• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 51. Caged tiger?

ஒருமுறை சென்னை சென்றேன் தனியாக.
சைடு பெர்த்து தான் கிடைத்தது. நல்லது!

விடியற்காலையில் கீழே இறங்கி வந்து,
காலடியில் அமரும் தொல்லை இல்லை!

ஒரு முறையாவது சென்னை வரை
உறங்கிக் கொண்டே செல்லலாம்!

ஆஹா!

zoo வில் புலிக் கூண்டுக்கு வெளியே
தனியாக நான் நிற்பது போன்ற கனவு.

புலி என்னருகில் நடப்பது போன்ற உணர்வு!
புலியின் காலடிகள் நன்கு கேட்கலாயின!

புலி தன் வாலை என் மேல் உரசலானது!

கும்பகர்ணனால் கூட தாங்கமுடியாது
இந்த மாதிரியான ஒரு suspense ?

கண்ணை விழித்துப் பார்த்தால்...
தோளில் இருந்து ஷால் கீழே வழிய,

என் பெர்த்தை ஒட்டியபடி ஓயாமல்
நடந்த புலி ....எதிர் பெர்த் ஆசாமி!

அதற்குப் பிறகு தூங்க முடியுமா?
தூக்கத்துக்கும் எனக்கும் 'நோ ராசி'! :(


 
# 52. The Old man from Pakistan.

முன்பு தினமும் நடைப் பயிற்சி செய்யும்
நல்ல வழக்கம் இருந்தது! இப்போது இல்லை.

இல்லை என்றால், "என்னால் முடியவில்லை."
இப்போது அதனால் அதிகம் நடப்பதில்லை!

மதியம் மூன்று மணிக்குப் புறப்பட்டு
நான்கு மணிக்குத் திரும்புவேன் வீடு.

ஷிகாகோவிலும் தொடர்ந்து நடை!
இவர்
கூட வரமாட்டார்! ஒரு நாள் கூட!​

ஆனால் ஒரு நல்ல நண்பர் கிடைத்தார்.
A very old gentleman from Pakistan!

இருவரும் பார்க் பெஞ்சில் அமர்ந்து
ஹிந்தி / உருதுவில் அளவளாவுவோம்.

எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்குமோ,
அப்போதெல்லாம் வேறுமொழியில் பேசுவேன்!

அப்போது தான் அவை மறக்காமல் இருக்கும்!
அவருக்கும் குஷி சொந்தமொழியில் பேசுவத
ற்கு!​

இது நடந்தது 1998 ஆம் ஆண்டு!
9 / 11 தாக்குதலுக்கு மிகவும் முன்பு!

இப்போது போல இருந்தால் எங்கள் :suspicious:
இருவரையும் கண்காணித்து இருப்பர்களோ ???:noidea:
 
# 53. Special reserved coach?

ஒருமுறை ரயில் ஏறினால்
ஒரே அதிர்ச்சி எனக்கு! :shocked:

அது என்ன ஸ்பெல் கோச்​
Reserved for Ayyappaas ? :noidea:

மூவரைத் தவிர அந்தக் கோச்
மொத்தமும் ஐயப்பன்மார்கள்!

கருப்பு & வெள்ளை - தாடி & மீசை,
கருப்புக் கலர் ஆடைகள், துண்டு,

பெரிய சந்தனப் பொட்டு, குங்குமம்!
(அவர்கள் பொட்டு கலைவதே இல்லை?)

அத்தனை பேரை அங்கே நான்
நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

விரதத்தினால் கூடியிருந்தது அவர்கள்
பார்வையின் தீட்சண்யம்! கத்தியைப்போல!

மற்ற மூவரில் நான் ஒருத்தி!
பூரண கர்ப்பவதியான ஒரு பெண்ணும் :preggers:
அவள் கணவனும். என்ன combination!

தாடிக்காரர்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு
தாடி பிச்சைக்காரனால் ஏற்பட்டு விட்டது இளமையில்.

சிவப்புக் கண்கள், அவற்றை ஹைலைட் செய்யும் சிவப்புப் பொட்டு,
வெள்ளை + கருப்பு நிறக் கலவையில் ஒழுங்கற்ற தாடி + மீசைகள்.

விரதத்தினால் ஏற்பட்ட பசிகள் நிறைந்த முகமும் உடலும்;
விரும்பவில்லை நான் எழுவது ஐய்யப்பன்களுடன் பயணிப்பதை.

அன்று இரவு நான் உறங்கவே இல்லை.
"ஐயப்பா! ஐயப்பா!" என்ற ஓயாத ஜபம். :pray:​
 
# 54. It covers but not hides...!

ஒரு நண்பர் வீட்டுக் கல்யாணம்,
I , Iyer என்று highest இல் இருப்பவர்.

சிலர் மட்டும் அவ்வளவு சிவப்பாக
இருப்பது எனக்கு இன்றும் அதிசயமே!

அவள் அவ்வளவு சிவப்போ சிவப்பு.
தலை முடி அவ்வளவு கறுப்போ கறுப்பு!

உடை அவ்வளவு மெல்லியது! (made of cobweb?)


It seemed to cover everything on her!
But it did not really hide anything on her!

கறுப்பில் ஒரு வெங்காயச் சருகு!
கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பண்டைய பெண்டிரின் கச்சையில்
முதுகுப் புறம் மறைக்கப்படும்
மூடிய ஒரு கையின் அளவாவது!

இவள் மேலங்கியில் .....
இல்லை கைகள்...

இல்லை முதுகு.. ...
இல்லை கழுத்து....

ஒரு சேமியாவிலோ ஒரு noodle லிலோ ...
முன்பாரம் அனைத்தும் தாங்கப்பட்டது.

இதற்கும் மேலேஅவள் கீச்சுக் குரலும்
ஓயாத சிரிப்பும், பேச்சும், ஜோக்கும்!

கல்யாணத்தை யார் பார்த்தார்களோ இல்லையோ
அவளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்!

அவள் விரும்பியதும் அது தானே! :doh:

"காட்டிக் கூட்டுவது" என்பது இது தானா?:noidea:
 
# 55. Three in one mom.

விர்ர் என்று சப்தம்! நாய் குலைக்கும் ஓசை!

என்னவோ எதோ என்று சென்று பார்த்தால்

ஸ்போர்ட்ஸ் டாப் அணிந்த ஒரு பெண்.

கால்களில் சக்கரம்,கையில் நாய்ச் சங்கிலி!

இருவருக்கும் ஒரே நேரத்தில் exercise!

Roller blades அணிந்துகொண்டு

ஊரைக் கலக்கிக்கொண்டு இருந்தாள்.

சிரித்து நேரம் கழித்து அதே பெண்

பெராம்புலேடருடன் மீண்டும் race !

"வீ" என்று குழந்தையின் உற்சாகக் கூவல்!

அவளுக்கு வந்தது ஒரு brainwave !

அடுத்த நாள் நாயைப் pram இல் பொருத்தி

மூவரும் skating + exercise + outing !

அந்த சப்த ஜாலத்தைக் கேட்டால் ஒழிய

யாராலும் கற்பனை செய்யமுடியாது!

A Mom who was 2 in 1 Mom became a Mom 3 in 1 mom!
 
# 56. "சோலி கே பீசே!"

எங்கள் ஃ பாமிலியில் ஒருவர்.

சரியான ஜொள்ளுப் பார்ட்டி.

பெண்களை மிகவும் ரசிப்பார்.

அதுவும் பின்னால் இருந்து.

தவறாக என்ன வேண்டாம்

இடுப்புக்கு கீழே இல்லை!

இடுப்புக்கு மேலே தான்!

'ஜாக்கெட் முதுகு ரசிகன்'.

விதவிதமான வேலைப்பாடுகள்,

ஜன்னல்கள், கதவுகள், திரைச் சீலை,

embroidery , smocking , gathering என்று

கண்ணுக்கு விருந்து படைக்கின்றார்களே!

முன்னால் பார்த்தல் தப்பு, குற்றம் எல்லாம்.

"சோலி-கே-பீசே-சைடு பார்த்தால் என்னவாம்?"

அவ்வளவு செலவழித்து அதை வித விதமாகத் தைத்துப்
போட்டுக் கொள்பவர்களுக்கு மரியாதை தரவேண்டாமா?

 
Prince-cut-blouse worn by the non-princesses now!

images


images


4-designer-sequins-work-Gold-Color-Blouse.jpg

images


images



Do I hear people drooling??? :ear:
 
Moral:

காண்பவர்கள் இருக்கும் வரை
காண்பிப்பவர்கள் இருப்பார்கள்!


காண்பிப்பவர்கள் இருக்கும்வரை
காண்பவர்கள் இருப்பார்கள்!
 
# 57. ரசப்பிரியன்.

இவருடைய jigiree dosth (= bosom friend)!

மிலிட்டரி man (retired as soon as it was possible).

பணக்கார அநாதை! (with seven siblings he was still an orphan)

மணம் செய்து கொள்ளவில்லை.

ஒரு கையில் ஊதுவத்தி!

ஒரு கையில் தீர்த்தம்!

விளங்கவில்லையா?

He lived on puffs and sips!

செயின் ஸ்மோகர் + 'சிப்'பர்.

உடல் நிலை மோசம் ஆனது.

hospital இல் இன் அண்ட் அவுட்!

விரும்பிக் கேட்டது ஒன்று தான்.

தெளிவாக, குடிப்பதற்கு ஏற்ற

ரசம் வேண்டும் (home made)!

அடிக்கடி செய்து அனுப்புவேன்.

Poor fellow ! He is no more now!

இன்றும் ருசியான ரசம் செய்தால் ( = almost everyday)

தவறாமல் அவர் நினைவு வருகின்றது.
 
images
images



Chilkoor Balaji Temple - Wikipedia

https://en.wikipedia.org/wiki/Chilkoor_Balaji_Temple


Chilkur Balaji Temple, popularly known as "Visa Balaji Temple'', is an ancient Hindu temple of Lord Balaji on the banks of Osman Sagar in Hyderabad. It is one ...History and legend · ‎Circumambulations · ‎Chilukuru Kshetra ...

The dream of every Andhravaadu is to go to USA, earn in dollars and roll in money. I believe they have orientation courses for the babies in the womb to train them for I.I.T.J.E.E.

There is one Balaji temple known as VISA Balaji. Apparently He made it possible for an impossible fellow to get the U.S.Visa.

So crowds of students, employed boys and girls and their parents throng the temple with attractive offers and special prayers.

The God's consort can be called as VISA Lakshmi. So the new name given to me on multiple occasions is a real possibility - after all!








 

# 58,. "என் லக்கேஜ் எது சொல்லுங்கோ!"

முதல் முதல் ட்ரிப் டு அமெரிக்கா.
maiden trip excitement தெரியுமே!

சென்னையில் அந்த மாமியை சந்தித்தேன்!

தனியாகக் செல்வதால் எங்களிடம்
அட்டைபோல ஒட்டிக்கொண்டு விட்டார்.

எழுத்து வேலை எல்லாம் அவருக்கு
இவர் பொறுமையாகச் செய்து கொடுத்தார்.

P.R.O / translator வேலை எனக்கு!

சிகாகோவில் இறங்கியவுடன்
"என் லக்கேஜ் எது சொல்லுங்கோ!"

"எனக்கு எப்படித் தெரியும்?"
என

"நாட்டுப் பெண் pack பண்ணினாள்;
எனக்கே தெரியவில்லையே!" :(

டிக்கெட் stub உதவியுடன்
என் மகன்​
லக்கேஜ் கண்டு பிடித்துக் கொடுத்தான்.

அவரை receive செய்ய வரவில்லை
அவருடைய அருமை மருமகன்!

அழவே ஆரம்பித்து விட்டார். :Cry:
போன் நம்பர் அவரிடம் இருந்தது.

போன் செய்து அவன் வரும்வரை
கூடவே இருந்தோம் எல்லோரும்.

அவனை பார்த்த பிறகு தான்
அழுகையை நிறுத்தினார் அவர்.

முதல் ட்ரிப் என்றலே டென்ஷன் தான்.
மீட் பண்ண வராவிட்டால் இன்னும் மோசம்!

டின்னருக்கு அழைத்தார் தன் நன்றியைக் காட்ட!

 
# 56. "சோலி கே பீசே!"

எங்கள் ஃ பாமிலியில் ஒருவர்.

சரியான ஜொள்ளுப் பார்ட்டி.

பெண்களை மிகவும் ரசிப்பார்.

அதுவும் பின்னால் இருந்து.

தவறாக என்ன வேண்டாம்

இடுப்புக்கு கீழே இல்லை!

இடுப்புக்கு மேலே தான்!

'ஜாக்கெட் முதுகு ரசிகன்'.

விதவிதமான வேலைப்பாடுகள்,

ஜன்னல்கள், கதவுகள், திரைச் சீலை,

embroidery , smocking , gathering என்று

கண்ணுக்கு விருந்து படைக்கின்றார்களே!

முன்னால் பார்த்தல் தப்பு, குற்றம் எல்லாம்.

"சோலி-கே-பீசே-சைடு பார்த்தால் என்னவாம்?"

அவ்வளவு செலவழித்து அதை வித விதமாகத் தைத்துப்
போட்டுக் கொள்பவர்களுக்கு மரியாதை தரவேண்டாமா?


Most men steal occasional glances, fearing the anger of the wife for admiring another lady-when the wife is around.

But our hero will show the 'piece of art' and involve his wife also - since he is admiring only the 'wrong side' of the 'right person'!

How can she ever get angry with him-when he is so honest and frank with her - even while admiring another female!!!
 
# 59. "ஆஷீர்வாத் தீஜியே மாஜி!"

முதல் முதல் விசிட் டு அமெரிக்கா.

மெட்ரோவில் நீண்ட நெடிய பயணம்.

வழியில் வரும்போது ஒரு குட்டிப் பெண்

வழிமறித்துக் கூறினாள் என்னிடம்,
"ஆஷீர்வாத் தீஜியே மாஜீ !" :pray2:

வடநாட்டினரின் ஸ்டைலில் குனிந்து

காலைத் தொட்டு தலைமேல் தடவிக் கொள்ள,

"சரி தான் பயல் என்னவோ குறும்பு செய்து,

அதன் பலன் இவள் ஆஷீர்வாத் கேட்கிறாள்!" :shocked:

suspense உடனேயே உடைந்துவிட்டது ! :nono:

பின்னாலேயே அவள் கணவனும் 'டிட்டோ'!


பிறகு தெரிந்தது அவர்கள், என் மகனின்

மிகவும் நெருங்கிய நண்பர்கள், :hug:

எனக்கு அவர்களைத் தெரியைவில்லையே ஒழிய

அவர்களுக்கு எங்களைப் பற்றி

நன்றாகவே தெரிந்து இருந்தது!

பிறகு டின்னெர் டேபிள் இல்

அவள் அடித்த கூத்தைப் பார்த்து

"இப்படியும் ஒரு வால் பெண்ணா?"

என்ற நானே அதிசயிக்க நேர்ந்தது!

"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி?" :decision:
 
# 60. பழங்களின் படையெடுப்பு!

University merit award + cash award

வாங்கிய என் இளைய மகனுக்கும்,

எங்களுக்கும் ட்ரீட் தர விரும்பினார்

அவன் professor cum adviser.

அவர்கள் சாப்பிடுவதை நாம் சாப்பிட மாட்டோம்.

அவர்களால் நாம் சாப்பிடுவதைத் தர முடியாது.

என்ன செய்யலாம்??? Evening TEA ?! ஓ.கே !!

ஒரு மேஜை நிறைய, தோல் நீக்கப்பட்டு

slice செய்யப்பட்ட fresh, juicy, colorful பழங்கள்!

உலகில் அவ்வளவு பழ வகைகள் உண்டு என்றே

அன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.:shocked:

பொறுமையாக, அழகாக, arrange செய்து!

எல்லா நிறங்களிலும், சுவைகளிலும்....!:love:

பழங்களை உண்ண விரும்பினால் :hungry:

பிறக்கவேண்டும் அமெரிக்காவில்! :baby:
அல்லது இருக்க வேண்டும் அமெரிக்காவில்! :plane:

 
# 61. "maradh lOg aa rahE hain!"

வீட்டின் பின்னால் இரண்டு சிறு
வீடுகள், வேலையாட்களுக்காக!

வேலை செய்யத் தெரியுமே ஒழிய,
வேலை வாங்கத் தெரியாது எனக்கு.

வேலையும் செய்யாமல், வீடுகளில்
வசித்து வந்தனர் ராஜஸ்தானியர்.

ஒருத்திக்கு ஒரு சிறு மகன் உண்டு.
நெடு நெடு என்று ஒல்லி! எப்போதும்

தான் உண்டு தான் வேலை உண்டு டைப்.
இன்னொருத்தி புது மணமானவள்.

கண்களில் காம உணர்வு வழியும்!
பம்பரம் போலச் சுழலும் எப்போதும்...

தெருவில் வருபவரைப் பார்ப்பதற்கு.
எவனாவது ஆண் கண்ணில் பட்டால்...

"maradh lOg aa rahE hain!" என்று கூறி

முக்காட்டை இழுத்துத் தன் கண்களை
முற்றிலுமாக மறைத்துக் கொள்வாள்.

ஆனால் முன்னழகை மூட மாட்டாள்.
அணிவது பாவாடை சட்டை தானே!

"நீ பார்ப்பதைப் பார்த்துக் கொள்!
நான் பார்ப்பது தெரியக் கூடாது!"

இதற்காகவா ஒரு முழு நீள முக்காடு?


"தெருவில் வரானோ என்னைச் சற்றுத்
திரும்பிப் பாரானோ?" என மயக்கும்

பாட்டு இல்லாமல் வெறும் அங்க
அபிநயம் மட்டும் அங்கு நடக்கும்! :doh:​
 






# 62. Lambaadi Women vs super duper models.

சூப்பர் duper மாடல்களின் உடைகளைச்

சிலர் சிலாகிக்கும்போது எனக்கு நிரம்பச்

சிரிப்பு வரும். கூடவே நினைவும் வரும்!

கை அகல front pieces உள்ள blouse ஐக்

கண்டு பிடித்ததே லம்பாடிகள் தானே!

வெறும் நூலால் கட்டும் ஃ ப்ரீ சைஸ் ப்ளௌஸ் ஐக்

கண்டு பிடித்தவர்கள் லம்பாடிகள் தானே?

இத்தனை கண்ணாடித் துண்டுகளை வைத்து

தைத்த உடை அவர்கள் கண்டுபிடிப்பு தானே?

"live -in-dress " என்னும் கான்செப்ட்

அவர்கள் கண்டு பிடிப்புத் தானே!

இத்தனை செய்தவர்களை ஓரம் கட்டிவிட்டு

இவர்களை மட்டும் சிலாகிப்பது ஏன்???:noidea:






 



# 63. அந்த விந்தைத் தந்தை.​

அவர்கள் எதிர் வீட்டுக்கு வரும்போது வெறும்
ஐந்து, மூன்று வயதுப் பெண் குழந்தைகள்!

அம்மாவுக்கு உதவியாக அவர்களின்
அப்பா அவர்களைக் குளிப்பாட்டுவார்.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன.
அப்போதும் அவரே குளிப்பாட்டுவாராம்!

வயதுக்கு வந்த, வளர்ந்துவிட்ட பெண்களைக்
குளிப்பாட்டி விட வேண்டிய அவசியம்?

அது தப்பு என்று மனைவிக்கும் தெரியவில்லை.
"
அவர் தினமும் செய்வது தானே!" என்பார்.​

அந்தப் பெண்களுக்கும் தெரியவில்லை.
நண்பிகளிடம் ஒருவேளை சொன்னால்....!

கிடைத்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாத
அந்த விந்தைத் தந்தை என்பவன் ....

ஒரு புத்திசாலியா? ஒரு தந்திரசாலியா? :decision:
ஒரு சந்தர்ப்பவாதியா? ஒரு மனித மிருகமா? :doh:
 
# 64. ரயில் பெட்டி வீடுகள்.

திருமணம் ஆன புதிதில் எடுத்த
திகைக்க வைத்த வாடகை வீடு.

மூன்று அறைகள் எங்களுக்கு!
மூன்றும் ஒரே பக்கம் திறக்கும்.

ஒரு அறையிலிருந்து செல்ல முடியாது
இன்னொரு அறைக்கு!

பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து,
பூட்டைத் திறந்து கொண்டு, நுழைய
வேண்டும் அடுத்த அறையில்.

ஜெயில் வார்டன் போல இடுப்பில்
சாவிக்கொத்து! திறப்பதும், பூட்டுவதும்
சரியான பேஜார் ஆகிவிட்டது எனக்கு!

நல்லவேளை quarters அல்லாட் ஆனது.

இல்லாவிட்டால் LOCK & KEY phobia என
ஒரு புது வியாதியே வந்திருக்கும்! :fear:

நல்ல பெயர் வைத்துள்ளார்கள்
ரயில்பெட்டி வீடுகள்!

ஒரு அறை வாசிகளுக்காகவே
ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு!

மூன்று அறைகள் எடுத்தது நம் தவறே! அது சரி
மூன்று அறைகள் எடுப்பதற்கு முக்கிய காரணம்?

P.S.

We opted happily for these three compartment rooms-

after living briefly in a garage converted into a house

and surviving the company of everything that crawls

and slithers - emerging from the manhole at night! :scared:​
 
I bet God enjoys being worshiped by the thousand names and their attributes.

The kutty fellow in the house has many names given by me.

Dancing Dumpling
( since he imitates many bharatanAtyam movements and steps)

Jumping Jackfruit
( since he jumps on the sponge bed asif it were a trampoline )

Curly hair - Pearly teeth
(the reason is self explanatory)

He loves being called by these endearing terms and feels extra friendly! :hug:
 
# 65. Obedient carpenters.

கிரிக்கெட் ஸ்டம்புகளை வீணாக்க

மனம் ஒப்பவில்லை எனக்கு.

அழகான மூன்று படிகள் கொண்ட

stand ஒன்று செய்ய விரும்பினேன்.

வீட்டில் ஏரியா மிகவும் குறைவு.

சாமான்களோ மிகவும் அதிகம்.

முடிந்தவரை நான் உபயோகிப்பது

multi layer கான்செப்ட் தான்!

அவர்களைப் பார்த்தால் புத்திகூர்மை

அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை! :loco:

ஆனால் தோற்றம் நம்மை ஏமாற்றுமே!

சொல்வதைப் புரிந்து கொண்டனர்! :laser:

புரிந்து கொண்டதைச் செய்து காட்டினர்.

கற்பனை செய்ததுபோல் furniture. :love:

ஸ்டாண்ட்ஸ், காஸ்செட் holders etc .

பணம் தினம் வாங்கிக் கொள்வதில்லை.

"உங்களிடம் இருந்தால் எங்கள் பணம்

பத்திரமாக பாங்கில் இருப்பது போல.
மொத்தமாக வாங்கிக் கொள்கின்றோம்!":popcorn:

எல்லாம் ஃ போல்டிங் டைப் தான்.

டான்ஸ் கிளாசுக்கும், பாட்டுக் கிளச்சுக்கும்

காலி செய்ய வேண்டுமே அறை முழுவதும்!

இன்றைக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!​



 
# 66. உயிரெழுத்துக்களும் ஒரு மொழியே!

பாலக்காட்டில் ஒரு புடவைக்கடை.

நான் விரும்பும் bright நிறங்கள் சாதாரணமாக

நிறம் மங்குபவைகள் ஆக இருக்கும்.

Dull கலர் விரும்பி எடுக்க மாட்டேன்.

ஒரு புடவை கண்ணைப் பறித்தது.

"நிறம் மங்குமா?" என்று கேட்டேன்.

"ஏ..ஏய்!" என்ற அழகான ஒரு பதில்! :nono:

"நிறம் நிற்குமா?" என்று கேட்டேன்.

"ஓ...!" என்ற ஒற்றை எழுத்தில் பதில். :nod:

"எல்லோருக்கும் புரியும்படி பதில்

பேசத் தெரியாதா?" என்று கேட்டேன்.

"நிங்கள் பாலக்காடு அல்லே! அல்லே ?

நிங்கள் ஏ தேசமாணு?" ....பதில் கேள்வி! :rolleyes:

பின்னால் நவரசச் சொற்களை நான்

ஆராய்ச்சி செய்ததற்கு, இதுவே அன்று

அவர் போட்ட பிள்ளையார் சுழி ஆனது! :playball:

 
M. நவரசச் சொற்கள்.

மனிதனின் வாழ்வில் ஒன்பது சுவைகள் உலா வரும்.
இனிக்கும் சிருங்காரச் சுவையிலிருந்து தொடங்கி

அச்சம், வீரம், கோபம், அற்புதம் என்று பலவகைப்படும்!
இச்சுவைகளை இனிய தமிழில் வெளிப்படுத்த இயலும்

ஒற்றை எழுத்துச் சொல்லின் மூலம் அழகாக நம்மால்!
கற்றவரை இவை நிலவவில்லை வேற்று மொழிகளிலே!

1. அ ஆ => இரக்கக் குறிப்பு.

2. அக்காடா => களைப்பு.

3. அப்பாடா => களைப்பு, சோர்வு.

4. அச்சோ => பதற்றம், இரக்கம்.

5. அட => மகிழ்ச்சி கலந்த வியப்பு.

6. அடேயப்பா => மிக மிக வியப்பு.

7. அந்தோ => கழிவிரக்கம்.

8. அப்பப்பா => வியப்பு, இரக்கம்.

9. அம்மா => வலி, அதிர்ச்சி, பயம், வியப்பு.

10. அம்மம்மா => வியப்பு, களைப்பு, சலிப்பு.

11. அம்மாடி => வியப்பு, ஒப்பு, இரக்கம்.

12. அன்னோ => வருத்தம்,இரக்கம்.

13. ஆ=> இகழ்ச்சி, வினா, வலி.

14. ஆகா => சம்மதம், வியப்பு.

15. ஆத்தாடி => வியப்பு, அதிசயம்.

16. ஆம் => அனுமதி.

17 . ஆமாம் => சம்மதம்.

18 .இதோ => சுட்டுவது.

19 .இந்தா => கொடுப்பது.

20 . எல்லே => இரக்கக் குறிப்பு.

21. ஏலே => (இளையவனை) விளிப்பது.

22 . எலா => (நண்பனை) விளிப்பது.

23 . என்னே… வியப்பு, கழிவிரக்கம்.

24. ஏ => விளித்தல், இகழ்தல்.

25. ஏடா => (தோழனை) விளிப்பது

26. ஏடி => (தோழியை) விளிப்பது.

27. ஐ => வியப்பு, மகிழ்ச்சி.

28. ஐயகோ => இரக்கம், மிகுந்த துயரம்.

29. ஐயோ = > இரக்கம், துயரம், வியப்பு.

30. ஓ => உயர்வு, ஒப்பு, இழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, விளித்தல்.

31. ஓகோ => வியப்பு, வினா.

32. சிச்சீ/ சீ சீ => இகழ்ச்சி.

33. சீ => வெட்கம், நாணம்.

34. சூ = > வெறுப்பு, விரட்டுதல்.

35. சே => மிகவும் வெறுப்பு, இழிவு.

36. சேச்சே => மிகவும் இழிவு.

37. சை => இகழ்ச்சி, வெறுப்பு.

38. சோ => கனமழை.

39. ஞை ஞை => அழுகை.

40. நை நை => தொந்திரவு.

41. தூ => மிகுந்த வெறுப்பு, இழிவு.

https://theworldofwordsblog.wordpress.com/l-நவரசச்-சொற்கள்/
 
குட்டி பேரனுக்குக் கால் விரல்களில் சொடக்கு எடுப்பேன்.
"டிக் டிக் , டிக் டிக்" என்று கூறியபடி, ஒவ்வொரு விரலாக.

இப்போது அவன் கூறுகின்றான் உயிர் ஏழுத்துக்களுடன் கூட்டி
"ஆ டிக்டிக் , ஈ டிக்டிக், ஊ டிக்டிக், ஏ டிக்டிக், ஐ டிக்டிக்" என்று!

நேற்று என் பெரிய பெயரனுடன் பெரிய ஆராய்ச்சி ஒன்று நடந்தது........
எதற்காக நிறையப் பெயர்கள் உயிர் எழுத்துக்களில் முடிகின்றன என்று.

யாராவது காரணம் கூற முடியுமா???
 
Talking of Navarasa here are two impressive navarAga mAlikas.

The first one is a ThAna VarNam - sung in the music concerts.

The second one is a padha varNam performed in Dance concerts.

The speciality of this particular padha varNam composed by Sri Lalkudi

Jayaraman is that it is NOT ONLY a Nava RAga MAlika but also a Nava

Rasa MAlika. Enjoy these impressive performances!

https://youtu.be/FZMxk-mm3a4

https://youtu.be/453CdtMbjEk?t=760

Attachments area

Preview YouTube video Varnam Valachi - Dwani - Sudha Ragunathan


Varnam Valachi - Dwani - Sudha Ragunathan

Preview YouTube video Anjali Arangetram - Varnam - Navarasa Devi


Anjali Arangetram - Varnam - Navarasa Devi






 

Latest ads

Back
Top