• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 274

உயர் குடியின் நற்பண்புகள்.

வாழ்வில் என்றும் உயர் குடியில் பிறந்தவர்கள்,
தாழ்வாக எதையுமே செய்ய விழைய மாட்டார்.

கோடிப் பொருட்கள் பல தந்தாலும், அவைகளை
நாடி, தமது குலப் பெருமை குலைக்கும் எதையும்

நல்ல குலத்தில் பிறந்தவர்கள் செய்ய மாட்டார்;
நல்ல குறட்பாவாக இக்கருத்தை அளிக்கின்றார்.

'அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்', என்பது குறட்பா.

தாம் வறுமையால் வாடினாலும், நற்குடியினர்,
தாம் பிறருக்குக் கொடுப்பதை நிறுத்தமாட்டார்.

'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைபிரிதல் இன்று'. குறள் நன்று!

மாசற்ற குடியில் பிறந்தோம் என்பவர் என்றும்
மாசுள்ள நெஞ்சுடன், வஞ்சகம் செய்யமாட்டார்.

'சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்', என்கிறார்.

இந்தக் குறட்பாக்களை அறிந்து, உயர்குடியின்
அந்த நற்பண்புகள் கற்று, சிறப்புப் பெறுவோம்!

:angel:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 275

குறைகள் தெரியும்...

moon.jpg


கரும் புள்ளி ஒன்று, ஒரு வெள்ளைத் தாளில் விழுந்தால்,
பெரும் குறையாக அது கண்ணில் படும் என அறிவோம்.

கறை வானத்து நிலவில் தெளிவாகத் தெரிவது போலவே,
குறை சிறிதாயினும், உயர்குடிப் பிறந்தவரிடம் தெரியும்!

இரண்டாவது ஒப்புமையை எடுத்துக் கொண்ட வள்ளுவர்,
இரண்டு அடிக் குறட்பாவாக, அதை நமக்குத் தருகின்றார்.

'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து', என்பது குறட்பா.

பண்புகள் நல்லவை பல உடையவனுக்கு, அவற்றுடன்,
அன்பு காட்டாத தன்மை இருந்தால், அவனது உயர்ந்த

குடியைப் பற்றிய ஐயத்தை, அது ஏற்படுத்தும் என்பதை,
குறுகிய குறளாக, நமக்கு அளிக்கின்றார் திருவள்ளுவர்.

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்', என்பது அந்தக் குறள்.

நல்ல குணங்களுக்கு இடையில், அன்பில்லாத் தன்மை
இல்லாது, கவனமாக இருந்து, வாழ்விலே உயர்வோம்!


:high5: . . :peace:
 
குற்றம் பாராத நற்குணம்...

நல்ல குணம் நிறைந்தவர், ஒரு சிறிய
அல்ல குணம் கொண்டாலும், அதுவே

பெரிய குறையாகத் தெரியுமாம்; இதை
அறிய வேண்டும், எல்லோருமே நன்கு!

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; இது
குற்றம் பாராத நற்குணத்தை வளர்த்து,

சுற்றம் பெருக்கி, அன்பையும் பெருக்கி,
சுற்றும், காலச் சக்கரத்தை இனியதாய்!

:grouphug: . . . :dance:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 276

உயர்ந்த குலம்!

பயிர் ஒன்றைக் கண்டவுடனே நாம் அறியலாம், அந்தப்
பயிர் எந்த நிலத்தில் விளைந்தது என்பதை; அதுபோல

ஒருவர் பேசுகின்ற சொற்களை நாம் கேட்டாலே, அந்த
ஒருவர், உயர் குலத்தைச் சேர்ந்தவரா என அறியலாம்.

'நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்', என்கிறார்.

தனக்கு நலம் வேண்டுபவர், தாகாத செயல் செய்வதே
தனக்கு வேண்டாம் என்று, நாணி ஒதுங்கிட வேண்டும்.

தன் குலம் சிறப்பாகப் பேசப்பட வேண்டுபவர், பிறரிடம்
தன் பணிவினைக் காட்டி, அடக்கமாக வாழ வேண்டும்.

'நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு', என்று நல்வழி காட்டுகிறார்.

நாம் பேசுகிற சொற்களை சிறப்பாகப் பேசுவோம்; மேலும்
நாம் தகாதவை செய்ய நாணி, பணிவுடனே வாழுவோம்

:hail: . . :thumb:
 
மானம்...

உயர் குலத்தின் தன்மைகளை எடுத்துச் சொன்னவர்,

உயர் குணமான மானம் பற்றி எடுத்து உரைக்கிறார்.

தன் மானம் பெரிதென்று ஓம்பி இருந்தால், என்றும்

தன்மானம் இழிவடையும் நிலைமை வந்திடாது!


வள்ளுவம் வாழ்க! :clap2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 277

மான உணர்வு.

உயர்வு வேண்டும் உலக வாழ்வில், என்பவர்,
தாழ்வு தரும் எச்செயலும் செய்ய விழையார்.

இன்றியமையாத செயல் எனினும், பெருமை
குன்றும் செயல் என்றால், செய்வது மடமை.

'இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்', என்று எச்சரிக்கை!

புகழ் மிக்க வீர வாழ்க்கையை விரும்புபவர்கள்,
புகழ் வரினும், மானமிழக்கும் செயல் செய்யார்.

'சீரினும் சீரல்ல செய்யாரே சீரோடு
பேராண்மை வேண்டு பவர்'.

அடக்கம் வேண்டும்; ஆனால் எந்நிலை வரினும்,
அடங்கி அடிமையாகக் கூடாது, என்கிறார் அவர்.

உயர்ந்த நிலையை அடையும்போது, மறவாமல்,
சிறந்த குணமான பணிவு வேண்டும்; ஆனாலும்,

வாழ்வில் என்றேனும் தாழ்வு நிலை அடைந்தால்,
தாழ்ந்த இழி செயல்கள் புரியாது, உயரவேண்டும்!

'பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு', என்கிறார்.

தன் மானம் இழக்கும் எந்தச் செயலையும் செய்யாது,
தன்மானத்துடன் நாம் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்!

:first: . . :angel:
 
உயர்ந்த குலம்!
IMO, Mrs. Raji, I don't stand second to anyone when it comes to loving Thiruvalluvar, but among the few things that I just can't come to agree with Thiruvalluvar is this thing about kulam. To say that the good conduct of a single individual is reflective of the "kulam" in which the individual was born is to endorse the odious notion that the bad behavior of a single individual is a reflection of the kulam into which that individual was born.

Cheers!
 
Dear Prof Sir,

I read several times, these ten verses on 'kudimai' and never has ThiruvaLLuvar mentioned

about what we call now a days as 'jadhi'!! He must have found arrogant guys in the highly

placed families those days and hence should have written this:

'நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு'.

Regards,
Raji Ram
 
Dear Prof Sir,

I read several times, these ten verses on 'kudimai' and never has ThiruvaLLuvar mentioned

about what we call now a days as 'jadhi'!! He must have found arrogant guys in the highly

placed families those days and hence should have written this:

'நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு'.

Regards,
Raji Ram

Here ''Kudimai'' means The people..In general, It means the people under the monarch..This is not a single individual or 'Jhadhi' as mentioned in
the #607
 
Last edited:
Here ''Kudimai'' means The people..In general, It means the people under the monarch..This is not a single individual or 'Jhadhi' as mentioned in
the #607

Shanmugam Sir,

Prof. did not say 'kudimai' is 'jadhi'! We are discussing about 'kulam'.

I am trying to work out, whether we can take highly respected families as good 'KULAM'!

And, can we say - If a person wants his 'kulam' to be respected, he should have all the

good qualities mentioned in that chapter?

Best wishes,
Raji Ram
 
I read several times, these ten verses on 'kudimai' and never has ThiruvaLLuvar mentioned
Dear Mrs. Raji, my point is how can one individual's good or bad actions be reflective of his/her entire clan? I think Thiruvalluvar's advice about "kulam" must be taken with at least a grain of salt in the present day circumstances.

Cheers!
 
Dear Mrs. Raji, my point is how can one individual's good or bad actions be reflective of his/her entire clan? I think Thiruvalluvar's advice about "kulam" must be taken with at least a grain of salt in the present day circumstances.

Cheers!

Yes Prof. Sir!! :cool: . :couch2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 278

மானம் உயர்வானது!

மான உணர்வோடு வாழ்வதே சிறப்பு என்று, ஏற்ற-
மான குறட்பாக்களால், திருவள்ளுவர் கூறுகின்றார்.

தலைமுடியின் பெருமை, தலையில் உள்ளபோதே;
தலையிலிருந்து உதிர்ந்து விழுந்தால், அது இழிவே!

உயர்ந்த நிலையில் உள்ளவர் மானமிழந்தால், அவர்
உதிர்ந்த தலை முடிக்கு நிகரான இழிவை எய்துவார்!

'தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை'. இது குறட்பா.

குன்றுக்கு நிகரான பெருமை உடையவர், என்றாவது,
குன்றிமணி அளவு சிறிய இழி செயலைச் செய்தாலும்,

சிறந்த அவர்களின் புகழ் குன்றிப் போய்விடும்; இதை
சிறந்த ஒரு குறட்பாவாக, வள்ளுவர் அளிக்கின்றார்.

'குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்', என்று எச்சரிக்கை!

இழி செயல்களை இறங்கினால், பெருமை குலையும்;
பழியை அஞ்சி மானம் காத்தால், பெருமை நிறையும்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 279

இகழ்வார் பின் செல்ல வேண்டாம்!

தன்னை யாரேனும் இகழ்வாக நினைத்துவிட்டால், அவர்
பின்னே பணிந்து செல்லுவதையே தவிர்த்திடவேண்டும்!

இந்த உலகிலும் அந்த நிலைமை பெருமை தராது; தேவரின்
அந்த உலகம் சேர்க்கும் பயனும் தராது. பின் என்ன பயன்?

'புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை', என்று அவரது கேள்வி!

தன்மானம் என்பது, எல்லோருக்கும் உயிரைப் போன்றது;
தன் மானம் கெடுப்போரை அண்டி வாழ்தல், பெருமையா?

இறப்பதை எவருமே எளிதில் விரும்பமாட்டார்; ஆனால்,
இரந்து, மதியாதவரை ஒட்டி வாழ்வதைவிட, அது மேல்!

பெருமை குலைப்பவரின் தயவில் வாழ்வதை விட, தன்
பெருமை குலையாத நிலையில், அழிவதும் நலமாகும்!

'ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று', என்பது அந்தக் குறட்பா.

'மதியாதார் வாசலை மிதியாதே', என்று ஒரு பழமொழி;
மதியாதார் நட்பை மறுத்து, இந்த உலகினில் உய்வோம்!

:bump2:
 
Shanmugam Sir,

Prof. did not say 'kudimai' is 'jadhi'! We are discussing about 'kulam'.

I am trying to work out, whether we can take highly respected families as good 'KULAM'!

And, can we say - If a person wants his 'kulam' to be respected, he should have all the

good qualities mentioned in that chapter?

Best wishes,
Raji Ram

Dear Raji Ram

Knowing that you are trying to work out,
whether we can take highly respected
families as good 'KULAM'!

Here I have to quote Avaiyar's poem


ஜாதி இரண்டொலிய வேறில்லை
சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி

This famous versions have been intrude in this
criteria.
 
...............
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி
.....

ஜாதி இரண்டொழிய வேறில்லை. சரியே!

நடை முறை வாழ்வில் இதைக் கடைப்பிடிக்க இயலுமா?

உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்...

மதங்கள்தான் மாறுவதில்லையே தவிர ஜாதிகள் மாறுகின்றன! குழப்புகிறேனா?

கிறிஸ்துவ மதத்தினரில் வெவ்வேறு ஜாதிகளில் கிறிஸ்துவர்கள்!

முகமதிய மதத்தினரில் வெவ்வேறு ஜாதிகளில் முகமதியர்கள்!

இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல?

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பாடுவோம்!!! :lalala:
 
திருவள்ளுவருக்கு ஒரு நாள் ஓய்வு!
தருகிறேன் இரு காமெடிக் க(வி)தைகளை!


அழுக்கு மறைந்தது!

windows.jpg


எப்போதும் பக்கத்து வீட்டில் நடப்பதை நோக்கி,
தப்பாது குறையே சொல்வாள், ஒரு பெண்ணரசி.

தேடிக் குறைகள் காண, தினம் சலிக்காது அவள்,
மூடிய தன் கண்ணாடி ஜன்னல் வழியே பார்ப்பாள்!

உலர்த்திய துணிகளை, பக்கத்து வீட்டில் பார்த்து,
உல்லாசமாய் குதிப்பாள், அழுக்காக இருப்பதால்!

தன் கணவனிடம் இதையே சொல்லிச் சொல்லி,
தன் சலவையே சிறப்பான சலவை என்றிடுவாள்.

எப்படியேனும் அந்த வீட்டிற்கு சென்று, ஒருமுறை,
எப்படியேனும் தன் சலவை பற்றிப் பெருமைப்பட

வேண்டும் என்று, தினம் தன் மனத்தில் நினைத்து,
வேண்டினாள், அதற்கென நல்லதொரு சந்தர்ப்பம்.

இரண்டு நாள் அன்னையின் இல்லம் சென்று, ஒரு
பிறந்த நாள் கொண்டாட்டம் நன்கு முடித்த பின்,

திரும்பிய நாள் கண்டாள், பக்கத்து வீட்டில், தான்
விரும்பிய நல்ல சுத்தம், உலர்த்திய ஆடைகளில்!

அதிசயமாக இதைத் தன் கணவனிடம் சொல்லி,
அதிவேகமாக அந்தப் பெண் சலவை கற்றாளென,

தன் கண்டுபிடிப்பைக் கூற, அவன் பதிலளித்தான்,
'என் ஓய்வு நேரம், நம் ஜன்னலைத் துடைத்தேன்!'

:couch2:

 
Last edited:
வந்தது சந்தோஷம்!

-Glasses-Spectacles.jpg


தன் வீடு பளிச்சென்று இருக்க விரும்பும் மூதாட்டி,
தன் சக்திக்கு மீறிப் பாடுபடுவார், தினந்தோறும்!

விடுமுறையில் பேத்தி வரும் சமயங்களில், தான்
படுவதைச் சொல்லிச் சொல்லியே, புலம்பிடுவார்!

வேலை ஆட்கள் எத்தனை சுத்தம் செய்தாலும்கூட,
வேளை தவறாமல், தானும் சுத்தம் செய்திருப்பார்.

இங்கு அழுக்கு, அங்கு தூசி என்றே சொல்லியபடி,
இங்குமங்கும் உலவுவார், கண்ணாடி அணிந்தபடி!

எப்படிப் பாட்டியைச் சிரிக்க வைப்பதென அறியாது,
எப்படியெல்லாமோ முயன்று, பேத்தி தோற்றாள்!

சிரிப்பதையே மறப்பாளோ பாட்டி என்று, அவளும்,
சிரிக்க வைக்கும் உபாயத்தையே தேடி இருந்தாள்!

ஆண்டு ஒன்று இவ்வாறே பறந்துவிட, அதன் பின்,
ஆண்டு விடுமுறையில், அவரை மீண்டும் பார்க்க,

பேத்தி வர, பாட்டி மிக்க மகிழ்ச்சியிலே திளைக்க,
பேத்திக்கு, பாட்டியின் நல்ல மாற்றத்தைக் கண்டு,

ஒருபுறம் மகிழ்ச்சி வந்து மனதை நிறைந்தாலும்,
மறுபுறம் புரியாத புதிராகவே இருக்க, கேட்டாள்,

'இப்போ சந்தோஷமா இருக்கியே பாட்டி!' பதில்:
'இப்போ நான் கண்ணாடியே போடறது இல்லை!'

:peace: . . . :dance:
 
Last edited:

இதோ.... இன்னொரு க(வி)தை.... சிந்திக்க!

நன்மையே செய்க!

தன் மகனைத் தொலை தூரம் அனுப்பிய தாய்,
அவன் வரவிற்குக் காத்திருந்தாள், அனுதினம்.

