42. பண்டமாற்று.
ஒரே கண்ணன் வேறு வேறான
இரு வடிவங்களையும் எடுப்பான்.
பகைவர்களுக்குச் சுடும் சூரியன்;
பாசமுள்ளவர்களுக்குச் சந்திரன்.
பங்கிடாமல் உண்பது என்னும்
பழக்கமே இல்லையே அவனுக்கு!
வெண்ணை, பால், தயிர், பழங்கள்
கண்ணனுக்கு எல்லாம் ஒன்றே.
பழக்காரி ஒருத்தி வந்தது கண்டு,
குழந்தைக் கை நிறைய தானியம்
அன்புடன் தந்த பின் பழம் கேட்டான்.
தன்னுடைய நல்ல நண்பர்களுக்கு!
தாமரைக் கண்ணனைக் கண்டதும்
தாய் போன்ற பழக்காரி, தன்னுடைய
கூடைப் பழங்களை எல்லாம் மழலைக்
கூட்டத்திற்கே கொடுத்து விட்டாள்.
தானியம் இட்ட அவள் கூடையில்
தானியம் காணப் படவே இல்லை!
மாயாஜாலம் போலக் கூடை நிறைய
முத்து, ரத்தினங்களையே கண்டாள்!
“மனம் போல வாழ்வு” என்பார் சிலர்,
“மனம் போல மாங்கல்யம்” என்பார் பலர்,
“மனம் போல ஏற்றம்” என்பதையும் கூட
மாயவனே அன்று நிலை நாட்டி விட்டான்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/42-பண்டமாற்று
ஒரே கண்ணன் வேறு வேறான
இரு வடிவங்களையும் எடுப்பான்.
பகைவர்களுக்குச் சுடும் சூரியன்;
பாசமுள்ளவர்களுக்குச் சந்திரன்.
பங்கிடாமல் உண்பது என்னும்
பழக்கமே இல்லையே அவனுக்கு!
வெண்ணை, பால், தயிர், பழங்கள்
கண்ணனுக்கு எல்லாம் ஒன்றே.
பழக்காரி ஒருத்தி வந்தது கண்டு,
குழந்தைக் கை நிறைய தானியம்
அன்புடன் தந்த பின் பழம் கேட்டான்.
தன்னுடைய நல்ல நண்பர்களுக்கு!
தாமரைக் கண்ணனைக் கண்டதும்
தாய் போன்ற பழக்காரி, தன்னுடைய
கூடைப் பழங்களை எல்லாம் மழலைக்
கூட்டத்திற்கே கொடுத்து விட்டாள்.
தானியம் இட்ட அவள் கூடையில்
தானியம் காணப் படவே இல்லை!
மாயாஜாலம் போலக் கூடை நிறைய
முத்து, ரத்தினங்களையே கண்டாள்!
“மனம் போல வாழ்வு” என்பார் சிலர்,
“மனம் போல மாங்கல்யம்” என்பார் பலர்,
“மனம் போல ஏற்றம்” என்பதையும் கூட
மாயவனே அன்று நிலை நாட்டி விட்டான்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/42-பண்டமாற்று