• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 123. அவர் ஜேசுதாஸ்?

எதிர் சீட்டில் ஒருவர் அச்சு அசல் ஜேசுதாஸ்!
"The most frequent flier" ரயிலிலா??? :plane:

இல்லை இவர் ஜேசுதாஸ் look - alike!
மிகவும் அமைதியாக அவர் மனைவியும் !

அவர்கள் தொழில்.....நம்ப மாட்டீர்கள்!
கருவில் இருக்கும் குழந்தைக்கு பாடம்! :baby:

இந்தியா முழுவதும் தொடர் பயணம். :bump2:
ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்காவுக்கு. :plane:

Ultra sensitive instruments மூலம்
தங்கள் முயற்சியின் வெற்றியைக்
கண்டுபிடிக்க முடியுமாம் அவர்களால்!

கருவிலேயே பத்ம வியூகத்தை கற்றுக் கொண்ட
அபிமன்யுவையும் இவர்கள் அறிந்திருந்தனர்.

விஷ்ணு பக்தியை வயிற்றில் உள்ளபோதே
வளர்த்துக்கொண்ட பிரஹ்லாதனையும் கூட...
இவர்கள் ஹிந்துக்கள் அல்ல என்ற போதிலும்!!!

அன்றைக்கே இதை அறிந்த நம்மவர்களைக்
கொண்டாடுவதா? :hail:

அல்லது

இன்றைக்கு அதை மீண்டும் செயல்படுத்தும்
இவர்களைக் கொண்டாடுவதா? :noidea:​
 
# 124. Mugarsing Maestro !

இள வயது! இனிய முகம்! இனிய மொழி!

அவர் தன் வாழ்வில் முழு வெற்றி
அடைந்து விட்டதை பறை சாற்றியது.

ஒரு பிரபல பின்னணிப் பாடகரின்
தூரத்து உறவினராம் இவர்.

அந்தப் பழம் பெரும் பாடகர்
இன்று நம்மிடையே இல்லை.

ஆனால் அவர் அறிவுரையை ஏற்றதால்
அகில உலகையும் வலம் வருகிறார் இவர்! :plane:

முகர்சிங் என்னும் முகவீணை maestro!
ஒரு குட்டிப் பெட்டி நிறைய முகவீணைகள்,
நீளப்படி அடுக்கி இருந்தார் அவர்.

எப்போதும் நான் நினைப்பது உண்டு!
இசைக்கருவிகளில் most cumbersome வீணை.
குட்டியானது புல்லாங்குழல் என்று.

அன்று உண்மையை அறிந்து கொண்டேன்.
பெரியது அசல் வீணை! சிறியது முகவீணை.

எப்படிப் பற்களால் அதைக் கடித்துக் கொண்டு
நாவை அறுத்துக் கொள்ளாமல் வாசிப்பது
என்று எங்களுக்குச் செய்து காட்டினார் .

"vibrations பற்கள் வழியாக
கபாலத்துக்கு transmit ஆகாதா?"
"ஆகும்!" என்றார். "இன்னும் அதிக ஓசையுடன்!":drum:

டென்டிஸ்ட் அப்பர் மோலார் பல்லைக் குடைவது
என்னுடைய நினைவுக்கு வந்தது.

மூன்று நாட்கள் தலையில் மோட்டார் ஓடும்
ஓசை கேட்குக்கொண்டே இருக்குமே! :ear:

Occupational hazards எத்தனை எத்தனை? :scared:
 
# 125. A famous instrumentalist.

சென்னை பெங்களூரு பயணம்.

ரயில் புறப்படும்போது வந்தார்
அந்த பிரபல இசைக்கலைஞரும்,
அவர் கணவரும் அவசரமாக!

நம் ஊர் ஆசாமிகளைப் பற்றித்
தெரியுமே நமக்கு நன்றாக!

பையை வைப்பதற்கு இடம் இல்லை.
சீட்டுக்கு அடியிலும் செல்லாது அது.
திணறிப் போய் விட்டார் அவர்.

அவர் யார் என்று சர்வ நிச்சயமாக
எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்!

வெளிநாடுகளில் standing ovation! :clap2:
இங்கோ அறிமுகம் இல்லாததுபோல! :bored:

என்னால் தாங்கவே முடியவில்லை. :sad:

நான் அவரிடம் சென்று சிறிது நேரம்
பேசின பின்னர் மனம் அமைதியானது.

அதுவே ஒரு மூன்றாம் தர நடிகனாகவோ
அல்லது நடிகையாகவோ இருந்திருந்தால்!
Compartment டே திமிலோகப்பட்டிருக்கும்! :cheer2:​
 



126. A LOUD (!) STAR.

பத்மநாப சுவாமியின் ஆடை முழுவதும் தங்கத்தினால் ஆனது என்று
மீண்டும் ஒருமுறை கண்டு பிடித்தனர்!

அதை ஒருமுறை கண்டு வருவோம் என
திருவனந்தபுரத்துக்கு ஒரு திடீர்ப் பயணம்.

கர்ப்ப க்ருஹத்தில் மண்டிய விரவிய
அத்தனை இருட்டு உண்மையில் தேவையா?:noidea:

வெற்று உடம்புடன் வதவத ஆண்கள்!
வேர்வை ஊற்றுகள் ஆறுகளாயின!!

இறைவனின் தலை மேல் இருந்த
மல்லிகை மாலையை வைத்து நாம்
கற்பனை செய்ய வேண்டுமாம்
அவர் அழகிய அருள் முகத்தை!

மூன்று வாயில்கள் வழியாக மூன்று
installment டில் பார்க்கவேண்டும்
அவரது முழு அருள் வடிவினை.

திரும்பி வரும்போது எங்கள் கோச்சில்
வெள்ளை வெளேரென்று வேஷ்டியில்
சில்க் ஜிப்பாவில் ஒருவரின் ஆரவாரம்! :blah:

"நீங்கள் ஒரு நடிகரா?" என்று கேட்டேன்.:drama:

"சீரியல் எல்லாம் பார்பீர்களா?" முகத்தில்
ஆயிரம் தாமரைகள் மலர்ந்தன ஒருநொடியில். :becky:

அவர் பிரபல மலையாள சீரியல் ஒன்றில்
வில்லன் கம் ஹீரோவாம் (நெகடிவ் ரோல்)

"சீரியல் பார்க்காமலேயே என்னை எப்படிக்
கண்டு பிடித்தீர்கள் நீங்கள்?" என்று கேட்டார்.

"YOU ARE OCCUPYING MORE THAN
THE NORMAL PERSONAL SPACE. :roll:

YOU ARE DRESSED TOO WELL
TO BE AN ORDINARY PERSON!" :hat:

அவர் சீரியலைத் தொடர்ந்து பார்க்கச் சொன்னார்.

"சரி சரி"என்றேன். T.V. பார்ப்பதில்லை என்று
சொல்லி அவர் ஆர்வத்தைக் குலைக்கலாமோ? :rolleyes:


மீண்டும் கண்டு பிடித்தன
 
# 127. மொட்டை பாஸ்.

முன்பெல்லாம் எல்லாத் திரைப் படங்களிலும்
ஒரு மொட்டை பாஸ் தவறாமல் வருவார்.

(இப்போது வருகின்றாரா தெரியவில்லை!
அவருக்கு நிரம்பவும் வயதாகி இருக்கலாம்!)

ஒரு நாள் சென்னை ரயிலில் பார்த்தோம் அவரை.
படு சாதுவாக, படு மிருதுவாகப் பேசினார்.
குழந்தைகளை அழகாகக் கொஞ்சினார்.

எப்படி அடிபடாமல் stunt செய்கிறார்கள்;
எத்தனை பயிற்சிகள் அதற்குத் தேவை;
என்ன என்ன உணவு உண்ண வேண்டும்; :hungry:
எப்படி உடல் கட்டை காப்பற்றுவது; :boxing:

எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைத்தார்.

திரையில் நல்லவர்களாக நடிப்பவர்கள் :angel:
வாழ்க்கையில் அதற்கு மாறுபட்டும், :evil:

திரையில் ரௌடியாக வந்து ஓயாமல் :evil:
அடி வாங்குபவர் மிகவும் நல்லவராகவும் :angel:

இருக்க முடியும் என்று தெரிந்தது அன்று! :peace:
 
# 128. The Moon and The stars!

ரயிலில் aisle பக்கம் தலை வைத்துப்
படுத்துத் தூங்கப் பிடிக்காது எனக்கு.

எல்லோருக்கும் நம் முகம் தெரியும்.

ஜன்னல் பக்கம் தலை வைத்தால்
எவனாவது உள்ளே கையை விடுவான்.

இவருக்கோ வெளியே வேடிக்கை பார்க்கவேண்டும்.
எனக்கோ நிறைய :பிரெஷ் காற்றோட்டம் வேண்டும்.

எப்போதும் இவர் ஜன்னலில் கண்ணாடிக் கதவு;
என் ஜன்னலில் எப்போதுமே காற்று வரும் கதவு.

ஒரு
முறை கண் விழித்தால் ஜன்னலில் சந்திரன்,
கண் சிமிட்டும் தாரகைகள் தெரிகின்றன! :shocked:

ரயிலிலிருந்து நான் தான் வெளியே வந்துவிட்டேனா?
இல்லை! இல்லை!
சந்திர தாரகைகள் தான் உள்ளே வந்துவிட்டன!

இதன் காரணம் ஒரு சர்தார்ஜியின் கைவண்ணம்.
ஜன்னலை மீண்டும் மூடினால் சண்டைக்கு வந்தான்!

"யே கிடுக்கி குல்லா ரஹேகா!" என்றான்
"நஹீ நஹீ யே கிடுக்கி பந்த் ரஹேகா!" என்றேன்

அவன் விடுவதாக இல்லை. :rant:

ஆறு உயரமும், நான்கரைடி அகலமும், தலைப்பாகையும்
உள்ள தாடியுடன் நள்ளிரவில் தகராறு வேண்டாமே!

After all discretion is the better part of valor.:decision:

அன்று தலையணையை இடம் மாற்றினேன்!
அந்த லூனடிக் லூனார் ஒளியில் தூங்கினான்!:sleep:
 
Travelling time is when I see and learn many things from the people around me.
Our trip to India is fast approaching.
I will be back in Coimbatore on November 1st.
I have no idea of how long it will take me to set up the house and the kitchen.
Posting will be suspended from 24th October for about 10 or more days.
I may be absent from the forum during that period but my posts are always available in my blogs for those who care to read more !
 
Selling technique discovered.
I wanted to buy something for < 5$
But the offer said 10$ off of every 25 $ spent.
So some more items were added to round up the cost to 25$
Then it said shipping is free for order over 30$
But the first offer had reduced the value of the cost to 15$ now.
So other things worth 15 $ were added to the list to get free shipping.
So one who wishes to spend <5$ is made to spend 40$ without even realizing it.
Also we can infer that on an average very object is marked 40% or more than its real value. How else can we get 10$ off of every 25$ spent???
 
Other shops give cash back but it is valid only in that particular store. To get more cash back, we will keep visiting the same stores over over again getting caught in an endless shopping cycle!
 
#129. An unforgettable trip !

SILK AIR பயணம் அது.

பட்டுப்போல மென்மையாக
இருந்திருக்க வேண்டும் ஆனால்
AN UNFORGETTABLE TRIP ஆனது!

KNEE PROBLEM என்று எக்ஸ்ட்ரா
LEG SPACE உள்ள முன்சீட் கேட்டேன்.

கிடைக்கவில்லை; இரண்டாவது row.

முன் சீட்டில் bull og expression னுடன்
மூன்று chinese hunks / hulks.

காலை முன்னால் நீட்டிக் கொண்டனர்.
சீட்டை push back செய்துவிட்டு
தூக்கமோ தூக்கம், அப்படி ஒரு தூக்கம்! :sleep:

அவர்கள் சீட் மூக்கில் இடிக்கின்றது என்று
நம் சீட்டை push back செய்தால்
பின்னாலிருக்கும் Chinese ஒரே ரவுஸ்!:rant:

Air ஹோஸ்டஸ் இடம் சொன்னேன். No use !
(She was visibly scared of them! Were they Mafia?)

அவர்களை எழுப்பிச் சொன்னால் முறைத்துவிட்டு
Rip Van Winkle போல மீண்டும் ஆழ்ந்த உறக்கம்.

உரலுக்கு ஒருபக்கம் இடி,
மத்தளத்துக்கு இரண்டு பக்கம்!

அன்று இரண்டு முரட்டு Chinese groups
எங்களை human மத்தளம் ஆக்கிவிட்டனர்! :drum:

கீழே இறங்கினால் போதும் என்றாகிவிட்டது
அதுவும் ~ 20 மணி நேரத் தொடர்பயணம்.

அதற்குப்பின் Silkair என்றாலே நான்
அஞ்சி
அஞ்சு காத தூரம் ஓடி விடுவேன்! :bolt:
 
# 130. "நீங்கள் காட்டுக்குப் போங்கள்!"

அது கோவை குண்டு வெடிப்பு சமயம்!

அபார்ட்மென்ட்டுகளைக் குறி வைப்பதாக
ஊரெல்லாம் ஒரு வதந்தி பரவியது. :gossip:

தினமும் இரவு முழுவதும் நான்கு பேர்கள்
சுழற்சி முறையில் "பாரா உஷார்!" செய்தனர்.
பட்டாசுச் சத்தம் கேட்டாலும் அஞ்சுவோம்.:fear:

எதிர் ஃபிளாட்டில் bachelors கூட்டம்.
எத்தனை பேர்கள் இருந்தார்களோ?(6?/7?/8?)

வேலைக்காரிகள் வேலை செய்ய பயந்தனர்.
வெளியில் அடிக்கும் லிக்கர் நெடிகள்,
ரயில் என்ஜின் போல புகை மண்டலம்.

வயதுக்கு வந்த பெண்கள் உள்ள இடத்தில்
இது போன்றவர்களைக் குடியமர்த்த
தடை விதிக்க வேண்டும் என்று தோன்றும். :nono:

ஒரு நாள் இரவு சரமாரியான குண்டுவெடிப்பு!

அத்தனை பெரும் அலறிப் புடைத்துக் கொண்டு
எழுந்து விட்டார்கள்," என்னவோ எதோ?" என்று !

"HOME THEATRE இல் HOLLYWOOD WAR MOVIE"

இந்தச் சூழ்நிலையில் நள்ளிரவில் தேவையா?"
இதைக் கேட்டதற்கு அவர்கள் சொல்கின்றார்கள்,

"சத்தம் கூடாது, எந்தத் தொல்லயும் கூடாது என்றால்
நீங்கள் காட்டுக்குப் போங்கள்!"என்று என்னிடம்!

"என்னால் யாருக்கும் எந்தத் தொல்லயும்
இன்று வரையில் இருந்தது இல்லை!

காட்டுமிராண்டிகள் போல நடு இரவில்
காட்டுக் கூச்சல் போட்டு அச்சுறுத்தும்
நீங்கள் காட்டுக்குப் போங்கள்!" என்றேன்.

காட்டுக்குப் போகாவிட்டாலும் அவர்கள்
அந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போக,
பெற்றோர் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு! :happy:​
 
# 131. தனிக் கொடி வேண்டும்!

Territorial Marking மிருகங்களுக்கு
மட்டும் தேவை என எண்ணாதீர்கள்.

மனிதர்களுக்கும் அது அவசியம் தான்!
கொடிப் பிரச்சனை பெரும் பிரச்னை!

ஒவ்வொருவருக்கும் தனிக்கொடி தேவை.

ஆத்திர அவசரத்துக்குக் கூட அதில்
அடுத்த வீட்டுக்காரர் துணி போடக்கூடாது!

அதையும் மீறிப் போட்டால் கலகம் வெடிக்கும்;
வாய்ச் சண்டையில் வேர்ல்ட் வார் III நடக்கும்.:argue:

இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை!:fencing:
பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் ஒரு
ஆசிரியையால் அப்படிச் செய்யமுடியும் என்று!

உஜாலா விளம்பரம் போல பத்துப் பதினைந்து
பளீரிடும் வெள்ளை ஆடைகள் ஒரு கொடியில்!

வந்தார்
கொடியின் சொந்தக்காரரான ஒரு டீச்சர்.​

அத்தனையையும் கீழே செம்மண்ணில் தள்ளி
கார்டூனில் Donald duck குதிப்பதுபோலவே
அவற்றின் மேல் Bangara டான்ஸ் ஆடினார்.

பிறகு ஒன்றும் நடக்காதது போலச் சென்றார்.
கேடு வரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே. :crazy:

அவர் விரைவிலேயே வீட்டைக் காலி செய்து
காலனியை விட்டுப் போக நேர்ந்தது. :bolt:
 
# 132. The moving platform.

ஏர்போர்டில் இருக்கும் moving platform.

நாம் நின்றாலே போதும் அது நகர்ந்து
நம்மைக் கொண்டு செல்லும் நீளமாக.

நான் சொல்லுவது அது அல்ல!
இந்தியன் ரயில்வே platform !

அத்தனை நேரம் பயணம் செய்பவர்கள்
ரயில் / விமானம் நிற்கும் முன்பே பெரிய
queue வில் நிற்பார்கள் ...இறங்குவதற்கு!

எதற்கு என்று எனக்குப் புரிவதே இல்லை!

அன்று இவர் இறங்கிச் சென்று விட்டார்.
ஓடும் ரயிலிலிருந்து இவர் இறங்கியது
எனக்கு அப்போது தெரியவில்லை.

மெல்லக் காலைக் கீழே வைக்க நினைத்தால்
அங்கே கண்டேன் அந்த moving platform!:fear:

மீண்டும் வண்டிக்குள் போகமுடியாதபடி
அடுத்த ஆள் குறுக்கே நிற்கின்றான்.

தரைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. :dizzy:
என்னுடைய terror stricken face ஐப் பார்த்த :scared:
ஒரு இளைஞன் எங்கிருந்தோ ஓடிவந்தான்.

ஒரு கையால் என் வலக் கையைத் தாங்கி
பிடித்துக் கொண்டு ரயிலுடனேயே ஓடி வந்தான்.
என்னைக் கைத் தாங்கலாக இறக்கிவிட்டான்.

என் பெரிய மகனே எனக்கு உதவுவதற்கு
ஓடி வந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
பலமுறை நன்றி சொல்லி வாழ்த்தினேன்!

நல்லவர்கள் உலகில் எப்போதும் இருப்பார்கள். :angel:

நாம் அவர்களைக் காண்பதற்கு நிறைய​
பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா.​
 
திரைப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகும் 'தகுதி படைத்தவரை'

திருமண செய்து கொண்டால் தயாராக இருக்க வேண்டும்

1. ஓடும் ரயிலில் / பஸ்ஸில் ஏறுவதற்கு


2. ஓடும் ரயிலில் / பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு


3. லெவல் கிராஸ்ஸிங்கை கற்களின் மேல் ஏறிக் கடந்து செல்வதற்கு


4. லக்கேஜ்ஜுடன் பஸ்ஸின் கம்பியை அணைத்துக் கொண்டு


20 கி.மீ தூரம் தொங்கு / துள்ளு பயணம்
பயணிப்பதற்கு

5. ஆட்டோ லோட் சாமான்களை பஸ்ஸிலும்,


கார் லோட் சாமான்களை ஆட்டோவிலும்,


லாரி லோட் சாமான்களை காரிலும் வைத்துக் கொண்டு

பயணிப்பதற்கு வேண்டிய திறமையை வளர்த்துக் கொள்வது. :faint:
 

# 133. தொந்தரவு செய்யாமல் என்ஜாய் பண்ணுங்க!​

இரவு பத்தரைக்குப் புறப்பட்டது அந்த ரயில்.
படுத்தால் போதும் என்று கெஞ்சியது உடம்பு.

அன்று ஏதோ கல்லூரிக் கூட்டம் ரயில் நிறைய.
இரவு பதினோரு மணிக்குப் பாட்டுக் கச்சேரி! :sing:
Controversial ஃ பிலிம் songs போட்டி போல.

T. T. R இடம் சொன்னால் அவர் அவர்கள் சைடு.

"இப்பொ என்ஜாய் பண்ணாம இவங்க எல்லாம்
எப்போ என்ஜாய் பண்ணுவாங்க சொல்லுங்க?"

"என்ஜாய் பண்ண ஒரு நேரம் காலம் இல்லையா?"
"இல்லை"என்றார்." நான் சொல்ல மாட்டேன்!"
என்றார்

மீண்டும் மீண்டும் நான் கேட்டபோது ஒரு சலுகை;
"வேண்டுமானால் வேறு இடத்தில் பெர்த்!"

"சரி" என்றேன். இவர் என்னை முறைத்தார்.
நான் சென்று அந்த பெர்த்தில் தூங்கினேன்.

அதற்குப் பிறகு தான் எப்போதும் கையேடு
இரண்டு EAR PLUGS எடுத்துச் செல்லலானேன். :ear:

என்ஜாய் செய்வதில் தவறு இல்லை உண்மை.
அதற்கு என்று இடம், காலம், நேரம் உள்ளன.

அடுத்தவனைத் துன்புறுத்தி என்ஜாய் செய்வதா?

கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, கேட்டவுடன் :boxing:
"நான் அவனை ஒன்றும் அடிக்கவே இல்லை!

நான் கையை வீசிய இடத்தில் அவன் தான்
தன் முகத்தைக் கொண்டு வந்தான்" என்பதா?

புத்தி சொல்ல வேண்டியவரே அவர்கள் கட்சி!
மாணவர்களைக் கண்டு அச்சமா அவருக்கு? :noidea:


 
# 134. "சென்னை வந்தாச்சு!"

கல்லூரி வாலுகள்... ஆனால் ஆண்கள்!

சென்னை வர எவ்வளவோ நேரம் இருந்தது.
வாட்சைக் கூடப் பார்க்காமல் கூவல்,
"சென்னை வந்தாச்சு! சென்னை வந்தாச்சு!"

"எப்படிக் கண்டு பிடித்தாய்?" என்றால்

"காற்றினிலே வரும் நாத்தம்" :sing:
என்று முழுப் பாட்டும் அவர்கள்
இட்டுக் கட்டிப் பாடுகின்றார்கள்! :grouphug:

Extempore அல்லது already தயாரானதா?:noidea:

சென்னையை நெருங்கும் போதெல்லாம்
வால் பசங்கள் பாடிய பாடல் நினைவு வரும்.
:becky:
 
Pets are FOR people with a lot of money, time, space and energy.

Pets are not for people who are already overworked and tired!

Add the factor of allergy to the pet's pet habits and fur!!!
It must be a strict :nono: but people have to make their own decisions!:decision:
 
Last edited:
# 135. "டேய் ஆகாஷ்!"

இரண்டு தலைமுறைகள் நமக்குக் கீழே!
இன்றைய பெண்களுக்கு இல்லை அன்றைய நாணம்!
தலை முடி எலி கடித்துக் குதறியது போல; :mullet:
Blouse ஒரு நூலில் தாங்கி நின்றது! :shocked:

இந்த அழகில் ஒன்பது கஜப் புடவையாம்!
முதுகில் ஒரு aircraft land செய்யலாம்.

இதெல்லாம் வெளித் தோற்றம் தான்.
கணவனைக் கூப்பிடுவது "டேய் ஆகாஷ்!"
அடித்துக் கட்டிக் கொண்டு ஓடி வருவான்.

கணவன் பெயர் சொல்லாத காலம் என்று ஒன்று இருந்தது.
பிறகு "நான் Mrs. XYZ" என்று பெயர் சொல்லலானார்கள்.

பிறகு பெயர் சொல்லும் பழக்கம் வந்தது.
இன்று எல்லோர் முன்னிலையிலும் "டேய்..." என்று!

ஒரு தடவை கூப்பிட்டாள், "ஆகாஷ்! ஆகாஷ் !"என்று.
ஆனால் அவன் அவளிடம் உடனே ஓடி வரவில்லை.

"தடியன் கூப்பிட்டால் வரானா பார்!" என்றாள்.

"நீ எப்போதும் போல 'டேய் ஆகாஷ்!' என்று கூப்பிட்டால்
உடனே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பான். :roll:

நீ வெறுமனே "ஆகாஷ்! ஆகாஷ்! " என்றதால்
வேறு யாரோ கூப்பிடுகிறார்கள் என்று அவன் நீ
கூப்பிட்டவுடன் வரவில்லை போல!" என்றேன்.

என்ன ஆகிவிட்டது நம் நாட்டுப் பெண்களுக்கு??? :doh:
 
# 136. செல்வராஜ் ஐயர்.

இவர் அடிக்கடி சொல்லாமலேயே
யாரையாவது அழைத்து வருவார்
ஆபீஸ்காரர்களை தன்னுடன் லஞ்சுக்கு. :hungry:

அன்று வந்தவர் செல்வராஜ் என்பவர்.
வந்தவர் யார், என்ன ஜாதி, என்று நான்
ஒரு நாளும் அவரிடம் கேட்டதில்லை இதுவரை.

அன்று உடன் இருந்த குட்டிக் கஸின்,
"அவர் பிராமினா?" என்று கேட்டாள்.

இவர் "ஆமாம்" என்றார் அவளிடம்.

"செல்வராஜ் என்ற பெயர் இருக்காது
ஐயர்களுக்கு!" என்று அவள் வாதம். :nono:

இவரோ "செல்வராஜ் ஓர் அய்யர் தான்"
என்று ஒரே அடியாக சாதிக்கின்றார்!

குட்டி மகன் தன் புத்தகங்களைக் கொண்டு காட்ட :baby:
அதில் ஒரு பேபி யானை அழுது கொண்டிருந்தது.

"ஏன் கண்ணு யானை அளுவுது?" என்றார் செல்வராஜ்.

என் கஸின் தங்கையின் கொஞ்ச நஞ்ச ஐயமும்
மறைந்து போக அவள் விலா வலிக்கச் சிரித்தாள்.:becky:

இன்றைக்கும் அவ்வப்போது "செல்வராஜ் அய்யர்"
என்று சொல்லிச் சொல்லிச் சிரிப்பது உண்டு. :rofl:
 
The moment one proudly declares that one doesn't remember / worry about one's health problems, something will flare up to remind that person that he / she is NOT in perfect health - as he / she had imagined. :(
 
# 137. A heavenly drink !

அப்போதெல்லாம் தினமும் இவர்
மாலையில் பாதம் மில்க் குடிப்பார்.
அன்று வந்த நண்பருக்கும் கொடுத்தேன். :tea:
அவர் டீ யைத் தவிர எதுவும் குடித்ததில்லை

"What is this heavenly drink ?" என்றார்.:shocked:

பெயரைச் சொன்னவுடன் அடுத்த கேள்வி
"Do you mean to say this fellow gets to
drink this every day? He is a Lucky fellow!"

அதற்கு முன்பு லஞ்சுக்கு அழைத்திருந்த போது
சாம்பாரைக் கேட்டுக் கப்பில் விட்டுக் குடித்தது
என் நினைவுக்கு வந்து சிரித்தேன் நான்! :becky:

சாம்பாரையே அப்படி விரும்பிக் குடித்தவர்​
பாதாம் மில்க் விரும்பிக் குடிப்பதில்
என்ன வியப்பு இருக்க முடியும் ??? :rolleyes:
 
# 138. Lucky or unlucky?

அவர்கள் குழந்தைகள் அசட்டுச் சிவப்பு!
அவர்களுக்கு பெருமையோ பெருமை.

பிறந்ததிலிருந்த மண்டையில் ஏற்றினர்,
"உன்னைப்போல சிவப்பு யாருமில்லை!"

கூப்பிட்டால் நம்மிடம் வரமாட்டார்கள்.
அவர்கள் யாருடனும் பேசக் கூடாது. :nono:

வெளியில் சென்று விளையாடக் கூடாது.
அப்பா, அம்மாவோடு தான் போக வேண்டும்.

அவர்கள் மட்டும் வெளியே போகும்போது
இவர்களை வீட்டில் வைத்து வெளியே
பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போவர்.:help:

இதன் பலன்...எப்படிப் பழகவேண்டும் என்றே
அந்தக் குழந்தைகளுக்குத் தெரியவில்லை.:peep:

தங்கம் எப்போது கைதியாகச் சிறை இருப்பதுபோல்
இந்தக் குழந்தைகளும் சிறையிலேயே இருந்தனர்.

திருமணம் ஆன பின் என்ன நடக்கின்றது???:noidea:
கணவர்களும் பூட்டிக் கொண்டு
வெளியே செல்கிறார்களா!!! :noidea:
 
# 139. நானும், சினிமாவும்.

தூங்குவதற்கும், திரைப்படம் பார்ப்பதற்கும், :sleep:
நிறைய யோகம் வேண்டும், ஐயமில்லை.

"முதல் நாள் முதல் ஷோ" பார்ப்பதையே
வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டவர்கள்
நடுவில் நாம் வாழ்ந்தாலும், அப்படிப்பட்ட
Lofty ideals இதுவரை எனக்குக் கிடையாது.

கல்லூரி ஆசிரியராக இருக்கும் போது
சக ஆசிரியர்களுடன் சென்றேன் ஒருநாள்.

அன்று அம்மா, அப்பா என்னைத் தேடித்
தியேட்டருக்கே வந்து விட்டார்கள்.

எதோ தவறு செய்து விட்டது போல ஒரு
குற்ற உணர்ச்சி தோன்றியது எனக்கு.

அது போல அதற்குப் பிறகு நான் ஆசிரிய
நண்பிகளுடன் படத்துக்குச் செல்வதில்லை.

மணமான பிறகு இவருடன் கோவையில்
படம் பார்க்கச் சென்றால், அங்கேயும் "ஜம்"மென்று

தாய் மாமா தியேட்டருக்குள் வந்து
பாதி படத்தில் வெளியே அழைத்துச் சென்றார்.

குழந்தை பிறந்த பின் திரைப்படம் சென்றால்
அவன் aisle வழி நடந்து சென்று நொடியில்
வெள்ளித் திரையையே அடைந்து விட்டான்!

வெள்ளித் திரையின் முன் அவன் கிருஷ்ணர்
கொண்டை
யைக் கண்டு அதிர்ந்து போனேன்.

பூனைக் குட்டி போல இருட்டில் முன்னேறியுள்ளான்.
தட்டுத்தடுமாறி அவனைக் கைப் பற்ற வேண்டியிருந்தது!

கொஞ்சம் வளர்ந்தபின் "அம்மா! ஆய்!"
என்பான்

டாய்லெட்டுக்கு அவசரமாக அழைத்துச் சென்றால்
"அம்மா! நான் சும்மாச் சொன்னேன்!"
என்று கண்ணன் போலக் குறும்பாய் சிரிப்பான்,

திட்டவும் மனம் வராது. :baby:

திரும்பிச் செல்வதற்குள் பல சீன்கள் கோவிந்தா!
மறுபடியும் அவன் உள்ளே வரமாட்டான்.

அவனுக்கு அங்கே வெளியே நிற்கவேண்டும்.
எனக்கு உள்ளே படம் பார்க்கவேண்டும்.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பேன்,

நான் தியேட்டரின் உள்ளே....
அவன் தியேட்டரின் வெளியே....

"அப்படியாவது படம் பார்க்க வேண்டுமா?" :nono:
அதுவும் நின்று போனது மெல்ல மெல்ல.

பல வருடங்களுக்குப் பின் பலமுறை
open air காலரி சீட்டில் அமர்ந்து,

ஓசித் தெலுங்குப் படம் பார்க்க மட்டும்
நல்ல யோகம் இருந்தது! :thumb:
 
# 140. "உங்களுக்கு அவளைப் பிடிக்காது!"

நல்ல நீளமான தலை முடி இருந்தது.
அழகான முக லக்ஷணம் இருந்தது.

ஆனால் தவற்றை ஒப்புக் கொள்ளும்
மாணவ மனப்பாங்கு இல்லவே இல்லை.

தவற்றைச் சுட்டிக் காட்டினால்...... !

அவள் அம்மாவுக்கும் கோபம் வரும்!
அந்தப் பெண்ணுக்கும் கோபம் வரும்!

"அத்தனை பேர்கள் பார்க்கின்றார்கள்.
யாருமே ஒரு தவறு கூடச் சொல்வதில்லை.

நீங்கள் மட்டும் எப்போதும் தவறு சொல்கிறீர்கள்.
உங்களுக்கு அவளைக் கண்டால் பிடிக்காது."
மற்றவர்கள் வெறுமனே பார்ப்பதற்கும் :violin:
ஆசிரியையாக நான் பார்ப்பதற்கும் :nerd:
நிறைய வேறுபாடு உள்ளது என்று
அவர்களுக்குப் புரியவேயில்லை.

தவறுகளைக் கண்டு பிடித்து அவற்றை
திருத்துவது என் வேலை அல்லவா!
அதற்குத் தானே சம்பளம் தருகின்றார்கள்?

கோபத்தில் வகுப்பையே புறக்கணித்தார்கள். :bolt:
நஷ்டம் யாருக்கு? எனக்கா? அவர்களுக்கா?

நான் நல்ல மாணவியை இழக்கவில்லை.
அவர்கள் நல்ல ஆசிரியையை இழந்தார்கள்.:pout:​
 

Latest ads

Back
Top