இரவு நேரப் பிச்சைக்கு, தினம் ஒரு ஏழையின்
வரவு என்பதும், அவளுக்குப் பழக்கம் ஆயிற்று!

chapati.jpg


ரொட்டி ஒன்று அவனுக்குச் செய்து போட்டால்,
ரொட்டியை வாங்கிக்கொண்டு, சொல்லுவான்,

'நீ செய்யும் கெடுதல், உனக்கே திரும்பி வரும்;
நீ செய்யும் நன்மை, உன்னையே காக்க வரும்!'

'கொடுக்கும் ரொட்டிக்கு, ஒரு நன்றி கிடையாது;
தடுத்துச் சொல்லியும், இதையே கூறுகின்றான்',

என்ற எண்ணம் தினம் எழுந்து, வெறுப்பாய் மாற,
கொன்றுவிடலாம் இவனை, என எண்ணியவள்,

ஓர் இரவு, ரொட்டியில் விஷம் இட்டுவிட்டாள்;
ஒரு நொடியில், மனம் மாறி, அதை எறிந்தாள்!

'போகட்டும், அவன் ஏழை!' என்று எண்ணிவிட்டு,
வேகமாய் நல்ல ரொட்டி போட்டுக் கொடுத்தாள்.

சற்று நேரம் சென்ற பின்னே, கதவை யாரோ தட்ட,
சற்று யோசித்தவாறே, அவளும் கதவைத் திறக்க,

கிழிந்த உடை; கலைந்த கேசம்; வாடிய முகத்தில்
குழிந்த கண்கள்; வந்தவன் யார்? அவளின் மகன்!

வேலையை இழந்து, பணமெல்லாம் இழந்து, தன்
வேளை சரியில்லை எனத் திரும்பிடும் வேளை,

மயக்கம் வந்து வழியில் கிடக்க, ஏழை ஒருவனே
மயக்கம் தெளிவித்து, ரொட்டியும் அளித்தானாம்!

அதிர்ந்தே போனாள் அந்தத் தாய்! என்ன காரியம்
அறிந்தே செய்ய இருந்தாள், ஏழையைக் கொல்ல?

விஷத்தை இட்ட ரொட்டியையே அளித்திருந்தால்,
விஷத்தால், அவள் பிள்ளையே இறந்திருப்பானே!

தினமும் அந்த ஏழை சொல்லும் சொற்கள், அந்தத்
தினமே அந்தத் தாய் புரிந்துகொண்டு, தெளிந்தாள்!

:popcorn:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 280

அழிதலும் நன்றே!

'தம்முடைய மானம் இழக்கும் நிலைமை வந்த பின்னும்,
தம்முடைய ஊனை வளர்த்து, உயிருடன் இருப்பதுதான்,

சாகா வரம் தரும் மருந்தோ?', என்று வினா எழுப்புகிறார்,
சாகாமல், மானமிழந்து வாழ்வதின் தாழ்வினைக் காட்ட!

'மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீழிய வந்த இடத்து', என ஒரு கலங்க வைக்கும் கேள்வி!

தன் உரோமம் நீத்தால், கவரிமான் இறப்பதைப் போன்று,
தன் மானம் இழந்தால், உயர்ந்தோர் தம் உயிர் துறப்பார்!

'மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்', என்பது குறட்பா.

மானம் அழியத்தக்க இழிவு வந்ததென உயிர் நீப்போர்,
வானளாவ உலகினரால் புகழப்படுவார், என்கின்றார்.

'இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு', இது குறள்.

உயிரினை ஒத்தது மானம் என்று அறிந்துகொள்வோம்;
உயிருக்கு நிகராக மானம் காத்து, உயர்வு பெறுவோம்!

:amen:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 281

பெருமை...

உலக வாழ்வில் எவை பெருமை தரும் என்று
உலகப் பொதுமறை பலவாறு உரைக்கின்றது.

ஊக்கமே, ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவது;
ஊக்கம் இல்லையேல், வாழ்வதே இழிவு ஆகும்!

'ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்', என்பது எச்சரிக்கை.

ஒருவர் செய்யும் தொழிலின் உயர்வு, தாழ்வுதான்,
ஒருவருக்கு உயர்வையோ, தாழ்வையோ தருவது.

