[h=1]எண்ணைக்கிண்ணம்[/h]
தானே சிறந்த பக்தன் என்று
தாளாத மமதை கொண்டுவிட்ட,
தேவரிஷி நாரதரின் கர்வத்தை
தேவன் பங்கம் செய்த கதை இது!
“தன்னுடைய ஒரு சிறந்த பக்தன்
மன்னுலகில் உண்டு” என்றான்;
மூவுலகும் வலம் வரும் தேவ
முனிவரிடம் தாமரைக் கண்ணன்.
“என்னிலும் சிறந்த பக்தனா?” என
எள்ளி நகையாடிய முனிவரிடம்,
“நீயே சென்று கண்டு வா” என்று
நீல வண்ணன் ஆணை இட்டான்.
அந்த மனிதனோ ஒரு விவசாயி.
எந்த நேரமும் வேலைகள் தான்!
உதயத்தில் ஒரே ஒரு முறையும்,
உறங்குமுன் ஒரே ஒரு முறையும்,
ஹரி நாமத்தைக் கூறி வந்தான்.
பரிதவித்து உருகிவிடவில்லை.
தன்னைப் போல் இடைவிடாது
தலைவனை எண்ணவுமில்லை!
“ஒரு நாள் பொழுது முழுவதிலும்
இரு முறையே ஹரி எனக் கூறும்
இவனா உங்கள் சிறந்த பக்தன்?”
இறைவனிடம் கேட்டார் முனிவர்.
சிந்திய புன்னகையுடன் கண்ணன்,
சிந்தாமல் அவர் கொண்டு செல்ல,
தந்தான் சிறு கிண்ணம் ஒன்றை,
முன்பே எண்ணையால் நிறைத்து!
உலகை வலம் வந்தவரிடம்,
“உண்மையாகவே என்னை நீர்
எத்தனை முறை நினைத்தீர்?
என்னிடம் கூற வேண்டும்” என,
“ஒரு முறை கூட எண்ணவில்லை;
ஒருமித்த என்னுடைய கவனம்
எண்ணைக் கிண்ணத்தை மட்டுமே
எண்ணியபடி இருந்ததால், இறைவா!”
“வேலை வந்தவுடனேயே உமக்கு
வேளை இல்லை என்னை எண்ண!
வேளை தவறாமல் அவன் இருமுறை
வேலைகளிடையே எண்ணுகின்றானே!”
நாரதரின் பெருமையும், கர்வமும்
நாணமாக மாறிவிடக் கூறினார்,
“சஞ்சாரி ஆகிய என்னை விடவும்
சம்சாரி ஆகிய அவனே சிறந்தவன்!”
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி.
தானே சிறந்த பக்தன் என்று
தாளாத மமதை கொண்டுவிட்ட,
தேவரிஷி நாரதரின் கர்வத்தை
தேவன் பங்கம் செய்த கதை இது!
“தன்னுடைய ஒரு சிறந்த பக்தன்
மன்னுலகில் உண்டு” என்றான்;
மூவுலகும் வலம் வரும் தேவ
முனிவரிடம் தாமரைக் கண்ணன்.
“என்னிலும் சிறந்த பக்தனா?” என
எள்ளி நகையாடிய முனிவரிடம்,
“நீயே சென்று கண்டு வா” என்று
நீல வண்ணன் ஆணை இட்டான்.
அந்த மனிதனோ ஒரு விவசாயி.
எந்த நேரமும் வேலைகள் தான்!
உதயத்தில் ஒரே ஒரு முறையும்,
உறங்குமுன் ஒரே ஒரு முறையும்,
ஹரி நாமத்தைக் கூறி வந்தான்.
பரிதவித்து உருகிவிடவில்லை.
தன்னைப் போல் இடைவிடாது
தலைவனை எண்ணவுமில்லை!
“ஒரு நாள் பொழுது முழுவதிலும்
இரு முறையே ஹரி எனக் கூறும்
இவனா உங்கள் சிறந்த பக்தன்?”
இறைவனிடம் கேட்டார் முனிவர்.
சிந்திய புன்னகையுடன் கண்ணன்,
சிந்தாமல் அவர் கொண்டு செல்ல,
தந்தான் சிறு கிண்ணம் ஒன்றை,
முன்பே எண்ணையால் நிறைத்து!
உலகை வலம் வந்தவரிடம்,
“உண்மையாகவே என்னை நீர்
எத்தனை முறை நினைத்தீர்?
என்னிடம் கூற வேண்டும்” என,
“ஒரு முறை கூட எண்ணவில்லை;
ஒருமித்த என்னுடைய கவனம்
எண்ணைக் கிண்ணத்தை மட்டுமே
எண்ணியபடி இருந்ததால், இறைவா!”
“வேலை வந்தவுடனேயே உமக்கு
வேளை இல்லை என்னை எண்ண!
வேளை தவறாமல் அவன் இருமுறை
வேலைகளிடையே எண்ணுகின்றானே!”
நாரதரின் பெருமையும், கர்வமும்
நாணமாக மாறிவிடக் கூறினார்,
“சஞ்சாரி ஆகிய என்னை விடவும்
சம்சாரி ஆகிய அவனே சிறந்தவன்!”
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி.