Raji Ram
Active member
எவ்வளவு நேரம் ஆகும்?
நெஞ்சை நிறைக்கும், அரிய பெரிய கோவிலான,
தஞ்சைப் பெரிய கோவிலைக் காண, ஆவலுடன்,
வந்து இறங்கினார் தஞ்சையில் ஒருவர்; வழியில்
வந்த சிறுவனிடம், 'கோவிலை அடைய எத்தனை
நேரம் ஆகும்', என்று கேட்க, அவனோ சிரித்தபடி,
'நேரம் இருபது நிமிடம் ஆகும், நடந்து போனால்;
ஐந்து நிமிடமே ஆகும், நாய் ஒன்று துரத்தினால்',
என்று சொல்லி, வேகம் எடுத்து, ஓட்டமாய் ஓட,
சிறுவனிடம் கேட்டது, தனது தவறு என எண்ணி,
பெரியவர் ஒருவர், வீட்டு வாசல் திண்ணையில்,
செய்தித்தாள் வைத்து அமர்ந்திருந்த, அவரிடம்
செய்தி அறிய, அருகில் சென்றபின், மறுபடியும்
அதே கேள்வியைக் கேட்க, அவரோ ஒரு நிமிடம்
ஏதோ யோசனை செய்வதுபோலப் பார்த்து, பின்
தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார், குனிந்தபடி!
தன்னுடைய நேரம் சரியில்லை எனச் சலித்தபடி,
இவர் நடந்து பத்து அடி செல்ல, அந்தப் பெரியவர்,
இவரைக் கைதட்டி அழைத்தார், அருகில் வந்திட!
'முப்பது நிமிடம் ஆகும், நீங்கள் கோவில் அடைய',
என்றது கேட்டதும், இவருக்கு மிகவும் கோபம் ஏழ,
'நான் கேட்டபோதே சொல்லாமல், பத்து அடிகள்
நான் போன பின், அழைத்துச் சொல்லுகின்றீரே?'
எனக் கேட்டதும், அவர் மெதுவாகச் சொன்னார்,
'மெனக்கெடுத்துவது என் நோக்கமல்ல; நீங்கள்
நடக்கும் வேகத்தைப் பார்க்கவே விரும்பினேன்!
நடக்கும் வேகம் பார்த்தபின், பதில் சொன்னேன்!'
:kev: . . . eace: