• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

நல்ல தம்பி!

தன்னைவிட மூத்தவன் அவனே என்று
அண்ணனிடம் பாசமுள்ள நல்ல தம்பி!

இருவரும் இணை பிரியாது வாழ்ந்திட,
பெரும் ஆசை உள்ள சிறந்த அன்னை.

பங்கு போட்டு வாழவேண்டுமெனத் தன்
அன்பு அம்மா சொன்னபடியே கேட்பான்!

ஒரு நாள் தந்தை தந்த பெரிய 'கேக்'கில்,
சிறு பகுதியையே அண்ணனுக்கு அளிக்க,

cake.jpg


அண்ணன் கூறினான், 'நான் பங்கிட்டால்,

திண்ணமாகப் பெரிய பகுதியை உனக்கே

அளிப்பேன்! ஆனால் நீ என்ன செய்தாய்?
அளித்தாய் எனக்குச் சின்னப் பகுதியை!'

ஒருவேளை பெரிய பகுதியை மனம் மாறி,
தருவானோ என எண்ண, தம்பி கூறினான்,

'நீ இப்படிச் செய்வாய் என்று தெரியுமே! இது
நீ பங்கிட்டதாக நான் எண்ணிய விளைவே!

:caked: .
:becky:
 
உதவும் கரங்கள்!

பாசமுள்ள அன்னை; அன்பு காட்டும் மனைவி;
நேசமுள்ள தங்கை; அதிருஷ்டசாலி அவனே!

காசு மிச்சம் செய்வதில் கில்லாடியும் அவனே;
லேசில் பணத்தை வீணடிக்க மாட்டான். தனது

தையல் கூலி மிச்சம் செய்திடும் எண்ணத்திலே,
தைத்த 'ரெடிமேட்', தள்ளுபடியில் வாங்குவான்!

ஒரு சமயம் தீபாவளித் தள்ளுபடியிலே , அந்தத்
திருநாளில் அணிய, ஒரு 'பான்ட்' வாங்கும்போது,

இடுப்பு அளவு சரியாக இருந்தது; ஆனால் அதை
உடுத்துபவன் ஆறேகால் அடி இருக்க வேண்டும்!

உயரம் இவனுக்கோ குறைவு! வீட்டில் 'பான்டின்'
உயரம் குறைக்க, யாரேனும் உதவுவாரே என்று,

பெண்கள் மூவரிடமும் கெஞ்சிக் கூத்தாடியும்,
தங்கள் வேலை காரணமாய், மூவரும் மறுக்க,

'தன் கையே தனக்கு உதவி', என எண்ணியவன்,
தன் 'பான்டை' எட்டு 'இன்ச்' வெட்டித் தைத்தான்!

எட்டு மணிக்குக் கரிசனத்துடன் தங்கை வந்து,
எட்டு 'இன்ச்' வெட்டித் தைத்துவிட்டுச் செல்ல,

தன் பங்கை, அம்மா ஒன்பது மணிக்குச் செய்து,
தன் மகன் மறுநாள் நன்றி கூறுவான், என மகிழ,

தூக்கக் கலக்கத்தில், மனைவியும் கனிவுடனே,
தூங்கும் முன், அதே பணியைத் தானும் செய்ய,

இறைவன் படத்தின் முன் வைத்த அந்தப் 'பான்ட்',
குறைந்து குறைந்து, ஒரு 'மைக்ரோ மினி' ஆனது!


mini%20pants.jpg


குறிப்பு: திண்டுக்கல் திரு. லியோனி கூறிய ஜோக்கிலிருந்து.... :laugh:
 
Dear Anandi,

So.... You have started reading this thread from the start! Cool........

I am sure you will enjoy many pages. Some with comedy and some with pathos!

Best wishes,
Raji Ram :ranger:
 
Dear Anandi,

So.... You have started reading this thread from the start! Cool........

I am sure you will enjoy many pages. Some with comedy and some with pathos!

Best wishes,
Raji Ram :ranger:
Oh Yes, Dear Raji Madam, whenever I get time, I go to the initial postings and start reading it.. very interesting... Fantastic Madam. Love Anandi
 
ஒரே ஜன்னல்...

glass window.jpg


மருத்துவமனை ஒன்று; முதியவர் இருவர்

கருத்துடன் கவனிக்கப்பட்டனர்; அவர்கள்

ஒரே அறையில் இருந்தும், அதில் ஒருவரே
ஒரே ஜன்னல் அருகில் படுத்திருந்தார். தான்

காணும் காட்சிகளை அருகிலுள்ளவருக்கு,
மேலும் அழகு மிளிர வர்ணிப்பார், தினமும்.

அதிகாலை செவ்வானத்தில் சூரியன் உதித்து,
அதிவேகமாய்த் தன் கிரணங்களைப் பரப்பும்.

மேகம் பற்பல வண்ணங்களில் உலவிவந்து,
தாகம் தணிக்கும் கார் மேகமாக மாறிவிடும்.

பெரிய குளம் இருக்கும்; அல்லி, தாமரைகள்
பெரியதாக மனம் மயக்கும்; பறவைகள் பல

பறக்கும்; வண்டிகள் பலவித ஒலியுடன், கீழே
இருக்கும் பெரிய தெருவில், வேகமாய் ஓடும்.

இவ்வாறே சில நாட்கள் சென்றுவிட, ஒருநாள்
இவ்வாறு வர்ணித்தவர், இறையடி எய்தினார்!

எத்தனை சிறந்த ஓர் உள்ளம் கொண்டவர் அவர்;
இத்தனை எளிதாய் முக்தி அடைந்தாரே என்று,

அடுத்த படுக்கைக்காரர் கூறி, அந்த ஜன்னலை
அடுத்த படுக்கையைத் தனக்குக் கேட்டார். பின்,

வெளியே நோக்கியவர் அதிர்ந்தார்; அங்கு ஒரு
வெளிறிய நிறத்தில் சுவர்தான் இருந்தது! வந்த

அதிர்ச்சியை மறைத்தவர், நர்ஸிடம் கேட்டார்,
'அதிசயக் காட்சிகளின் வர்ணனை, கேட்டேனே

அனுதினம் அவரிடம்; இங்கு சுவர்தான் உள்ளது!
அனுதினம் எப்படி அவர் என்னை மகிழ்வித்தார்?'

வந்த பதிலால், இன்னும் ஆச்சரியம் அடைந்தார்;
அந்த மனிதர் அந்தகராம்! தான் கேட்ட ஒலிகளை

மனத்தில் காட்சிகளாக மாற்றி, உடனிருப்பவரின்
மனத்தில் உற்சாகம் ஏற்படுத்தவே முயன்றாராம்!

மற்றவர்கள் மகிழ்ச்சியில், தான் மகிழும் இந்நிலை
பெற்றவர்கள், நமக்கு நல்ல முன்னோடிகள்தானே?

:first:


குறிப்பு: செந்தமிழ் அறியாதவருக்கு...


அந்தகர் என்றால் பார்வை இல்லாதவர்.





 
மாளிகை வாங்கலாம்!

big house.jpg


அழகிய மாளிகையின் எதிரில் அமைந்த
அழகிய பூங்காவிலே, ஒருவன் அமர்ந்து,

விலை உயர்ந்த சிகரெட்டுகள் ஊதியபடி,
அலை அலையாகப் புகை வளையம் விட,

தூரத்தில் இருந்து கண்ட பெரியவர், தக்க
நேரத்தில் புத்திமதி கூறிட மிக விழைந்து,

'இவ்வளவு ஊதுகின்றாயே! ஒரே நாளில்,
எவ்வளவு செலவாகுமோ?' என்று கேட்க,

'ஆயிரம் ரூபாய் ஆகும்; அவ்வளவுதானே!
ஆயிரம் செலவு; இன்பம் வரவு!' என்று கூற,

கடுப்பு மிகுந்தவர், புத்தி சொல்ல நினைத்து,
எடுத்து உரைத்தார், ஒரு கணக்கு அவனுக்கு!

'ஒரு நாளில் ஆயிரம் மிச்சம் செய்தால், நீயும்
ஒரு வருடத்தில் மூணரை லட்சத்திற்கு மேல்

பணத்தைச் சேமித்து, இருபது ஆண்டுகளில்,
பணக்காரக் கோடீஸ்வரனாகி, அதோ எதிரில்

தெரிகின்ற அழகு மாளிகையை வாங்கலாம்;
அறியாமல் இப்படிக் காசு வீணாக்குகிறாயே!'

என்று சொல்ல, அவன் சிரித்தபடி உரைத்தான்,
'ஒன்று கூறவா? அந்த அழகு மாளிகை எனதே!'

:peace:
 
சுகமாக வாழலாம்!

pond%20and%20stone.JPG


குளக்கரையில் ஒரு சிறுவன் கற்களைக்
குளத்தில் வீசி அடித்து, சிரித்து, ரசித்தான்!

வேறு வேலையே இல்லாதவன் போன்று
வெறுமே நேரம் போக்கியவனைக் கண்டு,

மனம் வெதும்பிய ஒரு பெரியவர், அவன்
மனம் மாறச் செய்ய விரும்பி, அவனருகே

வந்து, இவ்வாறு அறிவுரை ஆரம்பித்தார்!
'இந்த வாழ்வில், சுகமாய் வாழுகின்ற வழி

நான் கூறுகிறேன்; தம்பி! நீ நன்றாகப் படி!'
'நான் நன்றாகப் படித்தால்?' என்று கேட்க,

'நல்ல வேலை கிடைக்கும்!' எனச் சொல்ல,
'நல்ல வேலை கிடைத்தால்? எனக் கேட்க,

'நன்கு பணம் சேர்க்கலாம்!' என்று சொல்ல,
'நன்கு பணம் சேர்த்தால்?' என அவன் வினவ,

'நல்ல மனைவி வந்து, நன்மக்களைப் பெற்று,
நல்ல மனை வாங்கிச் சிறப்புறலாம்! என்றிட,

'இத்தனையும் செய்தால், என்ன கிடைக்கும்?'
'இத்தனையும் செய்தால், சுகமாக வாழலாம்!'

அப்போது பெரிதாகச் சிரித்து, அவன் கேட்டான்,
'இப்போதே நான் சுகமாகத்தானே வாழ்கிறேன்?'

:peace: . :peace:
 
மாயக் கூழாங்கல்!

soup.jpg



பிழைக்க வழிகள் அறிந்த, புத்திசாலி அவன்!
அழைக்காமல் ஒரு ஊருக்கு வந்துவிட்டான்.

பசி மிஞ்சிக் கண்கள் இருட்டிட, ஒரு வீட்டில்,
ருசி மிகுந்த உணவின் வாசனை எழுந்து வர,

அங்கு சென்று கதவைத் தட்ட, அது திறந்திட,
'இங்கு முதல் முறை வருகின்றேன், அம்மா!

என்னிடம் மாயக் கூழாங்கல் உள்ளது; மிக
உன்னதமான அதன் விலை, ஆயிரம் ரூபாய்!

தண்ணீரில் இட்டுக் கொதிக்கவிட்டால், ஒரு
தன்னிகரில்லா 'சூப்' கிடைக்கும்!' எனக் கூறி,

அந்தப் பெண்ணிடம் சிறிது தண்ணீர் கேட்க,
அந்தப் பெண் அதிசயித்தவாறு கொடுத்தாள்.

சில குச்சிகளை வைத்து, வெளியே தீ மூட்டி,
சின்னப் பாத்திரத்தில் நீரையும், கல்லையும்

உள்ளே இட்டவன், மீண்டும் அப் பெண்ணிடம்,
'உள்ளே ஒரு வெங்காயம் இருக்குமா?' என்று

கேட்டு வாங்கிக் கொண்டு, சில நிமிடங்களில்
கேட்டான் கொஞ்சம் உப்பும், இரு தக்காளியும்!

அவை கிடைக்க, 'மிளகு மட்டும் இல்லை!' என
அதை வாங்கிக் கொதிக்கவிட, சிறிது நேரத்தில்

மணக்கும் 'சூப்' வாசனை மூக்கைத் துளைத்திட,
'எனக்கும் அந்த மாயக்கல் வேண்டும்' என்றாள்,

தான் கொடுத்த பொருட்களைப் பற்றி எண்ணாத,
தான் 'அதி சமர்த்து' என எண்ணும், அந்தப் பெண்!

'நீங்கள் நல்லவராக இருப்பதால், நூறு குறைத்து
நீங்கள் தந்தால் போதும்!', என்று கூறிய அவனும்,

ஆயிரம் ரூபாய் 'மாயக் கூழாங்கல்லை'த் தொள்-
ளாயிரம் ரூபாய்க்கே விற்றுவிட்டுச் சென்றான்!

:dance::dance:
 
வள்ளுவத்தைத் தொடர முடியாமல், கொஞ்சம் தாமதம் ஆனது... :ballchain:
இனி அவர் பக்கமும் திரும்புவோம்! :ranger:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 296

செல்வத்தின் நிலை ...

நல்லவரிடம் சேரும் செல்வத்தின் நிலையையும்,
அல்லவரிடம் சேரும் செல்வத்தின் நிலையையும்,

தெள்ளத் தெளிவாக உரைக்க, இரு குறட்பாக்களை,
வள்ளுவர் அமைக்கிறார்; அவற்றைக் காண்போம்.

ஊர் நடுவே, நச்சு மரம் ஒன்றில் பழங்கள் இருந்தால்,
ஊர் மக்களுக்கு அதனால் ஒரு பயனுமே கிடையாது.

மக்கள் வெறுக்கிறவன் பெற்ற செல்வம், அதுபோல
மக்கள் நலத்திற்கு உதவாது, வீணாகப் போய்விடும்.

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று', என்பது குறள்.

சிறந்த உள்ளம் கொண்ட நல்லவரின் செல்வத்தில்
சிறிது வறுமையின் நிழல் பட்டாலும் கூட, அது

கைம்மாறு கருதாது பெய்திடும் வான் மழையே,
பொய்யாகிப் போனதுபோல் ஆகும், என்கின்றார்.

'சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து'.

நல்ல உள்ளம் இலாச் செல்வந்தரால், பயனில்லை;
நல்ல உள்ளம் கொண்டவர் செல்வமே, பயன் தரும்.

:angel: . . :grouphug:
 
Dear Anandi,
Thank you very much for your appreciation and affection. You load me with so many 'likes'. Thanks again! :grouphug:

Best wishes,
Raji Ram
 
மாளிகை வாங்கலாம்!..................

ஒரு ஜோக்கை உங்களுடன் பகிரவே வேண்டும்!

'மாளிகை வாங்கலாம்!' என்ற இந்த கவிதை பார்த்த ஒரு நண்பர், இல்லம் திரும்பும் அவசரத்தில்,

'மளிகை வாங்கலாம்' என்று படித்துவிட்டு, 'என்ன ஆயிற்று ராஜி ராமுக்கு? மளிகை வாங்க
ஒரு கவிதையா?' என்று வியந்து, பின் சரியாகப் படித்தாராம்!
:bump2:
 
ஒரு நாள் போதுமே!

globe.jpg


அரசர் அக்பருக்கு என்றுமே பெருமை, தன்

அரசவையில் அறிஞர் பலர் இருப்பதாலே!

ஒரு முறை அவர் இந்த உலகைப் பற்றிய
ஒரு விஷயத்தை அறிய விரும்பியதால்,

'ஒரு இடத்தில் புறப்பட்டு, இந்த உலகினை
ஒரு முறை சுற்றி வந்தால், மீண்டும் நாம்

புறப்பட்ட இடத்திற்கே வருவோமா?' என்று
எதிர்ப்பட்ட அறிஞர் பெருமக்களைக் கேட்க,

'உலகம் உருண்டையாக இருப்பதால், இந்த
உலகில் அது முடிய வேண்டும்; ஆனாலும்,

பல வருடங்கள் சுற்ற வேண்டும், அரசரே!'
என ஒரு அமைச்சர் கூற, இன்னொருவரோ,

'ஒரு ஆண்டில் சுற்றி வரலாம், ஆனாலும்
பெரும் செலவு செய்ய வேண்டும், மன்னா!'

என்று உரைக்க, மீண்டும் ஒருவர் எழுந்து,
'ஒன்று சொல்லிக் கேட்டுள்ளேன்! உலகை

எண்பது நாட்களில் சுற்றி வந்தார் ஒருவர்
என்பது, ஒரு சரித்திர நிகழ்ச்சியே!' என்றார்.

ஒன்றும் பேசாது இருந்த பீர்பலை நோக்கி,
'என்றும் பதில் கூறும் நீ என்ன கூறுகிறாய்?'

இவ்வாறு அரசர் கேட்க, பீர்பால் கூறினார்
இவ்வாறு, 'ஒரு நாள் போதுமே, பேரரசே!'

எல்லோரும் திகைத்து நின்றிட, உரைத்தார்,
'எல்லோரும் திகைக்க வேண்டாமே; நமது

வேகம், தினம் வானில் உலவும் சூரியனின்
வேகம் என்று கொண்டால், முடியும்தானே?'

:dance:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 297

நாணம் வேண்டும் ...

வெட்கம் பெண்களுக்கே உரித்தானது எனினும்,
வெட்கம் வரும் எல்லோருக்குமே என்கின்றார்.

தன் இழி செயலால் ஒருவருக்கு வரும் வெட்கம்,
பெண் ஒருத்திக்கு இயல்பாக வருவது போன்றதே!

'கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற', என்பது அக் குறள்.

உண்ணும் உணவு, உடுக்கும் உடை என்பவை
மண்ணில் மனிதருக்குப் பொதுவான தேவை;

பிறர் பழிக்கும் செயல்களைப் புரிய நாணுதல்,
சிறப்பான தேவை ஆகும், என்கின்றார் அவர்.

'ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு', என்பது குறள்.

ஊனுடன் இணைந்து உயிர் இருப்பது போல
நாணமுடன் இணைந்து மாண்பும் இருக்கும்.

'ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு', என்பது அவர் வாக்கு.

உலகம் பழிக்கும் செயல்கள் புரிய நாணுவோம்;
உலகம் புகழ, நல்வழியில் வாழ்ந்து சிறப்போம்!

:thumb:
 
உடைகளைப் பேணுவேன்!

'உன்னை உயிராக நினைக்கிறேன்' என்று,
உண்மை மறைத்த ஏமாற்றுக்காரன் அவன்!

உயிர் போலக் கணவனை நினைத்த அவள்!
உயிர் போகும் நிலையில் படுத்திருந்தாள்;

மிக இளவயதுக்காரி! அவன் மேல் கொண்ட
அகம் நிறை அன்பால், இவ்வாறு கூறினாள்,

'எனக்குப் பிறகு தனிமையில் வாடாதீர்கள்!
எனக்கு இணையான ஒருத்தியை மணந்து,

என் நினைவையும் மறக்காது வாழுங்கள்!
என் இன்னொரு வேண்டுகோள் இதுதான்.

நான் அணிந்த ஆடைகளும், எப்போதுமே
நான் வைத்த இடத்திலேயே இருக்கட்டும்.

அவளுக்குப் புதிதாக வாங்குங்கள்; இவை
அவளுக்கு அணியவே கொடுக்காதீர்கள்!'

மிகக் கவனமாகக் கேட்டவன், சொன்னான்
'மிகச் சரியே, அன்பே நீ சொன்னதெல்லாம்!

எப்படியும் உன் உடைகளைப் பேணுவேன்!
எப்படியும் என் 'அவளு'க்குப் பொருந்தாதே!'

:decision: . . :madgrin:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 298

தவறுக்கு நாணவேண்டும்...

தவறு செய்யாத மனிதர் இருக்க முடியாது; தாம் எந்தத்
தவறு செய்தாலும், நாணுவதுதான் சான்றோருக்கு ஒரு

அணிகலன் ஆகும்; இல்லையேல், அவரது பீடு நடையும்,
பிணிக்கு ஒப்பானதாகவே இருக்கும், என்கிறார் வள்ளுவர்.

'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை', என்பது அந்தக் குறட்பா ஆகும்.

நாணம் என்னும் பண்புக்கு உறைவிடமானவர் யாரெனில்,
நாணம் தன் தவறுக்கும், பிறர் தவறுக்கும் கொள்பவரே!

'பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு', என அவர் வாக்கு.

விந்தையான உ லகில், பாதுகாப்பாக எதையுமே கருதாது,
சிந்தையில் நாணமெனும் வேலியே கொள்வார் பெரியோர்.

'நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்', என்கிறார் திருவள்ளுவர்.

அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழைக்கு, நாணுவோம்;
அறிவோம், நாணமே சிறந்த பாதுகாப்பு வேலி என்பதையும்!

:decision:
 
புரியாத புதிர்!

'நாணுடைமை' என்ற அதிகாரம் அமைத்து, தவறுக்கு நாணம் கொள்ளுதலைச்

சிறப்பென உரைக்கின்றார் வள்ளுவர். அவரே


'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்' என்கிறார்!

இன்னா செய்வோர், அறியாது செய்தாலே இது நடக்கும். அறிந்துகொண்டே தீமை செய்வோர்,


நன்னயம் செய்தால் நாணுவாரோ? :noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 299

நாணம் உள்ளவரும் இல்லாதவரும்...

நாண உணர்வு உடையவர்கள், என்றேனும் தமது
மானம் கெடுகிற நிலைமை வந்துவிட்டால், தம்

உயிரை விட்டுவிடவும் துணிவார்களே, அல்லாது
உயிரைக் காத்திட மானத்தையே இழக்கமாட்டார்!

'நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்' என்று அந்தக் குறள்.

அறவழியில் நடப்பவர்கள், தாம் தவறு செய்தால்,
அறவழியில் தவறியதால், நாணம் அடைவார்கள்.

பிறர் நாணும் செயல்களைச் செய்துவிட்டு, அதற்கு
எவர் நாணாமல் இருக்கின்றாரோ, அவரை விட்டு,

அறமே வெட்கப்பட்டு விலகிடும், என்று குறளால்
அறநெறி காட்டும் திருவள்ளுவர் உரைக்கின்றார்.

'பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து', என்பது குறள்.

உலகம் பழியெனக் கருதும் செயல்களுக்கு நாணி,
உலகில் உயர்வான வாழ்வை நடத்திச் சிறப்போம்!

:peace:
 
அவரைக் கேட்பேன்!

மிக வறுமையில் வாடிய ஏழை ஒருவன்,
மிகப் புகழ் பெற்ற வள்ளல் பற்றிக் கேட்டு,

தன் வறுமை நீங்க, அவரிடம் உதவி கேட்க,
தன் வீட்டிலிருந்து புறப்பட்டான். வழியில்,

அந்த வள்ளல் மிக நல்லவர் என்றும், அவர்
எந்த நேரத்திலும் தன்னைக் காணவிடுவார்

என்றும் அறிந்து, கொடுக்கும் செல்வத்தால்,
என்றும் தன் துயரம் தீருமென நினைத்தான்!

தனது பூஜை அறையிலே அமர்ந்த வள்ளல்,
தனது இரண்டு கரங்களையும் ஏந்தியபடியே,

இறைவனை நினைத்து உருகியபடி, எந்தக்
குறையும் இல்லாத வாழ்வுக்கு வேண்டிட,

அந்த நேரத்திலே, வள்ளல் வீட்டின் உள்ளே
வந்த ஏழை, இந்தக் காட்சியைக் கண்டான்!

'உங்களிடம் கையேந்திட வந்தால், இங்கே
நீங்களே கையேந்துகின்றீர், இறைவனிடம்!

பிச்சை கேட்கும் உங்களிடம் வந்துவிட்டுப்
பிச்சை கேட்டு நிற்கும் முட்டாள்தான் நான்!

எவரைக் கேட்க வேண்டுமோ, நானும் போய்
அவரைக் கேட்பேன்!' எனக் கூறிச் சென்றான்!

:bump2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 300

நாணம் இல்லையேல்!

நல்ல வாழ்வு வாழ வேண்டுமாயின் நமக்கு,
நல்ல கொள்கைகள் வேண்டும். அவ்விதம்

கொண்ட கொள்கைகளில் தவறினால், நாம்
வந்த குலத்திற்கே இழுக்கு நேர்ந்துவிடும்.

நாணம் இல்லாது உலகு பழிக்கும் செயலை
நாமும் செய்தால், நலமெலாம் கெட்டுவிடும்.

'குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை', என்று எச்சரிக்கை!

'நாண்' எனின் நாணம், கயிறு என்ற பொருட்கள்
நாம் அறிவோம்! இதை வைத்து, அழகிய குறள்!

உயிர் இல்லாத மரப் பாவைகளைக் நாண் கட்டி,
உயிர் உள்ளதுபோல இயங்கச் செய்வது உண்டு!

நாணம் என்னும் பண்பு இல்லாது இயங்குவோர்,
நாணால் கட்டிய மரப்பாவையை ஒத்தவராவர்.

அவர்கள் உயிருடன் உலகில் உலவுதலே, வீண்;
அவர்கள் மனித உணர்வு இல்லாத பாவைகளே!

'நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று', எனக் குறள்.

பழிச் செயல்களுக்கு நாணம் கொண்டு, குலம்
இழிச் சொல் கேளாதவாறு, உலகில் உய்வோம்!

:peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 301

குடியைக் காத்தல் .....

நாட்டை ஆளும் மன்னனுக்கு என உரைத்தது,
வீட்டை ஆளும் ஒருவனுக்கும் ஏற்புடையதே!

வீடு நலம் பெற எல்லோரும் முயன்றாலே,
நாடு நலம் பெறும் என்பதை உணர்த்துமாறு,

அடுத்த அதிகாரம் அமைத்து, நல்ல அறிவுரை
எடுத்துக் கூறுகிறார், வள்ளுவப் பெருந்தகை!

உரிய நேரத்தில் சோம்பல் கொள்ளாமல் யார்
உயரிய முயற்சிகள் புரிகிறாரோ, அவருக்குக்

கிடைக்கும் பெருமைக்கு இணையாக எதுவும்
கிடைக்காது உலகில் என்கிறார் தம் குறளில்!

'கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்', என்பது குறட்பா.

விடா முயற்சி, ஆழ்ந்த அறிவு இவ்விரண்டுடன்
விடாது உழைப்பவனின் குடி பெருமை பெறும்.

'ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி', என்பது அறிவுரை.

நாட்டின் அரசன், இல்லத்தரசன் இருவருக்கும்,
ஏட்டில் எழுதிய ஒரே அதிகாரம் பொருந்துமே!

:ranger:
 

குடிமக்கள் என்பதை இக்கால அரசு அனர்த்தம் செய்துகொண்டதோ, என்னமோ!

தமிழ் நாட்டில் எங்கு நோக்கினும் 'டாஸ்மாக்' கடைகள். பள்ளிச் சிறுவரும் 'குடி'

மக்களாக மாறும் விந்தை, சிங்காரச் சென்னையில் காணலாம்!

:bowl: . . . :tsk:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 302

கிடைக்கும் பலன்கள்...

தன் குடி மக்கள் உயர்வு பெற்றிட முயல்பவனை,
தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு உதவிட,

தெய்வச் செயலும் விரைந்து வரும் என்பதைத்
தெய்வப் புலவர் திருவள்ளுவர் உரைக்கின்றார்.

'குடிசெய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்', என்பது குறள்.

குடி மக்களைக் காப்பது என்ற பணியை, எந்த
மடியும் இல்லாது உடனே செய்தல் வேண்டும்.

காலம் தாழ்த்தாது குடியை உயர்த்துவோருக்கு,
ஞாலம் போற்றும் வெற்றிகள், தாமே குவியும்!

'சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு', என்று கூறுகிறார்.

குற்றம் இல்லதவனாகக் குடியை உயர்த்திடச்
சற்றும் தயங்காது உழைப்பவனை, என்றுமே

உலக மக்கள் உறவாக எண்ணிச் சூழுவர், என
உலகப் பொதுமறையில் வள்ளுவர் கூறுகிறார்!

'குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு', என்பதே அறிவுரை!

அரசன் ஆயினும், இல்லத்தரசன் ஆயினும், தம்
அருகில் உள்ளோரைக் காத்தால், உயருவார்!

:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 303

நல்லாண்மை...

பிறந்த குடியை ஆளும் தன்மை உடையவர்தான்
சிறந்த நல்லாண்மை படைத்தவர் எனப்படுவார்.

ஆளும் தன்மை உள்ளவர், தம்முடைய சுற்றத்தை
நாளும் மேன்மையுறச் செய்திட உழைத்திடுவார்.

'நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்', என்பது குறள்.

போர் புரியும் களத்தில், பயிற்சியுள்ள வல்லவரே,
போர் வீரரை நடைத்தும் தலைவராவர். அதுபோல்,

வல்லமை படைத்தவரால்தான், தம் குடிமக்களை,
நல்ல முறையில் காத்து, உயரச் செய்திட முடியும்.

'அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை', என்று ஒப்புமை.

தம் மீது வரும் இழிவான தாக்குதலால் கலங்கித்
தம் நேரம் நன்றாக இருக்கக் காத்திருப்பவர், தம்

மனம் கலங்குவதாலும், காலம் கடத்துவதாலும்,
நலம் புரியாது தம் குடிமக்களைச் சீர் குலைப்பர்.

'குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்', என்பது எச்சரிக்கை.

காலத்தில் செய்யும் எந்தச் செயலும் உயர்ந்தது;
ஞாலத்தில் இதை அறிந்து சிறப்புற வாழ்வோம்.

:first:
 

Latest posts

Latest ads

Back
Top