கள் அதையும் செய்தீர்கள் அல்லவா? ( 66 – 7 )

கந்த3லித க4ர்மலேச’ம் குந்த3ம்ருது3ஸ்மேர வக்த்ர பதோ2ஜம் |
நந்த3ஸுத த்வாம் த்ரிஜக3த் ஸுந்த3ரம் உபகூ3ஹ்யம் நந்தி3தா பா3லா:|| ( 66 – 8)

சரீரத்தில் தோன்றிய சிறு சிறு வியர்வைத் துளிகளை உடைய; முல்லைப்பூ போன்ற இளம் புன்னகை தவழும் முகத்தை உடைய; த்ரிலோக சுந்தரன் ஆன உம்மைக் கட்டித் தழுவி அப்பெண்கள் ஆனந்தம் அடைந்தனர் அல்லவா? ( 66 – 8)

விரஹேஷ்வங்கா3ர மய :ச்’ருங்கா3ர மயச்’ச ஸங்க3மே ஹி த்வம் |
நிதரா மங்கா3ரமய ஸ்தத்ர புனஸ்ஸங்கமேSபி சித்ரமிதம் || ( 66 – 9)

தாங்கள் விட்டுப் பிரியும் பொழுது தீக்கனல் போன்றவர். சேர்ந்திருக்கும் போது சிங்கார ரூபியாக ஆவீர்கள். ஆனால் அந்த இராசக்ரீடையில் சேர்ந்து இருக்கும் போதும் தீக்கனல் போன்று இருந்தீர்கள் என்பது அதிசயம்.(66-9)

ராதா4 துங்க3 பயோத4ர ஸாது4 பரிரம்ப4 லோலுபாத்மானம்|
ஆராத4யே ப4வந்தம் பவனபுராதீ3ச’ ச’மய ஸகலக3தா3ன் || ( 66 – 10)

ராதையின் உயர்ந்த ஸ்தனங்களைக் நன்றாக அணைத்துக் கொள்வதில் ஆசைகொண்ட மனத்தை உடைய உங்களை நான் ஆராதிக்கின்றேன். குருவாயூரப்பா! என் வியாதிகள் எல்லாவற்றையும் தணிக்கவேண்டும். (66-10)
 
த3ச’கம் 67 ( 1 to 5)

ப4க3வத திரோதா4னம்

ஸ்புரத் பரானந்த3 ரஸாத்மகேன
த்வயா ஸமாஸாதி3த போ4க3லீலா:|
ஆஸீம மானந்த3ப4ரம் ப்ரபன்னா:
மஹாந்த மாபூர் மத3மம்பு3ஜாக்ஷ்ய: || ( 67 – 1)


பிரகாசிக்கின்ற பரமானந்த ஸ்வரூபியான தங்களால் சுகபோகங்களை அடைந்து; அதனால் எல்லையற்ற ஆனந்தம் அடைந்த அவர்கள்; அதன் காரணமாக மிகுந்த செருக்கு அடைந்தார்கள். ( 67 – 1 )

நிலீயதேSசௌ மயி மைய்ய மாயம்
ரமாபதி விஸ்வ மனோபி4 ராமம் |
இதிஸ்ம ஸர்வா: கலிதாபி4மனா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோபூ4 : || ( 67 – 2 )

“லக்ஷ்மி காந்தனும், எல்லாருடைய மனத்தையும் கவரும் இந்தக் கிருஷ்ணன் கபடம் இல்லாமல் என்னிடமே மயங்கி இருக்கின்றான்! என்னிடமே மயங்கி இருக்கின்றான்!” என்றே ஒவ்வொரு பெண்ணும் கர்வம் அடைந்ததைக் கண்டு, ஹே கோவிந்தா! தாங்கள் அவர்களிடமிருந்து மறைந்து போய்விட்டீர்கள். ( 67 – 2)

ராதா4பி4தா4ம் தாவத3 ஜாத க3ர்வாம்
அதிப்ரியம் கோ3ப வதூ4ம் முராரே |
ப4வான பாதாய க3தோ விதூ3ரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ || ( 67 – 3)

ஹே முராரி! அப்போது தாங்கள் கர்வம் கொள்ளதவளும், அதனால் தங்களுக்குப் பிரியமானவளும் ஆன ராதை என்னும் கோபியை அழைத்துக் கொண்டு வெகு தூரம் சென்று அவளுடன் விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? ( 67 – 3)

திரோஹிதேSதத்வயி ஜாத தாபா:
ஸமம் ஸமேதா: கமலாயதாக்ஷ்ய:|
வனே வனே த்வாம் பரி மார்க3 யந்த்யோ
விஷாத3 மபுர்ப4க3வன்ன பாரம் || ( 67 – 4)

பகவன்! தாங்கள் மறைந்தவுடன் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை உடைய அந்த கோபிகைகள் ஒரே போல தாபம் அடைந்து, ஒன்றாகச் சேர்ந்து, ஒவ்வொரு காட்டிலும் சென்று, தங்களைத் தேடி, எல்லையே இல்லாத வருத்தத்தை அடைந்தார்கள். ( 67 – 4 )

ஹாசூத ஹா சம்பக கர்ணிகார
ஹா மல்லிகே மாலதி பா3லவல்ய:|
கிம் வீக்ஷிதோ நோ ஹ்ருத3யைகசோர:
இத்யாதி தாஸ்த்வத் ப்ரவனா விலேபு:|| ( 67 – 5)

ஏ மாமரமே! ஏ சண்பக மரமே! ஏ கர்ணிகார மரமே! ஏ மல்லிகையே! ஏ மாலதியே! ஏ இளம் கொடிகளே! எங்கள் மனத்தைக் கவர்ந்து சென்ற ஒருவனை நீங்கள் கண்டீர்களா? என்று கதறினார்கள். ( 67 – 5)
 
த3ச’கம் 67 (6 to 10)

ப4க3வத திரோதா4னம்

நிரீக்ஷி தோSயம் ஸகி பங்கஜாக்ஷ்ய:
புரோ மாமாத்யாகுல மாலபந்தீ |
த்வாம் பா4வனா சக்ஷுஷி வீக்ஷ்ய காசித்
தாபம் ஸகீ2னாம் த்3விகு3ணீ சகார || ( 67 – 6)


ஒருத்தி தங்களை மனக்கண்ணில் கண்டு,” ஏ தோழிகளே! தாமரைக் கண்ணன் என் எதிரில் காணப்பட்டான்!” என்று பரபரப்புடன் கூறி தோழிகளின் வருத்தத்தை இரண்டு மடங்கு ஆக்கினாள். ( 67 – 6)

த்வதா3த்மிகாஸ்தா யமுனா தடாந்தே
தவானுசக்ரு: கில சேஷ்டிதானி |
விசித்ய பூ4யோsபி ததை2வ மானத்
த்வயா விமுக்தாம் தத்3ருசு’ச்’ச ராதா4ம் || ( 67 – 7 )


தங்களிடம் லயித்து தன்மயம் ஆகித் தாங்களாகவே மாறிவிட்ட அந்த கோபிகைகள், யமுனைக் கரையில் பூதனா மோக்ஷம் போன்ற தங்கள் சேஷ்டிதங்களை அனுகரணம் செய்தார்கள் அல்லவா? மறுபடியும் உங்களைத் தேடி வரும்போது , அவளும் கர்வம் கொண்டதால் தனியே விடப்பட்ட ராதையையும் கண்டார்கள் அல்லவா? ( 67 – 7)

தத ஸமம் தா விபினே ஸமந்தாத்
தமோவதாராவதி4 மார்க3யந்த்ய:|
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே
ப்4ருச’ம் விலேபுச்’ச ஜகு3ர் கு3ணாம்ஸ்தே || ( 67 – 8 )


அதன் பிறகு அவர்கள் ராதையுடன் கூட, காட்டில் நான்கு பக்கங்களிலும் இருட்டும் வரையில் தேடி, மீண்டும் யமுனைக் கரையில் ஒன்று சேர்ந்து வருந்தி நின்றனர். தங்களைப் புகழ்ந்து பாடவும் செய்தனர். ( 67 – 8)

ததா2 வ்யதா2 ஸங்குல மானஸானாம்
வ்ரஜாங்க3னானாம் கருணை க ஸிந்தோ4|
ஜகத் த்ரயீ மோஹன மோஹனாத்மா
த்வாம் ப்ராது3 ராஸீரயி மந்த3ஹாஸீ || ( 67 – 9 )


ஹே கிருஷ்ணா! அவ்வாறு வருந்திய மனத்தை உடைய கோபஸ்திரீகள் எதிரே மூவுலங்களையும் மயக்குகின்ற சுந்தர வடிவுடனும், மந்தஹாசத்துடனும் தாங்கள் தோன்றினீர்கள் அல்லவா? ( 67 – 9 )

ஸந்தி3க்3த4 ஸந்த3ர்ச’ன மாத்மகாந்தம்
த்வாம் வீக்ஷ்ய தன்வ்யஸ் ஸஹஸா ததா3னீம் |
கிம் கிம் ந சக்ரு: ப்ரயதா3திபா4ரத்
ஸ த்வம் க3தா3த் பாலய மாருதேச’ || ( 67 – 10)


“மீண்டும் காண்போமா?” என்று ஏங்கிய அந்தப் பெண்கள் தங்களின் ப்ரியதமனாகிய உங்களைக் கண்டு ஆனந்தத்திலும் அதிசயத்திலும் விரைந்து என்னென்ன செய்யவில்லை! அப்படிப்பட்ட குருவாயூரப்பா! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும். ( 67 – 10)
 
த3ச’கம் 68 ( 6 to 10)

கோ3பிகானாம் பரம ஆஹ்லாத3:
இதி முதா3SS குலைர் வல்லவீ ஜனை:
ஸம முபாக3தோ யாமுனே தடே|
ம்ருது3 குசாம்ப3ரை: கல்பிதாஸனே
கு4ஸ்ருண பா4ஸுரே பர்ய சோ’ப4தா2: || ( 68 – 6 )

இவ்விதம் ஆனந்த பரவசர்களாகிய கோப ஸ்திரீகளுடன் யமுனைக் கரைக்கு வந்து குங்குமத்தால் விளங்குவதும் மிருதுவான ரவிக்கைகளால் உண்டு பண்ணப் பட்டதும் ஆன ஆசனத்தில் தாங்கள் வீற்றிருந்தீர்கள் அல்லவா? ( 68 – 6)

கதி விதா4 க்ருபா கோS பி ஸர்வதோ
த்ருத த3யோ த3யா கேசிதா3ச்’ரிதே|
கதிசி தீ3த்3ருஷா மாத்3ரு சே’ஷ்வபீத்
யபி4ஹிதோ ப4வான் வல்லவீ ஜனை:|| ( 68 – 7 )

“கருணை என்பதில் எத்தனை விதம் உண்டு? சிலர் எல்லோரிடத்திலும் கருணை கொண்டால் சிலர் தங்களை ஆச்ரயித்தவர்களிடத்தில் மட்டும் கருணை கொள்கிறார்கள். சிலர் உங்களைப் போல ஆச்ரயித்தவர்களிடமும் கருணை அற்றவர்களாக இருக்கின்றார்கள்!” என்று அந்தப் பெண்கள் தங்களிடம்
கூறினார்கள் அல்லவா? ( 68 – 7 )

அயி குமாரிகா நைவ ச’ங்க்யதாம்
கடி2னதா மயி ப்ரேம காதரே |
மயி து சேதஸோ வோனு வ்ருத்தயே
க்ருத மித3ம் மயேத்யூசிவான் ப4வான்|| ( 68 – 8 )

“ஓ பெண்களே! பிரேமை அற்று விடுமோ என்று என்னிடத்தில் கடுமையை பற்றி சந்தேகப்படவேண்டாம். கண்ணில் இருந்து மறைந்தது உங்கள் மனம் என்னிடம் தொடர்பு கொள்வதற்காகச் செய்யப்பட்டது” என்று கூறினீர்கள் அல்லவா?( 68 – 8)

அயி நிச’ம்யதாம் ஜீவ வல்லபா4:
ப்ரியதாமோ ஜானே நேத்3ருசோ’ மம|
ததி3ஹ ரம்யதாம் ரம்ய யாமினீஷூ
அனுபரோத4 மித்யாலபோ விபோ4 || ( 68 – 9)

“ஓ பிராண நாயிகைகளே கேளுங்கள்! உங்களைப் போன்ற மிகவும் பிரியமான பந்து மித்திரர்கள் வேறு எவரும் எனக்கு இல்லை. ஆகையால் இந்த யமுனைக் கரையில் ரமணீயமான இரவுகளில் தங்கு தடை இல்லாமல் கிரீடை செய்யப்படும்”என்று நீங்கள் திருவாய் மலர்ந்து அருளினீர்கள் அல்லவா? ( 68 – 9)

இதி கி3ராSதி4கம் மோத3 மேது3ரை:
வ்ரஜ வது4ஜனை ஸாகமாராமன்|
கலித கௌதுகோ ராஸ கே2லனே
கு3ருபுரீபதே பஹி மாம் க3தா3த்|| ( 68 – 10)

ஹே குருவாயூரப்பா! என்ற திருவாக்கினைக் கேட்டு, ராசக்ரீடையில் உற்சாகம் கொண்ட, மிகுந்த ஆனந்தத்துடன் கோகுலப் பெண்களுடன் விளையாடும் தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும். ( 68 – 10)
 
த3ச’கம் 69 ( 1 to 5)

ராஸக் கிரீடை3

கே’ச பாச’ த்4ருத பிஞ்சி2கா விததி
ஸஞ்சலன் மகர குண்ட3லம்
ஹாரஜால வன மாலிகா லலிதா
மங்க3ராக3 க4ன சௌரப4ம் |
பீத சேல த்4ருத காஞ்சி காஞ்சித
முத3ஞ்ச த3ம்சு’மணி நூபுரம்
ராஸகேலி பரி பூ4ஷிதம் தவஹி
ரூபமீச’ கலயாமஹே || ( 69 – 1 )


ஹே சர்வேஸ்வரனே! கொண்டையில் தரிக்கப்பட்ட மயில்பீலிகளின் வரிசைகளை
உடையதும்; சலிக்கின்ற மகர குண்டலங்களை அணிந்ததும்; முத்து மாலைகளாலும், வனமாலைகளாலும் மனோஹரமானதும்; சந்தனப் பூச்சின் நறுமணம் கொண்டதும்; மஞ்சள் பட்டாடையின் மீது கட்டப்பட்ட மேகலையால் அழகுற்றதும்; காந்தி வீசும் இரத்தின சிலம்புகள் அணிந்ததும்; ராசக்ரீடைக்கென்றே விசேஷமாக அலங்கரிக்கப்பட்டதும் ஆன தங்கள் மேனியை நாங்கள் தியானிக்கின்றோம். ( 69 – 1)

தாவ தே3வ க்ருத மண்ட3னே கலித
கஞ்சுலீக குச மண்ட3லே
க3ண்டலோல மணி குண்ட3லே யுவதி
மண்ட3லேSத2 பரிமண்ட3லே|
அந்தரா ஸகல ஸுந்தரீ யுக3ள
மிந்திரா ராமண ஸஞ்சரன்
மஞ்ஜுலாம் தத3னு ராசகேலி மயி
கஞ்ஜநாப4 ஸமுபாத3தா4 || ( 69 – 2​)

அப்போதே அலங்காரம் செய்துகொண்டவர்களும்; ரவிக்கைகள் தரித்த ஸ்தன மண்டலங்களை உடையவரும்; கன்னங்களில் அசைகின்ற ரத்தின குண்டலங்களை அணிந்தவரும் ஆன இளம் பெண்களின் கூட்டம் மண்டலமாகச் சுற்றி நின்ற பொழுது; இரண்டு இரண்டு பெண்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டு லக்ஷ்மி காந்தனே மனோஹரமான ராசக்ரீடையைச் செய்தீர்கள் அல்லவா? ( 69 – 2)

வாஸுதே3வ தவ பா4ஸ மானமிஹ
ராஸகேலி ரஸ சௌரப4ம்
தூ3ரதோபி க2லு நாரதா3 க3தி3தம்
ஆகலய்யா குதுகாகுலா |
வேஷ பூ4ஷண விலாஸ பேச’ல
விலாஸினீ ச’த ஸமாவ்ருதா
நாகதோ யுக3பத்3 ஆக3தா வியதி
வேக3தோத2 ஸுர மண்ட3லி || ( 69 – 3 )


ஹே வாசுதேவனே! இவ்வுலகில், யமுனைக் கரையில் பிரகாசிக்கும், தங்களுடைய ராசக்ரீடையின் வைபவத்தை, வெகுதூரத்தில் இருந்த நாரதர் கூறக் கேட்டு, வியப்புற்ற தேவர்கள் கூட்டம், வேஷம், பூஷணம், ஸ்ருங்கார சேஷ்டைகள் இவைகளால் அழகு பெற்ற, அநேகம் ஸ்திரீகள் சூழ, விரைவாக சுவர்க்கத்தில் இருந்து ஆகாயத்துக்கு வந்தது அல்லவா? ( 69 – 3)

ராஸக் கிரீடை


வேணு நாத3 க்ருத தானதா3ன கல
கா3னராக3 க3தி யோஜனா
லோப4னீய ம்ருது3 பாத3 பாத க்ருத
தால மேலான மனோஹரம் |
பாணி ஸங்க்வணித கங்கணாஞ்ச முஹுர்
அம்ஸ லம்பி3த கராம்பு3ஜம்
ச்’ரோணி பி3ம்ப3 சலத3ம்ப3ரம் ப4ஜத
ராஸகேலி ரஸ ட3ம்ப3ரம் || ( 69 – 4 )


வேணு நாதத்தால் செய்யப்பட்ட பாட்டில் இனிய ஸ்வரங்களைக் காண்பித்ததாலும்; இனிமையான பாட்டினாலும்; பல ராகங்களை ஒன்றாக இணைத்ததாலும்; மிகவும் அழகிய மிருதுவான கால்களை எடுத்து வைக்கும் தாளங்களின் சேர்க்கையாலும்; மனோஹரமாகக் கைகளில் ஒலிக்கின்ற வளையல்களாலும்; தோள்களின் மீது வைக்கப்பட்ட தாமரைக் கைகளாலும்; இடையில் அசையும் வஸ்திரங்களாலும் அழகுற்ற ராசக்ரீடையின் கோலாஹலத்தை சேவியுங்கள். ( 69 – 4)

ச்ரத்3த4யா விரசிதானுகா3 ந க்ருத
தார தார மது4ரஸ்வரே
நர்த்தSனேத2 லாலிதாங்க3 ஹார
லுலிதாங்க3 ஹார மணி பூ4ஷணே |
ஸம்மதே3ன க்ருத புஷ்பவர்ஷ மல
முன் மிஷத்3 தி3விஷதா3ம் குலம்
சின்மயே த்வயி நிலீயமான மிவ
ஸம்முமோஹ ஸ வதூ4குலம் || ( 60 – 5)

பிறகு மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட பின்பாட்டில் மேலும் மேலும் உச்சஸ்தாயியை அடைந்த மதுரமான ஸ்வரங்களாலும்; அழகான அபிநயத்தால் அசையும் முத்து மாலைகளாலும்; இரத்தின மாலைகளாலும்; நர்த்தனம் நடக்கும்போது பேரானந்ததுடன் பூமாரி பெய்து, பார்க்கப் பேராவல் கொண்டு, பெண்களுடன் வந்திருந்த தேவ சமூஹம் சைதன்ய ரூபியாகிய தங்களிடம் லயித்து மோஹம் அடைந்தது. ( 69 – 5)
 
I was trying in vain to present the link to the raasa kreeda sung by Trichoor ramachandran in Raagam Hamir Kalyani. I have never listened to any verse more musical in nature and aptly describing the dance of Krishna and Gopis.
 
த3ச’கம் 69 ( 6 to 11)

ராஸக் கிரீடை3

ஸ்வின ஸன்ன தனு வல்லரீ தத3னு
காSபி நாம பசு’பாங்க3னா
காந்த மம்ஸ மவலம்ப3தே ஸ்ம ப்4ருச’
தாந்தி பா4ர முகுலேக்ஷணா |
காசி தா3சலித குந்தளா நவ படீ
ரஸார நவ சௌரப4ம்
வஞ்சனேனே தவ ஸஞ்சு சும்ப பு4ஜ
மஞ்சிதோரு புலகாங்குரம் || ( 69 – 6)


அதன் பிறகு வியர்த்து விட்ட, சோர்வுற்ற, கொடி போன்ற சரீரம் உடைய ஒரு கோபிகை, மிக அதிகமான களைப்பினால் கண்களை மூடிக் கொண்டு தங்கள் தோள் மீது சாய்ந்துவிட்டாள் அல்லவா? வேறொருத்தி அவிழ்ந்து அசையும் கூந்தலுடன், புதிய சந்தனக் குழம்பின் நறுமணம் கொண்ட தங்கள் கையை, முகருவது போல மயிர் கூச்செறியும் வண்ணம் நன்கு முத்தம் இட்டாள் அல்லவா? (69 -6)

காபி க3ண்ட3பு4வி ஸன்னிதா4ய நிஜ
க3ண்ட3 மாகுலித குண்ட3லம்
புண்ய பூர நிதி4 ரன்வவாய தவ
பூக3 சர்வித ரஸாம்ருதம் |
இந்தி3ரா விஹ்ருதி மந்தி3ரம் பு4வன
ஸுந்த3ரம் ஹி நடனாந்தரே
த்வாமவாப்ய த3து4ரங்க3னா கிமு ந
ஸம்மதோ3ன்மத3 த3சா’ந்தரம் || ( 69 – 7)


புண்ணியப் பெருக்குக்கு இருப்பிடமான ஒருத்தி தங்கள் கன்னங்களில் அசைகின்ற குண்டலங்களை உடைய தன்னுடைய கன்னத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தாங்கள் மென்ற தாம்பூல ரசம் என்னும் அமிர்தத்தை அருந்தினாள் அல்லவா? ராசக்ரீடையில் லக்ஷ்மி தேவியின் விலாசத்துக்கு இருப்பிடமும் லோக சுந்தரனும் ஆன தங்களை அடைந்து சந்தோஷத்தால் என்னென்ன அவஸ்தைகளை அனுபவிக்கவில்லை அந்தப் பெண்கள் ? ( 69 – 7)

கா3னமீச’ விரதம் க்ரமேண கில
வாத்3ய மேலன முபாரதம்
ப்3ரஹ்ம ஸம்மத3 ரஸாகுலாஸ் ஸத3ஸி
கேவலம் நந்ருது ரங்க3னா ;|
நாவித3ன்னபி ச நீவிகாம் கிமபி
குந்தலீ மபி ச கஞ்சுலீம்
ஜ்யோதிஷா
விலம்பிதம் கிமபரம் ப்3ருவே || ( 69 – 8 )

ஹே கிருஷ்ணா! பாட்டு முடிவடைந்து, கிராமமாக வாத்தியங்களின் இசையும் ஓய்ந்தது அல்லவா? ஸ்திரீகள் மட்டும் பிரம்மானந்த ரசத்தில் மூழ்கி நர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். அது மட்டும் அல்ல! அவர்கள் தங்கள் வஸ்திரங்களைப் பற்றியோ, கூந்தலைப் பற்றியோ, ரவிக்கையைப் பற்றியோ ஒன்றுமே அறியவில்லை அல்லவா? ஆகாயத்தில் நக்ஷத்திரக் கூட்டம் கூட அசைவன்றி நின்றுவிட்டது! நான் வேறு என்ன சொல்வேன்? ( 69 – 8)

மோத3 ஸீம்னி பு4வனம் விலாப்ய விஹ்ரு
தீம் ஸமாப்ய ச ததோ விபோ4
கேலி ஸம்ம்ருதி3த நிர்மலாங்க3 நவ
க4ர்மலேச’ ஸுப4கா3த்மானாம் |
மன்மதா2 ஸஹன சேதஸாம் பசு’ப
யோஷிதாம் ஸுக்ருத சோதி3த
ஸ்தாவ தா3கலித மூர்த்தி ராத3தி4த2
மாரவீர பரமோத்ஸவான் || ( 69 – 9 )


பிரபுவே! எல்லா பிரபஞ்சத்தையும் பரமானந்தத்தின் எல்லையில் லயிக்கச் செய்து; ராசக்ரீடையையும் முடித்துக் கொண்டு; அதன் பிறகு ராசக்ரீடையினால் நிர்மலமான அவயவங்களில் தோன்றிய புது வியர்வைத் துளிகளால் அழகான மேனியை உடையவரும்; காமத்தைப் பொறுக்க முடியாத மனதை உடையவர்களும் ஆகிய அந்த கோபிகைகளின் புண்ணியத்தால் ஏவப்பட்டு; அத்தனை சரீரங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டு; அவர்களுடன் சரசங்கள் செய்தீர்கள் அல்லவா? ( 69 – 9 )

கேலிபே3த3 பரி லோலிதாபி4 அதி
லாலிதாபி4 அப3லாலிபி4:
ஸ்வைர மீச' நனு ஸூரஜாபயஸி
சாரு நாம விஹ்ருதீபாங்கனாசு
பஹுமானயன் ம் வ்யதா4:|
கானனேSபி ச விஸாரி சீ'தல
கிசோ'ர மாருத மனோஹரே
ஸூன சௌ'ரப4 மயே விலேஸித2
விலாஸிநீ ச'த விமோஹனம்|| ( 69 - 10)

ஹே பிரபு! ஆலிங்கனம் போன்ற கிரீடா விசேஷங்களால் மிகவும் சோர்வடைந்த; அதனால் சீராட்டப்பட்ட; பெண்களின் கூட்டத்துடன் யமுனா நதியில் இஷ்டம் போல அழகான ஜலக்ரீடை செய்தீர்கள் அல்லவா? வீசுகின்ற குளிர்ந்த இளங்காற்றினால், அழகிய புஷ்பங்களின் நறுமணம் நிறைந்த வனத்தில், அந்தக் கட்டழகிகளுக்கு மயக்கம் உண்டாகும் வண்ணம் விளங்கினீர்கள் அல்லவா? ( 69 – 10)

காமிநீரிதி ஹி யாமினீஷு க2லு
காமநீயக நிதே4 பவான்
பூர்ண ஸம்மத ரஸார்ணவம் கமபி
யோகி3 க3ம்ய மனுபா4வயன் |
ப்3ரஹ்ம ச’ங்கர முகானபீஹ பசு’
பாங்க3னாஸு ப3ஹுமனயன்
ப4க்த லோக கமனீய ரூப
கமனீய க்ருஷ்ண பரிபாஹிமாம் || ( 69 – 11)

சௌந்தரியத்தின் கடலே! தாங்கள் இவ்விதம் இரவுகளில் அந்தப் பெண்களை; யோகிகளால் மட்டுமே அடையக் கூடியதும், இன்னதென்று சொல்ல முடியாததும் ஆன பிரும்மானந்த சாகரத்தை அனுபவிக்கச் செய்து; பிரமன், சங்கரன் முதலியவர்களைக் கூட கோபிகைகளை மதிக்கச் செய்தீர்கள் அல்லவா? பக்த ஜனங்களால் மட்டுமே அறியப் படக் கூடிய உருவத்தை உடையவரும்; எல்லோராலும் விரும்பப்படுபவரும் ஆன ஸ்ரீ கிருஷ்ணா! என்னைக் நன்கு காப்பாற்ற வேண்டும். ( 69 – 11)




மபி கத3ம்ப3கம் தி3வி
 
த3ச’கம் 70 ( 1 to 5)

சுத3ர்சனன் சா’ப மோக்ஷம்; ச’ங்க2சூட3ன் அரிஷ்டன் வத4ம்

இதி த்வயி ரசாகுலம் ராமித வல்லபே4 வல்லவா:
கதா3Sபி புர மம்பி3காகமிது ரம்பி3கா கானனே |
ஸமேத்ய ப4வதா ஸமம் நிஷி நிஷேவ்ய தி3வ்யோத்ஸவம்
ஸுகம் ஸுஷுபுரக்3ரஸீத் வ்ரஜப மக்3ர நாக3ஸ்ததா3 ||( 70 – 1​)


இவ்விதம் தாங்கள் ஆனந்த பரவசத்தில் இருக்கும்படிப் பெண்களை இன்பமுறச் செய்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் கோபர்கள் அம்பிகா வனத்தில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்குத் தங்களுடன் சென்று இரவில் சிறந்த உற்சவத்தை சேவித்து விட்டு சுகமாக உறங்கினார்கள். அப்போது ஒரு கொடிய பாம்பு நந்தகோபரை விழுங்க வந்தது அல்லவா? ( 70 – 1)

ஸமுன்முக2 மதோ2ல்முக: அபி4ஹிதேSபி தஸ்மின் ப3லாத்
அமுஞ்சதி ப4வத் பதே3 ந்யபதி பாஹி பாஹீதி தை:|
ததா3 க2லு பதா3 ப4வான் ஸமுபக3ம்ய பஸ்பர்ச’ தம்
ப3பௌ4 ஸ ச நிஜாம் தனும் ஸமுபஸாத்ய வைத்3யாத4ரீம் || ( 70 – 2 )

கொள்ளிக் கட்டைகளால் பலமாக அடித்தபோதும் அது அவரை விடவில்லை. அந்தகோபர்கள் “காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று தங்கள் திருவடிகளில் வந்து விழுந்தனர். நீங்கள் விழுங்கிக் கொண்டிருந்த பாம்பைக் காலால் தொட்டீர்கள். அந்தப் பாம்பு உடனே தன் சுய வடிவை அடைந்து ஒரு வித்தியாதரனாக மாறியது அல்லவா? ( 70 – 2)

ஸுத3ர்ச’ன த4ர ப்ரபோ4 நனு ஸுத3ர்ச’னாக்2யோSஸ்ம்யஹம்
முனீன் க்வசி த3பாஹஸம் தா இஹ மாம் வ்யது4ர்வாஹஸம்|
ப4வத் பத3 ஸமர்ப்பணாத மலதாம் க3தோSஸ் மித்யசௌ
ஸ்துவன் நிஜபதம் யயௌ வ்ரஜபத3ம் ச கோ3பா முதா3 || ( 70 – 3 )


“ஸுதர்சனச் சக்கரத்தைத் தரிக்கின்ற பிரபு! நான் ஸுதர்சனன் என்ற பெயர் உடையவன். நான் ஒருநாள் முனிவர்களைப் பரிஹசித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக மாற்றி விட்டார்கள். தாங்கள் திருவடியால் தொட்டவுடன் என் பாவங்கள் தொலைந்து விட்டன!” என்று தங்களை வணங்கித் தன்னிடத்தைச சென்று அடைந்தான். கோபர்களும் சந்தோஷத்துடன் கோகுலத்துக்குத திரும்பிச் சென்றனர். ( 70 – 3)

கதா3Sபி க2லு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜனைர்
ஜஹார க4னதா3னுக3ஸ்ஸ கில ச’ங்க2சூடோ3Sபலா:|
அதித்3ருத மனுத்3ருத ஸ்தவமத2 முக்த நாரீ ஜனம்
ருரோஜித2 சி’ரோமணிம் ஹல ப்4ருதே ச தஸ்யாத3தா3:|| ( 70 – 4 )

ஒருநாள் தாங்கள் பலராமனுடன் சேர்ந்து கொண்டு பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது குபேரனுடைய யக்ஷன் சங்கசூடன் என்பவன் அந்த ஸ்திரீகளை அபஹரித்துச் சென்று விட்டான் அல்லவா? அப்போது தாங்கள் விரைவாக அவனைப் பின்தொடர்ந்து பெண்களை விடுவித்த அவனைக் கொன்றீர்கள். அவன் தலையில் இருந்த ரத்தினத்தை பலராமனுக்குக் கொடுத்தீர்கள். ( 70 – 4)

தி3னேஷு ச ஸுஹ்ருஜ்ஜனைஸ்ஸஹ வனேஷு லீலாபரம்
மனோப4வ மனோஹரம் ரஸிவ வேணு நாதா3ம்ருதம்|
ப4வந்த மப4ரீ த்3ருசா ‘ மம்ருத பாரணா தா3யினம்
விசிந்தய கிமு நாலபன் விரஹதாபிதா கோ3பிகா:|| ( 70 – 5 )


பகல் நேரங்களில் சிநேகிதர்களுடன் வனங்களில் விளையாடுவதில் ஈடுப்பட்டவரும்; மன்மதன் போல மனத்தைக் கவருபவரும்; வேணு நாதமாகிய அமிர்தத்தை ஆஸ்வதிக்கின்றவரும், தேவ ஸ்திரீகளின் கண்களுக்கு அமிர்த பக்ஷணத்தைக் கொடுக்கின்றவரும் ஆகிய தங்களை நினைத்து விரகதாபம் கொண்ட கோபிகைகள் என்னென்ன சொல்லிக் கொள்ளவில்லை? ( 70 – 5)
 
த3ச’கம் 70 ( 6 to 10)

சுத3ர்சனன் சா’ப மோக்ஷம்; ச’ங்க2சூட3ன் அரிஷ்டன் வத4ம்
போ4ஜ ராஜ ப்4ருதகஸ் த்வத2 கச்’சித்
கஷ்ட து3ஷ்டபத2 த்3ருஷ்டி ரரிஷ்ட:|
நிஷ்டுராக்ருதி ரபஷ்டு நிநாத:
திஷ்ட2தே சம பவதே வ்ருஷரூபி || ( 70 – 6)

பிறகு கம்சனின் வேலைக்காரனும், கடுமையான துர்மார்கங்களில் தன் திருஷ்டியைச் செலுத்தியவனும் ஆகிய அரிஷ்டன் என்பவன் பயங்கரவடிவுடன், கடூரமான சப்தத்துடன் காளை வடிவுடன் தங்களுக்கு எதிரில் வந்து நின்றான் அல்லவா? ( 70 – 6 )

சா’க்வரோத்த ஜக3தீ தபியம் தம் ஹாரி
மூர்த்திமேவ ப்3ருஹதீம் ப்ரத3தா4ன:|
பங்க்தி மாசு’ பரிகூர்ண்ய பசூ’னாம்
ச2ந்த3ஸாம் நிதி4மவாப ப4வந்தம் || ( 70 – 7 )


எருதின் வடிவம் எடுத்த அவன் உலகத்தினரின் தைரியத்தை அபஹரிப்பவனாக பெரும் உருவம் எடுத்துக் கொண்டு பசுக் கூட்டத்தை விரைவாக விரட்டிக் கொண்டு வேதங்களுக்கு இருப்பிடம் ஆன தங்களை வந்து அடைந்தான் அல்லவா? ( 70 – 7)

துங்க3 ச்’ருங்க3 முக2 மாச்’வ மபி4யந்தம்
ஸம்க்3ருஹய்ய ரப4ஸா த3பி4யம் தம்|
ப4த்ர ரூபமமபி தை3த்ய மப4த்ரம்
மர்த்த4யன்னமத3ய: ஸுரலோகம் || ( 70 – 8 )

உயர்ந்த கொம்புகளின் நுனிகளை உடையவனாக, விரைவாக எதிர்த்து வருகின்றவனும், பயமற்றவனும், பத்திரமான உருவமுடையவனும் ஆன மிகவும் துஷ்டனான அவ்வசுரனை விரைவாகப் பிடித்துப் பிசைந்து கொன்று தேவர்களை சந்தோஷப்படுத்தினீர் அல்லவா? ( 70 – 8)

சித்ரமத2 ப4கவன் வ்ருஷ கா4தாத்
ஸுஸ்தி2ராSஜனி வ்ருஷஸ்தி2தி ரூர்வ்யாம் |
வர்த்த4தே ச வ்ருஷ சேதஸி பூ4யான்
மோத3 இத்யபி4னுதோSஸி ஸுரைஸ்த்வம் || ( 70 – 9 )

ஹே பகவானே! இந்த விருஷபாசுரனைக் (விருஷத்தைக்) கொன்றதால், பூமியில் தர்மத்தின் (விருஷத்தின்) நிலை மிகவும் நிலை பெற்றாதாக ஆனது. இந்திரனின் (விருஷத்தின்) மனத்தில் அதிகமான சந்தோஷம் வளர்ந்தது! இது ஆச்சரியம்!” என்று தாங்கள் தேவர்களால் துதிக்கப்பட்டீர்கள் அல்லவா? ( 70 – 9)

ஔக்ஷகாணி பரிதா4வாத தூ3ரம்
வீக்ஷ்யதா மய மிஹோக்ஷவிபே4தீ3|
இத்த மாத்த ஹஸிதைஸ் ஸஹ கோ3பை:
கே3ஹக3ஸ்த்வமவ வாதபுரேச’ || ( 70 – 10 )


“காளைக் கூட்டங்களே! வெகுதூரம் ஓடுங்கள். காளையைக் கொன்றவனை எல்லோரும் பார்க்கட்டும்!” என்று வேடிக்கையாகப் பரிஹசிக்கின்ற கோபாலர்களுடன் வீட்டுக்குத் திரும்பிய ஹே குருவயூரப்பா! தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 70 – 10)
 
த3ச’கம் 71 ( 1 to 5)

கேசி’, வ்யோமாஸுர வத4ம்

யஹ்த்னேஷு ஸர்வேஷ்வபி நாவகேசீ’
கேசீ’ ஸ போ4ஜேசி’து ரிஷ்ட ப3ந்து4:|
த்வம் ஸிந்து3ஜாSவாப்ய இதீவ மத்வா
ஸம்ப்ராப்த்வான் ஸிந்து3ஜ வாஜிரூப:|| ( 71 – 1 )


எல்லா பிரயத்னங்களிலும் வீணாகாதவனும், கம்சனுக்கு நெருங்கிய உறவினனுமாகிய அந்தக் கேசி என்பவன் தாங்கள் சிந்துஜையால் (லக்ஷ்மியால் ) அடையப்படக் கூடியவர் என்று எண்ணி, சிந்துஜன் (சிந்து தேசத்தில் பிறந்த குதிரை ) வடிவம் எடுத்து வந்தான் அல்லவா? ( 71 – 1)

க3ந்த4ர்வ தாமேஷ க3தோபி ரூக்ஷை:
நாதை3:ஸுத்3வேஜித ஸர்வ லோக:|
ப4வத்3 விலோகாவதி4 கோ3ப வாடீம்
ப்ரமர்த்3ய பாப: புனராப தத்வாம் || ( 71 – 2)


இந்தப் பாவி கந்தர்வனாக (குதிரையாக) இருக்கும் தன்மையை அடைந்தும் கூட, கர்ண கடோரச் சத்தங்களால் எல்லா ஜனங்களையும் துன்புறுத்திக் கொண்டும், கோகுலத்தை அழித்துவிட்டும், தங்களை எதிர்த்தான் அல்லவா? ( 71 – 2)

தார்க்ஷ்யார்பிதாங்க்4ரேஸ் தவ தார்க்ஷ்ய ஏஷ:
சிக்ஷேப வக்ஷோ பு4வி நாம பாத3ம் |
ப்4ருகோ: பதா3கா4த கதா2ம் நிச’ம்ய
ஸ்வேனாபி ச’க்யம் ததி3தீவ மோஹாத்|| ( 71 – 3 )


இந்த தார்க்ஷியன் (குதிரை) பிருகு மகரிஷி தங்களைக் காலால் மிதித்து கேட்டு, அதைத் தன்னாலும் செய்ய முடியும் என்று மதியீனத்தால், கருடன் மேல் வைக்கப்பட்ட திருவடிகளை உடைய தங்கள் மார்பில் காலால் உதைத்தான் அல்லவா? ( 71 – 3)

ப்ரவஞ்சயன்னஸ்ய குராஞ்சலம் த்ராக்
அமும் ச விக்ஷேபித2 தூ3ர தூ3ரம்|
ஸம் மூர்ச்சி2தோSபி த்3யுதி மூர்ச்சிதேன
க்ரோதோ3ஷ்மணா கா2தி3து மாத்3ருதஸ்த்வாம்|| ( 71 – 4 )


அவனுடைய கால் உதையிலிருந்து தப்பித்துக் கொண்டு, விரைவாக அவனையும் வெகு தூரத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதனால் அவன் மயக்கம் அடைந்தும் கூட மேலும் அதிகரிக்கும் கோபக் கனலுடன் தங்களைத் தின்பதற்கு விரைந்து வந்தான் அல்லவா?
( 71 – 4)

த்வம் பா3ஹத3ண்டே3 க்ருத தீ4ச்’ச பா3ஹ
த3ண்ட3ம் ந்யதா4ஸ் தஸ்ய முகே2 ததா3னீம்|
தத்3 வ்ருத்3தி4 ருத்3த4 ச்’வஸனோ க3தாஸு:
ஸுப்தோ ப4வான்னப்யய மைக்ய மாகா3த் || ( 71 – 5 )


தாங்கள் வாஹத்தை (குதிரையை) தண்டிப்பதில் மன உறுதி கொண்டு இருந்ததால், அவன் வாயில் தண்டம் போன்ற தங்கள் கரத்தைச் செலுத்தினீர்கள் அல்லவா? அப்போது அந்தக் கைப் பெருகி வளர்ந்ததால் மூச்சுத் திணறி அவன் குதிரையாக இருந்தும் கைவல்யத்தை (ஒன்றாகும் தன்மையை) அடைந்தான் அல்லவா? ( 71 – 5)
 
த3ச’கம் 71 ( 6 to 10)

