• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 77 ( 7 to 12 )

உபச்’லோக உத்பத்தி

பத்3த4ம் ப3லாத3த2 ப3லேன ப3லோத்தரம் த்வம்
பூ4யோ ப3லோத்3ய மரஸேன முமோசிதைனம்|
நி: சே’ஷ தி3க்3ஜய ஸமாஹ்ருத விச்’வ சைன்யாத்
கோSன்யஸ் ததோ ஹி ப3லபௌருஷ வாம்ஸ் ததா3னீம் || (77 – 7 )


அதன் பிறகு, பலராமனால் பலவந்தமாகக் கட்டப்பட்டவனும், பலம் பொருந்தியவனும் ஆகிய ஜராசந்தனைத் தாங்கள் ,” படையைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் போருக்கு வருவான்!”‘ என்ற ஆவலால் விடுதலை செய்தீர்கள் அல்லவா? எல்லா திக்குகளையும் ஜெயித்து அவ்விடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சமஸ்த சேனைகளை உடைய அவனைத் தவிர அப்போது பலமும், வீரமும் பொருந்தியவர்கள் வேறு யார் இருந்தார்கள்?
( 77 – 7 )

ப4க்னஸ்ஸ லக்3ன ஹ்ருத3யோSபி ந்ருபை: ப்ரனுன்னோ
யத்3த4ம் த்வயா விதி4த ஷோட3ச’ க்ருத்வ ஏவம்|
அக்ஷௌஹிணிச்’சி’வ சிவாஸ்ய ஜக3ந்த2 விஷ்ணோ
ஸம்பூ4ய சைகனவதி த்ரிச’தம் ததா3னீம் || ( 77 – 8 )


தோல்வி அடைந்து அதனால் வெட்கம் அடைந்திருந்த போதிலும் அந்த ஜராசந்தன் மற்ற அரசர்களின் தூண்டுதலால் இதே போன்று மேலும் பதினாறு தடவைகள் தங்களுடன் போர் புரிந்தான் அல்லவா? அப்போது மொத்தமாக அவனுடைய முன்னூற்றுத் தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணி சேனைகளைக் கொன்று குவித்தீர்கள் அல்லவா? ஆச்சரியம்! ஆச்சரியம் தான். ( 77 – 8 )

அஷ்டா த2சே’Sஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்3ருஷ்ட்வா புரோSத2 யவனம் யவன த்ரிகோட்யா|
த்வஷ்ட்ரா விதா4ப்ய பரமாசு’ பயோதி4 மத்4யே
தத்ராSத2 யோக3 ப3லத: ஸ்வஜனானனைஷீ:|| ( 77 – 9 )


பிறகு அந்த ஜராசந்தனின் பதினெட்டாவது போர் நெருங்கிய போது தாங்கள் எதிரில் மூன்று கோடி யவனர்களுடன் வந்திருக்கும் காலயவனனைக் கண்டு, விஸ்வகர்மாவின் உதவியுடன் சமுத்திரத்தின் நடுவில் ஒரு பட்டணத்தை உண்டு பண்ணினீர்கள் . உங்கள் யோக பலத்தால் அத்தனை பிரஜைகளையும் அங்கு கொண்டு சேர்த்தீர்கள் அல்லவா?
( 77 – 9 )

பத்3ப்4யாம் த்வம் பத்3மமாலீ சகித இவ
புரான் நிர்க3தோ தா4வமானோ
ம்லேச்சே2சே’னானுயாதோ வத4 ஸுக்ருத
விஹீனேன சை’லே ந்யலைஷீ:|
ஸுப்தேனாங்க்4ர்யா ஹதேன த்3ருத மத2
முசுகுந்தே3ன ப4ஸ்மீ க்ருதேSஸ்மின்
பூ4பாயாஸ்மை கு3ஹாந்தே ஸுலலித
வபுஷா தஸ்தி2ஷே ப4க்திபா4ஜே || ( 77 – 10)


தாமரை மாலை அணிந்த தாங்கள் பயந்தவர் போலக் கால்நடையாகவே பட்டணத்தில் இருந்து வெளியே வந்து ஓடினீ ர்கள். தங்கள் கையால் வதம் செய்யபடும் பாக்கியம் பெறாத மிலேச்சன் அரசன் தங்களைப் பின் தொடர்ந்தான். ஒரு மலையில் மறைந்து விட்டீர்கள் தாங்கள். நன்கு உறங்கிக் கொண்டிருந்தவரும், காலால் உதைத்து எழுப்பப் பட்டவரும் ஆகிய முசுகுந்தனால் அந்த யவனன் சாம்பலாக்கப் பட்டான். முசுகுந்தனுக்கு மிக அழகான திருமேனியுடன் காட்சி தந்தீர்கள் அல்லவா? ( 77 – 10 )

ஏக்ஷ்வாகோஹம் விரக்தோSஸ்ம்யகி2ல
ந்ருபஸுகே த்வத் ப்ர ஸாதை3க்க காங்க்ஷீ
ஹா தே3வேதி ஸ்துவந்தம் வரவிததிஷு
தம் நி: ஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யன் |
முக்தேஸ் துல்யாஞ்ச ப4க்திம் து4த ஸகல மலம்
மோக்ஷ மப்யாசு’ த3த்வா
கார்யம் ஹிம்ஸா விசுத்3த்4யை தப இதி ச
ததா3 ப்ராத்த2 லோக ப்ரதீத்யை || ( 77 – 11)


ஹே சர்வேஸ்வரனே! நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். எல்லா ராஜ போகங்களையும் வெறுத்துத் தங்கள் அருள் ஒன்றையே விரும்பி இருக்கின்றேன் என்று சொல்லித் துதிக்கும் அரசன் வரங்களில் ஆசையற்றவனாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைந்தீர்கள். மோக்ஷத்துகுச் சமமான பக்தியைக் கொடுத்தீர்கள் . பிராணி ஹிம்சையால் உண்டான பாவம் விலகுவதற்கு தவம் புரிய வேண்டுமென்றும் என்று கூறினீர்கள் ( 77 – 11 )

தத2னு மது2ராம் க3த்வா ஹத்வா சமூம் யவனா ஹ்ருதம்
மக3த4 பதினா மார்கே3 சைன்ய: புரேவா நிவாரித:|
சரம விஜயம் த3ர்பா யாஸ்மை ப்ரதா3ய சலாயிதோ
ஜலதி4 நக3ரீம் யாதோ வாதாலயேச்’வர பாஹி மாம்|| ( 77 – 12)


அதன் பிறகு மதுரா புரிக்குச் சென்று காலயவனன் அழைத்து வந்த சேனையைக் கொன்று, வழியில் மகத தேசத்து அரசனான் ஜரா சாந்தனால் முன்போலவே தடுக்கப்பட்டு அவனுக்கு கர்வம் உண்டாக்குவதற்கு வெற்றியை அளித்து ஒடிச் சென்று சமுத்திரத்தில் இருக்கும் த்வாரகா புரியை அடைந்தீர்கள் அல்லவா? அப்படிப் பட்ட குருவாயூரப்பா என்னைக் காப்பாற்றும். ( 77 – 12 )
 
த3ச’கம் 78 ( 1 to 5)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

த்ரி த3ச’ வர்த்தி4க வர்த்தி4த கௌச’லம்
த்ரித3ச’ த3த்த ஸமஸ்த விபூ4தி மத் |
ஜலதி4 மத்4யக3தம் த்வமபூ4ஷயோ
நவபுரம் வபுரஞ்சித ரோசிசா’|| ( 78 – 1)


தேவ சிற்பியான விஸ்வகர்மா அதைத் தன் கைத் திறனால் விருத்தி செய்தான். இந்திராதி தேவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்தனர். சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த புதிய நகரமான துவாரகையை தங்கள் சரீர காந்தியால் அலங்கரித்தீர்கள் அல்லவா?
( 78 – 1 )

த3து3ஷி ரேவத பூ4ப்4ருதி ரேவதீம்
ஹலப்4ருதே தனயாம் விதி4 சா’ஸனாத் |
மஹித முத்ஸவ கோ4ஷ மபூபுஷ:
ஸமுதி3தைர் முதி3தைஸ் ஸஹ யாத3வை || ( 78 – 2 )


ரேவதன் என்ற அரசன் தன் மகள் ரேவதியை பிரம்மதேவன் கட்டளைப்படி பலராமனுக்கு திருமணம் செய்தபோது மகிழ்ச்சியுற்ற யாதவர்களுடன் நீங்களும் அந்த விவாஹத்தை மேன்மைப்படுத்தினீர்கள் அல்லவா? ( 78 – 2 )

அத2 வித3ர்ப்ப4 ஸுதாம் க2லு ருக்மிணீம்
ப்ரணயினீம் த்வயி தே3வ ஸஹோத3ர:|
ஸ்வயமதி3த்ஸத சேதி மஹீ பு4ஜே
ஸ்வதமஸா தமஸாது4முபாச்’ரயன் || ( 78 – 3)


தங்களிடம் அனுராகம் கொண்டிருந்தாள் விதர்ப்ப தேச மன்னனின் பெண் ருக்மிணி. அவன் சகோதரன் ருக்மி தன் மதியீனத்தால் அவளை சேதி ராஜன் ஆகிய சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து தர விரும்பினான் அல்லவா? ( 78 – 3)

சிர த்4ருத ப்ரணயா த்வயி பா3லிகா
ஸபதி3 காங்க்ஷித ப3ங்க3ஸமாகுலா |
தவ நிவேத3யிதம் த்3விஜமாதி3ச’த்
ஸ்வகத3னம் கத3னங்க விநிர்மிதம் || ( 78 – 4 )

தங்களிடம் வெகு நாட்களாக அன்பு செலுத்திவந்த அந்தப் பெண் ருக்மிணி, தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தாள். கருணையே இல்லாத மன்மதனால் தனக்கு ஏற்படும் துயரத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரு பிராமணனைச் சொல்லியனுப்பினாள். ( 78 – 4 )

த்3விஜ ஸுதோSபி ச தூர்ண முபாயயௌ
தவபுரம் ஹி து3ராச’ து3ராஸத3ம் |
முத3 மவாப ச ஸாத3ர பூஜித:
ஸப4வதா ப4வதாப ஹ்ருதாஸ்வயம் || ( 78 – 5 )

அந்த பிராமண குமாரன் துர் எண்ணம் கொண்டவர்களால் அடையவே முடியாத தங்கள் நகரை விரைவாக வந்து அடைந்தான். ஜனன மரண துக்கங்களை அகற்றவல்ல தாங்களால் ஸ்வயமாகப் பூஜிக்கப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தான் அல்லவா?
( 78 – 5 )
 
த3ச’கம் 78 ( 6 to 10)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

ஸ ச ப4வந்த மவோசத குண்டி3னே
ந்ருப ஸுதா க2லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீ4ரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹி தோஸ்Sம்யஹம் || ( 78 – 6 )

“குண்டினபுரத்தில் ருக்மிணி என்கின்ற ஒரு அரச குமாரி இருக்கின்றாள் அல்லவா? தங்கள் இடத்தில் ஆசை வைத்தவளும், தன் தைரியத்தை இழந்து விட்டவளும் ஆகிய அவளால் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்” என்று அந்த குமாரன் தங்களிடம் தெரிவித்தான் அல்லவா? ( 78 – 6 )

தவ ஹ்ருதாSஸ்மி புரைவ கு3ணைரஹம்
ஹரதி மாம் கில சேதி3 ந்ருபோSதுனா |
அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜக3தே3 ஜக3தே3கபதே த்வயா || ( 78 – 7 )

“நான் தங்கள் குணங்களால் முன்பே கவரப்பட்டுள்ளேன். இப்போதோ சிசிபாலன் என்னை அடையப் போகின்றானாம். கருணைக்கு இருப்பிடமான லோக நாதா! என்னை தாங்களே காத்து அருள வேண்டும்!” என்று அவள் கூறினாள். ( 78 – 7 )

அச’ரணம் யதி3 மாம் த்வமுபேக்ஷஸே
ஸபதி3 ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி3ரா ஸுதனோ ரதனோத்3 ப்4ருச’ம்
ஸுஹ்ருத3யம் ஹ்ருத3யம் தவ காதரம் || ( 78 – 8 )


“வேறு கதி இலாத எனைத் தாங்கள் கை விடுவீர்களேயானால் நான் அந்த க்ஷணத்தில் என் உயிரை விட்டுவிடுவேன்” என்ற அந்த சுந்தரியின் வார்த்தைகளைக் கூறி அந்த நல்ல மனம் படைத்த பிராமண குமாரன் தங்கள் மனதையும் பயமுற்றதாகச் செய்தான் அல்லவா? ( 78 – 8 )

அகத2யஸ் த்வமதை2 நமயே ஸகே2
தத3தி4கா மம மன்மத3 வேத3னா |
ந்ருப ஸமக்ஷ முபேத்ய ஹராம்யஹம்
தத3யி தாம் தயிதா மஸிதேக்ஷணாம் || ( 78 – 9)


அப்போது தாங்கள் அந்த பிராமண குமாரனிடம் ” ஹே நண்பரே! என்னுடைய விரகதாபம் அவளுடைய காமவேதனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் நான் அங்கே வந்து அரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவிழிகளை உடைய அந்த அழகியை அபகரிப்பேன்” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 78 – 9 )

ப்ரமுதி3தேன ச தேன ஸமம் ததா2
ரத2க3தோ லகு4 குண்டி3ன மேயிவான் |
கு3ருமருத்புர நாயக மே ப4வான்
விதனுதாம் தனுதாம் நிகி2லாபதா3ம் || ( 78 – 10)


குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோஷம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும. ( 78 – 10 )
 
த3ச’கம் 79 ( 1 to 6)

ருக்மிணீ ஹரணம்

ப3ல ஸமேத ப3லானுக3தோ ப4வான்
புர மகாஹத பீ4ஷ்மக மானித:|
த்விஜ ஸுதம் த்வது3பாக3ம வாதி3னம்
த்4ருத ரஸா தரஸா ப்ரணநாம ஸா || ( 79 – 1 )


தாங்கள், சேனையுடன் கூடிய பலராமன் பின்தொடரக் குண்டினபுரத்தில் பிரவேசித்தீர்கள். அப்ப்போது பீஷ்மக ராஜா தங்களை வெகுமானித்தார். தங்கள் வரவைத் தெரிவித்த அந்த பிராமண குமாரனை ருக்மிணி விரைவாக வந்து வணங்கினாள். ( 79 – 1 )

பு4வன காந்த மவேக்ஷ்ய ப4வத்3 வபு:
ந்ருப ஸுதஸ் ய நிச’ம்ய ச சேஷ்டிதம் |
விபுல கே2த3 ஜுஷாம் புர வாஸினாம்
ஸருதி3தை ருதி3தை ரக3மன்நிசா’ || ( 79 – 2 )


ஜகன் மோகனன் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டும், அரச குமாரன் ருக்மியின் செயலைக் கேட்டும் ஜனங்கள் அளவற்ற வருத்தம் அடைந்தனர். பட்டணத்து ஜனங்களின் அழுகை, பேச்சு இவற்றுடன் அந்த இரவு கழிந்தது.(79-2)

தத3னு வந்தி3து மிந்து3 முகி3 சி’வாம்
விஹித மங்க3ள பூ4ஷண பா4ஸுரா |
நிரக3மத்3 ப4வத3ர்பித ஜீவிதா
ஸ்வபுரத: புரத:ஸப4டாவ்ருதா || ( 79 – 3 )

அதன் பிறகு அடுத்த நாட்காலை விவாஹத்திற்கு உரிய ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்ட, பௌர்ணமி நிலவு முகம் உடைய ருக்மிணி; உயிரை உங்களிடத்தில் அர்ப்பணம் செய்தவளாகவும் , சிறந்த காவலர்களால் சூழப்பட்டவளாகவும், மங்கள ரூபிணி ஆகிய பார்வதியை வணங்குவதற்குத் தன் அந்தப்புரத்தில் இருந்து முன் சென்றாள் ( 79 – 3 )

குலவதூ4பி4ருபேத்ய குமாரிகா
கி3ரிஸுதாம் பரி பூஜ்ய ச ஸாத3ரம் |
முஹுரயாசத த்வத் பத3 பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || ( 79 – 4 )

கன்னியான ருக்மிணி குலஸ்த்ரீக்களுடன் ஆலயத்துக்குச் சென்றாள். பார்வதி தேவியை மிகுந்த ஆதரவுடன் பூஜித்தாள். தேவியின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். தாங்களே அவள் பதியாக ஆகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் பிரார்த்தித்துக் கொண்டாள். ( 79 – 4 )

ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருப குலே நிப்4ருதம் த்வயி ச ஸ்திதே|
ந்ருபஸுதா நிரகா3த்3 கி3ரிஜாலயாத்
ஸுருசிரம் ருசிரஞ்ஜித தி3ங்முகா2 || ( 79 – 5 )

அரசர் கூட்டம் ருக்மிணியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும்போது, தாங்களும் தனிமையில் இருக்கும் பொழுது, அரசகுமாரி ருக்மிணி தன் சரீர காந்தியினால் திக்குகளை விளங்கச் செய்து கொண்டு பார்வதியின் ஆலயத்தில் இருந்து மிகவும் அழகாக வெளிக் கிளம்பினாள். ( 79 – 5 )

பு4வன மோஹன ரூப ருசா ததா3
விவசி’தாகி2ல ராஜ கத3ம்ப3யா|
த்வமபி தே3வ கடாக்ஷ விமோக்ஷணை:
ப்ரமத3யா மத3யாஞ்ச க்ருஷே மனாக் || ( 79 – 6 )


அப்போது உலகங்களை எல்லாம் மயக்கக் கூடிய சரீர காந்தி படைத்தவளும், அரசர் கூட்டத்தை பரவசம் ஆக்கியவளும், யௌவன வயதின் மதம் உடையவளும் ஆகிய ருக்மிணியின் கடைக்கண் பார்வைகளால் தாங்களும் பரவசம் அடைந்தீர்கள் அல்லவா?
( 79 – 6 )
 
த3ச’கம் 79 ( 7 to 12)

ருக்மிணீ ஹரணம்

க்வனு க3மிஷ்யஸி சந்த்3ரமுகீ2தி தாம்
ஸரஸமேத்ய கரேண ஹரன் க்ஷணாத் |
ஸமதி4ரோப்ய ரத2ம் த்வமாஹ்ருதா2
பு4வி ததோ விததோ நினதோ3 த்3விஷாம் || ( 79 – 7 )


“சந்திரன் போன்ற முகம் உடையவளே! எங்கு செல்கின்றாய்?” என்று சொல்லிக் கொண்டே மிகுந்த காதலுடன் அவள் அருகில் சென்றீர்கள். அவளைக் கையால் பிடித்துக் கொண்டு, ஒரு நொடியில் தேரில் ஏற்றிக் கொண்டு, அபஹரித்துச் சென்றீர்கள் அல்லவா? அப்போது பகைவர்களின் கூக்குரல் உலகெங்கும் பரவியது! ( 79 – 7 )

க்வனு க3த: பசு’பால இதி க்ருதா4
க்ருத ரணா யது3பி4ச்’ச ஜிதா ந்ருபா:|
ந து ப4வானுத3சால்யத தைரஹோ
பிசு’னகை: சு’னகைரிவ கேஸரி || ( 79 – 8)

“அந்த இடையன் எங்கே சென்று விட்டான்?” என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன் போருக்கு வந்த அரசர்களை யாதவர்கள் ஜெயித்தார்கள். நாய்களிடைய சிங்கம் கம்பீரமாக இருப்பது போன்றே அரசர்கள் இடையே தாங்கள் கம்பீரமாக இருந்தீர்கள் அல்லவா?
( 79 – 8 )

தத3னு ருக்மிண மாக3த மாஹவே
வத4 முபேக்ஷ்ய நிப34த்த்ய விரூபயன்|
ஹ்ருத மத3ம் பரிமுச்ய ப3லோக்திபி4:
புரமயா ரமயா ஸஹ காந்தயா|| ( 79 – 9 )

அதன் பிறகு போருக்கு வந்த ருக்மியைக் கொல்லாமல், அவனைக் கட்டி வைத்து, விரூபம் செய்து, மதம் அழிந்த அவனை பலராமன் சொற்படி அவிழ்த்து விட்டீர்கள். பிறகு லக்ஷ்மி தேவியின் அவதாரமான ருக்மிணியுடன் துவரகாபுரி சென்றீர்கள் அல்லவா? ( 79 – 9 )

நவ ஸமாகம லஜ்ஜித மானஸம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பி4த மன்மதா2ம் |
அரமய கலு நாத2யதா2 ஸுக2ம்
ரஹஸி தம் ஹஸிதாம்சு’ லஸன்முகீ2ம் || ( 79 – 10)


ஈசா! புதுச் சேர்க்கையால் வெட்கம் கொண்ட மனதை உடையவளும்; அன்பினாலும், சந்தோஷத்தினாலும் அதிகாரித்த காமவிகாரத்தை உடையவளும்; மந்தஹாசத்தின் காந்தியால் விளங்குகின்ற முகத்தை உடையவளும்; ஆகிய ருக்மிணியை ஏகாந்தத்தில் சுகம் அனுபவிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 79 – 10 )

விவித4 நர்மபி4 ரேவமஹர்நிச’ம்
ப்ரமத3 மாகலயன் புனரேகதா3|
ருஜுமதே: கில வக்ர கி3ரா ப4வான்
வரதனோ ரதனோத3தி லோலதாம் || ( 79 – 11 )


இவ்வாறு பல பிரிய வசனங்களால் இரவும் பகலும் மிகவும் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த தாங்கள், ஒரு நாள் விபரீதமான கடுஞ் சொற்களால் நேர்மையான அறிவையுடைய அந்த அழகிய பெண்ணுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணினீர்கள் அல்லவா?( 79 – 11 )

தத3தி4க ரத2 லாலன கௌச’லை:
ப்ரணயினீ மதி4கம் ஸுக2யன்னிமாம்|
அயி முகுந்த3 ப4வச்சரிதானி ந:
ப்ரக3த3தாம் க3த3தாந்தி மபாகுரு || ( 79 – 12 )


பிறகு கடுஞ் சொற்களைக் காட்டிலும் அதிகமான லாலனம் செய்வதில் உள்ள சாமர்த்தியத்தினால் அன்பு கொண்ட அந்த ருக்மிணியை மீண்டும் சந்தோஷப் படுத்தினீர்கள். முக்தியைக் கொடுக்கும் கிருஷ்ணா! தங்கள் சரிதத்தை கானம் செய்யும் எங்களுடைய வியாதிகளால் உண்டாகும் சோர்வை அகற்ற வேண்டும்.
( 79 – 12 )
 
த3ச’கம் 80 ( 1 to 5)

ஸ்யமந்தக உபாக்யானம்

ஸத்ராஜிதஸ் த்வமத2 லுப்த3வத3ர்க லப்3த4ம்
தி3வ்யம் ஸ்யமன்தக மணிம் ப4க3வன்னயாசீ:|
தத் காரணம் ப3ஹு வித4ம் மம பா4தி நூனம்
தஸ்யத்மஜாம் த்வயி ரதாம் ச2லதோ விவோடு4ம் || ( 80 – 1)

சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த பகவானே! சத்ராஜித் என்ற யாதவனுக்கு ஸ்யமந்தகம் என்ற அபூர்வ ரத்தினம் சூரிய பகவானிடமிருந்து கிடைத்தது. தெய்வத் தன்மை வாய்ந்த அந்த ரத்தினத்தைத் தங்கள் அந்நியன் பொருள் மேல் ஆசை கொண்டவனைப் போல யாசித்தீர்கள் அல்லவா? எனக்கு அதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. தங்கள் மேல் ஆசைவைந்த அவன் பெண் சத்யபாமாவைத் திருமணம் செய்வதற்கே என்று. ( 80 – 1)

அத3த்தம் தம் துப்4யம் மணிவர மனேலாப்ய மனஸா
ப்ரஸேனஸ் தத்3 ப்4ராதா க3ல பு4வி வஹன் ப்ராப ம்ருக3யாம் |
அஹன்னேனம் ஸிம்ஹோ மணி மஹஸி மாம்ஸ ப்4ரம வசா’த்
கபீந்த்3ரஸ்தம் ஹத்வா மணி மபி ச பா3லாய த3தி3வன் || ( 80 – 2)


அல்ப புத்தி படைத்த சத்ராஜித் அந்த ரத்தினத்தைத் தங்களுக்குத் தரவில்லை. அதை அவன் தம்பி பிரசேனன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். ரத்தினத்தின் காந்தியால் அதை மாமிசம் என்று கருதிய ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது. ஜாம்பவான் அந்த சிங்கத்தைக் கொன்று விட்டு அந்த ரத்தினத்தைத் தன் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டான். ( 80 – 2 )

ச’ச’ம்ஸு ஸத்ராஜித் கி3ர மனுஜனாஸ்த்வாம் மணிஹரம்
ஜனானாம் பீயுஷம் ப4வதி கு3ணினாம் தோ3ஷ கணிகா|
ததஸ் ஸர்வக்ஞோSபி ஸ்வஜன ஸஹிதோ மார்க3ண பர:
ப்ரஸேனம் தம் த்3ருஷ்ட்வா ஹரிமபி க3தோபூ4: கபி கு3ஹாம்|| ( 80 – 3 )


சத்ராஜித்தின் சொல்லை நம்பியது மக்கள் கூட்டம். தாங்களே ரத்தினத்தைத் திருடியதாகப் பேசிக் கொண்டார்கள். நற்குணம் படைத்தவர்களின் சிறு தவறு கூட வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவுல் ஆகிறது. அதனால் தாங்கள் தங்கள் பந்துக்களுடன் சென்று ரத்தினத்தைத் தேடினீர்கள். முதலில் பிரசேனனையும் சிங்கதையும் கண்டு பின்னர் ஜாம்பவான் குஹையை அடைந்தீர்கள் அல்லவா? ( 80 – 3 )

ப4வந்த மவி தர்கயன்னதிவயா: ஸ்வயம் ஜாம்ப3வான்
முகுந்த3 ச’ரணம் ஹி மாம் க இஹா ரோத்3து4 மித்யாலபன்|
விபோ4 ரகு4பதே ஹரே ஜயஜயேத்யலம் முஷ்டிபி
ச்’சிரம் ஸ்தவ ஸமர்ச்சனம் வ்யதி4த ப4க்த சூடா3மணி:|| ( 80 – 4 )


வயது முதிர்ந்தவனும், சிறந்த பக்தனும் ஆன ஜாம்பவான்; தங்கள் இன்னார் என்று அறியாமலேயே, “விஷ்ணு பக்தன் என்னைத் தடை செய்ய யார் உண்டு?” என்று கேட்டான். “பிரபுவே! ராமா! ஸ்ரீ ஹரி! தாங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்!” என்று அடிக்கடி உரக்கக் கூறிக் கொண்டு, த்வந்த யுத்தத்தில் இடது வலது சாரியாகப் பிரதக்ஷிணம் செய்து கொண்டு கை முஷ்டிகளால் நன்கு பூஜை செய்தான் அல்லவா? ( 80 – 4 )

பு3த்3த்4வாத தேன த3த்தாம் நவ ரமணீம்
வர மணீம் ச பரிக்ருஹ்ணன்|
அனுக்3ருஹணன்னமு மாகா:
ஸபதி3 ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா3:|| ( 80 – 5)

பிறகு தங்களை இன்னார் என்று அறிந்து கொண்டு தன் பெண் ரத்தினம் ஜாம்பவதியையும், ஸ்யமந்தக ரத்தினத்தையும் தங்களுக்குச் சமர்பித்தான் அல்லவா ? அவனை அனுக்ரகம் செய்து விட்டு வந்து உடனேயே ச்யமந்தக மணியை சத்ராஜித்திடம் திரும்பத் தந்தீர்கள் அல்லவா?( 80 – 5 )
 
த3ச’கம் 80 ( 6 to 11)

ஸ்யமந்தக உபாக்யானம்

தத3னு ஸ கலு வ்ரீடா3லோலோ விலோசனாம்
து3ஹிதர மஹோ தீ4மான் பா4மாம் கி3ரைவ பரார்பிதாம்|
அதி3த மணினா துப்4யம் லப்4யம் ஸமேத்ய ப4வானபி
ப்ரமுதி3த மனாஸ் தஸ்யை வாதா3ன் மணிம் க3ஹனாச’ய:|| ( 80 – 6 )

அதன் பின்னர் வெட்கத்தால் மனம் இளகிய சத்ராஜித் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்தான். வாக்கினால் மட்டும் சதாதன்வா என்ற வேறு ஒருவனுக்கு அளிக்கப் பட்டிருந்த சலிக்கின்ற கண்களை உடைய தன் பெண் சத்யபாமையை ரத்தினதுடன் தங்களுக்கு அளித்தான். தாங்களும் அந்த ரத்தினத்திடமிருந்து கிடைக்கும் சுவர்ணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மணியை சத்ராஜித்திடமே திருப்பிக் கொடுத்து விட்டீர்கள் அல்லவா? ( 80 – 6 )

வ்ரீடா3குலம் ரமயதி த்வயி ஸத்யபா4மாம்
கௌந்தேய தா3ஹ கத2யாத2 குரூன் ப்ரயாதே|
ஹீ காந்தி3நேய க்ருத வர்ம கி3ராநிபாத்ய
ஸத்ராஜிதம் ச’ததனுர் மணி மாஜஹார || ( 80 – 7 )

வெட்கம் அடைந்த சத்யபாமையுடன் தாங்கள் ரமித்து இருக்கும்போது குந்தியின் பிள்ளைகள் தீயில் வெந்தனர் என்ற செய்தி கேட்டு உடனேயே குருதேசத்துக்குச் சென்றீர்கள். அப்போது அக்ரூரன், கிருதவர்மன் ஆகியோரின் பேச்சைக் கேட்டு சததன்வா சத்ராஜித்தைக் கொன்றுவிட்டு ரத்தினத்தை அபகரித்தான். ( 80 – 7 )

சோ’காத் குரூனுபாக3தா மவலோக்ய காந்தாம்
ஹத்வா த்3ருதம் ச’தத3னும் ஸமஹர்ஷயஸ்தாம்|
ரத்னே ஸச’ங்க இவ மைதி2ல கே3ஹமேத்ய
ராமோ க3தா3ம் ஸம சி’சி’க்ஷித தா4ர்த்தராஷ்ட்ரம்|| (80 – 8 )


தகப்பன் இறந்த வருத்தத்தால் குருதேசத்திற்கு வந்த மனைவியைக் கண்டு விரைந்து சததன்வாவைக் கொன்று அவளை சந்தோஷப்படுத்தினீர்கள் அல்லவா? பலராமன் ரத்தினத்தின் விஷயத்தில் சந்தேகம் கொண்டு மிதிலை அரசன் அரண்மனைக்குச் சென்று துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி அளித்தார். ( 80 – 8)

அக்ரூர ஏஷ ப4க3வன் ப4வதி3ச்ச2யைவ
ஸத்ராஜித குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம்|
அக்ரூரதோ மணிமனா ஹ்ருதவான் புனஸ்த்வம்
தஸ்யைவ பூ4தி முபதா4து மிதி ப்3ருவந்தி || (80 – 9)

அக்ரூரன் தங்கள் விருப்பத்தாலேயே துர்நடத்தை உடைய சத்ராஜித்தின் மரணத்தை நிகழச் செய்தார். தாங்களும் அக்ரூரனுக்கு அளிப்பதற்காகவே சத்ராஜிதனிடம் இருந்து ரத்தினத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். ( 80 – 9 )

ப4க்தாஸ் த்வயி ஸ்திரதர: ஸ ஹி கா3ந்திநேய :
தஸ்யைவ காபத2 மதி:கத2 மீச’ ஜாதா |
விஞ்ஞானவான் ப்ரச’ம வானஹ மித்யு தீ3ர்ணம்
க3ர்வம் த்4ருவம் ச’மயிதும் ப4வதா க்ருதைவ || ( 80 – 10)


ஹே ஈச! அந்த அக்ரூரன் தன்ளிடம் மிகவும் ஸ்திரமான பக்தி உடையவன் அல்லவா? அப்படிப்பட்டவனுக்கே புத்தி ஏன் தீய வழியில் சென்றது? “நான் அறிவுடையவன். நான் மன சாந்தி உடையவன்” என்னும் அவனுடைய கர்வத்தை அடக்கத் தங்களால் செய்யப்பட்டதே அது. ( 80 – 10 )

யாதம் ப4யேன க்ருத வர்மயுதம் புனஸ்தம்
ஆஹூய தத்3 விநிஹிதம் ச மணி ப்ரகாச்’ய |
தத்ரைவ ஸுவ்ரதத4ரே விநிதா4ய துஷ்யன்
பா4மா குசாந்தர ச’ய பவனேச’ பாயா: || ( 80 – 11)


ஹே! குருவாயூரப்பா! பயத்தால் கிருதவர்மனுடன் ஓடிச் சென்ற அக்ரூரனை மறுபடியும் வரவழைத்து சததன்வா அவனுக்கு ரத்தினத்தைக் கொடுத்ததாக பிரகடனப் படுத்தினீர்கள். விரத, பூஜைகளை செய்து வந்த அக்ரூரனிடத்திலேயே அதைக் கொடுத்துவிட்டீர்கள். சந்தோஷமாக சத்யபாமையின் குசங்களின் இடையே பள்ளி கொண்டிருந்த தாங்களே காப்பாற்ற வேண்டும. ( 80 – 11 )
 
த3ச’கம் 81 ( 1 to 5)

பாரிஜாத ஹரணம்

ஸ்நிக்3தா4ம் முக்3தா4ம் ஸததமபி
தாம் லாலயன் ஸத்யபா4மாம்
யாதோ பூய ;சஹ க2லு தயா
யாக்ஸேனீ விவாஹம் |
பார்த்த2 ப்ரீதியை புனரபி மனாகா3
ஸ்திதோ ஹஸ்தி புர்யாம்
ச’க்ர ப்ரஸ்த2ம் புரமபி விபோ4
ஸம்விதா4யா க3தோபூ:|| (81 – 1)


மிகவும் பிரியம் உள்ளவளும், அழகுள்ளவளும் ஆகிய சத்தியபாமையை எப்போதும் இன்புறச் செய்து கொண்டு இருந்தீர்கள். பிறகு அவளுனடனேயே திரௌபதி விவாஹத்திற்குச் சென்றீர்கள். பாண்டவர்கள் சந்தோஷத்திற்காக சில நாள் ஹஸ்த்தினாபுரத்தில் வசித்தீர்கள். இந்திரப் பிரஸ்தம் என்ற பட்டணத்தையும் உருவாக்கினீர்கள் அல்லவா? ( 81 – 1 )

ப4த்3ராம் ப4த்3ராம் ப4வத3வ ரஜாம்
கௌர வேணார்த்2ய மானாம்
த்வத் வாசா தாமஹ்ருத குஹ
நாமஸ்கரி ச’க்ர ஸூனு:|
தத்ர க்ருத்3த4ம் ப3ல மனுநயன்
ப்ரத்ய கா3ஸ்தேன ஸார்த்த4ம்
ச’க்ர ப்ரஸ்த2ம் ப்ரிய ஸக2 முதே3
ஸத்யபா4மா ஸஹாய:|| ( 81 – 2 )

மிகுந்த அழகியாகிய தங்கள் தங்கை சுபத்திரையை துரியோதனன் விரும்பினான். ஆனால் உங்கள் திருவாக்கின்படி கபட சந்நியாசி ஆகிய அர்ஜுனனன் அவளை அபகரித்தான். இந்த விஷயத்தில் மிகுந்த கோபம் கொண்டார் பலராமன். அவரை சமாதானப்படுத்தி சத்யபாமையுடன் இந்திரப்ரஸ்தம்சென்றீர்கள் அல்லவா? ( 81 – 2 )

தத்ர க்ரீட3ன்னபி ச யமுனாகூல
த்3ருஷ்டாம் க்3ருஹீத்வா
தாம் காலிந்தீம் நக3ர மக3ம:
கா2ண்ட3வ ப்ரீணி தாக்3னி:|
ப்3ராத்ருத்ராஸ்தாம் ப்ரணய விவசா’ம்
தேவ பைத்ருஷ்வ ஸேயீம்
ராக்ஞாம் மத்4யே ஸப3தி ஜஹிஷே
மித்ரவிந்தா3 மவந்தீம் || ( 81 – 3)


அப்போது இந்திரப்பிரஸ்தத்தில் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்த தாங்கள் காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள். யமுனைக் கரையில் காணப்பட்ட காலிந்தீ என்பவளைப் பெற்றுக்கொண்டீர்கள். துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த, அத்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய மித்ரவிந்தை என்பவளை, அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா? ( 81 – 3 )

ஸத்யாம் க3த்வா புனருத3வஹோ
நக்3ன ஜின்னந்தனாம் தாம்
ப3த்3த4வா ஸப்தாபி ச வ்ருஷ வரான்
ஸப்த மூர்த்திர் நிமேஷாத்|
பத்ராம் நாம ப்ரத3து3 ரத2 தே
தே3வ ஸந்தர்த3நாத்3யாஸ்
தத் ஸோத3ர்யா வரத3 பவதஸ்
ஸாபி பைத்ருஷ்வ ஸேயீ || ( 81 – 4)


ஒருநாள் அயோத்திகுச் சென்று ஏழு உருவங்களை எடுத்துக் கொண்டீர். ஏழு சிறந்த காளைகளை ஒரு நொடியில் கட்டினீர்கள். நக்னஜித் என்ற அரசன் மகளாகிய சத்தியை என்பவளை விவாஹம் செய்தீர்கள் அல்லவா? பிறகு சந்தர்த்தனன் முதலியவர்கள் பத்ரை என்னும் அவர்களின் சகோதரியைத் தங்களுக்குத் தந்தார்கள். அவளும் தங்கள் அத்தை மகளே. ( 81 – 4 )

பார்தா2த்2யை ரப்ய க்ருத லவனம்
தோய மாத்ராபி4 லக்ஷ்யம்
லக்ஷம் சி2த்வா ச’பர ம்வ்ருதா2
லக்ஷ்மணாம் மத்3ர கன்யாம்|
அஷ்டாவேவம் தவ ஸமப4வன்
வல்லபா4ஸ் தத்ர மத்4யே
சு’ச்’ரோத2 த்வம் ஸுரபதி கி3ரா
பௌ4ம து3ச்’சேஷ்டிதான் || ( 81 – 5)


அர்ஜுனன் முதலானவர்களால் கூட அறுக்கப் படாததும், நீரில் மட்டுமே பார்க்கக் கூடியதும், மீன் உருவம் கொண்ட இலக்கத்தை அறுத்து மத்ர தேசத்து அரசன் பெண் லக்ஷ்மணை என்பவளை வரித்தீர்கள். இப்படித் தங்களுக்கு எட்டுப் பத்தினிகள் அமைந்தார்கள். இதற்கிடையில், தாங்கள் நரகாசுரனுடைய தீச்செயல்களை தேவேந்திரன் கூறக் கேட்டீர்கள் அல்லவா? ( 81 – 5 )
 
த3ச’கம் 81 ( 6 to 10 )

பாரிஜாத ஹரணம்

ஸ்ம்ருத்யாம் பக்ஷி ப்ரவர
மதி4 ரூட4ஸ்த்வ மக3மோ
வஹன்னங்கே பாமா முபவன
மிவாராதி ப4வனம் |
விபி4ந்தன் து3ர்கா3ணி த்ருடித
ப்ருதனா சோ’ணி ஹதரசை:
புரம் தாவத் பராக்3 ஜ்யோதிஷ
மகுருதா2ச்’ சோ’ணித புரம் || (81 – 6 )


தாங்கள் நினைத்த மாத்திரத்தில் வந்த பக்ஷிராஜன் கருடன் முதுகின் மேல் ஏறிக்கொண்டு மடியில் சத்யபாமையை வைத்துக் கொண்டு நந்த வனத்துக்குச் செல்பவர் போல சத்ருவின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள். சென்ற உடனேயே கோட்டையை உடைத்தீர். கொல்லப்பட்ட சேனைகளின் ரத்தநீரால் பிராக்ஜோதிஷபுரம் என்ற பட்டணத்தைச் சோணிதபுரமாக மாற்றிவிட்டீர்கள் அல்லவா? ( 81 – 6 )

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி4
வன மத்4யா து3த3பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத3லித
சி’ரா மங்க்ஷு ப4வதா |
சதுர் த3ந்தைர் த3ந்தாவல பதிபி4
ரிந்தா4ன ஸமரம்
ரதா2ங்கே3ன ந சி2த்வா நரக
மகரோஸ் தீர்ண நரகம் || ( 81 – 7


ஐந்து தலைகளை உடைய முரன் என்பவன் சமுத்திர நீரின் நடுவில் இருந்து தங்களை எதிர்த்து வந்தான். விரைந்து சக்கர ஆயுதத்தால் அவன் தலைகளை அறுத்துத் தள்ளினீர்கள். நான்கு கொம்புகள் உடைய சிறந்த யானைகளுடன் மேலும் மேலும் விருத்தி அடைந்த போர் புரியும் நரகாசுரனை சக்கர ஆயுதத்தால் வெட்டி, நரகத்தைத் தாண்டி மோக்ஷம் அடைந்தவனாகச் செய்தீர்கள் அல்லவா? ( 81 – 7)

ஸ்துதோ பூ4ம்யா ராஜ்யம் ஸபதி3
ப4க3த3த்தேSஸ்ய தனயே
கஜஞ்சைகம் த3த்வா ப்ரஜிக3யித2
நாகா3ன் நிஜ புரம் |
க2லேனா பத்3தா4னாம் ஸ்வக3த
மனஸாம் ஷோட3ச’ புன:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணா மபி ச
த4னராசீ’ம் ச விபுலம் || ( 81 – 8)


பூமி தேவியால் துதிக்கப்பட்டு, உடனே நரகாசுரானின் மகனான பகதத்தனிடம் ராஜ்ஜியத்தையும், ஒரே ஒரு யானையையும் ஒப்படைத்தீர். மற்ற யானைகள், நரகாசுரனால் பந்திக்கப்பட்டுத் தங்களிடத்தில் மனம் லயித்திருந்த பதினாறாயிரம் பெண்களையும், செல்வக் குவியலையும் தங்கள் நகருக்கு அனுப்பினீர்கள் அல்லவா?
(81 – 8 )

பௌ4மாபாஹ்ருத குண்ட3லம் தத3தி3தேர்
தா3தும் ப்ரயதோ தி3வம்
ச’க்ராத்3யைர் மஹித ஸம்மதயியா
த்3யு ஸ்த்ரஷு த3த்தா ஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரூம் ருஷாSபி4 பதிதம்
ஜித்வேந்த்3ர மப்4யாக3ம:
தத்து ஸ்ரீமத3 தோ3ஷ ஈத்3ருச’ இதி
வ்யாக்2யாது மேவா க்ருதா2:|| ( 81 – 9 )


தேவமாதர் நாணும் அழகுடைய சத்யபாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்கலோகம் சென்றீர்கள். இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்! கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்துத் துவாரகைக்குத் திரும்பினீர். ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே இவ்வாறு செய்தீர்கள் அல்லவா?
( 81 – 9)

கல்ப த்3ருமம் ஸத்யபா4மா ப4வனே பு4வி
ஸ்ருஜன் த்3வ்யஷ்ட ஸாஹஸ்ர யோஷா:
ஸ்வீ க்ருத்ய ப்ரத்யகா3ரம் விஹித ப3ஹு வபு
லீலயன் கே2லி பே4தை3:|
ஆச்சர்யான் நாரத3 லோகித விவித4
க3திஸ் தத்ர தத்ராபி கே3ஹே
பூ4ப: ஸர்வாஸு குர்வன் த3ச’ த3ச’ தனயான்
பாஹி வாதாலயேசா’|| ( 81 – 10 )


கற்பக விருக்ஷத்தை சத்யபாமையின் வீட்டில் கொல்லைப் புறத்தில் நடச் செய்தீர்கள். பதினாறாயிரம் சரீரங்களை எடுத்துக் கொண்டீர்கள். பதினாராயிரம் ஸ்திரீக்களை விவாகம் செய்து கொண்டு, பல கிரீடைகள் புரிந்து கொண்டு, எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்து பிள்ளைகளை உண்டாக்கி, நாரதரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய, தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 61 – 10 )
 
த3ச’கம் 82 ( 1 to 5)

த3ச’கம் 82 : பா3ண யுத்3த4ம் ந்ருக3 மோக்ஷ: ச

பர்த்3யும்னோ ரௌக்மிணேய : ஸ க2லு தவ கலா

ச’ம்ப3ரேணாஹ்ருதாஸ்தம்
ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுர
மஹரத்3 த்3ருக்மி கன்யாம் ச த4ன்யாம்|
தத் புத்ரோSதா2னிருத்3தோ4 கு3ண நிதி4:
அவஹத்3 ரோசனாம் ருக்மி பௌத்ரீம்
தத்ரோத்3வாஹே க3தஸ்த்வம் ந்யவதி4 முஸலினா
ருக்ம்யபி த்3யூத வைராத் || (82 – 1)

தங்கள் அம்சமும், ருக்மிணியின் புதல்வனும் ஆகிய பிரத்யும்னன் சம்பாசுரனால் அபகரித்துச் செல்லப்பட்டான். பிறகு அவன் அசுரனைக் கொன்று விட்டு, ரதி தேவியுடன் தன் நகருக்குத் திரும்பி வந்தான். ருக்மியின் பெண்ணை அவன் அபகரித்தான். பின்னர் பிரத்யும்னனின் புத்திரனும் நற்குணங்களுக்கு இருப்பிடமும் ஆன அநிருத்தன் ருக்மியின் பௌத்திரியான ரோசனையை விவாஹம் செய்து கொண்டான். தாங்களும் அந்த விவாஹத்துக்குச் சென்றீர்கள். அங்கே சூதாட்டத்தில் எழுந்த விரோத்தால் ருக்மி பலராமல் கொல்லப்பட்டான்.

பா3ணஸ்ய ஸா ப3லிஸுதஸ்ய ஸஹஸ்ரபா3ஹோ:
மாஹேச்’வரஸ்ய மஹிதா து3ஹிதா கிலோஷா |
த்வத் பௌத்ரமேன மனிருத்3த4 மத்3ருஷ்ட பூர்வம்
ஸ்வப்னேSனுபூ4ய : ப4க3வன் விரஹாதுராSபூ4த் || (82 – 2)


பகவன்! மஹா பலியின் புத்திரனும், நல்ல சிவபக்தனும், ஆயிரம் கரங்கள் உடையவனும் ஆகிய பாணாசுரனின் பெண் உஷை. அவள் முன்பின் பார்த்திராத தங்கள் பௌத்திரன் அநிருத்தனை கனவில் அனுபவித்துவிட்டு, நனவில் அவன் பிரிவினால் மிகவும் வருந்தினாள் அல்லவா?

