• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

malarum nianaivugaL...

எனக்குப் பிடித்த கடவுள்(கள்).

விநாயகர்

யானை முகமும், பானை வயிறும்,
வாமன வடிவும், இவரிடம் மட்டும்
இத்தனை கம்பீரமாக, அமைதியாக,
இத்தனை அழகாக இருப்பதெப்படி?

செவ்வேள் முருகன்

வேல் எடுத்துப்பகையும் கெடுப்பான்,
வேள் நாவல்பழமும் கொடுப்பான்;
ஞானப் பழமும் அவனே தான்!
தீனர்க்கருள்பவன் அவனே தான்!

நாராயணா

நாராயணா என்ற மாத்திரத்தில்,
நூறாயிரம் பாவக் கூட்டங்களை;
நெருப்பு எரிக்கும் சருகுகளாகவே
வேறு யாரால் மாற்றிவிட முடியும்?

சிவபெருமான்

அழைக்காமலே ஓடோடிவந்து,
தழைக்கும் கொடுமைகளைக்
களைந்து, முக்தியும் தருவதில்;
சளைக்காதவர் இவரேயன்றோ!

சக்தி

சக்தியையும், யுக்தியையும் தந்து;
பக்தியையும், முக்தியையும் தந்து;
பிள்ளைகளை அன்னைபோலவே
கிள்ளைமொழி இவளே காப்பாள்!

அனுமன்

அஷ்ட சித்திகளைப் பெற்றிருந்தும்
கஷ்டம் நீக்கிட பிறருக்காகவே
இஷ்டத்துடன் பிரயோகம் செய்த
இவருக்கு இணை இவரே தான்!

இவர்கள் உடனிருக்கையில் நமக்கு
எவரிடம் என்ன அச்சம் தேவை?
மறவாமல் நாமம் ஜபித்தால் நாம்
பிறவா வரம் எய்துவோம் அன்றோ? :pray:

 
malarum ninaivugal...


பரோபகாரம்: பரிமாணமும், பரிணாமமும்.

"Want anything at all? Make a beeline to A-30!"
சொன்னது என் இளைய மகன் என்னிடம்,
சொன்னபோது ஆறு வயது அவனுக்கு!
சொன்ன வார்த்தைகள் ஒரிஜினல் தான்!

"ஏன் கண்ணா அப்படிச் சொல்கிறாய்?" என்றால்,
"பின்னே என்ன கடைக்குப் போனா காசு தரணும்,
Q விலே நின்னு அவா காத்திண்டு இருக்கணும்!
இங்கே வந்த ப்ரீயா உடனே கிடைச்சுடுமே!"

என்ன power of observation and Inference!
நானாவது இரவலாகப் பொருட்களைத்
தந்தேன் நண்பர்களுக்காக! பெரிய மகன்
தந்ததோ தவறாமல் Quarterly Blood Donation!

கொடுத்ததால் கெட்டவர்களும் இல்லை!
கொடுக்காததால் வாழ்ந்தவர்களுமில்லை!
கொடுப்பதால் நம்மிடம் கேட்கின்றார்களா?
கொடுக்கின்றோமா நாம் அவர்கள் கேட்பதால்?

மாட்டேன் என்று சொல்லவும் தெரியாது!
முடியாது என்று சொல்லவும் பிடிக்காது!
பேபி சிட்டிங் வேலையிலிருந்து சகலவித
வேலைகளும் தேடி வந்து சேர்ந்துவிடும்!

Godrej Hair dye demonstration செய்ய
தேவை ஒரே ஒரு தலை! அதை யாருமே
தராததால், செகரெட்டரி நண்பிக்காகத்
தலையைத் தந்து, "டை" இல் சிக்கினேன்!

Lioness Club President's post ஐ ஏற்பதற்கு
Lioness club vice president மறுத்ததால்
திடீர் ப்ரெசிடென்ட் ஆக்கப்பட்டேன் நான்,
பிறகு தான் தெரிந்தது காரணம் எனக்கு!

முன்னர் இருந்த கிளப் ப்ரெசிடென்ட்
பின்னைய வருடத்தின் subscription ஐயும்
முன்னமேயே வசூலும் செய்து அதைத்
தன் ஆண்டிலேயே செலவழித்தும் விட்டார்!

காலி கஜானா! போஸ்டல் ஸ்டேஷனரிக்குக் கூடப்
பணம் வைக்கவில்லை அந்த மஹா லேடி டாக்டர்!
கடுப்பினால் எப்போதும் எனக்கு எதிர் கட்சியே!
தொடங்கும் முன்பே மூடுவிழா செய்ய முயல்வார்!

தட்டுத் தடுமாறி, பணமும் இல்லாத,
ஒற்றுமையும் இல்லாத, 'சிங்கி'னியை
நடத்தினோம் நாங்கள் சிலர், பெற்றோம்
முடிவில் அத்தனை அவார்டுகளையும்!

உதவி செய்யக் கணவரும் உடன் இல்லை;
அதுவே பிறகு பிளஸ் பாயிண்ட் ஆயிற்று!
தன்னந் தனியாக நின்று சமாளித்தோம் என
அத்தனை பேரும் எங்களைச் சிலாகித்தார்கள்.

இந்திராகாந்தி இறந்த வருடம் அது!
ஒரு சிறு புத்தகமும் வெளியிட்டோம்!
முதல் பக்கத்திலிருந்து இறுதிவரை
மொத்தமும் எந்தன் கை வரிசையே!

Lioness Queen என்ற அவார்டு வாங்க நான்
சென்றது வழக்கம் போலத் தனியாகவே!
நண்பர்கள் கூட்டமும் கூட வரவில்லை!
என் குடும்பமும் கூட வர முடியவில்லை!

பாட்டே தெரியாதவர்களுக்குப் பாட்டும்,
நாட்டியத்தின் அடிப்படை அறிவில்லாத
குட்டிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுத்து
நாட்டியம் ஆடவைப்பதும் வேலையாயிற்று!

செய்த முயற்சிகள் வீண் போகாது அல்லவா?
பொறுமையை வளர்த்திட அவை உதவின!
பலனை எதிர்பாராமல் கீதை சொல்வதுபோல
பணிபுரியும் மனப் பாங்கை அவை வளர்த்தன.

எவரையும் எதற்கும் எதிர்பார்ப்பதில்லை!
முடித்த செயலை செய்ய மறுப்பதும் இல்லை!
பணத்துக்காக நான் எதுவும் செய்வதில்லை!
குணத்தை மதிக்க நான் தவறுவதும் இல்லை!

There is no pain without gain;
There is no gain without pain;
There is no greater truth than,
These two sterling statements!
 
malarum ninaivugaL

பேச்சுப் பயிற்சி.

சிறு வயதிலிருந்தே உரக்க வாய்விட்டு
நிறைய படித்து வந்திருந்ததால் எனக்குப்
பேசுவதில் எந்தவிதக் கஷ்டம் இல்லை.
பேசுவது ( A.K.47 ) அம்மாவைப் போலவே!

"சிங்க"க் கிளப்பின் ப்ரெசிடென்ட் ஆனதும்
இங்கும் அங்கும் நிறையப் பேச வேண்டும்,
ஆங்கிலத்தில் elite கூட்டங்களிலும்;
தெலுங்கில் மற்ற பல இடங்களிலும்.

சுந்தரத் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும்
எந்தக் கஷ்டமும் இல்லை பேசுவதற்கு!
வேகத்தைக் குறைக்க வேண்டி இருந்தது;
ஏக மனத்தோடு முயன்று முயன்று நான்!

அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக
அலுக்காமல் படித்து வந்தேன் தினமும்;
'ஒரு நாள் பயிற்சி முகாம்' ஒன்று நடந்தது,
ஒரே நாளின் பேச்சளார்களை உருவாக்க!

காலையில் தட்டுத் தடுமாறியவர்கள்,
மாலையில் விளாசித் தள்ளினார்கள்!
உண்மையிலேயே மிக நல்ல திட்டம்,
எண்ண முடியாத ஒரு முன்னேற்றம்!

ஆங்கிலத்தில் பேசினால் கேட்கும்
"மதராஸ்! மதராஸ்!" என்ற சொற்கள்!
தெலுங்கில் பேசினாலோ கேட்கும்
"தமிழ்! தமிழ்!" என்ற சொற்கள் அங்கு.

கூட்டத்தினர் ஒருவருக்கு ஒருவர்
என்னைப் பற்றித் தெரிவிப்பது தான்!
வட்டம் பெரிதான பிறகு இத்தகைய
கிட்டப் பார்வை அறிமுகம் இல்லை!

பாடிப் பாடிக் குரல் நயமானதால்
நன்றாக இருக்கும் மைக்கில் கேட்க.
பேசுவர் சில பெண்க
ள் ஆண் குரலில்!
"கீசு கீசு"
பெண்களும் உள்ளார்களே!

இரயிலில் எங்கள் கம்பார்ட்மென்ட்டில்
இருந்தார் ஒருமுறை பெங்காலி பாபு;
"நீங்கள் மியூசிக் டீச்சரா?" என்று கேட்டு
எங்கள் எல்லோரையுமே அசத்தினர்!

"நிச்சயமாக நீங்கள் ஒரு டீச்சரே!
நிச்சயமாக நீங்கள் பாடுவீர்கள்!
நீங்கள் பேசும் போதே கூட எனக்கு
நீங்கள் பாடுவதுபோலவே உள்ளது!"

இரயிலில் வருபவர் மொழி, இனம்,
தொழிலைக் கண்டுபிடித்து அவர்களை
அசத்தும் என்னையே, ஒரு பெங்காலி பாபு
அசத்திவிட்டார் அந்த பயணத்தில் அன்று!

லலித கலைகள் கற்றவர்களிடம்
மலரின் மணம் போல அதன் சாயல்கள்
கலந்து நன்கு பரிமளிக்கும் - அதனை
எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும்!
 
malarum ninaivugaL...

பஞ்ச கனபாடிகள்!

ஒரு நாள் காலிங் பெல் ஒலி கேட்டுத்
திறந்த கதவின் பின் திகைத்து நின்றேன்;

பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து பேர்கள்,
பஞ்ச கச்சம் கட்டிய ஐந்து நிஜ கன body கள்!

"இன்றைக்கு உணவு உங்கள் வீட்டில் தான்!
எல்லோருமே இங்கேயே போகச் சொல்ல

இங்கு வந்தோம் நாங்கள்! காசி செல்லும்
வழியில்" என்றதும் திகைத்து நின்றேன்!

"அரை மணியில் வருகின்றோம்" என்று
இறங்கிச் சென்று விட்டனர் மாடிப்படிகளை!

ஐந்து ஆழாக்கு சாதம் வடித்து, ரசம், அப்பளம்,
கீரைக் குழம்பு, மோர் தயார் செய்து விட்டேன் !

பரிமாறினால் கபகப என்று காலியாகின்றன
பண்டங்கள்; பசி தீர்ந்ததாகத் தெரியவில்லை!

கடைசிச் சட்டுவச் சாதம் போடுகையில் நான்
கடவுளை வேண்டினேன் "பசி தீரட்டும்" என!

ஒருவர், "போதும்" என்ற சொல்லைக் கேட்டு
மட்டற்ற மகிழ்ச்சி அடைய முடியுமா என்ன?

"அமிர்தமாக இருந்தது அம்மா!" என்ற ஒரு
அழகான சான்றிதழ் வேறு கிடைத்தது எனக்கு!

இன்று யோசிக்கின்றேன் எப்படிச் சரியாக
என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள் அவர்கள்?

நண்பர்களின் வழிகாட்டுதல் தானா அன்றி
என் பெயர் அவர்களுக்குத் தெரிந்து வந்தனரா?

"அன்னபூர்ணே விசாலாக்ஷி
க்ஷ அகில புவன சாக்ஷி கடாக்ஷி"
முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் சாமா ராகக் கிருதி

இன்று ஐந்து பேர்கள் கதவைத் தட்டினால்
நம்பி உள்ளே வரவிடுவோமா அவர்களை? :scared:

காலம் கெட்டு வருகின்றதா அல்லது நாம்
ஞாலத்தைப் புரிந்து கொண்டு விட்டோமா?

பெரிய பரீட்சை ஒன்றில் தேர்ச்சி பெற்ற
திருப்தியே மனதில் நிலவியது எனக்கு!

பஞ்சகனபாடிகள் உண்ணவந்தார்களா அன்றிப்
பஞ்சபூதங்களே சோதிக்க வந்தார்களா அன்று??? :noidea:

https://youtu.be/amzIKIX50Ak

Attachments area

Preview YouTube video Annapoorne Visaalaakshi - M.L Vasantha Kumari


Annapoorne Visaalaakshi - M.L Vasantha Kumari








 
இனியவை எட்டு... இன்னா எட்டு!
(ஒளவைப் பாட்டியின் அடிகளைப் பின்பற்றி...)

1.
இருக்க வேண்டியது.......பிறரை மனமாரப் பாராட்டுவது.
இருக்க வேண்டாதது......பிறரைக் குறை கூறுவது.

2.
இழக்க வேண்டியது.....கெட்ட பழக்கங்களை.
இழக்க
வேண்டாதது....நல்ல நண்பர்களை.

3.
மகிழ்ச்சியுற வேண்டியது.....பிறர் வளர்ச்சியைக் கண்டு.
மகிழ்ச்சியுற வேண்டாதது...பிறர் வீழ்ச்சியைக் கண்டு.

4.
பேச வேண்டியது.....பயனுள்ள வார்த்தைகளை.
பேச வேண்டாதது...வெட்டி ஊர் வம்புகளை.

5.
தலையிட வேண்டியது.....பொதுப் பிரச்சனைகளில்.
தலையிட வேண்டாதது...தனிப் பட்ட பிரச்
னைகளில்.

6.
கடைப்பிடிக்க வேண்டியது ....மௌனம்.
கடைப்பிடிக்க வேண்டாதது....ஓயாத பேச்சு.

7.
செய்ய வேண்டியது.....ஓடிச் சென்று உதவுவது.
செய்ய வேண்டாதது....செய்த உதவியைச் சொல்லித் திரிவது.

8.
தடுக்க வேண்டியது.....தீய செல்களை.
தடுக்க வேண்டாதது...பிறர் முன்னேற்றத்தை.
 
Everything is false.... right from the hair on the head to the
shoes on the feet passing through the cleavage, boobs, bums!

The latest craze is magnetic eye lashes which
render your eyes magnetic to the males.

We in India use eyetex originally home made with a castor oil lamp and butter but now available in the fancy shops.

They make the eyes appear brighter, bigger and in addition to these
lubricate the eyeballs and nourish the eye lashes to become longer and stronger.

In a vain effort to enrich their thin eyelashes these dames might lose what little eyelashes they had and end up looking like aliens!!!

The onlookers know a false eyelashes from a natural one anyway!
So what is the big deal really ???

Magnetic lashes review: Are they worth the hype?


https://www.today.com/style/magnetic-lashes-review-are-they-worth-hype-t123603


Mar 9, 2018 - False lashes can leave you in a sticky situation ... literally! If you find yourself ripping out your own lashes or tugging at leftover goo two days later, then allow me to introduce you to the concept of magnetic lashes. What makes magnetic lashes so appealing is that they're reusable, they don't require messy ...








 
malarum ninaivygaL...

கொண்டாட்டமும், திண்டாட்டமும்.

என் கணவர் G.C.T 1962 batch student!
இன்றும் அந்த batch சந்திக்கின்றார்கள்
ஆண்டு தோறும் கோவை /சென்னையில்;
Alumni Association மூலமாகத் தவறாமல்!

'கோவை கொண்டாட்ட'த்தில் பிக்னிக் ஒன்று
தேவை என்று எண்ணினார்கள் இங்கு சிலர்!
பார்வை இடச் செல்லும்போது என்னையும்
பலவந்தமாக உடன் அழைத்துச் சென்றார்கள்.

முதலிலேயே சொல்லிவிட்டேன் தெளிவாக,
"மலையிலிருந்து இறங்க முடியாது என்னால்!
தவறாமல் உதவி தேவை" என்று கணவரிடம்,
அவரும் "சரி, சரி" என்று சொன்னார் ஆனால்,

கிடு கிடு பள்ளத்தில் தனியே விட்டு விட்டு
குடு குடு என்று இறங்கிப் போய் விட்டார்!
கூப்பிடுவதும் கேட்கவே இல்லை! அவர்
தப்பித் தவறித் திரும்பிப் பார்க்கவுமில்லை!

பலவந்தமாக அழைத்து வந்துவிட்டு இப்படி
பரிதாபமாக விட்டுச் சென்று விட்டார்களே!
இறங்கவும் முடியாது மலையிலிருந்து!
உருண்டுதான் செல்ல வேண்டுமோ? முருகா!

அங்கேயே நின்று விட்டேன் சிலை போல!
எங்கும் ஒரு மரக் கிளை கூட எட்டவில்லை!
அன்று நடந்ததை நினைத்தால் எனக்கு
இன்றும் மெய் சிலிர்க்கின்றது மெய்யாகவே!

வந்தார்கள் மூன்று teenage பையன்கள்!
வெடு வெடு என்று ஒருவன் நல்ல உயரம்!
அவன் கைகளில் ஒரு கனமான மரத்தடி;
நான் பறிக்க முயன்று தோற்றது போலவே.

என்னைத் தாண்டிச் செல்லும் போது,
என் கால்களின் அருகே அதை வைத்தான்.
திரும்பிப் பார்க்காமல் சென்றான் தன்
அருமை நண்பர்களுடன் கீழிறங்கி!

முருகன் ஒரு தண்டபாணி அல்லவா?
அருளின் மறு உருவம் அவனல்லவா?
முட்டி தேய்ந்த ஒரு கிழவிக்காக அவன்
முட்டி தேய மலை மீது ஏறி வந்தானா ?

அவனுக்குத் தடி தேவை
யே இல்லையே!
அவன் ஏன் அதைக் கொண்டு வந்தான்?
அவன் ஏன் என்னருகில் அதை வைத்தான்?
அவன் ஏன் மீண்டும் கீழிறங்கிப் போனான்?

பதிலே இல்லாத கேள்விகள் எத்தனை?
பதித்துக் காலை ஔவை போல மெல்ல
வந்ததும் முதல் கேள்வி என்ன தெரியுமா?
"இத்தனை நேரம் நீ என்ன செய்தாய்?"

விட்டு விட்டு வந்ததும் நினைவில்லை!
தட்டுத் தடுமாறியதும் தெரியவில்லை!
அழைக்காமலே வந்து உதவிய செய்ததே
'அவனு'க்கும் நமக்கும் உள்ள வேறுபாடு!


https://youtu.be/PqsAvDRjJ04

Attachments area

Preview YouTube video Koovi Azhaithal - Bombay S. Jayashri.


Koovi Azhaithal - Bombay S. Jayashri.






 
malaum ninaivugal...

எப்போதும் வனவாசமே!

ஆனைமலையில் வீடு ஊருக்கு வெளியே!
அதுவே பிறகு என்னைத் தொடரலாயிற்று!

எந்த ஊரில் இருந்தாலும் நான் ஊருக்குள்
வசித்ததே இல்லை; என்றும் வனவாசமே!

உடுமலைக் கல்லூரியும் ஊருக்கு வெளியே!
மதுரைக் கல்லூரியும் ஊருக்கு வெளியே!

Allwyn காலனியும் ஊருக்கு வெளியே தான்!
B.H.P.V.Township பும் ஊருக்கு வெளியே தான்!

இப்போது வசிப்பதும் சற்று ஊருக்கு வெளியே!
இப்போது தெரிந்தது ஏன் அப்படி அமைந்ததென!

சந்தடி இல்லாத இடங்களில் தான் நம்மால்
சிந்திக்க முடியும் நன்கு! அது இறையின் பரிசு!

தனிமையும் ஒரு வரமே! நன்கு உழைத்து
இனியவற்றை இயன்றளவு இயற்றுவதற்கு! :hail:



 
images



தனித்திரு! பசித்திரு! விழித்திரு!


உலக வாழ்வில் முன்னேற விரும்புவோர்களின்,
உன்னதத்துக்கு உள்ளன மூன்று மந்திரங்கள்;

ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”

எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,
எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”

தனித் தன்மையுடனும், அறிவுப் பசியுடனும்,
விழிப்புடனும் இருந்தாலும், மிகவும் தேவை

கொஞ்சம் தனிமை, பசி, உறங்கா விழிப்பு!
விஞ்சும் நம் வாழ்வு, இவற்றால் சிறப்புற்று!

தனித்து இருக்கும்போது மட்டுமே ஒரு
மனிதனின் பல மன அலைகள் அடங்கும்;

உலகத்தில் ஓசைகளில் இருந்து விலகி,
உள்முகமாக அவன் பயணிக்க முடியும்.

உள்முகமாகச் செல்லும் போது தான் அவன்
உள்ளம் தெளியும், உண்மைகள் துலங்கும்.

உய்யும் வழிகள் புரியும்; தானும் உய்ந்து
உலகையும் முயன்று உய்விக்க முடியும்.


அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே!
அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணினால்,

அழகுற அமையும் செய்யும் செயல்களும்,
அழகிய தவமும், உய்யும் முயற்சிகளும்.

இல்லம் துறந்து வனம் சென்று, தவம்
இல்லதினரால் புரிய முடியாது அன்றோ?

ஓசைகள் ஒடுங்கிய நேரத்தில் அவர்கள்,
ஓசை இல்லாமல் தவம் செய்ய வேண்டும்.

இந்த மூன்று தாரக மந்திரங்களையும்,
சொந்தம் செய்து கொண்டால் போதும்!

மனிதப் பிறவியின் மாயங்கள் விலகிப்
புனிதமான வாழ்வு நாம் வாழ்ந்திடலாம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
malarum ninaivugaL...

குட்டி கண்ணன்கள் இருவர்!

மேடை பயம் இருக்கக் கூடாது என்று
மகன்களை மேடை ஏற்றி விடுவேன்!

Fancy dress, skating dance, அல்லது
Tableau, funny skits, வீணை வாசிப்பு!

பெரியவனுக்கு வெறும் மூன்று வயது!
அரசகுமாரன் வேடம் அணிவித்தேன்!

வீட்டில் நன்றகப் பேசிக் காட்டியவன்,
மேடைமீது விட்டவுடன் ஒரே ஓட்டம்!

"Prince Rajesh Varma தன்னுடைய
Privy purse ஐ வாங்கச் செல்லுகின்றார்!"

என்று கூறி நிலைமையைச் சமாளித்தேன்!
எல்லோருக்கும் சிரிப்புத் தாங்கவில்லை!

சின்னவன் அதற்கு நேர் எதிர்மறை!
சின்னக்கிருஷ்ணன் வேடம் அணிவித்தேன்!

'கை கொட்டிக் களிக்கும்' பெண்கள் அன்று
'கை கொட்டினார்கள்' இவனைச் சுற்றி!

இறங்க மறுத்தான் நடனம் முடிந்த பிறகும்!
"இங்கேயே இருக்கேன்" என்றான் மேடையில்!

அலுங்காமல்
அவனைத் தூக்கிக்கொண்டு
அங்கிருந்து இறங்கி வரவேண்டி இருந்தது !

ஒருநாள் கன்னட பஜன் பாடும் போது,
மெல்லிய சிரிப்பொலி அரங்கத்திற்குள்!

மிகவும் நல்ல, M.S.S. பாடிய பாட்டு அது!
மிக மெல்லிய நகைப்புக்குக் காரணம்???

Eye-level இல் பார்க்கவேண்டும் நாம்
மேடை மீது இருக்கும் போதெல்லாம்!

கீழே பார்த்தால், தொலைந்த பொருளைக்
கீழே தேடுவது போலவே இருக்கும்!

மேலே பார்த்தால் முகமே தெரியாது!
மேடை மேலே eye-level பார்வை தான்!


அதனால் தான் தெரியவில்லை எனக்கு,
மெல்லிய சிரிப்பலையின் காரணம்!

சப்தம் செய்யாமல் படிகள் எறிவந்து,
சமர்த்தாக என்னிடம் நின்று இருந்தது...

யார் என்று கூறுங்கள் பார்க்கலாம்!
என் குட்டிமகன் என் பிரிவைத் தாங்காமல்!

மூன்று நிமிடங்கள் மேடைக்குப் போனால்
பின்னாலேயே அங்கும் வந்துவிட்டான்!

Happy feet Mumbles போலவே என்னைத்
தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டு !

அவனுக்கு என் தோழி வைத்த பெயர்
"அம்மா தோகா = அம்மாவின் தோகை"

முருகனும் மற்றும் வேடனும் என்று
திருமுருகனின் இரு அவதாரங்களில்,

இருவரையும் வைத்து ஒரு tableau!
சிறப்பாக அமைந்துவிட்டது அது!

costumes and properties எல்லாமே
Home-made என்பது தான் அதிசயம்!

எங்கள் வாழ்வில் அது ஒரு பொற்காலம்,
எங்களை உருவாக்கினதே அந்த நாட்களே!
 
malarum ninaivugaL...

பஜ கோவிந்தமும், பஜ்ஜியும்.

Ladies Club நிகழ்சிகளின் போது,
Stereo Sisters சேர்ந்து பாடுவோம்!

(எங்கள் சகோதரர் வைத்த பெயர்
எனக்கும் ராஜி ராம் மேடத்துக்கும்!)

இருவர் குரலும் நன்கு இணையும்;
இழைந்து, இனிமையாக ஒலிக்கும்!

ஒரே வீட்டில் வந்து பிறந்ததாலா?
ஒரே குருவிடம் பயின்றதா
லா?

(இது நடந்தது ராஜிராம் professor
ராமநாதனிடம் கற்பதற்கு முன்பு! )

ஒரு நீண்ட பாடலைத் தேர்ந்தெடுத்து
சில முறை நன்கு practice செய்வோம்.

எத்தனை முறை பாடவேண்டும்;
எங்கெங்கு நிறுத்தவேண்டும் என.

இணைந்து பாடும்போது இவை
இனிமையைக் கூட்ட உதவும்.

ஆளுக்கு ஒருபக்கம் இழுத்தால்
தாளாது இசை காதால் கேட்பதற்கு.

ஒருமுறை பஜ கோவிந்தம் பாடிட,
ஒரு மெம்பருக்கு brainwave வந்தது!

"பஜ்ஜி, சொஜ்ஜியை எல்லோருக்கும்
பாடும் போதே கொடுத்துவிட்டால்....

பத்து நிமிடங்கள் நேரம் மிச்சமாகும்!"
பஜ்ஜி வரவும், பாட மறுத்துவிட்டோம்!

"பஜ கோவிந்ததை நாங்கள் ஒருபோதும்
பஜ்ஜி கோவிந்தம் ஆக்க மாட்டோம்!" என்று.

இறுதியில் வென்றது நாங்களே!
மரியாதை தெரிய வேண்டாமா?

ஆதி சங்கரரின் அந்த அற்புதமான
அறிவுப் பொக்கிஷதுக்குத் துணை

காபி, டீ, பஜ்ஜி, சொஜ்ஜியா? :hungry:
கச முசா என்னும்
வெட்டிப் பேச்சா ? :blabla:

ஒருநாளும் சம்மதிக்கவே மாட்டோம்!
அருமை பெருமையை விடமாட்டோம்! :nono:

நம் கலையை நாமே மதிக்காவிட்டால்
நம் கலையை பிறர் மதிப்பார்களா? :moony:

 
I always used to get mused by the disguises used in movies.

A large wart on the cheek or chin,

A pair goggles hiding the forehead and cheeks, :spy:

A simple scarf, :music:

A pencil thin mustache.

a goatee,

A hat,
:hat:
A handkerchief around the neck... :hippie:

I am amused even more that similar things can happen in a Forum where we can hardly see each other and yet sense the discrepancy.
 

நாம் தேடுவது எல்லாம் நிச்சயமாக
நமக்குக் கிடைக்கும் என்றாவது !

"கறுப்புக்கு நகை போடு!
சிவப்பைச் செருப்பால் அடி!"

பழமொழியின் ஆதாரம்
ஆதித்யாவில் கிடைத்தது!

மரிக்கொழுந்து திரைப் படத்தில்
பாட்டி பேத்தியிடம் கூறுவது! :thumb:​
 
malarum ninaivugaL....

பொற்கைப் பாண்டியன்???

ஒரு நாள் இரவு ஏழு மணி இருக்கும்;
ஒரு worker வந்து கதவைத்தட்டினான்;

"வயிறெல்லாம் எரிகிறது அம்மா!
வயிற்றுக்கு எதாவது கொடுங்கள்!" :hungry:

ஆசாமி full load இல் இருந்ததால்
கதவைத் திறக்கவில்லை நான்! :spit:

இராப்பிச்சைக்காரன் போல சரியான ரவுஸ்!
"இப்போதே security யைக் கூப்பிடுகிறேன்! " :doh:

இல்லாத போனில் பேசுவது போல் நடிக்க,
செல்லத் தொடங்கினான் 'வேண்டாம்' என. :phone:

ஒரு நல்ல காரியம் செய்தான் போகும்போது!
ஒரு வீடு விடாமல் கதவுகளைத் தட்டினான்.

அடுத்த நாள் 'குசலம்' விசாரித்தவர்களிடம், :boink:
மிடுக்குடன், "உங்கள் வீட்டிலும் கூடத் தானே!" :fish:

என்றவுடன் வம்பு வளர்வது நின்றது! :tape2:
அன்று எல்லா வீட்டுக் கதவுகளையும்,

அந்தப் பொற்கைப் பாண்டியன் மட்டும்
தட்டாமலேயே போய் இருந்திருந்தால்!!! :gossip:
 
malarum ninaivugaL...

உத்வேகம் ஊட்டிய பத்மா மேடம்.

எங்கள் Professor பெயர் மிஸ் பத்மா. :nerd:
நீங்கள் Nerd என்றால் புரிந்துகொள்வீர்கள்.

நிறைய மூளை, கூடவே நிறைய prejudice! :ohwell:
நிரம்பப் பிடிக்கும், அல்லது நிரம்ப வெறுப்பார்!

அவரையே சிறியதாக்கியது போல மாணவி. :nerd:
அவளைக் கண்டால் தேனாக ஒழுகுவார்.

பிறரிடம் படு ஸ்ட்ரிக்ட். படிப்பைத் தவிர
பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது!

போகாவிட்டால் கோபம் வரும் நம்மை
வரச் சொன்ன lecturer, professor களுக்கு.

போனால் கோபம் வந்துவிடும் இவருக்கு!
ஆனாலும் தர்ம சங்கடம் நமக்குத் தானே!

வருட முடிவில் வெளிப்படையாகவே
விருப்பு வெறுப்பைக் காட்டத் தொடங்கவே,

நான் முடிவு செய்தேன் அந்தப் பெண்ணை விட
நல்ல மார்க்குகள் எடுத்தாகவேண்டும் என்று.

விழுந்து விழுந்து படித்தது இறுதித் தேர்வில்
வீணாகி விடவில்லை! "Distinction" கிடைத்தது!(75% to 84%)

அவருடைய அருமை மாணவி வாங்கியதோ
அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்துக்குள் (A grade).

அவர் அப்படிச் செய்யாதிருந்தால் எனக்கு

அத்தனை உத்வேகம் இருந்திருக்குமா? :laser:

தீமையே செய்ய முயல்பவரிடம் இருந்து கூட
நன்மையை வரவழைக்கலாம் நம் முயற்சியால்!:ballchain:
 
இது எப்படி இருக்கு?

ஈமூ கோழி வளர்ப்பதைப் பற்றி
பெரிய பெரிய சுவர் விளம்பரம்! :horn:

"ஈமூ கோழி வளர்ப்பதைப் பற்றிய
விளம்பரத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்!" :drum:

என்று இன்னொரு விளம்பரம்
அதன் அருகிலேயே! :rolleyes:
 

இது எப்படி இருக்கு?

நான்கு சகோதரர்கள்.

முதலவரும், மூன்றாமவரும்
இறையடி சேர்ந்து விட்டனர்.

நான்காமவரும் மறைந்தார்.
நாற்பது மைல் தொலைவில்

வசிக்கும் இரண்டாமவர்
பார்க்கச் செல்ல வில்லை!

பத்து அன்றும் செல்லவில்லை!
சுப ஸ்வீகாரம் அன்றும் அவர்

அந்த வீட்டுக்குச் செல்லவில்லை.
அந்தத் தம்பியின் மனைவியே இவர்

வீட்டுக்கு வரவிரும்பியபோதும்
முகத்தில் அடித்தபோல சொன்னார் :hand:

"சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை!" :nono:
சாஸ்திரம் என்ன ஒன் வே டிராஃபிக்கா? :shocked:

இவர்களுக்கு இல்லாத சாஸ்திரம் :mad:
அவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது???
 
இது எப்படி இருக்கு???

"ஒரு நாளாவது.... ஹூஹும்!!!" :nono:

ஒரு மனிதன் தினமும் அதே சினிமா பார்க்க வருவான்.
ஒரு டிக்கெட் எடுத்தது உள்ளே செல்வான்.
ஒரு காட்சி முடிந்ததும் வெளியேறி விடுவான்.

நண்பன் அதிசயித்துக் கேட்டான்,
" தினமும் தவறாமல் பார்க்கும்படி
அதில் அப்படி என்ன தான் இருக்கு?" :confused:

"கதாநாயகி ஆற்றில் குளித்துவிட்டுக்
கரை ஏறும்போது சரியாக ஒரு ரயில் வருகிறதே! :mad2:
அந்த சனியன் பிடித்த ரயில் என்றாவது :whoo:
ஒரு நாளாவது லேட்டாக வருமா என்று பார்க்கிறேன்"

பின் குறிப்பு.

இது நடந்தது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பு...

கதாநாயகிகள் உடல் அழகைக் காட்சிப் பொருள் ஆக்கும் முன்பு!​
 
malarum ninaivugaL...

ஹனுமான் போல (rise to the occasion)!

Mrs. Mehta சிங்கக் கிளப்பின் ப்ரெசிடென்ட்!
தலைக்கு மேல் goggles ஐ ஏற்றிவைத்து
ப்

படு ஸ்டைலாக இருப்பார்! பைசா பார்ட்டி!
posh car இல் தான் பயணம்! self driving !

எல்லாம் சரிதான் ஒரு நாள் நாங்கள்
ஒரு செம்மண்பாதையில் போகும்வரை!

U turn செய்ய கொஞ்சமும் இடமில்லை!
உள்ளே இருந்து reverse இல் வரவேண்டும்

வெலவெலத்துப் போய்விட்டார் அவர்!
வெலவெலப்புக்குக் காரணம் என்ன ...?

வாழ்கையில் ஒருமுறை கூட அவர்
Reverse gear இல் சென்றதே இல்லை!

நான் காரைத் தொட்டு குறைந்தது
வருடங்கள் 15 ஆகியிருக்கும்!

மற்றவர்களுக்கு காரைப் பற்றி
மருந்துக்குக் கூடத் தெரியாது!

காரை மெயின் ரோட்டில் கொண்டு
கரை சேர்க்கும் பொறுப்பு என்னிடம்!

மற்றவர் நம் மேல் வைத்துள்ள
மாறாத நம்பிக்கைகள் புரியும்

மாயங்கள் வாழ்வில் பற்பல!

மறக்கவில்லை driving கொஞ்சமும்!

அப்பாவை நினைத்துக்கொண்டே,
அழகாக reverse செய்து வந்தேன்!

மெயின் ரோடுக்கு வந்தவுடன்
காரை நிறுத்தி விட்டு இறங்கி

நான் அமர்ந்து வந்த இடத்துக்குப்
சென்று அமர்ந்து கொண்டு விட்டேன்!

அப்பா அடிக்கடி சொல்லுவது,

"You are not what you think you are!

You are not what I think you are!

You are what you think I think you are!"

எத்தனை உண்மையான வார்த்தைகள்!


 
I have heard that "The shortest route to a man's heart is through his stomach!"

But I had no idea that FOOD was the only thing some of them ever seem to think about!

We got caught amidst a group of eight people who had gathered in our cubicle! (How do they ever find out that I am allergic to any loud noise and descend on me in herds like these?)

The only thing they discussed was food, food and more food! I was forced to listen to their conversation (over the handy ear plugs I always carry with me) and learn how many types of AAPAMS, Dosais, Idlies were available and in which hotels.

They ordered supper enough for a hungry army and flung themselves quite shamelessly on the boneless chicken which was the side (main?) dish for the dosai, chappatthi etc.

Most of them already looked like barrels/ fridge/ almarahs fixed with a head on the top.

The samething followed next morning during the breakfast. I almost started hating the very sight of food.

Why do people who flash bundles of 500 and 1000 rupees notes want to spend them ONLY on their ownselves and that too in processing the already processed food and converting them into hedious final product!

Why are some men so OBSESSED with food? :mmph:


 

malarun ninaivugal...

ஸ்டன்ட் மாஸ்டர்.

திருமணமான புதிதில் வரவேண்டியிருந்தது
ஒரு முறை கோவைக்கு reservation இல்லாமல்!

எங்கள் ரயில் வந்ததும் இவர் unreserved கோச்
ஜன்னலைப் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தார்.

கண்ணைக் கூடச் சிமிட்டாமல் கவலையோடு
கணவனைப் பார்த்திருந்தாலும் காணவில்லை!

ஒரு நொடிப் பொழுதில் எங்குமே காணோம்!
ஒரு வேளை கால் வழுக்கி விழுந்துவிட்டாரோ?

கண்களில் ஜலம் கொட்டத் தொடங்கி விட்டது.
எண்ணங்கள் தறிகெட்டு ஓடத் தொடங்கி விட்டன.

ஜன்னல் வழியாக அவர் கைகளை ஆட்டுவது
கண்ணில் படாவிட்டால் மயங்கியிருப்பேன்!

ஓடிய வேகத்திலயே ஜன்னலைப் பற்றிக்கொண்டு
உள்ளே குதித்திருக்கின்றார் ஸ்டண்ட் மாஸ்டர்!

திரைப் படத்தில் பார்த்திருந்தேன் அது போன்ற
உறைய வைக்கும் திகில் காட்சிகளை நான்!

வாழ்க்கையில் பார்த்தது அதுவே முதல் முறை!
ழக்கம் ஆகிவிட்டது பிறகு இவர் ஸ்டன்ட்கள்.​

எல்லா ஸ்டேஷன்களிலும் இறங்கியாக வேண்டும்!
ஓடி வந்து ஓடும் ரயிலில் மேலே ஏற வேண்டும்!

எனக்கு வரும் டென்ஷனைக் கண்டால் முகம் மலரும்;
இனிப்பு பலகாரங்கள் நிறைய சாப்பிட்டது போல!

டிக்கட்டை மட்டும் நானே வைத்துக்கொள்ளுவேன்;
டிக்கெட் செக் செய்ய வந்தால் காட்ட வேண்டுமே!

"டிக்கெட் அவரிடம்; அவர் எதோ கம்பார்ட்மென்டில்"
டிக்கெட் கலெக்டர் ஒப்புக் கொள்ளுவாரா இதை?

TOM AND JERRY CARTOONS ஏன் பிடிக்கும் தெரிந்ததா!
TOM போலவே TEASE செய்து கொண்டே இருப்பார்!

JERRY போல நான் டபாய்த்து விடுவேன் எளிதாக!
வாழ்க்கையைத் தானே அதிலும் PROJECT செய்கிறார்கள்!
 

இது எப்படி இருக்கு???

"ஒரு தடவையாவது....!!!"

அதிசயமாக நிஜமான இளம் தம்பதியர்!!!

பெண்ணின் கண்களில் குறும்பு கொப்பளித்தது.

மருதாணிக் கைகளில் குலுங்கும் வளையல்கள்.

ஒன்பது கஜப் புடவையில் அழகான பொம்மை போலவே! :love:

புதுக் கணவன் தாலி கட்டியதும் படையோட்டம் போல்
எல்லோரும் ஜம்ப் பண்ணி மேடை மேலே கை குலுக்க! :bump2:

கணவனின் கசின் கை குலுக்கினான் ஓ கே!

கணவனின், கசினின், மச்சானின், தம்பியும் கூடவா? :shocked:

ஒரு தடவையாவது எப்படியாவது

அந்தத் தளிர்க் கரத்தைப் பற்ற வேண்டும்

என்ற ஆவல் அனைவர் முகத்திலும்

எழுதி ஒட்டி இருந்தது பெரிய எழுத்தில்.

சபலம்.......சுலபம் ஆனது! :rolleyes:
 
இது எப்படி இருக்கு???

பாத்திரம் தேய்த்து கவிழ்த்தும் draining போர்டில்

அஞ்சு இன்ச் உயரத்துக்கு சில செடிகள். :shocked:

சிதறிய கடுகிலிருந்து முளைத்தவை???

புழு போல் காம்பும் இரண்டே இரண்டு இலைகளும்!!!

தண்ணீரை மட்டுமே நம்பி வளர்ந்து அதிசயம் தான்.

வெளியில் முதல் மாடி உயரத்தில்

தண்ணீர் பைப்பில் ஒரு சிறு செடி இருந்தது.

இப்போது அது Medusa போல் ஏகப்பட்ட

இலைகளுடனும், வேர்களுடனும்!

எல்லாமே நமக்கு possible தான்!

அங்கு தான் மண்ணே இல்லையே!

பைப்பில் வளர்ந்து தழைத்து நிற்பது கற்றாழை!

"The tough get going when the going gets tough!"

நூற்றுக்கு நூறு உண்மையே! :high5:

எவ்வளவு உயரம் வளருகிறது பார்க்கலாம். :)
 
பள்ளமும், வெள்ளமும்!


முதிர்ந்த கதிர் தலை சாய்ந்திருக்கும்;
முதிராத பதர்கள் வானம் நோக்கும்.
நிறைந்த எடைத்தட்டு கீழே செல்லும்;
குறைந்த எடைத்தட்டு மேலோங்கும்.

கனிந்த மரக்கிளை பணிந்திருக்கும்;
கனி இல்லாதது விறைத்து நிற்கும்.
கனமுடைய பொன் நீரில் மூழ்கும்;
கனமில்லாத மரம் நீரில் மிதக்கும்,

பண்புள்ளவர்களே பணிவுள்ளவர்கள்;
பணிவுள்ளவர்களே பள்ளம் போன்றவர்.
பள்ளத்திலே தான் வெள்ளம் தங்கும்;
வெள்ளம் பாய்ந்துவிடும் மேட்டிலிருந்து.

குருவின் உபதேசங்கள் வான் மழைபோல,
குறைவின்றிச் சேரும் எல்லோரையுமே;
உள்ளத்தில் உபதேச மொழிகள் உறையும்,
பள்ளம் போல அது பணிவாக இருந்தால்!

வெள்ளம் போலப் பாய்ந்து உபதேசம்
வெளியேறும், உள்ளம் ஒரு மேடானால்.
மேட்டு நிலம் வயலாகாது; அது வரப்பே.
மேன்மையான வயல் பள்ளமானதே!

பணிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்;
வேண்டாம் அகந்தையும், ஆரவாரமும்!
பணியும் நாணல் புயலைத் தாங்கும்.
பணியாத மரமோ புயலில் வீழும்.

உள்ளத்தை நன்கு பணிவாக்குவோம்;
வெள்ளம் போல வரும் நன்மொழிகளை,
கள்ளம் இன்றிச் சேகரித்து வைத்து நலமுற,
பள்ளம் போல நாம் ஆகிப் பயனுறுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

விஸ்வாமித்திரர் வசிஷ்டர் வாயால் "ப்ரம்ம ருஷி" என்று போற்றப்பட்டது எப்போது தெரியுமா???
சின்னத்திரையில் காணுங்கள். கண்டு ரசியுங்கள்! :)

https://youtu.be/AKF8UsNyphk


Attachments area

Preview YouTube video Raja Rishi-ராஜரிஷி-,Mega Hit Tamil Devotinal H D Full Movie


Raja Rishi-ராஜரிஷி-,Mega Hit Tamil Devotinal H D Full Movie






 

Latest ads

Back
Top