• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

raji,

re your post #999,

why should we mix culture and bhakti?

there is an intrinisic beauty in the arts, shorn of religiosity. i agree, that to a large degree carnatic music and bharatanatyam are still tied to the apron strings of bhakti. meaning, they represent a culture as of fashion a few centuries ago.

i feel, that it is time, that we move on from that genre, to modern themes. why not have a dance ballet of today's woman ie bharathiar's pudhumai penn, handling the multiple role of career woman, wife, homekeeper, cook, mother and wife - all with apparent ease?

why not introduce the theme of a job interview for an item piece in a bharatanatyam performance - instead of the same old predictable stuff.. Aranga Pooja, Thillana, Varnam, Nirdham, Jadhiswaram with only perhaps a kuravanji stuff thrown in, in the name of 'pop' stuff?

it is not that we do not know how to choreograph such stuff... why is there no willingness? what is it that forbids us to get out of the rut, and bring bharatanatyam to the popular masses?
 
Last edited:
Dear Sir,

Bakthi is the root for both carnatic music and bharathanAtyam. Even the NAyaka NAyaki bhAvam is based on some deity.

Since we are hearing and seeing these for many years, the change of tradition is not sought after. There was a cutcheri

based on Sanga kAla ilakkiyam too but somehow it did not impress the audience. If all the songs are new, then also the

rasikAs are disappointed. The grandeur of a many established kruthis sung for many years and polished like a diamond stones

draw loud rounds of applause form the audience. Some new songs are introduced by leading artists and reach the masses.

For example Rajaji's 'Kurai ondrum illai' which is not very ancient like the music trinities' songs is very popular now. Two more

such songs are 'mAdu mEykkum kannE' popularized by Smt. Aruna Sairam and 'vishamakkArak kaNNan' by Sudha

Raghunathan (followed by Smt. Aruna in a different folk tune!) Some tunes when changed from the original do not get any

appeal. Rajkumar Bharathi tried a new tune for his grand father's song 'chinnanj chiru kiLiyE' and it was a total flop!! There

are many new songs popularized by the leading artists and they are well received by the audience. To me, the chaste

rendition of well established kruthis like 'chakkani rAja mArgamu', 'Ksheera sAgara', 'AkhilAndEshwari' never become stale!


As far as bharathanAtyam is concerned, most of the artists follow the pattern established for many years now. A few try new

concepts. The one which was based on MK's story by Smt. Padma Subramanyam did not raise to her original standard!


If the tambram girls choose to wear chudidar for their wedding, it might be opposed first. But, may be if they rebel and

continue, people might accept after a few years, seeing the convenience! Will the same logic apply to classical music and

BharathanAtyam? I am not sure, Sir!!


 

என்ன பாடலாம்?


இசை நிகழ்ச்சி செய்யும் கலைஞர்கள், ஒவ்வொரு

இசை நிகழ்ச்சியில் என்ன பாட வேண்டும் என்று

பல மாதங்கள் முன்பே தீர்மானித்து, அவைகளை
பல முறை பாடி மெருகு ஏற்றுவது வழக்கமாகும்!

எல்லா இறைகளையும் பாடினால், அந்த நிகழ்ச்சி
எல்லோருக்கும் மன நிறைவைத் தரும், நிச்சயம்!

ராமரின் பெயரில் சங்கம் அமைந்ததால், கலைஞர்
ராமர், மாருதி பாடல்களை மட்டும்தான் பாடினார்!

ஒரு பாடல் மட்டும், மா மயூரம் ஏறும் அழகனான
முருகன் பற்றியது! பெண் தெய்வங்களே இல்லை!

என்னதான் ஏற்றம் மிகு இசையைத் தந்தும், இதை
எண்ணும்போது, ஒரு குறையாகத்தான் தெரிந்தது!

:nod:
 
ஒரே இறையின் புகழ்.

இசை நிகழ்சிகளுக்கு ஒரு தலைப்பு அளித்து,
இசை விருந்துகள் படைக்கும் கலையரங்கம்.

அஞ்சா நெஞ்சன், அஞ்சனா புத்திரன், பக்தன்
ஆஞ்சநேயன் பற்றிப் பாட ஒரு முயற்சி. நாம்

வெளியே செல்லும்போது, யாரேனும் நண்பர்
எதிரே வந்தால் மனதில் மகிழ்ச்சி வந்திடும்.

அதே போல, தெரிந்த பாடல்கள் சில கேட்டால்,
அதே போன்ற மன நிறைவை அது தந்துவிடும்!

புதிய பாடல்களே தொடர்ந்து வரும்போது, நாம்
புதிய இடத்தில் யாரையும் அறியாத சூழலிலே,

திசை அறியாது நிற்பது போன்ற உணர்வு வரும்!
இசைக் கலைஞர்கள் இதை உணருவது தேவை.