கேசி’, வ்யோமாஸுர வத4ம்
ஆலம்ப4 மாத்ரேண பசோ’:ஸுரணாம்
ப்ரஸாத3கே நூதன இவாச்’வமேதே4 |
க்ருதே த்வயா ஹர்ஷவசா’த் ஸுரேந்த்3ரா:
த்வாம் துஷ்டுவு: கேச’வ நாமதே4யம் || ( 71 – 6)


யாகப் பசுவைக் கொன்று தேவர்களுக்குத் திருப்தி செய்கின்ற இந்தப் புதிய அஸ்வமேத யாகத்தைத் தாங்கள் செய்யும்போது தேவர்கள் மகிழ்ந்து தங்களுக்கு கேசவன் என்ற பெயர் சூட்டித் துதித்தார்கள் அல்லவா? ( 71 – 6)

கம்ஸாய தே சௌ’ரி ஸுதத்வ முக்த்வா
தம் தத்3வதோ4க்தம் ப்ரதி ருத்4ய வாசா|
ப்ராப்தேன கேசி’ க்ஷபணா வஸானே
ஸ்ரீ நாரதே3ன த்வமபி4ஷ்டுதோSபூ4: || ( 71 – 7 )


கம்சனுக்குத் தாங்கள் வசுதேவரின் குமாரன் என்பதை எடுத்து உரைத்து, அந்த வசுதேவரைக் கொல்ல விரும்பிய கம்சனை நல்ல வார்த்தைகளால் தடுத்து, கேசி வதத்தின் முடிவில் வந்து சேர்ந்த நாரதர் தங்களைத் துதித்தார் அல்லவா? (71 – 7)

கதா3Sபி கோ3பைஸ்ஸஹ கானனாந்தே
நிலாயன க்ரீட3ன லோலுபம் த்வாம்|
மயாத்மஜ: ப்ராபது3ரந்த மாயோ
வ்யோமாபி4தோ வ்யோம சரோபரோதீ4 || (71 – 8 )

ஒருநாள் தேவர்களைத் துன்புறுத்துகின்றவனும், அளவில்லாத மாயைகளில் வல்லவனும், மயாசுரன் பிள்ளையுமான வ்யோமன் என்னும் அசுரன், காட்டில் கோபர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த தங்களிடம் வந்தான் அல்லவா?
( 71 – 8 )

ஸ சோர பாலாயித வ்ல்லவேஷு
சோராயிதோ கோ3ப சி’சூ’ன் பசூ’ம்ச்’ச|
க்ருஹாஸு க்ருத்வா பித3தே4 சீலாபி4:
த்வயா ச பு3த்3த4வா பரிமர்தி3தோSபூ4த்|| (71 – 9 )


அவன் திருடர்கள் ஆகவும், காப்பாற்றுபவர்கள் ஆகவும் விளையாடுகின்ற கோபர்கள் இடையில் திருடனாக விளையாடி, கோபர்களையும் பசுக்களையும் குஹைகளில் கொண்டு விட்டுக் கல்லால் மூடிவிட்டான். அதை அறிந்த தாங்கள் அவனைக் கொன்றீர்கள் அல்லவா? ( 71 – 9)

ஏவம் விதை4ச்’ சாத்3பு4த கேலி பே4தை3:
ஆனந்த3 மூர்ச்சா2 மதுலாம் வ்ரஜஸ்ய|
பதே3 பதே3 நூதன யன்ன ஸீமாம்
பராத்மரூபின் பவனேச’ பாயா:|| ( 71 – 10 )


பரமாத்மா ஸ்வரூபியான குருவாயூரப்பா! இப்படிப் பட்ட பல ஆச்சரியமான விளையாட்டுக்களால் ஒப்பற்ற ஆனந்தத்தை கோகுலத்தில் புதிது புதிதாகச் செய்து கொண்டிருக்கும் தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 71 – 10)
 
த3ச’கம் 72 ( 1 to 6)

அக்ரூர ஆக3மனம்

கம்ஸோSத2 நாரத3 கி3ரா வ்ரஜ வாஸினம் த்வாம்
ஆகர்ண்ய தீ3ர்ண ஹ்ருத3யஸ்ய ஹி கா3ந்தி3நேயம் |
ஆஹூய கார்முக மக2ச்சலதோ ப4வந்தம்
ஆனேது மேனமஹினோ த4ஹி நாத2 சா’யின் || ( 72 – 1 )


பாம்பணையின் மேல் துயிலும் ஈசா! நாரதரின் வாக்கினால் தங்கள் கோகுலத்தில் வசிப்பதை அறிந்து மனம் உடைந்த கம்சன், வில் யாகம் என்ற காரணத்தைக் காட்டித் தங்களை மதுரைக்கு அழைத்துவர காந்தினியின் பிள்ளையாகிய அக்ரூரனனை அனுப்பினான் அல்லவா? ( 72 – 1)

அக்ரூர ஏஷ ப4வத3ங்க்4ரி பரச்’சிராய
த்வத்3த3ர்ச’னாக்ஷம மனா : க்ஷிதிபால பீ4த்யா |
தஸ்யாக்ஞயைவ புனரீக்ஷிது முத்3ய தஸ்த்வாம்
ஆனந்த3பா4ர மதிபூ4ரிதரம் ப3பா4ர || ( 72 – 2 )


வெகு காலமாகவே தங்கள் திருவடிகளை மனதில் துதிக்கின்றவரும், கம்சனிடம் இருந்த பயத்தால் தங்களை தரிசிக்கும் சக்தியற்றவரும் ஆன அக்ரூரர், இப்போது அதே கம்சனின் கட்டளையால் தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது என மிக அதிகமான ஆனந்தத்தை அடைந்தார் அல்லவா?( 72 – 2)

ஸோSயம் ரதே3ன ஸுக்ருதோ ப4வதோ நிவாஸம்
க3ச்சன் மனோரத2 கணாம்ஸ்தவயி தா4ர்யாமாணான் |
ஆஸ்வாத3யன் முஹுரபாய ப4யேன தை3வம்
ஸம்ப்ரார்த2யன் பதி2 ந கிஞ்சித3பி வ்யஜானாத் || ( 72 – 3 )


தங்கள் இருப்பிடத்துக்கு தேரில் ஏறிச் செல்கின்ற புண்ணியவான் ஆகிய அக்ரூரன், தங்கள் மேல் வைத்திருந்த மனோரதக் கூட்டங்களை ஆலோசித்துக் கொண்டும், அவற்றை அனுபவித்துக் கொண்டும், அவைகளுக்கு இடையூறு வந்து விடுமோ என்று அஞ்சி இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்தும் வந்ததால் வழியில் ஒன்றுமே அறியவில்லை. ( 73 – 3)

த்3ரக்ஷ்யாமி வேத3 ச’த கீ3த க3திம் புமாம்ஸம்
ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித3பி நாம பரிஷ்வஜேயம்|
கிம் வக்ஷ்யதே ஸ க2லு மாம் க்வனு வீக்ஷித : ஸ்யாத்3
இத்த2ம் நினாய ஸ ப4வன் மயமேவ மார்க3ம் || ( 72 – 4 )


“அனேக உபநிஷத்துக்களால் உபதேசம் செய்யப்பட ஸ்வரூபம் உடைய பரம புருஷனைக் காண்பேனோ? அவரை நான் தொடுவேனோ? அவற்றின் ஆலிங்கனம் செய்து கொள்வேனோ? அவர் என்னிடத்தில் பேசுவாரா? என்னை அவர் எப்படிப் பார்ப்பார்?” என்ற பலவித ஆலோசனைகளால் வழி நீளத் தங்களையே எண்ணிக் கொண்டு சென்றார் அல்லவா? ( 72 – 4)

பூ4ய: க்ரமாத3பிவிசன் ப4வத3ங்க்4ரி பூதம்
ப்3ருந்தா3வனம் ஹர விரிஞ்ச ஸுராபி4 வந்த்3யம் |
ஆனந்த3 மக்3ன இவ லக்3ன இவ ப்ரமோஹே
கிம் கிம் தசா’ந்தர மவாப ந பங்கஜாக்ஷ || ( 72 – 5 )


செந்தாமரைக் கண்ணனே! கிரமாகத் தங்கள் திருவடிகள் பட்டதால் மிகவும் சுத்தம் அடைந்ததும், பரமசிவன், பிரம்மதேவன் முதலியவர்களால் வணங்கத் தகுந்ததும், ஆன பிருந்தா வனத்தில் செல்லுகின்ற அவர் ஆனந்தத்தில் மூழ்கியவர் போலும், மதி மயக்கத்தை அடைந்தவர் போலும், என்ன என்ன அவஸ்தைகளைத தான் அனுபவிக்க வில்லை? ( 72 – 5)

அக்ரூர ஆக3மனம்


பச்’யன்னவன்த3த ப4வத்3 விஹ்ருதி ஸ்த2லானி
பாம்ஸுஷ்வ வேஷ்டத ப4வச் சரணாங்கிதேஷு |
கிம் ப்3ரூமஹே ப3ஹுஜன ஹி ததா3Sபி ஜாதா:
ஏவம் து ப4க்தி தரலா விரலா: பராத்மன் || ( 72 – 6 )


தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டு வணங்கினார்! தங்கள் திருவடிகளின் அடையாளம் பட்ட புழுதியில் புரண்டார்! நான் வேறு என்ன சொல்லுவேன்? பரமாத்மா ஸ்வரூபியே! அந்தக் காலத்திலும் அநேகர் பிறந்திருந்தார்கள். ஆனால் இது போல பக்தி பரவசம் அடைந்தவர்கள் மிகக் குறைவே! ( 72 – 6)
 
த3ச’கம் 72 ( 7 to 12)

அக்ரூர ஆக3மனம்

ஸாயம் ஸ கோ3ப ப4வனானி ப4வச்சரித்திர
கீ3தாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயனானி |
பச்’யன் ப்ரமோத3 ஸரிதேவ கிலோஹ்ய மானோ
க3ச்ச2ன் ப4வத்3 ப4வன ஸந்நிதி4 மன்வயாஸீத் || ( 72 – 7 )


அக்ரூரர் அந்த சாயங்கால வேளையில், தங்கள் சரிதங்களைக் கானம் பண்ணும், காதுகளுக்கு அமிர்தப் பிரவாகம் ஆகின்ற ரசாயனங்களை உடைய, இடையர்களின் வீடுகளைப் பார்த்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கால் இழுத்துச் செல்லப்பட்டுத் தங்கள் வீட்டின் அருகே வந்து சேர்ந்தார் அல்லவா? ( 72 – 7)

தாவத்3 த3த3ர்ச’ பசு’தோ3ஹ விலோகலோலம்
ப4க்தோத்மாக3திமிவ ப்ரதி பாலயந்தம்|
பூ4மான் ப4வந்த மய மக்3ரஜ வந்த மந்த :
ப்3ரஹ்மானுபூ4தி ரஸ ஸிந்து3 மிவோத்3வமந்தம் || ( 72 – 8 )

எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா? ( 72 – 8)

ஸாயந்தநாப்லவ விசே’ஷ விவிக்த கா3த்ரௌ
த்3வௌ பீத நீல ருசிராம்ப3ர லோப4 நீயௌ |
நாதி ப்ரபஞ்ச த்4ருத பூ4ஷண சாருவேஷௌ
மந்த3ஸ்மிதார்த்3ர வத3நௌ ஸ யுவாம் த3த3ர்ச || ( 72 – 9)


அந்த அக்ரூரர், சாயங்காலம் குளித்ததால் விசேஷமான தூய்மை பெற்ற திருமேனியை
உடையவர்களும்; மநோஹரமான மஞ்சள், நீல நிறப் பட்டாடைகள் அணிந்து அழகானவர்களும்; அதிகம் இல்லாமல் சில ஆபரணங்களையே அணிந்து அழகு பெற்றவர்களும்; மந்த ஹாசத்தால் கனிந்த முகம் உடையவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் கண்டார் அல்லவா? ( 72 – 9)

தூ3ராத்3ரதா2த் ஸமவருஹ்ய நமந்த மேனம்
உத்தா2ப்ய ப4க்த குல மௌலி மதோ2பகூ3ஹன் |
ஹர்ஷான்மிதா க்ஷர கி3ராகுச’லானுயோகீ3
பாணீம் ப்ரக்3ருஹ்ய ஸப3லோSத க்3ருஹம் நிநேய || ( 72 – 10)


உடனே வெகு தூரத்தில் இருந்து வந்து தேரில் இருந்து இறங்குகின்றவரும்; பக்தர்களில் சிறந்தவரும்; ஆன அந்த அக்ரூரரை எழுப்பிப் பிறகு கட்டித் தழுவிக் கொண்டு; சந்தோஷத்தால் சில வார்த்தைகள் கூறி க்ஷேமம் விசாரித்துக் கையைப் பிடித்துக் கொண்டு; பலராமனுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?(72-10)

நந்தே3ன ஸாக மமிதாத3ர மர்ச்சயித்வா
தம் யாத3வம் தது3தி3தாம் நிச’மய்ய வார்த்தாம் |
கோ3பேஷு பூ4பதி நிதே3ச’ கதா2ம் நிவேத்3ய
நானாகதா3பி4 ரிஹ தேன நிசா’மனைஷீ : || ( 72 – 11 )


நந்தகோபருடன் யதுவம்சத்தில் பிறந்த அந்த அக்ரூரரை மிகவும் கௌரவத்துடன் வெகுமானித்து; அவர் சொன்ன விருத்தாந்தங்களையும்கேட்டு; அரசனின் கட்டளையையும் கோபர்களிடம் தெரிவித்து; அன்று அக்ரூரருடன் நந்தகோபர் வீட்டில் பல விஷயங்களைப் பேசி இரவைக் கழித்தீர்கள் அல்லவா? ( 72-11)

சந்த்3ரா க்3ருஹே கிமது சந்த்3ரபகா4 க்3ருஹே நு
ராதா4 க்3ருஹே நு ப4வனே கிமு மைத்ரவிந்தே3|
தூ3ர்த்தோ விலம்ப3த இதி ப்ரமதா3பி4ருச்சை:
ஆச’ங்கிதோ நிசி’ மருத்புர நாத2 பாயா: || ( 72 – 12 )

உம்மைச் சந்திக்க முடியாத கோபிகள் அன்று இரவு “வஞ்சகனான கண்ணன் சந்திராவின் வீட்டிலோ, சந்திர பாகாவின் வீட்டிலோ அல்லது ராதாவின் வீட்டிலோ தங்கிவிட்டான் ” என்று உம்மைக் குறித்துச் சந்தேஹம் அடைந்தனர் அல்லவா? ( 72 – 12)
 
த3ச’கம் 73 ( 1 to 5 )

மது4ராபுரீ யாத்ரா
நிச’மய்ய தவாத2 யான வார்த்தாம்
ப்4ருச’ மார்தா: பசு’பால பா3லிகாஸ்தா:|
கிமித3ம் கிமித3ம் கத2ன்விதீமா :
ஸமவேதா: பரிதே3விதான்யகுர்வன்|| ( 73 – 1)


உம்முடைய பிரயாணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கோபிகைகள் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஒன்று கூடி “இது என்ன? இது என்ன? இது எப்படி வந்தது என்று பிரலாபித்தனர். ( 73 – 1 )

கருணா நிதி4ரேஷ நந்த3 ஸூனு:
கத2மஸ்மான் விஸ்ருஜே த3னன்ய நாதா2:|
ப3த ந: கிமு தை3வ மேவ மாஸீத்
இதி தாஸ்த்வத்3 க3த மானஸா விலேபு:|| ( 73 – 2 )


“கருணாநிதியான இந்தக் கிருஷ்ணன் வேறு நாதன் இல்லாத நம்மை எப்படிக் கைவிடுவான்? கஷ்டமே! நம்முடைய தலைவிதி இப்படி ஆயிற்றே!” என்று தங்களிடம் செலுத்திய மனத்துடன் பெண்கள் பலவாறு வருந்தினார்கள் அல்லவா ( 73 – 2)

சரம ப்ரஹரே ப்ரதிஷ்ட2 மான:
ஸஹ பித்ரா நிஜ மித்ரமண்ட3லைச்’ச |
ப்ரதி தாப ப4ரம் நிதம்பி3னீனாம்
ச’மயிஷ்யன் வ்யமுசஸ்ஸகா2யமேகம் || ( 73 – 3 )


இரவின் கடைசி யாமத்தில் தந்தையுடனும், தோழர்களுடனும் புறப்படுகின்ற நீங்கள்;
கோபிகைகளின் வருத்தத்தைத் தணிக்க, ஒரு தோழனைத் தூது அனுப்பினீர்கள் அல்லவா? ( 73 – 3)

அசிரா து3பயாமி ஸந்நிதி4ம் வோ
ப4விதா ஸாது4 மயைவ ஸங்க3மச்’ரீ:|
அம்ருதாம்பு3னிதௌ4 நிமஜ்ஜயிஷ்யே
த்3ருத மித்யாச்’வஸிதா வதூ4ரகார்ஷீ:|| ( 73 – 4 )


“தாமதிக்காமல் உங்கள் பக்கம் வருவேன். விரும்பிய வண்ணம் என்னுடன் சம்போக சுகம் உங்களுக்குக் கிடைக்கும்! ஆனந்தக் கடலில் தாமதியாமல் உங்களை மூழ்கச் செய்கின்றேன்!” என்று சொல்லி கோபிகைகளை சமாதானம் செய்தீர்கள் அல்லவா?
( 73 – 4)

ஸவிஷாத3 ப4ரம் ஸயாஞ்ச முச்சை :
அதிதூ3ரம் வனிதாபி4ரக்ஷ்யமாண:|
ம்ருது3 தத்3 தி3சி’ பாதயன் நபாங்கா3ன்
ஸபா3லோSக்ரூர ரதே2S ன நிர்க3தோபூ4:|| ( 73 – 5 )


மிக வருத்ததுடனும், “தாங்கள் திரும்பி வரவேண்டும்!” என்ற பிரார்த்தனையுடனும், தலையை உயர்த்தி வெகு தூரம் வரைத் தங்களைக் கண்டனர் கோபிகைகள். தாங்கள் மெதுவாக அவர்கள் திக்கில் கடைக் கண்களைச் செலுத்தி, பலராமனுடன் கூட அக்ரூரரின் தேரில் ஏறிச் சென்றீர்கள் அல்லவா? ( 73 – 5)
 
த3ச’கம் 73 ( 6 to 10)

மது4ராபுரீ யாத்ரா
அனஸா ப3ஹுலேன வல்லவானாம்
மனஸா சானுக3தோSத2 வல்லவனாம்|
வனமார்த்த ம்ருக3ம் விஷண்ண வ்ருக்ஷம்
ஸமதீதோ யமுனாதடீ மயாஸீ:|| ( 73 – 6)


பிறகு கோபர்களுடைய அனேக வண்டிகளும், கோபிகைகளுடைய மனங்களும் தங்களைப்பின் தொடர; வருந்திய மிருகங்களும் வாடிய மரங்களும் நிறைந்த காட்டைக் கடந்து யமுனைக் கரையை அடைந்தீர்கள் அல்லவா? ( 73 – 6)

நியமாய நிமஜ்ஜ்ய வாரிணி த்வாம்
அபி4 வீக்ஷ்யாத2 ரதேSபி கா3ந்திநேய:|
விவசே’Sஜனி கின்வித3ம் விபோ4ஸ்தே
நனுசித்ரம் த்வவலோகனம் ஸமந்தாத்|| ( 73 – 7)

அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்வதற்கு யமுனா ஜலத்தில் மூழ்கியபோது, அந்த ஜலத்திலும் பிறகு அந்தத் தேரிலும் தங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அல்லவா? எங்கும் நிறைந்து இருக்கும் உங்களின் இந்த தரிசனம் அத்தனை ஆச்சரியமானதா என்ன?
( 73 – 7)

புனரேஷ நிமஜ்ஜ்ய புண்யசா’லீ
புருஷம் த்வாம் பரமம் பு4ஜங்க போ4கே3|
அரி கம்பு3 கதா3ம்பு3ஜை: ஸ்புரந்தம்
ஸுர ஸீத்தௌக4 பரீதமாலுலோகே || ( 73 – 8 )

புண்ணியசாலியான அந்த அக்ரூரர் மீண்டும் ஜலத்தில் மூழ்கியபோது தங்களை ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவராகவும்; சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றுடன் பிரகாசிப்பவராகவும்; தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்துகொண்டு துதிப்பவராகவும் கண்டார் அல்லவா? ( 73 – 8)

ஸ ததா3 பரமாத்மா சௌக்ய ஸிந்தௌ4
விநிமக்3ன: ப்ரணூவன் ப்ரகார பே4தை3:|
அவிலோக்ய புனச்’ச ஹர்ஷ ஸிந்தோ4:
அனுவ்ருத்ய புலகாவ்ருதோ யயௌ த்வாம் || ( 73 – 9 )


அப்போது அவர் பிரம்மானந்த சாகரத்தில் மூழ்கியவராகத் தங்களைத் துதித்துக் கொண்டு , மறுபடியும் தங்களைக் காணாமலும், கண்டும், ஆனந்தப் பெருக்கின் தொடர்ச்சியாகப் புளகம் அடைந்தவராகத் தங்களிடம் வந்தார் அல்லவா? ( 73 – 9)

கிமு சீ’தலிமா மஹான் ஜலே யத்
புலகோSஸாவிதி சோதி3தேன தேன |
அதிஹர்ஷா நிருத்தரேண ஸார்த்த4ம்
ரத2வாஸீ பவனேச’ பாஹிமாம் த்வம் || ( 73 – 10 )


“ஜலம் மிகவும் குளிர்ந்து இருந்ததா? மயிர் கூச்சம் காணப் படுகிறதே!” என்று கிருஷ்ணன் கேட்டபோது சந்தோஷ மிகுதியால் பதில் ஏதும் கூறாமல் இருந்த அந்த அக்ரூரருடன் தாங்கள் தேரில் வீற்று இருந்தீர்கள் அல்லவா? குருவயூரப்பா! என்னைக் காப்பாற்று!
( 73 – 10)
 
த3ச’கம் 74 ( 1 to 5)

மதுராபுரீ ப்ரவேச’ம்

ஸம்ப்ராப்தோ மது4ராம் தி3னார்த்த4 விக3மே
தத்ராந்தரஸ்மின் வஸன்
ஆராமே விஹிதச’னஸ் ஸகி2 ஜனைர்
யாத:புரீயீக்ஷிதும் |
ப்ராபோ ராஜபத2ம் சிரச்’ருதி த்4ருத
வ்யாலோக கௌதூஹல
ஸ்திரீ பும்ஸோத்3ய த3கண்ய புண்ய நிகலை:
ஆக்ருஷ்யமாணோ நு கிம் || ( 74 – 1)


மத்தியான வேளையில் மதுரையை அடைந்து, அங்கே ஒரு பூந்தோட்டத்தில் தாமதித்து, ஆகாரம் உண்டு விட்டுப் பட்டினத்தைச் சுற்றிப் பார்க்கத் தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றீர்கள். கேள்விப் பட்டதிலிருந்து தங்களை தரிசிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசையை உடைய, ஸ்திரீ புருஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றும், அளவற்ற புண்ணியங்கள் ஆகிற, சங்கலிகளால் இழுக்கப்பட்டவர் போல, ராஜ வீதியைச சென்று அடைந்தீர்கள் அல்லவா?
( 74 – 1)

த்வத்பாத3 த்3யுதிவத் ராக3 ஸுபகாஸ்
த்வன் மூர்த்தி வத்3யோஷித :
ஸம்ப்ராப்தா விலஸத் பயோத4ர
ரூசோ லோலா ப4வத்3 த்3ருஷ்டிவத் |
ஹாரிண்யஸ் ஸ்வது3ர ஸ்த2லீ வத3யி
தே மந்த3ஸ்மித ப்ரௌடி4வத்
நைர்மல்யோல்லஸிதா: கசௌக4 ருசிவத்3
ப்4ராஜத்கலா பாஸ்ரிதா: || ( 74 – 2)


ஹே கிருஷ்ணா! சிவந்து அழகான தங்கள் திருவடிகள் போல நிறமுடையவர்களும், அழகானவர்களும், நீருண்ட மேகம் போன்ற தங்கள் திருமேனியை நிகர்த்த அசைகின்ற ஸ்தனங்களால் சோபை அடைந்தவகளும், சலிக்கின்ற தங்கள் கண்கள் போன்ற மிக லோலைகளும், முத்துமாலை அணிந்த தங்களைப் போன்று முத்துமாலைகள் அணிந்து அழகுற்றவர்களும், மாசற்றுப் பிரகாசிக்கின்ற தங்கள் மந்த ஹாசதின் மேன்மை போல நைர்மால்யதில் விளங்குகின்றவர்களும், மயில் பீலி அணிந்த தங்கள் திருமுடியின் அழகு போல விளங்கும் தலை நகை அணிந்தவர்களும் ஆன பெண்கள் வந்தனர் அல்லவா? ( 74 – 2)

தாஸா மாகலயன்னபாங்க3 வலனைர்
மோஹம் ப்ரஹர்ஷாத்3பு4த
வ்யாலோலேஷு ஜனேஷு தத்ர ரஜகம்
கஞ்சித் படீம் ப்ரார்த்த2யன் |
கஸ்தே தா3ஸ்யதி ராஜகீயவஸனம்
யாஹீதி தே நோதி3த:
ஸத்3யஸ் தஸ்ய கரேண சீர்ஷ மஹ்ருதா2:
ஸோSப்யாப புண்யாம் க3திம் || ( 74 – 3)


அந்தப் பெண்களுக்குக் கடைக் கண்பார்வையால் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டு, தங்களால் பட்டணத்து ஜனங்கள் சந்தோஷத்தாலும் ஆச்சரியத்தாலும் பரவசர்களாக இருக்கும்போது, அவ்விடத்தில் வண்ணன் ஒருவனிடன் வஸ்திரத்தை யாசிக்க, “அரசனுடைய வஸ்திரத்தை உனக்கு யார் தருவார்கள்? ஓடி விடு!” என்று அவன் கூறவும் அப்போதே அவனுடைய தலையை கையால் வேறுபடுத்தினீ ர்கள். அவன் உடனே மோக்ஷத்தை யடைந்தான் அல்லவா? ( 74 – 3 )

பூ4யோ வாயாக மேக மாயதமதிம்
தோஷேண வேஷோசிதம்
தா3ச்’வாம்ஸம் ஸ்வபத3ம் நினேத2 ஸுக்ருதம்
கோ வேத3 ஜீவாத்மனாம் |
மாலாபி4:ஸ்தப3கை: ஸ்தவைரபி
புனர் மாலாக்ருத மானிதோ
ப4க்திம் தேன வ்ருதாம் தி3தே3சி’த2
பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மீ பதே || ( 74 – 4 )


லக்ஷ்மிபதே! பிறகு தாங்கள் அணிவதற்குத் தகுந்த வஸ்திரத்தை மிக சந்தோஷத்துடன் தரும், விசால புத்தியுடைய ஒரு தையல்காரனைத் தங்கள் ஸ்தானத்தை அடைவித்தீர்கள். ஜீவாத்மாக்களின் புண்ணியத்தை யாரால் அறிய முடியும்? அதன் பிறகு மாலைக்காரன் ஒருவன் மாலைகளைக் கொண்டும் பூச்செண்டுகளைக் கொண்டும், ஸ்தோத்திரங்களைக் கொண்டும் வெகுமானிக்க, அவனுக்கு அவன் விரும்பிய உயர்ந்த பக்தியையும், ஐஸ்வரியத்தையும் அளித்தீர்கள் அல்லவா? ( 74 – 4)

