• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


வள்ளுவரைப் போற்றுவோம் ..... 358

பிரிவு கொடிது!

துன்பம் தரும், தம் இனத்தவர் இல்லாத ஊரில் வாழ்வது;
துன்பம் இன்னும் அதிகம் தரும், இனியவரைப் பிரிவது!

'இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு', என்பது குறட்பா.

காமத்தை, தீயோடு ஒப்பிட்டுக் கூறுவது உண்டு; ஆனால்,
காமம், சுடும் தீயில் இருந்து வேறுபாடு கொண்டுள்ளதே!

தொட்டால்தான் நெருப்பு சுடும்; ஆனாலும் காதலர் விலகி
விட்டால் சுடும் நோயைப் போல, தீ விலகினால் சுடுமோ?

'தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ', என்பது கேள்வி!

பிரிந்து காதலன் சென்றபின், பிரிவின் துயரையும் தாங்கி,
பிரிவைப் பொறுத்து வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால்,

தன்னால் அவ்வாறு இருக்க முடியாது என மறைமுகமாக,
தன்னிலை விளக்கத்தை அளிக்கின்றாள், அந்தத் தலைவி.

'அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்', என்பதே குறள்.

இனியவரைப் பிரிந்து வாழ முடியாது; பிரிந்து சென்றுவிட்ட
இனியவர் மேலுள்ள காதல் சுடுவதால், வாழ்வது அரிதாகும்!

:love: . . . :flame:

 

பிரிவின் கொடுமை!

விதியின் சதியால் பிரிந்த ஜோடிகள் ஆயினும், இனிய சுற்றம் ஆயினும், உற்ற நண்பர்கள் ஆயினும்,

அவர்களுக்கே பிரிவின் கொடுமை புரியும்!! :pout:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 359

மறைக்க முடியவில்லை!

காதல் வயப்பட்ட தலைவி, தலைவனை எண்ணி உருகி,
காதலை மறைக்கவும் முடியாது புலம்பி இருக்கின்றாள்!

இறைக்க இறைக்கப் பெருகிடும் ஊற்று நீரைப் போலவே,
மறைக்க மறைக்க, காதலும் அதிகமாகிப் போகின்றதாம்!

'மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்', என்பது அவளது ஆய்வு ஆகும்!

காதல் மிகுதியாகி அது தலைவிக்கு நோய் போல ஆகி,
காதலை மறைக்கக் கடினமாகச் செய்கின்றது. மேலும்,

அந் நோய் தந்தவனிடமே காதலைக் கூறலாம் என்றால்,
தன் நாணம் அதிகமாகித் தடுப்பதாகவும் நினைக்கிறாள்!

'கரத்தலும் ஆற்றேன் இந்நோய்நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணம் தரும்', என்று கூறுகின்றாள்.

மெல்ல முடியாது, விழுங்க முடியாது இருப்பது போலவே,
சொல்ல முடியாது, மறைக்க முடியாது அவள் தவிக்கிறாள்.

:bowl:


 

நகைச்சுவை ...

ஒரே சுவையைப் பருகினால் திகட்டிவிடும்!

இதோ மாறுபாட்டிற்கு ஒரு நகைச்சுவை, அடுத்து வருகிறது....


வள்ளுவம் அடுத்த பக்கத்தில் தொடரும்!


நட்புடன்,
ரா. ரா :)
 
அதுதான் காரணம்!

அழகுக் கலை மிகுந்த இக்காலத்தில், சிகை

அழகு நிலையங்களும் பெருகி வருகின்றன.

அரசியல் தலைவர்கள் விரும்பிச் செல்லும்,
அரச மரியாதை தந்திடும் அழகு நிலையம்!

ஒரு தலைவர் செல்ல, அலங்கார நிபுணர்,
ஒரு கேள்வி அவரைக் கேட்க விழைந்தார்.

சுவிஸ் வங்கி என்றால் என்னவென, அவர்
குவிஸ் நிகழ்ச்சிக் கேள்வி போலக் கேட்க,

மிரண்ட தலைவர், வேலை முடிந்தவுடன்
இரண்டு நொடிகளிலே ஓடிவிட்டார்; பின்

வேறொரு தலைவர் அதே நிலையம் போக,
வேறொரு சந்தேகத்தை நிபுணர் கேட்டார்.

'கருப்புப் பணம் எவ்வளவு சேர்த்தலாம் என
விருப்பம் இருக்கிறது?' என்று கேட்டவுடன்,

பயந்து போன அவரும், பேசாமல் அமர்ந்து,
வியந்து போனார், ஏன் இக் கேள்வி என்று!

எல்லாத் தலைவர்களும் கூடிப் பேசி, ஒரு
நல்ல உளவு அதிகாரியை அங்கு அனுப்பி,

ஏன் இவ்வாறு கேள்விகளைக் கேட்கிறான்
என்று அறிந்து வருமாறு கேட்டுக்கொள்ள,

அதிகாரி அழகு நிபுணரை அணுகித் தனது
அதிகாரத் தோரணையில் மிரட்டிட, அவர்

'ஏன் கேள்விகளை அவ்வாறு கேட்டேனா?
என் தொழிலுக்கு உதவி செய்யவே, ஐயா!

இப்படிக் கேள்விகள் கேட்டால், அப்போது
எப்படி வளைந்த தலை முடியும், விறைத்து

நேராக மேல் நோக்கியே நிற்கும்; அப்போது,
விரைவாக என் பணி முடிப்பேன்', என்றார்!

:becky: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 360

கடல்போலக் காதல்...


மனித வாழ்க்கையைக் கடலாகப் பலரும் சொல்லுவர்;
இனிய காதலையே கடலாகச் சொல்லுகிறாள் தலைவி.

கடலைப் போலக் காதல் சூழ்ந்து உள்ளது; ஆனால், இக்
கடலைத் தாண்டும் தோணிதான் கிடைப்பதே இல்லை!

'காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்', என்பது குறள்.

நட்புடன் பழகும் நிலையிலேயே, தன் காதலன், தன்னை
விட்டுப் பிரிந்து சென்று துயரம் தருகின்றானாம். அவன்

பகைவனாக இருந்துவிட்டால், இன்னும் எத்தனை வகை
வகையாகத் துன்பங்கள் தருவானோ, எனக் கேட்கிறாள்.

'துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்', என்பதே கேள்வி!

காதல் தரும் இன்பம் கடல் போலப் பெரிதாகும்; ஆனால்,
காதலர் பிரிவு தரும் துன்பம், அதை விடவே பெரிதாகும்!

'இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது', என்பது குறட்பா.

உடன் இருந்து, இனிய தோழமை தந்தவன் விலகிப் போக,
உடல் வருந்தி, காதல் நோயால் துன்புறுகின்றாள் தலைவி!

:ballchain:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 361

பிரிவின் கொடுமை...

தலைவனைப் பிரிந்த தலைவி, நித்திரையே இன்றி,
அலைபாயும் மனத்துடன், இரவுகளில் தவிக்கிறாள்.

உலக மக்கள் அனைவரையும் நிம்மதியாகப் படுத்து
உறங்க வைக்கும் இரவு நேரத்திற்கு, தான் ஒருத்தி

துணையாக விழித்து இருப்பதாகவும், மற்ற யாரும்
துணையாக இருக்கவில்லை என்றும் கூறுகிறாள்.

'மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை', என்கிறாள்.

தன் தலைவன் பிரிந்த கொடுமையைவிட அதிகமாக,
நீண்ட நெடும் இரவு கொடுமை தருகிறது, என்கிறாள்.

'கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா', என்பது அவளின் கலக்கம்.

அவள் நெஞ்சம் தலைவனிடத்திலேயே இருக்கிறது;
அவளும் அதேபோல அவனிடம் இருக்க முடிந்தால்,

கருமையான அவளின் கண்கள், அவனைக் காண
கண்ணீர் வெள்ளத்திலே நீந்த வேண்டி இருக்காது!

'உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்', என்று அவள் கூறுகிறாள்.

கொடிய நெஞ்சம் கொண்டு, தன் தலைவன் பிரிய,
நெடிய இரவுகளில் தவிக்கிறாள் அந்தத் தலைவி.

:pout:
 
தலைவியின் நினைவுகள் தலைவனிடமே செல்லும் என்று கூற,

பல திரையிசைப் பாடல்கள் உண்டு. இதோ ஒன்று:


'நீ எங்கே என் நினைவுகள் அங்கே;


நீ ஒருநாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்'. :music:
 
....பிரிவின் கொடுமை...
Dear Mrs. RR, emboldened by your response to my earlier post, here I am sharing some more about Azhvar Nayaki feeling the pinch of separation. I hope you and other poetry lovers will enjoy.

Of the 12 Azhvars, there were three Azhvars who saw themselves as தலைவி and Sriman Narayana as தலைவன். Of these three, such bhavam came naturally to Andal as she had the advantage of gender by birth. But the other two, Nammazhvar and Thirumangai Azhvar, in spite of having been born male, expresses such tender female love to their தலைவன் it is a matter of wonderment just as equal to enjoyment. In fact Thirumangai Azhvar says in Siriya Thirumdal, that of the four Purusharthas, Darma, Artha, Kama, Moksha, "she" has no use for the other three but kama for Sriman Narayana is what "she" values.

There are couple of other Azhvar who took on female bhavam, but not as தலைவி, but as mother. One is Kulasekarazhvar, he sings from the POV of Kausalya and Devaki, both experienced பிரிவின் கொடுமை, but not that of a lover. The other is Periyazhvar as Yesoda.

Now, coming back to பிரிவின் கொடுமை of a lover, both Nammazhvar and Thirumangai Azhvar sing about this from three POV, one from "her" own, one from that of "her" mother, and one from that of "her" தோழி. Let me start out with a verse expressing the anxiety of a mother seeing her daughter suffer from பிரிவின் கொடுமை. This verse is from the Prabhandham Thirunedundandakam (திருநெடுந்தாண்டகம்), verse #11. I am going to type the verse in a manner that is easy to read.

பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடுங் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எள் துணை போதும் என் குடங்கால் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டு விக்கி மணிவண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே!


Archaic words:
மட்டு விக்கி = drunk to the brim with honey
முரலும் = ரீங்காரம்
கட்டுவிச்சி = female soothsayer


Free translation:
Oh soothsayer, tell me truthfully, what did this ocean-hued one do to my little girl? She dresses up in beautiful silk garments, but is stricken with sorrow, her eyes are wet, and she never sleeps, not for a moment does she take refuge in my bosom. The only words she speaks are, where is my lord of Sri Rangam. This beautiful deer-like little girl with bees buzzing, drunk with honey from the flours my little girl wears in her hair, is under his influence, who can save her?

SVs believe three stages of bhakti -- bhakti, parabhakti, and paramabhakti. The first stage of bhakti is exclusive devotion to lord Sriman Narayana, one that is like a dedicated wife, the உன்னையல்லால் ஏதும் குறை வேண்டேன் kind, the kind of Bhakti that is criticized as narrow-minded. The second stage is one in which the jeeva sees Sriman Narayana in everything. The third stage of Parama Bhakti is one in which the Bhakta cannot tolerate even a moment of separation from the lord. Azhvar is supposed to be describing that stage in this verse.

If there is interest I can write about Azvar pasurams along these lines of divine love.

Cheers!
 
Last edited by a moderator:
............
If there is interest I can write about Azvar pasurams along these lines of divine love...............

Thank you, Prof. Sir! As I wrote earlier in one of my posts, I am reading the entire III part of ThirukkuraL only now!

And I have not read much of Azhwar's poems. Please continue to give the parallel divine love in this thread.


Now I take this opportunity to post a song of Smt Ambujam Krishna to which my Guru Sri. S. R. set the tune...


ராகம்: நீதிமதி தாளம்: ஆதி

அரவிந்த லோசனனே கருணை பொழி
அன்னை மருவும் நீல மேனியனே - அரவணைத்துயில் (அரவிந்த)

நாராயணா ஸ்ரீமன் நாராயணா என்று
பிறவிப் பிணி அகற்றும் திரு நாமம் உரைத்தேனே (அரவிந்த)

பட்ட சிறுமை போதாதோ - உன்
பக்கத்தில் அழைக்கலாகாதோ
விட்டுப் பிரிந்த மனம் வாடாதோ - பாதம்
தொட்டு வணங்கும் என்னைக் கண் பாராதோ (அரவிந்த)

Here is the song sung by Sri. P. Unnikrishnan... from our school of music!!

CHENNAIYIL THIRUVAIYAARU = UNNI KRISHNAN = ARAVINTHA LOCHANANE KARUNAI POZHI - YouTube
 
கண்களே, கண்களே!

தன் காதல் நோய்க்கு, தன் கண்களே காரணம் என்று

தன் கண்களைக் கடிந்துகொள்ளுகின்றாள் தலைவி.
:faint2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 362

கண்களே காரணம்!

தன் துயருக்குக் காரணம் தன் கண்களே என்பதாகத்
தன் கண்களிடம் கோபம் கொள்ளுகிறாள் தலைவி.

தலைவனைக் கண்டு, காதல் கொள்ளச் செய்ததால்,
தலைவனைப் பிரிந்த நேரம், நோயாகித் தாக்குகிறது!

தானே குற்றம் செய்துவிட்டு, அவன் பிரிந்து போனதும்,
தானே அழுவது ஏன் எனக் கண்களைக் கேட்கின்றாள்.

'கண்டாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது'. இது அவளது கேள்வி.

காதல் கொண்டால் வரும் விளைவுகளை அறியாமல்,
காதல் கொள்ள வைத்த, மை உண்ட தனது விழிகளே,

பிரிந்து தன் காதலன் சென்றபின், அவனைக் காணாது,
வருந்துவது ஏனெனத் தன் சந்தேகத்தைக் கேட்கிறாள்!

'தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்', என்பது அந்தக் கேள்வி.

கண்களால் கண்டு, காதல் வயப்பட்டு, பிரிவால் வருந்தி,
கண்களைக் கேட்கின்றாள் வித விதமான வினாக்கள்!

:dizzy:
 

திருமதி. சுதா ரகுநாதனின் இனிய குரலில் திரையிசைப் பாடலாக வந்து,

பின் கச்சேரிகளில் பாடும் பிரபலமான பாடல் இதோ:


ராகம்: மதுவந்தி. தாளம்: ஆதி


Kanda naal muthalai!!! - YouTube
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 363


கண்களின் துயரம்!


தான் காதலிக்கக் காரணமான தன்னுடைய இரு கண்கள்,
தாமே அழுவதைக் கண்டு, வியப்படைகின்றாள் தலைவி.

தாமே பாய்ந்து சென்று, தலைவனைக் கண்டு, காதலித்து,
தாமே இப்போது அழுவது, நகைக்கத் தக்கதே என்கிறாள்!

'கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து'. இது குறட்பா.

தப்பிப் பிழைக்க முடியாத காதல் நோயைத் தந்த, மையுண்ட
தன் கண்கள், அழ முடியாமல் வற்றிப் போயின, என்கிறாள்.

'பெயலாற்றா நீருலர்ந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து', என்பது குறள்.

தலைவன் பிரிவால் தலைவி மனம் வருந்தி, அவள் மனம்
நிலை கொள்ளாமல் தவிக்கிறது; உறக்கமும் போகின்றது.

கடல் போலக் காதலைத் தரக் காரணமான தனது கண்கள்,
கடும் துன்பம் அடைகின்றன உறக்கம் இல்லாது, என்கிறாள்.

'படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்'. இது குறள்.

கண்களால் பார்த்து, காதல் வயப்பட்டு, தலைவன் பிரிந்ததும்
கண்களே வற்றும் அளவு அழுது துயரப் படுகிறாள் தலைவி!

:Cry:

 
hi
yaar printhalum vedanai paathi...................யார் பிரிந்தாலும் வேடனை பாதி..........மறக்க முயன்றேன் முடியவில்லை.......

regards
tbs
 
Last edited:
..yaar printhalum vedanai paathi...................யார் பிரிந்தாலும் வேடனை பாதி..........மறக்க முயன்றேன் முடியவில்லை...............

Transliteration சில சமயம் காலை வாரிவிடும்! வேதனைதான்! :)
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 364


கண்களே துன்பம் அடையுங்கள்!


தலைவனைப் பிரிந்து துயரம் வந்ததால், கண்களில்
தலைவிக்குக் கண்ணீர் பெருகி வந்து வருத்துகிறது!

தான் காதல் வயப்படக் கண்களே காரணம் ஆனதால்,
தன் கண்களின் துன்பத்தால் மகிழ்வு அடைகின்றாள்!

தான் பெற்ற துன்பம் போலக் கண்களும் பெறுவதால்,
தான் மகிழ்வதாகத் தலைவி கண்களிடம் கூறுகிறாள்.

'ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது', என அவள் குரல்!

'விரும்பி இழைந்து அவரைப் பார்த்த கண்களே! நீவீர்
வருந்தி, அவரை நினைத்து, உறங்காது, ஒரு துளியும்

கண்ணீரே இல்லாது வற்றித் துன்பப்படுங்கள்!' என்று

கண்களிடம் தலைவி கூறுவதாக டுத்த ஒரு குறட்பா.

'உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்', என்பதே அது!

கண்களே தனக்குக் காதல் நோய் தந்ததாக எண்ணி,
கண்களிடம் தன் கோபத்தைக் காட்டுகிறாள் தலைவி!

:pout:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 365


கண்களின் தன்மை.


அன்பு மனத்தால் காட்டாது, சொல்லினால் மட்டுமே
அன்பு காட்டியவனைக் காணாத தனது கண்களுக்கு,

அமைதியே இல்லாமல் போனதாகக் கருதுகின்றாள்;
அமைதியான உறக்கமே இன்றித் துயரப்படுகின்றாள்.

'பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்', என்பது குறட்பா.

அவன் வராவிட்டால் உறங்காது, வந்தால் உறங்காது
இவற்றினிடையே துன்பப்படுகின்றன அவள் கண்கள்!

'வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்', என்று வருந்துகிறாள்.

பறை சாற்றி, காதலைக் கண்கள் அறிவித்தால், அவள்
மறைப்பதை ஊரார் அறிவதும், அரிய செயல் இல்லை!

'மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து', எனத் தீர்மானம்!

தலைவன் பிரிந்து சென்றதால், கண்களுக்குத் துன்பம்;
தலைவியின் பேசும் விழிகளால், ஊரார் அதை அறிவர்.

:drum: . . . :gossip:


 
பசலை நோய்!

தலைவனைப் பிரிந்து துயர் கொள்ளும் தலைவிக்குப் பசலை நோய் வருகிறது. அந்நோயால் அவள் உடலின்

பொன்னிறம் மாறி, வெளிறிப் போகிறது; உடல் மெலிந்தும் போகிறது; உடல் நலம் குன்றியதுபோல மாறுகிறது!

அந்த நிலையை, அடுத்த அதிகாரத்தில் வர்ணிக்கின்றார் திருவள்ளுவர். :love: . . . :sick:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 366

பசலை வாட்டுகிறது!

தலைவன் தன்னைப் பிரிய நேரும் பொழுது, தலைவி தன்
நிலைமை பற்றியே சிந்திக்காது, விடை கொடுக்கின்றாள்.

ஆனால் அந்தப் பிரிவாலே வந்த பசலை நோயை, அவள்
யாரிடம் சென்று சொல்ல முடியும் என்று வியக்கின்றாள்!

'என்னைப் பிரிவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால்,
என் உடல் மேல் பசலை படர்வதை யாரிடம் சொல்வேன்?'

'நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற', என அவள் வினா.

'தன் பிரிவால் பசலை நோய் தந்தார் என்ற பெருமிதத்தால்,
என் மேனியில் பசலை ஊர்ந்து பரவுகின்றது', என்கின்றாள்.

'அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு', என்பது அந்தக் குறள்.

அவளது அழகு, நாணம் இரண்டும் எடுத்து, கைம்மாறாக
அவளுக்கு, காதல் நோயும், பசலை நோயும் தந்துவிட்டார்.

'சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து', என்கிறாள் தலைவி.

விடை கொடுக்கும்போது சிந்திக்காது விட்டுவிடுகிறாள்;
இடை மெலிந்து, பசலை வாட்டிட, கண்ணீர் விடுகிறாள்!

:ballchain: . . . :whoo:
 
திருவாய்மொழி.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் பசலை நோய் வாட்டுவது பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

Prof. Nara அவர்கள் அதைப் பற்றி எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்.
விரக தாபத்தை, விரசம் இல்லாமல் ரசமாகச் சொல்லுவது, ஒரு சாதனையே!
:first:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 367


ஏன் என் பசலை நோய்?


தன் நினைவு முழுவதும் தலைவனே இருந்திட, எப்படித்
தன் உடலில் பசலை நோய் பரவுகிறது என வியக்கிறாள்.

'அவரைப் பற்றியே என் நினைவுகள்; எப்போதும் பேசுவது
அவரின் திறமையே; பின் ஏன் கள்ளமாக வந்தது பசலை?'

'உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு', என்பது அவள் வியப்பு!

அவளைப் பிரிந்து அவன் சிறிது தூரம்கூடப் போகவில்லை;
அவள் மீது அதற்குள் பசலை நிறம் ஊர்ந்து படர்கின்றதாம்!

'உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்எம்
மேனி பசப்பூர் வது', என்பது மேலும் அவள் வியப்பு!

விளக்கின் ஒளி குறைந்தால், உடனே பரவும் இருள்போல,
விலகிக் காதலன் போனால், உடனே பசலை படர்கின்றது.

'விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு', என்பது ஒரு கணிப்பு!

கொஞ்சம் பிரிந்து தலைவன் சென்றாலும், தலைவியின்
நெஞ்சம் வருந்திப் பசலை நோயும் உடனே வருகின்றது!

:love: . . . :sick:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 368


ஊர் பழிப்பினும், வேண்டும் பசலை!


'என் மேனியில் பசலை படர்வதை ஊர் பழிக்கிறது; ஆனால்,
என் தலைவன் பிரிந்ததால் என்பதைக் கூறுவதில்லையே!'

'பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்', என்பது குறள்.

தலைவன் நலமாக இருப்பான் என்பதற்குப் பசலை வரின்,
தலைவி அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறாள்! அவள்,

'பிரிவுக்கு ஒப்புக்கொள்ள வைத்தவர் நன்னிலை பெற்றால்,
பரவும் இந்தப் பசலை என் மீதே இருக்கட்டும்', என்கின்றாள்.

'பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவார் எனின்', என்பது குறள்.

'பிரிவுக்கு உடன்பட வைத்தவரை அன்பில்லாதவன் என்று
பிறர் தூற்றார் என்றால், நானும் பசலை படர்ந்தவள் என்று

பெயர் எடுப்பது நல்லதுதான்' என்று உரைக்கின்ற தலைவி,
உயரிய காதலுக்காக அழகை இழப்பதிலும் மகிழ்கின்றாள்!

'பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்'. இது அவள் குரல்.

பசலை நோய் வந்து, தலைவன் பிரிவினை அறிவித்தாலும்,
இளமை அழகு குறைவதை, அவன் நலனுக்காக ஏற்கிறாள்!

:love: . . . :happy:


 

இருவருக்கும் அன்பு!


ஒருவர் மீது அன்பு காட்டி, அதை அவர் மறுத்தால், அன்பு காட்டியவருக்கு அது மிக மன வருத்தம் தரும்.


தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வதே இனிமை தரும். பரஸ்பரம்


கொள்ளும் காதலின் பெருமையை, வள்ளுவர் அடுத்த அதிகாரத்தில் உரைக்கின்றார்.



காதலுக்கு மட்டுமன்றி, சுற்றம் மற்றும் நட்பிடம் கொள்ளும் அன்புக்கும் பொருந்துவது போல அமைந்து

இருப்பதே, வள்ளுவத்தின் சிறப்பு!

:thumb:

 

Latest ads

Back
Top