• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


அதிகம் சினிமாப் பாடல்கள் கேட்காத எனக்குத் தெரிந்த சில நிலவுப் பாடல்கள் இதோ:


'நிலவே என்னிடம் நெருங்காதே!'

'ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்'

'நிலவு வந்து பாடுமோ'

'அந்த நிலாவைத்தா(ன்) நா(ன்) கையில புடிச்சேன், என் ராசாவுக்காக'

'ஆயிரம் நிலவே வா!' இதை முதல் பாடலாகப் படிய S. P. B அவர்களை,

'ஆயிரம் நிலவை அழைத்தவர்', என்று குறிப்பிடுவர்!

:music:
 

நல்லதையே பேசுங்கள்!


ஒரு முறை மூவர் தவமிருந்து, இறைவனை
ஒரு வரம் கேட்க மிகவும் விழைந்தனர். அந்த

பக்தியை மெச்சி, இறைவன் தரிசனம் தந்திட,
யுக்தியுடன் ஒரு சேர, ஒரே வரம் கேட்டனர்.

எதிரில் உள்ள குளம், தாம் எண்ணுவதாகவே,
அதனுள் குதித்ததும் மாறிட வேண்டிக் கொள்ள,

'அவ்வாறே ஆகட்டும்' என இறைவன் மறைய,
அப்போதே தமது சோதனையை ஆரம்பித்தனர்.

முதல் மனிதன், குளம் ஆடைகளாகிட வேண்டி,
அதில் குதிக்க, பல வண்ண ஆடைகள் நிரம்பின!

ஆடைப் பிரியனான அவன், அத்தனையும் தானே
ஆவலுடன் அணிய எடுத்துச் செல்ல, அடுத்தவன்

மனைவி அணிகலன்களை வேண்டுவதால், தன்
மனைவிக்கு நகைகள் வேண்டுமென்று குதித்திட,

கண்ணைப் பறித்து மனம் மயக்கும் நகைகள், தன்
எண்ணப்படி வர, அள்ளிக் கொண்டு செல்ல, பின்

மூன்றாமவன் வைரங்களாக வேண்டி, செல்வம்
மூன்று தலைமுறைக்குச் சேர்த்திட நினைத்தபடி,

ஆவலாதிபோல ஓடி வர, காலில் ஒரு கல் தடுக்க,
ஆங்காரத்துடன் Bull shit என்று கத்தி குதித்தான்!

அவன் நிலைமை என்னவென எண்ணினால், நாம்
அவனைப் போலப் பேசாது இருக்கவும் பழகுவோம்!

:blah:



 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 343

அவளே உயிர்; அவளே கண்மணி.

தலைவி அருகில் இருப்பதையே தான் விரும்புவதாகத்
தலைவன் கூறி, அவளுடைய அன்பைப் போற்றுகிறான்.

ஒன்றை ஒன்று பிரியாது உடலும், உயிரும் உள்ளதுபோல,
ஒருவரை ஒருவர் பிரியாததே இருவரின் நட்பு என்கிறான்!

இதோ: 'உடம்பொடு உயிரிடை ன்னமற் றன்ன
மங்கையோடு எம்மிடை நட்பு'. இதுவே குறட்பா.

பாவை என்றால் பெண் என்றும் ஒரு பொருள் இருக்கிறது;
பாவை என்று கண்ணின் கருமணியிலும்கூட இருக்கிறது!

தலைவன் தன் கண்ணிலுள்ள பாவையிடம் கூறுகிறான்,
'தலைவிக்கு வேறு இடமில்லை! நீ என் கண்ணிலிருந்து

இடம் பெயர்ந்தால், கண்ணின் மணி போலவே போற்றிட,
இடம் தருவேன், நான் விரும்பும் அழகிய நெற்றியளுக்கு!

'கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்', இது குறட்பா.

தமது, விட்டுப் பிரியாத நட்பினைப் பற்றிச் சொல்லுகிறான்;
தனது தலைவியைக் கண்மணியாக வைக்க விழைகிறான்.

:love: . . . :blah:

 
உயிர்போல...

'மன்னவனே அழலாமா' என்ற பாடலில் 'உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க' என்று,

ஒருவருக்கு ஒருவர் உயிர்போல இருப்பதைக் கவிஞர் வாலி குறிப்பிடுகின்றார்.
:biggrin1:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 344

உயிர் அவளே!


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளை அணிகளாகக் கொண்டு,
உயர்ந்து விளங்கும் தலைவி உடன் இருக்கும்போது, உயிர்

வாழ்வதாகவும், அவள் நீங்கிச் சென்றுவிட்டால், தன்னுயிர்
வாழ்வை நீக்கி இறப்பது போலவும் உள்ளது தலைவனுக்கு!

'வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து'. இது குறள்.

'சிறந்த ஒளி பொருந்திய, போர் புரியும் கண்களை உடைய,
உயர்ந்த என் தலைவியின் பண்புகளை நினைப்பதில்லை;

மறந்தால் அல்லவா மீண்டும் நினைப்பதற்கு? அவளையே
மறக்காது இருக்கிறேன்', என்று கூறுகின்றான் தலைவன்.

'உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்'. இது குறட்பா.

தன் உயிரே தன் தலைவிதான் என்பதை உணருகின்றான்;
தன் நினைவு முழுதும் அவள் என்பதையும் அறிகின்றான்!

:decision:
 

வள்ளுவரைப் போற்றுவோம் .....
345


கண்களில், நெஞ்சில் தலைவன்!

'என் கண்களை விட்டுத் தலைவர் போகமாட்டார்;
என் இமைகளை மூடினாலும், வருந்தவேமாட்டார்.

அத்தனை நுட்பமானவர் நான் விரும்புபவர்', என்று
எத்தனை பெருமையாகத் தலைவி உரைக்கின்றாள்!

'கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்'. இது அந்தக் குறள்.

'கண்ணுக்கு மை தீட்டினால், கண்ணுக்குள் இருக்கும்
கண்ணான தலைவன் மறைவான், என்ற பயத்தினால்,

என் கண்களுக்கு மை தீட்டாது உள்ளேன்', என்கிறாள்,
தன் தலைவனை, கண்ணுள்ளே வைத்துள்ள தலைவி!

'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து'. இது குறள்.

அஞ்சுகிறாள் வெம்மையான உணவுண்ண, நெஞ்சில்
அன்புள்ளவன் இருப்பதால், அவனுக்குச் சுடும் என்று!

'நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுவேம் வேபாக்கு அறிந்து', என்கிறாள்.

தன் கண்களுக்கு உள்ளேயும், நெஞ்சிற்கு உள்ளேயும்,
தன் தலைவன் இருப்பதாகவே நம்புகிறாள், தலைவி!

:biggrin1:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 346


ஊரார் கூறுவர்!

தன் காதலரின் தன்மைகளை அறியாத ஊர் மக்கள்,
தன் காதலரை, குறை சொல்லுவதாகக் கூறுகிறாள்.

'கண்களை இமைத்தால், அதன் உள்ளிருக்கும் அவர்
கண்களிலிருந்து மறைவாரென அஞ்சி, கண்களை

இமைக்காததால், துன்பம் தரும் அன்பில்லாதவரென
இயம்புகின்றார் ஊர் மக்கள்', என்கின்றாள் தலைவி!

'இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலார் என்னும்இவ் வூர்', என்பது அந்தக் குறள்.

'என் உள்ளத்தில் மகிழ்வுடன் உறைகின்றார் காதலர்;
என்னைப் பிரிந்து அவர் சென்றதாக ஊரார் எண்ணி,

அவரை, அன்பில்லாதவர் என்று ஏசுகின்றாரே', என
அவரையே எண்ணியுள்ள தலைவி வருந்துகிறாள்!

'உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலார் என்னும்இவ் வூர்', என்பது அவளது வருத்தம்.

விட்டுப் பிரிந்து காதலன் சென்றாலும், தான் அவனை
விட்டுக் கொடுக்காது, ஆதரவாகப் பேசுகிறாள், அவள்!

:blabla:

 

மடல் ஊர்தல் ...

சங்க காலத்தில், தன் காதலி தன்னை மறந்தால், அவளிடம் உள்ள காதலை ஊராரிடம் வெளிப்படுத்த,

பனை ஓலைகளால் குதிரை போலச் செய்து, அதில் தன் காதலியின் படத்தை வைத்து, அந்தக் குதிரையில்

அலங்கோலமாக ஊர்வலம் வருவானாம் காதலன், புலம்பியபடி!
இந்த 'மடல்
ஊர்தலை'ப் பல குறட்பாக்களில் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். :llama:





 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 347

ஒன்றே வழி!

தலைவி தன்னிடம் பராமுகமாக இருப்பதால் வருந்திய
தலைவன், தனக்குள்ள ஒரே வழியை யோசிக்கின்றான்.

தன் காதலை ஊராரிடம் வெளிப்படுத்துவது ஒன்றுதான்,
தன் காதலியை அடையும் வழி என்று எண்ணுகின்றான்!

காதல் நிறைவேறாது வருந்துபவருக்குப் பாதுகாப்பான
மடல் ஊர்தலைவிட வலிமையான துணையே இல்லை!

'காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி'. இது குறள்.

அவன், பிரிவின் துன்பத்தால் தன் நாணத்தை விடுகிறான்;
அவன் உடலும், உயிரும் நாணத்தை மறக்க, அவன் மனம்

மடல் ஊர்தல் செய்திடத் தூண்டுவதாக உரைக்கின்றான்;
மடல் ஊர்தலுக்குத் துணிந்ததாகவும் தெரிவிக்கின்றான்.

'நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து', என்கிறான்.

சங்க காலக் காதலர் படும் பாட்டை, திருவள்ளுவர் கூற,
சங்க கால வழக்கங்களில் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்!

:ballchain:
 


வள்ளுவரைப் போற்றுவோம் ..... 348

நாணமும், நல்லாண்மையும் போகும்!

ஊரார் என்ன எண்ணுவார்களோ என்கின்ற நாணத்துடன்,
ஊரார் மெச்சுகின்ற நல்லாண்மையும் போய்விடுகின்றது,

காதல் முற்றி, மடல் ஊர்தலைச் செய்துவிட விரும்புகின்ற
காதலனுடைய முடிவினால், என்பதையும் அறிகின்றோம்!

'நாணமும் நல்லாண்மையும் முன்பு நான் கொண்டிருந்தும்,
நாணமின்றி, இன்று மடலூர்தல் செய்கிறேன்', என்கிறான்.

'நாணோடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்', என்பது காதலனின் அவலக் குரல்.

நாணம், நல்லாண்மை இரண்டைத் தோணிகள் போலவும்,
காமம் என்பதைக் பெரும் வெள்ளமாகவும் கருதுகின்றான்.

பெருவெள்ளமாகிய காமம், நாணம், நல்லாண்மை என்கிற
இரு தோணிகளை அடித்துப் போகின்ற வலிமை உடையது.

'காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு
நல்லாண்மை என்னும் புணை'. இது குறள்.

நல்ல குணங்களையும், காதல் முற்றிய நிலையில், தான்
மெல்ல இழந்துவிடுவதைத் தலைவன் உணருகின்றான்!

:humble:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 349

காதலன் நாணம் துறப்பதைக் குறிப்பிடும் வள்ளுவர்,
காதலியின் நிலைக்கும் குறட்பாக்கள் எழுதுகிறார்.

தான் காதலிக்கும் விஷயம் ஊர் முழுவதும் பரவிவிட,
தான் மனதில் எண்ணுவதை அவள் உரைக்கின்றாள்!

'என்னைத் தவிர யாருமே அறியவில்லை என்பதால்,
என் காதல் வீதியிலே பரவி, மயங்கித் திரிகின்றது!'

'அறிகிலார் எல்லோரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு', என்பது குறள்.

காதல் நோய் வாட்டுவதைப் பற்றி அறியாதவர்கள்,
காதல் வயப்பட்ட அவளை நோக்கி நகைக்கின்றார்.

'கண்ணில் நான் பட்டால், பார்த்து நகைக்கின்றவர்,
காதல் படுத்தும் பாட்டை அறியாதவரே!' என்கிறாள்.

'யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு', என அவள் குரல்.

தன் காதலை வெளியிலே சொல்லவும் முடியாது,
தன் நிலைமை சொல்லி வருதுகின்றாள் தலைவி!

:love: . . . :blah:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 350

பழித்தல் நலமே!

தம் காதலை ஊரார் பழித்துக் கூறுவதை, தலைவன்,
தம் காதலின் வெற்றிக்கு வழியாக நினைக்கின்றான்!

பலரும் ஊரில் பழி தூற்றிப் பேசுவதால், அதுவே தன்
மலரும் காதலுக்கு வெற்றியாக அமையுமோ என்ற

ஒரு நம்பிக்கையிலே, தான் உயிர் வாழ்வதை, ஊரார்
ஒருவரும் அறியாதது, தன் பாக்கியமே என்கின்றான்.

இதோ: 'அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்', என்று நினைப்பு!

மலர் ஒத்த கண்களை உடையவள் அருமை அறியாது,
பலர் ஊரில் தம் காதலைப் பழித்து உரைத்ததால், அது

மறைமுகமான உதவியாகவே அமைந்தது என்று கூறி,
நிறைவேறும் தம் காதல் என்றும் அவன் நம்புகின்றான்!

'மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்', என்கின்றான்.

தூற்றுவதை ஊரார் செய்தாலும், அது தனது காதலுக்கு,
ஏற்றமான வெற்றியைத் தரும் என்பது அவன் கணிப்பு!

:decision: . . . :thumb:


 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 351

தூற்றுதல் தேவை!

தூற்றுதல் செய்யும் ஊர் மக்களை வெறுக்காது, அந்தத்
தூற்றுதல் காதலுக்குத் தேவை என்கிறான், தலைவன்!

'எம் காதலைப் பற்றிப் பேச்சு எழாதோ? அப்படி எழுந்தால்,
எம் காதல் நிறைவேறும் முன்பே, நிறைவேறியது போல்

தோன்றி, எமக்கு இன்பத்தைத் தரும்' என்று, தன் மனதில்
தோன்றி எழும் எண்ணங்களைத் தலைவன் கூறுகிறான்.

'உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து'. இது குறள்.

ஊரார் அலர் தூற்றுவதால், காதல் வளர்கின்றது; அப்படி
ஊரார் தூற்றாவிட்டால், காதல் கொடி வாடிச் சுருங்கும்!

மீண்டும் மீண்டும் பலரும் பழித்துப் பேசுவதால், காதலும்
மீண்டும் மீண்டும் செழித்து, வளரும் தன்மை பெறுகிறது!

'கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து', எனக் குறள்.

பழித்துப் பேசுவது தாழ்வே எனினும், அது தமது காதலை
அழித்து விடாது, பெருக்குவதாக அவன் நினைகின்றான்!

:decision: . . . :dance:
 
Hey Raji, loving reading the thirukural and the meaning.. love is a wonderful feeling.. :-) by the way, I am going to not be that active for a while.. I will catch up a bit later.. I might read some, but may not comment that much.. Take care.. :-)
love
Bushu :-)
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 352

மதுவும், மதியும்.

காதலில் மயங்கிக் கிடக்கும் அந்தத் தலைவன், தன்
காதலைப் பற்றிப் பிறர் பேசுவதை நினைக்கின்றான்.

மதுவை உண்ண உண்ண அதிலே மயக்கம் பிறந்து,
அதையே உண்ணும் ஆவல் எழுவதைப் போலவே,

தன் காதலைப் பற்றியே ஊரார் பேசப் பேச, அதுவே
தன் காதலை மேலும் இனிமையாகச் செய்கிறதாம்!

'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது', என்கிறான் காதலன்.

தங்களின் சந்திப்பு ஒரு நாளே என்றாலும், பாம்பு
திங்களை விழுங்கும் கிரகணச் செய்தி போலவே,

ஊர் முழுவதும் அலராகப் பரவுகின்றது என, அந்த
ஊரார் பேச்சுக்கள் கேட்ட தலைவி கூறுகின்றாள்.

'கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று'. இது குறள்.

இருவருமே ஊரார் பழிப்பதை உணர்ந்தாலும், அது
இருவரின் அன்பை வளர்ப்பதாக நினைக்கின்றார்!

:humble: . . :love:

 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 353

அலர் தூற்றக் காதல் வளரும்!

காதல் வயப்பட்ட இருவரும், ஊரில் அனைவரும், தமது
காதல் பற்றிக் கடிந்து அலர் தூற்றுவதை அறிகின்றார்.

தலைவி உரைக்கின்றாள், ஊராரின் அலர் தூற்றுதலை,
தலைவன் மீதுள்ள காதல் நோய்க்கு எருவாகவும், தன்

அன்னையின் கடுஞ்சொற்களை, அதிலூற்றும் நீராகவும்
தன் மனத்தில் எண்ணுவதாக! இதனால் நோய் நீளுமாம்!

'ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராகி நீளும்இந் நோய்'. இது அவள் சொல்.

எரியும் நெருப்பிலே நெய்யை ஊற்றினால், அது மேலும்

எரியச் செய்வதை ஒப்புமையாகக் கூறுகிறாள் தலைவி.

நெருப்பை அணைக்க,
நெய்யை ஊற்றி முயல்வது போல,

நெருப்பைப் போல எரிகின்ற காதலை மறக்க வைத்திடப்

பலரும் அலர் தூற்றுவதும், அக் காதல் மேலும் வளர்ந்திட,
பலரும் உதவுவதுபோல அமைவதாகக் கூறுகிறாள் அவள்.

'நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்', என்பது அவளது தீர்மானம்.

அலர் தூற்றலை ஊரார் செய்யச் செய்ய, தன் தலைவனிடம்
மலர்ந்த காதலும் வளர்வதாகவே, தலைவி எண்ணுகிறாள்!

:flame:


 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 354


தூற்றலை அஞ்சாலாகாது!

தலைவன் தன்னை விட்டுச் சென்றதால் வருந்துகின்ற
தலைவி, இவ்வாறு தன் மன நிலையைக் கூறுகிறாள்.

தன்னை விட்டுக் காதலன் தான் நாணுமாறு பிரிந்தான்.
தன்னை அதனால்தான் ஊராரும் அலர் தூற்றுகின்றார்.

விட்டுப் பிரியேன் என உறுதியளித்த அவன், நாணும்படி
விட்டுச் சென்றதால், தூற்றலுக்கு நாணவும் முடியுமோ?

'அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை', என்பது அவள் கேள்வி.

தன் காதல் விஷயம் தெரிந்து ஊரில் பரவியதும், ஊரார்
தன் காதலைப் பழித்துத் தூற்றவும் ஆரம்பித்துவிட்டனர்.

தான் விரும்புகின்றவாறு ஊரார் தூற்றுகின்றார்; இதை,
தன் காதலரும் விரும்பினால், அதை ஒப்புக்கொள்வார்.

'தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்', என்கிறாள் தலைவி.

அலர் தூற்றுவதைத் தலைவி விரும்ப ஆரம்பிக்கிறாள்;
பலர் அறிவது காதலுக்கு வெற்றி என்று நினைக்கிறாள்!

:love: . . :gossip: . . :first:


 

அன்றும் இருந்துள்ளது!

சங்க காலத்திலும் காதல் புலம்பல் இருந்துள்ளது! காதலை மறைப்பதும், பின் ஊரார் அறிவதும்,

அவர்கள் அலர் தூற்றுவதும், அது காதலுக்கு வெற்றி என எண்ணுவதும் இருந்துள்ளது.

இக்காலத்தில், யாருக்கும் தெரியாமல் சென்று பதிவுத் திருமணம் செய்துகொள்வார்கள்! பின்

யார் தூற்றியும் பயன் இல்லை!!

 
....
காதல் நிறைவேறாது வருந்துபவருக்குப் பாதுகாப்பான
மடல் ஊர்தலைவிட வலிமையான துணையே இல்லை!
Mrs. RR., I read this post a few days back and wanted to share a few lines from two Prabhandhams by Thirumangai Azhvar called Siriya Thirumadal and Periya Thirumadal. In these two, the Azhvar, taking on nAyakI bhavam, declares "she" is going to ride the madal because her lover, Sriman Narayana, is ignoring her. These two poems are among the most mellifluous of Azhvar pasurams. Please permit me to submit a few comments from these two madals of Thirumangai Azhvar.

At the very start Azhvar declares that his love is for the Archa moorthees (for SVs, there are five kinds of avatharas, all equal, full, and complete, and one of them is the idols we see in temples and at hoomes). He is so much in love with the experience of love for these archa moorthees, he says he does not even care for the lord in parama padam, i.e. Sri Vaikuntam. In fact he says Sri Vaikuntam is a sorry excuse for the pleasure he derives from the adulation of earth bound archa moorthees. Here is what he says about the two.

"ஏரார் முயல் விட்டு காக்கைபின் போவதே"


For a hunter after meat, rabbit is an easier catch yielding sumptuous tender meat, and in contrast a crow is hard to hit and yields only scraps.

Taken over by what Azhvar says, "கடல்போலும் காமத்தராயினார்" the desire for union with "her" lover (a metaphor for mOksham, SVs explain), Azhvar says one becomes oblivious to any shame. This is how "she" describes that state.

"வாரார் வனமுலை வாசவதத்தையென்று ஆரானும் சொலப்படுவாள், அவளும் தன் பேராயம் எல்லாம் ஒழிய பெருந்தெருவே தாரார்
டந்தோள் தளைக்காலன் பின் போனாள், ஊரார் இகழ்ந்த்திடப்பட்டாளே..."


This is a reference to a lady who followed her lover openly along the main street to the taunts of the general public.

In the course of "her" expression of ocean of desire for Sriman Narayana, the Azhvar observes that the practice of மடல் ஊர்தல் is forbidden for women among the Tamils, yet "she" says she does not care, she still wishes to openly do it for all to see. Here is what "she" says:

"அன்ன நடையார் அலர் ஏச அவ் ஆடவர் மேல் மன்னு மடல் உரார் என்பதோர் வசகமும் தென் உரையில் கேட்டு அறிவதுண்டு, அதனை யாம் தெளியோம், மன்னும் வடநெறியே வேண்டினோம்"

All this is interspersed with some of the most exquisite poetry on the beauty of various Archa Moorthees of Sriman Narayana.

Finally "she" ends both the short version and the long version, with a determined declaration that "she" will ride that madal for all to see, such was the deep love "she" had for her beau, Sriman Narayana.

The short version ends with:

"ஊரார் இகழி
லும் ஊராது ஒழியேன் நான் வாரார்பூம் பெண்ணை மடல்!
"

and the long version ends with:

"உன்னி உலகறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல்!"



It is this captivating poetry of Azhvars that took me down to the depths of piety in what I call my "poorvashrama". If only we can live in delusion, I would never want to leave the company of Azhvars.

Cheers!
 
Last edited by a moderator:
You may not believe this Prof. Sir! But, I was expecting your reply, as soon as I posted about 'madal oorthal'.

I read about Azhwar's bhakthi towards Lord Sriman NArAyanA which makes him talk about this, assuming him

as the 'lady love' of the Lord. Since you can explain it better, I was just waiting! Thank you.


Even in ThirukkuraL, there is one kural which mentions about 'madal oorthal' of the lady love. But I avoided it.

Regards...
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 355


பிரிவின் துயரம்.

தலைவன் பிரிந்து செல்ல நேர்ந்தால், தலைவி தன்
நிலைமை மிகவும் சோகமாவதை உணருகின்றாள்.

தன் தலைவன் தன்னைப் பிரிந்தால், துயர் தாங்காது
தன் உயிர் போய்விடும் என்பதை உரைக்கின்றாள்.

சொல்வது பிரிந்து செல்வதில்லை என்று இருப்பின்,
சொல்லலாம் தன்னிடம்; அவ்வாறு இல்லையெனில்,

அவன் திரும்பி வரும்வரை, உயிருடன் இருப்போரிடம்
அவன் விடைபெறலாம், என்தை அறிவிக்கின்றாள்!

'செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை', என்கின்றாள்.

பிரிவுத் துயரம் என்ன என்று அறிந்துள்ள தலைவனும்
பிரிந்து செல்லுவதால், அவன் பிரியமாட்டேன் என்று

சொல்லுவதைத் தான் இனி நம்பவும் முடியாது எனச்
சொல்லுகின்றாள் தலைவி, தன் மனம் மிக வருந்தி!

'அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்'. இது குறட்பா.

பிரிவுத் துயரம் கொடியது என்பதை அறிந்த தலைவி,
பிரிவு தரும் மன மாற்றங்களைத் தெளிவாக்குகிறாள்.

:pout:


 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 356


நம்ப முடியாது!

அவளைப் பிரிந்து செல்லவே மாட்டேன் என்று சொன்னவன்,
அவளைப் பிரிந்தால், அந்தத் தலைவியின் நிலைமை என்ன?

'பிரிந்து செல்ல மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னவன்,
பிரிந்தால், அவன் சொன்னது உண்மை என நம்பிய என் மீது

என்ன குற்றம் இருக்க முடியும்?', என்ற கேள்வியை எழுப்பி,
எந்தக் குற்றமும் தன் மீது இல்லை என்று அறிவிக்கின்றாள்.

'அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளிந்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு', என்பதே கேள்வி!

தன் தலைவன் பிரிந்து சென்றால், மீண்டும் அவனைச் சேரத்
தன்னால் முடியாது என்பதை, அவள் அறிந்துகொள்கின்றாள்.

'பிரிவு வந்தால் மீண்டும் கூடுதல் கடினம் என்பதால், அந்தப்
பிரிவு வராமலே காத்துக்கொள்ள வேண்டும்', என்கின்றாள்.

'ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு', என்பது தெளிவு!

உறுதியாகச் சொன்ன சொற்கள் என்று நம்பி இருக்காமல், தன்
உறுதியான தீர்மானத்துடன், பிரிவைத் தடுத்திட விரும்புகிறாள்!

 

தொடரும் நினைவுகள்...

தன் நினைவுகளில் தலைவனே இருக்கின்றான் எனச் சொல்ல, பல திரைப்படப் பாடல்கள் உள்ளன.
இதோ ஒன்று: 'நீ எங்கே, என் நினைவுகள் அங்கே'. :music:

 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 357


கல்மனமும், கைவளையும்...

'விட்டுப் பிரியேன்', என வாக்குத் தந்த தலைவன், அவளை
விட்டுச் செல்கிறான்; அவளும் புலம்பலைத் தொடர்கிறாள்!

சென்று வருகிறேன் எனக் கூறும் அளவுக்குக் கல் நெஞ்சம்,
சென்றவரிடம் உள்ளபோது, அவர் மீண்டும் திரும்பி வந்து

தன்னிடம் அன்பு காட்டுவார் என நம்புவது வீண்தான் என்று,
தன் மனம் நினைப்பதைச் சொல்லுகிறாள், அந்தத் தலைவி.

'பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை'. இது அந்தக் குறட்பா.

பிரிந்து சென்றவனை நினைத்து, உருகி, அவள் கைகளில்
இருந்து வளையல்கள் நழுவிக் கழன்று கீழே விழுகின்றன.

'தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்ற செய்தியை, இவ்
வளைகள் ஊராருக்கு அறிவிக்காதோ?', என்று கேட்கிறாள்.
'துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை'. இது அவள் கேள்வி.

பிரிந்தவன் திரும்புவது நடக்குமோ என வியக்கும் தலைவி,
பிரிவுச் செய்தியை வளைகள் அறிவிக்குமென அஞ்சுகிறாள்.

:fear:
 

Latest posts

Latest ads

Back
Top