யோகி3ன்யதீவ குச’லா க2லு சித்ரலேகா
தஸ்யா: ஸகீ2 விலிக2தீ தருண்யாநசேஷான்|
தத்ராநிருத்3த4 முஷயா விதி3தம் நிசா’யாம்
ஆனேஷ்ட யோக3 ப3லதோ ப4வதோ நிகேதாத்|| (82 – 3)


யோகசித்தி பெற்றவளும், மிகுந்த சாமர்த்தியசாலியும், சித்திரம் தீட்டும் வல்லமை படைத்தவளும் ஆகிய சித்திரலேகை உஷையின் தோழி. அவள் தீட்டிய ஓவியங்களில் இருந்து உஷையால் பகுத்து அறியப்பட்ட அனிருத்தனை தன் யோக பலத்தினால் தங்கள் மாளிகையில் இருந்து அவள் இரவில் எடுத்துச் சென்று விட்டாள்

கன்யா புரே த3யிதயா ஸுக2 மாரமந்தம்
சைனம் கத2ஞ்சன ப3ப3ந்து4ஷி ச’ர்வ ப3ந்தௌ4|
ஸ்ரீ நாரதோ3க்த தது3த3ந்த து3ரந்த ரோஷை:
த்வம் தஸ்ய சோ’ணிதபுரம் யதுபி4ர் ந்யருந்தா4: || (82 – 4)


அந்தப்புரத்தில் பிராண நாயகி உஷையுடன் சுகமாக இருந்து வந்த அனிருத்தனைப் பாணாசுரன் கட்டிப் போட்டு விட்டான். நாரதர் வாயிலாக இந்த விவரங்களை அறிந்து கொண்ட தாங்கள் அளவில்லாத கோபம் கொண்டு யாதவ குல வீரர்களுடன் சென்று அந்த பாணாசுரனுடைய சோணித புரத்தைத் தாக்கினீர்கள் அல்லவா?

புரிபால : சை’லப்ரிய து3ஹித்ரு நாதோSஸ்ய ப4க3வான்
ஸமம் பூ4த வ்ராதோர் யது3ப3ல மச’ட்3கம் நிருருதே4 |
மஹாப்ராணோ பா3ணோ ஜ்ஜடிதி யுயுதா4னேன யுயுதே4
குஹ: ப்ரத்3யும்னேன த்வமபி புரஹந்த்ரா ஜக4டிஷே || (82 – 5)


அந்த பாணாசுரனுடைய நகர பாலகனும், பார்வதி தேவியின் பதியுமான பரமசிவன், தன் பூத கணங்களுடன் யாதவ சேனையைப் பயமின்றி எதிர்த்தார். பராக்கிரமசாலியான பாணாசுரன் சத்யாகியுடனும், சுப்ரமணியர் பிரத்யும்னனுடனும், திரிபுரர்களைக் கொன்ற சிவபெருமான் தங்களுடனும் போர் புரிந்தனர்.
 
த3ச’கம் 83 ( 1 to 5)

த3ச’கம் 83 : பௌண்ட்3ரக வத4: விவித3 வத4 ச

ராமேSத கோ3குலக3தே ப்ரமதா3 ப்ரஸக்தே
ஹூதானுபேத யமுனாத3மனே மதா3ந்தே4 |
ஸ்வைரம் ஸமாரமதி ஸேவக வாத3 மூடோ4
தூ3தம் ந்யயுங்க்த தவ பௌண்ட்3ரக வாஸுதே3வ: || (83 – 1)


பிறகு பலராமன் கோகுலத்துக்குச் சென்றான். கோபிகளிடம் அதிக விருப்பம் கொண்டு, கள் அருந்தி அது தந்த மதத்தில் மெய்மறந்தான். தான் அழைத்தபோதும் தன்னிடம் வராத யமுனை நதியை அடக்கித் தன்னிஷ்டம் போல கிரீடைகள் புரிந்தான். அப்போது பௌண்ட்ரக வாஸுதேவன் என்பவன் தனது சேவகர்களின் புகழ்ச்சியில் மெய்மறந்தவனாகத் தூதுவன் ஒருவனை தங்களிடம் அனுப்பினான்.

நாராயணோSஹமவதீர்ண இஹாஸ்மி பூ4மௌ
த4த்ஸே கில த்வமபி மாமாக லக்ஷணானி |
உத்ஸ்ருஜ்ய தானி ச’ரணம் வ்ரஜ மாமிதி த்வாம்
தூ3தோ ஜகா3த3 ஸகலைர்ஹஸித: ஸபா4யாம் || (83 – 2)


“சாக்ஷாத் நாராயணான நான் இந்த பூமியில் வந்து அவதரித்துள்ளேன். என்னுடைய சின்னங்களை நீயும் எப்படித் தரிக்கலாம்? அவைகளைத் துறந்து விட்டு என்னிடம் வந்து சரணமடைவாய் ” என்று சபையில் அந்தத் தூதுவன் மொழிந்தான். பிறகு எல்லோராலும் அவன் பரிஹாசம் செய்யப்பட்டான்!

தூதேSத யாதவதி யாத3வ சைனிகஸ்த்வம்
யாதோ த3த3ர்சி’த2 வபு: கில பௌண்ட்3ரகீயம் |
தாபேன வக்ஷஸி க்ருதாங்கம் அனல்ப மூல்ய
ஸ்ரீ கௌஸ்துப4ம் மகர குண்ட3ல பீத சேலம் || (83 – 3)


தூதன் திரும்பிச் சென்றதும் யாதவ சேனையுடன் தாங்கள் சென்றீர்கள். மார்வில் சூடு வைத்துச் செய்யப்பட் ட ஓர் அடையாளத்துடனும், விலையுயர்ந்த ஸ்ரீ கௌஸ்துபம், மகரகுண்டலம், மஞ்சள் நிற ஆடைகள் தரித்த அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவனைக் கண்டீர்கள் அல்லவா?

காலாயஸம் நிஜ ஸுத3ர்ச’ன மஸ்ய தோSஸ்ய
கலானலோத்கர கிரேண ஸுத3ர்ச’னேன |
சீ’ர்ஷம் சகர்தித2 சாஸ்யா சைன்யம்
தன்மித்ர காசி’ப சி’ரோபி சகர்த்த2 காச்’யாம் || (83 – 4 )


கறுத்த இரும்பினால் செய்யப்பட்ட தனது சுதர்சனத்தைப் பிரயோகித்த அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவன் மீது காலாக்கினி சுவாலையை வாரி இறைக்கும் தங்களின் சுதர்சனச் சக்கரத்தைச் செலுத்தி அவன் தலையைத் தாங்கள் அறுத்தீர்கள். அவன் சேனையையும் நாசம் செய்து விட்டு அவன் நண்பனாகிய காசி ராஜனின் தலையைக் காசியில் சென்று விழும்படிச் செய்தீர்கள் அல்லவா?

ஜாட்3யேன பா3லக கி3ராSபி கிலாஹமேவ
ஸ்ரீ வாஸுதே3வ இதி ரூட4 மதிச்’சிரம் ஸ: |
ஸாயுஜ்யமேவ ப4வதைக்ய தி3யா க3தோSபூ4த்
கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கத2 மித்யவேயாத் || (83 – 5)


மூடத் தனத்தாலும், சிறு பிள்ளைகளின் பேச்சைக் கேட்டும் “நானே வாஸுதேவன் ” என்று வெகு காலம் நம்பியிருந்த அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவன் தங்களிடம் கொண்ட ஐக்கிய புத்தியால் சாயுஜ்ய முக்தியையே அடைந்தான். யாருடைய புண்ணியத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?
 
த3ச’கம் 83 ( 6 to 10)

த3ச’கம் 83 : பௌண்ட்3ரக வத4: விவித3 வத4 ச

காசீ’ச்’வரஸ்ய தனயோSத ஸுத3க்ஷிணாக்2ய:
ச’ர்வம் ப்ரபூஜ்ய ப4வதோ விஹிதாபி4சார:|
க்ருத்யானலம் கமபி பா3ண ரணாதி பீதை :
பூதை: கத2ஞ்சன வ்ருதைஸ்ஸம மப்4யமுஞ்சத் || (83 – 6)


காசிராஜனின் புதல்வன் சுதக்ஷிணன் பரமசிவனை ஆராதித்தான். தங்களுக்கு எதிராக அபிசாரம் செய்து பாணாசுர யுத்தத்தில் அஞ்சித் தோற்ற பூத கணங்களுடன் நட்புப் பூண்டான். அந்த பூத கணங்களுடன் அந்த அபிசார அக்கினியையும் அவன் தங்களிடம் அனுப்பினான்.

தாலப்ரமாண சரணா மகி2லம் த3ஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதி2தோபி பௌரை: |
த்3யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ4 த்வம்
பார்ச்வஸ்த2 மாசு’ விஸஸர்ஜித காலசக்ரம் || (83 – 7)


ஒரு பனைமர உயரத்துக்குக் கால்களை உடையதும், எல்லாவற்றையும் எரிப்பதும் ஆன அந்த அபிசார துஷ்ட தேவதையைக் கண்டு அஞ்சிய பட்டணத்து ஜனங்கள் தங்களுக்கு அதை அறிவுறுத்தினர். சூதாடும் உற்சாகத்தில் இருந்த தாங்கள் சிறிதும் அசையாமலேயே, தங்கள் அருகில் இருந்த காலச்சக்கரத்தை அதன் மீது ஏவினீர்கள் அல்லவா?

அப்4யாபதத்யமித தா4ம்னி ப4வன் மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்3ருதவதி க2லு கோ4ர க்ருத்யா |
ரோஷாத் ஸுத3க்ஷிண மத3க்ஷிண சேஷ்டிதம் தம்
புப்லோஷ சக்ரமபி காசி’புரீ மதா4க்ஷீத் || (83 – 8)


அளவற்ற தேஜஸ் உடைய தங்களின் சக்கரம் எதிர்த்து வந்தவுடன், அந்த அபிசார துஷ்ட தேவதை “ஹா! ஹா!” என்று அலறிக் கொண்டு, விரைந்து ஓடிச் சென்று, தவறான காரியத்தைச் செய்த அந்த சுதக்ஷிணனையே எரித்து விட்டது. சுதர்சனச் சக்கரம் காசிப் பட்டணத்தை எரித்து விட்டது

ஸ க2லு விவிதோ3 ரக்ஷோகா4தே க்ருதோபக்ருதி: புரா
தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா3 க2லதாம் க3த: |
நரகஸசிவோ தே3ச’ க்லேச’ம் ஸ்ருஜன் நக3ராந்திகே
ஜ்ஜடிதி ஹலினா யுத்4யன்னத்3தா4 பபாத தலாஹத : || (83 – 9)


முற்காலத்தில் ராக்ஷஸ வதத்தின் போது உபகாரம் செய்து பிரசித்தி பெற்றான் விவிதன். பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் போது துஷ்டனாக மாறி விட்டான். நரகாசுரனுடன் சேர்ந்துகொண்டு தேசத்துக்குத் தீங்கிழைத்தான். துவாரகைக்குப் பக்கத்தில் பலராமனுடன் யுத்தம் செய்த விவிதன், அவனால் அடிக்கப்பட்டு எளிதாக வீழ்ந்து மடிந்து போனான்.

ஸாம்ப3ம் கௌரவ்ய புத்ரீஹரண நியமிதம் ஸாந்தவநார்த்தீ2 குரூணாம்
யாதஸ்தத்3வாக்ய ரோஷோத்3 த்4ருத கரிநக3ரோ மோசயாமாஸ ராம: |
தே கா4த்யா: பாண்3வேயை ரிதி யது3 ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததானீம்
தம் த்வாம் து3ர்போ3த4 லீலம் பவனபுரபதே தாப சா’ந்த்யை நிஷேவே ||
(83 – 10)


துரியோதனின் பெண்ணை அபகரித்தால் சாம்பனைக் கட்டிப் போட்டு விட்டார்கள் கௌரவர்கள். அவர்களுடன் நல்ல வார்த்தைகள் பேசுவதற்காகச் சென்றான் பலராமன். ஆனால் கௌரவர்கள் பேசிய பேச்சால் பலராமன் கோபம் அடைந்து ஹஸ்தினாபுரத்தையே மேலே கிளப்பி விடுவித்தான். கௌரவர்கள் பாண்டவர்கள் கையால் மடிய வேண்டியவர்கள் என்பதால் தாங்கள் அப்போது யாதவ சேனையை அங்கு அனுப்பவில்லை. ஹே குருவாயூரப்பா! யாராலும் இன்னதென்று கூற முடியாத லீலைகளைப் புரியும் தாங்கள் என் தாபங்களைத் தீர்க்க வேண்டும்.
 
த3ச’கம் 84 ( 1 to 6)

த3ச’கம் 84: ஸமந்தபஞ்சக யாத்ரா

க்வசித3த2 தபனோபராக3காலே
புரி நித3த4த் க்ருத வர்ம காமஸூன்|
யது3குல மஹிலாவ்ருத ஸுதீர்த்த2ம்
ஸமுபக3தோSஸி ஸமந்த பஞ்சகாக்2யம் || (84 – 1)


ஒருநாள் சூரிய கிரஹண காலத்தில் கிருதவர்மனையும், அநிருத்தனையும் துவாரகையில் காவலுக்கு வைத்து விட்டு யாதவர்களாலும் ஸ்திரீகளாலும் சூழப்பட்டவராகச் சமந்த பஞ்சகம் என்ற புண்ணிய தீர்த்தத்தை அடைந்தீர்கள்.

ப3ஹுதர ஜனதா ஹிதாய தத்ர த்வமபி
புனன் விநிமஜ்ஜ்ய தீர்த்த2தோயம் |
த்3விஜ க3ண பரிமுக்த வித்த ராசி’:
ஸமமிலதா2: குருபாண்ட3வாதி3 மித்ரை: || (84 – 2)


தாங்களும் ஜனங்களின் க்ஷேமத்திற்காக அந்தத் தீர்த்தத்தில் நீராடினீர்கள். அந்த புண்ணிய தீர்த்தம் தங்களால் மேலும் பரிசுத்தம் ஆனது. பிராமணர்களுக்கு தானம் செய்துவிட்டு, கௌரவர்கள் பாண்டவர்கள் முதலிய நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தீர்கள்.

தவ க2லு த3யிதா ஜனை: ஸமேதா
த்3ருபத3 ஸுதா த்வயி கா3ட4 ப4க்திபா4ரா |
தது3தி3த ப4வதா3ஹ்ருதி ப்ரகாரை:
அதி முமுதே3 ஸமமன்ய பா4மினீபி4 :|| (84-3)


தங்களிடம் திடமான பக்தி கொண்ட திரௌபதி, தங்கள் பிரிய பத்தினிகளிடம் அவர்களைத் தாங்கள் எங்கனம் அபகரித்து வந்தீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

தத3னு ச ப4க3வன் நிரீக்ஷ்ய கோ3பான்
அதி குதுகா து3பக3ம்ய மானயித்வா |
சிரதர விரஹா துரங்க3 ரேகா2:
பசு’ப வதூ4: ஸரஸம் த்வமன்வயாஸீ : || (84 – 4 )


பகவன்! அதன் பிறகு தாங்கள் கோபர்களைக் கண்டு, அவர்கள் அருகில் சென்று, அவர்களை வெகுமானித்தீர்கள். வெகு நாட்கள் பிரிவினால் வருந்தி இளைத்த சரீரத்தை உடைய கோப ஸ்த்ரீகளை மிகவும் சந்தோஷத்துடன் பின் தொடர்ந்து சென்றீர்கள்.

ஸபதி3 ச ப4வதீ3க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி3 தமானஹ்ருதா3ம் நிதம்பி3நீனாம் |
அதிரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசித் ஹ்ருத்3யதரே குசே ந்யலைஷீ : || (84 – 5 )


தங்களைக் கண்ட சந்தோஷத்தில் அந்தப் பெண்கள் தங்கள் அபிமானத்தைத் துறந்து விட்டனர். மகிழ்ச்சியில் அவர்களின் உடைகள் நெகிழ்ந்துவிட்டன. முன் பரிச்சயத்தால் மனோஹரமான அவர்களிடம் தாங்கள் லயித்து விட்டீர்கள்.

ரிபுஜன கலஹை: புன: புனர்மே
ஸமுபக3தை ரியதி விலம்ப3னாSபூ4த் |
இதி க்ருத பரிரம்ப4ணே த்வயி த்3ராக்
அதி விவசா’ க2லு ராதி4கா நிலீல்யே || (84 – 6 )


“அடிக்கடிப் பகைவர்களுடன் எழுந்த போர்களால் எனக்கு இவ்வளவு தாமதம் ஆகி விட்டது!” என்று கூறித் தாங்கள் ஆலிங்கனம் செய்தபோது ராதை பரவசம் அடைந்து தங்களிடம் லயித்து விட்டாள் அல்லவா?
 
த3ச’கம் 84 ( 7 to 11)

த3ச’கம் 84: ஸமந்தபஞ்சக யாத்ரா

அபக3த விரஹ வ்யதாஸ்ததா3 தா
ரஹஸி விதா4ய த3தா3த2 தத்வ போ3த4ம் |
பரம ஸுக2 சிதா3த்மகோSஹமாத்மேதி
உத3யது வ: ஸ்புடமேவ சேதஸீதி || (84 – 7)


அப்போது அந்தப் பெண்களுக்கு ஏகாந்தத்தில் தங்களின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் நீங்கும்படிச் செய்தீர்கள். “நான் பரமானந்தா ரூபியும் ஞான ரூபியும் ஆகிய பரமாத்மா!” என்பது அவர்களுக்கு நன்கு விளங்கும்படித் தத்துவ ஞானத்தைத் தந்தீர்கள் அல்லவா?

ஸுக2ரஸ பரிமிச்’ரிதோ வியோக3
கிமபி புராSப4வ து3த்4த3 வோபதே3சே’:
ஸமப4வ த3முத: பரந்து தாஸாம்
பரம ஸுகை2க்ய மயீ ப4வத் விசிந்தா || (84 – 8 )


முன்பே உத்தவருடைய உபதேசங்களால் தங்களைப் பிரிந்த வருத்தம் அவர்களிடம் கொஞ்சம் ஆனந்தம் கலந்ததாக மாறியிருந்தது . தங்களின் இந்த உபதேசத்துக்குப் பின்பு அவர்களுக்குத் தங்களின் நினைவே பரமானந்தம் ஆனது.

முனிவர நிவஹைஸ் தவாத2 பித்ரா
து3ரித ச’மாய சு’பா4னி ப்ருச்2ய மானை: |
த்வயி ஸதி கிமித3ம் சு’பா4ந்தரை
ரித்யுரு ஹஸிதை ரபி யாஜிதஸ் ததா3Sசௌ|| (84 – 9 )


தங்கள் தந்தை வஸுதேவர் முனிவர்களிடம் பாவ பரிஹாரங்களுக்குப் பிராயச்சித்தங்களைக் கேட்டார். தாங்கள் அவர் புத்திரனாக அருகில் இருக்கும் போது பிராயச்சித்தம் செய்வதற்குச் சத்கர்மங்களின் அவசியமென்ன என்று அவர்கள் கேட்க; எல்லோரும் நகைத்தார்கள் என்றாலும் வஸுதேவர் யாகம் செய்தார்.

ஸமஹதி யஜனே விதாயமானே
ப்ரமுதித மித்ரஜானே ஸஹைவ கோ3பா: |
யது3ஜன மஹிதாஸ்த்ரிமாஸ மாத்ரம்
ப4வ த3னுஷங்க3 ரஸம் புரேவ பே4ஜு: || (84 – 10)


பெரும் யாகம் நடந்தது. கோபாலர்கள் யாதவர்களால் நன்கு வெகுமானிக்கப் பட்டன்ர். மூன்று மாதங்கள் தங்கள் அருகாமையையும் அது தந்த சுகத்தையும் தங்களின் நண்பர்கள் அடைந்தார்கள் அல்லவா?

வ்யபக3ம ஸமயே ஸமேத்ய ராதா4ம்
த்3ருட4 முபகூ3ஹ்ய நிரீக்ஷ்ய வீத கே2தா3ம் |
ப்ரமுதி3த ஹ்ருத3ய புரம் ப்ரயாத:
பவன புரேச்’வர பாஹிமாம் க3தே3ப்4ய : || (84 – 11)


ஹே குருவாயூரப்பா! திரும்பிச் செல்லும் போது ராதையை ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள். வருத்தம் நீங்கியவளாக அவளைக் கண்டதும் சந்தோஷத்துடன் துவாரகை சென்றீர்கள். தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
 
த3ச’கம் 85 ( 1 to 5)

த3ச’கம் 85 : ஜராஸந்த4 வத4: சி’சு’பால வத4: ச

ததோ மக3க4 பூ4ப்4ருதா சிரநிரோத4 ஸங்க்லேசி’தம்
ச’தாஷ்டக யுதா யுத த்3விதய மீச’ பூ4ப்4ருதாம் |
அனாத2 ச’ரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோத்3
அயாசத ஸ மாக3த4 க்ஷபணமேவ கிம் பூ4யஸா || ( 85 – 1)


ஹே சர்வேசா! மகத தேசத்து அரசனால் சிறையில் வெகுகாலம் அடைக்கப் பட்டிருந்த 20, 800 அரசர்கள் வருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களிடம் ஒரு புருஷனைத் தூதாக அனுப்பினார்கள். அவன் தங்களிடம் வேண்டிக் கொண்டது மகத தேச அரசனின் வதம் ஒன்றையே.

யியாஸு ரபி4 மாக3த4ம் தத3னு நாரதோ3 தீ3ரிதாத்3
யுதி4ஷ்டிர மகோ2த்3யமா து3ப4யகார்ய பர்யாகுல : |
விருத்3த4 ஜயினோSத்4வரா து3ப4ய ஸித்3தி4 ரித்யுத்3த4வே
ச’ச’ம்ஸுஷி நிஜைஸ்ஸமம் புர மியேத2 யௌதி4ஷ்டி2ரீம் || ( 85 – 2)


உடனே ஜராசந்தனை நோக்கிச் செல்ல விரும்பினீர்கள். நாரதன் வந்து தர்மபுத்திரன் செய்யவிருந்த யாகத்தைப் பற்றிக் கூறினான் . ஒரே சமயத்தில் இரண்டு காரியங்கள் வந்து சேர்ந்ததால் சற்றுக் கலக்கம் அடைந்தீர்கள். விரோதிகளை வென்று செய்ய வேண்டிய யாகத்தில் இரண்டு காரியங்களும் கைக் கூடும் என்று உத்தவர் உரைத்தவுடன் தாங்கள் பந்துக்களுடன் இந்திரப் பிரஸ்தம் சென்றீர்கள்.

அசே’ஷ த3யிதாயுதே த்வயி ஸமாக3தே த4ர்மஜா
விஜித்ய ஸஹஜைர் மஹீம் ப4வ த3பாங்க3 ஸம்வர்த்தி4தை: |
ச்’ரியம் நிருபமாம் வஹன்னஹஹ ப4க்த தா3ஸாயிதம்
ப4வந்த மயி மாக3தே4 ப்ரஹிதவான் ஸபீ4மர்ஜுனம் || ( 85 – 3)

ஹே ஈசா! எல்லாப் பத்தினிகளுடனும் தங்கள் இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த போது உங்கள் கடாக்ஷத்தால் விருத்தி செய்யப்பட்ட , தன் தம்பிகளால் ஜெயிக்கப்பட்ட பூமியையும் செல்வத்தையும் அடைந்திருந்தான் தர்மபுத்திரன். பக்தர்களின் தாசனாகிய தங்களை அவன் பீம, அர்ஜுனர்களுடன் ஜராசந்தனிடம் அனுப்பினான். என்ன ஆச்சரியம்!

கி3ரிவ்ரஜபுரம் க3தாஸ் தத3னு தே3வ யூயம் த்ரயோ
யயா ச ஸமரோத்ஸவம் த்3விஜமிஷேண தம் மாக3த4ம் |
அபூர்ண ஸுக்ருதம் த்வ மமும் பவனஜேன ஸங்க்3ராமயன்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுனா த்வமபி ராஜயுத்4வா ஸ்தித: || ( 85 – 4 )


அதன் பிறகு தாங்கள் மூவரும் பிராமணர்கள் என்ற வியாஜத்துடன் கிரிவ்ரஜம் என்ற அவன் நகரை அடைந்தீர்கள். ஜராசந்தனிடம் யுத்த உற்சவத்தை யாசித்தீர்கள். புண்ணியம் பூர்த்தியாகாத அவனைப் பீமனுடன் போர் செய்வித்தீர்கள். அர்ஜுனனுடன் அரசர்களை யுத்தம் செய்வித்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?

அசா’ந்த ஸமரோத்3த4தம் விடப பாடன ஸம்க்ஞயா
நிபாத்ய ஜரஸஸ்ஸுதம் பவனஜேன நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீன் முதா ஸமனுக்3ருஹ்ய ப4க்திம் பராம்
தி3தே3சி’த2 க3தஸ்ப்ருஹானபி ச த4ர்ம கு3ப்த்யை பு4வ: || ( 85 – 5)


முடிவே இல்லாத அந்தப் போரில் மிகவும் துணிவுற்ற ஜராசந்தனை கொல்லும் உபாயத்தை ஒரு மரக் கொம்பை உடைத்துப் பீமனுக்கு உணர்த்தினீர்கள். பீமன் போல ஜராசந்தனை இரண்டாகப் பிளந்து கீழே தள்ளினான். சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுதலை செய்தீர்கள். அவர்களுக்குச் சிறந்த பக்தியைத் தந்தீர்கள். அவர்கள் ஒன்றிலும் பற்று இல்லாமல் போதிலும் பூமியைத் தர்மத்துடன் ஆளுவதற்குக் கற்றுக் கொடுத்தீர்கள் அல்லவா?
 
த3ச’கம் 85 ( 6 to 11)

த3ச’கம் 85 : ஜராஸந்த4 வத4: சி’சு’பால வத4: ச

ப்ரசக்ருஷி யுதி4ஷ்டி2ரே தத3னு ராஜஸூயாத்4வரம்
ப்ரஸன்ன ப்ருதகீ ப4வத்ஸகல ராஜ கவ்யா குலம்|
த்வமப்யயி ஜகத்பதே த்3விஜ பதா3வஜாதி3கம்
சகர்த2 கிமு கத்யதே ந்ருப வரஸ்ய பா4க்3யோன்னதி: || ( 85 – 6 )


தர்ம புத்திரன் மகிழ்சி அடைந்தவர்களும், அவனுக்கு வசப்பட்டவர்களும், ஆகிய அரசர்கள் நிறைந்த சபையில் ராஜ சூய யாகத்தை அனுஷ்டித்தான் . தாங்களும் பிராமணர்களின் கால்களை அலம்புவது போன்ற சேவைகளைச் செய்தீர்கள் அல்லவா ?அந்த அரசர் அரசனின் பெருமையை என்னவென்று சொல்வேன்?

தத: ஸவன கர்மணி ப்ரவர மக்3ரய பூஜா விதி4ம்
விசார்யா ஸஹதே3வ வாக3னுக3த: ஸத4ர்மாத்மஜ: |
வ்யத4த்த ப4வதோ முதா3 மத3ஸி விச்’வ பூ4தாத்மனே
ததா ஸஸுர மானுஷம் பு4வன மேவ த்ருப்திம் த3தௌ4 || ( 85 – 7 )

யாகம் செய்யும் போது சர்வோத்தமனான ஒருவருக்குச் செய்ய வேண்டிய பூஜை விதிகளை ஆலோசித்தனர். சஹாதேவன் கோரியபடி சமஸ்த பிராணிகளின் ஆத்மாவாகிய தங்களுக்குத் தர்மபுத்திரர் அதைச் செய்தார். அதனால் தேவர்கள், மனிதர்களுடன் உலகம் முழுவதுமே திருப்தி அடைத்தது அல்லவா?

ததஸ்ஸபதி3 சேதி3போ முனி ந்ருபேஷு திஷ்ட2த்ஸ்வஹோ
ஸபா4 ஜயதி கோ ஜட3: பசு’பது3ர்து3ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து3ர்வசோ விததி முத்3வமன்னாஸநாத்3
உதா3பத த3தா3யூத4: ஸமபதன்னமும் பாண்ட3வா:|| ( 85 – 8)


அப்போது சிசுபாலன், “முனிவர்களும், அரசர்களும் இருக்கும் போது இடையர்களால் இகழப்படும் ஒரு வாலிபனை ஒரு முட்டாள் பூஜிக்கின்றான்!” என்று கொடிய சொற்களைக் கூறிக் கொண்டு, தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். அவனைப் பாண்டவர்கள் எதிர்த்தனர்.

நிவார்ய நிஜ பக்ஷகா3 னபி4முக2ஸ்ய வித்3வேஷிண:
ஸ்தவமேவ ஜஹ்ருஷே சி’ரோ த3னுஜ தா3ரிணா ஸ்வாரிணா |
ஜனுஸ்த்ரிதய லப்3த4யா ஸதத சிந்தயா சு’த்3த4 தீ4:
ஸ்த்வயா பரமேகதா மத்4ருத யோகி3னாம் து3ர்லபா4ம் || ( 85 – 9 )


தங்களைச் சேர்ந்தவர்களைத் தடுத்து நிறுத்தினீர்கள். அசுரர்களை அழிக்கும் சக்கராயுதத்தினால் தங்களை எதிர்த்து வந்த பகைவனின் தலையைத் துண்டித்தீர்கள். மூன்று ஜன்மங்களில் இடைவிடாது தங்களைச் சிந்தித்ததால் மனம் பரிசுத்தமாகிய சிசுபாலன், யோகிகளும் பெறுவதற்கரிய பரம ஐக்கியத்தை அடைந்தான் அல்லவா?

ததஸ்ஸமஹிதே த்வயா க்ரது வரே நிரூடே4 ஜனே
யயௌ ஜயதி த4ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபன் |
க2ல : ஸ து ஸுயோத4னோ து4தமனாஸ் ஸபத்ன ச்’ரியா
மயார்பித ஸபா4முகே2 ஸ்த2ல ஜல ப்4ரமா தப்4ரவீத் || (85 – 10)


ராஜசூய யாகம் சிறப்பாக முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள், “தர்மபுத்திரன் மேன்மை பெற்று விளங்குகின்றான். ஸ்ரீ கிருஷ்ணன் மேன்மை பெற்று விளங்குகிறான்” என்று கூறியபடித் திரும்பிச் சென்றனர். துஷ்டனான துரியோதனன் மட்டும் தன் பகைவர்களாகிய பாண்டவர்களின் சிறப்பைக் கண்டு மனம் கலங்கினான். அவன் மயன் அமைத்த சபா மண்டபத்தில் நிலத்தை ஜலம் என்றும் ஜலத்தை நிலம் என்றும் என்று எண்ணிப் பிரமித்துத் தத்தளித்தான்.

ததா3 ஹஸித முத்தி2தம் த்3ருபத3 நந்த3னா பீ4மயோ:
அபாங்க3லயா விபோ4 கிமபி தாவ து3ஜ்ஜ்ரும்ப4யன் |
த4ரா ப4ர நிராக்ருதௌ ஸபதி3 நாம பீ3ஜம் வபன்
ஜனார்த3ன மருத்புரீநிலய பாஹி மாம் ஆமயாத் || ( 85 – 11)


துஷ்டர்களைச் சம்ஹாரிக்கும் பிரபுவே! அப்போது திரௌபதிக்கும் பீமனுக்கும் உண்டான சிரிப்பைத் தங்கள் கடைக் கண் பார்வையால் மேலும் வளரச் செய்து பூ பாரத்தைக் குறைக்க விதை விதைத்த குருவாயூரப்பா! என்னை வியாதிகளிலிருந்து காப்பாற்றுவீர்!
 
