• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 111. இரும்பு மனிதன்?

அவர் ஒரு sugar factory? :noidea:
இருக்கலாம் என்று தோன்றும்!

அத்தனை பேருக்கும் சர்க்கரை
வியாதி அவர் குடும்பத்தில்!

மனைவிக்கு ஒவ்வொரு விரலாகக்
காலில் எடுக்க வேண்டி இருந்தது! :scared:

இவருக்கு ஒரு காலில் ஒரு பாதி!
அடுத்த காலில் முக்கால் பகுதி!

ஆளே ஐந்தடி தான் இருந்தார்.
இப்போது .... ஊஹூம் தெரியாது

சக்கர நாற்காலியிலே அவர் வாசம்!
அத்தனையும் அதிலிருந்தே ....

அத்தனையும் தனியாகவே.....
இன்னமும் புகையை விடவில்லை! :smokin:

எதற்கும் அஞ்சாத இவரை ஒரு
இரும்பு மனிதன் என்று கூறலாமா? :ballchain:​
 
# 112. ஆவக்காயின் கதை.

"ஆந்த்ரா special ஆவக்காய் ஆயிற்றே!" என்று
ஒரு முறை கொண்டு வந்து கொடுத்தேன்!
வகையாக மாட்டிக் கொண்டேன்!! :whoo:

ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு பாட்டில் எதிர்பார்த்தனர்.

"பெரிய பாட்டில் கிடைக்குமா?" என்றனர்.

"இவள் இரண்டு குட்டிக் குழந்தைகளையும்,
அனவைரின் luggage + food +water
எப்படி manage செய்கின்றாள்?"
என்று யாரும் யோசிப்பதேயில்லை.

குழந்தைகளை நடக்க வைத்து,
லக்கேஜைக் கூலியிடம் கொடுத்து,
மாங்காய் பாட்டில்களை மட்டும்
நானே சுமக்க வேண்டும் தவறாமல்!

உடையாமல் வந்து சேரவேண்டுமே!

12 அரைக் கிலோ பாட்டில்கள் என்றால்
12 கிலோ ஊறுகாய் இருக்கும் அல்லவா?

என் முட்டி தேய்ந்ததில் என்ன அதிசயம்!

ஒரு முறை ஊறுகாயை வாங்கிக்கொண்டு
வீட்டில் இருந்த மூன்று பேர்களும் இளிப்பு! :becky:

தாங்க முடியாமல் போகவே நானும்
அதன் காரணத்தைக் கேட்டேன்!

ஒரு கதையில் படித்தார்களாம்!

மடியாகப் போட்டால் மட்டும் தான்
ஆவக்காய் கெடாமல் இருக்குமாம்.

அவர்கள் பாஷை எனக்குத் தெரியும்.

"மடிக் குழந்தை" என்றால் அது :baby:
எந்த ஆடையும் அணியாத குழந்தை!

Acid பாட்டிலை என் மீது
வீசியது போல இருந்தது!

மொண்ணைக் கத்தியை வைத்து
முத்தின மாங்காயை வெட்டியதும்,

பக்கெட் நிறைய ஊறுகாயைக்
கைகள் வலிக்க கிளறியதும்,

பன்னிரண்டு பாட்டில்கள்
விலைக்கு வாங்கியதும்,

மாட்டிய தோள் பட்டை வலிக்கக்
நடந்த கால் கடுக்க அவற்றைச்

சுமந்து வந்ததும்...
சீ! சீ! இதற்காகவா? :doh:

அன்றிலிருந்து நான் ஆவக்காய்
போடுவதையே நிறுத்தி விட்டேன்.

என்னிடம் கேட்டவர்களிடம் சொன்னேன்,
'கடையில் கிடைக்கிறது! வாங்கிக் கொள்ளுங்கள்!"​
 
ஆவக்காய் ஊறுகாயின் கதையே இப்படி என்றால்
tomato ketchup , பலாப் பழ ஜாம் கதை எப்படி இருக்கும் ???
 
Ever since we visited the Planetarium last weekend, and watched
the movie "We are all made of Stardust" my grandkids have become obsessed with astronomy, stars and constellation.

Tejas wanted to present an article on Constellations! Here it
is!

Constellations
by Tejas Raman

2e2bf4df-c737-4a2d-97ea-9ae0ce32b828

A Constellation is a group of stars which may be imagined to represent an animal or a mythological creature or even a god. The earliest known constellations belonged to the prehistoric times.

Then each religion had its own set of constellations. These different constellations were based on their different beliefs, creations, and myths.

In the early 20th Century, some constellations became international. These are the constellations as we know them today.

Some constellations have changed over time; some have changed in shape; some have gotten smaller or larger; some have become more popular and some others have become obscure.

The 48 Western constellations are of Greek origin. Constellations in the Southern sky were added from the 15th century till the 18th century, but removed in the 18th century.

In 1928, the International Astronomical Union (IAU) formally accepted 88 modern constellations. There are other patterns of stars called asterims.

These are used by the observers to navigate the night sky. Asterisms often refer to several stars within a constellation. Asterisms may even share their stars with several constellation.

 
Last edited:
தக்காளி கெட்ச் அப்! :hungry:

தக்காளி ரொம்பச் சீப் ஆனால் என்ன ஆகும்?
நம் தோள் பட்டைகள் நன்றாக வீங்கி வலிக்கும்!

தக்காளி விலை குறைந்தவுடன் வந்தது 5 கிலோ!
"கெட்ச் அப் செய்து வைத்து விடு ஃ பிரிட்ஜில்!!"

Jams, jellies, juice making கற்றுக் கொண்டது ஒருவேளை தப்போ?
உயர மேடையருகே ஸ்டூல் மீது நின்று கொண்டு கிளறினேன்!

'ப்ளக் ப்ளக்' என்று கொதித்தது! மேலே எல்லாம் தெறித்தது!
ஒரு வழியாகக் குறுகிக் குறுகிக் கெட்ச் அப் தயார் ஆனது!

பன்னிரண்டு பாட்டில்கள் ! ஒரு வருடம் கவலை இல்லை!
எண்ணி முடிக்க வில்லை என் தொல்லைகள் தொடங்கின!

வந்தவர்கள் போனவர்கள் கையில் எல்லாம் ஒரு பாட்டில்!
வாயில் முப்பத்தி ரெண்டு பற்களும் வெளிவந்து ஒளி வீசின.

பத்து பாட்டில்கள் கண் முன்னால் ஃ பணால் ஆகிவிட்டன!
மீதி இரண்டாவது மீறுமா? அவையாவது தேறுமா??

வராமல் வந்த விருந்தினார்கள் அவற்றைக் கைப்பற்றினர்!
மூக்கு வியர்த்ததோ? நெட்ஒர்க் ஒர்க் செய்ததோ? அறியேன்!

அரைத்தவளுக்கு ஆட்டுக் கல்! சுட்டவளுக்குத் தோசைக் கல்! :(
கிளறியவளுக்குத் தோள்வலி! சுமந்தவளுக்குக் கால் வலி! :pout:

 
மலை விழுங்கி மஹாதேவன்?

யாரோ மஹானுபவன் முழு பலாப் பழம் தந்தார்.
என்னைப் பழி வாங்கவே தந்தரோ என ஐயம்!

"பூ! இதென்ன பிரமாதம்? நான் சக்கை ஜாம் செய்கிறேன்
பழத்தை மட்டும் உரித்துத் தந்து விடுங்கள் நீங்கள் இருவரும்!"

இது வீட்டில் உள்ள மறுக்க முடியாத ஒரு மூதாட்டியின் ஆணை.
பழத்தை அறுத்து, சடையைப் பிரித்துச் சுளைகளை எடுத்தோம்.

"சுளைகளை குக்கரில் வேக வைத்துவிடு!" அங்ஙனமே வைத்தேன்.
"ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொடு!" அங்ஙனமே கொடுத்தேன்.

"அடுப்பில் வெல்லப் பாகு வைத்துவிடு " அங்ஙனமே வைத்தேன்
"பாகை அரித்து நன்றாகக் குறுக்கி விடு" அங்ஙனமே செய்தேன்

"அரித்த விழுதைப் பாகில் போட்டுக் கை விடாமல் கிளறு "
அழும்பு செய்த மாணவன் போல பெஞ்ச் மேல் நின்று கொண்டு கிளறினேன்.

சில பல விழுப்புண்களுக்குப் பின்பு அக் மார்க் சக்கை ஜாம் தயார்!
ஆனால் மார்க் எனக்கு கிடைக்க இல்லை! விழுப்புண்கள் தாம் கிடைத்தன.

வந்தவர் போன்றவர்களிடம் எல்லாம் கீறல் விழுந்த ரெகார்ட் போலவே
"நானே என் கையாலே கிளறினேன். கொஞ்சம் ஜாம் எடுத்துண்டு போ!"

என்ன தாராள மனது! பாரி வள்ளல் பிச்சை வாங்க வேண்டும்!
பழம் ஓசி !! உழைப்பும் ஓசி !! அப்பப்பா! உடல் புல்லரிக்கின்றது!!

எத்தனை முறை ஏமாறுவேன்? எத்தனை பேரிடம் ஏமாறுவேன்? :frusty:
எத்தனை விஷயங்களில் ஏமாறுவேன்? நான் மட்டும் தான் இப்படியா??? :doh:
 

எங்கள் முதல் முதல் குருநாதர்.

தனிக் குடித்தனம் செய்பவர்களுக்குத்
தெரிந்து இருக்கவே வாய்ப்பில்லை!

தாத்தா, பாட்டி, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி,
அத்தை, அத்திம்பேர்களின் அருமை பெருமை!

பிறந்தது முதல் பொத்திப் பொத்திக் காத்து,
சிறப்பாக அவர்கள் நம்மை வளர்ப்பதை!

முதல் குருநாதர் என்றாலே நினைவில்
முதலில் வருபவர் தந்தையின் தந்தையே!

எண்ணும், எழுத்தும், இரு கண்கள் என்றால்;
எங்கள் கண்களைத் தந்தவர் எங்கள் தாத்தாவே!

சிறு வயதிலேயே எங்களைப் பிடித்து அமர்த்தி,
சிறப்பான கர்நாடக சங்கீதத்தைக் கற்பித்தார்.

பிணங்கி விலகி விலகி ஓடிவிடும் ஸ்ருதியை,
பிடித்து மீண்டும் இணைத்துக் கொடுப்பார் அவர்!

நடனம் ஆடுவது மட்டும் பிடிக்கவே பிடிக்காது.
நடனம் ஆடினால் "குறத்தி! குறத்தி!" என்பார்!

வந்ததும், போனதும் தெரியாதவாறு நடன வகுப்புக்கு
ஓடி விடுவேன் தினமும் வாசல் / கொல்லை வழியாக.

கைத்தடியுடன் தாத்தா திண்ணையில் காத்திருப்பார்;
கையும் மெய்யுமாக என்னைப் பிடித்து விடுவதற்கு!

கலைக் களஞ்சியம் எனக் கேட்டு இருப்பீர்கள்;
கதைக் களஞ்சியம் என்பது எங்கள் தாத்தாவே!

எத்தனை கதைகள்! எத்தனை நீதிக் கதைகள்!
எத்தனை வர்ணனை! எத்தனை சாகசங்கள்!

மனக் கணக்குப் பயிற்சி என்ற பெயரில் என்று
பகல் கொள்ளை அடிக்கின்றார்களே இன்று சிலர்!

இமைப் பொழுதில் அவற்றைச் செய்திட எளிய
இனிய வழிகளைக் கண்டிருந்தார் அன்றே அவர்!

ஆங்கில இலக்கணம் என்றாலே பலருக்கும்
ஆமணக்கு எண்ணெய் போலவே இருக்கும்!

அதையே இனிக்கும் அல்வாவாக மாற்றி ஊட்டும்
அதிசயத் திறமை கொண்டவர் எங்கள் தாத்தா!

தீபாவளி வந்தாலே கொண்டாட்டம் தான்!
தீபாவளிப் பட்டாசுகள், மத்தாப்புகள் என;

முப்பது நாட்களுக்கு முன்பே வாங்கி வருவோம்.
முப்பது நாட்களும் வெய்யிலில் காய வைப்போம்.

ஒவ்வொருவருக்கும் மத்தாப்புக் குச்சியை,
ஒரு தட்டுக் குச்சியில் பொருத்தித் தருவார்!

"பெண் குழந்தைகள் நீங்கள்! பத்திரம்! பத்திரம்!"
கண்களைப் போலவே எங்களைக் காப்பார் அவர்!

'மித ஆஹார விஹாரம்' என்று பகவத்கீதையில்
இதமாகச் சொல்லுவதை நன்கு கடைப்பிடித்தார்.

ஒரு கப் கோதுமை ரவைக் கஞ்சி கொஞ்சம் பாலுடன்;
ஒரு சாஸர் காய்கறிகள் இவையே ஒரு வேளை உணவு!

பகல் பொழுதில் அவர் படுத்து உறங்குவதை நாங்கள்
பார்த்ததே கிடையாது ஒருநாளும் ! நடை, ஜபம், எழுத்து!

"ஹரிதாஸ" என்று முத்திரையில் படைத்தார் இவர் பல இனிய
வர்ணங்கள், கிருதிகள், தில்லானாக்களைப் பன் மொழிகளில்.

குடத்தில் இட்ட விளக்காகவே இருக்கின்றன அவற்றுள் பல.
கற்பதற்குத் தேவை புத்தகம் அல்லவாம் ! C. D வேண்டுமாம்!!

பாபநாசம் சிவன் அவர்களின் சம காலத்தவர் என் தாத்தா.
பாடல்கள் பரவத் தேவை தலையெழுத்து - இது உண்மையே!

எத்தனை கோடி ராம நாம ஜபம் செய்திருப்பாரோ வாழ்நாளில்?
அத்தனைக்கும் முக்தி நிச்சயம் கிடைத்திருக்கும் அவருக்கு!

எத்தனையோ பூர்வ ஜன்மங்களின் புண்ணியம் இருந்தாலே
இத்தகைய ஒருவரின் வம்சத்தில் வந்து ஒருவர் பிறக்க இயலும்!

தாத்தா சித்தி அடைந்து ஐம்பது ஆண்டுகள் முடிவுறும் விரைவில்.
அவரது பாடல்களை எல்லாம் வலைத் தளத்தில் இடுகின்றோம்.

மீண்டும் ஒருமுறை தொடரும் ஹரிதாஸரின் சங்கீதப் படைப்புகள்
மாண்பு மிக்க வலைத் தளத்திலும், சங்கீத, நாட்டிய
இழையிலும்.

https://haridasanarayanan.wordpress.com/​
 
# 113. பாலக்காட்டுத் தாத்தா!

தாத்தா அக்மார்க் பாலக்காட்டு அய்யர்.
மகளிடம் சென்றார் அமெரிக்காவுக்கு! :plane:

ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை.

எது செய்தாலும் அதை வீடியோ எடுத்து
தன் ஊருக்கு அனுப்புவார் அவர்.

எல்லோரும் அதைப் பார்க்கவேண்டும்
என்ற நல்ல எண்ணம் மட்டுமல்ல.

எல்லோரும் பார்த்துவிட்டு
வயிறு எரிய வேண்டும் என்றும் கூட! :flame:

ஒரு முறை அவர் சலூனுக்குச் சென்றார்.
அங்கெல்லாம் பெண்கள் ஆண்களுக்கும்
முடி வெட்டுவதுண்டு.

அழகிய இளம் பெண்ணை
அவ்வளவு அருகில் பார்த்ததும்
தேன் குடித்த நரியனார் தாத்தா! :becky:

மகளிடம் வீடியோ எடுக்கச் சொல்லி
முதல் வேலையாக அதை அனுப்பினர்!

சபலிஸ்டுகள் பலவிதம்!
அதில் இவர் ஒரு விதம்!!
பாலக்காட்டுத் தாத்தாவா?:decision:
பல்லைக் காட்டும் தாத்தாவா? :rofl:​



 
# 114. "கூஜாவில் என்ன ராஜா" ???

வசதியாகத் திண்ணை.
சுகமான புதிய காற்று!

வழி மேல் எப்போதும் வைக்கப்பட்ட விழிகள்!
நுழையாது காற்றும் கூட இவர்கள் அறியாமல்!
கூஜாவில் காபி (laced ???) :spit:
கையில் சீட்டுக் கட்டு.

வாயில் குதப்பும் வெற்றிலை பாக்கு!
குதப்பாத போது வாய் நிறைய வம்பு! :gossip:
டாப்லெஸ் body + செல்லத் தொப்பைகள். :preggers:
தங்கச் சங்கிலிகள் + large pendants.
கையில் அகலமான gold bracelets .

விரல்களில் மின்னும் பத்து வித மோதிரங்கள்.
பன்னிரண்டு விரல்கள் இல்லாமல் போனதே!
UTOPIA போல இல்லை?? :rapture:

இது தான் என் first impression
of a village in Palghat !
தொழில் = ஸுக ஜீவனம் என்று :couch2:
பின்னர் அறிந்து கொண்டேன்!

ஜீவனம் தான் அவர்கள் தொழில் என்றால்
ஸுக ஜீவனமும் ஒரு தொழிலே எனலாம். :)
 
# 115. "எப்போது வரும் பண்டிகைகள்?"

ஒரு முறை தஸரா சமயத்தில் செய்தேன்
ஒரு village க்கு விசிட் பாலக்காட்டில்!

ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும்
ஒரு டஜன் பட்டு சாரிகள் (குறைந்த பட்சம்)
அழகாக அடுக்கி வைத்திருந்தனர்!

"ஒரே நாளில் இவ்வளவு வியாபாரமா?"

இல்லை அவைகள் பெட்டி போட்டு
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன!


அப்போது தான் எனக்குப் புரிந்தது!
icon3.png



பத்து நாளைக்குப் பத்து நல்ல
பட்டுப் புடவைகள் தேவை ஆயிற்றே!

வாங்கி வைத்தவற்றைக் கட்டிக் கொள்ளவும்,
கட்டிக் கொண்டவற்றைக் காட்டிக் கொள்ளவும் தானே,
இந்தியாவில் இத்தனை பண்டிகைகள் வருகின்றன!

"எப்போது பண்டிகை வரும்?" என்று
காத்துக் கொண்டு இருப்
பார்கள்.

குழந்கைகள் பக்ஷணத்துக்காக. :hungry:
ஆண்கள் விருந்துச் சாப்பா
ட்டுக்காக! :hungry:

பெண்கள் புடவைகள், நகைகளை மீண்டும்
அந்த ஆண்டு ஒரு ரவுண்டு ரிலீஸ் செய்வதற்காக!

பெண்கள் உடுத்துக் கொள்ளுவது எதற்காக ???

மற்ற பெண்கள் அவர்களைப் பார்ப்பதற்காக!

(பார்த்து
ப் பார்த்து வயிறு எரிவதற்காக!) :mmph:

ஆனால் ஆண்களுக்கு
ப்
பெண்கள் எதுவுமே
அணியாவிட்டாலும் கூட ரொம்பப் பிடிக்குமாம். :love:

(ஒரு சர்வே இப்படிக் கூறுகின்றது) :eek: !!!




 
# 116. உரித்த கோழி போல ....!

ஒரே நோட்டத்தில் ஒரு மனிதனை
ஸ்கேன் செய்து எடை போடமுடியுமா??

முடியும், நீங்கள் அந்த கிராமங்களில்
ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால்!

ஐந்து நொடிகளில் தலை முதல்
கால் வரையில் ஸ்கேன்னிங் செய்வர்.

காது, மூக்கு, கழுத்து ( இவர்கள் E.N.T டாக்டர் அல்ல)
கை, கால், இடை இவைகள் மதிப்பிடப்படும்!

"வைரத்தோடோ, மூக்குத்தியோ இல்லையா?" :(
(இது ஒரு தேறாத கேஸ் தான்!) :nono:

"கழுத்தில் ஒற்றைச் செயினா?" :(
(சரியான பரதேசி போல!) :sad:

"கையில் இரண்டு இரண்டு
கம்பி வளையல்கள் தானா?" :hand:


(அன்றாடம் காய்ச்சிதான் இவள்! போயும் போயும்
இவளிடம் பேசி நேரத்தை வீணடிப்பானேன்?) :mmph:

வந்த வேகத்தில் அடுக்களையில் மறைந்து விடுவர்! :bolt:

இரண்டு நாள் ரயிலில் தனியாக வருபவள்,
இத்தனை போட்டுக்கொள்ளுவதே ரிஸ்க்!
அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

"வந்தால் நகை stand போல வா!
இல்லாவிட்டால் எங்கள் டயத்தை
வேஸ்ட் பண்ணாதே போய்விடு !" :hand:

ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்கள்
வேறு ஊர்களுக்கு வரும் போது....பச்சைக்
உரித்த கோழி தான் நினைவுக்கு வரும்!

கையில் கண்ணாடி வளையல்கள்.
கழுத்தில் கருகு மணியும் / மஞ்சள் சரடும்.

தமிழ்ப் படத்தில் ஏழை ஹீரோயின் போல!:doh:
"இரட்டை ஸ்டாண்டர்ட்" இது தானோ?

நாம் வந்தால் நகை stand ஆக வரவேண்டும்!
அவர்கள் வந்தால் திக்கற்ற பார்வதி' போல !
 
He who goes into a rage when painted black in the eyes of his daughters and wife

must remember that the girl/ woman he molested was also the daughter or wife of

some other gentleman! :moony:
 
# 117. கடிதங்கள் குவிந்தன!

பூனாவில் உள்ள சைட்டில் ரெசிடென்ட் மேனேஜர்!
மூன்று ஷிப்டுகள் மேற்பார்வை செய்வதும் உண்டு!

சரியான உணவும், தூக்கமும் இல்லாமல் இவருக்கு
உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து விட்டது!

Head Quarters உக்கு மாற்றிக் கொள்ளச் சொன்னால்,
"கேட்க மாட்டேன்! தர மாட்டார்கள்!" என்று :nono:
தொடக்கத்திலேயே தடங்கல் சொன்னார்.

நான் நேராக C. M. D க்கு கடிதம் எழுதினேன்! :typing:
உள்ளதை உள்ளபடித் தெளிவாக, உண்மையாக!

அவருக்கு என் மேல் மிகுந்த அபிமானம்.
பொய் சொல்ல மாட்டேன் என்று தெரியும்.
Personal favor கேட்க மாட்டேன் என்றும்!

உடனேயே இவருக்கு விசாகாவுக்கு மாற்றல்.

விஷயம் வெளியே தெரிந்தவுடன் C.M.D க்கு
கடிதங்கள் வந்து குவியத் தொடங்கின! :popcorn:

Harry Potter மூவியில் ஒரு காட்சியில்
கதவின் வழியாகவும், சிம்னி வழியாகவும்
a flood of letters வருவது போல்!

எங்கள் கேஸ் genuine.
Medical File சாட்சி.

அவர்கள் அத்தனை பேரும் தங்கள்
குடும்பத்துடன் இருப்பதற்காக
transfer கேட்டவர்கள். :grouphug:

பாச்சா பலிக்கவில்லை பாவம்!

உண்மை சொல்லுவதில் ஒரு நன்மை!
யார் யாரிடம் என்ன என்ன சொன்னோம்
என்று தனித் தனியாக நாம் என்றும்
நினைவில் வைத்துக் கொள்ளவேண்டாம்!​
 
# 118. ஒரு நடிகரைப் போல ...! :drama:

ஸ்டுடென்ட் ஆக இருக்கும் போது
தனி apartment கட்டுப்படி ஆகாது!

ரூம் மேட்டுடன் ஷேர் பண்ண வேண்டும்
வாடகை முதலிய செலவினங்களை.

நல்ல ரூம் மேட் கிடைப்பதும் ஒரு gamble தான்!
நல்ல மனைவி கிடைப்பது போலவே.

(Don't start imagining weird things!) :nono:

சின்னவனின் ரூம் மேட்! இவன் பெயரே தான்!
ஆனால் ஆள் just opposite என்று சொல்லலாம்.

தொப்பலாக நனையும் வரை டென்னிஸ். :playball:
வந்து குளித்து விட்டு சூடான டின்னர்! :hungry:

பிறகு அடித்துப் போட்டது போல தூக்கம்.:sleep:

அந்த சூடான உணவுக்குப் பின்னால்
இன்னொருவ
னின் உழைப்பு இருக்கின்றது​
என்பதே தனக்குத் தெரியாதது போல!

ஒரு நாளும் grocery க்குச் சென்றதில்லை.
ஒரு நாளும் dishwasher load செய்ததில்லை.
ஒரு நாளும் காய்கறி அரிந்ததில்லை!

Lord Saheb போல ஒரு மனபிரமை.

'By turn இருவரும் செய்யுங்கள்!" என்றால்,
"விளையாடவிட்டால் எடை கூடிவிடும்!"

இது என்ன லாஜிக்?

எடை கூடவேண்டாம் என்றால்
குறைவாக உண்ணலாம்;
வீட்டு வேலைகளைச் செய்யலாம்.

"இஷ்டம் போலக் கொட்டிக் கொண்டு
அதை விளையாடியே தான் நான்
கரைப்பேன்!" என்றால் எப்படி நடக்கும்?

எப்படியோ அந்த ஒரு ஆண்டை என் மகன்
பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான்! :help:

அடுத்த ஆண்டு வம்பே வேண்டாம் என்று
ஒரு சின்ன studio எடுத்துக் கொண்டான்.

பிறகு அந்த எக்ஸ் ரூம்மேட்டுக்குத்
திருமணம் நடந்து அது முறிந்தும் போயிற்று.

எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை!

தொப்பலாக நனையும் வரை டென்னிஸ்.
வந்து குளித்துவிட்டு சூடான டின்னர்!
பிறகு அடித்துப் போட்டது போல தூக்கம்.

ரூம்மேட் செலவுக்காகப் பொறுத்துக் கொள்வான்!
அவள் எதற்காகப் பொறுத்துக் கொள்ளவேண்டும்???
 
Every day my regards for my grand father grows by leaps and bounds.

One reason is the new songs posted in his blog - which I have not learned.

The other reason is the comparison with the other thathas I know.

They imagine that eating and resting are hard work!

My grandfather used to help everyone in the houses in every possible way.

He would cut the vegetables - saving a lot of precious time for my mother.

He would teach us music/ maths/ English grammar wherever we are

ready. He would tell us many mesmerizing stories.

He would supervise us so that we do not get into any trouble.

Oh where can I find another man like him - if at all I can find one ???
 
# 119. சுதந்திரம் தேவை ?

ரோரிங் பிசினஸ் வகை அவருடையது! :popcorn:
மூன்று மகன்கள் மட்டுமே அவருக்கு!

வளர்ந்து அனுபவம் பெற்ற பின்னரும்
அவர்களிடம் பொறுப்பை விடவில்லை.

தானே எல்லாம் செய்ய வேண்டும்!
"befkoof" களை நம்பத் தயாரில்லை. :nono:

தனியாக நைட் பஸ்ஸில் பயணிப்பார்.
அத்தனை பணக்கார வியாதியும் உண்டு!

ஒரு முறை பெங்களூர் செல்லும் போது
உலகத்தையே விட்டுச் சென்று விட்டார்!

ஒருவர் மட்டும் இறங்கவில்லையே என்று
பார்த்தவன், அந்த ஒருவர் போனதை அறிந்து,

விலாசம் கண்டுபிடித்து போன் செய்த பிறகு :phone:
மூத்த மகன் சென்று காரில் உடலைக்
கொண்டு வந்தான் அவன் வீட்டுக்கு!

வயது அதிகம் ஆகும்போது
வாதம் மட்டுமன்றிப் அங்கே
பிடிவாதமும் அதிகரிப்பது ஏன்??? :noidea:
 
# 120. கண்ணாடியும் கையும்...!

ஊருக்குப் போய்விட்டு வந்த நண்பர்
முழங்கை வரையில் பேண்டேஜுடன் !!

"என்ன நடந்தது?" என்றால் சொல்கிறார்
"ஒரு சின்ன accident !" என்று.

"இவ்வளவு பெரிய கட்டு ஒரு
சின்ன ஆக்சிடென்டுக்கா?" :shocked:

பீர் பாட்டில் உடைந்து கண்ணாடி
அவர் கையில் புகுந்துவிட்டது!

எப்படி உடைந்ததென்றே
அவருக்கு தெரியவில்லை.

"பீர் உங்களுக்குள் இருந்தால் தெரியும்!
பீருக்குள் நீங்கள் இருந்தால் எப்படித் தெரியும்??" :spit:

கிளறிக் கிளறிக் கண்ணடித் துண்டுகளைத்
தேடியதில் கை முழுவதும் ரத்தக் களறி!

Safety glass ஐக் கண்டு பிடித்தது ஏன்
என்று அப்போது எனக்கு விளங்கியது.
icon3.png


Beware of the beer and the bottle! :scared:


 
# 121. Third Side berth!

லாலூவுக்கு வந்தது ஒரு brain wave!
icon3.png


சைடு பெர்துக்களையும் மூன்று
மூன்று ஆகச்
செய்துவிட்டால் .....

ஒவ்வொரு compartment டிலும்
ஒன்பது பேருக்குக் கொடுக்கலாம்!

மொத்த ரயிலில் எத்தனை பேருக்கு!
நடப்பது துக்ளக் ராஜ்ஜியம் தானே! :loco:

உடனடியாக middle பெர்த் பொருத்தினார்.

சைடில் வண்டியின் உயரம் குறையும்.
சிறு குழந்தை கூட இதை அறியும்.

இரும்பை வெல்ட் செய்தவர்களுக்குத்
தெரியவில்லையாம் இந்த உண்மை!

"கிடைத்து சைடு பெர்த் நம்பர் ஒன்பது!"

கேட்டவுடனேயே சொன்னேன்,
"Something really wrong!" என்று!

Something அல்ல everything என்று
வண்டியேறின உடனேயே தெரிந்தது.

பிரட் ஆறுவதற்கு அடுக்கி வைக்கும்
shelf போல இருந்தன பெர்
த்துகள்.

ஒவ்வொருவராக எடுத்து யாரவது
உள்ளே படுக்க வைத்துவிட்டு,
அடுத்த நாள் இறக்கிவிட வேண்டும்!

வந்திருந்தவர்களோ பைசா பார்டிகள்.
midriff bulge ஐ வைத்துச் சொல்கின்றேன்.

கால்களை வைக்க இடம் இல்லாமல்
தூங்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல்
அத்தனை பேரும் அன்று சிவ ராத்திரி!

மாரீ பிஸ்கட் + மினெரல் வாட்டர் அருந்தும்
German Professor மட்டும் நன்றாகத் தூங்கினார்:sleep:
அவர் FLAT டாக ஒரு பிரட் SLICE போல் இருந்ததால்!

பரீட்சார்த்தமாக இது போல செய்பவர்களின்
தலையைப் பரீட்சை செய்ய வேண்டும் முதலில்! :crazy:
 
# 122. "யாராணூ ஆ ஸ்திரீ?"

மும்பையில் ஒரு திருமணம் .
என் COUSIN மகன் திருமணம்.

எல்லோரும் புறப்பட்டார்கள்.

அவர்கள் ஆகாய விமானத்தில்...
நாங்கள் மட்டும் இரயிலில்...

"இரண்டு மடங்கு சார்ஜ்" என்று
நான் "வேண்டாம்!" என்றேன்!

ஒரு நாள் முழுவதும் பயணம்.
உடலே ஆடிப் போய்விட்டது.

திருமணம் முடிந்து வரும்போது
ஒரு பிரச்சனை ஆயிற்று எனக்கு!

எனக்குப் பின் புறத்தில் இருந்த
CUBICLE குழந்தைகள் hyperactive!

ஸ்விம்மிங் பூலில் dive செய்வது போல
சீட்டிலிருந்து ஒரே குதியாட்டம்.

சீட் தூக்கித் தூக்கிப் போட்டதில்
லோ back pain ஸ்டார்ட் ஆனது!

அந்த வழியாகச் செல்லும்போது
நல்ல வார்த்தையாகச் சொன்னேன்,

குழந்தைகளிடம் குதிக்க வேண்டாம் என்று! :nono:

அவர்கள் ஒவ்வொருவராக வந்து என்னைப்
பார்த்துவிட்டுப் போகத் தொடங்கினர்.

"என்ன வேண்டும்?" என்றால் பதில் இல்லை!

மிலிட்டரி haircut ஆசாமி வந்து பார்த்ததும்,
"என்ன நடக்கிறது இங்கே?" என்றார் இவர்!

விஷயத்தைச் சொன்னதும் என் மேல் கோபம்.

PUBLIC NUISANCE நடப்பதற்கு இரண்டு
காரணங்கள் உண்டு என்று அறிந்தேன்!

அதைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களின்
அசாத்திய, ஹிமாயலப் பொறுமை ஒன்று! :bored:

அதைத் தட்டிக் கேட்பவர்களை மற்றவர்கள்
தட்டிக் கேட்பது இரண்டாவது காரணம். :argue:

என்ஜாய் செய்வதில் தவறு இல்லை!
அடுத்தவனை DISTURB செய்யாதவரை! :drum:​
 
The blog of the composition of my grandfather is coming up to our satisfaction.

My younger sister and Veeni guru Smt. Raji Ram is helping me as best as she can.

The 130+ songs will start to appear from VijayaDasami day either in the same

thread as before (if it can be reopened) or a new thread

"MeeNdum HaridhAsarin kruthigaL".

We have posted 50 songs so far - with their English Transliteration.

The traffic has been an impressive 477 with 27 visitors during the past 12 days.
 

Latest ads

Back
Top