• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

malarum ninaivugaL...

லிட்டில் மாஸ்டர்!

தந்தை எட்டடி பாய்ந்தால், அவன்
தனயன் பதினாறு அடி பாய்வான்!

புது மொழியாக இருக்கிறதா? தாய்க்கு
இது பொருந்தினால் தந்தைக்கும் O. K!

ஜன்னல் வழியாக ரயில் பெட்டிக்குள்
ஜம்ப் செய்தவர் மகன் செய்வது என்ன?

தவறாது அடி வயிற்றில் ஐஸ்கட்டிகளைத்
தோற்றுவிக்கும் Sky diving சாதனைகள்!

"இன்று நாற்பதாயிரம் அடியிலிருந்து!"
"இன்று முப்பதாயிரம் அடியிலிருந்து!"

என்று சச்சின் டெண்டுல்கர் ஸ்கோர் போல,
எங்கள் B.P, heart beats ஐ ஏற்றி விடுவான்!

"
ரிஸ்க் வேண்டாம் கண்ணா! வீண் ரிஸ்க்" என்றால்,
"ரிஸ்க் எல்லாம் எனக்கு ரெஸ்க் போல" என்பான்!

அள்ளி வீசுவான்
நாம் கவலைப் படாமல் இருக்க.
புள்ளி விவரங்கள் sky diving எவ்வளவு safe என!

Instructor ஆவதற்குத் தேவையான jumps க்குப்பின்
Intermission வந்துள்ளது இந்த வீர விளையாட்டில்!

இப்போதைய கவலை என்னவென்று தெரியுமா?
"நானும் குதிப்பேன்" என்று ஆசைப்படும் மருமகளையும்,

"நானும் குதிப்பேன்" என்று பேச
த் தெரியாத, ஆனால்
நிச்சயமாக குதிக்கப் போகும், பேரனையும் எண்ணியே!

இரட்டைக் கவலையின் காரணம் அவர்கள் இருக்கும்
இடத்தில் தினமும் குறைந்தது 12 hot air பலூன்களும்,

நூற்றுக்கணக்கான sky diver களும், விண்வெளியில்
சிறு தும்பிகளைப் போல நாளும் காணக் கிடைப்பதே!
 
ஆசு கவியை அறிவீர்கள்!!!
ஏசு கவியை அறிவீர்களா???

இதோ ஒரு sample கவிதை!

subject: அடியேன் (அடியாள்?)

author: you-need-not-know-who!

ENJOY the superb ஏசு கவிதை!

தினமுமோற் பயனர்ர புதுத்தகவல்தறு அரிவுமனி :bolt:
தினவுதீர தினவுதரு பனுவலலிக்கும் அண்புமணி:lock1:
தினையளவு குற்றமும் பெருக்கலாகா கரணைமணி:drum:

தன்தவறுக் கந்தகியாம் தன்னிகரில் தற்குறிமணி
:laser:

go nuts correcting this :heh:
 
Last edited:
My comment/ reply.....


சீத்தலை சாத்தனார் பொத்தல் தலை சாத்தனார் ஆகி இருப்பார்!

கம்பனும், வள்ளுவரும் என்ன ஆகி இருப்பார்கள் ...?

(ஆஹா! இதுவன்றோ "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"!!!

தன்னைப் போலவே பிறரையும் தன் நிலைக்கு உயர்த்தும்

எண்ணம் தான் என்னே! என்னே!! என்னே!!!

தினமுமோற் பயனர்ர புதுத்தகவல்தறு அரிவுமனி

பயனற்ற தகவலைப் படிக்க 17, 918 பேர்களா???

வரி 2 . படத்தைப் பார்த்தாலேயே தெரியும் யார் தினவெடுத்து திரிகின்றார் என்று!

வரி 3. தினை அளவு குற்றம் உள்ளது என்று மறுக்க முடிவில்லை!

அதனால் என்னைக் கரணை மணி ஆக்கி விட்டார்!!!

அது யார்/ என்னது கரணை மணி?

அறிவு மணி x தற்குறி மணி

The best example for Oxymoron- though Unintended!

ஒருவர் சொன்னார் என்னை கவிதாமணி என்று இளப்பமாக!

இன்று இன்னும் நிறைய பட்டங்கள் கிடைத்துள்ளன!

அன்பு மணி (ராமதாஸ்?)

அறிவு மணி (கண்ணதாஸ்?)

தற்குறிமணி (என்ன தாஸ்?)


(கற்றது கை மண் அளவு என்று இன்னும் நான் மறக்கவில்லை
எனினும் நினைவூட்டியதற்கு நன்றி! )

தமிழ் தாத்தாக்களும், பாட்டாக்களும், பிற அறிஞர்களும் உம்மை மன்னிக்கட்டும்!

P.S.
The person disappeared from the forum soon.
Not because of me I swear!
I know and I can still feel the invisible presence here ll!
 
On Cats and Dogs!

A Cat OWNS the house while the master OWNS the Dog!

That makes quite a lot of difference in their attitudes.

The Dog tries to PLEASE his master/mistress.

The Cat demands to be pleased by its master/ mistress!

The Dog protects the family it lives with.

The Cat is protected by the family it lives with.

The Dog obeys all the commands including the weird ones.

The Cat quietly commands the household by her looks and postures!

The Dog has no special plans about its longevity

But a CAT has nine lives!

And a CAT can be sexy ... but a Dog ...never!
 
malarum ninaivugaL...

One (Wo)man show!

எங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு
எப்போது
ம் பாடுவது நானே தான்!
நானே நட்டுவாங்கமும் செய்வேன்;
நானே முகஅலங்காரமும் செய்வேன்.

அம்மாவுக்கே தான் பெற்ற பெண்ணை
அடையாளம் தெரியாமல் போகும்படி,

ஒரே மாதிரி make up செய்து விடுவதில்
கொஞ்சமும் விருப்பம் இல்லை எனக்கு.

ஆப்பிள் வடிவத்தில் ரத்த உதடுகள்!
பாதி நெற்றியில் வில் புருவங்கள்;
கன்னங்களில் வரைந்த சுருள்முடி!
தனித்தன்மை போயே போய்விடும்!

தலையைப் பின்னிக் கட்டுவதைத்

தாய்மார்கள் செய்து விடுவார்கள்,
ஆடை, நகை அணிவித்து விட்டு.
கடைசியில் facial make up நான்.

வாடகைகுக்கு கிடைக்கும் நாட்டிய
உடையை எடுக்கவே மாட்டோம்!
எத்தனை வருடங்களில் அவற்றை
எத்தனை பேர் அணிந்திருப்பர்களோ!:yuck:

துவைக்கும் வழக்கமே கிடையாது!
அவற்றை வாங்கி அணிந்தால், யாரால்
வேண்டுமானாலும் வாசிக்க முடியும்;
மீண்டும் மீண்டும் violin உடம்பில்! :violin:

பட்டு அல்லாத நல்ல துணிகளில்
சொந்த உடை தைத்துக் கொள்வார்;
சிலருக்குத் நானே தைத்ததும் உண்டு!
சிலர் ஜோடியாகத் துணிகளை எடுப்பார்!

பக்க வாத்தியங்கள் உண்டு இரண்டு!
பக்க வாத்தியம் தான் தன் மிருதங்கம்
என்பதையே மறந்துவிட்டுப் பெண்களை
எதிர்பாராத ஜாதிகளால் அச்சுறுத்துபவர்!

என்னால் தேர்வு செய்யப்பட்டு, பணியில்
என் மகன்கள் படித்த பள்ளியில் சேர்ந்த,
வீணை வித்வான் ஸ்ரீநிவாஸ் மற்றவர்.
வீணையை என் ஸ்ருதிக்கு வாசிப்பார்!!!

குழந்தைகளுக்கு சிறிய பரிசுகள்;
எனக்கும் கூட ஒரு சிறு பரிசு தான்.
Professional மாஸ்டர்களுக்கு மட்டும்
Professional பீஸ் கவர்களில் வைத்து.

செலவில்லாத நல்ல கலை நிகழ்ச்சி
எங்களிடம் மட்டுமே கிடைத்தது.
மேடையும், மைக்கும் எப்போதும் ப்ரீ!
கூட்டத்துக்கும் குறைவே இருக்காது!

"கர்ச்சு லேக கிளாசிகல் காவலனா? ( Do you want classical dances
பிலுவண்டி ஸ்ரீமதி ரமணி காருனி!" without any heavy expenditure
என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் then approach Smty. Ramani )
அன்று பிரபலங்கள் ஆகிவிட்டோம்.
 
அவள் யார்??? :confused:

வருகிறவர் போகிறவர் கால்களை எல்லாம்

ஏக்கத்துடன் பார்க்கும் அவள் யார்??? :pout:

பல்லைப் பார்த்தால் பல் டாக்டர்.

காலைப் பார்த்தால்.....

செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மனைவி!

அறுந்த வாருடன், பாலிஷ் தேவைப்படும் ஷூவுடன்

ஏதேனும் கால்கள் வருகின்றனவா?

வந்தால் தானே இரவு வீட்டில் அடுப்பு எரியும்!!!
 
மணமகளைத் தேர்வு செய்யும்போது மாமியார் கவனிக்க வேண்டியவை!

1. குடும்பத்துக்கு ஏற்ற அழகு. :music:

2. இனிய மொழி பேசும் இயல்பு.

3. சிடுமூஞ்சித்தனம் :nono:

4. கோபம் :nono:

5. நோய் நொடிகள் இல்லாத பரம்பரை (!)

6. மாமனார் மாமியார்களை "ராகு, கேது"

என்று பெயர் இட்டு மிதிக்காமல், மதிக்கும் பாங்கு.

7. இன்முகத்துடன் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை.

8. கணவன் வார்தைகளிக் கேட்டு நடக்கும் பண்பு.

ஒரு பெண்ணாவது இதில் தேறுவாளா

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்....? :noidea:
 
I saw a hi-tech ladies saloon ad today!

It was hi-tech for more than one reason! :rolleyes:

1. The hair of the model was straightened like thin metal wires.

2. The hair was cut to look like the pants of a poor postman ripped off by a mad dog.

3. The girl had one of her eyes completely covered.

Has not God given two eyes so that we can judge

the distance of an object correctly? :confused:

But since these characters ARE always the objects, :mullet:

they do NOT need to judge any distances accurately!

So much for spending money and looking like something

the cat had brought in during the night! :doh:
 
What happens when we act in haste?
'Haste makes waste'! Have no doubt about it.

Sri Ram promises to punish King YayAthi for a virtual crime as witnessed by Sage ViswAmithra. HanumAn gives King YayAthi abhayam as advised by his mother.

So Rama and Hanumam have to fight it out one to one! Can Hanuma fight Rama?
If so what is the weapon he uses against the invincible RAma bhANam?

Who wins and who loses in the fight?
Look and decide for yourselves!

https://youtu.be/-DvNwIwUp7s

Attachments area

Preview YouTube video Tamil Evergreen Movie | Sri Rama Hanuman Yudham | Full Movie | Ft.N.T.Rama Rao, Saroja Devi


Tamil Evergreen Movie | Sri Rama Hanuman Yudham | Full Movie | Ft.N.T.Rama Rao, Saroja Devi






 
malaum ninaivugaL...

பூசுரர்கள்!

பூசுரர்கள் என்ற ஒரு பெயர் உண்டு
பூமியில் வாழும் அந்தணர்களுக்கு!

அதன் உண்மைப் பொருளை நீங்கள்
அனுபவித்து உணர விரும்பினால்,

செல்ல வேண்டும் தெலுங்கு நாடு!
எல்லை இல்லாத கௌரவம் காண!

கண் கண்ட தெய்வம் ஆகவே நம்மைக்
கனிவோடு போற்றுவார்கள் அவர்கள்!

மங்கலப் பொருட்கள் அளிப்பதற்கு
எங்கிருந்தோ தேடி வருவார்கள்!

விரதம் இருந்து வாடி, வெய்யிலில்
புனிதப் பொருட்களைக் கொண்டு

கொடுக்கும் போது எண்ணத் தோன்றும்
"எடுத்துக் கொள்ள நமக்கு என்ன தகுதி?

அந்தணர் குலத்தில் பிறந்ததாலேயே
அந்தத் தகுதி வந்து விடுமா என்ன?"

கால்களுக்கு மஞ்சள் பூசிவிட்டு,
கால்களைப் பற்றி வணங்குவார்கள்.

அப்பா செய்வது போலவே நானும்
அவர்கள் வணக்கத்தை மேல் நோக்கி

redirect செய்துவிடுவேன் எப்போதும்!
உரியவர்கள் உள்ள இடம் அது தானே!

பிடிவாதமாக விரதம் இருப்பர்,
சிவராத்திரிக்குக் கண்கள் விழிப்பர்;

நாக வழிபாடு செய்வதில் இவர்,
ஏக மனத்தோடு நன்கு ஈடுபடுவர்.

நகைகளில் உண்டு அதிக நாட்டம்!
நகையை விரும்பாத பெண் யார்?

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்துக்கு
எட்டுப் பெண்கள் கும்மியடித்தனர்!

ஒவ்வொரு பெண்ணும் ஒரு லக்ஷ்மியே!
ஒரு இடம் விடாமல் உடலில் நகைகள்!

கணவர்களை அழைத்துச் சென்று
கனமான லாக்கர்களிலிருந்து!

எப்போதும், ஆடும் என் மாணவிகளிடம்,
"வேண்டாம் தங்க நகைகள்!" என்பேன்!

அன்று கும்மி முடிந்து அவர்கள்
சென்று வீடு சேரும் வரையில்;

டென்ஷன் எனக்கு, அவர்கள்
கணவர்களையும் விட அதிகம்!
 

"Mirror! Mirror! Mirror on the wall!

Who is the fairest one of all?"

The answer should always be "YOU!" :love:
or else the HELL WILL BE let loose! :scared:

Suits people who have NOTHING ELSE to prove their worth.

At least the skin-deep beauty (which is also subjected

to the eyes that behold) is a small compensation

for a better and greater accomplishment.

It is common sight that people who grow bald

start growing beards, whiskers or Baagavathar hair style!

Very short men build their body in an effort to enhance their

personality and end up looking like the tops the kids play with-

top heavy and legs ending in a point.


Women who have nothing to exhibit in their upper chamber,

exhibit their body's curves and draw attention to their other body

parts by getting them pierced and decorating them with jewels!

Refer to the popular (dumb) celebrity quotes of great wisdom

where an actor declares that

Wall street is a place where walls are sold and an actress declares

that she discovered Gravity when she was quite young!

Any one who has had a fall had discovered gravity - long before

Newton did - only they did not bother to name it and find a formula

governing the Force of Gravity.

People try to keep up with Jones - to prove their financial status.

People exhibit jewellery when there is there no natural grace or

charm in their face to exhibit.

Men love to flash their bundle of crisp currency amidst the

not-so -well - off people.

All kinds of weird things are DONE when the person fully realizes his

own worthlessness.

So now back to the mirrors!
People who are afraid of showing their faces to the world :fear:

for reasons best known them need the mirror more than those

who can show their original face to the world and STILL live with

that!
 
malarum ninaivugal...

துரத்திய சக்கரம்

இன்று அமெரிக்காவில் அவர்கள் செய்வதை
அன்றே செய்தோம் எங்கள் காலனியில்!

பட்டாசுகள், வாணங்கள், ராக்கெட்டுகள்,
tennis கோர்ட்டில் மட்டுமே ஏற்றப்படும்!

கோர்ட்டைச் சுற்றியும் நாற்காலிகள்;
கோலாகலமாக அமர்ந்து காண்பதற்கு!

அங்கேயும் உண்டு V.I.P. நாற்காலிகள்;
அருகே அமர்ந்து நன்கு பார்ப்பதற்கு!

'தீபாவளி ஸ்பெஷல்' விஷ்ணுச் சக்கரம்!
வண்டிச் சக்கரம் ஸைசில் 'ஸ்பெஷலாக'!

ஒரு ஸ்டாண்டு வைத்து, அதில் நன்கு
பொருத்தி, எரிய விடுவார்கள் அதை!

ஒரு நாள் சக்கரம் சுழன்ற வேகத்தில்
ஓடலாயிற்று ஸ்டாண்டிலிருந்து இறங்கி!

தீச் சக்கரமாகச் சுழன்று ஓடத் தொடங்கவே
V.I.P. Chair தாத்தா, பாட்டிகள் ஒரே ஓட்டம்!

அதற்குப் பிறகு கொஞ்சம் குறைந்தது
அவர்களுடைய V. I. P. Chair மோகம். :scared:


 

இது எப்படி இருக்கு?

The wife saw her husband in the company of a woman of dubious character several times. :spy:

When questioned, the husband replied in a casual tone that it was just a professional friendship. :blabla:

The clever wife asked in an icy tone,
"I know about that, but whose profession?" :rolleyes:



 
இது எப்படி இருக்கு?

The red-haired Richie Rich wanted to marry the most beautiful girl on the earth. :popcorn:

He wanted her character checked out by the professional detectives. :spy:
After a week he got this report. :ranger:

The girl has a sterling character, but of late she is seen
in the company of a red haired man of dubious character!
:faint:
 
இது எப்படி இருக்கு?

The door said
PUSH
VISA
while entering the shop!

How on earth did they Know that
I was coming to their shop??? :confused:

When I went nearer,
I could read the fine print too.

Now it read

PUSH
pay by

VISA
:rolleyes:

P.S. During my college days I was called as Visa by my friends!
 
Mothers-Day-Handprint-Art-Flowers-Craft.jpg
 
malarum ninaivugaL....

ஒரு நாள் ஹீரோயின்!

ஆண்டு தோறும் மூன்று நாட்கள்
ஆக்கப்படுவேன் நான் ஹீரோயின்!

ஆங்கிலத் தேர்வு இரண்டாம் தாள்,
அடுத்த நாள் பரீட்சையாகும் போது!

வகுப்பில் கவனிக்கவே மாட்டார்கள்;
வகுப்பு என்பது மிஸ்ஸும் நானும் பேசுவது!

முதல் வரிசையில் நடுவில் உள்ள
முதல் இருக்கை என்னுடையது!

விட்டுக் கொடுக்கவே மாட்டேன் அதை!
ஓட்டமாக ஓடிச்சென்று அமர்ந்து விடுவேன்.

கூர்ந்து கவனிப்பதால் ஆசிரியைகள்,
பார்த்தபடியே பேசுவார்கள் என்னை.

back bench-er களுக்கு சௌகரியம்.
தூங்கலாம், பேசலாம், கிறுக்கலாம்!

பலன் Non-detailed புத்தகத்தில் உள்ள
ஒற்றை வரிகூடத் தெரியாது அவர்களுக்கு !

'கதை அளப்ப'தற்கும் குறைந்தது அந்தக்
கதையில் வரும் பெயர்களாவது தெரிய வேண்டுமே!

அன்று முழுவதும் 'கதை' ப்பதே என் வேலை.
நின்று மூச்சுவிடக் கூட நேரம் இராது!

வருடம் முழுவதும் தூங்கியவர்கள்,
ஒரு நாள் கதை கேட்டதை வைத்துக்

'கதையடித்து', "ஜாண்" அளந்து மார்க்
தருபவர்களிடம், 'பாஸ்' பெற்று விடுவர்!

Non-detailed என்பது மிக நல்ல பெயர்!
'Non detailed' just means 'Not at all necessary!'
 
Cleopatra MUST have spent all her time gazing into her

mirror - whenever she was NOT gazing into the eyes one of

of her lovers.

Her regular bath in milk did not make her a better person.

Nor did it make her a more respectable person!

Mother Theresa would have had neither the time,

nor the inclination, nor the need to gaze into a mirror.

But the whole world was wishing for a glimpse of

her furrowed but serene face! WHY?

Her face radiated the goodness in her heart, and her

power to sympathize and empathize with the suffering lot.

Proves beyond doubts...

Mind > Matter.

Goodness > Beauty.

Humility > Haughtiness.

The real touchstone for real greatness...???

All things truly great and very simple !!!

All men truly great are very humble !!!
 
malarum ninaivugal...

பூரியும், மசாலாவும்.

எங்கள் ரயில் விடியற் காலையில்!
ஒரு நாள் முழுதும் விடாது பயணம்!

ஐந்து மணிக்குக் கிளம்பினால் தான்
அந்த ரயிலைப் பிடிக்கவே முடியும்.

நாங்கள் இருந்தது 20 k.m. தொலைவில்!
நான் இரண்டு மணிக்கே எழுந்திருப்பேன்!

வழி நெடுக உண்பதற்கு தேவை என்ன?
"பூரி மசாலவே போறும்" unanimous reply.

நான்கு பேர்கள், நான்கு வேளை சாப்பிட,
எத்தனை பூரிகள் நான் செய்ய வேண்டும்?

அத்தனையும் செய்வேன் அதிகாலையில்.
தொட்டுக் கொள்ள கமகமக்கும் மசாலா!

ரயிலில் உணவுக் கூடையைத் திறந்ததும்
கேட்கின்றார்கள்,"எந்த ஹோட்டலில் இருந்து?"

எதிர் சீட் அன்பர் நம்பவேயில்லை நான்
எழுந்து வீட்டில் அன்றே செய்தது என்பதை!

எப்போதும் உணவு வீட்டில் இருந்து தான்!
வெளியில் வாங்குவது ஒத்து
க் கொள்ளாது!

ஒரே ஒரு முறை நான் ஏமாந்துவிட்டேன்.
தங்கை கொண்டு வருவாள் என்றிருக்க,

அவளோ நான் கொண்டுவருவேன் என்றிருக்க.
வெளியே வாங்க வேண்டி இருந்தது உணவை!

வாயில் வைத்தால் மணல் கடிக்கின்றது!
மண் சாப்பாடு என்று திரைப்படங்களில் வரும்!

அது மண் தோசை! அப்படியே வீசிவிட்டு
வாயை நன்கு அலம்பிக்கொன்டாலும்,

வந்து விட்டன வாந்தியும், வயிற்றுப் போக்கும்!
கிழிந்த துணிகளாகக் குழந்தைகள் வாடினர்!

அன்றிலிருந்து எங்கு போனாலும் வெளியில்
எதுவுமே வாங்கமாட்டேன்! வீட்டு உணவே!

வேறு இடம், சமைக்க முடியவில்லை என்றால்,
பிரட் டும், ஜாமும் வைத்து ஜமாய்த்து விடுவோம்!

ஒரு வாரம் grand canyon டூர் போன போது கூட
மருமகள் அழகாக வீட்டு உணவையே அளித்தாள்!
 
இது எப்படி இருக்கு???

மனம் ஒரு குரங்கு!

சைக்கிளில் போகின்றவன் யாரைப் பார்த்துப்

பொறாமைப் படுவான் தெரியுமா?

படகுக் காரில் போகின்றவரைப் பார்த்து....:nono:

லகரம் பெறும் மோட்டார் சைக்கிளில் செல்பவரைப் பார்த்து.....:nono:

கால் டாக்சி / ஆட்டோவில் போகின்றவரைப் பார்த்து.... :nono:

அவன் பொறாமைப் படுவது தன் சைக்கிளைக் காட்டிலும்

விலை உயர்ந்த சைக்கிளில் செல்பவனைப் பார்த்துத்தான். :rolleyes:
 



இது எப்படி இருக்கு???

புலி வேஷம்!!! :scared:

அப்பா அடிக்கடி சொல்லுவார்,

"வீட்டில் யாருக்காவது புலி வேஷம் போட்டு வைக்க வேண்டும்."

எல்லோருமே soft ஆகவும், ஸ்வீட் ஆகவும் இருந்தால்

பல சிக்கல்களில் மாட்டிக் கொள்வோம்.

"முகமாட்டம்" என்பார்கள் தெலுங்கில்.

"தாட்சண்யம் பார்ப்பது" என்பார்கள் தமிழில்.

பல சமயங்களில் இக்கட்டில் இருந்து தப்பிக்க ஒரே வழி,

வீட்டில் அந்த நபருடன் அதிகம் பழக்கம் இல்லாத ஒருவருக்குப்

புலி வேஷம் போட்டு வைப்பது தான்! :rolleyes:

" ஐயோ அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது!" :ohwell:

"அவருக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வரும்!" :mad2:

அவருக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது"

இத்யாதி வசனங்கள் உபயோகிக்க உதவும்!!! :blabla:

கணவர் மனைவிக்குப் புலி வேஷம் போட்டால்

"அவருக்கு" பதில் "அவளுக்கு" என்றால் போதும்.​
 
malarum ninaivugaL...

"தூக்கி! தூக்கி!"

பெரிய மகன் வீட்டுக்கு முதல் பேரன்.
பெரிய கண்களும், குறும்புச் சிரிப்பும்!

சுருட்டை முடியும் அறிவு மயமான குறும்புத் தனமும்
குட்டிக் கிருஷ்ணன் தான் தினமும் கொண்டையுடன்

எல்லோருக்கும் செல்லம் அவன் தான்!
அன்றும் சரி, இன்றும் சரி! அவன் special !

ரயில் பிரயாணத்தில் அத்தனை பேரிடமும்
கை மாறிக் கை மாறிச் செல்ல வேண்டும்.

'பிடித்து வைத்துக் கொண்டால்' அவனுக்குப்
பிடிக்கவே பிடிக்காது! எல்லோரும் வேண்டும்!

ஊரில் ஒரு பாத்திரக்காரன் வருவதுண்டு,
நேரில் பார்த்தால் யாருமே கொஞ்சம் அஞ்சுவர்.

கொடுவாள் மீசை, ரத்தச் சிவப்பு விழிகள்!
எதோ கிராம தேவதையின் நினைவு வரும்.

அவனைக் கண்டு என் மகன் ஒரே அழுகை!
அவன் சொன்னான்,"குழந்தை பயப்படுது !

உள்ளே கொண்டு போய் விடுங்கள் நீங்கள்!
என் பிள்ளைகளுக்கே என்னிடம் பயம் தான்!"

உள்ளே கொண்டு போனால் அவன் அழுகை
இன்னமும் அதிகமாகின்றது! புரிந்து விட்டது!

'பாத்திரக்காரன் தூக்கிக் கொள்ள வில்லை!' என்று
பயலுக்குக் கோபமாம்! என்னால் நம்பமுடியவில்லை!

பாத்திரக்காரனாலும் தான்! அவன் சொன்னான்,
"என்னைப் பார்த்து பயந்து அழும் குழந்தைகள்!

என்னிடம் வர வேண்டும் என்று அழுத பிள்ளை
இவன் ஒருவன் தான் அம்மா இத்தனை நாட்களில்!"

ஒரு muslim தாத்தா தினமும் அவனை கொஞ்சுவார்,
"chaand kaa thukkadaa!" = நிலா போன்ற முகம்!

இன்று அவன் பெண் அதே போன்ற
"chaand kaa thukkadaa !
எல்லோரும் அவளைத் "தூக்கி! தூக்கி!" பண்ண வேண்டும்!

 
Ill and well!

A person went to a doctor to tell
That he was not feeling really well; :sick:

The doctor after examining him thoroughly well :high5:
Said," You don't follow the rules of hygiene well!"

And asked him to take simply some digene gel
And yet toward his fees charged his salary full,

Making the money in his pocket nil,
And turning his sober face very dull, :pout:
I don't know what he will do with all this money :popcorn:
Forgetting that Charity is as sweet as honey!


(Thanks to Mr. S. Haragopal - my son's Chemistry master visiting us now July 2011)

The gentleman teacher- who loved all his bright students as his own children - died in 2017! :rip:

His other contribution to Humanity was this gospel!

Do you want to remain always young aged???
Then keep yourself always well engaged!!!


True! When we remain super busy we do not have the time to grow old! Right????
 
Imagine meeting a person known to us through his
profession as a lawyer in the city where we used to live in India , in the city where we now live, as the friend of an American friend!!!

World is small indeed!
The strange sequence of events....

We meet an Indian from Chennai living here.
He introduced us to his neighbor - an American!

The American neighbor introduced us to an Indian family from our city.

The Indian family plans to introduce us to the Tamil Sangham and the local Indian Association.

I am looking forward to opportunities to brush up my fluency in Hindi and Telugu as much as possible!

Avsar milEgA thO kyon naheen?

paada paada raagam maatalu
aada aada Telugu!
 
malarum ninaivugaL...

பேச்சும், படிப்பும்.

பெரிய மகன் படித்து நான் பார்த்ததில்லை!
பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதே படிப்பு!

ஒரு வயதாவதற்கு முன்பே நல்ல மெமரி பவர்!
ஒரு பறவை விடாமல் சரியாகக் காண்பிப்பான்!

பெயரைச் சொன்னால் போதும் - பக்கங்களைத்
திருப்பி அதைக் காட்டிக் கொடுப்பான் நமக்கு!

ஒரு வயதில் அமைதியாக அருகில் அமர்ந்து,
integration, differentiation டியூஷன் கேட்பான்.

அழுகையோ, சிணுங்கலோ எதுவும் இராது!
அமைதியாக கவனிப்பான் எதுவும் விடாமல்!

ஆசிரியர்கள் படிப்பது எப்போது தெரியுமா?
அவன் வகுப்புக்கு வரும் போது மட்டும் தான்!

அவன் கேட்கும் கேள்விகளுக்குத் தயாராகி
ஆர்வத்துடன் வருவார்களாம் வகுப்புக்கு!

படிப்பு அதுதான் அவனுக்கு! பிறகு நண்பர்கள்
பட்டாளத்துக்குச் சொல்லித் தருவான் நன்றாக.

Entrance examination களில், எழுதிய
ஏழிலும் அவனுக்கு இடம் கிடைத்தது!

அதில் மூன்று மெடிக்கல் சீட்டுக்கள்!
A.I.I.M.S; A.F.M.C; ANDHRA MEDICAL உட்பட !

நாலு இடங்களில் இன்ஜினியரிங் சீட்டுக்கள்
A.U; I.I.T; B.I.T. PILANI; ROORKEE உட்பட.

ஒரு சீட்டுக்கே பலர் தடுமாறும்போது, இவன்
ஏழு சீட்டுகளை வென்றது செய்தியாயிற்று.

"ஒத்து ஒத்து அன்டே சீட்லு!" தெலுங்குத் தலைப்பு!
"வேண்டாம் வேண்டாம் என்றல் சீட்டுக்கள்!" தமிழ்.

அப்போது அவன் பெயரைச் சொன்னால் போதும்;
ஆந்திரா முழுவதும் எல்லோருக்கும் தெரியும்.

என் அப்பாவின் மூளையும், அவர்கள் அப்பாவின்
உயரமும், நிறமும், மகன்களுக்குக் கிடைத்துள்ளன.

Thank Heavens for bestowing the right combination on my sons!
 

Latest ads

Back
Top