# 37. தானத்தில் சிறந்தது...
கர்ண பரம்பரைக் கதை ஒன்று!
கர்ணனைப் பற்றியதே அதுவும்.
சுவர்க்கம் போகும் வழியில் அவன்
துவண்டு போய்விட்டானாம் !
நாரதர் எதிர்படக் கேட்டானாம் ,
"பசியும், தாகமும் எனக்கு ஏன்?"
"எல்லா தானமும் செய்துள்ளாய்!
நல்ல அன்ன தானத்தைத் தவிர!"
Loiness club project களில் ஒன்று
Poor Feeding என்பதும் ஆகும்.
ஆந்திர மக்கள் அறிவாளிகள்,
மிகவும் சிக்கனமானவர்கள்.
அவர்கள் 'சாறு' என்பது நமது
உணவில் 'த்ரீ இன் ஒன்' ஆகும்.
பெரிய பெரிய துண்டுகள் காய்.
கீழிருந்து எடுத்தால் குழம்பு.
மேலாக ஊற்றினால் ரசம்.
குழம்பின் தான்களையே
தொட்டுக் கொண்டு அவர்கள்
சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்.
ஏழைக் குழந்தைகள் குழுமினர்.
நிறைய அன்னமும், 3 இன் 1உம்!
நிறையக் கூரா, நிறைய பெருகு.
(கூரா=காய்கறி, பெருகு= தயிர்)
பரிமாறிவிட்டு நிமிர்வதற்குள்
பாதி இலை காலி ஆகிவிடும்!
"அன்னம்!" "சாறு!" "கூரா","பெருகு!"
என்று என் bend நிமிர்ந்து விட்டது.
நம் வீடுகளில் குழந்தைகள்
டிமிக்கி கொடுத்து ஓடினாலும்,
துரத்தித் துரத்தி உணவை வாயில்
திணிப்பது நினைவுக்கு வந்தது!
திரும்பி வரும் போது என் வயிறு
பசித்தது! மனம் நிறைந்திருந்தது!
கர்ண பரம்பரைக் கதை ஒன்று!
கர்ணனைப் பற்றியதே அதுவும்.
சுவர்க்கம் போகும் வழியில் அவன்
துவண்டு போய்விட்டானாம் !
நாரதர் எதிர்படக் கேட்டானாம் ,
"பசியும், தாகமும் எனக்கு ஏன்?"
"எல்லா தானமும் செய்துள்ளாய்!
நல்ல அன்ன தானத்தைத் தவிர!"
Loiness club project களில் ஒன்று
Poor Feeding என்பதும் ஆகும்.
ஆந்திர மக்கள் அறிவாளிகள்,
மிகவும் சிக்கனமானவர்கள்.
அவர்கள் 'சாறு' என்பது நமது
உணவில் 'த்ரீ இன் ஒன்' ஆகும்.
பெரிய பெரிய துண்டுகள் காய்.
கீழிருந்து எடுத்தால் குழம்பு.
மேலாக ஊற்றினால் ரசம்.
குழம்பின் தான்களையே
தொட்டுக் கொண்டு அவர்கள்
சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்.
ஏழைக் குழந்தைகள் குழுமினர்.
நிறைய அன்னமும், 3 இன் 1உம்!
நிறையக் கூரா, நிறைய பெருகு.
(கூரா=காய்கறி, பெருகு= தயிர்)
பரிமாறிவிட்டு நிமிர்வதற்குள்
பாதி இலை காலி ஆகிவிடும்!
"அன்னம்!" "சாறு!" "கூரா","பெருகு!"
என்று என் bend நிமிர்ந்து விட்டது.
நம் வீடுகளில் குழந்தைகள்
டிமிக்கி கொடுத்து ஓடினாலும்,
துரத்தித் துரத்தி உணவை வாயில்
திணிப்பது நினைவுக்கு வந்தது!
திரும்பி வரும் போது என் வயிறு
பசித்தது! மனம் நிறைந்திருந்தது!