• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

............மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே?

நிஜம்தான்! ஆனால், கணவன் அமைவதோ?

ஒரு ஜோக் நினைவு வருகிறது! 'சிங்' சென்னையில், பாடத் தெரிந்த பெண்களின் பெற்றோர்,
'ரகுநாதன் போன்ற மாப்பிள்ளை வேண்டும்!' என்று தேடி அலைவதாகக் கேள்வி!! :fish2:


குறிப்பு: திரு. ரகுநாதன், நட்சத்திரப் பாடகி திருமதி. சுதாவின் கணவர்.
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 313

செலவு செய்யப் பொருள் இல்லாது, சிலர் உள்ளதால்,
'இரவு' எனும் அதிகாரத்தை வள்ளுவர் அமைத்தாரோ?

கொடுப்பதற்குப் பொருள் இருந்தும், கேட்பாரிடம் தாம்
கொடுக்காமல், மறைத்து வைப்பார் சிலர். அது போல

மறைத்தால் அது இரந்து கேட்டவருக்குப் பழியே அல்ல;
மறைத்துக் கொடுக்காதவருக்கே பழியாகும் என்கிறார்.

'இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று', என்பது குறள்.

இரந்து ஒருவரிடம் பொருள் கேட்பது மிகக் கொடியது;
இரப்பவருக்குக் கொடுக்க மனமில்லாததும் கொடியது.

இரப்பவரும், கொடுப்பவரும் வருந்தாது கிடைக்குமாயின்,
இரந்து பெற்ற பொருள்கூட, மகிழ்ச்சியையே கொடுக்கும்!

'இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்', என்கிறார் அவர்.

கொடுக்கப் பொருள் இருந்தால், இல்லாதவருக்கு உதவக்
கொடுத்து, அதனால் மன நிறைவைப் பெற முயல்வோம்!

:grouphug:
 
ஔவையார் தன் நல்வழி என்ற நூலில் உரைத்துள்ளார்:


'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்


நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்


இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்


பட்டாங்கில் உள்ள படி.'


நாம் உதவி செய்து, பெரியோராக இருக்க முயலுவோம்! :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 314

ஈவோரின் பெருமை...

தம் ஈட்டிய பொருளை, மறைத்து வைத்துக் காத்திடாது,
தம் கடமை உதவுவது என அறிந்த நல்லவரிடம் சென்று,

வறுமையின் காரணமாக இரப்பதும், இழிவு அன்று; அது
பெருமையே ஆகும் என, ஈவோர் பெருமை கூறுகின்றார்!

'கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்னின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து', என்பது குறட்பா.

இல்லையென்று கனவிலும்கூடக் கூறாத நல்லவரிடம்,
இல்லையென்று இரப்பதும், ஈவது போன்ற பெருமையே!

'இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு'.

உள்ளதை இல்லையென்று மறைக்காதவர் இருப்பதால்,
உள்ளவரை நாடிச் சென்று, இரப்பவர் உலகில் உள்ளார்!

'கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது', என்பது அவரது வாக்கு.

மறைக்காமல் ஈந்து உவப்போர் இருப்பதால், இரப்பதும்
நிறைவான இன்பத்தைக் கொடுக்க முடியும்; உண்மை!

:target: . . . :dance:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 315

இரப்போரின் துன்பம் தீரும்...

இரப்பது மிகவும் இழிநிலையே ஆகும். தம் பொருளைக்
கரவாது, உதவிடும் உள்ளங்களால் அந்நிலை மாறிடும்.

இருப்பதைக் கொடுக்காமல் மறைக்கும் இழிந்த குணம்
இருக்காத நல்லவரைக் கண்டவுடனே, வறுமையாலே

இரந்து உயிர் வாழும் நிலைக்கு வந்தவரின் துன்பங்கள்,
இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்கின்றார்.

'கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்', என்பது அந்தக் குறட்பா.

ஈபவர், இகழாமல், ஏளனம் செய்யாமல், இரப்பவருக்கு
ஈந்தால், இரப்பவர் மனமும் மகிழ்ந்து உள்ளே உவக்கும்.

'இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து', என்கின்றார் வள்ளுவர்.

இரப்பவர் இல்லையேல், குளிர்ந்த இந்தப் பெரிய உலகில்
இருப்பவர் நடமாடுவது, மரப்பாவையைப் போன்றதாகும்!

'இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று', என எச்சரிக்கை!

உலகில் இரப்போர் இருப்பதால், கொடுப்பவரும் தேவை;
உலகம் துடிப்புடன் இயங்க, இரண்டு சாராருமே தேவை!

:hungry: . . . :popcorn:
 
எந்தக் கவிஞரின் கைவண்ணம்?

சில ஆண்டுகளுக்கு முன், நல்ல கருத்துக்களைச் சொல்லப்
பல திரையிசைப் பாடல்கள், அமைந்திருந்தன. அவற்றிலே,

இந்த அதிகாரத்தை ஒட்டிய கருத்து உள்ள வரிகள் இவை;
எந்தக் கவிஞரின் கைவண்ணம் என நினைவில் இல்லை!

'இல்லை என்போர் இருக்கையிலே
இருக்கிறவர் இல்லை என்பார்'.

இருப்பதைப் பகிர்ந்து அளிக்கும் நல்ல மனம் பெற்று நாம்
இருப்போம்; இல்லை என்னாது கொடுத்து உயர்வோம்!

:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 316

இரப்போர் தேவையே...


புகழ் வேண்டாத மனிதர் உலகில் மிகக் குறைவு;
புகழ் பெற எளிய வழி, கொடுத்து உதவும் பண்பு!

இரப்பதற்கு யாரும் இல்லையென்றால், அப்போது
இருப்பதைக் கொடுக்க இயலாமலே போய்விடும்.

வேண்டுவதைக் கேட்பவர் இருந்தாலே, அவருக்கு,
வேண்டுவதை ஈந்து, நல்ல புகழைப் பெற முடியும்.

'ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை', என வினவுகிறார் அவர்.

கேட்டதை யாரேனும் கொடுக்காவிடின், அப்படிக்
கேட்டவன், கோபம் கொள்ளுவது கூடாது. தனது

நிலைமை ஒரு சான்றாக இருக்கும், வேறு சிலரின்
நிலைமை ஈயவே இயலாது இருக்கும் என்பதற்கு!

'இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி', என்று கூறுகின்றார் அவர்.

இரப்பவரின் இன்னல்களை அறிந்து உதவிடுவோம்;
இரப்பவரால் கொடுப்பவருக்குப் புகழே; அறிவோம்.

:first:
 
it is not anger anymore, profound sadness about the whole world of stupidity.. when the world is under your feet, when someone kicks it right to eternity, what to do.. is it not sad??? it is the suffering that follows... is hard to watch.. :-)
 

True, Bushu. But one has to be brave to face the challenges in this world and I am sure you are a brave lady! :thumb:

Brave or not I don't know but I am extremely positive, try to see silver lining in the darkest cloud and try and be in the happy state always.. Life is too short to hold any contempt or hatred, anything can be resolved if one wants to.. :-)
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 317

இரவச்சம்...


இரத்தல் இல்லையெனில் உலகம் இயங்காது என்பதால்,
இரத்தல் சிறந்தது என்று எண்ணுவரோ எனப் பயந்ததால்,

இரவச்சம் என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து அமைத்து,
இரத்தல் செய்ய அஞ்ச வேண்டும் என்று உணர்த்துகிறார்.

உள்ளதை மறக்காமல் அன்புடன் ஈந்திடும், கண் போன்ற
உத்தமமான மனிதரிடமும், பொருள் வேண்டி இரக்காமல்

இருப்பது, கோடி மடங்கு நன்மை பயக்கும் என்று, நமக்கு
இருக்க வேண்டிய மன நிலையை உரைக்கின்றார் அவர்.

'கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்', என்பதே அறிவுறுத்தல்.

இரந்து உயிர் வாழ்தல் வேண்டும் என இருந்தால், இந்தப்
பரந்த உலகைப் படைத்தவன், கெட்டு அழிந்து திரியட்டும்!

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்', என்பது குறட்பா.

இரந்து வாழ்தல் எத்தனை தாழ்வானது என்று இதைவிடச்
சிறந்த முறையில் உரைத்திட, எவராலேனும் இயலுமோ?

:director: . . . :thumb:
 

அழகும், அறிவும்!


பேரழகி ஒருத்திக்கு, வாழ்வில் ஒரு
பேராசை இருந்தது, நன்மக்கள் பெற.

தனக்கு அறிவாற்றல் இல்லாததால்,

தனக்கு அறிவாளிக் கணவன் தேடி,

அறிவும், அழகும் மிகவும் நிறைந்த,
சிறந்த பிள்ளைகள் பெற வேண்டி,

அழகே இல்லாமல் உள்ள ஒருவர்,
அறிவு நிறைந்து இருப்பது அறிந்து,

மிகவும் பணிவுடன் அவரை நாடி,
மிகவும் ஆசையுடன் சொன்னாள்,

'என்னை நீங்கள் மணந்தால், நாம்
என்னைப் போன்ற பேரழகுடனும்,

தங்களைப் போன்ற அறிவுடனும்,
தங்கமான பிள்ளைகள் பெறலாம்!'

அழகில் அறிவு மயங்குமா என்ன?
அழகாக அவரும் பதில் உரைத்தார்,

'என்னைப் போன்ற அழகு பெற்று,
உன்னைப் போன்ற அறிவு பெற்ற

பிள்ளைகள் நமக்குப் பிறந்தால்,
உள்ள சந்தோஷமும் போகுமே!'

:bump2:
 
raji,

good one. there was reported an incidence of a similar conversation, between einstein and a pretty hollywood starlet. :)

now in indian context, who could the two be?
 
.............
good one. there was reported an incidence of a similar conversation, between einstein and a pretty hollywood starlet. :)

now in indian context, who could the two be?
You can keep guessing, Sir! If you get some answer, please let me know!

This is just the 'old wine in new bottle'!
:becky:
 

Latest posts

Latest ads

Back
Top