வள்ளுவரைப் போற்றுவோம் ..... 326
மயக்கித் தாக்கும் அழகு...
தன் தலைவியின் அழகை, தலைவன் வருணிப்பதுபோல,
தன் முதல் அதிகாரத்தை அமைத்துள்ளார், திருவள்ளுவர்.
'இவள் தெய்வப் பெண்ணா? இவள் அழகான ஒரு மயிலா?
இவள் கனமான குழைகளை அணிந்த மனிதப் பெண்ணா?
இவளைக் கண்டவுடனே என் மனம் மயங்குகிறதே!' இப்படி
இவளைக் கண்டவுடன், தலைவன் சொல்வதாகக் குறட்பா.
'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு', என்பதே அக்குறள்.
'என்னை நோக்கியவளை நான் நோக்க, அவள் மறுபடியும்
என்னை நோக்குவது, தாக்கும் அணங்கு, தான் மட்டுமன்றி
தன் சேனையையும் கொண்டுவந்து தாக்குவது போலவே
என் மனதில் தோன்றுகிறது', என்கிறான் அந்தத் தலைவன்.
'நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து', என்பது குறட்பா.
தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவன், அந்தத்
தலைவின் பார்வையே ஆயுதமாக ஆவதை உணருகின்றான்.
:shocked:
Strange to read this.. without even reading this, I have written a poem like this ......
Tamil was our second language in under grad course. We have read quite a number of Kurals but not many from the
third section 'inbaththuppAl'. I am also reading the verses for the first time and wonder how ThiruvaLLuvar who sits
like a saint can write so much about love and its effects.
Dear Bushu, Why don't you share your poems with us! Come on... Start your thread in the literary section.
Best wishes. Raji :lever:
Aiyoo, I don't know if I should I feel a bit embarrassed.. not sure how it will be taken, I have written on different subjects and also some recently which was in reply to a friend who is good in writing poetry, I can share those here.. and try and do some more.. Raji so sweet of you.. thank you for suggesting.. I honestly did not think about it.. in fact, when I saw yours and Visalakshi's and a few more others knowledge, I was amazed.. Yen caliber is not all that great..
எந்தப் பாடல் தெரியுமோ?
ஒரு திரைப்படப் பாடலில்,
'உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே!
மண்ணை நான் பார்க்கும்போது (சரியென எண்ணுகிறேன்)
என்னை நீ பார்க்கின்றாயே!'
என்று சிறு வயதில் கேட்டுள்ளேன். இந்தக் கருத்து, வள்ளுவத்திலிருந்து 'சுட்டது' என்று இன்றுதான் அறிந்தேன்!
:ranger:
குறிப்பு:
நண்பர்கள் யாருக்காவது இந்தப் பாடலின் முதல் வரி தெரிந்தால், பகிர்ந்துகொள்ளத் தயங்க வேண்டாம்! :typing:
here it is raji: pb srinivas from vaazhkkai padagu .. song netruvarai....
Excellent Kavithaigal.............