குப்ஜா மப்ஜ விலோசனாம் பதி2
புனர் த்3ருஷ்ட்வாSங்கராகே3 தயா
த3த்தே ஸாது4 கிலாங்க3ராக3ம்
அத3தா3ஸ் தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி3 |
சித்தஸ்தா2 ம்ருஜு தாமத2 ப்ரத2யிதும்
கோ3த்ராSபி தஸ்யா: ஸ்புடம்
க்3ருஹ்ணன் மஞ்ஜு கரேண தாமுதனய
ஸ்தாவாஜ் ஜக3த் ஸுந்த3ரீம் || ( 74 – 5 )


மறுபடி ராஜவீதியில், தாமரைக் கண்ணியாள் ஆன ஒரு கூனியைக் கண்டு, அவள் தந்த சந்தனப் பூச்சால் மகிழ்ந்து, அவள் கொண்ட ஆசையை உசிதமாக திருப்பித் தந்தீர்கள் அல்லவா? அவள் மனத்தில் உள்ள நேர்மையை உடலிலும் கொண்டுவர எண்ணி அவளைக் கையால் மெதுவாகப் பிடித்துக் கொண்டு அவளைத் திரிலோக சுந்தரியாக உயர்த்தினீர்கள் அல்லவா? ( 74 – 5)
 
மதுராபுரீ ப்ரவேச’ம்

தாவன் நிச்’சித வைப4வாஸ் தவ விபோ4
நாத்யந்த பாபா ஜனா
யத் கிஞ்சித்3 த3த3தே ஸ்ம ச’க்த்யனுகுணம்
தாம்பூ3ல மால்யாதி3கம் |
க்3ருஹ்ணான: குஸுமாதி3 கிஞ்சன ததா3
மார்கே3 நிப3த்4தா4ஞ்ஜலிர்
நாதிஷ்ட2ம் ப3த ஹா யதோsத்3ய விபுலா
மார்திம் வ்ரஜாமி ப்ரபோ4 || ( 74 – 6 )


ஹே பிரபு அப்போது மிகவும் பாவிகள் அல்லாத ஜனங்கள் தங்கள் மகிமையை உணர்ந்து கொண்டு, தங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தாம்பூலம் அல்லது மாலை என்று ஏதேனும் சிலவற்றைத் தங்களுக்குக் காணிக்கையாக அளித்தார்கள் அல்லவா? அப்போது புஷ்பம் அல்லது வேறு எதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அஞ்சலி செய்து நான் வழியில் நிற்கவில்லை அல்லவா?அதனால் தான் இன்று இந்தக் கஷ்டத்தை அனுபவிகின்றேன். ஐயோ கஷ்டம்! ( 74 – 6 )

ஏஷ்யாமீதி விமுக்தயாsபி ப4க3வன்
நாலேபதாதர்யா தயா
தூ3ராத் காதரயா நிரீக்ஷித க3திஸ்த்வம்
ப்ராவிசோ’ கோ3புரம்|
ஆகோ4ஷானுமித த்வதா3க3ம மஹா
ஹர்ஷோல்லஸத்3 தே3வகீ
வக்ஷோஜ ப்ரக3லத் பயோரஸமிஷாத்
த்வத் கீர்த்தி ரந்தர்க3தா || ( 74 – 7 )


“பிறகு வருகிறேன்” என்று நீங்கள் சொல்லி அனுப்பி இருந்தும், தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாத அந்த சந்தனப் பூச்சுக்காரி வெகு தூரத்திலிருந்து தங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நீங்கள் கோபுரத்துக்குள் சென்றீர்கள் அல்லவா? ஆரவாரத்தால் அனுமானம் செய்யப்பட்ட தங்கள் வரவால் உண்டான பெரும் ஆனந்தத்தால் குலுங்கிய தேவகியின் ஸ்தனங்களில் இருந்து பெருகிய பாலைப் போலத் தங்கள் கீர்த்தி நகரத்துக்குள் சென்றது. ( 74 – 7)

ஆவிஷ்டோ நக3ரீம் மஹோத்ஸ்வதீம்
கோத3ண்ட சா’லாம் வ்ரஜன்
மாது4ர்யேண து தேஜஸா நு புருஷைர்
தூ3ரேண தத்தாந்தர: |
ஸ்ரக்3பி4ர் பூ4ஷித மர்சிதம் வரத4னுர்
மாமேதி வாதாத் புர:
ப்ராக்3ருஹ்ணா: ஸமரோபய:கில
ஸமாக்ராங்ஷீ ராபா4ங்க்ஷீ ரபி || ( 74 – 8 )

பெரும் உத்சவங்களுடன் கூடிய பட்டணத்திற்குள் சென்று, “கூடாது! கூடாது!” என்று காவல்காரர்களால் தடுக்கபட்டீர்கள். தங்களுடைய ரூப சௌந்தரியத்தாலோ, தேஜஸ் மிகுந்ததனாலோ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட வில்லை யாகசாலையிலிருந்து எடுத்தீர்கள். நாண் ஏற்றினீர்கள். பாணத்தை வைத்து பலமாக இழுத்து வில்லையே முறித்து விட்டீர்கள் அல்லவா? ( 74 – 8)

ச்’வ கம்ஸக்ஷபணோத்ஸவஸ்ய புரத :
ப்ராரம்ப4 தூர்யோபம
ச்’சாபத்4வம்ஸ மஹா த்4வனிஸ் தவ விபோ4
தேவானரோமாஞ்சயத் |
கம்ஸஸ்யாபி ச வேபது2ஸ் தது3தி3த:
கோத3ண்ட3 க2ண்ட3த்3வயீ
சண்டா3ப்4யாஹத ரக்ஷி பூருஷரவை
ருத்கூலிதோsபூ4த் த்வயா || ( 74 – 9 )

ஹே பிரபுவே! மறுநாள் நடக்கப்போகின்ற கம்ச வதமாகிய உத்சவத்துக்கு முன்பே ஆரம்ப பேரிகைக்கு ஒப்பான அந்த வில் முறிந்த பேரொலி தேவர்களையும் மயிர் சிலிர்க்க வைத்தது. அது மட்டுமல்ல அதிலிருந்து உண்டான் கம்சனின் நடுக்கம் வில்லின் இரண்டு துண்டுகளால் அடிக்கப்பட்ட காவல்காரர்களின் கூக்குரலால் அதிகரித்தது அல்லவா?
( 74 – 9)

சி’ஷ்டைர் து3ஷ்ட ஜனைச்’ச த்3ருஷ்ட மஹிமா
ப்ரீத்யா ச பீத்யா தத:
ஸம்பச்’யன் புரஸம்பத3ம் ப்ரவிசரன்
ஸாயம் கதோ வாடிகாம் |
ஸ்ரீதா3ம்னா ஸஹ ராதி4கா விரஹஜம்
கே2த3ம் வத3ன் ப்ரஸ்வபன்
ஆனந்த3ன் அவதாரத கார்ய க4டனாத்3
வாதேச’ ஸம்ரக்ஷ மாம் || ( 74 – 10)


ஹே குருவாயூரப்பா! சாது ஜனங்களால் பிரியத்துடனும், துஷ்டர்களால் பயத்துடனும் பார்க்கப்பட்ட மகிமை உடையவராக, பட்டணத்து அழகை பார்த்துக் கொண்டும் , சுற்றிக்கொண்டும் , மாலைப் பொழுதில் பூந்தோட்டத்துக்குச் சென்று ஸ்ரீ தாமாவுடன் ராதையின் பிரிவினால் உண்டான வருத்தத்தைச் சொல்லிக் கொண்டும், தூங்கிக் கொண்டும், அவதார காரணம் நெருங்குவதால் ஆனந்தம் அடைந்தவரும் ஆகிய தாங்கள் என்னைக் காக்க வேண்டும். ( 74 – 10)
 
த3ச’கம் 75 ( 1 to 5)

கம்ஸ வத4ம்

ப்ராத: ஸந்த்ரஸ்த போ4ஜ க்ஷிதிபதி
வசஸா ப்ரஸ்துதே மல்ல தூர்யே
ஸங்கே3 ராக்ஞாம் ச மஞ்சானாபி4யுயுஷி
க3தே நந்த3கோ3பேSபி ஹர்ம்யம் |
கம்ஸே சௌதா4தி4 ரூடே4 த்வமபி ஸஹபல:
ஸானுகச்’ சாருவேஷோ
ரங்க3த்3வாரம் க3தோ பூ: குபித
குவலயபீட3 நாகாவலீட4ம் || ( 75 – 1 ​)


மறு நாட்காலையில் அதிகம் பயந்துவிட்ட கம்சனுடைய கட்டளையால் மல்யுத்தத்தை தெரியப்படுத்தும் பேரிகை முழக்கப்பட்டது. அரசர்கள் கூட்டம் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தது. நந்தகோபர் மாடிக்கும், கம்சன் அரண்மனை மாளிகைக்கும் சென்றபோது, பலராமனுடன், தாங்களும், தங்கள் பரிவாரங்களும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கோபம் கொண்ட குவலயாபீடம் என்ற யானையால் தகையப்பட்ட மல்லர்கள் போர்புரியும் போர்க்கள வாயிலை அடைந்தீர்கள் அல்லவா? ( 75 – 1)

பாபிஷ்டா2பேஹி மார்கா3த்3
த்3ருதமிதி வசஸா நிஷ்டுரக்ருத்3த4 புத்3தே4
அம்ப3ஷ்ட2ஸ்ய ப்ரணோ தாத3தி4க
ஜவஜுஷா ஹஸ்தினா க்3ருஹ்யமாண:|
கேலி முக்தோSத2 கோ3பி குச கலச’
சிரஸ்பர்த்தி4னம் கும்ப4மஸ்ய
வ்யாஹத்யாலீயதாஸ்த்வம் சரபுவி
புனர் நிர்க3தோ வல்கு3ஹாஸீ || (75 – 2)


“அடேய் மகா பாவி! சீக்கிரமாக வழியை விட்டுத் தூரமாக நில் !” என்ற உங்கள் வாக்கைக் கேட்டு நிஷ்ட்டூரமும், கோபமும் அடைந்தான் மாவுத்தன். அவனுடைய ஏவலினால் யானை அதிக வேகத்துடன் வந்து தங்களைப் பிடித்தது. விளையாட்டாகவே அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டீர்கள். கோபிகைகளின் கலசம் போன்ற ஸ்தனங்களுடன் வெகு நாளாகப் போட்டிபோடும் யானையின் மத்தகத்தில் நன்றாக அடித்துவிட்டு, அதன் கால்களுக்கு அடியில் தாங்கள் ஒளிந்துகொண்டீர்கள். (75 – 2)

ஹஸ்த ப்ராப்யோSப்யக3ம்யோ ஜடிதி
முனிஜனஸ்யேவ தா4வன் க3ஜேந்த3ரம்
க்ரீட3ன்னாபயத்ய பூ4மௌ புனரபி4பதம்
ஸ்தஸ்ய த3ந்த3ம் ஸஜீவம் |
மூலாது3ன்மூல்ய தன்மூலக3 மஹித
மஹா மௌக்திகான்யாத்ம மித்ரே
ப்ராதா3ஸ்த்வம் ஹாரமேபி4ர் லலித
விரசிதம் ராதி4காயை தி3சே’தி || ( 75 – 3
)

முனி ஜனங்களுக்குக் கையில் கிடைக்கக் கூடியவராக இருந்த போதிலும் துதிக்கையால் பிடிக்க முடியாதவராகி, விரைந்து யானைக்கு எதிரில் ஓடிச் சென்று, விளையாடிக் கொண்டும், மறுபடியும் நிலத்தில் வீழ்ந்தும், தங்களை எதிர்த்து வந்த யானையின் உயிருடன் கூடிய தந்தத்தை வேருடன் பிடுங்கி விட்டீர் . அக்கொம்புகளின் அடிப்பகுதியில் இருக்கும் பெரிய முத்துக்களை சிநேகிதனிடம் கொடுத்துவிட்டு, “இவைகளைக்கொண்டு உண்டு பண்ணப்பட்ட அழகான மாலையை ராதிகைக்குக் கொடு!” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 75 – 3 )

க்3ருஹ்ணன் த3ந்த மம்ஸே யூதமத2
ஹலினா ரங்க3 மங்கா3விச’ன்தம்
த்வாம் மங்க3ல்யாங்க3 ப4ங்கீ3ரப4ஸ
ஹ்ருத மனோலோச்சனா வீக்ஷ்ய லோகா:|
ஹோ த4ன்யோ நு நந்தோ3 நஹி நஹி
பசு’பாலாங்க3னா நோ யசோதா
நோ நோ த4ன்யேக்ஷணா: ஸ்மஸ்த்ரிஜக3தி
வயமேவேதி ஸர்வே ச’ச’ம்ஸு :|| ( 75 – 4 )


ஹே கிருஷ்ணா! பிறகு தோளில் யானைத் தந்தத்தை வைத்துக் கொண்டு, பலராமனுடன் யுத்தத்துக்குச் செல்லும் தங்களைக் கண்ட ஜனங்கள்; மங்களகரமான தங்கள் அவயவயங்களைக் கண்டு பலவந்தமாகக் கவரப்பட்ட கண்களையும் மனதையுமுடையவர்கள் ஆனார்கள்.
“ஆச்சரியம் ஆச்சரியம்! மூன்று உலகங்களிலும் நந்தகோபன் பாக்கியசாலி. இல்லை இல்லை யசோதா தான் பாக்கியசாலி. இல்லை இல்லை கோபிகைகள் தாம் பாக்கியசாலிகள்! இல்லை இல்லை இல்லை இவனைக் காணும் பாக்கியம் பெற்ற நாமே பாக்கியசாலிகள்” என்று பலவாறு புகழ்ந்தனர் அல்லவா? ( 75 – 4 )

