37. அபகீர்த்தி.
நேரம் நன்றாக இல்லாத பொழுது
நேராக நம்மிடம் வரும் அபகீர்த்தி!
கண்ணனையே பீடித்த அபகீர்த்தி,
மண்ணில் நம்மை விட்டு விடுமா?
சத்ரஜித் சூரியனின் சீரிய பக்தன்,
பக்தியுடன் பூஜித்தவனுக்கு, ஒரு
சூரியனை நிகர்த்த ஒளி வீசுகின்ற
சீரிய ச்யமந்தக மணி, சூரியன் பரிசு.
மணி பூஜிக்கப்படும் இடத்தில்,
மாயாவிகள் நுழைய மாட்டார்.
பஞ்சம், அகால மரணம், கவலை,
கொஞ்சமும் நெருங்க முடியாது.
மன்னன் உக்கிரசேனனுக்கு, அதைக்
கண்ணன் தருமாறு பணித்தபோதும்,
சத்ரஜித் மறுத்து, கண்ணனைத் தன்
சத்ருவாக எண்ணத் தொடங்கினான்.
வேட்டைக்குச் செல்லும் தம்பி பிரசேனன்,
காட்டுக்குள் மணியை அணிந்து செல்லவே,
சிங்கம் ஒன்று அவனைக் கொன்றுவிட்டு,
பொங்கும் ஒளி வீசும் மணியினை எடுத்துக்
கொண்டு செல்லுகையில், அச் சிங்கத்தைக்
கொன்று ஜாம்பவான், மின்னும் மணியைச்
செல்ல மகனுக்கு அளித்திட விரும்பியே
செல்லலானான் தன் குகைக்கு உள்ளே.
மணித் திருடன் கண்ணனே என்று
மண்ணில் உள்ளோர் நினைத்தனர்.
தன் நற்பெயரைக் காக்க வேண்டி,
தானே தேடிச் சென்றான் கண்ணன்.
சிங்கத்தின் அடிச் சுவடுகளையும்,
சிங்கத்தைக் கொன்ற அக் கரடியின்
அடிச் சுவடுகளையும் தொடர்ந்தவன்,
கடின குகையில் கண்டான் மணியை.
கரடிக்கும், கண்ணனுக்கும் கடும்போர்,
இரவு பகல் என விடாமல் தொடர்ந்தது
இருபத்தி எட்டு நாட்கள்! ஜாம்பவான்
இறுதியில் உணர்ந்தான் கண்ணன் யாரென!
மன்னிக்கும் படிப் பலமுறை வேண்டி,
மணியையும் அளித்தான்; தன்னுடைய
பெண்ணையும் அளித்து வாழ்த்தினான்!
மண்ணில் அப கீர்த்தி யாரைவிட்டது?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/37-அபகீர்த்தி/
நேரம் நன்றாக இல்லாத பொழுது
நேராக நம்மிடம் வரும் அபகீர்த்தி!
கண்ணனையே பீடித்த அபகீர்த்தி,
மண்ணில் நம்மை விட்டு விடுமா?
சத்ரஜித் சூரியனின் சீரிய பக்தன்,
பக்தியுடன் பூஜித்தவனுக்கு, ஒரு
சூரியனை நிகர்த்த ஒளி வீசுகின்ற
சீரிய ச்யமந்தக மணி, சூரியன் பரிசு.
மணி பூஜிக்கப்படும் இடத்தில்,
மாயாவிகள் நுழைய மாட்டார்.
பஞ்சம், அகால மரணம், கவலை,
கொஞ்சமும் நெருங்க முடியாது.
மன்னன் உக்கிரசேனனுக்கு, அதைக்
கண்ணன் தருமாறு பணித்தபோதும்,
சத்ரஜித் மறுத்து, கண்ணனைத் தன்
சத்ருவாக எண்ணத் தொடங்கினான்.
வேட்டைக்குச் செல்லும் தம்பி பிரசேனன்,
காட்டுக்குள் மணியை அணிந்து செல்லவே,
சிங்கம் ஒன்று அவனைக் கொன்றுவிட்டு,
பொங்கும் ஒளி வீசும் மணியினை எடுத்துக்
கொண்டு செல்லுகையில், அச் சிங்கத்தைக்
கொன்று ஜாம்பவான், மின்னும் மணியைச்
செல்ல மகனுக்கு அளித்திட விரும்பியே
செல்லலானான் தன் குகைக்கு உள்ளே.
மணித் திருடன் கண்ணனே என்று
மண்ணில் உள்ளோர் நினைத்தனர்.
தன் நற்பெயரைக் காக்க வேண்டி,
தானே தேடிச் சென்றான் கண்ணன்.
சிங்கத்தின் அடிச் சுவடுகளையும்,
சிங்கத்தைக் கொன்ற அக் கரடியின்
அடிச் சுவடுகளையும் தொடர்ந்தவன்,
கடின குகையில் கண்டான் மணியை.
கரடிக்கும், கண்ணனுக்கும் கடும்போர்,
இரவு பகல் என விடாமல் தொடர்ந்தது
இருபத்தி எட்டு நாட்கள்! ஜாம்பவான்
இறுதியில் உணர்ந்தான் கண்ணன் யாரென!
மன்னிக்கும் படிப் பலமுறை வேண்டி,
மணியையும் அளித்தான்; தன்னுடைய
பெண்ணையும் அளித்து வாழ்த்தினான்!
மண்ணில் அப கீர்த்தி யாரைவிட்டது?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/37-அபகீர்த்தி/