Raji Ram
Active member
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 382
காலையும், மாலையும்!
காலை நேரம் இல்லாத பிரிவுத் துன்பம், மயங்குகிற
மாலை நேரம் வந்து சஞ்சலம் கொள்ள வைக்கிறது!
'காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன?
மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன?' என,
வியந்து போய்க் காதலர் கேட்பதாகத் திருவள்ளுவர்,
நயமான ஒரு குறட்பாவை நமக்கு அளித்திருக்கிறார்.
'காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை', என்பதே அக் குறட்பாவாகும்.
காதல் நோய் பற்றி நன்கு ஆராய்ந்து, மிக அருமையாக,
காதல் நோய் வருத்தும் விதத்தை, நமக்கு உரைக்கிறார்!
காலையில் அரும்பாகத் தோன்றி, பகல் நேரம் வளர்ந்து,
மாலையில் மலருவது காதல் நோய். இது அவர் முடிவு!
'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்'. இது குறட்பா.
காலைப் பொழுதில் வருத்தாத காதல் நோய், காதலரை
மாலைப் பொழுதில் வருத்துவது, வினோதமான ஒன்று!