• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

வெகு நாட்கள் ஆகிவிட்டன

நகு முகம் காட்டிச் சிரித்து !:rofl:

பஞ்ச கச்சம் மாறி விட்டது
பங்கஜ கச்சமாக இன்று ! :laugh:

தட்டுச் சுற்று வேட்டியோ

தட்டு முட்டு ஆகிவிட்டது. :der:

சரியான பெயரே தெரியாத போது :rolleyes:

சரியாக உடுத்துவது நடக்குமா கூறும்!

கஷ்டம் பஞ்ச கச்சம் மட்டுமல்ல! :nono:

கஷ்டம் தமிழ் படும் பாடும் தான்!! :frusty:

'ஒட்டிக்கோ கட்டிக்கோ' வேட்டியை

ஒட்டிக் கட்டிக் கொள்வது நல்லது! :)
 
When the going gets tough the tough get going.

When the money pours in like a rain, it washes out

the false facade and reveals the true colors of a person. :evil:

His /her mouth says,"I don't care for money! I never did!!"

but his /her action speaks a different story since

he /she would not part with a penny to pay the dues,

not split it to with people who deserve a share of the windfall.

God looks at the mind and not the empty words being spoken.

Man too must not fall for the empty words being spoken and

try to fathom the unfathomable mind for its hidden greed.
 
சிந்தித்தால் விந்தை!

தன் பெண்டாட்டியை அடக்க முடியாதவன் :hail:

தம்பி பெண்டாட்டியை அடக்க முயற்சிப்பது :whip:


தன் குடுமியை மனைவியிடம் தந்து விட்டுக் கிடந்து தவிப்பவன் :tsk:

பிறர் குடுமியைக் கைப்பற்றுவதைச் சிறப்பாகக் கனவுலகில் காண்பது.:rolleyes:


தன் சகோதரியின் மக்களுக்குத் தராதவன் :nono:
தன் மச்சினியின் மக்களுக்கு அள்ளித் தருவது! :popcorn:


தன் பெற்றோரிடம் அமர்ந்து பேச நேரம் இல்லாதவன் :bolt:

தன் மனைவியின் பெற்றோரிடம் குசலம் விசாரிப்பது. :blah:


தன் சகோதரன் வார்த்தையை சற்றும் மதிக்காதவன் :hand:

தன் மச்சினன் வார்த்தையை மந்திரமாக எண்ணுவது.:ear:
 
The mami who has seen me only in the temple wearing the old phat phat pattu saris
given a new lease of life with a new border/ thalappu / falls etc,
stood transfixed when she saw in my sari churidhar. :shocked:

I laughed and told her "I am in my disguise" and wore my
pink framed goggles which covers 3/4 of my face.

Her surprise changed into a hearty laughter.
I like to make people happy!

Most people won't recognize me when they see me traveling.
On the pillion seat the matching cap will make the disguise 100%. :spy:
 
Many of the colleagues of my elder son attended his wedding celebrated in Chicago
came to the wedding hall wearing shorts and T shirts.
They all were assistant professors in the U of C.
I wondered aloud what the professor might be wearing for the wedding.
My son said immediately "Bermudas of course!" :) And he was right!
Little children insist on wearing full length pants/ jeans.
As they grow older it becomes mukkaal pants (aka Senthil pants)
and then half pants / shorts/ Bermudas!
Little girls wear saris and the dhuppatta of the dress covering the front with great care.
As they grow older three piece dress often becomes 2 piece
(or with a nikktta vizhatta dhuppatta if at all!)
 
Here is a small poem (only 100 lines!)

I dedicate it to Ms. Lalit and the other new members!

Don't miss the comments given below that post!

https://visalakshiramani.wordpress.com/a%C2%A0prayer/


Thank you, Thank you, Thank you, Madam! I am humbled by your magnanimity!



11373647_927612633952383_69522919_n.jpg
 
dear Ms. lalit,
Again I thank you for your feedback! :)
Spirituality may be a thin and even invisible thread
but it as strong as the silk of the spider in a cobweb :spider:
and human hair which can support 100 gram without snapping. :wacko:
My guru always used to tell us this.
" We can't give up the world as long as we are living in it.
We should not give up God who is the only Sath amidst all these Asath.
So hold to God with one hand and to the world with the other."
This is what inspired me to create the blog on Aanmeegam
comprising of three parts with 61 poems in each part.
1. God and man.
2. Man and the world.
3. The greatness of God in this mad world.
Let us hold on to God with the right hand and to the world with the left hand.
Two heads are better than one.
So also two hands must support us better than one so that we do not get
completely lost in the world of sensual objects which trap us rather than liberate us.


 
I feel pity when I see people who cling on to their wealth like a drowning man to a straw.
Money is an essential evil and one needs it to live in this world.
But we must possess the money and NOT LET the money possess us.
In other words Money must be our slave and not the other way.
There are many poems driving home this point.
May be I can present them here one more time,
for the sake of the people who do not know
"How much money is too much money!"
Money and muck must be spread evenly to become useful! :)
 
Last edited:
[h=1]எல்லோரும் ‘டெல்லர்’[/h]

கத்தை கத்தையாய் பச்சை நோட்டு,
கலகலக்கும் நாணயக் கூட்டு,
இவைகள் அளிக்கும் உற்சாகம் ,
இனிமை, அருமை, பெருமை, உண்மை !

தேடித் தேடி பொருள் ஈட்டி,
ஓடி ஓடி அதைப் பெருக்கி,
நாடி நாடிச் செலவுகள் செய்து,
கூடிக் கூடி இன்புறுகின்றோம்!

உலகில் வரும்போது வெறுங்கை,
உலகை விட்டு செல்லும்போதும் அதுவே!
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்,
சேர்ந்து வராது செல்லும் போது!

எத்தனை அழகிய வீடோ, மனையோ,
எத்தனை சிறந்த உடையோ, நகையோ,
எத்தனை அதிக பணமோ, காசோ,
எத்தனை செல்வச்செழிப்போ, களிப்போ,

செல்லும் போது உடன் வராது ஒரு
செல்லாக்காசு கூட! நாம் சேமிக்கலாம்;
செல்வத்தை கொடுக்கலாம் வாங்கலாம்;
செலவுகள் செய்து மனம் மகிழலாம்!

வங்கிப் பணம் எல்லாம் “டெல்லர்” வசம்,
வங்கியினுள்ளே இருக்கும் வரையில் தான்.
வெளியே அவர் செல்லும் போது, ஒரே ஒரு
வெள்ளிப் பணமாவது அவர் கூட வருமா?

ஆம், நாம் எல்லோரும் டெல்லர்களே!
ஆனால், நாம் உலகத்தின் டெல்லர்கள்.
உலகமே ஒரு பெரிய வங்கி ஆவதால்,
உயரிய மனிதர்கள் அதன் டெல்லர்களே!

அவர்கள் வங்கிப் பணத்தை உரிமையுடன்
ஆளுவது போலவே நாமும் உரிமையுடன்
ஆளலாம் நம்மிடமுள்ள செல்வதை! நம்
ஆயுள் உள்ளவரை தான், பிறகு இல்லை!

நல்லதையே நினைத்து, நன்மையே செய்து
செல்லும் வழியை நல்வழி ஆக்குவோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம்,
வானுறையும் தெய்வத்துடன் ஒன்றுவோம்.

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி
 
coolclips_vc074908.jpg



TELLERS OF THE BANK CALLED THE WORLD.

Man becomes happy by the sight and smell of the new currency bundles and by the sweet jingle of a purse of new coins! These make him feel happy, proud and confidant!

Man spends all his life earning money; in multiplying it by wise investments and in spending it with his loved ones in order to make them happy!

We have entered the world empty handed. We will exit from the world empty handed! None of the things earned, saved, bought and enjoyed will come with us to eternity.

The palatial houses built by us, the grand dresses and jewels worn by us, money, coins, luxuries, fancy gadgets will have to be left behind, when the call comes!

We can earn money, give money, take money and spend money only as long as we are alive! Nor for a moment more than that.

The money in the bank is in the custody of the teller. He can handle the money, give it and receive it (obeying the rules of the bank) as if the money were his own! But when he goes home after the working hours, he can not carry even a single rupee of the bank’s money with him.

It is time to realize that we are all tellers of THE WORLD! We can handle money as if they are our own only as long as we are in the world. When we leave the world, we have to leave behind us everything that was in our possession and under our custody.

If everyone of us realizes this fact and remembers that we are merely custodians of our wealth and NOT real owners, much of the greed and unscrupulous hoarding of wealth will com to an end.

Let us use the wealth under our custody wisely, without greed, for the benefit of everyone around us!

 
This is the introduction to my first ever blog ENNangaLin vaNNak kalavai.

ஆன்மீகத் தேடலில் நான் கண்டு எடுத்த சில அரிய முத்துக்களே நீங்கள் காணப்போகும் எனது கருத்துக்கள்.

படிக்க நேரம் இல்லாததால் சிலரும், புரிந்து கொள்ள முடியாததால் சிலரும், சரியான குரு கிடைக்காததால் சிலரும் இந்த அரிய கருத்துக்களை அறியாமல் இருக்கலாம். இறைவன் அருளால் எனக்கு நேரமும் உள்ளது. நல்ல குருவும் கிடைத்தார். நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று முனைந்து இவற்றை உங்களுக்கு அளிக்கின்றேன். கருத்து பரிமாற்றங்களும் (கருத்து யுத்தங்களும் கூட) வரவேற்கப்படுகின்றன.

என்றோ விதையாக ஒளிந்திருந்த என் எழுதும் திறனை,
அன்றே கண்டு கொண்ட என் தந்தை டாக்டர் ராமனுக்கும்;
இன்றுவரை என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி வரும்
அன்னை திருமதி மீனாள் ராமனுக்கும் இந்நூல் சமர்ப்பணம்.

திருத்தி, மெருகேற்றிக் கொடுத்த அன்புத் தங்கை
திருமதி (கவிஞர்) ராஜி ராம் அவர்களுக்கும்,
பொருத்தி வலையில் அழகுற அமைத்துத் தந்த,
மருமகள் ரூபா ராமனுக்கும் நன்றிகள் பலப்பல.

இள வயதிலேயே இறைவனிடம் பக்தியையும்,
வளம் கொழிக்கும் இனிய கர்நாடக இசையையும்,
கணித, ஆங்கில இலக்கணத்துடன் கலந்தூட்டிய,
கண் போன்ற என் தாத்தா திரு K.R.நாராயணனுக்கு
எண்ணிலடங்காத நன்றிகளும், வந்தனங்களும்,
என் வாழ்நாட்கள் உள்ளளவும் உரித்தாகுக!

முதல் முறையாக ஆன்மீகத்தில் நுழைபவர்களுக்கு,
முதல்பகுதியில் உள்ளவை கடினமாகத் தோன்றலாம்.
முறையை மாற்றி, இறுதியில் இருந்து படிக்கத் தொடங்கி,
முயன்று நான் அளித்தவற்றை, எளிமையாக ரசிக்கலாமே!

வாழ்க வளமுடன்,
உங்கள் உண்மையுள்ள ,
விசாலாக்ஷி ரமணி.

An Introduction to yours faithfully (you-know-who) !



Visalakshi Ramani


இந்தியா சுதந்திரம் அடையும் முன் பிறந்தவள்.

இசை, நடனம், கணிதம், பௌதிகம் கற்றவள்.
கற்றவற்றை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக,
மற்றவர்க்கும் கற்றுக் கொடுத்து வந்தவள்.

இலக்கியம், வரைகலை, வர்ணம் தீட்டுவதில்,
இயல்பாகவே மிகுந்த நாட்டம் உடையவள்.
குழந்தைகளுக்கு 72 ஆங்கிலக் கட்டுரைகள்,
குழந்தைகள் பகுதியில், ‘தி ஹிந்து’வில் பிரசுரித்தவள்.

ஆன்மீகத் தேடலிலும், ஆத்மாவை அறிவதிலும்
அண்மைக்காலமாக மிக்க ஈடுபாடு கொண்டவள்.
அனைவரும் ஆண்டவன் முன்பு சமம் என்றும்
அனைவருக்கும் அவன் அருள் உண்டு என்றும்
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்றும்
முழு மனத்துடன் என்றும் திடமாக நம்புபவள்.

படைப்பதுடன் முடிந்துவிடும் என் கடமை!
படிப்பதும் சுவைப்பதும் உங்கள் உரிமை !
படித்ததை நன்கு உணர்வதும், உணர்ந்தபடி
நடப்பதும் நன்மை பயப்பது உண்மையே !

https://visalramani.wordpress.com/
 
Last edited:
Don't let your wealth corrupt you !

[h=1]தேவை குறையுங்கள்.[/h]

செறிந்த அறிவினன் ஆத்மா ஆயினும்,
சிறந்த உடலின்றி இயங்க இயலாதவன்;

துரத்தும் கரும வினைகளை அழிக்கவும்,
துறந்த மனதுடன் சித்திக்கு முயலவும்;

கடமை உணர்வுடன் உடலைப் பேணுவீர்!
உடலே ஆத்மா குடியிருக்கும் கோவில்;

“சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத”,
உடல் இருந்தால் தான் முக்திக்கு முயல!

ஊனுடன் உயிர் கலந்து வாழ்ந்திட,
தேவைகள் சில நாம் பூர்த்தி செய்குவோம்;

தேனும், பாலும் எனத் தம் தேவைகளை,
வானளவாக வளர்த்த வேண்டாம்.

எத்தனை பொருட்கள் தேவை என்போமா,
அத்தனை பொருட்களின் வசத்தில் சிக்குவோம்;

எத்தனை பொருட்கள் தேவை இல்லையோ,
அத்தனைக்கத்தனை விடுதலை அடைவோம்.

“அகழ்வாரை தாங்கும்” பூமி இருக்க,
அகன்ற கட்டில் , மெத்தைகள் எதற்கு?

திண்ணென்று இரு நீள் கரங்கள் இருக்க,
திண்டினைத் தேடி, நாடுவது எதற்கு?

கனி, காய்கறிகள் பசி தீர்க்கும் எனில்,
இனிக்கும் உணவினைத் தேடுவது எதற்கு?

பருத்தி ஆடைகளே மானம் மறைப்பதால்,
பகட்டான ஜரிகை பட்டாடைகள் எதற்கு?

புன்னகையால் முகம் பொலிவுடன் இருக்க,
பொன்னகையைத் தேடி போவது எதற்கு?

சின்ன இல்லத்தில், சீரிய வாழ்வு என்னாமல் ,
மின்னலைத் தொட்டிடும் மாளிகைகள் எதற்கு?

தன் தலைமுறை வாழ வழி செய்தாலும்,
பின் ஏழு தலைமுறைக்கு சேர்ப்பது எதற்கு?

பளபளக்கும் பேருந்து பயணம் இருக்க,
குளுகுளு வண்டிகளை வாங்குவது எதற்கு?

“மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்”
மற்ற உயிரினங்கள் முற்றும் நம்புகின்றன,

மனிதன் மட்டும் “இன்னமும் வேண்டும்”, என
மாளாத் துயரைத் தேடிச் செல்கிறான்.

தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்,
சேவையை பெருக்கிப் பாருங்கள்;

தனக்கென வாழ்பவனுக்கு தன்னிறைவில்லை,
தனக்கென வாழாதான் தன்னிறைவடைகிறான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
mansion.jpg


MINIMIZE YOUR NEEDS!

Atman is pure knowledge and bliss, but it can function only through a body! To get out of the karma, the endless cycle of births and deaths and attain liberation, Atman has to do sAdhanA through a body.

So everyone of us must take adequate care of our physical body. It is the living temple of the God within. To keep the body and soul together, we need certain bare necessities in life.

We don’t have to make the list of our requirements a very long one! The more the number of things we depend on for our happiness, the more bonded we become. The more things we willingly give up, the more liberated we become.

When the firm, clean ground is a good enough bed, why do we go for cots and super comfort beds? When our arms can serve well as warm pillows , why do we go for sponge pillows?

When raw fruit and a simple meal is enough to sustain us, why do we go in search of fancy food, with fancy names and fancy tastes and flavors?

When the simple cotton clothes are enough for our modesty, why do we go for silk and brocade dresses?

When a hearty smile is enough to light up the face and make it beautiful, why do we buy jewels made of gold, platinum and diamonds?

When a small clean house is enough to live in, why do we build sprawling houses?

Even after amassing enough wealth to last for 7 generations, why do we still run after money all the time?

When the public transports are good enough for our travel, why do we need A.C cars?

All the other creatures depend on nature to provide for their needs. Only man has an insatiable desire for everything in life and loses his equanimity, peace of mind and ruins his precious health.

Minimize your needs! Maximize your services rendered to the others. A selfish man is never really happy and a selfless-man is never really sad.
 

Latest posts

Latest ads

Back
Top