• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

dear bushu,

pray enlighten me. what 'points' do you see with a 'hmmm :) :)'. i am very curious to read your mind.

thank you.

Hahahahahaa!!!! It started with Raji sending that poem about a beauty and scientist interaction... and you had sent more regarding Einstein, and I was laughing so much, since I too have heard of that.. but it just reminded me of someone I knew and just wondered about the mind becoming a monkey.. :-)))))
 
Posted in my other thread, long back! But for Bushu, once again!!

அவனும், அவளும்

கோபத்தில் கத்தினான்

அவன்,

இரண்டு விஷயங்கள்

சொல்ல வேண்டும்;

ஒன்று நீ அழகி,

இரண்டு நீ மண்டு.

சிரித்தாள் அவள்,

சரியாகச் சொன்னாய்

முதல் முறையாக.

நான் அழகி;

அதனால் நீ

என்னை மணந்தாய்!

நான் மண்டு;

அதனால் நான்

உன்னை மணந்தேன்!

:bump2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 318

இரந்து வாழ்தல் கொடுமை!


கொடுமையான வறுமையை, இரந்து போக்கலாம் என்ற
கொடுமையைப் போன்ற கொடுமை, வேறேதும் இல்லை!

வறியவர் படும் பாட்டை, மிகவும் தெளிவாக உலக மக்கள்
அறியவே, இந்தக் குறட்பாவை எழுதியுள்ளார், வள்ளுவர்!

'இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்'. இது குறள்.

உணவுக்கு இடம் இல்லாத வறுமை வந்தாலும், பிறரிடம்
உணவுக்காகக் கை ஏந்தாது இருப்பது, உலகில் இருக்கும்

பரந்த இடமெல்லாம் கொள்ளாத அளவுக்குப் பெரியதான,
சிறந்த பண்பு என்பதை உரைக்கின்றார், அழகான குறளில்.

'இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு', என்பது அந்தக் குறள்.

குடிப்பது கூழே ஆயினும், தாம் ஈட்டிய பொருளில் வாங்கிக்
குடிப்பது என்பதே மிக இனிமையானது ஆகும், என்கின்றார்.

'தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்'. இது குறட்பா.

இரந்து வாழ்தலின் கொடுமை அறிந்து, உழைத்து, உயர்ந்து,
சிறந்த வாழ்வினை உலகில் வாழ, எல்லோரும் அறிவோம்!

:target:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 319

இரத்தல் இழிவேயாகும்...

பசுவைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் உண்டு;
பசுவைத் தாகத்தில் எவரும் தவிக்க விடமாட்டார்.

அந்தப் பசுவின் தாகம் தீர்க்க, நீர் வேண்டும் என்று
எந்த நாக்கு கேட்கிறதோ, அந்த நாவிற்கு, என்றும்

அதைவிட இழிவான நிலை இல்லை என்கின்றார்.
இதைவிட நல்ல ஒப்புமையை, எண்ண முடியுமா?

'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்', இதுவே குறள்.

'கையேந்தல்' பற்றிக் கூறும் இந்த அதிகாரத்தில்தான்,
கையேந்தி, வள்ளுவர் உலகினரை ஒன்று கேட்கிறார்.

இருப்பதை மறைத்து, இல்லை எனச் சொல்வோரிடம்,
இரக்க வேண்டாம் என, வள்ளுவர் இரந்து கேட்கிறார்!

'இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரவாரை இரவன்மின் என்று', என்கிறார்.

உள்ளதை ஒளித்து வைத்து, இல்லை என்று கூறுவோர்,
உள்ளார் என்றுமே உலகினில், என்று அறிந்திடுவோம்!

:sad:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 319

இரத்தல் இழிவேயாகும்...

பசுவைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் உண்டு;
பசுவைத் தாகத்தில் எவரும் தவிக்க விடமாட்டார்.

அந்தப் பசுவின் தாகம் தீர்க்க, நீர் வேண்டும் என்று
எந்த நாக்கு கேட்கிறதோ, அந்த நாவிற்கு, என்றும்

அதைவிட இழிவான நிலை இல்லை என்கின்றார்.
இதைவிட நல்ல ஒப்புமையை, எண்ண முடியுமா?

'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்', இதுவே குறள்.

'கையேந்தல்' பற்றிக் கூறும் இந்த அதிகாரத்தில்தான்,
கையேந்தி, வள்ளுவர் உலகினரை ஒன்று கேட்கிறார்.

இருப்பதை மறைத்து, இல்லை எனச் சொல்வோரிடம்,
இரக்க வேண்டாம் என, வள்ளுவர் இரந்து கேட்கிறார்!

'இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரவாரை இரவன்மின் என்று', என்கிறார்.

உள்ளதை ஒளித்து வைத்து, இல்லை என்று கூறுவோர்,
உள்ளார் என்றுமே உலகினில், என்று அறிந்திடுவோம்!

:sad:

VAlluvar paavam ennai meet pannavillai, yaaravadhu help kettal, porul aagattum vere help aagattum Munne Odi odi seidha kaalam ondru undu, aanaal, indha ulagam evallu kodiyadhu nnu anubhavathil therindhu konden, kodukka koddukka kai yendhi vaangume thavira, naam thukathil irukum bozhudhu, vaangina kai endraikkum udhavi seiyaadhu.. Idhu dhaan manidha lakshanam.. migavum varuthapadavendiya vishayam
 
You are right, dear Bushu! My mom says like this many times. But, I console her saying that,

we should thank the Almighty for keeping us in the 'giving' position and not in the 'taking' position!

:hail: . . . :popcorn:
 
You are right, dear Bushu! My mom says like this many times. But, I console her saying that,

we should thank the Almighty for keeping us in the 'giving' position and not in the 'taking' position!

:hail: . . . :popcorn:

Absolutely, I thank god every day for that.. my problem is I cannot even take gifts without feeling bad.. that's how sensitive I am.. I love to shop for others and try and give gifts that suit their personality.. It has always been my hobby... I may take a bit more to select, but when I see the joy in someone's face, it is just priceless.. :-)
 
பேரழகி ஒருத்திக்கு, வாழ்வில் ஒரு
பேராசை இருந்தது, நன்மக்கள் பெற.

தனக்கு அறிவாற்றல் இல்லாததால்,

தனக்கு அறிவாளிக் கணவன் தேடி,

அறிவும், அழகும் மிகவும் நிறைந்த,
சிறந்த பிள்ளைகள் பெற வேண்டி,

அழகே இல்லாமல் உள்ள ஒருவர்,
அறிவு நிறைந்து இருப்பது அறிந்து,

மிகவும் பணிவுடன் அவரை நாடி,
மிகவும் ஆசையுடன் சொன்னாள்,

'என்னை நீங்கள் மணந்தால், நாம்
என்னைப் போன்ற பேரழகுடனும்,

தங்களைப் போன்ற அறிவுடனும்,
தங்கமான பிள்ளைகள் பெறலாம்!'

அழகில் அறிவு மயங்குமா என்ன?
அழகாக அவரும் பதில் உரைத்தார்,

'என்னைப் போன்ற அழகு பெற்று,
உன்னைப் போன்ற அறிவு பெற்ற

பிள்ளைகள் நமக்குப் பிறந்தால்,
உள்ள சந்தோஷமும் போகுமே!'

That was fantastic Raji Madam...simple yet very aptly said...Excellent....
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 320

நெஞ்சு பொறுக்குதில்லை...

இரத்தலை ஒரு பாதுகாப்பு இல்லாத படகு போலவும்,
கரத்தலை ஒரு கடினமான கல் போலவும் கூறுகிறார்.

பாதுகாப்பு அற்ற இரத்தல் என்னும் படகு, ஒளித்திடும்,
பாறை போன்ற கல் நெஞ்சம் தாக்க, உடைந்துவிடும்.

'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்', என்பது எச்சரிக்கை.

வஞ்சகமாக உள்ளதை மறைப்போரைக் கண்டால், தம்
நெஞ்சமே இல்லாது ஒழிந்து போவதாக உரைக்கிறார்.

இரப்பவரைக் கண்டாலே உள்ளம் உருகுகிறது; ஆனால்
கரப்பவரைக் கண்டாலோ, உள்ளமே ஒழிந்து போகிறது!

'இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்'. நிஜம்!

'இல்லை' என்ற சொல் கேட்டு, இரப்பவர் உயிர் போக,
'இல்லை' என்போரின் உயிர் மட்டும், எங்கு ஒளிகிறது?

'கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்', என்று வினவுகின்றார்.

இல்லை என்ற நிலைமை வராது, உழைத்து வாழ்வோம்;
இல்லை என்று வருவோருக்குக் கொடுத்து மகிழ்வோம்!

:grouphug:
 
கடைநிலைப் பிறவிகள்...

பொருட்பாலில் கடைசி அதிகாரம் கயமை. கயவர் கடைநிலைப் பிறவிகள் என்று உணர்த்த வேண்டித்தான்

இதைக் கடைசியில் வைத்தாரோ என்று தோன்றுகிறது! :evil:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 321

கயவர்...


எந்தக் காலக் கட்டமாயினும், பரந்த இவ்வுலகில்,
வந்த வண்ணம் இருப்பார்கள், பொல்லாக் கயவர்.

நல்லவரைப் போலவே தோற்றத்தில் இருந்திடும்
அல்லவரை கண்டால், இரு வேறு குணம் உடைய

இந்த மனிதர்கள் மட்டும், எப்படி ஒரேபோல உள்ளார்?
இந்த ஒற்றுமை இதுபோல, தாம் கண்டதில்லையாம்!

'மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்', இது குறள்.

கயவர்களை பாக்கியசாலிகள் என்கின்றார், இவர்!
கயவர்களை எப்படி அப்படிச் சொல்லலாம்? இதோ:

நல்லவை எண்ணி, அவை நடந்திடக் கவலைப்படும்
நல்லவர்கள் ஒருபுறம் இருக்க, கயவர்களோ, இப்படி

நல்ல எண்ணங்கள் எதுவுமே இல்லாது, நிம்மதியாக
உள்ள, கவலையில்லா நெஞ்சினராக இருக்கிறாரே?

'நன்றறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்', என்கிறார்!

புகழுவதுபோல இகழ்கிறார் வள்ளுவர், கயவர்களை;
புகழே இது என மயங்காது, நல்லவை நினைப்போம்!

:bounce:


 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 322

கவலை இல்லா மனிதர்...

தம் விருப்பம்போல எல்லாமே செய்வர் தேவர்கள்.
தம் விருப்பம்போல அறநெறி தவறுவர் கயவர்கள்.

கயவர் நிலைமையை தேவருடன் ஒப்பிட்டுக் கூறி,
கயவர் எதற்கும் அஞ்சாதிருப்பதைக் காட்டுகிறார்.

'தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன் செய்தொழுக லான்'. இது குறள்.

நல்லவை செய்யாது இருக்கும் கயவர்கள், உலகில்
நல்ல பெருமை பெறுவது, மிகக் கடினமான செயல்.

இழிந்த தன்மை கொண்ட கயவர், தம்மைவிடவும்
இழிந்த தன்மை கொண்டவரைப் பார்த்தால், தாம்

அவரைவிட உயர்ந்தவர் என்று பெருமை கொள்வர்;
இதைவிட அவர்களுக்கு வேறு வழியே கிடையாது.

'அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்', என்கிறார்.

பெருமை பெற இயலாத கயவரின் தன்மை பெறாது,
பெருமை மிக்க நல்வழி சென்று, உயர்வடைவோம்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 323

கயவரின் தன்மைகள்...


அஞ்சும் தன்மையின் காரணத்தால், சில நேரம்,
கொஞ்சம் நல்வழியில் நடப்பார்கள், கயவர்கள்.

பிற நேரத்தில், தனக்கு ஆதாயம் இருந்தால்தான்,
சிறிதேனும் நல்லவராய் நடப்பார்கள் என்கிறார்.

'அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது'.

எல்லோரும், தம்மைப் பற்றிய எல்லாவற்றையும்,
எல்லோரிடமும் சொல்வதை விழைய மாட்டார்!

மற்றவர்கள் மறைக்கும் செய்தி கேட்டுவிட்டால்,
சற்றும் தாமதியாது அதைப் பரப்பிடுவர், கயவர்.

பறை கொட்டி அறிவிப்பது போலவே செய்வதால்,
பறை எனும் கருவிக்கு இவர்களை ஒப்பிடுகிறார்!

'அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்'.

கயவரின் தன்மைகள் அறிந்து, அவற்றை விடுத்து,
நயமான நல்வாழ்க்கை வாழ்ந்து, உயர்ந்திடுவோம்!

:thumb:
 
இல்லை என்ற நிலைமை வராது, உழைத்து வாழ்வோம்;
இல்லை என்று வருவோருக்குக் கொடுத்து மகிழ்வோம்!

What a golden thought....to be remembered for ever...
 

திருவள்ளுவரைப் போன்ற வழிகாட்டி இந்த உலகிற்குத் தேவை!

அவர் காட்டும் நல்வழியில் நடந்தால், உலகமே வேறு மாதிரி இருக்குமே!

:director: . . . :angel:
 

திருவள்ளுவரைப் போன்ற வழிகாட்டி இந்த உலகிற்குத் தேவை!

அவர் காட்டும் நல்வழியில் நடந்தால், உலகமே வேறு மாதிரி இருக்குமே!
Well Said.. Dear Raji Madam..
It is all about FAITH Madam, we follow the foot steps of our Guru, because we have full faith in him. He is our master and we have to understand, accept and receive what he gives.. if we have confidence and obedience, then the guru's blessings will help us to grow and it will work for us. Accept, believe, learn and move ahead.. A guru is a guru.. you have to give that respect to your master. With doubt and arguments no one will reach no where. If one think he/she knows everything, then what is the need of a master??? I was just watching this song... and I got few lines... which is apt here...
உனக்காக ஒண்டும் எனக்காக ஒன்றும் ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை... There is no bias in the court of God as well as in the heart of a Guru.. The way you act, the way you get.. with love.. Anandi
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 324

கயவரும் கொடுப்பார்!

எப்போது கயவர் ஏதேனும் கொடுப்பார் என்பதனை,
எப்போதும் இல்லாத வேடிக்கையாகக் கூறுகிறார்!

மடக்கிய கையால் கன்னத்தில் குத்த வருபவனுக்கு
அடங்கி, ஏதேனும் கயவரும் கொடுப்பார்! ஆனால்,

மற்ற நேரத்தில், ஏழைக்காக, எச்சிற் கையைக்கூட
சற்று உதற மாட்டார், என்று தெளிவாக்குகின்றார்.

'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு', என்பது குறள்.

பெரியோரான சான்றோருக்கும், கயவருக்குமுள்ள
பெரிய வேறுபாட்டையும், தெளிவாகக் கூறுகிறார்.

குறைகளைக் கேட்டவுடன் சான்றோர் உதவிடுவர்;
அரைத்துக் கரும்புச் சாறு எடுப்பதுபோல பிழிந்தால்,

அப்போதுதான் கயவரிடம் கேட்ட உதவி பெறலாம்;
எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியதே இது!

'சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்', என்பது அறிவுறுத்தல்.

கயவரைப் போன்ற குணங்களைப் பெறாது, நாம்
நயமான நற்பண்புகளை வளர்த்து, உதவுவோம்!

:angel: . . . :grouphug:
 
இதே எண்ணம் ...

கஞ்சனைப் பற்றிச் சொல்லும்போது, 'எச்சிற் கையால், காக்கையைக் கூட விரட்ட மாட்டான்' என்போம்.

இதே போன்ற எண்ணம், திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கின்றது!
:becky:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 325

கயவரின் கீழான தன்மை...


தானும் வாழ்ந்து, பிறரும் வாழ்ந்திட நினைப்பதுதான்
வேணும், மனித இனத்திலே பிறந்தோருக்கு; ஆனால்,

தான் மட்டும் வாழவேண்டும், என எண்ணும் கயவர்,
தன் கண்ணில் பிறர் நன்கு உண்டு, உடுப்பது பட்டால்,

அவர்களைப் பற்றி அவதூறு சொல்லி, எல்லோரும்
அவர்களை வெறுக்கும்படிச் செய்திட வல்லவராவர்!

'உண்பதூஉம் உடுப்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்', என்பது எச்சரிக்கை.

துன்பம் ஏதேனும் வந்துவிட்டால், முயற்சியால் அத்
துன்பம் விலகுமாறு செய்திடல் வேண்டும்; ஆனால்,

தம்மைப் பிறருக்கு விற்றுவிடவும் துணிவர் கயவர்,
தமக்குத் துன்பம் நேருகின்ற நேரத்திலே, என்கிறார்.

'எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து', என்பது குறள்.

'வாழு, வாழ விடு' என்ற நல்ல வழியில் செல்வோம்;
வாழ்வில் வரும் துன்பங்களை வென்று, சிறப்போம்!

:peace:
 

பொருட்பால் இத்துடன் முற்றுப் பெறுகிறது. அடுத்து வருவது இன்பத்துப்பால்.

மிகவும் நயமான குறட்பாக்களைத் தொகுத்து வழங்குகிறேன்.

அனைத்துக் குறட்பாக்களையும் பற்றி எழுதுவது எனக்குக் கடினம்!
தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்! :ranger:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 326


மயக்கித் தாக்கும் அழகு...

தன் தலைவியின் அழகை, தலைவன் வருணிப்பதுபோல,
தன் முதல் அதிகாரத்தை அமைத்துள்ளார், திருவள்ளுவர்.

'இவள் தெய்வப் பெண்ணா? இவள் அழகான ஒரு மயிலா?
இவள் கனமான குழைகளை அணிந்த மனிதப் பெண்ணா?

இவளைக் கண்டவுடனே என் மனம் மயங்குகிறதே!' இப்படி
இவளைக் கண்டவுடன், தலைவன் சொல்வதாகக் குறட்பா.

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு', என்பதே அக்குறள்.

'என்னை நோக்கியவளை நான் நோக்க, அவள் மறுபடியும்
என்னை நோக்குவது, தாக்கும் அணங்கு, தான் மட்டுமன்றி

தன் சேனையையும் கொண்டுவந்து தாக்குவது போலவே
என் மனதில் தோன்றுகிறது', என்கிறான் அந்தத் தலைவன்.

'நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து', என்பது குறட்பா.

தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவன், அந்தத்
தலைவின் பார்வையே ஆயுதமாக ஆவதை உணருகின்றான்.

:shocked:

 

திரைப்படங்களில் திருவள்ளுவர்!

திரைப்பட இயக்குனர்கள் திருவள்ளுவரின் கற்பனைகளைப் படித்தால்,
Graphics உதவியுடன், காதல் காட்சிகளில் 'பிளந்து கட்டுவார்கள்'! . . :drama:

 
..............
It is all about FAITH Madam, we follow the foot steps of our Guru, because we have full faith in him. ....

Dear Anandi,

In your profession too, 'faith' plays a very important role! Unless the patient has faith in his / her doctor,
he / she will never ever regain his / her good health, right? Just as the faith in God and Guru... :hail:

Best wishes,
Raji Ram
 

Latest ads

Back
Top