த3ச’கம் 86 (1 to 4)

ஸால்வோ பை4ஷ்மீ விவாஹே
யது3குல விஜிதச்’சந்த்3ர சூடா3த்3 விமானம் |
விந்த3ன் சௌ’ப4ம் ஸமாயீ த்வயி வஸதி குரும்
ஸ்த்வத்புரீ மப்4ய பா4ங்க்ஷீத் |
ப்ரத்3யும்னஸ்த்வம் நிருந்த4ன் நிகி2ல யது3 ப4டைர்
ந்யக்3ரஹீ து3க்3ர வீர்யம்
தஸ்யாமாத்யம் த்3யுமந்தம் வ்யஜனி ச ஸமரஸ்
ஸப்த விம்ச’த்யஹாந்தம் || (86 – 1)


ருக்மிணியின் விவாஹத்தின் போது சால்வ ராஜன் யாதவ சேனையால் தோற்கடிக்கப்பட்டான். பிற்பாடு அவன் பரமேஸ்வரனிடம் சௌபம் என்ற விமானத்தைப் பெற்றுக் கொண்டான். தாங்கள் குரு தேசத்தில் இருக்கும் போது மாயாவியாகிய சால்வன், தங்கள் துவாரகை நகரைச் சேதப்படுத்தினான். பிரத்யும்னன் யாதவ சேனைகளின் உதவியோடு அவனைத் தடுத்து நிறுத்தினான். சால்வனின் கொடிய மந்திரி த்யுமான் என்பவனைக் கொன்றான். இந்தப் போர் இருபத்தேழு நாட்களுக்கு நீடித்தது.

தாவத்தம் ராமசா’லீ த்வரித முபக3த:
க2ண்டி3த ப்ராயசைன்யம்
சௌ4பேச’ம் தம் ந்யருந்தா4: ஸ ச கில
க3த3யா சா’ர்ங்க3 மம்ப்4ர ச’யதே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீ த3பி தவ புரதஸ்த
த்வயாSபி க்ஷணார்த்த4ம்
நாக்ஞாயீத்யாஹு ரேகே ததி3த3 மவமதம்
வ்யாஸ ஏவ ந்யஷேதீ4த் || (86 – 2)


தாங்களும், பலராமனும் விரைந்து வந்தீர்கள். முற்றிலும் அவன் சேனைகளை முறியடித்துச் சால்வனைத் தடுத்து நிறுத்தினீர்கள். அவன் தன் கதையால் தங்களின் சார்ங்கம் என்னும் வில்லை நழுவச் செய்தான். மாயையால் உண்டாக்கப்பட்ட தங்கள் தந்தையை தங்களின் முன்னிலையில் கொன்றான். அரைக் கணத்துக்குத் தாங்களே அந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை என்று சிலர் சொன்னாலும் அந்தக் கருத்தை வியாச முனிவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

க்ஷிப்த்வா சௌபம் க3தா3 சூர்ணிதம்
உத3க நிதௌ4 மங்க்ஷு ஸால்வேSபி சக்ரேண
உத்க்ருதே த3ந்தவக்த்ர : ப்ரஸப4 மபி4பதன்னப்ய
முஞ்சத்3க3தா3ம் தே |
கௌமோத3க்யா ஹதேSஸாவபி ஸுக்ருத நிதி4ச்
சைத்3யவத்ப்ராப தை3க்யம்
ஸர்வேஷா மேவ பூர்வம் த்வயி த்4ருத மனஸாம்
மோக்ஷணார்த்தோ2Sதார: || (86 – 3)


சௌபம் என்ற விமானம் கதையால் உடைக்கபட்டு கடலில் எறியப் பட்டது. சால்வனும் தங்களின் சக்கராயுதத்துக்கு பலியானான். அப்போது தந்தவக்திரன் விரைந்து வந்து தங்கள் மேல் தன் கதாயுதத்தை விட்டெறிந்தான். புண்ணியங்களின் பொக்கிஷமாகிய அவனும் கௌமோதகி என்னும் தங்கள் கதாயுதத்தினால் கொல்லப்பட்டான். சிசுபாலனைப் போலவே அவனும் சாயுஜ்ய முக்தியை அடைந்தான். முன்பே தங்களிடம் மனதைச் செலுத்தியவர்கள் எல்லோருக்கும் தங்களின் இந்தத் திரு அவதாரம் மோக்ஷத்தைத் தந்தது அல்லவா

த்வய்யா யாதேSத2 ஜாதே கில
குருஸத3ஸி த்3யூதகே ஸம்யதாயா:
க்ரந்தந்த்யா யாக்ஞஸேன்யாஸ் ஸகருணாம்
அக்ருதா2ச்’ சேலமாலாம் அனந்தாம் |
அன்னாந்த ப்ராப்த ச’ர்வாம்ச’ஜ முனி சகித
த்3ரௌபதீ3 சிந்திதோS த
ப்ராப்தச்’சா’கான்ன மச்’ணன் முனிகண மக்ருதா2
ஸ்த்ருப்தி மந்தம் வனாந்தே || (86 – 4 )


தாங்கள் துவாரகைக்குத் திரும்பிச் சென்ற பிறகு, கௌரவ சபையில் நடந்த சூதாட்டத்தில் பாண்டவர்களால் திரௌபதி அடகு வைக்கபட்டாள். சூதாட்டத்தில் அவளைத் தோற்று விட்டனர். அவளைக் கௌரவர்கள் ராஜ சபையில் மானபங்கம் செய்ய முயன்றபோது திரௌபதி கதறி அழுதாள். அவளுக்கு மிகுந்த கருணையுடன் முடிவில்லாத வஸ்த்திரத்தை அளித்தீர்கள் அல்லவா? பிறகு வனத்தில் பாண்டவர்கள் வசித்து வந்தபோது அவர்கள் உணவு உண்ட பிறகு பரமேஸ்வரனின் அம்சமான துர்வாசர் தன் கூட்டத்துடன் அங்கு உணவுக்கு வந்து சேர்ந்தார். முனிவரின் சாபத்துக்கு அஞ்சிய திரௌபதி தங்கை தியானித்தாள். தாங்கள் உடனே அங்கே வந்து, அவள் அக்ஷய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சிறு கீரையை உண்டு அதன் மூலம் துர்வாசரையும் மற்றவர்களையும் வயிறார உண்டது போலத் திருப்தி அடையச் செய்தீர்கள் அல்லவா?
 
த3ச’கம் 86 ( 5 to 8)

யுத்3தோ4த்3யோகே3த2 மந்த்ரே
மிலதி ஸதி வ்ருத: ப2ல்கு3னேன த்வமேக:
கௌரவ்யே த3த்த சைன்ய: கரிபுர மக3மோ
தௌ3த்யக்ருத் பாண்டவார்த்த2ம் |
பீஷ்மத்3ரோணாதி3 மான்யே தவ கலு வசனே
தி4க்ருதே கௌரவேண
வ்யாவருண்வன் விச்’வரூபம் முனிஸத3ஸி புரீம்
சோ’ப4யித்வாSS க3தோபூ4: || (86 – 5)

பிறகு போருக்கு வேண்டிய பிரயத்தனமும் , அதற்கான மந்திராலோசனையும் நடை பெற்றன. அர்ஜுனன் தாங்கள் ஒருவரையே துணையாக வேண்டினான். துரியோதனன் மொத்த யாதவ சேனையின் உதவியைப் பெற்றான். பிறகு பாண்டவர்களின் தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். பீஷ்மர் துரோணர் போன்றவர்களால் வெகுமானிக்கபடும் தங்கள் வாக்கு, துரியோதனனால் நிராகரிக்கப் பட்டது. அங்கே சபையில் விச்வரூபத்தை எடுத்துக் கொண்டு பட்டணத்தைக் கதி கலங்கச் செய்து விட்டுத் திரும்பி வந்தீர்கள் அல்லவா?

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத:
க2லு ஸமர முகே2 ப3ந்து4 கா4தே த3யாலும்
கி2ன்னம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித3 மயி ஸகே2
நித்ய ஏகோSயமாத்மா |
கோவத்4ய: கோSத்ரஹந்தா ததி3ஹவத4பி4யம்
ப்ரோஜ்ய மய்யர்பிதாத்மா
த4ர்ம்யம் யுத்3த4ம் சரேதி ப்ரக்ருதி மனயதா2
த3ர்ச’யன் விச்’வரூபம் || (86 – 6 )


ஹே கிருஷ்ணா ! தாங்கள் அர்ஜுனனுக்குச் சாரதி ஆனீர்கள். யூத்த ஆரம்பத்தில் யுத்த களத்தில் வீரனான அர்ஜுனம் மனம் கலங்கினான். தன் மித்ர பந்துக்ககளைக் கொல்ல விரும்பவில்லை. அதனால் அவன் கருணையினாலும் மன வருத்தினாலும் குழம்பினான். அப்போது தாங்கள் ” ஓ நண்பனே! இது என்ன புதுக் குழப்பம்? ஆத்மா என்பவன் நித்தியமானவன்! அழிவில்லாதவன்! இந்த உலகில் கொல்பவன் யார்? கொல்லப்படுபவன் யார்? இப்போது எழுந்துள்ள பயத்தை விட்டு விட்டு என்னிடம் உன் மனதைச் செலுத்துவாய். தர்ம நெறி தவறாத யுத்தத்தைப் புரிவாய்” என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினீர்கள் . விச்வ ரூபத்தைக் காட்டி அவன் தன் இயல்பை அடையச் செய்தீர்கள் அல்லவா?

ப4க்த்தோத்தம்ஸேSத பீ4ஷ்மே
தவ த4ரணி பரக்ஷேப க்ருத்யைக ஸக்தே
நித்யம் நித்யம் விபி4ன்த3தி அயுத ஸமாதி4க2ம்
ப்ராப்த ஸாதோ3 ச பார்த்தே2|
நிச்’சஸ்த்ர தவ ப்ரதிக்ஞாம் விஜ ஹத3ரிவரம்
தா4ராயன் க்ரோத4 சா’லீவ
ஆதா4வன் ப்ராஞ்ஜலிம் தம் நத சி’ரஸா மதோ2
வீக்ஷ்ய மோதா3த3 பாகா3 : || (86- 7)


பக்த சிரோன்மணியாகிய பீஷ்மர், தாங்கள் செய்ய விரும்பியபடியே பூ பாரத்தை ஒடுக்கலானார். ஒவ்வொரு நாளும் பதினாயிரத்துக்கும் அதிகமான வீர்களைக் கொன்று குவித்தார். அதைக் கண்ட அர்ஜுனன் மனம் சோர்ந்து விட்டான். போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று தாங்கள் செய்திருந்த பிரதிக்ஞையை உதறித் தள்ளினீர்கள், கோபத்துடன் சக்ராயுதத்தை எடுத்துக்கொண்டு பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள்! தலையைக் குனித்து அஞ்சலி செய்து கொண்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்று விட்டீர்கள் அல்லவா?

யுத்3தே4 த்3ரோணஸ்ய ஹஸ்தி ஸ்தி2ரரண
ப4க3த3த்தே ரிதம் வைஷ்ண வாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத4த்த சக்ரஸ்தகீ3த ரவி மஹா:
ப்ரார்த3யத் ஸிந்து4 ராஜம் |
நாகாஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதி மவ நமயன்
கேவலம் க்ருத்த மௌலிம்
தத்ரே தத்ராபி பார்த்த2ம் கிமிவ நஹி ப4வான்
பாண்ட3வானாமகார்ஷீத் || (86 – 8)


துரோண யுத்தத்தில் யானை மேல் திடமாக இருந்து கொண்டு போர் புரிந்தான் நரகாசுரனின் மகன் பகதத்தன். அவன் விடுத்த நாராயண அஸ்திரத்தைத் தாங்கள் மார்பினில் தாங்கினீர்கள். சக்கராயுதத்தால் சூரியனை மறைத்து விட்டு ஜெயத்ரதனைக் கொன்றீர்கள். கர்ணன் நாகாஸ்திரத்தை விடுத்தபோது பூமியைக் கட்டை விரலால் தாழ்த்தினீர்கள். அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அஸ்திரம் நீக்கியது. அர்ஜுனனின் உயிர் காக்கப்பட்டது. பாண்டவர்களுக்காகத் தாங்கள் என்ன தான் செய்யவில்லை?
 
த3ச’கம் 86 ( 9 to 11)

யுத்3தா4தௌ3 தீர்த்த2 கா3மீ
ஸ க2லு ஹலத4ரோ நைமிச’ க்ஷேத்ர மிச்சன்
அப்ரதயுத்தா2யி ஸூதக்ஷய க்ருத3த2 ஸுதம்
தத்பதே3 கல்பயித்வா |
யக்ஞாக்4னம் வல்வலம் பர்வணி பரித3லயன்
ஸ்நாத தீர்த்தோ2 ராணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ4ம து3ர்யோத4ன ரணம்
அச’மம் வீக்ஷ்ய யாத: புரீ தே || (86 – 9)


மகா பாரத யுத்தத்தின் ஆரம்பத்திலேயே பலராமன் தீர்த்த யாத்திரை சென்று விட்டான். நைமிசாரண்யத்துக்கு பலராமன் சென்ற போது சூத பௌராணிகர் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து அவனுக்கு மரியாதை செய்யவில்லை. கோபம் அடைந்த பலராமன் அவரைக் கொன்றுவிட்டு அவருடைய பிள்ளையை அவர் இடத்திற்கு நியமித்தான். பர்வ காலங்களில் யாகங்களைக் கெடுத்து வந்த பல்வலன் என்ற அசுரனைக் கொன்றான். தீர்த்த ஸ்நானத்தை முடித்துக் கொண்டு யுத்த முடிவில் திரும்பி வந்தான். பீமன், துரியோதனன் இவர்கள் இடையே நடந்த கதாயுத யுத்தம் முடிவடையாததைக் கண்டு தங்கள் நகரமாகியத் துவாரகைக்குத் திரும்பிச் சென்றான்.

ஸம்ஸுப்த த்3ரௌபதே3ய க்ஷபண ஹததி4யம்
த்3ரௌணி மேத்ய த்வது3க்தயா
தன்முக்தம் ப்3ராஹ்ம மஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜயோ மௌலிரத்னம் ச ஜஹ்ரே |
உச்சித்யை பாண்டவானாம் புனரபி ச விச’த்
யுத்தரா கர்ப்ப4 மஸ்த்ரே
ரக்ஷன்னங்கு3ஷ்ட2 மாத்ர: கில ஜட2ர மகா3ச்’
சக்ரபாணி விபோ4 த்வம் || (86 – 10)


தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் பிள்ளைகளைப் புத்தி கெட்ட அஸ்வத்தாமன் கொன்று விட்டான். அவன் விடுத்த பிரம்மாஸ்திரத்தைத் தங்கள் கட்டளைப் படி அர்ஜுனன் உப சம்ஹாரம் செய்துவிட்டான். அஸ்வத்தாமன் தலையில் இருக்கும் மணியையும் அகற்றிவிட்டான். பாண்டவர்களின் குலத்தையே நாசம் செய்வதற்காக அஸ்வத்தாமன் விடுத்த அஸ்த்திரம் உத்தரையின் கர்ப்பதில் புகுந்து விட்டது. அப்போது தாங்கள் கட்டைவிரல் அளவு சரீரம் உடையவராகக் கையில் சுதர்சனத்துடன் உத்தரையின் கர்ப்பத்தில் புகுந்து சிசுவைக் காப்பாற்றினீர்கள் அல்லவா?

