• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

malarum ninaivugaL....


யசோதாவைப் போல!

என் மகன்களுக்கு உண்டு இரண்டு தாய்!
பெற்றவள் ஒன்று, வளர்த்தவள் என்று!

பெற்றவள் நான் தான், தேவகியைப் போலவே;
வளர்த்தவர் ராஜி ராம், யசோதாவைப் போலவே!

பிறந்த முதல் ஆறு மாதங்கள் அவரே
குழந்தைக்கு முழுக்க முழுக்க " இன்- சார்ஜ்!"

பிறகு சின்னவன் பிறந்த போதும்,
பெரியவன் ராஜி சித்தியிடம் தான்

உண்பான், உடுப்பான், குளிப்பான்;
வேறு யாரும் வேண்டாம் அப்போது!

அப்பா வரும் வரை காத்திருப்பான்;
எங்கள் மேல் கோள் சொல்வதற்கு!

"தாத்தா! பாட்டியை ஜெயில்லே போடு!
தாத்தா! மம்மியையும் ஜெயில்லே போடு!

ராஜி சித்தியை ஜெயிலில் போட வேண்டாம்
விஜி சித்தியை ஜெயிலில் போட வேண்டாம்


பிறகு விசாகாவில் தினம் தவறாமல்
செல்ல வேண்டும் சித்தியின் வீட்டுக்கு!

அவர் தோளின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு,
சின்னவன் "தித்தப்பா"வின் கிராப்பை அளைவான்.

சீமா பிறந்த பின் "awesome threesome"!
நான் தேவையே இல்லை அவர்களுக்கு!

I.I.T சேர்ந்த பின் தாய் வீடானது சென்னை!
தாயாகவே ஆகி விட்டார் ராஜி சித்தியும்!

சின்னவன் இன்னும் இரண்டு ஆண்டுகள்
அதிகம்! பிளஸ் 2 + I. I. T. என 6 ஆண்டுகள்.

இன்றைக்கும் அவர்களுக்கு இஷ்டமானவர்
என்னைவிட அவர்களின் ராஜி சித்தி தான்!

சிக்குன்குனியா வந்தது திருமணத்துக்கு முன்பு!
இருக்கும் கை கால்களையும் ரிப்பேர் ஆக்கிவிட்டது!

சின்னவன் திருமணத்தின் போது ராஜி ராமிடம்
சொன்னேன் "தாய் போல எல்லாம் செய்"யும்படி!

மணமகனின் தாய் நான் தான் என்றே தெரியவில்லை!
சம்பந்தி மாமி என்று ராஜியை நன்கு கவனித்தனர்.

நானே அதை என் ஸ்டைலில் அடிக்கடி சொல்வதுண்டு,
"இந்த mummy வெறும் dummy! சித்தி தான் உங்கள் mummy!"​
 
இறை என்பது...

ஆணும் அல்ல! :nono:

பெண்ணும் அல்ல!:nono:

அலியும் அல்ல! :nono:

உருவம் அற்றது!

பெயர் இல்லாதது!
அது ஒரு ஒளிப் பிழம்பு!:flame:

நூறு கோடி சூரியர்களின்

ஒளியை வெல்ல வல்லது!

என்று படித்ததாக நினைவு!!!
 
malarum ninaivugaL....

சீமா, நமா and ஓஜி.

ஒன்றும் விளங்கவில்லையா? பேஷ் பேஷ் !
மூன்று மழலைகளின் பெயர்கள் இவைகள்!

சீமா FOR ஸ்ரீதர், நமா FOR ரமேஷ்
ஓஜி FOR ராஜேஷ்! NICE NICKNAMES!

("ரா" வாடுக்கு அப்புடு ராது காதா ???
ரமேஷ் =>நாமா மற்றும் ராஜேஷ் => ஓஜி)

"ராஜி சித்தி 'டாட்டா' போனார் இரயிலில்!
ராஜி சித்தி திரும்பி வந்தார் பேபி சீமாவுடன்!

ஃ சீமா ரயில்வே ஸ்டேஷனில் கிடைத்தான்!"
இது தான் மழலைகளின் அற்புதமான லாஜிக்!

சீமா என்னை "மம்மி!" என்றே கூப்பிடுவான்
அன்றும், இன்றும் நான் "மம்மி", ராஜி "அம்மா"!

ஸ்விம்மிங் கூட்டிக் கொண்டு போனால்
யாரையும் நம்பி நீரில் குதிக்கமாட்டான்!

நம்புவது அவன் ஒருவரை மட்டுமே!
நம்பகமான அந்த நபர் நானே தான்!

அப்போதெல்லாம் 'top to toe match' ஆக
ஆடை அணிமணிகள் அணிவேன் நான்.

"ஐ! இன்னைக்கு GREEN மம்மி!" என்பான்
"ஐ! இன்னைக்கு YELLOW மம்மி!" என்பான்

ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்த பிறகு
பொடி நடையாக நடந்து நடந்து மெல்ல

மெயின் ரோட்டைக் கடந்து குழந்தை
என் வீட்டுக்கு வந்து விட்டான்!

'பள்ளிக்குச் சென்று பார்த்த பின்
குழந்தையைக் காணோமே' என்று

கவலைப் படுவார்களே அவர்கள்
என்று அன்று நான் தவித்த தவிப்பு!

மொபைல் போன் மட்டும் அல்ல - அன்று
ரெகுலர் போன் கூட இல்லை என்னிடம்!

ஐந்து வயதில் சென்னைக்குச் சென்று விட்டான்.
Awesome Threesome Group பிரிந்து விட்டது.

பிறகு சென்னையில் சேர்ந்து கொண்டனர்
மீண்டும் 1988 லிருந்து 1995 வரையிலும்!

சின்ன வயதிலேயே ஜோக் அடிப்பான் சீமா.

"அவரு வந்தாரு! சாப்டாரு! போனாரு!"

ஒரு சாப்பாட்டு ராமனை இதை விடச் சுருக்கமாக
வர்ணிக்க முடியுமா எவராலும் என்று கூறுங்கள்!

"VENI, VIDI, VICI" போலவே இல்லையா?
சீசரா, சீமாவா யார் உண்மையில் ரத்ன சுருக்கம்?

கற்பனை மிகவும் அதிகம்! சொல்வான் ஒரு
கதை
ரே ஒரு வார்த்தையைக் கொண்டு!

"மருந்துக்கு கடைப் பையன் பெயர் மாத்ரேயா!" என்றதும்
"மாத்ரேயா நீ என்ன மாத்தரையை மாத்தரையா?" என்பான்

பிச்சை வாங்க வேண்டும் அரட்டை அரங்கம்
விசுவின் 'பைத்தியம் வைத்தியம்' டயலாக்!

நடந்து கொண்டே இருப்பான் எப்போதும்!
சங்கர் மகாதேவன் குறுந்தாடி இப்போது!

இன்று இரண்டு அழகிய குட்டி தேவதைகளின் தந்தை.
எல்லாக் கலைகளையும் அவர்களுக்கு கற்பிக்கின்றான்.

பாங்கான மனைவி; பாசமுள்ள குடும்பம் என்பதால்
ஃ பாரின் நகரிலும் உண்டு பெரிய நண்பர்கள் வட்டம்!

 
Last edited:
NEWTON'S APPLE.

When a big red apple raw,
Falling from a tree we saw;

We put out our eager paw,
With a very wide open jaw!

And feel like a real Shaw,
While at the apple we gnaw!

We might, for it, even claw;
We may not mind its flaw!

Our brains need to thaw,
To hit on Nature's jigsaw!

It takes a genius to draw,
The great gravitational law.
 
malarum ninaivugaL...


# 1. CITIZENS OF THE WORLD.

கருமமே கட்டளைக் கல்.

கல்லூரியில் நான் படிக்கும் போது,
கல்லூரி நண்பிகள் கேட்பதுண்டு,

என்னிடம் "நீங்கள் வடமாளா?" என்று!
என் பதில் "தெரியாது!" என்பதே ஆகும்!

பிறகு அம்மாவிடம் கேட்டு அறிந்தேன்;
பிறப்பால் நாங்கள் வடமாள் என்பதை!

அதனால் எந்தப் பெருமையும் இல்லை!
அதனால் எந்த இழிவும் எனக்கு இல்லை!

பெருமையும் சிறுமையும் நம்முடைய
கருமங்களால் வருவன என்று அறிவேன்!

குழந்தைகளிடம் ஜாதியைப் பற்றிப் பேசிக்
குழப்பியதில்லை ஒரு நாளும் நாங்கள்.

அப்பா ஒரு டாக்டர், கிராமத்தில் இருந்தவர்,
அத்தனை விதமான மக்களும் அவர் patients!

தாத்தாவே 'ஐயர்' பட்டத்தை துறந்தவர்.
அப்பாவும் அப்படியே செய்தவர் தான்.

இவரிடம் "செல்வராஜ் ஐயரா?" என்று கேட்டால்,
இவர், "ஆமாம் செல்வராஜ் ஐயர் தான்" என்பார்!

Vegetarian களாக இருந்து வந்தோம்;
வேறுபாடுகள் ஒன்றும் பார்த்ததில்லை!

அதனால் குழந்தைகளும் வளர்ந்தார்கள்
"Citizens of the world" and "broad minded" ஆக.

நாங்கள் வாசித்த காலனி மிகவும் பெரியது.
நாட்டின் எல்லா பிராந்திய மக்களும் உண்டு!

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போலவே
ஒற்றுமையாக அங்கே வாழ்ந்திருப்போம்!

பிராந்திய வேறுபாடுகளோ, ஜாதி, மத,
பிற வேறுபாடுகளோ நிலவியதில்லை!

நாங்கள் விசாகாவை விட்டு விட்டு வரும் போது
எங்கள் வீட்டில் ஒரு மாதம் சமையலே இல்லை!

எல்லோர் மத்தியிலும் கடுமையான போட்டா போட்டி
எவர் வீட்டில் அன்று எங்களுக்கு உணவு என்று!

மறுக்கவே முடியாது அன்புத் தொல்லையை!
மறக்கவும் முடியவில்லை அந்த நாட்களை!

அப்படியும் சில வீடுகளில் உண்ண முடியவில்லை!
அவர்கள் "தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாங்க!" என்று

அழைத்துத் தங்கள் அன்பை வெளிக் காட்டினார்கள்.​
அழகழான blouse bits எத்தனை கிடைத்தன எனக்கு!

ஒரே ஊரில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால்
ஊர் முழுவதும் நமக்கு நண்பர்கள் ஆகி விடுவார்கள் !

அன்று மட்டும் அல்ல! அதற்குப் பத்து ஆண்டுகள் பின்னர்
சென்றபோதும் அதே போட்டா போட்டி! அன்புத் தொல்லை!

பெரியவன் சொன்னான், "நாம் இவ்வளவு popular என்று
தெரியாது எனக்கு இவ்வளவு நாட்களாக! " என்று! :humble:​
 
இது எப்படி இருக்கு???

டென்டிஸ்ட்டிடம் செல்ல ஆட்டோ!

"எத்தனை fare ?" என்று கேட்டால்

"நீங்களே சொல்லுங்கள்!" என்றான்.

speed breaker ரைத் தாண்ட உதவத்

தனியாகக் காசு தர வேண்டுமாம்!

ஒரு கண்ணை அடித்தபடி அவன் ;)

சிரித்துக் கொண்டே கூற

இரு கண்களையும் சிமிட்டி

நான்," இது போதுமா?" என்றேன்!
:rolleyes:
 
இது எப்படி இருக்கு???

physiotherapy பெண் சொன்னாள்,

'உங்கள் ஊரிலிருந்து

உங்களைப் போலவே ஒருவர்

காலவலி என்று வந்திருந்தார்!

ஆனால் அது நீங்கள் இல்லை" :high5:

"நான் தான் இரண்டு மாதங்களுக்கு

முன்பு கால் வலி என்று வந்தேன்"

நம்பவில்லை அந்தக் குட்டிப் பெண். :nono:

கோணை வகிட்டை நேர் வகிடாக்கி

யோகா செய்து உடல் ட்ரிம் ஆனால்

ஆளே மாறிவிடுவோமோ???

ஒரு மச்சத்தை மட்டும் ஒட்டவைத்து

இரட்டை வேடங்களை வேறு படுத்தும் :decision:

திரைப்படங்கள் நினைவுக்கு வந்தன! :rolleyes:
 
இது போதுமா???

ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி கேட்டால்

பாதியைத் திருப்பித் தருகின்றான் ஆட்டோ டிரைவர்!

போகும் போது நாற்பது ரூபாய்!!!

வரும் போது வெறும் இருபத்தி ஐந்தா???

"போதுமா பணம்?" என்று கேட்டால்

அதிகம் எடுத்துக் கொண்டு விட்டோமோ என்று

அவசரமாக இடத்தைக் காலி பண்ணுகிறான். :bolt:

இது எப்படி இருக்கு??? :rolleyes:
 
எந்த நாட்டில் பிறந்தால் என்ன?
எந்த மதத்தினர் ஆனால் என்ன?

உற்சாகமும், சாட்டை போல் உடலும் இருந்தால்
உலகினில் எதையும் நாம் சாதித்துக் காட்டலாம்!

https://youtu.be/uRK9wLLBzOY

https://youtu.be/lDdb9RNX2dA

https://youtu.be/vLZjpaPAbyU

Attachments area

Preview YouTube video Bharata Natyam. Shiva Tandava


Bharata Natyam. Shiva Tandava
Preview YouTube video Shiva Tandava. Kapalini. Bharata Natyam


Shiva Tandava. Kapalini. Bharata Natyam
Preview YouTube video Thillana Chandrakauns


Thillana Chandrakauns






 

கோணை வகிட்டை நேர் வகிடாக்கி

யோகா செய்து உடல் ட்ரிம் ஆனால்

ஆளே மாறிவிடுவோமோ??? ..............
வகிட்டை மாற்ற வேண்டாம்; ட்ரிம் ஆக வேண்டாம்;
ஏன்! புடவையைக்கூட மாற்ற வேண்டாம் - அவர்கள் குழம்புவதற்கு!! :confused:
இதோ, பாஸ்டன் Target Store ஒன்றில் என் அனுபவம் (2009):

''அன்று மாலை கடையில் ஒரு அனுபவம் கிடைத்தது;
இன்று நினைத்தாலும், சிரிப்பு அடங்காது வருகிறது!

மாத்திரைகளை உடைக்க இயலாத அன்னை கேட்டார்,
மாத்திரை உடைக்க வேண்டி, குட்டி உபகரணம் ஒன்று!

மூன்று மாதம் கண்ணில் படாத அந்தச் சின்னக் குட்டி,
அன்றுதான் 'பார்மசி' பிரிவில், எம் கண்களில் பட்டது!

இத்தனை நாள் நான் விசாரித்தது, ஒரு TABLET CUTTER;
இத்தனை நாள் தெரியாத அதன் பெயர், PILL SPLITTER!


PILL SPLITTER மூன்று வகைகள் இருக்க, அதில் ஒன்றை
BILL போட நாங்கள் எடுத்துக்கொண்டு சென்றோம்!

3.29 விலையுள்ள அதை சுயசேவைப் பிரிவில் வைக்க,
3.99 என விலை அச்சடித்த காகிதம் வந்து விழுந்தது!

விளையாட்டாகச் சென்று, விலை வித்தியாசம் சொல்ல,
விளையாட்டில்லை கடைக்காரருக்கு! அதிகாரி வந்தார்.

வித்தியாசக் காசைக் கேட்க, 'TAKE IT FREE, MA'M'என்று,
மொத்தப் பணத்தையும் தந்தார்; 'STORE POLICY' என்றார்!

இரண்டு நாட்கள் சென்றன; மீண்டும் அதே கடையிலே,
சிறந்த நண்பர் ஒருவருக்கும் PILL SPLITTER வாங்கணும்!

இந்த முறையும் தொகை 3.99! இன்றும் அதே அதிகாரி!
இந்த முறையும் முழுத் தொகையையும் தந்துவிட்டார்!

'இதேபோல முன் ஒரு லேடி கேட்டார்', என்று கூறினார்,
அதே புடவையில் அதே 'லேடி' நானே என்று அறியாமல்!


இந்த ஒரு விஷயம் மிக அதிசயமாகப் பட்டது, எனக்கு!
அந்த விலையை, இரண்டு நாட்கள் திருத்தவில்லையே!

வரவுதான் எனக்கு! பல கடைகளுக்குப் நான் சென்றதில்,
செலவு இல்லாது இரு PILL SPLITTERகள் வந்தன, ஓசியில்!

'கண்ணா! இன்னும் ரெண்டு PILL SPLITTER இருக்கே!' என்று
கண்ணடித்துச் சிரித்த என்னைத் தள்ளிச் சென்றான், மகன்!'' ;)
 
malarum ninaivugaL...

# 2. CITIZENS OF THE WORLD.

வெளிநாட்டில் படிப்பு.

படிப்பதற்கு வெளிநாடு சென்ற பிறகு,
சிடிசன்ஸ் of the world உண்மையாகவே!

தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டு...
தங்கள் வேலைகளைச் செய்து கொண்டு...

உலகம் முழுவதும் உள்ளனர் நண்பர்கள்
உள்ளன்போடு உண்மையாகப் பழகியதால்.

எத்தனையோ பெண்களைச் சந்தித்தாலும்,
எவரிடமும் மனதைப் பறி கொடுக்கவில்லை.

அவளைச் சந்திக்கும் வரையில் - ஏனென்றால்
அவள் அவனுக்கென்றே பிறந்திருகின்றாள்!

விட்ட குறை தொட்ட குறையோ அல்லது
ஜென்மாந்திர பந்தமோ தெரியவில்லை!

அவள் Doctorate ஸ்டுடெண்ட் கணிதத்தில்.
இவன் கணிதத்தில் அப்போதே Professor.

வீட்டில் சொல்ல பயம் இவனுக்கு - ஏனென்றால்
"வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு" ரகம் இவர்!
பெயர் நடுவிலேயே 'கட்' என்று வருகின்றதே! :smash:
"சொன்ன பேச்சுக்கு மறுபேச்சா?" ஊஹும் பிடிக்காது!

முதல் கோணல் முற்றும் கோணல் ஆகாமல்...
எதன் மூலம் சாதிக்க வேண்டும் என்று எண்ணி...

நாங்கள் சின்னவனுடைய Convocation (2002 ) இல்
அங்கு சென்றபோது பெரியவன் இதைச் சொல்ல நேர்ந்தது!

அவனுக்கு arranged marriage இல் நம்பிக்கை இல்லை.
அவன் நண்பர்கள் பலர் வாழ்க்கையில் தோற்று விட்டனர்

இங்கிருந்து அழைத்து சென்ற இளம் மனைவிகள் பலர்
தங்கவில்லை கணவர்களுடன் பல காரணங்களுக்காக!​

'எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவன்'
தப்பாது மண வாழ்விலும் வெல்ல வேண்டும் என்று

எங்களை ஜாதகத்தை எடுக்க அனுமதிக்கவில்லை!
இங்கேயும் எலியும் பூனையுமாக; நாயும் நரியுமாக;

உள்ள பல ஜோடிகளையும் பார்த்ததால் அவனுக்கு
"உள்ளம் ஒன்றியவளுடன் திருமணமே" சம்மதம்.

போட்டோவைக் காட்டினான் மிக மிகத் தயங்கியபடியே.​
தந்த நிறம், முத்துப் பற்கள், பெரிய கண்கள், சிறிய வாய்;

யாருக்குத் தான் பிடிக்காது இது போன்ற பெண்ணை!
இவருக்கும் அவளை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது!

ஆனால் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை இவர்!
"போனால் போகிறது நண்பர்களாக இருங்கள்" என்று Permission​

"அவர்கள் already நல்ல நண்பர்கள் தானே!" என்றால்
இவர் மாறவில்லை,"வேண்டாம் என்றால் வேண்டாம் தான்!"​

"அண்ணன், தம்பி என்ன சொல்லுவார்களோ?" பயம்.
"அக்கம், பக்கம் என்ன பேசுவார்களோ?" கவலை மனதில்!

என் மகனை நான் அறிவேன், அவன் உறுதியையும் கூட.
சொன்னால் சொன்னது தான்! அப்பாவைத் தாத்தாவைப் போல!​

நான் அவனிடம் தனியாகப் பேசிப் பார்த்தேன்!
என்னிடம் சொன்னான் அவன் ஒரு விஷயம்!

"அவள் ஒரு Foreigner என்பதைத் தவிர நீங்கள்
'அவள் வேண்டாம்' என்பதற்கு ஒரே ஒரு காரணம்

சொல்லுங்கள், நான் அவளை விட்டு விடுகின்றேன்!"
சொல்ல முடியவில்லை ஒரு காரணமும் என்னால்!

ஆனாலும் இவர் மனம் கொஞ்சமும் மாறவில்லை!
என் மேலும் பயங்கரமான கோபம் வந்துவிட்டது.

எல்லோருக்கும் திட்டோ திட்டு! சஸ்பென்ஸ் ஆக
எல்லாம் அப்படியே இருந்தன இரண்டு ஆண்டுகள்!

உறுதியுடன், பொறுமையுடன் இருவரும் காத்திருந்தனர்!
உறுதியுடன் நான் நாடினேன் என் சுந்தர காண்டத்தை !

'கிரீன் கார்டு' கிடைத்தது அவனுக்கு 2004 இல்!
'கிரீன் சிக்னல்' கிடைத்தது அவன் திருமணத்துக்கு!

இந்தியாவிலிருந்து பெண்ணை மணந்தால்,
இங்கிருந்து செல்வதற்கு ஆண்டுகள் ஆகும்!

அதே நாட்டில் உள்ள பெண்ணை மணந்தால்
விசா problem அவளுக்கு இல்லை என்றானது.

"அப்படியாவது பிடிக்காத ஒரு பெண்ணை அவனுக்குக்
கட்டி வைத்து அவனைக் கஷ்டப்படுத்த வேண்டுமா?"என

அனுமன் அருளால் அவர் மனம் மாறி விட்டது.
ராமனும் சீதையும் போல அவர்கள் ஒன்று சேர்ந்தனர்!

இன்று இரண்டு சமர்த்து குழந்தைகள் அவர்களுக்கு;
அன்பை வாரி வாரிப் பொழிகின்றனர் எங்கள் மீது

தன் தாயையே முதன்மைப் படுத்தி வந்தாள் முன்பு;
என்னைத் தன் தாயாகவே நினைக்கிறாள் இன்று.

Orlando trip தந்தது சில ஃபங்கல் infectionகளை எனக்கு;
பொறுமையாக தினமும் மருந்து தடவி விட்டாள் எனக்கு.

எல்லோருமே இனிய சுபாவமே கொண்டவர்கள் தாம்!
வாழை, மா போல முழுவதும் இனிப்பவர்கள் சிலர்.

பலாப் பழம் போல முட்களும், சடைகளும் முன்னிற்க

உள்ளே மட்டும் இனிப்பவர்கள் சில ரக மனிதர்கள்.

பொறுமையுடன் இருந்தால் சுவைக்கலாம் இனிமையை!
பொறுமையை இழந்தால் சுவையையும் நாம் இழப்போம்!


எல்லோரும் நல்லவரே...காணும் கண்கள் நல்லவைகள் ஆனால்!
எல்லோரும் தீயவரே ...காமாலைக் கண்களால் உலகைக் கண்டால்!

 
Last edited:
THE ETERNAL TRIANGLE.

It is the best known angle,
That fits well in a bangle.

It is as welcome as a spangle,
The only shape-giving-triangle!

Yet one is made to dangle,
Getting caught in a tangle;

Harder is the struggle,
The more is the entangle!

Leading to merciless strangle,
Landing one's life in a bungle;

Creating a hell of a jangle,
And ending up in a mangle!

It is the same good triangle!
But it now is a lovers' triangle!
 
A article from my grandson Tejas:

The Earth


0
0
0



The Earth is believed to be the only planet with life on it. The Earth was formed more than 4.5 billion years ago.

An year on the Earth is 365.25 days long. The excess ¼ of a day adds up together to make a extra day once in every four years.

This extra day has been allotted to the month of February. Such years with 29 days in February are called as Leap years.

Terrestrial Planets are the 4 rocky planets in the Solar System, Mercury, Venus, Earth and Mars. The Earth is the largest of the 4 Terrestrial Planets.


The Earth was formed from hot magma and gas, from the Sun.
First, volcanoes started up all over the earth Then, the rain began to fall, cooling the Earth.

More rain fell to make up all the oceans. But soon, poisonous gas mixed with the rain, making the oceans poisonous.

Soon, these chemicals started mixing forming the Primordial Soup. Some mixtures formed the first forms of life, Cyanobacteria. The Cyanobacteria in turn cleared the oceans.


That is how and when the life started on earth.
 
malarum ninaivugaL...

# 3. CITIZENS OF THE WORLD.

மனம் கவர்ந்த அந்த மங்கை யார்?

அவள் மலேசியாவில் வசிப்பவள்;
அவள் நம் புத்தரை வழிபடுபவள்;
அவள் அப்போதே pure vegetarian.
அவளுக்கு இந்தியா மீது அபிமானம்!

அவள் பியானோவில் தேர்ந்தவள்.
அவள் வர்ணம் தீட்ட வல்லவள்.
அவள் ஒரு ultra clean SUPER girl !
அவள் சமையலில் எக்ஸ்பெர்ட்!

அவர்கள் நால்வர் சிப்ளிங்க்ஸ்!
அக்கா nutrition specialist ஆவாள்.
அண்ணன் PhD in Mathematics.
தங்கை ஒரு பெரிய gynecologist.

அண்ணி practicing dentist.
அப்பா காலேஜ் பிரின்சிபால்.
அம்மாவும் ஒரு நல்ல டீச்சர்.
அமெரிக்கையான குடும்பம்.

குடும்பம் நமக்கு O. K. தான்!
பெண்ணும் நமக்கு O. K. தான்!
குறுக்கே நின்றது எல்லைக் கோடும்
குறுகிய மனப்பான்மையும் தான்!

எங்கள் வீட்டிலும் முழு எதிர்ப்பு.
என் cousins சிலர் மணந்துள்ளனர்
பஞ்சாபி, கர்நாடக, தெலுகு பெண்களை.
'பயல் நம்மவன்' என்றதால் பிரச்சனை.

அந்த இரண்டு ஆண்டுகளில் நான்
வாங்கிய திட்டுக்கள் எண்ணற்றவை!
"What does not kill you makes you stronger!"
I became stronger day by day - everyday!

பிறகு வீட்டில் நடந்த love marriages
எளிதாகி விட்டன! காரணம் அவற்றின்
பழியைச் சுமக்கவும், அவற்றுக்கான
வழி காட்டியாகவும், இவன் ஆனதால்!

இப்போது கூறுகின்றார்கள் ஒரு போலவே!
அப்போது அவன் சரியாகவே பெண்ணைத்
தேர்ந்து எடுத்ததாக! அப்போதே இதைக்
பகர்ந்திருந்தால் 2 வருடம் வீணாகி இராது!

மோர் போல பீரை மொண்டு குடிப்பவர்கள்;
ஊர்வன, பறப்பன, நடப்பனவற்றை எல்லாம்
வேறுபாடு இன்றி உண்பவர்களில் இருந்து
மாறுபடுவதால் இவள் ஒரு foreigner brahmin!

P.S.

SURVIVAL OF THE FITTEST! ADAPTATION TO LIFE!

I WAS NOT SERVED EVERYTHING ON A SILVER PLATE

THAT I COULD WALK AROUND ON A PATH OF ROSE PETALS

HOLDING A ROSE AND APPEARING TO BE SOFT AND GENTLE.
 
The pretty miss!

There was this pretty miss, :music:

Whom everybody liked to kiss; :kiss:

But she knew how to dismiss, :hand:

The adventurers with a hiss! :wacko:

"Was she made in scenic Swiss?" :noidea:

"Was she the storehouse of bliss?" :noidea:

But she knew how to dismiss :hand:

All adventurers with a hiss! :ohwell:
 
Love marriage is :cool: !!!

But, invariably one of the spouses becomes a slave

of the other!! :whip:

P.S: My observations of successful lovvus! :becky:
 
A article from my grandson Tejas:

The Earth


0
0
0



The Earth is believed to be the only planet with life on it. The Earth was formed more than 4.5 billion years ago.

An year on the Earth is 365.25 days long. The excess ¼ of a day adds up together to make a extra day once in every four years.

This extra day has been allotted to the month of February. Such years with 29 days in February are called as Leap years.

Terrestrial Planets are the 4 rocky planets in the Solar System, Mercury, Venus, Earth and Mars. The Earth is the largest of the 4 Terrestrial Planets.


The Earth was formed from hot magma and gas, from the Sun.
First, volcanoes started up all over the earth Then, the rain began to fall, cooling the Earth.

More rain fell to make up all the oceans. But soon, poisonous gas mixed with the rain, making the oceans poisonous.

Soon, these chemicals started mixing forming the Primordial Soup. Some mixtures formed the first forms of life, Cyanobacteria. The Cyanobacteria in turn cleared the oceans.


That is how and when the life started on earth.


So the ocean became poisonous becos of poisonous gases mixing with the rains and then these chemicals started mixing forming the Primordial soup....then.some early life formed..the Cyanobacteria which cleared the oceans!

Hey..this reminds me of the story of the churning of the ocean by Devas and Asuras and Lord Shiva swallowing the Hala Hala poison.



May be the poisonous gases were the Asura Principle .the Rains were the Deva Principle.both.caused toxicity upon mixing..then upon churning the ocean..that is mixing of chemicals and formation of primordial soup..Cynobacteria was formed and that cleared up the toxicity of the ocean.
So the Shiva Principle here is the Cynobacteria.
 
Last edited:
Love marriage is :cool: !!!

But, invariably one of the spouses becomes a slave

of the other!! :whip:

P.S: My observations of successful lovvus! :becky:

In every successful marriage there is one doting spouse who finds happiness in serving and the other lucky spouse who finds happiness in being served thus.

Both may be serving but both can not get served - unless there is third person who is a willing, loving and doting slave!
 
So the ocean became poisonous becos of poisonous gases mixing with the rains and then these chemicals started mixing forming the Primordial soup....then.some early life formed..the Cyanobacteria which cleared the oceans!

Hey..this reminds me of the story of the churning of the ocean by Devas and Asuras and Lord Shiva swallowing the Hala Hala poison.



May be the poisonous gases were the Asura Principle .the Rains were the Deva Principle.both.caused toxicity upon mixing..then upon churning the ocean..that is mixing of chemicals and formation of primordial soup..Cynobacteria was formed and that cleared up the toxicity of the ocean.
So the Shiva Principle here is the Cynobacteria.

Hi Renu!
Long time...No see!

So Tejas had to come into the picture to make Dr. Renu appear in this thread.

I shall show your comment to the little lovely kitten bee!
This is what Tejas has sent me by mail today!

0


I am a Kittenbee
 
malarum ninaivugaL....

#4. CITIZENS OF THE WORLD.

கல்யாண வைபோகமே!


இந்தியாவில் திருமணம் வைத்துக் கொண்டால்
இருக்கும் visa problems and attendance problems !

சிகாகோவில் திருமணம் செய்ய நிச்சயித்தோம்.
பெண், பான், பூ , பண்டிட் மட்டும் அங்கே இருந்து!

மஞ்சள், குங்குமம், பாக்கு, விளக்கு திரி, அவுல் பொரி,
மிஞ்சிய சாமான்கள் அத்தனையும் சென்றன இங்கிருந்து!

நல்ல கோவில் பூசாரி ஒருவர் கிடைத்தார்.
நமது தீவிரத்தால் அவரும் தீவிரமானார்.

ஷாப்பிங் லிஸ்ட் போல எழுதினேன் நான்;
செய்ய விரும்பிய திருமணச் சடங்குகளை!

கொஞ்சம் உதவி தேவைப்பட்டது இதற்கு!
தஞ்சம் புகுந்தேன் ராஜியிடம் வழக்கம்போல்.

முதல் நாள் விரதம் கோவில் அறை ஒன்றில்!
மறு நாள் திருமணம் ஒரு பெரிய ஹாலில்.

மணப் பெண்ணுக்கு மெஹந்தி போட்டோம்.
மண மாலைகளை நானே தயார் செய்தேன்!

கடையில் இருந்த அத்தனை bouquet களும்,
எங்கள் வீட்டு பக்கெட் நீரில் கூடி நின்றன!

wedding dresses, வாத்யார் வேஷ்டி, தாலி
எல்லாமே இங்கிருந்து ரெடியாகவே அங்கு!

Mixed Crowd! ஒன்றும் புரியாது என்பதால்
Booklets தயாரித்தோம் மண விவரங்களை .

ஆளுக்கு ஒரு copy உள்ளே வந்தவுடனேயே!
Announcement மைக்கில் பூஜாரிஜி செய்தார்.

பாலும், பழமும் கொடுப்பதில் சின்னச் சிக்கல்!
இருவரும் சுத்தமான vegan கள் ஆயிற்றே!

Soy பாலில் வாழைப் பழங்கள் போட்டோம்!
பாலும், பழமும் கொடுக்க நின்றது பெரிய Q!

ஆண், பெண், தாத்தா, பாட்டி, குஞ்சு, குளுவான்!
ஆர்வத்தைப் பார்த்த பின் தடுக்கவில்லை நான்!

எல்லோரும் பாலும், பழமும் கொடுத்தார்கள்.
நல்லாசிகளையும் வாரி வாரி வழங்கினார்கள்!

பாணிக்ரஹணம், தாரை வார்த்தல், சப்த பதி,
அருந்ததி பார்த்தல் எதையுமே விடவில்லை!

உணவு சுடச் சுட வந்தது இந்தியன் , சைனீஸ்.
உணவு மிக அதிகம் ஆர்டர் செய்து விட்டார்கள்!

அலுமினியம் பெரிய tray இல் THICK FOIL மூடிகளுடன்.
யாருக்கு என்ன பிடித்ததோ எடுத்துச் சென்றார்கள்.

மிகுந்ததை museum வந்திருந்த குழந்தைகளுக்கு
மிட் டே லஞ்ச் ஆகக் கொடுத்தனர். வீணாக்கவில்லை.

அமெரிக்காவில் அவர்கள் மத்தியில் மகன் திருமணம்
விமரிசையாக ஸ்ரீ அனுமன் அருளால் இனிதே நடந்தது!


 
Lovely fetters.

Sweet is the sound of the clatter,

And the non-stop shrill chatter; :blabla:

He loves things to clatter, :drum:

Lining the living room with litter;

The Greek and Latin he utters,

In speedy talking often stutters;

His tiny feet are still flatter,

Creating as they run a patter; :roll:

You feel tied in love's fetter,

And never in life felt better!
:love:

P.S:
A poem written when 18 months young Tejas
visited India for the first time!
 
malarum ninaivugaL...

# 5. CITIZENS OF THE WORLD

Welcoming cordially your
Esteemed presence in your
Dear one's company, to the
Delightful occasion to grace and
Impart your choicest blessings in the
Noble and auspicious event of the
Grand wedding of our elder son...

என்று எழுதினேன் wedding invitation ஐ.
வித்தியாசமாக உள்ளதே என்றனர்!

மணப் பெண்ணின் பெற்றோர் பெயர்
போட வேண்டாம் என்றனர் சிலர்.

அப்பா அம்மா இல்லாமல் பெண்
ஆகாயத்திலிருந்து குதிப்பாளா?

"வெட்கப் பட்டால் தானே நாம்
விஷயத்தை மூடி மறைப்போம்!

ஒப்புக்கொண்ட பிறகு எதற்குத்
தயக்கம்?" என்றேன் அவர்களிடம்!


ரொம்பவும் tight ப்ரோக்ராம்
ஆகிவிட்டது மணமக்களுக்கு!

மகனே ஓட வேண்டி இருந்தது
எது செய்வதாக இருந்தாலும்.

மணமகள் PhD graduation 11th ஜூன்.
விரதம் முதலியன 12th ஜூன்.

திருமணம் 13th ஜூன் Sunday!
உடனேயே டிஸ்னி லே
ண்ட் trip!

திருமண மேடை அலங்காரத்துக்கு
அருமையான back drop ஒன்றைத்

தயார் செய்திருந்தாள் மணமகள்
அதுவும் எங்களுக்கு surprise ஆக!

விக்னங்களைப் போக்கும் விநாயகர்!
இரு புறங்களிலும் இரண்டு அழகிய

PHOENIX பறவை மற்றும் DRAGON படங்கள்!
இரண்டு culture களின் ஒரு சங்கமம்.

எத்தனை நாள் அதை வரைந்தாளோ!
எத்தனை நாள் வர்ணம்
தீட்டினாளோ!

இன்னும் அதை
ப் பத்திரமாக வீட்டில்
பெரிய குழலில் இட்டு வைத்துள்ளனர்!
 

Latest ads

Back
Top