பிறப்பு என்பது, உலகில் எல்லோருக்கும் சமமாகும்;
சிறப்பு மாறுபடுவது, அவரவர் செய்யும் தொழிலால்!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்', என்கிறார் அவர்.

உயர்ந்த நிலை மட்டும், ஒருவருக்கு உயர்வு தராது;
சிறந்த நற்பண்புதான், அவருக்கு உயர்வைத் தரும்.

கீழான நிலையில் உள்ளவர், இழிகுணம் தவிர்த்தால்,
கீழான மக்களாக என்றுமே ஆகிவிடமாட்டார்; இதை

'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்', என்ற குறளில் கூறுகிறார்.

பிறப்பு எல்லோருக்கும் சமமே, என்பதை அறிவோம்;
சிறப்புத் தரும் நற்குணங்களைப் பெற விழைவோம்!

:peace:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 282


பெரியோரும், சிறியோரும்!

கற்புக்கரசிகள் என்றுமே உலகின் போற்றப்படுவார்;
அற்புதமான இவ்வகைப் பெருமை, யாருக்கு வரும்?

தன்மையான ஒரு கற்புக்கரசி பெறும் பெருமையை,
தன்னிலை தவறாது, தன்னைக் காப்பவர் பெறுவார்.

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'.

ஆற்றுவதற்கு அரிய செயல்களை, சரியான சமயம்
ஆற்றுவார், பெருமைப் பண்பினை உடைய ஒருவர்.

'பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்', என்பது குறள்.

சிறியோரின் உணர்ச்சியில், என்றும், பெருமை மிக்க
பெரியோரைப் பேணும் நோக்கம் இருப்பதே இல்லை!

'சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு', என்று

அரிய குறளை அமைத்து, நமக்கு வழி காட்டுகின்றார்.
அரிய பெருமை அடைய, வழிகளை நாம் அறிவோம்!


:decision: . . . :car:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 283

வரம்பு மீறலும், பெருமை பேசுதலும்!

சிறப்புக்குத் தகுதி இல்லாதவருக்கு, நல்ல
சிறப்பான பதவி கிடைக்கின்ற சமயத்தில்,

வரம்பு மீறிச் செயல்கள் புரிவார்கள் என்று,
சிறந்த குறட்பாவில், வள்ளுவர் கூறுகிறார்.

'இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்', என்பது எச்சரிக்கை.

நிறை குடம் தளும்பாது என்பது உண்மை;
குறை குடம் தளும்பும் என்பதும் உண்மை!

பண்புள்ள பெரியோர் எல்லோரிடமும், தம்
பணிவைக் காட்டுவார்கள்; ஆனால் என்றும்

தற்பெருமையே பேசியபடித் திரிந்திடுவார்,
நற்குணங்கள் எதுவுமே இல்லாத சிறியோர்!

'பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து', என்கிறார்.

நல்ல அணிகலன் போன்ற பணிவு கொண்டு,
நல்ல பணிவினாலேயே உயர்வோம், நன்கு!

:angel:
 
மனித சுபாவம்!

மனித சுபாவமே பெருமை பேசுதல் என்று
இனிதே அறிந்துள்ளார், அன்றே வள்ளுவர்!

கணினி மயமான இன்றைய உலகில், பலர்,
கணினி மூலமாகவே தற்பெருமை பேசுவர்!

வருந்தி வருந்திக் கூட்டம் சேர்க்கவும், நன்கு
பொருத்திய 'மைக்'கில் பேசவும், வேண்டாம்!

வீட்டில் ஒரு கணினி இருந்தாலே போதுமே!
ஏட்டில் எழுதுவதைவிட, அதிகம் எழுதலாம்!

'முகப் புத்தகம்' - Face book (!) கணக்கில், தம்
அகம் மகிழ, பெருமைகளை வாரிவிடலாம்!

தீர்க்கதரிசிதான் திருவள்ளுவர்; தம்முடைய
தீர்க்கமான பார்வையால், நல்வழி காட்டினார்!

வள்ளுவத்தை அறிந்து, பணிதலும் அறிவோம்!!

:hail: . . . :first:
 

Latest posts

Latest ads

Back
Top