த4ர்மௌக4ம் த4ர்மஸூனோ: அபி4த3த4த்3
அகி2லம் ச2ந்த ம்ருத்யுஸ் ஸ பீ4ஷ்ம:
த்வாம் பச்’யன் ப4க்தி பூ4ம்னைவ ஹி ஸபதி3
யயௌ நிஷ்கல ப்3ரஹ்ம பூ4யம் |
ஸம்யாஜ்யாதாச்’வ மேதை4ஸ்த்ரிபி4:அதி மஹிதைர்
த4ர்மஜம் பூர்ண காமம்
ஸம்ப்ராப்தோ த்3வாரகாம் த்வம் பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வ ரோ3கா4த் || (86 – 11)


தான் விரும்பிய போது மரணம் அடையும் வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர். அவர் தர்ம புத்திரனுக்குத் தர்மங்களை எல்லாம் உபதேசம் செய்தார். தங்களையும் நேரில் தரிசனம் செய்து தன் பக்தியின் மேன்மையால் நிர்குண பிரம்ம பாவத்தை அடைந்தார். பிறகு தன் அபீஷ்டங்கள் அனைத்தும் நிறைவேறிய தர்ம புத்திரனுக்காக மூன்று அச்வ மேத யாகங்களைச் செய்விதீர்கள் ஹே குருவாயூரப்பா! அப்படிப் பட்ட தாங்கள் என்னை எல்லா வியாதிகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.
 
த3ச’கம் 87 ( 1 to 5)

குசேல வ்ருத்தாந்தம்

குசேல நாம ப4வத: ஸதீர்த்2யாதாம்
கத : ஸ ஸாந்தீ3பனி மந்தி3ரே த்3விஜ:|
த்வதே3க ராகே3ண த4னாதி3 நிஸ்ப்ருஹோ
தி3னாதி3 நின்யே ப்ரச’மி க்3ருஹாச்’ரமீ || ( 87 – 1 )


சாந்தீபனி முனியின் ஆசிரமத்தில் தங்களுடன் கல்வி கற்றவரும், சாந்த ஸ்வபாவம் உடையவரும், கிருஹச்தரும் ஆன குசேலன் என்னும் பெயருடைய பிராமணன், தங்களிடம் கொண்ட பக்தியால் பணம் முதலியவற்றில் பற்று இல்லாமல் நாட்களைக் கழித்து வந்தார். ( 87 – 1 )

ஸமான சீ’லாSபி ததீ3ய வல்லபா4
ததை2வ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ |
கதா3சிதூ3சே ப3த வ்ருத்தி லப்த4யே
ரமாபதி: கின்ன ஸகா2 நிஷேவ்யதே || ( 87- 2 )


குசேலனுக்குச சமமான சீலம் பெற்றவள் ஆயினும், அவர் மனைவி அவரைப் போல மனத் தூய்மை பெற்று இருக்கவில்லை. “செல்வம் கிடைக்கத் தங்கள் தோழனும், லக்ஷ்மியின் கணவனும் ஆன கிருஷ்ணனை ஏன் சேவிக்கக் கூடாது?” என்று அவனிடம் கேட்டாள். ( 87 – 2 )

இதீரிதோSயம் ப்ரியயா க்ஷுதா4ர்தயா
ஜுகு3ப் ஸமானோSபி த4னே மதா3வஹே|
ததா3 த்வதா3லோகன கௌதுகாத்3யயௌ
வஹன் படாந்தே ப்ருது2கானுபாயனம் || ( 87 – 3 )


பசியால் வருந்தும் தன் மனைவி இவ்விதம் கூறியவுடன், அந்தக் குசேலன் கர்வத்தை உண்டு பண்ணும் செல்வத்தை வெறுத்த போதிலும், தங்களைத் தரிசிக்க விரும்பினர். தங்களுக்குக் காணிக்கையாக வஸ்திரத் தலைப்பில் கொஞ்சம் அவுலை எடுத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றார். ( 87 – 3 )

க3தோSய மாச்சர்ய மயீம் ப4வத்புரீம்
க்3ருஹேஷு சை’ப்3யா ப4வனம் ஸமேயிவான் |
ப்ரவிஷ்ய வைகுண்ட2 மிவாப நிர்வ்ருதிம்
தவாதி ஸம்பா4வனயா து கிம் புன:|| ( 87 – 4)


அந்தக் குசேலன், ஆச்சரியங்கள் நிறைந்த தங்கள் நகரை அடைந்து பதினெட்டாயிரம் வீடுகளுக்கு இடையில் சை’ப்3யையின் வீட்டை அடைந்து வைகுண்டத்தையே அடைந்து விட்டவர் போல ஆனந்தம் எய்தினார். தங்களுடைய சிறந்த உபசாரமே அதற்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ? ( 87 – 4 )

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்3ருஹீத்வாSகத2ய: புராக்ருதம்|
யதிந்தனார்த2ம் கு3ருதார சோதி3தை:
அபர்து வர்ஷம் தத3மர்ஷி கானனே || (87 – 5 )


தங்களால் நன்கு பூஜிக்கப்பட்டார். தங்கள் பத்தினி விசிறி வீசினாள். குசேலனைக் கையால் பிடித்துக் கொண்டு பழங்கதைகள் பேசினீர்கள். குருபத்தினி விறகு கொண்டு வரச் சொன்னபோது காலம் அல்லாத காலத்தில் பெய்த மழையைப் பொறுத்தது எப்படி என்று. ( 87 – 5)
 
த3ச’கம் 87 ( 6 to 10)

குசேல வ்ருத்தாந்தம்

த்ரபா ஜூஷோSஸ் மாத் ப்ருது2கம் ப3லாத3தா2
ப்ரக்3ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா3சி’தே த்வயா|
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்4ரமாத்
ரமா கிலோ பேத்ய கரம் ருரோத4 தே || ( 87 – 6 )


பிறகு ஸ்ரீபதிக்கு ஒருபிடி அவல் கொடுப்பதற்கு வெட்கம் அடைந்த அந்தக் குசேலனிடம் இருந்து பலவந்தமாக அவலைப் பிடுங்கி உண்டீர்கள். ஒரு பிடி அவல் உண்ட துமே லக்ஷ்மி தேவி ஓடி வந்து “போதும் போதும் இத்தனை அனுக்ரஹம் செய்தது!” என்று தங்கள் கையைப் பற்றித் தடுத்தாள் அல்லவா? ( 87 – 6 )

ப4க்தேஷு ப4க்தேன ஸ மானிதஸ் த்வயா
புரீம் வஸன்னேக நிசா’ம் மஹாஸுக2ம் |
ப3தாபுரேத்3யூர் த்3ரவிணம் வினாயயௌ
விசித்ர ரூபஸ் தவ க2ல்வனுக்3ரஹ:|| ( 87 – 7 )


அடியவர்களுக்கு அடியவர் ஆகிய தங்களால் நன்கு உபசரிக்கப்பட்டு, குசேலர் அந்த இரவை மிகவும் சுகமாக துவாரகையில் கழித்தார். அடுத்த நாள் செல்வம் எதுவும் தங்களிடமிருந்து பெறாமலேயே திரும்பிச் சென்றார். தங்களுடைய அனுகிரஹம் விசித்திரமானது அல்லவா? ( 87 – 7 )

யதி3 ஹ்யாசிஷ்ய மதா3ஸ்யத3ச்யுதோ
வதா3மி பா4ர்யாம் கிமிதி வ்ரஜன்னசௌ |
த்வது3க்தி லீலாஸ்மித மக்3ன தீ4: புன
க்ராமாத3பச்’யன் மணி தீப்ர மாலயம் || ( 87 – 8 )


“நான் செல்வத்தை யாசித்து இருந்தால் நிச்சயமாகக் கிருஷ்ணன் தந்திருப்பான். ஆனால் நான் கேட்கவும் இல்லை! அவன் தரவும் இல்லை! பத்தினி கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்?” என்று ஆலோசித்துக் கொண்டு நடந்த அந்தக் குசேலன், உங்கள் இனிமையான வார்த்தைகளையும், மந்தஹாசத்தையும் நினைவில் கொண்டு மனம் லயித்தவனாகச் சென்றான். ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற ஒரு அழகிய கிருஹத்தைக் கண்டான். (87 – 8 )

கிம் மார்க3 விம்ப்4ரச’ இதி ப்4ரமன் க்ஷணம்
க்3ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த3த3ர்ச’ வல்லபா4ம் |
ஸகீ பரீதாம் மணிஹேம பூ4ஷிதாம்
பு3போ3த4 ச த்வத் கருணாம் மஹாத்3பு4தாம் || ( 87 – 9 )

“வழி தவறி வந்துவிட்டேனா என்ன?” என்று சிறிது நேரம் பிரமித்து நின்றான் குசேலன். பிறகு வீ ட்டுக்குள் சென்ற குசேலன் தோழிகளால் சூழப்பட்டவளும், பொன்னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டவளும் ஆகிய தன் மனைவியைக் கண்டான். தங்களின் கருணையை உணர்ந்தான்.
( 87 – 9 )

ஸ ரத்னசா’லாஸு வஸன்னபி ஸ்வயம்
ஸமுன்னமத்3 ப4க்தி ப4ரோSம்ருதம் யயௌ |
த்வமேவ மாபூரித ப4க்த வாஞ்சி2தோ
மருத்புராதீ4ச’ ஹரஸ்வ மே க3தா3ன் || ( 87 – 10)


அந்தக் குசேலன் அந்த இரத்தின மாளிகையில் வசித்த போதும், பொங்கும் பக்தி குறையாமல் வாழ்ந்து மோக்ஷத்தை அடைந்தான் ஹே குருவாயூரப்பா! இவ்விதம் பக்தர்களுடைய எல்லாக் கோரிக்கைகளை நிறைவேற்றிய தாங்கள் என்னுடைய வியாதிகளை அகற்ற வேண்டும்.
( 87 – 10 )
 
த3ச’கம் 88 ( 1 to 6)

ஸ்ரீ ஸந்தான கோ3பாலன்

ப்ராகே3வாசார்ய புத்ராஹ்ருதி நிச’மனயா
ஸ்வீய ஷட் ஸூனு வீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாது ருக்த்யா ஸுதல பு4வி
ப3லிம் ப்ராப்ய தேனார்சிதஸ்த்வம்|
தா4துச்’சா’பாத்3 தி4ரண்யான்வித கசி’பு
ப4வான் சௌ’ரிஜான் கம்ஸ ப4க்3னான்
ஆநீயையான் ப்ரத3ர்ஷ்ய ஸ்வபத3
மனயதா2: பூர்வ புத்ரான் மரீசே: || ( 88 – 1 )


குரு புத்திரனை அழைத்து வந்ததைக் கேட்டதால், வெகு நாட்களாகவே தன்னுடைய ஆறு புத்திரர்களைக் காண விரும்பினாள் தேவகி. தாங்கள் சுதல லோகம் சென்று மகாபலியால் பூஜிக்கப்பட்டீர்கள். பிரம்ம சாபத்தால் ஹிரண்ய கசிபுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்களும், பிறகு வசுதேவருக்குப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டவர்களும், மரீசியின் முதல் பிள்ளைகளுமான, அவர்களை அழைத்து வந்து தேவகிக்குக் காட்டிய பின்னர் அவர்கள் லோகத்துக்குத் திருப்பி அனுப்பினீர்கள் அல்லவா? ( 88 – 1 )

ச்’ருததே3வ இதி ச்’ருதம் த்3விஜேந்த்3ரம்
ப3ஹு லாச்’வம் ந்ருபதிம் ச ப4க்தி பூர்ணம் |
யுக3பத்தவ மனுக்3ரஹீது காமோ
மிதி2லாம் ப்ராபித தாபஸை: ஸமேத:|| ( 88 – 2 )


ச்ருததேவன் என்று பிரசித்தி பெற்ற பிராமாணோத்தமனையும், பக்தி நிறைந்த பஹுலாச்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹிக்க விரும்பியதால், தாங்கள் தபஸ்விகளுடனேயே மிதிலைக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 88 – 2 )

க3ச்ச2ன் த்3விமூர்த்தி ருப4யோர் யுக3பன்னிகேதம்
ஏகேன பூ4ரி விப4வைர் விஹிதோபசார:|
அன்யேன தத்3தி3ன பு4தைச்’ச’ ப2லௌ த3னாத்3யை:
துல்யம் ப்ரசஸேதி3த த3தா3த2 ச முக்தி பா4ம்யாம் || ( 88 – 3 )


இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு, இருவருடைய இல்லங்களுக்கும் ஒரே
காலத்தில் சென்றீர்கள். அரசன் பஹுலாச்வனால் மிகுந்த வைபவத்துடனும், அந்தணன் ச்ருததேவனால் மிகவும் எளிமையாக அன்று சம்பாதிக்கப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றால் உபசரிக்கப் பட்ட தாங்கள், இருவரிடத்திலும் ஒரே போல சந்தோசம் அடைந்தீர்கள் அல்லவா? அவ்விருவருக்கும் ஒரே போல மோக்ஷத்தை அளித்தீர்கள் அல்லவா? ( 88 – 3 )

பூ4யோSத2 த்3வாரவத்யாம் த்3விஜ தனய
ம்ருதிம் தத் ப்ரலாபானபி த்வம்
கோ வா தே3வம் நிருந்த்4யாதி3தி கில
கத2யன் விச்’வ வோடா4Sப்ய ஸோடா4:|
ஜிஷ்ணோர் க3ர்வம் விநேதும் த்வயி மனுஜ தி4யா
குண்டி2தாஞ்சாஸ்ய பு3த்3தி4ம்
தத்வாரூடா4ம் விதா4தும் பரமதம
பத3 ப்ரக்ஷணேநேதி மன்யே || ( 88 – 4 )


பிறகு துவாரகையில் அடிக்கடி உண்டான ஒரு பிராமணனின் குமாரர்களின் மரணத்தையும், அந்த பிராமணனின் சோகமான புலம்பல்களையும், “தலை விதியை யாரால் தடுக்க முடியும்?” என்று சொல்லியவாறு தாங்கள் சகித்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? சமஸ்த பிரபஞ்சத்தையும் தரிக்க வல்ல தாங்கள் அவ்வாறு அவற்றைச் சகித்துக் கொண்டு இருந்தது இந்தக் காரணங்களுக்காகவே என்று நான் எண்ணுகின்றேன். அர்ஜுனனுடைய கர்வத்தைப் போக்க வேண்டும்; தங்களை வெறும் மனிதனாகவே எண்ணியிருந்த அவன் கருத்தை மாற்ற வேண்டும்; விவேகம் இல்லாத அவன் புத்தியை வைகுண்டத்தைக் காட்டுவதன் மூலம் பரமார்த்த போதத்தை அடைந்ததாகச் செய்ய வேண்டும் என்பவையே அவை என்று நான் எண்ணுகின்றேன்.
( 88 – 4 )

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புனரபி
தவ தூபேக்ஷயா கஷ்ட வாத3:
ஸ்பஷ்டோ ஜாதோ ஜனானா மத2
தத3வஸரே த்3வாரகாமாப பார்த்த2:|
மைத்ர்யா தத்ரோஷிதோSசௌ நவம
ஸுத ம்ருதௌ விப்ர வர்ய ப்ரரோத3ம்
ச்’ருத்வா சக்ரே ப்ரதிஞாம் அனுபஹ்ருத
ஸுதஸ் ஸன்னிவேக்ஷ்ய க்ருஷானும் || ( 88 – 5 )


அந்த பிராமணனுடைய எட்டுப் பிள்ளைகள் இறந்து விட்டனர். தங்கள் உபேக்ஷை காரணமாகவே ஜனங்களுக்கு இடையில் “கஷ்டம்! கஷ்டம்!” என்ற பேச்சு ஸ்பஷ்டமாகக் கேட்கத் துவங்கியது. அதே சமயத்தில் அர்ஜுனனும் துவாரகைக்கு வந்தான். சிநேகத்தால் அர்ஜுனன் அங்கு வசித்திருக்கும் பொழுது, ஒன்பதாவது புத்திரனும் இறந்து போனதால் அந்த பிராமணன் கதறி அழுதான். அதைக் கேட்டு மனம் வருந்திய அர்ஜுனன் கடுமையான ஒரு பிரதிக்ஞை செய்தான், “இனிப் பிறக்கும் குழந்தையை இறக்க விடமாட்டேன். அதையும் மீறி அது இறந்து போனால் அதைத் திருப்பிக் கொண்டு வருவேன். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால் நான் அக்னிப் பிரேவேசம் செய்வேன்!” என்று . ( 88 – 5 )

மானீ ஸ த்வா மப்ருஷ்ட்வா த்விஜ நிலய
க3தோ பா3ணஜாலைர் மஹாஸ்த்ரை:
ருந்தா4ன: ஸூதிகே3ஹம் புனரபி ஸஹஸா
த்3ருஷ்ட நஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்ரீம் ததா2ன்யாஸ் ஸுரவர
நக3ரீர் வித்3யயாSS ஸாத்3ய ஸத்3யோ
மோகோ4த்3யோக3: பதிஷ்யன் ஹுதபு4ஜி
ப4வதா ஸஸ்மிதம் வரிதோSபூத் || ( 88 – 6
)

செருக்குற்ற அர்ஜுனன் தங்களிடம் சொல்லாமல் அந்த பிராமணன் வீட்டுக்குச் சென்றான். ஆக்கிநேயம் முதலிய பெரிய அஸ்திரங்களால் பிரசவஅறையை மறைத்து விட்டான். குழந்தை பிறந்தது. உடனே அது மறைந்தும் போயிற்று. உடனேயே அதைத் தேட யமபுரி, இந்திரனின் பட்டணம் , மற்ற தேவர்களின் நகரங்களை தன் யோக வித்தையால் அடைந்த அர்ஜுனனால் குழந்தையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தன் பிரதிக்ஞைப்படி அக்னிப் பிரவேசம் செய்ய முற்படும் போது தங்களால் தடுக்கப்பட்டான். ( 88 – 6 )
 
ஸந்தான கோபாலன்

ஸார்த்த4ம் தேன ப்ரதீசீம் தி3ச’மதி
ஜவினா ஸ்யந்த3னேனாபி4யாதே
லோகாலோகம் வ்யதீததாஸ்திமிர
ப4ரமதோ2 சக்ரதா4ம்னா நிருந்த3ன்|
சக்ராம்சு’ க்ளிஷ்ட் த்3ருஷ்டிம் ஸ்தி2தமத2
விஜயம் பச்’ய பச்’யேதிவாராம்
பாரே த்வம் ப்ராத3த3ர்ச’ கிமபி ஹி
தமஸாம் தூ3ர தூ3ரம் பத3ம் தே || ( 88 – 7 )

அந்த அர்ஜுனனுடன் மிகவும் வேகமாகச் செல்லும் தேரில் ஏறிக் கொண்டு, மேற்கு திசையை நோக்கிச் சென்று, லோகாலோக மலைகளைக் கடந்து, அங்கு நிலவிய காரிருளை சுதர்சனச் சக்கரத்தால் அகற்றினீர்கள். அப்போது சுதர்சனத்தின் ஒளியால் கண்கள் வருந்திய அர்ஜுனனிடம்,
” பார்! பார்!” என்று சொல்லிக் காரண ஜலத்துக்கும் அப்பால், வெகு தூரத்தில் இருக்கும், இன்னந்தென்று வர்ணிக்க முடியாத தங்கள் உலகமான வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள் அல்லவா? ( 88 – 7 )

தத்ராஸீனம் பு4ஜங்கா3தி4ப ச’யனதலே
தி3வ்ய பூ4ஷாயுதா4த்3யை:
ஆவீதம் பீதசேலம் ப்ரதினவ ஜலத3
ச்’யாமலம் ஸ்ரீமத3ங்க3ம் |
மூர்த்தினா மீசி’தாரம் பரமிஹ
திஸ்ருணா மேகமர்த்த2ம் ச்’ருதீனாம்
த்வாமேவ த்வம் ப்ராத்மன் ப்ரியஸக2
ஸஹிதோ நேமித2 க்ஷேம ரூபம்|| (88 – 8 )


அந்த வைகுண்டத்தில் சர்ப்ப ராஜனாகிய ஆதிசேஷன் அமைத்த படுக்கை மேல் வீற்றிருப்பவரும்; சிறந்த ஆபரணங்களை அணிந்து இருப்பவரும்; சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும்; மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; நீருண்ட புதுக் கார்மேகம் போன்ற ஷ்யாமள நிறம் உடையவரும்; ஸ்ரீ பொருந்திய திருமேனி கொண்டவரும்; ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்வதற்கு மும்மூர்த்திகளை நியமிக்கின்றவரும்; சர்வ காரண பூதரும்; வேதங்களுக்கு முக்கிய அர்த்தபூதரும்; மோக்ஷரூபியாகவும் இருக்கின்ற தங்களையே, தாங்கள் தங்கள் நண்பன் அர்ஜுனனுடன் வணங்கினீர்கள் அல்லவா?
( 88 – 8 )

யுவாம் மாமேவ த்3வாவதிக
வ்ருதாந்தர்ஹித தயா
விபி4ன்னௌ ஸந்த்3ரஷ்டும் ஸ்வய மஹ
மஹார்ஷம் த்3விஜ ஸுதான் |
நயேதம் த்3ராகே3 தானிதி க2லு
விதீர்ணான் புனரமூன்
த்3விஜாயா தா3யாதா3:ப்ரணுத
மஹிமா பாண்டு3ஜனுஷா || ( 88 – 9 )


பிரகாசமான ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் பரமாத்மாவாகவும் ; மறைந்த ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் ஜீவாத்மாவாகவும் இரண்டாகப் பிரிந்தவர்களும்,; நானாகவே இருப்பவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று நானே பிராமணனின் குழந்தைகளை இங்கே கொண்டு வந்தேன். அவர்களைச் சீக்கிரமாக அழைத்துச் செல்லுங்கள் ” என்று சொல்லிக் குழந்தைகளைத் திருப்பித் தரவும், அர்ஜுனனுடன் விரைந்து திரும்பி வந்து அவனால் புகழ் பெற்றுவிட்ட அந்த பிரமணனிடம் குழந்தைகளைத் திருப்பித் தந்தீர்கள் அல்லவா? ( 88 – 9 )

ஏவம் நானா விஹாரைர் ஜக3த3பி4 ரமயன்
வ்ருஷ்ணி வம்ச’ம் ப்ரனுஷ்ணன்
ஈஜானோ யக்ஞபே4தை3 ரதுல
விஹ்ருதாபி: ப்ரீணயன்னேண நேத்ரா:|
பூ4பா4ர க்ஷேப த3ம்பாத் பத3 கமல
ஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண :
பூர்ணம் ப்ரஹ்மை ஸாக்ஷாத் யது3ஷு
மனுஜதா ரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ:|| ( 88 – 10)


இவ்விதம் பற்பல லீலைகளைச் செய்துகொண்டும்; உலகத்தைக் களிப்புறச் செய்து கொண்டும்; வ்ருஷ்ணீ வம்சத்தை ஓங்கி வளரச் செய்துகொண்டும்;
பற்பல யாகங்களைச் செய்து கொண்டும்; ஒப்பற்ற லீலா விஹாரங்களால் மான் கண்ணியரான பெண்களை சந்தோஷப்படுத்திக் கொண்டும்;
பூபாரத்தை ஒழிப்பது என்ற வியாஜத்தால் தங்கள் மலரடிகளைச் சேவித்தவர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதற்கு என்றே யது வம்சத்தில் அவதரித்த; எங்கும் நிறைந்துள்ள பரப்ரம்ம ஸ்வரூபியாகிய தாங்கள்; மனிதத் தன்மையால் மறைக்கப்பட்டு விளங்கினீர்கள் அல்லவா? ( 88 – 10)

ப்ராயேண த்3வாரவத்யாம் அவ்ருதத3யி ததா 3
நரதஸ் த்வத்3 ராஸார்த்ரஸ்
தாஸ்மாம் லேபே4 கதாசித் க2லு ஸுக்ருத விதி4ஸ்
த்வத் பிதா தத்வ போ3த4ம் |
ப4க்தானா மக்3ரயாயீ ஸ ச க2லு
மதிமா நுத்3த4வஸ் த்வத்த ஏவ
ப்ராப்தோ விஞ்ஞான ஸாரம் ஸ கில
ஜனஹிதாயாதுனாssஸ்தே ப3த3ர்யாம் || ( 88 – 11 )


ஹே பகவன்! நாரதர் தங்கள் சேவையில் ஈடுபட்டவராக அதிக நாட்கள் துவாரகையில் வசித்து வந்தார் அப்போது ஒரு நாள் தங்கள் பிதாவாகிய புண்ணிய சீலர் வசுதேவர் அந்த நாரதரிடமிருந்து ஞானோபதேசத்தைப் பெற்றார். பக்தர்களில் முந்தியவரும் புத்திசாலியுமான அந்த உத்தவரும் தங்களிடமிருந்தே ஞானசாரத்தை அடைந்தார். அந்த உத்தவர் ஜனங்களின் நன்மைக்காக இன்றும் பதரிகாசிரமத்தில் இருக்கின்றார் அல்லவா? ( 88 – 11 )

ஸோயம் க்ருஷ்ணாவதாரே ஜயதி தவ விபோ4
யத்ர சௌஹார்த பீ4தி ;
ஸ்நேஹ த்3வேஷானுராக3 ப்ரப்ருதிபி:
அதுலை: அச்’ரமை: யோக3 பே4தை3:|
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தா மம்ருதபதமகு:
ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விச்’வார்தி சா’ந்த்யை
பவனபுரபதே ப4க்தி பூர்த்யை ச பூ4யா:|| ( 88 – 12 )

ஹே பிரபூ! எந்தக் கிருஷ்ணாவதாரத்தில் சௌஹார்த்தம், பயம், துவேஷம், அனுராகம் முதலிய ஒப்பற்ற, கஷ்டமில்லாமல் மனதைச் செலுத்தக் கூடிய உபாய விசேஷங்களால், எல்லா இடங்களிலும் எல்லா ஜனங்களும் துன்பங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைந்தனரோ; அந்தக் கிருஷ்ணாவதாரம் உலகப்பிரசித்தி பெற்று விளங்கிகிறது. அப்படிப்பட்ட தாங்கள் எல்லோரும் எல்லாத் துன்பங்களும் நீங்கி சாந்தி அடையவும், எல்லோருடைய பக்தி பரிபூரணம் அடையவும் அருள வேண்டும்.
( 88 – 12)
 
த3ச’கம் 89 ( 1 to 5)

வ்ருக அஸுர கதா2

ரமாஜானே ஜானே யதி3ஹ தவ ப4க்தேஷு விப4வோ
ந ஸத்3யஸ் ஸம்பத்3யஸ் ததி3ஹ மத3க்ருத்வா த3ச’மினாம்|
ப்ரசா’ந்தீம் க்ருத்வைவ ப்ரதி3ச’ஸீ தத: காம மகி2லம்
ப்ரசா’ந்தேஷு க்ஷிப்ரம் ந க2லு ப4வதீயே ச்யுதி கதா2|| ( 89 – 1 )


இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை. அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து; சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள். நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா? ( 89 – 1)

ஸத்3ய: ப்ரஸாத3 ருஷிதான் விதி4 ச’ங்கராதீ3ன்
கேசித்3 விபோ4 நிஜ கு3ணானுகுணம் பஜந்த்ய:|
ப்4ரஷ்டா ப4வந்தி ப3த கஷ்ட மதீ3ர்க4 த்3ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா3ஹரணம் கிலாஸ்மின் || (89 – 2 )


ஹே பிரபு! சிலர் தங்கள் வாசனைக்குத் தகுந்தபடி, சீக்கிரத்தில் சந்தோஷம் அடைபவர்களும், கோபம் அடைகிறவர்களும், ஆகிய பிரமன், ஈசன் முதலியவர்களைச் சேவித்துத் தீர்க்க தரிசனம் இல்லாத காரணத்தால் பிரஷ்டர்கள் ஆகின்றார்கள். இது மிகவும் கஷ்டமானதே! இதற்கு விருகாசுரன் சிறந்த உதாரணம் ஆவான் அல்லவா?
( 89 – 2 )

ச’குனி ஜஸ்ஸ து நாரத3 மேகதா3
த்வரித தோஷ மப்ருச்ச2 த3தீ4ச்’வ்ரம்|
ஸ ச தி3தே3ஷ கி3ரீச’ முபாஸிதும்
ந து ப4வந்த மப3ந்து4 மாஸாது4ஷு || ( 89 – 3 )


சகுனியின் புத்திரனான விருகாசுரன் ஒருநாள் நாரதரிடம் விரைவாக சந்தோஷம் அடையும் ஈசனைப் பற்றிக் கேட்டான் . அதற்கு நாரதர் பரமேஸ்வரனை உபாசிக்கச் சொன்னார். துஷ்டர்களின் பந்து அல்லாத உங்களை உபாசிக்கச் சொல்லவில்லை.
( 89 – 3 )

தபஸ் தப்த்வா கோ4ரம் ஸ கலு குபிதஸ் ஸப்தம தி3னே
சி’ர: சி2த்வா ஸத்3ய: புரஹர முபஸ்தா2ப்ய புரத:|
அதி க்ஷுத்3ரம் ரௌத்3ரம் சி’ரசி’ கர தானேன நித4னம்
ஜகன்னாதாத் வவ்ரே ப4வதி விமுகா2னாம் க்வ சு’ப4தீ4:|| ( 89 – 4)

அந்த விருசாசுரன் கடுமையான தவம் புரிந்தான். ஏழாவது நாளே கோபம் அடைந்து தன் தலையைத் தானே அறுத்து எடுத்தபோது பரமேஸ்வரன் அவன் முன் பிரத்தியக்ஷம் ஆனார். அவரிடமிருந்து ” தலை மேல் கை வைப்பதால் மரணம் உண்டாக வேண்டும்!” என்ற மிகவும் துச்சமானதும் கொடியதும் ஆன வரத்தைகே கேட்டுப் பெற்றான். தங்களிடம் பாராமுகம் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி எங்ஙனம் உண்டாகும்? ( 89 – 4 )

மோக்தாரம் ப3ந்த4முக்தோ ஹரிண பதி
ரிவ ப்ராத்3ரவஸ்தோ(S)த2 ருத்3ரம்
தை3த்யாத் பீ4த்யா ஸ்ம தே3வோ தி3சி’ தி3சி’
வலதோ ப்ருஷ்ட2தோ த3த்த த்3ருஷ்டி:|
தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத3 மதி4
ரோக்ஷ்யந்தம் உத்3வீக்ஷ்ய ச’ர்வம்
தூ3ராதே3வாக்3ரதஸ்த்வம் படு வடு
வபுஷா தஸ்தி2ஷே தா3னவாய|| ( 89 – 5 )


பிறகு அவன், கட்டிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஒரு சிங்கம், தன்னை அவிழ்த்து விட்டவனையே பின் தொடருவது போலப் பரமசிவனைப் பின் தொடர்ந்தான். பரமசிவனும் அசுரனிடம் கொண்ட பயத்தால், பின்புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திசைகளிலும் ஓடினார். அத்தனை பேரும் பேசாமல் இருக்கும்போது, பரமசிவன் தங்கள் லோகத்திற்கு செல்ல உத்தேசித்ததைக் கண்டறிந்து வெகு தூரத்திலேயே திறமை வாய்ந்த பிரம்மச்சாரியின் உருவத்தில் அசுரனுக்கு எதிரில் பிரகாசமாக நின்றீர்கள் அல்லவா? ( 89 – 5 )
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top