பூர்ண ப்3ரஹ்மைவ ஸாக்ஷான் நிரவதி4
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம்
கோ3பேஷு த்வம் வ்யலாஸீர்ன க2லு
ப3ஹு ஜனைஸ்தாவ தா3வேதி3தோ பூ4:|
த்3ருஷ்ட்வாSத2 த்வாம் ததே3த3ம் ப்ரதம
முபக3தே புண்யகாலே ஜநௌகா4 :
பூர்ணானந்தா3 விபாபாஸ் ஸரஸ
மபி4 ஜகு3ஸ் த்வத் க்ருதானி ஸ்ம்ருதானி || ( 75 – 5)

எங்கும் நிறைந்து இருப்பவரும்; நித்தியமானவரும்; பரமானந்தரூபியும் விஞ்ஞான கன ரூபியும் ஆனவரும்; பரப்ரஹ்ம ஸ்வரூபியாகவே இருக்கின்றவரும் ஆகிய தாங்கள் பிரத்யக்ஷமாக அந்த கோபர்களுக்கு இடையில் பிரகாசித்தீர்கள் அல்லவா? அநேகம் ஜனங்கள் தாங்கள் எவ்விதமானவர் என்பதை அறியவேயில்லை. புண்ணியம் பலனைக் கொடுக்கும் தருணம் வந்தபோது முதல் முதலாகத் தங்களை தரிசித்த உடனேயே பாவம் நீங்கியவர்களாகி, ஆனந்தம் நிறைந்தவர்கள் ஆகி, அப்போது நினைவுக்கு வந்த தங்கள் லீலைகளை ரசமாகப் பாடினார்கள் அல்லவா? ( 75 – 5 )
 
த3ச’கம் 75 ( 6 to 10)

கம்ஸ வத4ம்

சாணுரோ மல்லவீரஸ் தத3னு
ந்ருப கி3ரா முஷ்டிகோ முஷ்டிசா’லி
த்வாம் ராமனஞ்சாபி4 பேதே3 ஜட ஜடிதி
மிதோ2 முஷ்டிபாதாதி ரூக்ஷம் |
உத்பாதா பாதனாகர்ஷண விவித4
ரணான்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ: ப்ராகே3வ மல்ல ப்ரபு4
ரகமத3யம் பூ4ரிசோ’ ப3ந்த3 மோக்ஷான் || (75 – 6 )


அதன் பின்னர் கம்சனின் கட்டளைப்படி மல்ல வீரனான சாணூரன் , முஷ்டி யுத்தத்தில் திறமை வாய்ந்த முஷ்டிகன் பலராமனையும், சட சட என்ற சத்தத்துடன், முஷ்டியைக் கொண்டு இடித்து பயங்கரமாக எதிர்த்தனர் அல்லவா? உந்தி எறிவது, கீழே தள்ளுவது, பிடித்து எழுப்புவது போன்ற பலவித போர்களிளும் சரியே மல்லர்களின் அரசனான சாணூரன் அவன் மரணத்திற்கு முன்பே பலமுறை பந்தங்களையும் மோக்ஷங்களையும் (கட்டுதலையும் , விடுதலையையும் ) அடைந்தான் அல்லவா?( 75 – 6)

ஹா தி4க் கஷ்டம் குமாரௌ ஸுலலித
வபுஷௌ மல்ல வீரௌ கடோ2ரௌ
ந த்3ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி
ஜனே பா4ஷமாணே ததா3னீம் |
சாணூரம் தம் கரோத்3ப்4ராமண
விக3லத3ஸும் போத2யாமாஸி தோர்வ்யாம்
பிஷ்டோSபூ4ன் முஷ்டிகோSபி
த்3ருதமத2 ஹலினா நஷ்டசி’ஷ்டைர் த3தா4வே || ( 75 – 7)


“கஷ்டம்! கஷ்டம்! குழந்தைகள் ஆகிய ராம, கிருஷ்ணர்கள் கோமள சரீரம் உடையவர்கள்! மல்ல வீரர்கள் இருவரும் மிகவும் முரடர்கள்! சமம் இல்லாதவர்களின் போரை நாம் காண வேண்டாம்! விரைவாக நாம் வெளியேறிவிடுவோம்!” என்று என்று ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் கையில் பிடித்துச் சுழற்றியதால் முற்றிலுமாக உயிர் இழந்துவிட்ட சாணூரனைத் தரையில் ஓங்கி அடித்தீர்கள் அல்லவா? அதன் பின்னர் முஷ்டிகனும் பலராமனால் நசுக்கபட்டான். இறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் விரைந்து ஓடினார்கள் அல்லவா? ( 75 – 7 )

கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க2லமதி
ரவித3ன் காத்ய மார்யான் பித்ரூம்ஸ்தான்
ஆஹந்தும் வ்யாப்த மூர்தேஸ் தவ ச
ஸமசி’ஷத்3தூ3ரமுத் ஸாரணாய|
ருஷ்டோ து3ஷ்டோக்தி பி4ஸ்த்வம்
க3ருட3 இவ கி3ரிம் மஞ்ச மஞ்சன்னுத3ஞ்சத்
க2ட்க3 வ்யாவல்க3 து3ஸ்ஸங்க்3ரஹமபி ச
ஹ்டாத் ப்ராக்3ரஹீ ரௌக்3ராஸேனிம் || ( 75 – 8 )


துர்புத்தியுடைய அந்தக் கம்சன் பேரிகையை நிறுத்தச் செய்தான். என்ன செய்வது என்று அறியாமல் சாதுக்களாகிய நந்தன், வாசுதேவன், உக்ர சேனன் முதலியவர்களைக் கொல்லவும், எங்கும் நிறைந்துள்ள தங்களை வெகு தூரத்துக்கு விரட்டவும் கட்டளையிட்டான். தீய சொற்களால் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைமீது பாய்வதுபோல சிம்மாசனத்தின் மீது பாய்ந்தீர்கள். வாளை உயர எடுத்து வீசுவதால் பிடிக்க முடியாதவனாக இருந்தும் கூட அந்தக் கம்சனை பலாத்காரமாகப் பிடித்தீர்கள் அல்லவா?
( 75 – 8)

ஸத்3யோ நிஷ்பிஷ்ட ஸந்தி4ம் பு4வி
நரபதி மபாத்ய தஸ்யோபரிஷ்டாத்
த்வய்யா பாத்யே ததை3வ த்வதுபரி
பதிதா நாகினாம் புஷ்ப வ்ருஷ்டி:|
கிம் கிம் ப்3ரூமஸ் ததா3னீம் ஸததமபி
பி4யா த்வத்3 க3தாத்மா ஸ பே4ஜே
ஸாயுஜ்யம் த்வ்த்3வதோ4த்தா2 பரம பரமியம்
வாஸனா காலநேமே: || ( 75 – 9)

அப்போதே சந்திபந்திகள் நொறுங்கின. கம்சனைத் தரையில் தள்ளித் தாங்களும் அவன் மேல் விழ, தேவர்கள் பூமாரி பெய்தனர். பரமாத்மனே என்னவென்று கூறுவேன்? இடைவிடாத பயத்தினால் தங்கள் மீது இடைவிடாது மனத்தைச் செலுத்திய அந்தக் கம்சனும் அப்போதே சாயுஜ்யத்தை அடைந்துவிட்டான். இவ்விதம் சாயுஜ்யத்தை அடையக் காரணம் காலநேமியை தங்கள் கொன்றதால் உண்டான முன் ஜன்ம வாசனைதான். ( 75 – 9)

தத்3 ப்3ராத்ரூ நஷ்ட பிஷ்ட்வா த்3ருதமத2
பிதரௌ ஸன்னமன்னுக்3ரஸேனம்
க்ருத்வா ராஜான் முச்சைர் யது3குலம்
அகி2லம் மோத3யன் காமதா3னை:|
ப4க்தானா முத்தமஞ்சோத்3த4வம்
அமர கு3ரோ ராப்த நீதிம் ஸகா2யம்
லப்3த்4வா துஷ்டோ நக3ர்யாம்
பவன புரபதே ருந்தி4 மே ஸர்வ ரோக3ன் || ( 75 – 10
)

குருவாயூரப்பா! அதன் பிறகு விரைவாக கம்சனின் தம்பிகளான எட்டுப் பேர்களையும் கொன்று, தாய் தந்தையாராகிய தேவகி வசுதேவரை வணங்கி, உக்ரசேனரை அரசராக்கி, யதுகுலத்தவர் எல்லோருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்து, மனங்களை மகிழ்வித்து, பக்தர்களில் சிறந்தவரும் தேவகுருவும் ஆகிய பிருஹச்பதியிடம் இருந்து நீதி சாஸ்த்திரம் கற்றவரான உத்தவரையும் தோழராக அடைந்து, மிகவும் சந்தோஷம் அடைந்தவராக, மதுராபுரியில் வசித்து வந்த தாங்கள் எனது வியாதிகளை எல்லாம் அகற்ற வேண்டும். ( 75 – 10)
 
த3ச’கம் 76 ( 1 to 5)

உத்3த4வ தூ3த்யம்
க3த்வா ஸாந்தீ3பனிமத2
சதுஷ் ஷஷ்டி மாத்ரை ரஹோபி4:
ஸர்வக்ஞஸ்தவம் ஸஹ முஸலினா
ஸர்வ வித்3யாம் க்3ருஹீத்வா|
புத்ரம் நஷ்டம் யமனிலயனா
தா3ஹ்ருதம் த3க்ஷிணார்த்த2ம்
த3த்வா தஸ்மை நிஜபுர
மகா3நாத3யன் பாஞ்சஜன்யம் || ( 76 – 1 )


அதன் பிறகு சர்வஞனான தாங்கள் பலராமனுடன் ஸாந்தீபனியிடம் சென்று அறுபது நான்கு நாட்களில் எல்லா வித்யைகளையும்ம்கற்றுக் கொண்டீர். குருதக்ஷிணைக்காக அவருடைய இறந்து போன பிள்ளையை யமலோகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தீர். பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதிக்கொண்டு மதுராபுரி திரும்பிச் சென்றீர்கள். ( 76 – 1)

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பசு’ப ஸுத்3ருச:
ப்ரேம பா4ப்ரணுன்னா:
காருண்யேன த்வமபி விவச’:
ப்ராஹிணோருத்3த4வம் தம் |
கிஞ்சா முஷ்மை பரம ஸுஹ்ருதே3
ப4க்த வர்யாய தாஸாம்
ப4க்த்யுத்3ரேகம் ஸகல பு4வனே
துர்லப4ம் த3ர்ச’யிஷ்யன் || ( 76 – 2 )


பிரேமையின் மேன்மையால் பரவசம் அடைந்த கோப ஸ்திரீக்களை நினைத்து நினைத்து தாங்களும் கருணையால் பரவசர் ஆனீர்கள். அது மட்டுமின்றி பக்தர்களில் சிறந்தவரும், பிரிய சிநேகிதரும் ஆகிய உத்தவரை கோபிகைகளிடம் அனுப்பினீர்கள். உலகம் முழுவதும் ஒருவராலும் அடைய முடியாத கோபிகைகளின் பக்தியின் மேன்மையை நீங்கள் உத்தவருக்குக் காண்பிக்க விரும்பினீர்கள் . ( 76 – 2)

த்வன் மாஹாத்ம்ய ப்ரதி2மபி சு’னும்
கோ3குலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்3 வார்த்தாபி4ர் ப3ஹு ஸ
ரமயாமாஸ நந்த3ம் யசோ’தா3ம் |
ப்ராதர் த்3ருஷ்ட்வா மணிமய ரத2ம்
ச’ங்கிதா பங்கஜாக்ஷ்ய :
ச்’ருத்வா ப்ராப்தம் ப4வத3னு சரம்
த்யக்த கார்யாஸ் ஸமீயு:|| ( 76 – 3)

அந்த உத்தவர் சாயங்காலத்தில் தங்களின் மகிமையயை நிரூபிக்கின்ற கோகுலத்தை வந்து அடைந்தார். தங்கள் விருத்தாந்தங்களைச் சொல்லி நந்த கோபரையும் யசோதையையும் சந்தோஷப்படுத்தினார். விடியற்காலையில் ரத்தினமயமான தேரைக் கண்ட கோபிகைகள் தங்களின் தூதன் ஒருவன் வந்திருப்பதை அறிந்து, வீட்டு வேலைகளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு உத்தவரிடம் வந்தார்கள். ( 76 – 3)

த்3ருஷ்ட்வா சைனம் த்வது3பம
லஸத்3 வேஷ பூ4ஷாபி4 ராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதான்
யுச்சகைஸ்தானி தானி |
ருத்3தா4லாபா: கத2மபி புனர்
க3த்3 க3தா3ம் வாசமூசு:
சௌஜன்யாதீன் நிஜ பரபி4தா3
மாப்யலம் விஸ்மரந்த்ய: || ( 76 – 4)


தங்களுடையது போன்று விளங்கும் ஆடை ஆபரணங்களால் அழகாக விளங்கிய அந்த உத்தவரைக் கண்டு தங்களுடைய சிருங்கார சேஷ்டைகளை நினைத்து நினைத்துப் பேச்சு தடைபட்டவர்கள் ஆகிப் பிறகு அன்னியன் என்ற வேற்றுமையை மறந்து தழ தழக்கும் குரலில் கூறினார்கள். (76 – 4)

ஸ்ரீமன் கிம் த்வம் பித்ரு ஜனக்ருதே
ப்ரேஷிதோ நிர்த3யேன
க்வாசௌ காந்தோ நக3ர ஸுத்3ருசா’ம்
ஹா ஹரே நாத2 பாயா:|
ஆச்’லேஷாணா மம்ருத வபுஷோ
ஹந்த தே சும்ப3னனாம்
உன்மாதா3னாம் குஹகவசஸாம்
விஸ்மரேத காந்த கா வா || ( 76 – 5 )


