இப்போதுதான் தெரிந்தது!
அன்புடன் எனக்கு வந்த ஒரு மெயிலிலே,
நண்பி அனுப்பிய பெரிய காமெடி இதுவே!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வங்கியிலே
அமெரிக்கையாக நுழைந்தார், பணத்திற்கு!
தன் அடையாள அட்டையைக் காட்டுமாறு,
தன் கடமையைச் செய்ய ஊழியர் கேட்டிட,
'என்னையே தெரியாதா உங்களுக்கு? நான்
விண்ணையே ஆளும் அமெரிக்க நாட்டின்
முதல் குடிமகன்! அதாவது ஜனாதிபதிதான்.
முதலில் என் பணத்தைக் கொடுங்கள்' என
சொல்லியவாறு செக்கை நீட்ட, மறுபடியும்
சொல்லிய வார்த்தைகளையே சொல்லிய
வங்கி ஊழியர், அடையாளம் கேட்க, இவர்
வங்கி ஊழியரைக் கோபிக்க, நிதானமாக
அவர் சொன்னார்,'Tiger Woods என்ற அந்த
வீரர், தன் Golf ஆடும் திறமையைக் காட்ட,
தன் குச்சியால் ஒரு பந்தை, கிண்ணத்திலே
தன் குறி தவறாது போட்டார்; அது போன்று
அகஸ்ஸி வந்து, ஒரு பந்தை மட்டையால்,
அலுங்காமல் இட்டார், என் கிண்ணத்தில்.
அவர்களிடம் அடையாள அட்டை இல்லை!
அவர்கள் நிரூபித்ததுபோல, நீங்கள் செய்ய,
பணிவாகக் கேட்கின்றேன்', என்று உரைத்து,
பணிவான வணக்கமும் சொல்லிவிட்டார்.
'என்னால் ஒன்றுமே யோசிக்க முடியாதபடி,
என் எண்ணங்கள் வெறுமை ஆனதே!' என்று
ஒபாமா புலம்பியதும், துள்ளிக் குதித்த அவர்,
'ஒபாமா நீங்கள்தான் என்பது, இப்போதுதான்
தெரிந்தது! எந்த நோட்டுக்கள் வேண்டுமென,
தெளிவாகச் சொல்லுங்கள்', என்று கேட்டார்!
:decision: . . . :thumb: