ஸ்ரீ ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடையாக, அவ்விறையையே மணாளனாக வரித்து., ”எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்
உன் தன்னொடு உற்றொமே ஆவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம்” எனக் கூறி, நம் எல்லோரையும் பேரின்ப
வீட்டுக்கு /
பறைக்குச் இட்டுச் செல்ல நம்மை ஊக்குவித்து இன்றும் ’திருப்பாவை’ பாசுரங்களால், வழிகாட்டிக்
கொண்டிருக்கிறார்
).
’’என்னப்பனல்லவா, எந்தாயுமல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா’’ – என்றிசைத்த நந்தனார் போல,
இறைவனே -- என் தாய் போலவும், என் தந்தை போலவும், என் தோழன், ””தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை,
நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை”” என்று சொன்ன என் சேவகன் போலவும், என் அரசன்
போலவும், என் சீடன் போலவும், என் சற்குரு போலவும், என் குழந்தை போலவும், என் விளையாட்டுப் பிள்ளை
போலவும், என் காதலன் போலவும், என் காதலி போலவும், என் ஆண்டாள் போலவும், என் குலதெய்வம் போலவும்
-- என பல்வேறு விதத்தில் இறைவனை அனுபவித்து, மகாகவி, இந்திய தேசீயக் கவி, சுப்பிரமணிய பாரதியார் பூரித்து
, நெகிழ்ந்து பாடி, எழுதி வைத்தாற் போல.]]]
ஒவ்வொருவருடைய எண்ணங்களும், சொற்களும், செயல்களும், மேலாக, நம்மைச்சுற்றியுள்ள புலனால்
அறியப்பெறும் பொருட்கள், நடவடிக்கைகள், பிம்பங்கள், ஒலிகள், ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு
கொண்டவைகளாதலால், இவைகள் யாவும் எதிரொலி போன்று, நம் மன உள்ளுணர்வு நிலையில், அவ்வப்போது
பிரதிபலித்து விடுகிறது. தக்க மனப்பயிற்சிகளைப் பயின்று, அதனால் நல்ல திறமும் கைவரப்பெற்று, அனுபவத்தால்
ஒருவர் ஆன்மீகத்தில், எந்த நிலையை அடைய வேண்டுமோ அந்த மன உணர்வு நிலையை கட்டாயம் அடைய
முடியுமென வேதவழிகள் திறப்பட நன்கு வழிகாட்டுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீகத்தில் தாங்களுக்கு
ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறதோ, எவரும், அந்த
மேலான இறையுடன் நெருங்கி இருக்கும் நிலையை மனதால் உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தங்கள் ஆன்மீக
அடையாளங்களையும், இறைவனுடன் நெருங்கிய உறவை அடைந்துவிட வேண்டுமென்று தான் இதன் பின்னணியில் உள்ள
வேத வழியின் சாராம்சம். இவ்வாறு, ஒருவருக்கு இந்நிலையை அடையும் நோக்கம் ஈடேறப்பெற, அல்லது முறைப்படி
அமைத்துக்கொள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். இந்த செயல்முறை
எங்கு குறைவற்று நிறைவு பெற வில்லையோ, அல்லது இவ்வழியில் மாணாக்கர் மிக்க அக்கறை கொண்டு பின்பற்
ற வில்லையோ, இதனால் எதிர்பார்க்கும் பயனை என்றும் அடையவே முடியாது. இது அசைக்க முடியாத உறுதியாக.
இருப்பினும், மேற்கூறியவாறு ஆன்மீக செயல்முறை நல்ல முறையில் நடந்துவிட்டால், மாணாக்கர்
எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நேர்மையுடன் ஈடுபட்டுவிட்டால், இதன் பயனை கட்டாயம் காணலாம்.
இந்த ஒரே காரணத்திற்காக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உலகிலுள்ள தத்துவஞானிகளும், ஆன்மீகத்தில்
விருப்பமுள்ளோர்களும் வேத ஆன்மீக ஒழுங்கு முறைகளைக் கசடறக் கற்க, இந்தியாவை நோக்கி, வந்த வண்ண
ம்
உள்ளனர். மேற்கூறிய நல்வழிகளைப் பின்பற்றினால், எவருக்கும் நடைமுறையில் பலன் கிடைக்கிறது. இது திண்ணம்.
நம்மாழ்வாரைப் பற்றிய ஓர் அருமையான ஆங்கில அறிமுகம் ஏ.கே.ராமானுஜனின் என்ற புத்தகத்தில் கிடைக்கிறது. பெங்குவின் இதை வெளியிட்டுள்ளனர்
.
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழியெழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழியெழ உலகம் கொண்டவாறே
ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழியின் முதல் முக்கியமான பாடல் இது. பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்
தை விவரிக்கும் இந்தப் பாடல் முக்கியமான சிருஷ்டித் தத்துவங்கள் கொண்டது.
முதலில் சக்கரம் எழுந்தது
.
பின் சங்கம், வில், கதை, வாளும் எழுந்தன
.
எட்டுத் திசைகளிலிருந்தும் வாழ்த்துகள் எழுந்தன
.
பிரபஞ்சம் எனும் முட்டை (மோழை) உடைந்தது
.
அதிலிருந்து அவன் தலையும் பாதமும் எழுந்தன
.
காலம் எழுந்தது; உலகம் வந்தது.
இப்படி கடவுள் தன்னைத்தானே பிறப்பித்துக் கொள்ளும் சிருஷ்டி தத்துவம் உலகின் சில மதங்களில்தான் உள்ளது.
திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்
திருவளர்சோலை தென்காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே
அருள் செய்கிறவன்போல வந்து எனக்குள் புகுந்துகொண்டு என் உடலையும் உயிரையும் விழுங்கிவிட்டான். இது அந்த
க் கரியமேனிக் கண்ணனின் விளையாட்டுகளே. ஒன்பதாம்பத்து ஆறாம் திருவாய்மொழியில் திருக்காட்கரை பாசுரங்களில்
ஆழ்வார், திருமால் எல்லா உலகத்தையும் அவனுக்குள் வைத்து அதையே விழுங்க வல்லவன் என்று சொல்லும் கருத்து
நவீன காஸ்மாலஜி கருத்துகளுக்கு மிக அருகில் வருகிறது.
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ்சோலை தென்காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆரூயிர் உண்ட திருவருளே
தனக்குள்ளே எல்லா உலகும் நிற்க, தானும் அவற்றுள் நிற்கிறான். சின்னதான என் உயிரையும் எதற்காக
விழுங்கியிருக்கிறானோ தெரியவில்லை என்கிறார் ஆழ்வார். இந்தப் பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்கள் முழுவது
ம் பிடிபடாமல் நம்மை பிரமிக்க வைக்கின்றன. கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதற்கே என்று ஆழ்வார்
கடவுளை வருணிப்பது பிரயாசம் மிக்கது என்று சொன்னாலும் மிக மிக தைரியமாக முயன்று பார்க்கிறார்.
பிரபஞ்சத்தை உண்டாக்கி அந்தப் பிரபஞ்சத்தின் அங்கமாகவும் இருக்கிற கடவுளை நம்மால் மனத்தில் வரித்துக்
கொள்ள முடிந்தால், அது நவீன க்வாண்டம் இயற்பியல் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தை விவரிப்பதுடன் ஒத்துப்
போகிறது. காலம் உட்பட எதுவுமே _ யாருமே இல்லாத அன்று பிரபஞ்சம் தோன்றியது என்பது இயற்பியல் சொல்லும்
தத்துவம். ஆரம்ப காலத்தில் னீணீttமீக்ஷ¦, ணீஸீtவீனீணீttமீக்ஷ¦ இரண்டும் சமனாக ஒன்றை ஒன்று எதிர்ப்படுவதால்
நிகரமாக ஒன்றுமில்லாத ஒரு சூன்யநிலை. காலத்தின் ஆரம்பத்தை சூலுற்ற கணமாக பிரபஞ்சத்தின் முத
ல் கணத்தை இயற்பியல் சொல்கிறது. அதே போன்ற கணத்தை நம்மாழ்வார் விவரிப்பது வியப்பிலும் வியப்பே
.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே
தேவஜாதி, உலகம், உயிர் வேறு எதுவுமே இல்லாத அந்தக் கணத்தில் பிரம்மா, தேவர்கள் உலகம் உயிர்கள்
எல்லாவற்றையும் படைத்தான் திருக்குருகூரில் நின்று தரிசனம் தரும் அவன் இருக்க ஏன் மற்ற தெய்வங்களை
நாடுகிறீர்கள்?
பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி பேசிவிட்டு உடனே சொந்த ஊர் பெருமாளை மறக்காது பாடும் நம்மாழ்வாரின் சிறப்பை
வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரபந்தத்தில் நேரடியாக கீதையைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை என்
று ஒரு கருத்து உண்டு. பார்த்தனுக்கு தேர் ஊர்ந்தது இருக்கிறது. ஆனால் அவனுக்கு கீதாபதேசம் செய்தது நேரடியாக
நாலாயிரம் பாடல்களில் எதிலும் இல்லை. வார்த்தை என்று ஓர் இடத்தில் மட்டும் திருமங்கையாழ்வார் பாசுரத்தில்
வருகிறது என்று
காஞ்சிபுரத்தில் ஒரு சுவாமி சொன்னார். அதை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கீதையில் சொல்லப்படும் கருத்துகள்
ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழியில் பரவலாக உள்ளன. திருவாய்மொழியின் மிகச் சிறந்த பாடல்கள் இவை. ஒரு தாய்
தன் மகளுக்குள் திருமால் வந்து புகுந்துவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறாளே என்ன செய்வேன் என்று கவலைப்படுவதாக அமைந்த பாடல்கள்.
பகவான் மனித உருவில் வந்து தன்னைப் பற்றியே சொல்வதுதான் கீதையின் மையமான சிந்தனை.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ
கடல் ஞாலத்தீர்க்கு இவை னன் சொல்கேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே
நீரையும் நிலத்தையும் செய்தது நானே, அது ஆவதும் நான், அதைக் கொண்டதும் நான், அதைப் பிளந்ததும் நான், உண்டதும் நான், திருமால் வந்து புகுந்ததாலோ என்னவோ உலகத்தவர்களே என் மகள் இப்படிப் பேசுகிறாள்.
மகள் இப்படிப் பேசுகிறாளே என்கிற கவலையை நீக்கிவிட்டால் இந்தப் பாசுரங்களின் கருத்துகள் முழுவதும் கீதையில் உள்ளவை. அவைகளை பொழிப்புரைத்தால் பிரமிப்புத் தரும்.
என்னுடைய கல்விக்கு எல்லையில்லை. நானேதான் கல்வி, அதைச் செய்பவனும் நானே, தீர்ப்பவனும் நானே, அதன் சாரமும் நான்தான். காணும் நிலம் எல்லாம், ஆகாயமெல்லாம் நான். தீ நான், காற்று நான். கடல் நான். சிவன் நான். பிரம்மா நான். தேவர்களும் நான், இந்திரனும் நான், முனிவர்களும் நான்.
என்னிடம் கொடிய வினைகள் ஏதும் கிடையாது கொடியவினைகள் ஆவதும் நான்தான். அவைகளைச் செய்வதும் தீர்ப்பதும் நான்தான்.
சொர்க்கம் நான், நரகம் நான், மோட்சம் நான், உயிர்கள் நான், தனிமுதல்வன் நான். செய்வதெல்லாம் நான். செய்யாதனவும் நான், செய்து கழிந்ததும் நான்தான், செய்கைப் பயனும் நான், செய்பவர்களைச் செய்வதும் நான்! தவறாமல் உலகத்தைக் காக்கின்றவன் நான். மலை எடுத்தேன், அசுரரைக் கொன்றேன். இறையவரைக் காத்தேன், கன்று மேய்த்தேன், ஆநிரை காத்தேன். எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை; எனக்கு எல்லோரும் உறவினர்கள். உறவுகளைச் செய்வதும் அழிப்பதும் நான்தான்.
வியக்க வைக்கும் இந்தக் கருத்துகள் இந்தப் பத்தில் உள்ளன. நம்மாழ்வாரின் பாடல்கள் அனைத்தையும் விளக்க எனக்கு ஆசைதான். அதற்காக தனிப் புத்தகம் எழுத வேண்டும். ஆயிரம் பாடல்களில் முக்கியமானவைகளை குறிப்பிடுகிறேன். கிளரொளி இணமை கெடுவதன் முன்னம் என்று துவங்கும் இரண்டாம் பத்து 10_ம் திருவாய் மொழி.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்று துவங்கும் 3_ம் பத்து 3_ம் திருவாய்மொழி
ஒருநாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் 41
ஒன்று தேவும் உலகும் 410
ஆரா அமுதே அடியேன் உடலம் 58
உலகமுண்ட பெருவாயா 610
கங்குலும் பகலும் கண்துயில் அறியான் 72
ஆழி எழச் சங்கும் வில்லும் எழ 74
நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் 810
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட 9 10
சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழங்கின 109
முனியே நான்முகனே முக்கண்ணப்பா 1010
மேலே குறிப்பிட்ட பாடல்கள் வைணவர்களின் நித்யானுஸந்தானம் என்னும் தினம் படிக்க
வேண்டிய பட்டியலைச் சேர்ந்தவை. குறிப்பாக சூழ்விசும்பு அணிமுகில் என்னும் பத்துப்
பாடல்கள்
சொர்க்கத்தில் பிரவேசிக்கும் உணர்ச்சியைக் கொடுக்க வல்லவை
.
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின
ஆழ்கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் நாராணன் தமரைக் கண்டு உகந்தே
ஆழ்வார் பரமபதத்தைத் தன் கூட்டத்தாருடன் பார்த்த மகிழ்ச்சியை இந்தப் பாடல்களில் பாடியிருக்கிறார்.
மேகம் அணிந்த வானம் வாத்தியம் இசைத்தது, கடலலைகள் கைதட்டின, ஏழு தீவுகளும் அழகு பெற்றன, என் அப்பன் நாராயணனின் கூட்டத்தாரைக் கண்
டு
வேதங்கள் சமிஸ்கிருதத்தில் இருக்கின்றன. மிகத்தொன்மையான சமிஸ்கிருததில் உள்ள இம்மறைகள் இன்றளவு
ம் தப்பிதம் இல்லாமல் சொல்லப்படும் வகையில் மிக நேர்த்தியான பாட முறைகளை அமைத்து எவ்வித மாற்றமும்
இல்லாமல்
சொல்லப்பட்டு வருகின்றன. வேதம் வாழுமளவு சமிஸ்கிருதமும் இருக்கும். இப்படி நிலை பெற்றுப் போன ஒரு ஆழமான
சம்பிரதாயத்தை மாற்றி, தமிழை தேவ பாஷையாக செய்விப்பது என்பது மலையைப் பெயர்ப்பதற்கு ஒப்பான செயலாகும்
. ஆனால் அதைச் செய்திருக்கின்றனர், ஆழ்வார்கள்!
ஆழ்வார்கள் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட உன்னத தமிழர்கள். இவர்கள் பல குலங்களிலிருந்து வந்திருக்கலாம்
, ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் தமிழின் மீது ஆறாக்காதல் இருந்திருப்பதை அவர்கள் செய்வித்த பாசுரங்களில்
காணலாம். இவர்கள் அன்று இப்பெரும் முயற்சி எடுக்கவில்லையெனில் இன்று மெல்லத் தமிழ் செத்திருக்கும்
.
பாசுரங்கள் தெய்வப்பாடல்கள். முழுக்க, முழுக்க இறைத்தத்துவமும், அழகியலும், கவித்துவமும் கொண்டவை. அதாவது
பண்டைய பாஞ்சராத்திர ஆகமங்களெல்லாம் தமிழ் நாட்டில் உருவானாலும் அவை உயர்வு கருதி சமிஸ்கிருதத்தில்
எழுதப்பட்டன.
இம்முறையை பின் பற்றி ஆழ்வார்களாலும் அத்தனை பாசுரங்களையும் சமிஸ்கிருதத்தில் செய்வித்து இருக்க முடியும்
. சமிஸ்கிரத புலவரான திருமழிசை ஆழ்வார்
...விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகக் கலந்து
.
என்று எழுதக்காரணமென்ன? ஏன் ஆழ்வார்கள் பாசுரங்களை தமிழில் செய்தனர்?
இதற்கு ஆன்மீக காரணங்களைவிட சமூக காரணங்களே முக்கியம் என்று தெரிகின்றது. முதலில் ஆழ்வார்கள்
பகவத் அனுபவத்தில் (இறை அநுபூதியில்) லயித்து மட்டும் இருப்பவர்களானால் கவிதையே எழுதவேண்டி
ய அவசியமில்லை. அப்படியே கவிதை செய்தாலும் அதை தமிழில் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை
. உதாரணமாக ஆழ்வார்களால் மொழி என்ற எண்ணத்தின் குறியீடு தோன்றும் தோற்றுவாய்க்கு முன்னமே நின்று
நிலைத்து விட முடியும் என்று தெரிகிறது. நம்மாழ்வார் பிறந்து 16 வயதுவரை வாயே திறவாமல் யோகத்தில்
மவுனித்து இருந்ததாக குரு பரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் தன் தெய்வீக அனுபவங்களைத் தமிழில் தரவேண்டும்?
பாசுரங்களை நாமெல்லோரும் ஆய்வு செய்யும் வண்ணம் அவைகளை மீட்டுத்தந்த நாதமுனி, மாறன் சடகோபன் (நம்மாழ்வார்) பற்றி இப்படி எழுதுகிறார்:
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு, எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார், எம்மை
ஆள்வார் அவரே சரண்
எவ்வளவு ஆசையும் அன்பும் வார்த்தையில் விழுகின்றன பாருங்கள்! நம்மாழ்வாரை குருகூர் ஏறு (சிங்கம்
) என்கிறார். "ஆழ்வார்கள் எம்மை ஆள்பவர்களே" என்ற கலைஞரின் வசனமும் முன்பே சொல்லப் பட்டு இருப்பதைக்
காண்க.
கவிச்சக்கிரவர்த்தி கம்பன், நம்மாழ்வார் என்ற மாத்திரத்தில் ஆரிய வேதம் சொல்லும் அந்தணர்கள் தங்கள்
கரங்களை தலைமேல் வைப்பர் என்பதை:
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றாம் பதுமக்கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர்......
(சடகோபர் அந்தாதி 34)
என்கிறார். சமிஸ்கிருத மொழி வல்லுனரான வேதாந்த தேசிகர்:
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" ...
என்கிறார். பாருங்கள் தேசிகர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டுக்குள் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடுகின்றனர் ஆழ்வார்கள். ஆரிய வேதங்களுக்கு பொருள் தேட திராவிட வேதத்திலிருந்து சான்றுகள் எடுக்குமாறு!
இதைத் தமிழின் மறுமலர்ச்சி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
கடைசியாக ஒரு சுவையான செய்தி கூடல் (மதுரை) புராணம் என்ற நூலில் கிடைக்கின்றது.
அண்ட கோளத்தாரென்ற ஆரியத்தமிழாலன்று
தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்...
தமிழ் என்ற வார்த்தைதான் திராவிடம் என்றாகிறது. ஆரியம் என்பது உயர்வு கருதி சமிஸ்கிருதத்திற்கு சொல்லப்
படுகிறது. இப்பாடல் "ஆரியத் தமிழ்" என்றொரு பிரயோகத்தைப் போடுகிறது!!
தனித் தமிழ் இயக்கத்திற்கு தலையிடி கொடுக்கும் வார்த்தை போல் அல்லவோ தெரிகிறது இது ;-)\
\வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி
செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட
முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம்
.
ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்
அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க
. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம்
பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார்
.
அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத்
தொரத்திக்கிட்டுப் போறாங்க'.
சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும்
தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள்
உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்