லக்ஷ்மி கடாக்ஷம் பொருந்திய உத்தவரே! கருணை அற்ற அந்தக் கிருஷ்ணன் தன் தாய் தந்தையர்களுக்காக உங்களை இங்கு அனுப்பினானோ? பட்டணத்துப் பெண்களின் கணவன் ஆகிய அந்தக் கிருஷ்ணன் எங்கே இருக்கின்றான்? துயரங்களைப் போக்கடிக்கும் ஹே நாதனே! எங்களைக் காப்பாற்றவேண்டும். ஹே காந்த! மிகவும் கஷ்டம்! அமிருதமயமான தங்கள் சரீரத்தையும், தங்கள் ஆலிங்கனங்களையும், சும்பனங்களையும், மனதை மயக்கும் கபட வசனங்களையும் எந்தப் பெண் தான் மறப்பாள் ! ( 76 – 5)
 
த3ச’கம் 76 ( 6 to 11)

உத்3த4வ தூ3த்யம்

ராஸ க்ரீடா3 லுலித லலிதம்
விச்’லத2த் கேச’ பாச’ம்
மந்தோ3த்3 பின்ன ச்’ரம ஜல கணம்
லோப4நீயம் த்வத3ங்க3ம் |
காருண்யாப்3தே4 ஸக்ருத3பி
ஸமாலிங்கி3தும் த3ர்ச’யேதி
ப்ரேமோன் மாதா3த்3 பு4வன மத3ன
த்வத் ப்ரியாஸ்த்வாம் விலேபு:|| ( 76 – 6)


கருணைக் கடலே! ராசக்ரீடையில் கசக்கப் பட்டதும், மிருதுவானதும், கட்டவிழ்ந்த சிறந்த கேசங்களை உடையதும், கொஞ்சம் வியர்வைத் துளிகளை உடையதும் விரும்பத் தக்கதும் ஆன தங்கள் திருமேனியை ஒரு தடவை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உலகத்தையே மயக்கும் கிருஷ்ணா! தங்கள் பிரேமைக்கு உரியவர்கள் ஆகிய கோபிகள் தங்கள் பிரேமையால் உண்டான மனக் கலக்கத்தால் தங்களைப் பற்றி விலபித்தனர்.
( 76 – 6)

ஏவம் ப்ராயைர் விவச’ வசனை
ராகுலா கோ3பிகாஸ்தா
ஸ்த்வத் ஸந்தே3சை’: ப்ரக்ருதி மனயத்
ஸோSத விஞ்ஞான கர்ப்பை4:|
பூ4யஸ் தாபி4ர் முதி3த மதிபி4ஸ்
த்வன் மயீபி4ர் வதூ4பி4
ஸ்தத்3 வார்த்தா ஸரஸமனயத்
கானி சித்3வாஸராணி || ( 76 – 7 )


அதன் பிறகு உத்தவர் பரவச வசனங்களுடன் முற்றிலுமாக வருத்தம் அடைந்த கோபியர்களை தத்துவ ஞானம் செறிந்த தங்கள் வசனங்களால் சமாதானப்படுத்தி இயல்பு நிலையை அடைவித்தார். மனச் சாந்தி அடைந்த அந்த கோபிகைகளுடன் சில நாட்களை அந்தந்த விருதாந்தங்களைக் கேட்டவண்ணம் ஆனந்தத்துடன் கழித்தார் அல்லவா?
( 76 – 7)

த்வத் ப்ரோத்3கா3னைஸ் ஸஹித
மனிச’ம் ஸர்வதோ கே3ஹ க்ருத்யம்
த்வத் வார்த்தைவ ப்ரஸரதி மித2ஸ்
சைவ சோத்ஸ்வாபலாபா:|
சேஷ்டா: ப்ராயஸ்த்வ த3னுக்ருதயஸ்
த்வன் மயம் ஸர்வமேவம்
த்3ருஷ்ட்வா தத்ர வ்யமுஹ த3தி4கம்
விஸ்மயாது3த்3த4வோSயம் || (76 – 8)


இரவும், பகலும், எல்லாவிடத்திலும், வீட்டுவேலைகளிலும் தங்கள் சரிதத்தின் கானங்களுடன் கூடிய பேச்சாகவே இருந்தது. தங்கள் பேச்சு எதிலும் பரவியது. தூங்கும் போது வந்த கனவுகளின் பேச்சுக் கூடத் தங்களைப் பற்றியதே. பிரவ்ருத்திகள் எல்லாமே தங்களை அனுகரணம் செயப்பட்டவை தாம்.. இவ்விதமாக அங்கே எல்லாம் தங்கள் மயமாகவே இருப்பதைக் கண்டு அந்த உத்தவர் ஆச்சரியத்தால் மிகவும் மோஹம் அடைந்தார். ( 76 – 8)

ராதா4யா மே ப்ரியா தம மித3ம்
மத்ப்ரியைவம் ப்3ரவீதி
த்வம் கிம் மௌனம் கலயஸி ஸகே3
மானினீ மத் ப்ரியேவ |
இத்யாத்3யேவ ப்ரவத3தி ஸகி2
த்வத் ப்ரியோ நிர்ஜனே மாம்
இத்தம் வாதை3: அரமய த3யம்
தத் ப்ரியா முத்பலாக்ஷீம் || ( 76 – 9)


“நண்பா! என் ராதைக்கு இது பிரியமானது. என் பிரியை ராதை உன்னைப் போலவே சொல்லுவாள். நீயும் அபிமானமுடைய என் பிரியை ராதையைப் போலவே என் மௌனமாக இருக்கின்றாயே! ஹே ராதே! உன் பிரியனான கிருஷ்ணன் ஏகாந்தத்தில் இது போன்ற விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லுவான் ” போன்ற வசனங்களால் அந்த உத்தவர் தங்கள் ப்ரீதிக்கு உரியவளாகிய தாமரைக் கண்ணி ராதையை சந்தோஷப்படுத்தினார். ( 76 – 9 )

ஏஷ்யாமி த்3ராக் அனுபம க3மனம்
கேவலம் கார்ய பா4ராத்
விச்’லேஷேSபி ஸ்மரண த்3ருட3தா
ஸம்ப4வான் மாஸ்து கே2த3:|
ப்3ரஹ்மானந்தே3 மிலதி நசிராத்
ஸங்க3மோ வா வியோக3
ஸ்துல்யோ வ: ஸ்யாதி3தி தவ கி3ரா
ஸோSகரோன்னிர்வ்யதா2ஸ்தா:|| ( 76 – 10)

“தாமதியாமல் அங்கு வருவேன். இப்போது அங்கு வராமல் இருப்பது அதிக வேலை இருப்பதால் தான். என்னை விட்ட போதும் திடமான நினைவு உண்டாவதால் வருந்த வேண்டாம். சீக்கிரமாகவே பிரமானந்தம் கைக் கூடும். அப்போது கூடி இருப்பதும், பிரிவும் உங்களுக்கு சமமாகவே இருக்கும் !” என்ற தங்கள் மொழிகளாலேயே அந்தப் பெண்களை வருத்தம் அற்றவர்களாகச் செய்தார் அல்லவா? ( 76 – 10)

ஏவம் ப4க்திஸ் ஸகல பு4வனே
நேக்ஷிதா ந ச்’ருதா வா
கிம் சா’ஸ்த் ரௌகை4: கிமிஹ தபஸா
கோ3பிகாப்4யோ நமோSஸ்து |
இத்யானந்தா3குல முபக3தம்
கோ3குலாது3த்3த4வம் தம்
த்3ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ கு3ருபுரபதே
பாஹி மாம் ஆமயௌகா4த் || ( 76 – 11)

இப்படிப்பட்ட சிறந்த பக்தியை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. கேட்டதும் இல்லவேயில்லை. இந்த விஷயங்களில் சாஸ்திரங்களால் என்ன பயன்? தவத்தால் என்ன பயன்? கோபிகைகளுக்கு நமஸ்காரம்!” என்று ஆலோசித்து ஆனந்தத்தால் பரவசம் அடைந்து கோகுலத்தில் இருந்து திரும்பி வந்தார் உத்தவர். அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த குருவாயூரப்பா. என்னை வியாதிக்கூட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
( 76 – 11)
 
Is Age really catching up with me ???

I forgot to post in this thread yesterday! :(

So I will post both part 1 and part 2 of dasakam 77 today!
 
Last edited:
த3ச’கம் 77 (1 to 6)

உபச்’லோக உத்பத்தி

சைரந்த்4ர்யாஸ் தத3னு சிரம் ஸ்மாராதுராயா
யாதோSபூ4ஸ் ஸுலலிதா முத்3த4வேன ஸார்த்த4ம்|
ஆவாஸம் தது3பக3மோத்ஸவம் ஸதை3வ
த்4யாயன்த்யா: ப்ரதிதி3னவாஸ ஸஜ்ஜிகாயா:|| ( 77 – 1 )

அதன் பிறகு வெகு நாட்களாகக் காமத்தில் வருந்தினவளும், தங்கள் சேர்க்கையால் உண்டாகும் ஆனந்ததையே எப்போதும் தியானித்துக் கொண்டு இருப்பவளும், ஒவ்வொரு நாளும் தன்னையும் தன் வீட்டையும் அலங்கரித்துக் கொண்டு நாயகன் வரவை எதிர்பார்த்து இருக்கும் வாஸசஜ்ஜிகை என்ற நாயகியாக பாவித்தவளும் ஆகிய சைரந்திரியின் வீட்டுக்கு, உத்தவருடன் மிக அழகாக அலங்கரிதுக்கொண்டு சென்றீர்கள் அல்லவா? ( 77 – 1)

உபக3தே த்வயி பூர்ண மனோரதம்
ப்ரமத3 ஸம்ப்4ரம கம்ப்ரபயோத4ராம்|
விவித4 மானன மாத3த4தீம் முதா3
ரஹசி தாம் ரமயாஞ்ச க்ருஷே ஸுக2ம் || ( 77 – 2 )


தாங்கள் பக்கத்தில் வந்தபோது தன் மனோரதம் நிறைவேறியவளும், சந்தோஷம் அதிகரித்தால் சலிக்கின்ற ஸ்தனங்களை உடையவளும், பற்பல மரியாதைகள் செய்பவளும், ஆகிய அந்த சைரந்திரியை ஏகாந்தத்தில் மிகவும் சந்தோஷமாக ரமிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 77 – 2 )

ப்ருஷ்டா வரம் புனரஸாவவ்ருணோத்3 வராகீ
பூ4யஸ்த்வயா ஸுரதமேவ நிசா’ந்தரேஷு |
ஸாயுஜ்ய மஸ்த்விதி வதே3த்3 பு3த4 ஏவ காமம்
ஸாமீப்ய மஸ்த்வ நிச’மித்யபி நாப்3ரவீத் கிம் || ( 77 – 3 )


மறுநாட்காலையில் தாங்கள் புறப்படும்போது “என்ன வரம் வேண்டும்?” என்று தாங்கள் கேட்டபோது, அந்தப் பேதைப் பெண் அது போன்றே மற்ற இரவுகளிலும் சுரதத்தையே வரமாகக் கேட்டாள். தங்களுடைய சாயுஜ்ய முக்தி வேண்டும் என்று ஒரு ஞானியால் தான் கேட்க முடியும். எப்போதும் தாங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கூட அவள் கேட்க வில்லையே! ( 77 – 3)

ததோ ப4வான் தே3வ நிசா’ஸு காஸுசித்
ம்ருகீ3 த்3ருச’ம் தாம் நிப்4ருதம் விநோத3யன் |
அதா3 து3பச்’லோக இதி ச்’ருதம் ஸுதம்
ஸ நாரதா3த் ஸாத்வத் தந்த்ர வித்3ப3பௌ4|| ( 77 – 4)


பிரகாசரூபியே! தாங்கள் சில ராத்திரிகள் மான்கண்ணியாகிய அந்தப் பெண்ணை ஏகாந்தத்தில் ரமிக்கச் செய்து கொண்டு உபச்லோகன் என்னும் பிரசித்தி பெற்ற புதல்வனைக் கொடுத்தீர்கள். அவன் நாரதரிடமிருந்து வைஷ்ணவ சாஸ்திரத்தை அறிந்து கொண்டு சிறந்து விளங்கினான். ( 77 – 4 )

அக்ரூர மந்தி3ர மிதோSத ப3லோத்3த4வாப்4யாம்
அப்4யர்சிதோ ப3ஹு நுதோ முதி3தேன தேன|
ஏனம் விஸ்ருஜ்ய விபினாக3த பாண்ட3வ்யோ
வ்ருத்தம் விவேதி3த2 ததா3 த்3ருதராஷ்ட்ர சேஷ்டாம் || ( 77 – 5)

பிறகு பாலராமனுடனும், உத்தவனுடனும், அக்ரூரன் வீட்டுக்குச் சென்று , அவனால் பூஜிக்கப்பட்டு துதிக்கப் பட்டீர்கள் அல்லவா? அந்த அக்ரூரனனை அனுப்பிக் காட்டில் இருந்து திரும்பிவந்த பாண்டவர்களின் விருத்தாந்ததையும் மேலும் திருதிராஷ்டிரன் செய்கைகளையும் அறிந்து கொண்டீர்கள் அல்லவா?
( 77 – 5 )

விகா4தாஜ் ஜாமாது: பரம ஸுஹ்ருதோ3 போ4ஜ ந்ருபதே
ஜராஸந்தே4 ருந்த4த்யனவதி4ருஷாSன் தே4Sத2 மது2ராம்|
ரதா2த்3யைர் த்3யாலப்3தை4: கதிபய ப3லஸ்த்வம் ப3லயுத
ஸ்த்ராயோ விம்ச’த்ய க்ஷௌஹிணி தது3பநீதம் ஸமாஹ்ருதா2|| (77 – 6 )

தன் மாப்பிள்ளையும், பிரிய சிநேகிதனும் ஆகிய கம்சனைக் கொன்றதால் அளவற்ற கோபம் கொண்ட ஜராசந்தன் மதுரா மீது படை எடுத்தான். சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த தேர் முதலியவைகளுடன் கொஞ்சம் சைனியங்களை உடைய தாங்களும் பலராமனும், அந்த ஜராசந்தனால் கொண்டு வரப்பட்ட இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையை சம்ஹாரம் செய்தீர்கள் அல்லவா? ( 77 – 6 )
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top