• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

thats ok madam. no need to worry. keep doing the good service. .. r into social service or just an hobby????
 

இசை பாடக் கற்பிப்பதும், தமிழில் எழுதுவதும் பிடிக்கும்;
இசைபட வாழ வழிகாட்டுவது, சிறப்பான திருவள்ளுவம்!

திருவள்ளுவரை மனது போற்றுவதால், ஆவல் தோன்றும்,
எது சொல்லுவதாயினும், இருவரிக் கண்ணிகள் போலவே!

:peace:
 

மாம்பழமாம் மாம்பழம்!


mango.jpg


மாம்பழம் எல்லோரும் விரும்பும் பழமே!
மாம்பழம் பேரரசர் விரும்பியதும் நிஜமே!

அரச விருந்தில் மாம்பழம் பரிமாறப்பட, பே-
ரரசர் அக்பர், பீர்பால் அருகிலே அமர்ந்தபடி,

நிறைய மாம்பழங்களை ருசித்து உண்டார்!
நிறையக் கொட்டைகளும், தோலும் தனது

தட்டில் கிடப்பதைக் கண்டவுடன், குறும்பாக
எட்டியது அவருக்கு, ஒரு சின்ன யோசனை!

பீர்பால் அறியாது, அவரது தட்டில் போட்டு,
பீர்பாலை அப்போது கேலி செய்ய விரும்பி,

'எத்தனை கொட்டைகளும், தோலும் இங்கு!
எத்தனை மாம்பழம் தின்றீர், அன்பு பீர்பால்?'

என்று உரக்கக் கேட்டுச் சிரித்தார்! கேலியை
நன்கு அறிந்த பீர்பாலும் உடனே சொன்னார்,

'எனக்கு மாம்பழம் பிடிப்பதைவிட, அரசரே,
உமக்கு அதிகமாகப் பிடிக்குமோ? நானாவது

மீதம் வைத்தேனே கொட்டையும், தோலும்;
மீதம் வைக்காது, நீங்கள் உண்டீர் அதையும்!'

:hungry: . . . :hungry:
 
Translation of one more poem of William Henry Davies

வருத்தமும், ஆனந்தமும்!

உன்னை வேண்டுகிறேன் வருத்தமே! விரைவில்
என்னை விட்டு விலகு; உனக்கு ரசனை குறைவு!

நான்கு பாடல் நீ தந்தால், நின் சகோதரி ஆனந்தம்,
நன்கு தந்திடுவாள் பத்துப் பாடல்கள், நிறைவாய்!

ஒரு மணி நேரம் அருகில் நீ இருந்தாலே போதும்;
ஒரு செயலும் செய்யாமல், சென்றுவிடும் நேரம்!

அந்த நாள் முடிவிலே தெரியும், பயனில்லை என;
வந்த கொடுமைகளே நிறைந்திடும், மனம் எண்ண!

நல்ல எண்ண அலைகளை, சிலையாய், ஓவியமாய்,
நல்ல பாட்டாகப் படைக்க, நீ தயங்குகிறாய்! ஆனால்,

ஆனந்தம், காட்டுத் தீ போல விரைவாய்ச் சுழன்று,
முன்னமே எண்ணிய செயல்களை, முடிக்கிறாளே!

உன் பெருமூச்சு மென்மையே; கண்ணீர் இனிப்பே!
உன் உதவிக் கரம் நீட்டி, எண்ணியவை நிறைவேற,

உதவ முடியாது என்றால், வேறு உதவி செய்வாயா?
உதவ, சகோதரி ஆனந்தம், இங்கு வந்திட விடுவாயா?

இனிய வருத்தமே! விரைவில் என்னை விட்டு விலகு;
இனிய நான்கு பாடல்களையே நீ அளிப்பாய், அதனால்!

ஒளிரும் உடன்பிறப்பு ஆனந்தம், இங்கே வரவிடுவாய்;
மிளிரும் பத்துப் பாடல்கள் அவள் அளிப்பாள், அதனால்!

Sadness and Joy

I PRAY you, Sadness, leave me soon,
In sweet invention thou art poor!
Thy sister, Joy can make ten songs
While thou art making four.

One hour with thee is sweet enough;
But when we find the whole day gone
And no created thing is left --
We mourn the evil done.

Thou art too slow to shape thy thoughts
In stone, on canvas, or in song;
But Joy, being full of active heat,
Must do some deed ere long.

Thy sighs are gentle, sweet thy tears;
But if thou canst not help a man
To prove in substance what he feels
Then give me Joy, who can.

Therefore sweet Sadness, leave me soon,
Let thy bright sister, Joy, come more;
For she can make ten lovely songs
While thou art making four.

:cheer2:
 
Good morning!!!Great to see lot of Poems from you... from where u r getting these poems or u urself a poet., whatever the poems are good. and last but not least the mango picture is awesome. am feeling thirsty....
 
Thank you Ramki for your feed back!

BhArathiyAr said: எமக்குத் தொழில் எழுத்து!

I can say : எமக்கு விருப்பம் எழுத்து!

I write about whatever I find interesting under the Sun... :typing:

FYI, I have posted a few more threads in the literature section.

When time permits, please read them too.
 
yes i have been reading ur kavithai. r u a poet or get these poems from somewhere. just asking. they are good. whats ur profession madam
 
I invite you to write some articles related with my website. It can be in tamizh or english. I welcome people to come forward with useful articles for the readers which will also improve my websites. You can also drop ur comments in my website if you wi sh to.
 

Copy pasting my introduction posted in this Forum on 10 - 10 - 2010

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாலும்,
புனிதமான இசைக்கலையே என்னை ஈர்த்தது!

சிறு வயதில் தாத்தா 'ஹரிதாஸ' நாராயணன்
பெருமளவு இசைஞானம் வழங்கினார்! பின்னர்

சிங்காரச் சென்னையில் குடியேற்றம்! மீண்டும்
பாங்காக இசை மேதை திரு இராமநாதனின் சிட்சை!

கற்பூர புத்திக் குழந்தைகள் முதலாக, எளிதில்
ஏற்ற முடியாத வாழைமட்டைப் பெரிசுகள் வரை,

இசை பயிற்றுவிப்பதில் ஈடுபாடு கொண்டு
இசை பரப்பும் பணியைச் செய்கின்றேன்!

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை மிகவும்
யதார்த்த நடையில் எழுதவும் விருப்பமே!

உதிர்ந்த சில படைப்புக்களை தமிழ் விரும்பிகளுடன்
பகிர்ந்து கொள்ள இதன் மூலம் முனைகின்றேன்!

ஆசையுடன் எனை 'நக்கீரி' என்று அழைக்கும் என்
பாசமிகு அண்ணனை நன்றியுடன் நினைக்கின்றேன்!

ஆவலுடன் என் எழுத்தை ரசித்து ஊக்குவிக்கும்
ஆவல் கொண்ட இதயங்களை வணங்குகின்றேன்!

புதிய பக்கங்கள் இணையும்போது அவற்றுக்கு
இனிய வரவேற்பையும் எதிர்பார்க்கின்றேன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
yaenna oru tamizh patru. vaazha thaangal, vaazhga thamizh, vaazhga vaiyagam. Ungal tamizh patrai kandu yaam magizhgirom

How old r u?
 
மகாராஜாவின் ஆசை!

பெரும் புகழ் யார் அடைந்தாலும், அவர்களுக்கு
வரும் ஒரு எதிரிகளின் கூட்டமே வருத்திவிட!

மதி நிறைந்த பீர்பாலும் அதுபோலக் கயவனால்
சதி வலை விரிக்கப்பட்டு, அதிலே மாட்டினார்.

பெருமை மிக்க அரசரின் நாவிதன்தான் கயவன்!
அருமையான நேரம் பார்த்தான், சதி வலை வீச.

அரசரிடம் ஒருநாள், தான் கனவு கண்டதாகவும்,
அரசரின் தந்தை மகாராஜா அதில் வந்ததாகவும்,

தம் ஆவலைச் சொன்னதாகவும் கூறிட, உடனே
தம் தந்தையின் ஆவலை அறிய ஆர்வமானார்

அரசர்! தாம் இருக்கும் சுவார்க்கத்திலே எவருமே
அரசரின் நண்பர் பீர்பாலைப்போல இல்லாததால்,

விரைவில் அவரை சுவர்க்கத்திற்கு அனுப்புமாறு
உரைத்ததாகக் கூற, அரசரும் மனம் கலங்கினார்!

சிந்தை மயக்கும் நண்பனை இழக்க மனம் இல்லை;
தந்தை சொல்லை மீறவும், மனது கேட்கவில்லை!

கனத்த இதயத்துடன் விஷயத்தைக் கூற, அதனைச்
சிரித்த முகத்துடன் கேட்ட பீர்பால், ஒரு வார நேரம்

தருமாறு கேட்க, அரசர் ஒப்புதல் அளித்துவிட்டார்!
ஒருவாறு தம் சாதுரியம், நல்ல யோசனையைத் தர,

தன் வீட்டின் முன், தம்மைப் புதைக்க, குழி தோண்டி,
தன் வீட்டில் உள்ள அறையிலே இணைத்துவிட்டார்.

தம்மை உயிருடன் புதைத்தாலே, நகைச்சுவை தரத்
தம்மால் முடியும் என்று கூற, அதேபோல் நடந்தது!

bearded.jpg


ஆறு மாத காலம், அஞ்ஞாதவாசம் இருந்தபின், பீர்பால்
ஒரு காலை நேரம் அரசவைக்கு வந்தார்! அவருடைய

கோலத்தைக் கண்டு பரிதவித்த அரசர், 'ஏன் தலைவிரி
கோலமாக இருக்கின்றீர்?' என்று கேட்டு அணைத்தார்.

'இத்தனை நாட்கள் தங்கள் தந்தையை மகிழ்வித்தேன்;
"எத்தனை நாள் என் மகனைப் பிரிவாய்? உடனே செல்!"

என்று மகிழ்வுடன் எனை இங்கு திரும்ப அனுப்பினார்;
அங்கு நல்ல நாவிதனே இல்லாததால், இந்தக் கோலம்!

சிறந்த தங்கள் நாவிதரை அனுப்பச் சொன்னார்!' என்று
சிறந்த அறிவாற்றல் மிக்க சொற்களைக் கேட்டதுமே,

கயவனின் திட்டங்கள் பேரரசருக்குத் தெளிவாகிவிட,
கயவன் நாவிதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்!

:laser: . . . :lock1:
 
Last edited:

ஞாபக மறதி!


cart.jpg


வசதி மிகுந்த பண்ணையார் ஒருவர்; மனத்தில்
அசதி மிகுந்தால், தன் நண்பனிடம் செல்லுவார்!

அவனின் ஊக்கச் சொற்களால், மனம் மகிழ்ந்து,
அவன் நினைப்பிலேயே, தன் வீடு திரும்புவார்!

சிறந்த வில்வண்டி, அவரிடம் இருக்கும்; உயர்ந்த
இரண்டு மாடுகளை, அதிலே பூட்டுவது வழக்கம்!

அடுத்த ஊரிலே, நண்பனின் இல்லம் இருந்ததால்,
எடுத்த வில்வண்டியிலே, செல்லுவதும் வழக்கம்!

பழக்கமான பாதையிலே, இரவு வேளை சென்று,
பழக்கமாகிப் போனது, பாதையும் மாடுகளுக்கு!

வண்டியில் தூங்கும் அவர், கண்விழிக்கும்போது,
வண்டியும் நண்பன் வீடு சேரும், காலைப்பொழுது!

வேலைக்காரனுக்கு மாடு பூட்டுவது வேலை; ஒரு
வேளைகூட அவருடன், அவன் சென்றது இல்லை!

ஒரு இரவில், இதேபோலத் தான் பயணம் செய்ய,
இரு மாடுகளைப் பூட்டச் சொன்னார், அவனிடம்!

எப்போதும்போல் உறங்கியவர், கண் விழித்ததும்,
எப்போதும் காணாத, ஒரு காட்சியையே கண்டார்!

தன் வீட்டு வாசலிலேயே வண்டி இருந்தது! ஏன்
தன் நண்பன் வீட்டிற்கு, மாடுகள் செல்லவில்லை

என்று வியந்த அவர், வேலைக்காரனிடம் கேட்க,
அன்று சொன்னான், ஒரு வினோதமான பதிலும்!

'மன்னியுங்கள் ஐயா! எனக்கு ஞாபக மறதி! நேற்று
வண்டியில், இரு செக்கு மாடுகளைப் பூட்டினேன்!'

:juggle: . . . :madgrin:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 291


மனிதனுக்குரிய உயரிய பண்புகள் இல்லாதவரை,
மனித உருவமுள்ள மரமாகக் கூறுவார் வள்ளுவர்.

அரம் போன்ற கூரிய அறிவு பெற்று இருப்பினும்,
மரம் போன்றவர்களே, நற்பண்புகள் இல்லாதவர்!

'அரம்போலக் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்', என்று அறிவுறுத்தல்.

பொறுமை என்பது நற்பண்புகளில் முதன்மையான
அருமையான குணமாகும் என்பதை உரைக்கிறார்.

நல்ல நட்புக்கு ஏற்றவராக இல்லாமல், எப்போதும்
அல்லல் தரும் ஒருவராயினும், பொறுமை காட்டி,

பண்பு மாறாது நடந்துகொள்ள வேண்டும்; மாறாக
பண்பு காட்டாது இருந்தால், அதுவே இழிவு ஆகும்!

'நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை', என்பது குறட்பா.

பகைவனிடம் பண்பு காட்ட வள்ளுவர் கூறுகிறார்;
பகைவனுக்கு அருள்வாய், என்று பாரதி பாடினார்!


:angel: . . . :peace:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 292


நட்பும், நற்பண்பும் ...

நண்பர்களைப் பெற்று மகிழத் தெரிந்தால்தான்,
உண்மையான மகிழ்ச்சி வாழ்வில் கிடைக்கும்.

உலகில் யாருடனும் நட்புக் கொள்ளாதவருக்கு,
உலகம், பகலிலும்கூட இருளாகப் போய்விடும்!

'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்', என்பது குறள்.

நட்பின் பெருமையை உரைத்த திருவள்ளுவர்,
நற்பண்பு பற்றி, மேலும் ஒன்று உரைக்கின்றார்.

சிறந்த பாலாக இருப்பினும், வைப்பது களிம்பு
நிறைந்த கலமாக இருந்தால், கெட்டுப் போகும்;

பெருஞ்செல்வம், நற்பண்புகள் இல்லாதவரிடம்
இருந்தால், அதேபோலப் பயனில்லாது போகும்!

'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று', என்கிறார் அவர்.

நல்ல நண்பர்களைப் பெற்று மகிழ அறிவோம்!
நல்ல பண்புடன், நம் செல்வத்தைப் பகிர்வோம்!


:grouphug: . . . :angel:
 
மீண்டும் தொடரும்!

அனுதினம் வள்ளுவரைப் போற்ற விழைந்தாலும்,
அனுமதி தேவை, சில நாட்கள் ஓய்வுக்கு! எங்களது

அடுத்த அமெரிக்கப் பயண நாள் நெருங்குவதால்,
எடுத்துக் கொள்ளுகிறேன், கொஞ்சம் அவகாசம்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
உலகம் ஒரு கண்ணாடி!

Wood_Framed_Mirror.jpg


பழங்காலக் கதை ஒன்றை அறிந்தேன், இன்று!
பழங்காலத்தில் இருந்ததாம், ஓர் அழகிய வீடு.

அதில் இருந்தனவாம், ஆயிரம் கண்ணாடிகள்;
அதில் தெரியுமாம், வந்தவர்களின் பிம்பங்கள்!

ஒரு நாய் துள்ளும் மனத்தோடு, ஆனந்தமாய்,
ஒரு கதவில் புகுந்து, வீட்டிற்குள் சென்றதாம்.

சுற்றிலும் பார்த்த பொழுது, ஆயிரம் நண்பர்கள்,
சுற்றிலும் ஆனந்தமாகத் துள்ளுவது தெரிந்திட,

மீண்டும் மீண்டும் இந்த வீட்டிற்கு வரலாமென,
தோன்றும் எண்ணத்துடன் வெளியேறியதாம்!

மறுநாள் இன்னொரு கோபமுள்ள நாய், வீட்டில்
விரைவாய் வந்து நுழைய, அக் கண்ணாடிகளில்

அதன் பிரதிபலிப்பாக, கோபம் கொப்பளிக்கின்ற
முகம் கொண்ட, ஆயிரம் நாய்கள் கண்ணில் பட,

'இந்த வீட்டிற்கு யார்தான் வருவார்களோ! இதை
சொந்தம் கொண்டாடுவது, கோபமான நாய்களே!'

என்று எண்ணியபடி, வெளியேறிச் சென்றதாம்;
இன்று அறிவோம், உலகம் அதுபோல வீடுதான்!

நாம் இன்பமாக உலகைச் சுற்றி வந்தால், என்றும்
நாம் வாழும் உலகமும், இன்பமாகவே இருக்கும்!

:bounce:
 
அபூர்வச் சிலை!

இந்தியர் ஒருவர் அமெரிக்கா சென்றபோது,
விந்தையாக ஒரு சிலையைக் கண்டார்! அது,

வெண்கலத்தால் ஆன ஒரு எலியின் சிலை!
கண்கவர் தோற்றத்தில் மின்னி, மயக்கியது!

விலைச் சீட்டைக் காணாமல் அதிசயித்தவர்,
விலை கேட்க உதவியாளரை நெருங்க, அவர்,

'சிலை மட்டும் வேண்டும் என்றால், டாலரில்
விலை பதினைந்துதான்! அதன் கதை கேட்க

நூறு டாலர் ஆகும்', என்று சொல்ல, இந்தியர்
நூறு டாலர் அதிகமென்று எண்ணி, எலியின்

சிலையை வாங்கிக்கொண்டு ஆனந்தமாகச்
சாலையில் நடக்க, ஏதோ சத்தம் கேட்டதும்

திரும்ப, சில எலிகள் தொடர, அச் சிலையை
விரும்பி வருகின்றனவோ என்று நினைக்க,

அது சரியான யூகம் என்பதுபோல, எலிகளும்
மெதுவாகச் சேர்ந்து, கூட்டமாகவே பெருகிட,

இவர் ஓட, அவை துரத்த, கடல் அலைபோல,
இவரையே தொடர்ந்தது எலிகள் பட்டாளம்!

செய்வது அறியாது திகைத்தவர், முடிவாகச்
செய்தார் ஒரு தீர்மானம், சிலையைத் துறக்க!

கால்கள் காற்றாகப் பறக்க, விரைவில் போய்,
அலைகள் வீசும் கடற்கரை அடைந்து, உடனே

வீசினார் வெண்கலச் சிலையைக் கடலினுள்;
வீழ்ந்தன எலிகள் படை, தொடர்ந்து அதனுள்!

விரைவில் அதே கடைக்குத் திரும்ப, அந்தக்
கடையின் உதவியாளர் சிரித்து, சொன்னார்,

'எனக்குத் தெரியும், நீங்கள் கதையைக் கேட்க
என்னிடம் வருவீர்கள்!' மறுத்த இவர் கேட்டார்,

'கதைக்கு வேண்டியே நான் வரவில்லை! இங்கு
கிடைக்குமா இந்திய அரசியல்வாதியின் சிலை?'

:peace:
 
பக்திப் பெருக்கு!

ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்ட ஒருவன்
ஆண்டவனைக் கேட்டால் எல்லாம் கிடைக்கும்

என்று நம்பிக்கை கொள்ளச் சொல்லியதை, மிக
நன்று என்று ஏற்றுக்கொண்டான்; உடனே தான்

நிறையப் பணம் பெரும் வழியை யோசித்த பின்,
இறையை வேண்டினான், 'எனக்குக் கிடைக்கும்

பணத்தில் பாதியை உன் கோவில் உண்டியலில்
கணக்குச் செய்து போடுவேன்; இப்போதே உதவு!'

பாங்காகப் பறந்து வந்து விழுந்தது, ஐநூறு ரூபாய்,
எங்கிருந்தோ செய்த மாயம் போல; வியந்தான்!

நொடியில் அதைத் தாவி எடுத்துக்கொண்டு, மறு
நொடியில் வானத்தை நோக்கிக் கையைக் காட்டி,

'ஆண்டவனே! நீயும் சாமர்த்தியசாலிதான்! நான்
வேண்டியபடிப் பாதிப் பணம் போடவே மாட்டேன்

என்றே பயந்து, ஆயிரம் ரூபாய் தர எண்ணிய நீயும்,
இன்றே ஐநூறு எடுத்து, மீதியைக் கீழே போட்டாய்!

:hail: . . . :peace:
 
சரி பாதி தருவேன்!

river%252520ganga.jpg


தருமம் செய்வதை அறியாமலே வாழ்ந்த செல்வந்தர்,
கருமியாகக் காலம் கழித்ததால், மனம் வருந்தி, பாபம்

தொலைக்க வேண்டி, காசிக்குச் சென்று, தனக்கு முக்தி
கிடைக்கும் என்ற எண்ணத்தில், கங்கையில் குளித்திட,

பெரும் வெள்ளம் திடீரென்று பொங்கி எழ, எங்கே தமது
அரும் உயிரே போய்விடுமோ என்று ஓர் அச்சமும் எழ,

ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டவர், மிகப் பரிதவித்து,
ஆற்றோடு சென்றால், செல்வம் வீணாகுமே என்பதால்,

அந்த நொடியில் உயிர் மீது ஆசையும் பெருகிட, தமக்கு
எந்த சுகமும் வேண்டாம்; உலகில் வாழ்ந்தால் போதும்,

என்ற எண்ணம் மேலோங்க, இறைவனை நினைத்தார்.
'இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற, நீ ஒருவரை அனுப்பு!

யார் என்னைக் காப்பாற்றிவிட்டாலும், அவருக்கு எனது
பார் புகழ் செல்வத்தில், சரி பாதி அளிப்பேன்!' என்று கூற,

தன் கையை யாரோ பற்றுவதை உணர்ந்து, ஆனந்தித்து,
தன் விண்ணப்பத்தை ஆண்டவனும் ஏற்றதை உணர்ந்து,

'இறைவா! என் குறை தீர்க்க விழைந்தாயே! நிச்சயமாக,
குறையாது லக்ஷ ரூபாயை, இந்த உதவிக்கு அளிப்பேன்!'

என்று கூற, சில நிமிட நேரத்தில் கரை கண்ணில் தெரிய,
'இன்று எனக்கு உதவி செய்த இளைஞனுக்கு, கட்டாயம்

தருவேன் ஆயிரம் ரூபாய், ஆண்டவா!' என்று உரைத்து,
உருவினார் கரை சேர்ந்தபின், ஒரு நூறு ரூபாய் நோட்டு!

:help: . . . :madgrin:
 

போனால் போகட்டும்!

புடவைக் கடை ஒன்றிலே சேர்ந்தான்,
புதிதாக ஓர் இளைஞன், பணியாளாக!

சேலைகளை அடுக்குவான்; அவற்றின்
விலைகளைப் பார்த்துச் சொல்லுவான்.

முதலாளி மதியத்தில் சாப்பாட்டு நேரம்
முதலில் தான் தன் வீட்டிற்குப் போனார்.

சேலையின் விலைகளைப் பார்த்தபின்,
சேலையை விற்குமாறும் சொன்னார்.

ஆசையாய் ஒருவர் எடுத்த சேலையை,
மேசையில் வைத்து விலையைப் பார்க்க,

பதினாறு என எண் கண்ணில் பட, அவன்
பதினாறு ரூபாய்க்கே விற்றுவிட்டான்!

திரும்பிய முதலாளி இதைக் கேட்டதும்
திரும்பி முறைத்தார், கோபத் தீயுடன்!

'எங்காவது பதினாறு ரூபாய்க்கு சேலை
பாங்காகக் கிடைக்குமா? சீட்டில் நான்

எண் தொண்ணூற்றி ஒன்று என எழுத,
எண் பதினாறாகத் திருப்பிப் படித்தாய்!'

என்று கத்தியபின், நோட்டுப் புத்தகம்
ஒன்று எடுத்து நோக்கினார்; அதன் பின்

கூறினார், 'போனால் போகட்டும், விடு;
தேறியது, மூன்று ரூபாய் லாபம்தான்!'

:couch2:
 
Last edited:
சிரிப்போ சிரிப்பு!

எப்போதும் குறைகள் கண்டு, மனைவியைத்

தப்பாது திட்டும் கணவர் ஒருவர் இருந்தார்!

கணவன் - மனைவி என்றாலே, வாக்குவாதம்
கணக்காக வந்து சேரும், என்று அவர் எண்ண,

அடுத்த வீட்டில், எப்போதும் சிரிப்பைக் காது
கொடுத்துக் கேட்க, மிகவும் அதிசயித்தார்!

எப்போதும் தாம் சண்டை போட்டு இருந்திட,
எப்போதும் அவர்கள் எப்படிச் சிரிக்கின்றார்?

ஒரு முறையேனும், அந்த இல்லத்தரசனைச்
சிறு சந்திப்பில் கண்டு, அறிய விழைந்தார்!

வந்தது சந்தர்ப்பம் ஒன்றும் விரைவிலே;
வந்தார் அந்த இல்லத்தரசர், வீதி வழியே!

தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டவுடனே,
தன் சிரிப்பை அடக்காது, அவர் சொன்னார்,

'மிகவும் எளிது இது! ஒவ்வொரு முறையும்,
மிகவும் கோபமாக நான் சொல்லுவதற்கு,

எறிவாள் என் மீது, கையில் கிடைத்ததை!
குறி தவறாது என் மேல் பட்டால், மகிழ்ந்து

அவள் சிரிப்பாள்; ஆனால் தவறிவிட்டால்,
அவளைப் பார்த்து, நான் உடனே சிரிப்பேன்!'

:fish: . . .
:bump2:
 

Latest posts

Latest ads

Back
Top