Faith is different from Knowledge!
[h=1]2. இடைப்பெண்.[/h]
அந்தண குரு ஒருவருக்குத் தவறாமல் பால்
அனுதினம் வழங்கும் ஒரு சிறு இடைப்பெண்;
ஆற்றைத் தாண்டி வரவேண்டி இருந்ததால்,
ஏற்றுக்கொண்ட நேரத்துக்கு வருவதே இல்லை!
ஒரு நாள் கூறினார் அந்த குரு அவளிடம்,
“சம்சாரக் கடலையே நம்மால் தாண்ட முடியும்;
ஒரு ஆற்றை உன்னால் தாண்ட முடியாதா?
சரசரவென்று நீ நீர்மேல் நடந்து வருவாய்!”
குருவிடம் முழு நம்பிக்கை கொண்ட பெண்
மறுநாள் முதல் விரைந்து வரலானாள்;
குரு கேட்டார் அப்பெண்ணிடம், “இப்போது
வருகின்றாயே நேரத்தோடு! எப்படி?” என்று.
“நீங்கள் சொன்னபடியே வருகின்றேன் ஐயா;
நீரைக் கடக்க நான் ஓடத்துக்கு நிற்பதில்லை!
ஓடத்துக்கு நின்றால் பொழுது ஆகிவிடும்;
நடந்து வருவதால் எனக்கு நேரம் மிச்சம்”
விக்கித்துப் போன குரு அவளிடம்,
“விரைந்து நடந்து காட்டு” என்று கூற,
விறு விறு என்று நீர் மேல் நடந்தாள்
வியத்தகு நம்பிக்கையுடன் அந்தப் பெண்.
திரும்பிப் பார்த்தவள் திகைத்து நின்றாள்.
தூக்கிய வஸ்திரத்துடன், நீரின் மேலே
நடக்க முடியாமல் நிற்கும் குருவினை.
நாவில் மட்டும் பகவான் நாமங்கள்!
“உங்கள் கடவுளின்மேல், குருவாகிய
உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?
நனைந்து விடுமோ வஸ்திரம் என்று
நினைந்து அஞ்சுகின்றீரே!” என்றாள்!
நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்,
மனத்தில் முழுதாக நம்பினால் மட்டுமே!
போதனை அனைவருக்கும் செய்யும் குரு
போதனை அன்று சிறுமியிடம் பெற்றார்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
[h=1]2. இடைப்பெண்.[/h]
அந்தண குரு ஒருவருக்குத் தவறாமல் பால்
அனுதினம் வழங்கும் ஒரு சிறு இடைப்பெண்;
ஆற்றைத் தாண்டி வரவேண்டி இருந்ததால்,
ஏற்றுக்கொண்ட நேரத்துக்கு வருவதே இல்லை!
ஒரு நாள் கூறினார் அந்த குரு அவளிடம்,
“சம்சாரக் கடலையே நம்மால் தாண்ட முடியும்;
ஒரு ஆற்றை உன்னால் தாண்ட முடியாதா?
சரசரவென்று நீ நீர்மேல் நடந்து வருவாய்!”
குருவிடம் முழு நம்பிக்கை கொண்ட பெண்
மறுநாள் முதல் விரைந்து வரலானாள்;
குரு கேட்டார் அப்பெண்ணிடம், “இப்போது
வருகின்றாயே நேரத்தோடு! எப்படி?” என்று.
“நீங்கள் சொன்னபடியே வருகின்றேன் ஐயா;
நீரைக் கடக்க நான் ஓடத்துக்கு நிற்பதில்லை!
ஓடத்துக்கு நின்றால் பொழுது ஆகிவிடும்;
நடந்து வருவதால் எனக்கு நேரம் மிச்சம்”
விக்கித்துப் போன குரு அவளிடம்,
“விரைந்து நடந்து காட்டு” என்று கூற,
விறு விறு என்று நீர் மேல் நடந்தாள்
வியத்தகு நம்பிக்கையுடன் அந்தப் பெண்.
திரும்பிப் பார்த்தவள் திகைத்து நின்றாள்.
தூக்கிய வஸ்திரத்துடன், நீரின் மேலே
நடக்க முடியாமல் நிற்கும் குருவினை.
நாவில் மட்டும் பகவான் நாமங்கள்!
“உங்கள் கடவுளின்மேல், குருவாகிய
உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?
நனைந்து விடுமோ வஸ்திரம் என்று
நினைந்து அஞ்சுகின்றீரே!” என்றாள்!
நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்,
மனத்தில் முழுதாக நம்பினால் மட்டுமே!
போதனை அனைவருக்கும் செய்யும் குரு
போதனை அன்று சிறுமியிடம் பெற்றார்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.