malarum niaivugaL...
சவாலுக்குச் சவால்!
எங்கள் நடன நிகழ்ச்சியில் முக்கியமானது
என்றும் தசாவதாரமும், ராமாயணமும்;
ஜெயதேவரின் தசாவதாரப் பாடலும் மற்றும்
'பாவயாமி ரகுராம'மும் இல்லாமல் முடியாது.
எல்லோருக்குமே அந்த நடனங்கள் தெரிந்தாலும்
எல்லோரும் சம வாய்ப்பளிக்க சுழற்சி முறையே!
ராம நவமி அன்று 1989 இல் சிறப்பு நிகழ்ச்சி!
ராமாயண நாட்டியம் வேண்டும் எனக் கோரிக்கை!
அன்றைக்கென்று மாறிவிட்டாள், நிகழ்ச்சியில்
ஆட இருந்த பெண், ஒரு கிஷ்கிந்தை வாசியாக!
தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளாமல்,
தாய், தந்தையுடன் வந்து என்னிடம் மல்லுக்கு நின்றாள்!
" என் பெண் ஆட மாட்டாள்! என்ன செய்யப் போகின்றீர்கள்?
எப்படி நடக்கும் நிகழ்ச்சி என்று நானும் பார்க்கின்றேன்!"
" நன்றாக நடக்கும் நாளைய நாட்டிய நிகழ்ச்சி!
நானே ஆடப் போகின்றேன் ராமாயணப் பாடலுக்கு!"
சொல்லும் போது என்னுடைய வயது ~ நாற்பது நான்கு!
சொன்னதுடன் நிற்கவில்லை ஆடவும் செய்தேன் மேடையில்!
எனக்கு rehearsal தேவையில்லை என்ற போதிலும்,
எனக்குப் பாடிய வீணை மாஸ்டருக்குத் தேவைப்பட்டது!
குறித்துக் கொடுத்துவிட்டேன் அவர் புத்தகத்திலேயே
நிறுத்த வேண்டிய இடங்களும், பாடவேண்டிய முறைகளும்!
எனக்குப் பிடித்த சொற்றொடர் "சவாலுக்கு சவால்"!
என்னை நேரில் பார்க்க வெட்கி அவள் எதிர்ப்படவே இல்லை!
வீணாக வம்பை விலைக்கு வாங்கியதன் பலன்
வீணாயிற்று அவள் நடன வகுப்பும், பயிற்சியும்!