Raji Ram
Active member
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 395
மறைந்த பொருள்!
தன் தலைவியின் தோற்றத்தில் மறைந்துள்ள பொருள்
என்ன என்று, தேடி அறிந்துகொள்கின்றான் தலைவன்.
நல்ல மணி மாலையில் ஒளிந்துள்ள நூலைப் போல,
மெல்லிய அவளழகில், மயக்கும் குறிப்பு இருக்கிறது!
'மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு'. நன்று!
பூவின் அரும்பில் வாசம் மறைந்து உள்ளது போலவே,
பூவையின் புன்சிரிப்பு அரும்பில், குறிப்பு ஒன்றுள்ளது.
'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு'. இது குறள்.
வளைகளை அழகுற அணிந்தவளின் கள்ளக் குறிப்பில்,
துளைக்கும் என் துன்பம் தீர மருந்து ஒன்று இருக்கிறது!
'செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து', என்கிறான்.
தன் தலைவியினது சின்னச் சின்னச் செய்கைகளால்,
தன் மீது அவள் கொண்ட பேரன்பை உணருகின்றான்!
:decision: