• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Our Yog guru used to relate a story.

A very rich couple quite old were always wailing

"Kab milegA bhagavAn ka dharshan? ( = when will we get your dharshan?)

Kab milEgA hamem mukthi?"(= when will we get liberation?)

One day God took pity on them and appeared before them and

told them to 'pack up' since they were given their long awaited mukthi.

The couple would not believe it was the real God.

When they were convinced that it was Real God,

they requested for extension of their life span to be able

to attend the wedding of their great granddaughter!

And their great granddaughter was just 2 years old at that time.
 
# 29. விசையுறும் பந்தினைப் போல்!

எல்லா வினோத மனிதர்களையும் நாம்
வெளியில் தான் சந்திப்போம் அல்லவா?

Howrah மெயிலில் சென்னை பயணம்.
'பெங்காலி பாபூ'ஸ் கூட்டம் அன்று நிறைய!

நாண் இழுத்துக் கட்டியது போன்ற உடல்!
ஞானியின் 'தவ'க்களை அவன் முகத்தில்.

உடலையும், உள்ளதையும் ஒருங்கே
உருவேற்றி இருந்தான் அந்தப் பையன்.

அவன் பெர்த் டாப் பெர்த். பகல் வேளை!
அவன் தனிமையை விரும்பினான் போல!

இரண்டு வரிசைக்கும் நடுவே நின்றான்!
இரண்டு கம்பிகளையும் நன்கு பற்றினான்!

அடுத்த நொடியில் அவன்
பெர்த் மேலே!

'எடுத்து கண்டனர் இற்றது கேட்டனர்!"
என்று ராமன் வில்லை ஓடித்தானாம்.

கால்களைத் தூக்கியது கண்டோம்
வில் போல உடலை வளைத்து
பெர்த் மேல்!

"விசையுறும் பந்தினைப் போல்" என்ற
பாரதியின் பாடலுக்கு உயிர் தந்தான்!
 
# 30. Lady police?

இவருக்கு உயரமான பெண்களை
அவ்வளவாகப் பிடிக்காது, உண்மை!

"பொம்பளைப் போலீஸ்காரி" என்பார்!

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்!
செமை உயரம்! நல்ல உடல் கட்டு!

இவர் எப்போதும் போலே சொன்னார்!
"அவள் பொம்பளைப் போலீஸ்காரி"

அவள் போலீஸ் uniform மில் வந்தாள் பிறகு!

"நல்லவேளை நான் சொன்னது
கேட்கவில்லை அவளுக்கு!" என்றார்!

"இல்லாவிட்டால் என்ன! ஃப்ரீயாக டிக்கெட்
இல்லாமலேயே ஊருக்கு அனுப்பி இருப்பாள்!"

புரியாமல் விழித்தார்! "இந்த பாடி இருக்கும்
லேடி போலீசின் கை இடி எப்படி இருக்கும்?" boxing:
 
I was stunned to see the car parking area filled with all types of cars

on a Monday to enjoy the water theme park!

We came to celebrate our little Tanu's birthday.

He has turned five and imagines himself to have become A BIG BOY!
 
அங்கம் பழுதற்ற தங்கக் குழந்தையைப் பெற
திங்கள் ஒரு பத்து தவம் இருக்க வேண்டும்!

அங்ஙனம் ஆனால் அண்டர்கோன் அடிகளை அடைய
எங்ஙனம் தவம் இருக்க வேண்டும் என்று சிந்திப்பீர்!
 
# 31.அழகும், நிறமும்.

அழகையும், நிறத்தையும் நினைத்து
அதிகம் பேர் குழம்புகின்றார்கள்! :confused:
அழகு வேறு! நிறம் வேறு! :decision:

'வெள்ளை காக்கை' போல இருந்தால்
அவர்கள் ரொம்பவும் அழகாம்!

'கறுப்புச் சிலை' போல இருந்தால்
அவர்கள் அழகு குன்றியவர்களாம்.

எங்களுடைய lecturer ஒருவரைத்
தொட்டு மை இட்டுக் கொள்ளலாம்!

செவ்வரி ஓடிய கண்கள்! நேரான நாசி!
உதடுகளும், முகவாயும் செதுக்கினவை!

அம்மனின் பெயர் தான் அவருக்கும்!
அம்மனும் அவரைப் போல இருப்பாள்!

ஒரு வெள்ளை காக்கை கணவன்;

ஒரு வெள்ளை காக்கை மனைவி.

அவர்களுக்கு இரண்டு பெண்கள்.
மூக்கு ஆகாசத்தைத் தான் நோக்கும்!

பிறந்ததிலிருந்தே தினசரி தியானம்!
"என் போல வெள்ளை யாருமில்லை!"

பெண்களைப் பார்த்தால் கண்கள் கூசும். :cool:
பசுமையாக எதையேனும் பார்க்கணும்!

நிறம் வெள்ளை, மனம் இருட்டு!
யாருக்கு வேண்டும் அந்த அழகு?
:scared:

முகத்தில் சிரிப்பு; நெஞ்சில் நெருப்பு;
யாருக்கு வேண்டும் அந்த அழகு? :scared:

உதடுகளின் நிறம் பவளச் சிவப்பு!
உதடுகள் சொல்வது மிளகாய் சிவப்பு! :evil:
யாருக்கு வேண்டும் அந்த அழகு?:scared:

 
# 32. "இனி நான் என்ன செய்வேன்?"

அப்பாவுடைய ரெகுலர் patient!
அத்தனை வியாதிகளும் உண்டு!

கடைசியில் படுத்த படுக்கை ஆனார் !
கஷ்டமாக இருந்திருக்கும் மனைவிக்கு!

நெடுநாள் கழித்து விடுதலை அவருக்கு.
விடுதலை அவர் மனைவிக்கும் அல்லவா?

இல்லவேயில்லை என்று தெரிந்தது!
"இனி நான் என்ன செய்வேன்?" என்று,

கதறிக் கண்ணீர் அவர் பெருக்கிய போது!
கலி காலத்தில் இப்படி ஒரு மனைவியா?? :shocked:
 
"God is partial since He answers some people's prayers instantly!

Ask to walk through the swarga vaasal and presto

they have already become part of swarga!!!"

How do some people become 'spokespersons' for 'God'?

'God' is a 'concept' in our mind, implanted and cultivated by our language and culture, to denote that which is the 'First and Efficient Cause of this Universe' and all that is found there including all life forms;

'God' is 'That' which is 'considered' as having the attributes of being 'Absolute', 'Infinite' and 'Eternal' in an otherwise 'Limited', 'Transitory' and 'Relative' forms of 'being' and 'non-being' in an 'Universe of Space and Time' that we know of;

'God' is 'That' which is considered as 'Unchanging' and Immutable' and 'Perfection' itself in an otherwise 'changing', 'mutable' and 'imperfect' forms of 'being' and 'non-being' in an 'Universe of Space and Time' that we know of.

No one has apparently 'seen' this 'God', a 'concept' in our minds, though they may have 'felt' its presence.

No one has apparently 'talked' to this 'God', a 'concept' in our mind, though they may have 'believed' that they have done so.

And so, no one can really be a 'spokesperson' for this 'God', a 'concept' in our mind, except in his or her imagination.

'Folklore' may hold otherwise, but such 'experiences', narrated at great length in poetry and prose, are not 'verifiable'.

As a matter of fact, folklore has led to people gouging out their eyes, cutting off their limbs and even their head, apparently as a 'supreme sacrifice' to their conceptual 'Lord', all in the hope of getting a glimpse of their 'Lord', and 'eternal bliss', when in fact nothing of the sort of experience described in the folklore happens, but that they stand wounded, mutilated or simply die!

The 'heaven' that we hear about as a 'place' of 'eternal pleasure' or the 'hell' that is descibed as a 'place' of 'eternal pain and suffering' as either a 'reward' or 'punishment' for 'good' or 'bad' deeds in one's life respectively are also in fact our 'concepts'.

The 'rebirth' according to one's 'karma' to 'atone for the karma' is also in fact our 'concept'. Essentially, we like to 'believe' this 'Universe' to be 'moral universe' where every one gets their 'just deserts', if not in this life, then in the 'after life'!

These 'concepts' have had such sway over us that we 'believe' them to be 'real' and vehemently refuse to believe any one who holds otherwise!


 
Last edited:
48b. நாரைக்கு முக்தி

48 (b). நாரைக்கு முக்தி

சிவபக்தி பற்றி இழுத்தது நாரையை,
தவநெறி நிறைந்த மதுரையம்பதிக்கு!


“இனி எனக்கு இங்கென்ன வேலை?
இனி நான் சேர வேண்டியது மதுரை!”


சோர்வின்றிப் பறக்கலாயிற்று நாரை;
சேர்ந்தது சென்று மதுரையம்பதியை!


பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சுற்றி வந்தது ஐயன் விமானத்தை வலம்!


தொடர்ந்தன உபவாசம், வலம் வருதல்,
தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அங்கு!


பசி வந்திடப் பத்தும் பறந்து போம் அன்றோ?
பசி மேலிட்டு விட்டது செங்கால் நாரைக்கு.


புசிக்க விரும்பியது வண்ண மீன்களை;
புசிக்கவில்லை அத்திருக்குள மீன்களை!


சிவன் தோன்றினான் நாரையின் முன்னே!
தினம் அது தியானித்த உருவத்திலேயே!


“என்னருமை நாரையே கூறுவாய்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?’ என,


“சிவலோகப் பதவி வேண்டும் ஐயனே!
இகலோகத்தில் எதுவும் வேண்டாம்!”


“அங்ஙனமே ஆகுக! ” என்றான் ஐயன்.
செங்கால் நாரையின் தாபம் தீர்ந்தது.


“இன்னும் ஒரு வரம் வேண்டும் என் ஐயனே!”
“என்னவாயினும் சொல் என் நாரையே!” என,


“தண்ணருள் பெற்ற தீர்த்தத்தில் உள்ள,
புண்ணிய மீன்கள் உண்ணப்படலாகாது!


இல்லாமல் செய்வீர் குளத்தில் மீன்களை!
பொல்லாத பறவைகள் தின்னாதவாறு!”


அருளினான் அதையும் கருணாகரன்,
அருளினான் நாரைக்குச் சாரூப்யம்!


மூன்று கண்களும், நான்கு தோள்களும்
தோன்றின நாரையின் திருமேனியில்!


வெண்ணீற்று மேனி, வரிப் புலித்தோல்,
அண்ணலின் உருவம் பெற்றது நாரையும்!


அற்புத விமானம் வந்து இறங்கியது!
கற்பகலோகம் சென்றது நாரை சிவன்!


கூடற்காண்டம் முற்றுப் பெற்றது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
#175. உருவமும், அருவமும்.

எங்கும் நிறைந்த இறைவன் எவனோ அவன்
எந்த உருவமோ அன்றி உடலோ இல்லாதவன்;

எங்கும் நிறைந்த அவனை வெறும் அருவமாக
எண்ணிப் பார்ப்பதும் வெகு கடினமே ஆகும்.

ஐம்பொறிகள் வழியே அனைத்தையும்,
ஐயம் திரிபற அறிந்து கொள்ளும் நாம்,

ஐயம் பொறிகளின் உதவி சற்றும் இன்றி
ஐயனையும் கூட அறிந்துவிட முடியாது.

உருவ வழிபாடு தோன்றியது இந்த
ஒரு காரணத்திற்காகவே அறிவோம்;


அருமை பெருமைகள் அனைத்தையும்
ஒருங்கே பெற்ற ஒரு அழகிய வடிவு!

நினைக்கும்போதே மனம் நிறைந்து
நனைக்கும் கண்ணீர்த் துளிகள் வழிந்து;

இனிக்கும் அந்த உருவத்திடம் மயங்கி
மனத்தை பறி கொடாதார் யாரோ?

உருவ வழிபாட்டை மறுக்கும் மதமும்
உருவங்களின் துணையையே நாடும்;

இறைவனின் தூதனாகவோ, அல்லது
இறைவனின் சிறந்த குழந்தையாகவோ.

வெற்றிடத்தின் மீது மனத்தைப் பதித்து,
வெகு நேரம் தியானம் செய்வது கடினம்;

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகில்
உள்ளத்தைத் தொலைத்துவிடலாம் எளிதாக!

மந்திரம், தந்திரம், யந்திரம் என்கின்ற
மூன்றுமே பலன் அளிக்கும் ஒருபோலவே;

சுந்தர ரூபம் தரும் இன்பத்தை வேறு
எந்த ரூபமுமே தர இயலாது அல்லவா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

Please use the link for the English translation

https://wordpress.com/view/vannamaalai.wordpress.com
 
"Koovi azhaiththaal kural koduppaan!"


#032. “உன் அண்ணன்”

உருவமும், அருவமும் ஆக விளங்கும்
கருநிறக் கண்ணன், கார்மேக வண்ணன்;
வருவான் அவனை விரும்பி அழைத்தால்,

சிறுவன் ஜடிலனின் கதை இதை உணர்த்துமே!

பண்டைய நாட்களில் பள்ளிகள் குறைவு;
எண்ணிவிடலாம் ஒரு கை விரல்களால்!
படிப்பதென்றால் பல காத தூரம் தனியே
நடந்து சென்றிட வேண்டும் மாணவர்கள்.

காட்டு வழியே தன்னந் தனியே தினம்,
காட்டு விலங்குகளின் பீதியில் செல்லும்,
சிறுவன் ஜடிலன் தன் ஏழைத் தாயிடம்,
மறுகியவாறே ஒருநாள் உரைத்தான்,

“கள்ளிக் காட்டைக் கண்டாலே அச்சம்.
பள்ளி செல்லவோ மிகவும் விருப்பம்.
எனக்குத் துணையாக யார் வருவார்கள்?
எனக்கு ஒரு பதில் கூறுங்கள் அம்மா!”

“கண்ணன் இருக்கும் போது நமக்கு
என்ன பயம் சொல், என் கண்ணே” என்ற
தாயிடம் கேட்டான் “யார் அந்தக் கண்ணன்?”
தாய் சொன்னாள், “அவன் உன் அண்ணன்.”

பாதி வழியில் சிம்ம கர்ச்சனை கேட்டு,
பீதியில் உறைந்த சிறுவன் ஜடிலன்,
“கண்ணா! கண்ணா! உடனே வா! என்
அண்ணா! அண்ணா!” என்று ஓலமிட,

மனத்தை மயக்கும் மோகனச் சிரிப்புடன்,
முன்னே வந்து நின்ற அழகிய சிறுவன்,
“வா தம்பி! நாம் பள்ளிக்கு போவோம்” என
வழி காட்டி நடந்தான் ஜடிலன் முன்னே.


பள்ளியை அடைந்ததும் தம்பி ஜடிலனிடம்,
“பள்ளி விட்டதும் கூப்பிடு, வருவேன்” எனப்
பகர்ந்து மறைந்தவன் யார் என்பதை அந்தப்
பாலகன் அறியான்! நாம் அறிவோமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

 
# 33. மடி மாமி!

அந்த
மடிமாமி அவ்வளவு மடியாம்!
அவள் பேரக் குழந்தைகளைத் தொடாள்!

காலையில் சமையல் அறையில்
கைகளைக் கூட அசைக்க மாட்டாள்.

மூன்று குஞ்சு குளுவான்களுடன்,
மாமனாரின் கோபக் கணைகளையும்,

பிடிவாதக் கணவனின் தேவைகளையும்,
முடிவில்லாத வேலைகளையும், தனியே

சமாளிக்கும் சாது நாட்டுப்பெண் மேல்
சரமாரியான complaints ஓயாது! :rant:

வயதும் மிகவும் முதிர்ந்து விட்டது!
படுக்கையில் கொண்டு தள்ளிவிட்டது!

She had to swim in her own urine!
She was at the mercy of her nurses!

Home nurse வேலை செய்வது யார்?
நான் சொல்லாமல் நன்றாகத் தெரியும்!

யார் யார் கையாலேயோ உணவு உண்டாள்!
எவர்கள் கையாலோ தண்ணீர் குடித்தாள்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
எப்போதும் இதை நினைவில் கொள்ளுவோம்!
 
# 34. தீவிர பக்தர்கள்.

அவர்கள் எதுவுமே செய்யமாட்டார்கள்...
அவர்களின் குருஜி அனுமதி
பெறாமல்.

அவர்களுக்கு இரண்டு மகன்கள்.
அவர்கள் நிதி நிலைமை வளமானது!

பெரியவன் மணந்தது அய்யர் பெண்ணை!
பெரியவர் குடும்ப குருவின் ஆசியுடன்!

இளையவன் மணந்தது அவர்கள் இனம்;
அதுவும் குருஜியின் ஆசிகளுடனேயே!

பெரியவனுக்கு ஒரு மகன் பிறந்தான்;
பெரிய வியாதியில் மனைவி இறந்தாள்!

இளையவனுக்குக் குழந்தை இல்லை.
இனியும் பிறக்காதாம்! இது என்ன கொடுமை?

ஒருவன் தாயில்லாத சிறு
குழந்தையுடன்!
மற்றவன் குழந்தை இல்லாத பெண்ணுடன்!

முக்கால
மும் உணரவல்ல ஒரு சத்குரு
எக்காலமும் இப்படிச் செய்யக் கூடாது
! :(
 
"A watchmaker MUST be smarter than the watch he has made!

I do not encourage 'a watch' doubting and discussing the intelligence of its 'maker'!"

The above quote begs the following questions:

A 'watchmaker' makes a 'thing' called a 'watch' to show 'time' in the way it is programmed to do. How can a 'thing', an 'object with a function' made by the 'watchmaker' start questioning the 'watchmaker' as to his intelligence? It does not, obviously, possess the human attributes of a 'body and mind' and a 'free will' to do so.

'Human beings' are not 'things'. Even in theology, in the 'religious conceptions' of the world, they possess a 'soul' within, that is considered as 'one and the same' as, or a 'speck or spark' of, the 'Universal Soul'! Being either of the two, the 'individual soul' can doubt its 'origin', or its 'transmigration' through a 'cycle of births and deaths', especially so, when the 'origin' is shrouded in 'mystery'!

And who is the 'I' to 'encourage or discourage discussion' in a public forum -- a self-appointed 'spokesperson' for the 'Creator'? Or another 'body-mind' complex with a 'free will' -- a 'traveller' through the 'journey of life' in this 'world' at a particular place and time in the annals of human history and accordingly,shaped by the 'language and culture' of the said place and time and so, unwilling or refusing to question what could be the 'reality' behind the 'veil of ignorance', stated to be induced by a 'power' called 'maya' according to theology?


 
Quotes 2001 to 2008

Special spiritual quotes the meaning of which
you are supposed to find out by yourselves!


#2001. prajñānam brahma

#2002. ayam ātmā brahma

#2003. tat tvam asi.

#2004. aham brahmaasmi

#2005. Brahma satyam jagan mithya

#2006. Ekam evadvitiyam brahma

#2007. So’ham

#2008. Sarvam khalvidam brahma
----------------------------------------------------------------------------------------------------

Any being (-) the spark of life = A thing

When we put to use the proper words the above statement becomes

A Jeeva (-) Its Jeevan = A mere Jadam

Is it not the greatest irony that 'a mere jadam' is questioning

the existence and intelligence of the infinite Sun

which has given a spark of Itself - and made the jadam into a jeeva!
 
Last edited:
# 35. Incompatibility.

A 'little' incompatibility is good,

Especially when he has income;

And she is 'pattable'. Agreed!

But the problem lies in deciding

'how little' in reality is 'that little!"

பெரிய மகன் சிறு குழந்தை.
பெரிய வீடு allot ஆயிற்று.

பெருக்கித் துடைப்பதற்குள்
ஒரு வழி ஆகி விடுவோம்!

அடுத்த விட்டில் ஒரு Retired colonel.
மிடுக்குக் குறையவில்லை இன்னும்.

ஹிந்தி சினிமாவில் நடிக்கலாம்!
மறுக்காமல் வாய்ப்பு அளிப்பர்.

ஆஜானுபாகு என்பார்களே அது!
மனைவியோ சிறு குருவி தான்.

அவர் உயரத்தில் முக்கால் பங்கு,
எடையிலோ கால் பங்கு தான்!

பேசும் குரலே வெளியில் கேட்காது;
அசல் மென்மையோ மென்மை!

அவர் "தாட் பூட்" என்று கத்துவார்.
அவர் பாத்திரங்களை வீசி எறிவார்.

திட்டும் குரல் அந்தத் தெரு முழுக்கத்
தெளிவாகக் கேட்கும். ஆனால் பதில் :nono:

என்னிடம் அவருக்கு அவ்வளவு
அன்பு உண்டாம்! எதற்கோ தெரியாது.

"வீட்டுக்கு வா!" என்று வேலிக்கு மேலாக
அடிக்கடி அழைத்துக் கொண்டே இருப்பார்.

போகவே இல்லை நான் ஒரு முறை கூட.
போக வேண்டும் என்று தோன்றவில்லை.

கட்டின பெண்டாட்டியை படுத்தும் பாட்டைப்
பார்த்த பிறகும் நான் அங்கு போவேனா?

அழைக்கும் போதெல்லாம் காமராஜர் போல
சிரித்து எதோ சொல்லி மழுப்பி விடுவேன்.

ஆனால் ஒரு முறை போக வேண்டி வந்தது!
அதுவும் அவர் மரணம் அடைந்த பின்னர்.

அந்த ஆன்ட்டி அழுதது நினைவிருக்கிறது!
எனக்குள் வேறு ஒரு மனப் போராட்டம்!

ஆன்டியை Condole செய்ய வேண்டுமா?
அல்லது Congratulate செய்ய வேண்டுமா?

என்ன செய்திருக்க வேண்டும் என என்னால்
இன்று வரை முடிவு செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகாவது அந்த gentle ஆன்டி
அமைதியாக மகனுடன் வாழ்ந்திருப்பார்!

அப்போதெல்லாம் groping/raping/molesting ரொம்ப rare.
இப்போது நினத்துப் பார்த்தால் அச்சமாக உள்ளது!

ஒருவேளை கைக் குழந்தையுடன் போயிருந்தால்

என்னவெல்லாம் அங்கு நடந்திருக்குமோ என்று.

அடி வயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தால்

எதுவாக இருந்தாலும் சரி அதைச் செய்யாதீர்கள்.

Our Intuition never ever goes wrong!

 
# 36. Mass Marriages.

Lioness club இன் ஒரு ப்ராஜெக்ட்
Mass marriages செய்வது ஆகும்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

"திருமணம் செய்து வைக்கின்றோம்" என்றால்
"உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை!"

யாருமே எங்கள் பேச்சை நம்பத் தயாராக இல்லை.
நம்பினவர்களோ பெண் பார்க்கச் சொன்னார்கள்!

"பெற்றோர் சம்மதத்துடன், ஆணும் பெண்ணுமாக
வந்தால், எங்கள் செலவில் திருமணம், பரிசுகள்."

"சும்மாச் சொல்லுகின்றார்கள்! யாரும் நம்பாதீர்கள்!"
'பந்துலுகாரு (priest) கூட இருக்க மாட்டார். பாருங்கள்!"

"மந்திரங்கள் கூட இருக்காது! நீங்களே பாருங்கள்"
இத்தனை பிரச்சாரத்தையும் மீறி, எங்களை நம்பி
மூன்று ஜோடிகள் எங்களை அணுகினர்.

பத்திரிகைகள் அச்சடித்து, நல்ல புரோஹிதரை
வரவழைத்து, ஒரிஜினல் அக்மார்க் திருமணம்!

'தலாம்பரம்' முதல் எதிலும் குறை வைக்கவில்லை.
புது உடைகள், தாலி, பண்ட பாத்திரங்கள், சீர் வரிசை!

அப்புறம் பேசிக் கொண்டார்கள் காது கேட்கவே!
"அநியாயமாக ஏமாந்து போய் விட்டோமே! :doh:
அழகாக ஃப்ரீயாக மணம் செய்து கொள்ளாமல்!":whoo:
அது யார் தவறு? :moony:

மணமக்கள் photo பத்திரிகைகளிலும் பிரசுரமாகின! :photo:
எங்களுக்குக் கிடைத்தது Best Mass marriages award !
:first:
 
"Any being (-) the spark of life = A thing

When we put to use the proper words the above statement becomes

A Jeeva (-) Its Jeevan = A mere Jadam

Is it not the greatest irony that 'a mere jadam' is questioning

the existence and intelligence of the infinite Sun

which has given a spark of Itself - and made the jadam into a jeeva!"

There are 'assumptions' and 'presumptions' in the above statement.

The 'assumption' is that the 'soul' or 'consciousness', within a 'human being', on this planet called 'earth' by us, is but a 'spark' of the 'Divine'!

This is the 'notion' of 'theology' around the world! They treat the 'body' made up of the 'tangible' gross elements of the earth and the finer 'senses' (of sight, hearing, smell, taste and touch) and the finer still 'mind' (used conventionally to denote our 'intangible' faculties of 'cognition', 'volition' and 'emotion' -- or, to use more common words -- our general perception and associated thoughts, feelings and will power -- which in themselves are not 'tangible') -- as simply 'material' or 'jadam' as observed above!

The 'presumption' is that without a 'Creator' to 'breathe life' or 'soul' or 'consciousness' into the 'jadam', it will simply remain a 'jadam', an 'inert material' or just a 'thing'!

[The use of the word, 'Sun' to denote the 'Creator' may not be 'appropriate' here for the 'Sun' itself is a 'material body', more like a 'Nuclear Reactor' with 'nuclear fission' and 'fusion' processes going on there, unless it is considered, as in ancient times, as a 'God' itself, that is, at a period of human history when all the aspects of 'Nature' -- all the natural forces and all the natural elements -- were considered as various 'Gods' doing their functions as assigned by an 'unifying principle' called 'Brahman' over and above the 'trinity of Gods', who stood for 'creation, preservation and destruction' of all 'animate beings' and 'inanimate things' in this world.]

The 'doubt' arises whether these 'assumptions' and 'presumptions' are correct or they are simply accepted as 'axiomatic truths' on the basis of 'religious tenets' or 'scriptures' and a whole 'edifice' of a 'belief system' built on them thereafter, which obscures and rejects fundamental queries as to their validity from being raised in a public forum?

As an analogy, I would give the 'assumptions' and 'presumptions' in the field of 'astrology' and the proponents thereof who claim to be able to 'predict' the future course of an individual's life or claim to be able to match the 'compatibility' of a prospective 'bride' and 'groom' to live a 'married life' together! The 'assumption' there is our lives on earth are 'pre-determnined' according to our 'karma' and the 'presumption' there is that in some way (without the same being explained as to how) the 'conjunction' of the sun, moon, a few other planets, against the backdrop of a few known stars visible to the naked eye on a clear night, can somehow help in 'predicting' the future course of one's life or the 'compatibility' to each other of a couple for a married life together! No verifiable records exist for these assertions and no verifiable proof has been found in modern times, but these 'assumptions' and 'presumptions' continue to rule our lives! Or, we ourselves allow them to rule our lives in an unqustioning manner!
 
Last edited:
காயமும், வெங்காயமும்!

உரிக்கும் போது உள்ளே ஒரு ரகசியம்
உள்ளது போலத் தோன்றும்; ஆனால்

உரித்த பின் நம் முகத்தில் வழியும்,
ஊர் முழுகிவிடும் அளவுக்கு அசடு!

வெங்காயமும் நம் காயமும் பல வித
வேறுபாடுகள் கொண்டவை அல்ல!

ஒற்றுமைகளே மிக அதிகம் அன்றி
வேற்றுமைகள் அல்ல என அறிவீர்!

ஒன்றாய் மறைந்து நிற்கும் நம் ஆத்மா;
இரண்டாய் இருக்கும் அறிவும், மனதும்;

மூன்றாய் இருக்கும் நமது சரீரங்கள்;
பௌதிக, காரண, சூக்ஷ்ம சரீரங்கள்!

ஐந்தாய் இருக்கும் பஞ்ச பிராணன்கள்;
ஆறு ஆக இருக்கும் அறிவுத் திறன்கள்;

ஏழு ஆக இருக்கும் சப்த தாதுக்கள்;
ரத்தம், மஜ்ஜை, மாமிசம் முதலியன.

பத்து ஆக இருக்கும் இந்த்ரியங்கள்;
கால், கை, வாய், மல ஜல துவாரங்கள்,

கண், நாசி, நாவு, செவி, தோல் எனவும்
கர்ம, ஞான இந்த்ரியங்கள் விளங்கும்.

“இது அல்ல, இதுஅல்ல” என்று கூறியபடி,
இவற்றை ஒன்று ஒன்றாக விலக்கினால்;

உரித்த வெங்காயத்தில் உள்ள உண்மைபோல்
உள்ளே ஒளிந்திருக்கும் ஆத்மா வெளிப்படும்!

ஆத்மாவும், ஜடமும் கலந்த காயத்தை,
அன்னப் பறவை போலப் பிரிக்கக் கற்று,

ஆத்மாவை நன்றாக உணர்ந்திடுவோம்;
ஜடத்தை மொத்தமாக விலக்கிடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

# 169. An onion and The Human body.

An onion seems to hold a sacred secret in its layers. But as we remove the layers one after
another, we look foolish when there is nothing hidden in the womb of the onion. The onion resembles the human body in many respects.

There is an Atman in a human body; there are two faculties which act ceaselessly called the Mind and the Intellect. There are three sareerams viz the Sthoola sareeram, the Sookshma sareeram and the KAraNa sareeram.

There are five PranAsa; six senses and seven dhAthus in a human body. There ten IndriyAsa – five jnAna indriyAs and five karma Indriyas. When we discard them one by one saying ,”Not this! Not this!” we discover the formess Atman hidden inside the body very much similar to the secret hidden within an onion.

The Body, Mind, Intellect and Emotions in a human body consists of both Chetana and Achetana. If we can separate the Sath (permanent) from the Asath (ephemeral) just a swan separates milk from water, we can cling to the Sath and neglect the Asath.

 
இருவகைத் துயில்கள்

உறங்குவதில் உண்டு இரு வகைகள்;
அறி துயில், அசல் துயில் என்ற இரண்டு.
பார்ப்பதற்கு ஒருபோலத் தோன்றினாலும்,
பலப்பல வேறுபாடுகள் உண்டு இவற்றில்!

திருமாலின் அறி துயில், உலகளாவிய
பெருமை பெற்றது என்பதை அறிவோம்;
திருமாலுக்குச் சற்றும் சளைக்காமல்,
பெறுவார் அறி துயில் மனிதருள் பலர்!

உறங்குவர் விழித்த கண்களோடு சிலர்;
உறங்குவர் வாயை மூடாமலேயே சிலர்;
சிம்ம கர்ச்சனையோடு சிலர் உறங்குவர்;
சிந்தித்தால் இவைகள் அறிதுயில் அல்ல!

வெளியே நடப்பவைகளை நன்கு அறிந்தும்,
வெளிப் பார்வைக்கு நன்கு உறங்குவதுபோல்,
பாசாங்கு செய்வதே அறிதுயில் ஆகும்;
பாடு படுத்தினாலும் அவர் கண் திறவார்!

தூங்குபவரை எழுப்பிவிடலாம்; ஆனால்
தூங்குவது போல் நடிப்பவரை அல்லவே!

பாசாங்கும் நல்ல பயன் அளித்திடும்,
பேசாமலே நாம் இருக்க விரும்பினால்!
தூங்கும் ஒரு சிங்கத்தை இடருவதும், :whoo:
தொங்கும் ஒரு புலி வாலை இழுப்பதும், :doh:
அறி துயில் கொண்ட ஒருவரைச் சென்று :evil:
அறியாமல் நாம் எழுப்புவதும் சரி சமமே! :wave:


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
LIFE has not been a bed of roses!


எட்டு ஆண்டு கால ஹாஸ்டல் வாழ்க்கையும்,
அதில் பட்ட கஷ்டங்களும், பார்த்த மனிதர்களும்;

நான்கு ஆண்டுகள் 'போண்டி' lioness கிளப்பும்,
நல்ல பயிற்சி அளித்தது எனக்கு வாழுவதற்கு!

Donation collect செய்வதற்குள் போயே போய்விடும்
இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈகோ, சூடு, சொரணை etc !

எல்லோர் வாயிலும் விழுந்து எழுந்து வருவதற்குள்
சொல்லாமல் சந்நியாசி ஆகிவிடுவோம் மனத்தளவில்!


 
ட்டி உறவாடுபவர்கள்
விட்டு ஓடவேண்டுமா? :roll:

"ஒரே ஒரு சின்ன உதவி
நீரே செய்யவேண்டும்" என்று :help:

கோருங்கள் பிறகு பாருங்கள்
தேடினாலும் அவர் தென்படார்! :bolt:
 

Latest posts

Latest ads

Back
Top