• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 141. The perfect elope.

அவள் என் மாணவிகளில் மிகச் சிறந்தவள்.
தசாவதாரம் SPECIALIST அவள் தான்!

ஒல்லி உடம்பும், சுருட்டை முடியும்
பேசும் அழகிய கண்களும் கொண்டவள்.

எவ்வளவு நன்றாக ஆடினாலும் அவள் அன்னை
"இன்னமும் நன்றாக ஆடவேண்டும்!" என்பார்.

தந்தையும் தாயும் அவளை போஷித்தனர்.
அண்ணனும் அவளை மிகவும் நேசித்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.
அப்பா ஸ்கூட்டரில் சென்று இறக்கி விடுவார்.

மாலையில் வந்து தன்னுடன் கூட்டிச் செல்வார்.
அவ்வளவு அமைதியாக இருந்தாள்.

"இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா?"
இறுதி ஆண்டில் ஒரு நாள் அவளைக் காணவில்லை.

யாருக்குமே அங்கே தெரியவில்லை
அவளுக்கு என்ன ஆயிற்று என்று!

"போலீசிடம் சொல்வதா? நாமே தேடுவதா?
kidnapping செய்து விட்டார்களா?

அவளே எங்கேனும் சென்றுவிட்டாளா" என்று!
ஒரு வாரம் கழித்து ஒரு கடிதம் வந்தது.

"என் மனம் கவர்ந்தவனுடன் சென்று விட்டேன்!
என்னை நீங்கள் தேடி வர வேண்டாம்.

என்னை முற்றிலும் மறந்துவிடுங்கள்!"
இன்று வரை தெரியவில்லை அவள்...

யார் யாருடன் பழகினாள்?
எப்போது அவனுடன் பழகினாள்?

எங்கே அவனுடன் பழகினாள்?
எப்போது perfect elope திட்டமிடப் பட்டது? :noidea:

பொத்திப் பொத்தி வளர்ப்பவர்களுக்கு
எச்சரிக்கை மணி அடித்தனர் அவர்கள். :attention:

:hand: கட்டுப்பாடு :nono: அதிகமாகும்போது அதை
உடைப்பதில் ஆர்வம் அதிகரிக்குமோ? :ballchain:​
 
# 142. EXTEMPORE.

பேசுவதில் பல வகைகள் உண்டு.

திட்டமிட்டுப் பேசுவது ஒன்று.
திட்டம் இடாமல் பேசுவது ஒன்று.

திட்டம் இட்டுப் பேசும் போது
பேச்சைத் தயாரிப்பது சுலபம்.

தலைப்பும் தெரியும் நமக்கு.
தரப்பட்ட நேரமும் தெரியும்.

EXTEMPORE என்னும் திட்டமிடாத
பேச்சு பலருக்கு மிகவும் கடினம். :fear:

அப்போதே தலைப்பைத் தருவார்கள்.
சில மணித் துளிகள் பேச்சைத் தயாரிக்க.
சில மணித் துளிகள் பேசுவதற்கு.

நிறையப் படிப்பவர்களுக்கு மட்டுமே :nerd:
இது சாத்தியம் ஆகும் என்பது உண்மை.

இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு
specialize செய்தவர்களில் ஒருவன் என் மகன்

U.S. Citizen ஆனபோது அந்தக் கூட்டதில்
பேச அழைத்தனர் ஆர்வம் உள்ளவர்களை.
பெண்கள் விரும்பி வந்து பேசினார்கள். :blabla:

ஆண்களில் பேசியது இவன் ஒருவனே!
EXTEMPORE பயிற்சி பலன் அளித்தது. :thumb:​
 
Old age affects different people in different ways!

Often times old age looks so scary for oneself as well as for the others.

Yet most people wish to live on to become centenarians! :der:???
 
Pride and Prejudice always go in hand in both directions!

Pride in a person will lead to prejudices towards others.

Conversely, Prejudices against a person will make someone

see pride in that person - even when it does NOT really exist!
 
# 143. A Picnic to the zoo.

L.K.G. குழந்தைகளை அழைத்துச் சென்றனர்
ஒரு நாள் பிக்னிக் zoo வுக்கு அவர்கள் பள்ளியில்.

அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டை போல
ஆளுக்கு ஒரு பக்கம் இவர்கள் ஓடுவார்களே!

எப்படி சமாளிப்பார்கள் ஆசிரியைகள் ???
மகன் திரும்பி வரும் வரை ஒரே கவலை தான்!

"எப்படி எல்லோரும் பத்திரமாக வந்தீர்கள்?" என்றால்

"ரயில் வண்டி போல ஒருவர் தோளை ஒருவர்
பிடித்துக் கொண்டு பெரிய லைனில் போனோம்!"

நல்ல யோஜனை தான். வால்ப் பசங்களை மேய்க்க.
பிறகு தெரிந்து கொண்டேன் இந்த உண்மையை.

There is safety in numbers!
குரூப்பாகப் போகும் போது எல்லோரும் safe !

இலவச கண்முகாமில் சிகிச்சை செய்துகொண்ட,
ஒரு கண் கட்டுப் போட்டு மறைக்கப்பட்ட, :cool:

தடி ஊன்றிய, தலை நரைத்த, பொக்கை வாய்க் :crutch:
கிழவர்கள், கிழவியர்கள் செய்த சாதனை...???

நன்றாகக் கண் தெரியும், நன்றாக நடக்கும்,
இளையவர்களே நடக்க அஞ்சும்

அந்த அகன்று பரந்து விரிந்த சாலையினை
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே கடந்தது தான்.

ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு
மனிதச் சங்கிலி போல அவர்கள் நடந்த போது :flock:

அத்தனை பஸ்களும், லாரிகளும், மற்றவையும்
அசையாமல் இரு புறமும் நின்று இருந்ததை
இன்னமும் என்னால் மறக்கவே முடியவில்லை!​
 
# 144. கள் அப்பம் !!!

கணிதம் டியூஷன் கிளாஸ் அது!

"கெக்கே பிக்கே" என்று சிரிக்கும் :pound:
மாணவியிடம் கோபமாகக் கேட்டேன்,

"கள் குடித்துவிட்டு வந்து இருக்கிறாயா
இன்று இந்த டியூஷனுக்கு?"என்று.

"கள் அப்பம் மாலையில் சாப்பிட்டேன்!" :hungry:
என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள்!

கள் எந்த ரூபத்தில் உடலில் சென்றால் என்ன?
அதன் குணத்தைக் காட்டாமல் இருக்குமா என்ன?

இப்படியெல்லாம் கூடவா டிபன் செய்வார்கள்! :mmph:
அதுவும் படிக்கும் குழந்தைகளுக்குத் தருவதற்கு? :doh:​
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 145. "எனக்கு வித்துக் காசாக்கத் தெரியாது!"

இனாமாகக் கற்றுத் தந்தால் விலை இருக்காது!
ஒழுங்காக வகுப்புகளுக்கு வரமாட்டார்கள்!

குறைந்த பட்சம் டியூஷன் ஃபீஸ் தான் எல்லோருக்குமே!
Nominal ஃபீஸ் / டோக்கன் ஃ பீஸ் என்றே சொல்லலாம்.

அதற்கே மூக்கால் அழுபவர்கள் " அதி தனவந்துலு!"

அவர்கள் வகுப்புக்கு என் வீட்டுக்கு வராமல் இருந்ததுடன்
எனக்கே 'absent மார்க்' போடும் உயர்ந்த ஜாதியினர்!

"நானும் தான் பாட்டுப் படித்தேன்!
எனக்கு உங்களைப்போல அதை
வித்துக் காசாக்கத் தெரியவில்லை!" :caked:

கலையை விற்றுக் காசாக்க வேண்டுமென்றால் - அவரிடம்

விலை கொடுத்து அதை வாங்குவதற்கு யாரவது வரவேண்டுமே!

கதை பண்ணி இருப்பாள் "நானும் பாட்டுக்கு கிளாஸ் போனேன்!" என்று
அதையும் மறந்து, கற்றதையும் மறந்து விட்டு இப்படிப் பே(ஏ)சுவார்கள்.

நான் சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க எண்ணிப்
பலமுறை அவளிடம் இப்படிச் சொல்வதும் உண்டு.

"விற்றுக் காசாகா விட்டாலும் உங்கள்
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து
டியூஷன் ஃபீசை மிச்சம் செய்யலாமே!

"After all A penny saved is a penny earned ." :popcorn:

அதற்கும் உடம்பும் வணங்க வேண்டும், :couch2:
விஷயமும் தெரியவேண்டும் அல்லவா?

கலையை விற்றுக் காசாக்கியதாக
என்னைக்
குற்றம் சாட்டினவர் செய்வது என்ன
தெரியுமா ?

"காடாறு மாதம் நாடாறு மாதம்" என்று
இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக
மருமகன்கள் செலவில் சுகமாக வசிப்பதும்,
வருடம் தவறாமல் ஆகாயத்தில் பறப்பதும்! :plane:

கலையை விற்கும் அளவுக்குப் புலமை இருந்தால்
சும்மா இருந்திருப்பாரா இந்த மாது சிரோன்மணி??? :rolleyes:


அவளும் அவள் கணவரும் செய்த ஒரே நல்ல காரியம் இதுதான். வெள்ளைத் தோலைத் தேடி அலையும் அற்ப மனிதர்களுக்காக
வெள்ளை தோல் உள்ள இரண்டு பெண்களைப் பெற்றது தான்



அமெரிக்க மாப்பிள்ளைகள் இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களே!
அமெரிக்க குடியுரிமை வாங்கித் தந்திருந்தாலும் நான் அதிசயப் படமாட்டேன்!
 
# 146. The Frog race.

தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவினோம்

தமிழ் வளர்ப்பதற்கு விசாகாவில்.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்
கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்!

அந்த முறை frog race நடந்தது.
சின்ன மகனுக்கு அதில் முதல் பரிசு. :first:

அவன் பரிசுக்காக அங்கே நிற்காமல்
விளையாட ஓடிவிட்டான் நண்பர்களுடன்.

நான் பரிசை வாங்கச் சென்றால் என்னிடம்...

"தவளை போலத் தத்தி வந்தால் தான் பரிசு!"
என்கிறார் விழாவின் சிறப்பு விருந்தினர்.

"நீங்களே அதை எடுத்துக் கொண்டு உங்கள்
வீட்டுக்குத் தத்தித் தத்திச் செல்லுங்கள்" :frog:

என்று கூறிவிட்டு என் இருக்கையில் அமர்ந்து விட்டேன். :hand:

பிறகு அவரே மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து
என்னிடம் பரிசையும் தந்து மன்னிப்பும் கேட்டார். :sorry:

தலைவர் என்றால் தலையில் உள்ள
மறை கழன்று விடுமா என்ன ???
 
Last edited:
I am watching the movies on the Saints of India in Hindi and MarAti.

I am surprised to note that (barring Saint J~nAnEswar who went into a jeeva samAdhi) all the saints in all the movies I have watched till now, prefer to go into a jala samAdhi when they decide to quit this mortal world.

I remember that Sree Rama did the same by walking into the river Sarayu - followed by his citizens of Ayodhya.

Is not walking into a river equal to committing suicide?

Is not committing suicide one of the greatest sins??

I am really confused thinking about this.

Can anyone throw light on this matter please???
 
# 147. குருவின் குருநாதர்.

என் குருவும் அவர் மனைவியும்
ரொம்ப ரொம்ப சிம்பிள் type.

குருவின் குரு எப்படி இருப்பார்!
அவர் வந்தவுடன் தெரிந்து விட்டது.

தங்க frame போட்ட கண்ணாடி.
தங்க strap போட்ட wrist watch.

(இவர் உண்மையில் சந்நியாசி தானா?)

பாலிஸ்டர் காவி வேஷ்டி தான் கட்டுவாராம்!
ஊரெல்லாம் தேடி அலைந்து வாங்கி வந்தேன்!

வானவில்லின் அத்தனை நிறங்களிலும் இருந்தன
கருப்பு நிறம், ஊதா நிறம் உட்பட - ஆனால் காட்டனில்!

பழங்கள், ஆடைகள் அளித்தவர்களுக்கு மட்டும்
பழங்கள் கொடுத்தார் அவர். மற்றவர்களுக்கு :nono:

எல்லோரையும் தன்னைத் தவறாமல் வந்து
காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணச் சொன்னார்.

வயது முதிர்ந்த பாட்டியையும் கூட விடவில்லை!

மூச்சைப் பிடித்துக்கொண்டு பாட்டி வணங்கும் போது
குறும்பாக சிரித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். :becky:

ஒரு நண்பியின் வீட்டில் புளிக் குழம்பை "ஒரு கை" பார்த்தார்!
உடன் அமர்ந்து உண்டவர்கள் கண்டு அதிசயிக்கும் வண்ணம்

சினிமா டைரக்டருக்கு எடுத்துச் செல்வது போல
ஒரு பட்டுத் துணி போர்த்தின நாற்காலி கூடவே சென்றது.

என்ன என்ன எப்படி எப்படி சமைக்க வேண்டும் என்று
பிக்ஷை(?)க்குச் செல்லும் வீட்டுக்கு முன்பே instructions.

"சாப்பாட்டையே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது"
என்று அவர் lecture அடித்தபோது எனக்குச் சிரிப்பு வந்தது.

இவர் சாப்பாட்டுக்காக ஒவ்வொருவரும் எவ்வளவு பணம்,
நேரம் செலவு செய்தார்கள் என்று அறிந்து கொண்டதால்.

A .C . கார் எப்போதும் காத்து நின்றது! :car:
கோவை climate டில் air கண்டிஷன் காரா?

என் தங்கை மகன் முடிவே செய்துவிட்டான்,
"பெரியம்மா! நான் சாமியாராகப் போகின்றேன்!
என்ன சுகமான சொகுசான வாழ்க்கை!" என்று.

எல்லா சந்நியாசிகளுக்கும் இந்த அதிர்ஷ்டம்? :rolleyes:
அவனுக்குப் புரிய வைக்க வேண்டி இருந்தது! :blah:
 
# 148. சிலப்பதிகாரப் பாடல்.

"வடவரையை மத்தாக்கி" என்று தொடங்கும்
சிலப்பதிகாரப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அது எப்போதும் எனக்குக் கை கொடுக்கும்.

M.S.S. அம்மாவால் பிரபலம் அடைந்த அது
அழகிய ஒரு ராகமாலிகை. பல்வேறு 'மூட்ஸ்'!

நெருங்கிய உறவினர் மகள் திருமணத்தில் எங்களை
மாப்பிள்ளைக்கு யாரும் அறிமுகம் செய்யவே இல்லை.

நான் இந்தப் பாடலைப் பாடியதும் அவர் வலிய வந்து
நீண்ட நேரம் பேசி அறிமுகம் செய்து கொண்டார். :tea:

மகனின் professor வீட்டுக்குச் சென்ற போதும்
அவர் மனைவி என்னைப் பாடச் சொன்னபோது
நினைவுக்கு வந்தது இந்தப் பாடலே தான்.

அவர் ஒரு சிறந்த பியானோ ஆர்டிஸ்ட். பாடினேன்.:sing:

"உங்கள் இனிய மொழி எனக்குப் புரியவில்லை.
ஆனால் வேறு வேறு "மூட்"களை உணர முடிந்தது!" :music:
என்றவுடன் நான் உண்மையில் அசந்து போனேன்.

மொழி புரியாமலேயே "மூடை" ரசித்த அவர் பாடலின்
பொருளும் புரிந்திருந்தால் எப்படி ரசித்திருப்பார்?

இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு என்ன என்று அறிவீரா?
வேறு சமயத்தினரான இளங்கோ அடிகள் திருமாலைப் போற்றி பாடியது!
 
Doing namaskAr reduces one's ego. TRUE!

It is very difficult for some Ambis and Thambis
to bow in front of another person - however great and respectable.

But in Nature nothing can get destroyed or created. Things may at most be converted from one form to another form as in the case of Energy.

OR it might get transferred from one place / person to another place/ person. AgainTRUE!

All the namaskars a person receives makes his head bolat with pride and ego UNLESS the namaskars are redirected upwards towards Heaven where the real being worthy of being worshiped resides.

My father used to do this. I too do the same now! :pray:
 
# 149. "ஹரீ தும் ஹரோ...!"

அடுத்த நாள் once for all கோவை திரும்புகின்றோம்.
முதல் நாள் இரவு மியூசிக் மாஸ்டர் வீட்டில் விருந்து.

"பக் குங்குரு" மீரா பஜன் பாடச் சொன்னார். பாடினேன்
பிறகு "இன்னும் ஒன்று பாடவேண்டும்" என்று கூறவே

மகாத்மா காந்தியின் favorite மீரா பஜன் ஆன
"ஹரி தும் ஹரோ ஜன் கீ பீர்" பஜன் பாடினேன்.

சிறிது நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது
நான் அதைப் பாடிய அதே தருணத்தில்
என் அருமைத் தந்தையார் இந்த உலகை நீத்தது!

இருபத்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன!
இன்றும் என்னால் கண்ணீர் சிந்தாமல்
அந்த மீரா பஜனைப் பாட முடிவதில்லை!
 
# 150. "இது என்ன மயக்கம்?

தினமும் கோவிலுக்குச் செல்வதால்
பூஜாரிகளுக்கு நான் ஒரு சஹோதரி.

எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்வார்கள்.
தேவைப் பட்டால் அறிவுரை கேட்பார்கள்.

பெருமாள் கோவில் பூஜாரியின் தந்தைக்கு
கேன்சர் வியாதி வந்து விட்டது.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை ஆனால்
எப்படியோ ஏழைகள் சமாளிக்கலாம்.

லக்ஷக் கணக்கில் பணம் தேவைப் படும்
வியாதிக்கு செலவு செய்ய முடியுமா?

அவர் தந்தையே சொல்லி விட்டாராம்
"ஒரு சிகிச்சையும் வேண்டாம்!" என்று!

காரணம்....

"தங்கையைக் கரை ஏற்ற சேர்த்த பணத்தைச்
சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டாம்" என்று.

ஆனால் பிறகு அதுவும் நடக்க வில்லை.

தந்தையின் இறுதிச் சடங்குகளுக்கு
மொத்த சேமிப்பும் கரைந்து விட்டது.

தந்தையைக் காப்பாற்ற உதவாத பணம்
தங்கைக்கும் பயன் தராமல் போனது.

இலவு காத்த கிளி ஆகிவிட்டார் அவர்.
மனதில் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி வேறு.

ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது
இந்த வகை வாழ்க்கை தானோ?

இப்படி வாழ்பவர்களைப் பற்றி என்றாவது
யாராவது எண்ணிப் பார்ப்பது உண்டோ! :tsk:
 
# 151. உலகம் பலவிதம்.

ஒருவர் "எடுப்பார் கைப் பிள்ளை".

ஒருவர் "உடைந்தாலும் உடைவேன்!
ஆனால் என்றும் வளையேன்" என்ற ஜாதி.

ஒருவர் நன்கு பிழைக்கத் தெரிந்தவர்.

முதல் வகை மனிதர் கோவிலில் பூஜை
செய்யும் போது நேரம், காலம் எதுவுமே
தெரியாது என் போன்றவர்களுக்கு!

அறிவிக்கப் பட்ட பூஜை நேரம் வேறு!
ஆனால் பூஜை நடப்பது வேறு நேரத்தில்.

அடுத்து வந்தவர் அடுத்த வகை ஆவார்.
ஒரு நிமிடம் கழித்து வந்தால் கூடப்
பால், தயிர் எதுவும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

அப்படியே திருப்பி அனுப்பி விடுவார்.

அவற்றைக் கொண்டு வந்தவர் மனம் படும்
பாட்டை புரிந்து கொள்ள மறுப்பார்.

இப்போது உள்ளவர் நீக்கு போக்கு உள்ளவர்.

எடுத்தார் கை பிள்ளையும் அல்ல. :baby:
ஹிட்லர் போன்று கறார் பேர்வழியும் அல்ல.:whip:

அதன் பலன்...

கோவிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. :flock:
தட்டில் நோட்டுக்களாக விழுகின்றன.
உண்டியும் நிரம்புகிறது வெகு வேகமாக.​
 
அம்மாவாவது , மாமியாராவது? :ohwell:

இடுப்பு ஒடிந்த அம்மாவைக் கொண்டு போய்
கடுமையான ஓல்ட் ஏஜ் ஹோமில் விடலாம்.

இடுப்பு ஒடிந்த மாமியாரை என்ன செய்யலாம்?

மரவட்டைபோல சுருண்டு கிடப்பவளை கொண்டு
ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு விட முடியுமா? :nono:

அதுவும் ஆறு மகன்களைப் பெற்ற அம்மாவை?
அதனால் இரண்டு இரண்டு மாதங்கள் தான் duty!

She will be shifted to the next son's house -
in case she is still alive - despite all the odds !!!:doh:

எப்படி shift செய்வார்கள்?
கிழ உடம்பு அதைத் தாங்குமா?

"எல்லாம் படுக்கையில்" என்றால் அவளை
நன்றகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

T.V. ஃபுல் வால்யூமில் அலறிக்கொண்டு இருக்கும். :ear:
அதற்கு மேலே இவர்கள் பேசு(அலறு)வார்கள்! :horn:​

பாவம் பாட்டி! எப்படிச் சமாளிக்கிறாள்?

"கொலை எப்போது கருணைக் கொலை ஆகும்?"
தெரிந்துகொள்ள வேண்டுமா உங்களுக்கு?

ஒரு முறை இந்தமாதிரி ஒரு ஃபேமலியை
ஒரு நாள் மட்டும் விசிட் பண்ணுங்கள்!

வாழும் ஆசையே விலகிப் போய்
விரக்தியும், வைராக்கியமும் வந்துவிடும்.​
 
Fun scene in the house!

The new kitty chases thatha.

Thatha chases chinnak kutty.

Chinnak kutty chases the kittty!

So the circle is complete and
the household is in dynamic equilibrium! :laugh:
 
காட்சியும், பார்வையும்.

கோவையில் வெளிப்படையாக நடக்கும்
பகல் கொள்ளை ஆட்டோக்களினால்.:shocked:

ஏறி இறங்கினாலே ஐம்பது ரூபாய்! :popcorn:

சவாரி செய்யவேண்டிய தேவை இல்லை!
தக்ஷணை மட்டும் கொடுத்தாக வேண்டும்!

பெருமழை பெய்து சாலை வெள்ளக்காடு!
ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு 200 ரூபாயா?

"தண்ணியில் உங்களாலே நிற்க முடியாது.
கையிலே தடி வேறே. ஏறுங்க போகலாம்!"
என்று உரிமையான அதட்டல் வேறு.

காலையில் கால்டாக்சியில், பாட்டுக் கேட்டுக்
கொண்டே போனது வெறும் 90
ரூபாய்க்கு!

பத்து, பன்னிரண்டு பேர்கள் கேட்டாலும்,
நூறு
ரூபாய்க்கு
ஒத்துக் கொள்ளவில்லை.

ஒரு(நல்ல)வன் வந்தான்.
அவனும் அதே சொன்னான்!

"தண்ணியில் உங்களாலே நிற்க முடியாது.
கையிலே தடி வேறே. ஏறுங்க போகலாம்!

எவ்வளவு இஷ்டமோ அதைக் கொடுங்க.
மழை நனையாதீங்க! பாவம் வயசானவங்க !"

காட்சி ஒன்றானாலும் பார்வை வேறு அல்லவா?
சந்தோஷமாக 120 ரூபாய் கொடுத்தோம். :happy:
சந்தோஷமான அவனும் வாங்கிக் கொண்டான்.

இவனைப்போல சிலர் உள்ளதால் தான் இன்னமும்
நாட்டில் நல்ல மழை பெய்கின்றதோ ??? :noidea:

 
மீண்டும் "மீண்டும் கோகிலா?"

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நான் நினைத்தேன்,
"இப்படி யாரவது காது மிஷீனைக் கழட்டுவார்களா?
மீண்டும் செவிடாகவே அலைய விரும்புவார்களா?":rolleyes:

என்ன ஆச்சரியம்? Mr . K.B. is correct - as usual!

ஓர் அதிசய அண்ணன். நன்கு படித்தவர்.
வெளிநாட்டில் நல்ல வேலையிலிருந்தவர்.

காது 'டமால்' ஆகும்வரை அவருக்குத்
தெரியவே இல்லையாம் அப்படி என்று?!

Hearing-aid பணி புரியவில்லை! ......:ear:
காது எப்போதோ "கேக்காது" ஆகிவிட்டபடியால்.

25, 000 ரூபாய் மிஷீன் பூஜையில், பூஜை அறையில்!!!

அதிசய அண்ணனுக்கு ஓர் அற்புதத் தம்பி.
இவருக்கு காது பாதி டமால் ஆகிவிட்டது.

"வருமுன் காப்போம்" என்று வாங்கிய
Hearing aid பத்திரமாக அதன் பெட்டியினுள்.

பழையபடி ஏழு கட்டை ஸ்ருதியில் அலறிக்கொண்டு... :rant:

டீ. வீ. யில் சீரியலை அலற விட்டுக் கொண்டு....:ranger:
Private conversation என்ற கான்செப்ட் இல்லாமல்....:horn:
K. balachandar was right about "meendum kokila"!!! :clap2:​
 
The Compositions of Sree HaridAsa nArAyaNan was to be launched on
The Vijaya Dasamai day in the Music and Dance section.

Now we are planning to include the audio links also to enable interested people to learn those songs.

So the singers will have to learn these song first before rendering them for us. These 100 + songs may take up to 2 years!!!

So the new thread will be launched ASAP and new songs will be posted as soon as their audio links get ready.
I thank you for your patience! :pray2:


images


Our team wishes everyone here A very Happy Dasara!
 
"எல்லாம் நன்மைக்கே" !

வேட்டைக்குச் சென்ற ஓர் அரசகுமாரனுக்குக்
வெட்டுக் காயம் ஏற்பட்டுவிட்டது எப்படியோ!

எல்லாம் நன்மைக்கே என்று நம்பும் அமைச்சர்
"எல்லாம் நன்மைக்கே!" என்று அப்போதும் கூறினார்.

வெகுண்டு எழுந்த ராஜகுமாரன் அவரைக் :mmph:
மிகுந்த காவலில் சிறைக்கு அனுப்பினான்.

மீண்டு வரும் வழியில் அவன் மாட்டிக் கொண்டான்
ஆண்களை நரபலி கொடுக்கும் ஒரு கும்பலிடம்.

அவனை இழுத்துச் சென்றவர்கள் கண்டது
அவனுக்கு ஏற்பட்டிருந்த வெட்டுக் காயத்தை.

குற்றம் குறை இல்லாத மனிதன் தேவை பலிக்கு.

"இவன் நமக்குப் பயன் படமாட்டான்!" என்றபடி
அவனைத் தப்பிப் போக விட்டு விட்டனர். :bolt:

நாடு திரும்பியவன் மன்னிப்புக் கேட்டான்
வாடி சிறையில் இருந்த அன்பு அமைச்சரிடம்,

"என்னை மன்னியுங்கள் அமைச்சர் பிரானே! :sorry:
உங்களைக் கைது செய்தேன் முட்டாள் நான்!"

"அதுவும் நன்மைக்கே" என்றார் அவர் மீண்டும்.

"இல்லாவிட்டால் அவர்கள் என்னை அந்த
பொல்லாத தேவதைக்கு பலி கொடுத்திருப்பார்களே!"

என்ன நம்பிக்கை! என்ன தீர்க்க தரிசனம்!
இவரல்லவோ நல்ல மதி மந்திரி? :clap2:
 
It is the DUTY of the parents to bring up their children and make them worthy citizens.

But it is the KINDNESS of the children if they take care of their parents in their old age.

I used to call my sons as "Budaapaa kaa sahaaraa" - using an expression from one of their Hindi lessons.

I knew the meaning then but now I realize the significance of the meaning of those words.

Budaapaa = old age.
sahaaraa = helper / help
.
 

Latest ads

Back
Top