• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Smt Raji Ram,

Sorry for the interruption...

I hapened to read the following couplets in a blog ( written by Kovi Kannan)- it is an old post in the blog. I found it interesting...


மரம் வளர்ப்போம் !

அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'

குக்கர் விசில் !

குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !

hope it may interest you also....

If it triggers some more new lines from you...!!! well.


Greetings


(PS: another poem by this writer on Father and posted on Father's day 2007 ,I have copied into thread on Fathers" Day.)
 
Hi S K Sir,

Those are cute verses! Thanks for sharing.

I wrote about 'saving the trees' in a little longer pudhukkavithai form..

Here it is:


மரங்களைக் காப்போம்!


நாட்டு மக்களுக்கு

மரங்களைக் காக்கும்படி

வேண்டுகோள் விடுக்க

நோட்டீஸ் அடித்து

விளம்பரம்;

பலகைகளில் எழுதி

விளம்பரம்;

காலியானது

ஒரு சின்னக் காடு!

Regards,
Raji Ram
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 293

பயனில்லாச் செல்வம்...


செல்வம் என்பது செல்லும் தன்மை உடையது ஆகும்;
செல்வம் சேர்த்தவர், அதைப் பயன்படுத்த வேண்டாமா?

ஆசை மிகப் பெருகி, பெரும் செல்வம் சேர்த்தும், அதை
ஆசை தீர அனுபவிக்காமல், எந்த ஈதலும் செய்யாமல்,

ஒருவன் இறந்தான் என்றால், அவனது செல்வத்தினால்,
ஒரு பயனும் இல்லை அல்லவா? இதையே வள்ளுவர்,

'வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்' என்ற குறளில் கூறுகிறார்.

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன் செல்வத்தாலே
யாவற்றையும் பெறலாம் என்று, எப்போதும் அதனைப்

பற்றுபவன், எந்தச் சிறப்பும் இல்லா இழி பிறவியே என,
சற்றும் ஐயமின்றி அறிவுறுத்துகிறார், திருவள்ளுவர்.

'பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு', என்பது குறட்பா.

பொருள் சேர்த்தவர், ஈகை செய்து உதவுவது ஒன்றே
அருள் சேர்க்கும் வழி என்று, நாமும் அறிந்திடுவோம்!

:grouphug: . . . :thumb:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 294

செல்வத்தில் நாட்டம் ...


தனக்குப் புகழ் தரும் நல்ல செயல்களைச் செய்ய,
தான் சேமித்த செல்வத்தைப் பயன்படுத்தாமல்,

மேலும் செல்வம் சேர்ப்பதே, தன் குறிக்கோளாக
வாழும் ஒருவன், பூமிக்குப் பாரமே என்கின்றார்.

'ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை'; இது குறள்.

வாழ்வில் ஒருவர் புரியும் நற்செயல்களே, அவர்
வாழ்வு முடிந்த பின்னும், பெருமையைத் தரும்.

நற்செயல்கள் புரியாது, யாராலும் விரும்பப்படாது,
அற்ப வாழ்வு வாழ்ந்தால், மிஞ்சுவது ஏதுமில்லை.

'எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்', என்று கேள்வியால் அறிவுரை!

மற்றவர்களுக்கு ஈயாமல், தனக்காகவும் எடுக்காமல்,
கற்றையாகக் கோடிகள் சேர்த்தால், அச்செல்வத்தால்,

எந்தப் பயனுமே இல்லை என்பதை, அடுத்த குறளில்,
இந்த உலகினருக்கு எடுத்துச் சொல்லுகிறார், அவர்.

'கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்', என்பது ஓர் எச்சரிக்கை.

எத்தனை செல்வம் சேர்த்தாலும், பூட்டி வைத்தால்,
அத்தனையும் வீணாகவே போகும் என அறிவோம்!

:popcorn: . . .
:lock1:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 295

ஈயாதான் செல்வம்...

உதவி வேண்டுகின்ற மக்களுக்குச் சேவை செய்வதற்கு
உதவ வராத செல்வத்தால், ஒரு பயனுமே கிடையாது!

தானும் அனுபவிக்காமல், உதவத் தக்கவருக்கு அளிக்கத்
தன் உதவிக் கரம் நீட்டாமல், சேர்த்த பெருஞ்செல்வத்தை

சேமித்து வைத்துக் காப்பவன் இருந்தால், அவனே, தான்
சேமித்த செல்வத்தைப் பீடித்த நோய் ஆவான், என்கிறார்!

'ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்', என்பது அவரின் குறட்பா ஆகும்.

அழகிய மங்கை இருந்தால், அவள் மணம் செய்துகொண்டு,
அழகாய்க் குடும்பம் நடத்த வேண்டும்; அவ்வாறு இல்லாது,

அவள் தன் வாழ்வு முழுவதையும், தனிமையில் கழித்தால்,
அவள் அழகால், யாருக்கும் பயனிலாது போகும்; அதுபோல்,

வறியவருக்கு எதுவும் ஈயாதவனின் பெருஞ் செல்வமும்,
பெரிய பயன் எதுவும் இல்லாமல், வீணாகவே போய்விடும்.

'அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று', என்பது அந்தக் குறள்.

செல்வத்தைச் சேர்க்க முயன்று சேர்த்தாலும், வள்ளுவர்
சொல்வதை அறிந்து, எளியோர்க்கு உதவ முனைவோம்!

:help:
 

'அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்


பெற்றாள் தமியள்மூத் தற்று',



இந்தக் குறட்பாவில், பெண்கள் தமியளாக இருப்பது வீண்

என்பதுபோல, வள்ளுவர் உரைக்கின்றார்! அவரது இந்தக் கருத்து

என்னைக் கொஞ்சம் குழப்புகிறது! அழகிய எத்தனையோ பெண்கள்

திருமண பந்தத்தில் சிக்காமல் சாதிக்கவில்லையா? திருமணம்

அவள் செய்யாவிட்டால், அழகிய மனைவி என்று ஒருவனால்

பெருமை பேச முடியாது; அழகான அம்மா என்று குழந்தைகள் கூற

முடியாது! ஆனால் அழகான மகள் / சகோதரி / தோழி என்று பலரும்

போற்ற முடியுமே!


:cheer2:
 
அழகான மகள் / சகோதரி / தோழி என்று பலரும்

அழகான மகள் சகோதரி என்று போற்ற முடியுமே
 

'அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்


பெற்றாள் தமியள்மூத் தற்று',



இந்தக் குறட்பாவில், பெண்கள் தமியளாக இருப்பது வீண்

என்பதுபோல, வள்ளுவர் உரைக்கின்றார்! அவரது இந்தக் கருத்து

என்னைக் கொஞ்சம் குழப்புகிறது! அழகிய எத்தனையோ பெண்கள்

திருமண பந்தத்தில் சிக்காமல் சாதிக்கவில்லையா? திருமணம்

அவள் செய்யாவிட்டால், அழகிய மனைவி என்று ஒருவனால்

பெருமை பேச முடியாது; அழகான அம்மா என்று குழந்தைகள் கூற

முடியாது! ஆனால் அழகான மகள் / சகோதரி / தோழி என்று பலரும்

போற்ற முடியுமே!


:cheer2:

அன்பு சகோதரி ராஜி ராம் அவர்களின் கேள்விக்கு
அய்யன் திருவள்ளுவரின் இந்த குறளையே பதிலாக
தருகிறேன்.


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


நன்றி.
 
அன்பு சகோதரி ராஜி ராம் அவர்களின் கேள்விக்கு
அய்யன் திருவள்ளுவரின் இந்த குறளையே பதிலாக
தருகிறேன்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

நன்றி.

ஓ! அப்படி வருகிறீர்களா? மிகவும் சரி! :fish2:
 
கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

எத்தனை ஆண்டுகள் உலகில் வாழ்வது? - என
சித்தனைக் கேட்டாலும் இயம்ப இயலாது!

சுகமாக உடல் நலம் காத்து வரும் ஒருவரை
சுமையாக எவரும் எண்ணத் துணிவதில்லை!

முற் பிறவி மீது நம்பிக்கை இல்லாதோரும் - அதை
இப்பிறவியில் சிலர் படும் பாடு கண்டு நம்பிடுவர்!

எடுத்த இப்பிறவியில் நலம் பல புரிய வேண்டும் - அதனால்
அடுத்த பிறவியில் எளிதாய்க் கடைத்தேற வழி தோன்றும்!

எண்பதைத் தாண்டினாலும், சருகு போல் காய்ந்தாலும்
எண்ணுவதில்லை மருத்துவர், சுவர்க்கம் அனுப்புவதற்கு!

மூச்சுத் தடைபட்டுத் தொண்டையில் கடைந்தாலும் - தன்

பேச்சுத் திறமையால் 'வென்டிலேடரில்' வைத்திடுவார்!

எக்காரணமேனும் காட்டி 'ட்ரெகியாக்டமி' செய்திடுவார்!
அக்கா பட்சி போல மனிதரை மாற்றிடுவார்!

உணவு உட்கொள்ள வழியின்றிச் செய்திடுவார்;
உணவு செல்ல மூக்கில் குழாய்தனைச் சொருகிடுவார்!

தான் பெற்ற அத்தனை 'மிஷினிலும்' ஏற்றி இறக்கிடுவார்!
'ஏன்?' - என்று கேட்கவே கூடாது என்றிடுவார்!

கடின உழைப்பால் சேமித்ததில் பெரும்பகுதி போனபின்,
'கடினமே காப்பாற்றுவது' எனக் கூறிக் கைவிரிப்பார்!

'மண்ணாசையால் உயிர் ஊசலாடுகிறது' - எனக்கூறி
மண் கரைத்து வாயில் ஊற்றும் வழக்கமாம் முன்பு!

'இது என்ன கருணைக்கொலையா?' - என்று நான்
இது பற்றி அறிந்த நாள் வருந்தியது நிஜமே!

மருத்துவத்தின் மேம்பாட்டால் மனிதர் படும் பாடு கண்டு - அக்
கருத்து இன்று மாறிவிடத் தோன்றுவதும் நிஜமே!!

சிறந்த பட்டி மன்றத்தலைப்பு ஒன்று கிடைத்தது இன்று;
'சிறப்பான மருத்துவம் கொள்ளையா? இல்லையா?' என்று!

:argue:

(ஒரு முதியவரைப் பல நாட்கள் 'ஐ.சி.யு' - வில் வைத்தபோது தோன்றியது)
 
கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!


''........'மண்ணாசையால் உயிர் ஊசலாடுகிறது' - எனக்கூறி
மண் கரைத்து வாயில் ஊற்றும் வழக்கமாம் முன்பு!

'இது என்ன கருணைக்கொலையா?' - என்று நான்
இது பற்றி அறிந்த நாள் வருந்தியது நிஜமே!

மருத்துவத்தின் மேம்பாட்டால் மனிதர் படும் பாடு கண்டு - அக்
கருத்து இன்று மாறிவிடத் தோன்றுவதும் நிஜமே!!

சிறந்த பட்டி மன்றத்தலைப்பு ஒன்று கிடைத்தது இன்று;
'சிறப்பான மருத்துவம் கொள்ளையா? இல்லையா?' என்று!

:argue:

(ஒரு முதியவரைப் பல நாட்கள் 'ஐ.சி.யு' - வில் வைத்தபோது தோன்றியது)

நான் இரசிக்கும் ஒரு சில எழுத்துக்களில்
உங்கள் எழுத்தும் ஒன்று ..நன்றி
 
தாங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி, ண்முகம் சார்!
 
மீண்டும் வருவேன்!

ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்து,
திருமணம் செய்து கொண்டனர், இருவர்.

இனிய வாழ்வின் பரிசாக வந்தது, சின்னஞ்
சிறிய மழலையும், மகிழ்வைக் கொடுத்திட.

பழகப் பழகப் பாலும் புளிப்பதைப் போலவே,
அழகான வாழ்வில், வந்துவிட்டது விரிசல்.

கணவன் சென்றான், நீதி மன்றத்தை நாடி;
கணமும் அவளுடன் வாழமாட்டேன், என!

அவனது போக்கும் கொஞ்சமும் பிடிக்காது,
அவனைப் பிரிந்திட விழைந்தாள், அவளும்!

கனம் கோர்ட்டாரும், பரிசீலித்தனர்; பிறகு,
கனத்த மனத்துடன் தந்துவிட்டனர், பிரிவு!

சொத்தைச் சரிசமமாகப் பிரித்து, அவளிடம்
ஒற்றைப் பிள்ளையைத் தந்திட, உரைத்தாள்,

'பிள்ளை வளர்க்கும் கடினமான
வேலையை,

தள்ளுவீர்களா என்னிடம் மட்டுமே, நீங்கள்?

அவனுக்கும் ஒரு பிள்ளையைத் தந்துவிட்டு,
அவனுக்கும் கஷ்டம் கொடுக்க வேண்டுமே!

அடுத்த ஆண்டே நான் மீண்டும் வருவேன்;
அடுத்த பிள்ளையும் அதற்குள் பெறுவேன்!'

:decision: . . . . . :baby:
 
பொறுமையின் எல்லை!

புதிதாகத் திருமணம் செய்த பெண் தனது

புதிய வாழ்வை இனிமையாக்க விழைந்து,

கணவனின் அன்னையை, எந்த நாளிலும்
கணமும் எதிர்க்காது, நல்ல பெயர் எடுக்க

உறுதி பூண்டாள்; கணவனும் அவளுடைய
உறுதி கண்டு மனம் மகிழ்ந்தான்; ஆனால்,

அன்னையோ, அவளைச் சீண்டிக்கொண்டே,
தன்னுடைய நேரத்தைக் கழித்து வந்தாள்.

ஒரு நாள் மருமகளைச் சீண்டி மகிழ்ந்திட,
ஒரு கேள்வியை ஆரம்பித்து வைத்தாள்.

'நான் உட்கார்ந்தால்?' என அவளைக் கேட்க,
'நான் நிற்பேன் அம்மா' என அவள் பதில் தர,

மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுக்க
வேண்டும் என்று விரும்பி, தொடர்ந்தாள்:

'நான் சோபாவிலே உட்கார்ந்தால்?'
'நான் சேரில் உட்காருவேன் அம்மா!'

'நான் சேரிலே அமர்ந்துவிட்டால்?'
'நான் ஸ்டூலில் அமருவேன் அம்மா!'

'நான் ஸ்டூலிலே அமர்ந்துவிட்டால்?'
'நான் பலகையில் அமருவேன் அம்மா!'

'நான் பலகையிலே அமர்ந்துவிட்டால்?'
'நான் தரையில் அமருவேன் அம்மா!'

'நான் தரையிலே அமர்ந்துவிட்டால்?'
'நான் தரையில் குழி தோண்டி அமருவேன்!'

பொறுமை சோதிக்கப்பட்டதால், அவளும்
அருமையாக 'அம்மா' என்பதை விடுத்தாள்!

அத்துடன் நிறுத்தாத அம்மா சிரிப்புடன்,
அடுத்ததாகக் கேட்டாள் ஒரு கேள்வியை!

'நான் குழிக்குள்ளே உட்கார்ந்துவிட்டால்?'
'நான் குழியை மண்ணால் மூடிவிடுவேன்!'

:rip:

 
ஐஸ் பெட்டி to ஐஸ் பெட்டி!

நான் சொல்லவில்லை இதனை;
நான் கேட்டேன் சொற்பொழிவில்!

வாழ்க்கை மாறுகிறது இக்காலத்தில்;
வாழ்க்கையில் வருகிறது சோம்பல்!

ஒரே நாள் நிறைய சமைத்துவிட்டு,
அதே உண்கின்றார், வாரம் முழுதும்!

அதுதான் பெட்டிகளில் போடுதல்;
அது பற்றிய விளக்கம் இதுதான்!

மிஞ்சிய உணவு, ஐஸ் பெட்டியில்;
கொஞ்சம் எடுத்து, சூடாக்கி உண்ண,

போகும் microwave பெட்டியில்; பின்,
போகும் நம் வயிற்றுப் பெட்டியில்!

இந்த மூன்று பெட்டிப் பரிமாற்றம்,
எந்த முடிவைத் தரும் தெரியுமா?

நீண்ட ஆயுள் வாழ விடாது, ஆறடி
நீண்ட ஐஸ் பெட்டியில் தள்ளிடும்!


:hungry: . . . :rip:
 
Last edited:
மிஞ்சிய உணவு


''........மிஞ்சிய உணவு, ஐஸ் பெட்டியில்;
கொஞ்சம் எடுத்து, சூடாக்கி உண்ண,
.........................''
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு ,
fridge இல் இருந்து எடுத்து electric oven (baking oven)
இல் வைத்தோ அல்லது microwave ஓவன் நீக்கி மற்ற
அடுப்பில் வைத்து உணவினை சூடாக்கி உண்ணலாமே ?




 
Last edited:

..........
fridge இல் இருந்து எடுத்து electric oven (baking oven)
இல் வைத்தோ அல்லது microwave ஓவன் நீக்கி மற்ற
அடுப்பில் வைத்து உணவினை சூடாக்கி உண்ணலாமே ?
The shortest route to the 6 feet ice box is to use the microwave oven!!
 
எச்சரிக்கையோ அது?

எப்போதும்போல எழுத்து வேலைகள் முடிந்துவிட,

அப்போது உறங்கச் செல்ல எண்ணும்போது, என்

கணினி திடீரென CRASH ஆனது! இங்கு எனக்கோ
கணினி ஒரு நண்பிபோல் ஆகிவிட்டது! மீண்டும்

வேறு புதிது எனக்கென வாங்குவதாக எம் மகன்
சிறு உற்சாக வார்த்தை சொல்லியும், என் மனம்

அபசகுனமாக இதை எண்ணியது; அடுத்தநாள்
அபசகுனம் நிஜமானது! காலை நடைப்பயிற்சி

செய்யச் சென்ற என்னவரை, ஒரு 'வேன்' இடித்து,
செய்யும் தினசரி வேலைகளையே மாற்றியது!

என்னால் இரு வாரங்கள் எழுத முடியாதென,
என் இறைவன் கொடுத்த எச்சரிக்கையோ அது?

:ballchain:
 
பிரச்சனை இல்லை!

தமது வாழ்வில் பிரச்சனையே இல்லை என்பதையே

தமது கொள்கையாகக் கொண்டவர், எஸ்கிமோக்கள்!

அவர்களைக் கண்டு பொறாமைப்பட்ட கிராமத்தினர்,
அவர்களில் ஒருவனையேனும், தனக்குப் பிரச்சனை

என்று சொல்ல வைக்கவேண்டும் என்று சதி செய்து,
அன்று ஒரு நாள், ஒருவனின் கண்களைக் கட்டிவிட்டு,

மலை உச்சிக்குக் கொண்டு சென்றனராம்; பின்னர்
தலையும் நொறுக்கிடும் அதலபாதாளத்தைக் காட்டி,

'இப்போது உனக்குப் பிரச்சனையா?' எனக் கேட்டதும்,
'இப்போதும் எனக்குப் பிரச்சனையே இல்லை' என்றிட,

'பிரச்சனை உள்ளதை ஒப்புக் கொண்டால் விடுவோம்;
பிரச்சனை இல்லை என்றால் தள்ளுவோம்', எனக் கூற,

'நான் இறந்தால் ஏதும் அறியேன்; பிரச்சனை இல்லை!
நான் விடுதலை அடைந்தால், என் ஊரை அடைவேன்;

அங்கும் பிரச்சனை ஏதும் இல்லையே!' என்று உரைக்க,
தங்கள் மடமையை உணர்ந்தனர் கிராமத்தினர், நன்கு!

:sorry:
 
சிறந்த ஓவியர்!

best_artist.jpg


கலைகளில் ஆர்வமுள்ள அரசர் ஒருவர், ஓவியக்

கலைஞர்கள் மூவரை அரசவைக்கு அழைத்தார்.

எவர் தன் வண்ண ஓவியத்தை நன்கு வரைவாரோ,
அவர் பெறுவார் பெரும் பரிசும், தங்கக் காசுகளும்.

தப்பாக வரையும் ஓவியருக்குக் கடும் தண்டனை
தப்பாது கிடைத்திடும் என்பதையும் அறிவித்தார்.

ஓவியர்களுக்கு இது ஒரு கடினமான வேலை; அந்த
ஓவியரை அழைத்த அரசருக்கு, ஒரு கண் இல்லை!

முதல் ஓவியர் ஒற்றைக் கண்ணராக வரைந்திட,
முதல் மரியாதைக்குரிய அரசரும் மிகச் சினந்து,

குறையைக் காட்டி வரைந்த அந்த ஓவியரை, ஒரு
சிறையில் அடைத்துவிடவும் உத்தரவு போட்டார்.

இரண்டாம் ஓவியர், சாமர்த்தியமாக, அரசருடைய
இரண்டு கண்களும் நன்றாக இருக்குமாறு வரைய,

புகழ்ச்சி செய்ய வேண்டி, பொய்யாக வரைந்ததால்,
இகழ்ச்சி செய்து அந்த ஓவியரையும் தண்டித்தார்!

அடுத்த ஓவியர் அறிவாளி; இறைவன் அரசருக்குக்
கொடுத்த நல்ல கண் மட்டும் தெரியுமாறு, அரசரின்

பக்கவாட்டு ஓவியத்தை மிக அழகுறத் தீட்டினார்;
தக்க பரிசுகளும் கைநிறையப் பெற்று மகிழ்ந்தார்!

மற்றவரின் நல்லவை மட்டுமே நாம் காட்டினால்,
பெற்றிடுவோம் அவர்களின் அன்பினை என்றுமே!

:grouphug:
 
மாயக் குச்சிகள்!

பேரரசர் அக்பர் நகைகள் பல அணிவதற்குப்

பேராவல் கொண்டவர்; நாமும் அறிவோம்!

வைரம், வைடூரியம், மாணிக்கம் எனப் பல
வைத்திருந்தார், வித விதமான நகைகளாக.

பட்டுடையும், நகைகளும் தான் அணிந்திட
எட்டுப் பேர்களை நியமித்து வைத்திருந்தார்.

மிகப் பெரிய வைர மோதிரத்தில், என்றுமே
மிக ஆர்வம் கொண்டிருந்தார், அணிவதற்கு!

ஒருநாள் அலங்காரம் செய்யும் நேரத்திலே,
ஒரு நொடி அதிர்ந்து போனார்; அவருடைய

அழகிய வைர மோதிரம் காணாமற்போக,
பழகிய எவரோ எடுத்ததை அறிந்தார்; மிக

மதி நுட்பம் வாய்ந்த பீர்பல் வந்தால், அவர்
அதி வேகமாக திருடனைப் பிடிப்பார் என்று,

அரசரும் அவரிடம் சொல்ல, அலங்காரம்
அரசருக்குச் செய்யும் எட்டுப் பேர்களையும்

வரச் சொல்லி, அவர்களிடம் மாயக் குச்சிகள்
எனச் சொல்லி, ஒவ்வொன்றாய்க் கொடுத்து,

மறுநாள் திருடனை வகையாகப் பிடித்தார்;
எதனால் என்று அரசர் மிகவும் வியந்தார்!

மாயக் குச்சிகள் எனச்சொல்லித் தந்தவை
மாயம் இல்லாத வெறும் குச்சிகள்! இரவில்

திருடன் தொட்டது ஒரு அடி நீளும் என்று
ஒரு பொய் தான் சொன்னதால், திருடன்

தன் குச்சியை ஒரு அடி வெட்டிவிட்டான்!
தன் தவறால் நன்கு மாட்டிக்கொண்டான்!

:lock1: . :ballchain:
 
எப்படி வாழ்ந்தீர்கள்?

oldman.jpg


நீண்ட காலம் வாழ விரும்பிய ஒருவன், ஒரு

நீண்ட பயணம் செய்தான், இமய மலைக்கு;

நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் யோகிகள்,

கூறுவார் யோசனை, என்று நண்பன் சொல்ல!

அடிவாரத்திலேயே ஒரு யோகியைக் கண்டு,

நொடியில் ஆச்சரியித்தான்; அவர் வயது நூறு!

தனக்கு உள்ள ஆசையைக் கூறி, அவரிடமே

தனக்கு ஒரு வழியை அருளுமாறு வேண்டிட,

தான் பாதாம் கொட்டைகளை மட்டுமே உண்டு

தன் வாழ்வை நீட்டித்ததாகச் சொல்ல, மேலும்

கொஞ்சம் மலை மீது ஏறியவுடன் பார்த்ததில்,

நெஞ்சில் ஆச்சரியம் அதிகரிக்கக் கண்டான்.

அந்த யோகிக்கு வயது நூற்றி இருபது! அவர்

எந்த நாளும் கடலை மட்டும் உண்பதாகக் கூற,

இன்னும் கொஞ்சம் ஏறிச் செல்ல, அங்கு ஒரு

இன்னும் வயது முதிர்ந்த யோகியைக் கண்டு,

அவர் வயது அதிகமோ என நினைத்துக் கேட்க,

அவர் தன் வயது நூற்றி ஐம்பது என்று சொல்லி,

'ஆட்டுப் பாலைத் தவிர வேறு உணவு இல்லை,

கேட்டுக் கொள்', என்று உரைக்க, இன்னும் ஏறி,

அதிக உயரம் அடைந்து, அங்கு ஒருவர் மிகவும்

அதிக வயதாகத் தோற்றம் அளித்திட, இவனோ

இருநூறு வயதேனும் இவருக்கு இருக்கும் என்று
ஒருவாறு நிர்ணயித்து அவரிடம் வர, சுற்றிலும்

பல மது பாட்டில்கள், சிகரெட், கஞ்சா வகைகள்

பல கிடக்க, 'உங்கள் வயது இருநூறு இருக்குமே!

நாங்கள் தீய வழக்கமென ஒதுக்குவதை எல்லாம்

நீங்கள் கொண்டிருந்தும், எப்படி நீண்ட வாழ்வு?'

என்று வினவ, கோபக்கனல் பறந்திட உரைத்தார்,

'கொன்று விடுவேன் உன்னை! என் வயது முப்பது!'
:blah: . . :faint:
 
Last edited:
வள்ளுவம் உண்மையே!

baby.jpg


குழல் இனிது, யாழ் இனிது என்று கூறுவர்,

மழலைச் சொல் கேளாதவர் என்று கூறும்

வள்ளுவம், எத்துணை உண்மை என்பதை,
உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்தேன்!

மாடியில் உறங்கும் செல்லக் குழந்தைக்கு,
நொடியில் சென்று ஆறுதல் அளிக்க, இங்கு

ஒரு 'மானீட்டர்' வைப்பது வழக்கம்; அவள்
ஒரு குரல் கொடுத்தாலும், கீழே கேட்கும்!

என் நண்பி ஒருவர் அனுப்பிய பாடல்; குரல்
என் அருமை MS அம்மாவின் கந்தர்வக் குரல்!

'காற்றினிலே' என்று தொடங்கும் பாடலை,
காற்றில் நான் பரவவிட, அந்த 'லே' என்ற

நீண்ட கார்வையைக் கேட்ட பெண்ணரசி,
தாண்டி ஓடினாள், மாடிப் படிக்கட்டுகளில்!

கந்தர்வ கானம், அவளுக்குத் தன் செல்ல,
சுந்தரக் கிளியின் குரலாகக் கேட்டுள்ளது!

:baby: . . . :lalala:
 
Last edited:
சிறுவனின் சாதுரியம்!

chocolate jars.jpg



எத்தனை குறும்பு வீட்டில் செய்தாலும், வெளியே

அத்தனை விதங்களும் செய்யாத ஒரு சிறுவன்!

மிட்டாய்க் கடைக்கு அம்மாவுடன் சென்றபோது,
மிட்டாய் பாட்டில்களையே பார்த்து நின்றபோது,

பாட்டிலைத் திறந்த கடைக்காரர், சிறுவனிடம்,
பாட்டிலிலிருந்து அவனையே எடுக்கச் சொல்ல,

சிறுவன் மறுத்தபடியே நின்றான்; 'இக்காலத்தில்
சிறுவன் ஒருவன் இப்படியும் இருப்பானா?' எனத்

தன் வியப்பைக் காட்டிய கடைக்காரரும், தானே
தன் கையால் மிட்டாய்களை அள்ளி அளித்தபின்,

'இந்த நல்ல குணத்தை என்றும் தொடரணும்', என
அந்தச் சிறுவனிடம் சொல்லிச் சிரித்தார். மகிழ்ந்த

சிறுவனின் தாய், இல்லம் திரும்பும்போது மகனிடம்,
'இறுமாந்தேன் உன்னைப் பிள்ளையாகப் பெற', என

சொல்லிப் பெருமைப்பட, அவன் கூறினான், 'நானே
அள்ளி எடுத்தால், கொஞ்சம்தானே வரும் அம்மா?'

:angel: . . . :becky:
 

Latest posts

Latest ads

Back
Top