புதிய பாடல்கள் பலமுறை கேட்டால், அவையும்
புதிய இணைப்பாக ரசிகர் மனதில் பதிந்துவிடும்.

புதுப் பாடல்கள் பழகும் வரை, தெரிந்த பாடல்கள்
புதுப் பால்களுடன் இணைந்து வழங்குவது நலம்!

:juggle:
 


யானை படுத்தாலும்....

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பர்!
யானை படுத்தால் ஏன் குதிரை மட்டமாகும்

என்று சிறு வயதில் பொருள் புரியாமல் நான்
சென்றது உண்டு; பின்னர் தெரிந்தது பொருள்!

ஒரு கம்பீரமான யானை படுத்துவிட்டாலும்,
ஒரு குதிரையின் உயரம் இருப்பது நிஜமே!

சூடோ சூடு என்று தட்பவெப்பம் உள்ள எம்
சிங்காரச் சென்னையில் பனியும் உண்டு!

வசை பாடித் திரியும் பலர் இங்கிருந்தாலும்
இசை பாட என்று ஒரு குளிர் மாதம் உண்டு!

வாத்தியம் வாசிப்பவர் பாடு பரவாயில்லை;
வாத்தியம் வசிக்கக் குரல் தேவை இல்லை!

பாடும் கலைஞர்கள் குரல் கம்மிவிட்டால்,
பாடும் பல சஞ்சாரங்கள் 'ததிங்கிணதோம்!'

உச்சஸ்தாயி எட்டுவதற்குத் தம் சுருதியை
நிச்சயமாக இறக்கிவிடுவார்; ஆகையால்,

மந்தரஸ்தாயி ஸ்வரங்கள் பாடும் பொழுது
தந்திரம் போலக் காற்றே வந்திடும்; எனவே

எப்போதும் பாடும் தம் பாணியை மாற்றியே
அப்போது பாடும் சூழ்நிலையும் வந்திடும்!

என்னவானால் என்ன? மேதைகளின் இசை
திண்ணமாக மனதைச் சென்று அடையுமே!

யானை படுத்தாலும் குதிரை மட்டம்; இதுவே
யானை போன்ற உயர் இசைக்கும் பொருந்தும்!


:first:
 
தேசபக்தி...

தேசபக்தி மனதில் கொண்டு, தம் தாய்நாட்டை

நேசமுடன் காத்திடப் பலர் முனைவதில்லை!

சுதந்திர தாகம் பெருக்கெடுத்த அந்த நாட்களில்,
சுதந்திரம் வேண்டுகின்ற உணர்வைத் தூண்டப்

பல பாடல்களும் எழுதினர்; அந்தப் பாடல்களை
பல நாடகங்களில் பாடவும் பலர் உழைத்தனர்.

பாரதியார் மட்டுமன்றி, வேறு பலரும் சுதந்திரப்
பாக்களை இயற்றும் பணியைச் செய்தனர்; ஒரு

இசை விற்பன்னரிடம் வந்தது கேள்வி ஒன்று;
இசையால் தேசபக்தி வளர்க்க முடியுமா என்று!

அவர் சர்வ நிச்சயமாகக் கூறினார், முடியுமென!
அவர் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை!

தேசபக்திப் பாடல்களை மக்கள் மிக ரசித்தாலும்,
தேசபக்தியை அப்பாடல்கள் வளர்க்க முடியுமா?

திரைப்பட ரசிகர்களோடு ஒப்பிடும்போது, நல்ல
இசையை ரசிப்பவர்களின் சதவிகிதம் குறைவே!

வன்முறை தாண்டவமாடும் பற்பல படங்களால்,
வன்மையான சொற்களின் உபயோகமே பெருகி,

சின்னக் காரணங்களுக்கெல்லாம் அடிதடியுடன்
எண்ண முடியாத பொதுச் சொத்துச் சேதங்களும்

நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோமே! இந்த
நடவடிக்கைகளை மாற்ற இசையால் இயலுமா?

சிரிக்கவும் சிந்திக்கவும் அக்கலைஞர் சொன்னார்
சிறிய ஒரு விஷயம்; எல்லோருமே ரசித்தனர்!

'கச்சேரி முடிந்ததும் நான் அமர்ந்த ஜமக்காளம்
கச்சேரிக்குப் பரிசாக எனக்கு வழங்கப்பட்டால்,

அந்த நிமிடமே சக கலைஞர்கள் உபயோகிக்கும்
எந்தப் பொருளையும் சிந்தாமல் சிதறாமலிருக்க

கேட்டுக் கொள்வேனே!' என அவர் சொன்னதும்,
கேட்டிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர்!

நம் பொருள் என்றவுடன் வருகின்றதே அக்கறை;
நம் நாடு என்னும்போது வருமா அதே அக்கறை?

:angel:

 
ஊரும் பேரும்...

சில ஊர்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும்;
சில பெயர்கள் ஊருக்குப் பெருமை சேர்க்கும்!

இசையில் உன்னத நிலை அடையும் கலைஞர்,
இசையால் தம் ஊருக்குப் பெருமை சேர்ப்பார்.

இளம் கலைஞர் கூறிய விஷயம், எல்லோரும்
தினம் நினைவு கொள்ளவேண்டிய விஷயம்.

தான் இசை உலகில் வந்தவுடன், தன் ஊரைத்
தன் பெயரில் இணைக்க அனுமதி கிடையாது!

நல்ல நிகழ்ச்சிகள் தரும் அளவு திறமை வந்த
அந்த நாளே, அனுமதி கொடுக்கப்பட்டதாம்!

குடும்பப் பெருமையால் புகழ் பெற விரும்பும்
குறும்புப் பிள்ளைகள், இதை உணரவேண்டும்!

:grouphug:
 
ராகமும் மன நிலையும்!

இசையால் மயக்க முடியும் என அறிவோம்;
இசையால் முகம் மாற்றம் வருமோ? வரும்!

பதினைந்தாம் மேளகர்த்தா ராகம்; அதனை
அதிகாலை இசைக்க, நன்மைகள் பெருகும்!

மாயமான அந்த மாயாமாளவகௌளையே
மாணவர் இசைப் பயற்சிக்கு அரிச்சுவடியும்!

இன்னொரு விசேஷம் என்னவெனில், இது
தன் ஜன்ய ராகங்களுக்கும், தனது சாயலை,

கொஞ்சமும் மாற்றாது அளிக்கும்! அதுவே
நெஞ்சம் உருகும் இசையாக அமைந்திடும்!

புதிய பாடல் ஒன்றை நாதநாமக்ரியாவில்
இனிய குரலிலே அன்புச் சகோதரிகள் பாட,

ரசிகர்கள் அனைவர் முகங்களும் சோகமாகி,
அதிசயிக்க வைத்தன! சிரிப்பே கிடையாது!

திருப்பிப் போட்ட u போல உதடுகள் வளைய,
திரும்பத் திரும்ப அந்த முகங்களைக் காட்ட,

'இப்படி மனித முகங்களை இசை மாற்றுவது
எப்படி சாத்தியம்?' என்று மனமும் வியந்தது!

கட்டிப் போடும் இசை என்பது இதுதான் என்று
திட்டவட்டமாக சொல்ல வைத்த பாடல் அது!
 
சற்றே விலகி...

இசைக் கலைஞர்கள் சர்க்கஸ் வித்தை போல
இசையை அளிப்பது, தொன்றுதொட்டே உண்டு.

இசையின் அன்னையும், தந்தையும் எனப்படும்
இசையின் சுருதியும், தாளமும் மாறிவிடாதபடி,

கவனமாகச் செய்வார்கள், ரசிகர்கள் அகமகிழ!
அவலமாகிவிடுகின்றன வித்தைகள், இப்போது!

சங்கதிகள் சேர்க்க வேண்டுமே என்று எண்ணி,
பங்கம் செய்கின்றார், நல்லிசை வடிவங்களை!

இறுதியில் அனாதை சங்கீதம்போல் ஆகிறது,
இறுதி வரை சுருதி சேராமல், தாளமும் பிசகி!

கயிற்றின் மீது நடப்பவர், கீழே விழாதவரையே
பயிற்சியின் மகிமையைப் பறைசாற்றிடுவார்!

அரும் இந்த விஷயம், கலைஞர்கள் மனத்தில்
வரும் நாளே, ரசிகர்களின் பொன் நாள் ஆகும்!

:juggle:
 
029-1.JPG
 
Good Morning Madam

All your above writings are really excellent and it speaks of your
vocabulary strength and knowledge over various areas. God Bless you
to render an excellent service in this field with a brightest star like
Sirius, even bright gibbous moon won't obscure Sirius.

All the best.

Balasubramanian
Ambattur
 
நேற்று இன்று நாளை…..


நேற்றைய வாழ்வு கனவைப் போன்றது;
நாளைய வாழ்வு நாம் அறியாதது!

இன்றைய நிஜத்தில் சிறந்தவை சாதிப்பதைச்
சிந்தையில் நிறுத்திச் செவ்வனே முயன்றால்,

சோதனைகளை நாம் எதிர்கொண்டாலும், நம்
சாதனைகளை எதனாலும் தடுக்க இயலாது!

புரியும் செயல்கள், நாளைய நம் கனவில்,
விரியும் இனிதாய்; நிலைக்கும் நினைவில்! :hail:


Superb God Bless you

Balasubramanian
Ambattur
 
என்ன காரணமோ?

காக்கைகள் பல தோட்டத்திலே கரைந்திட,

காரணம் அறியத் தோட்டம் சென்றால், ஓர்

ஆந்தை, மரத்து அடியில் அமர்ந்துகொண்டு,
பேந்தப் பேந்த விழித்து, நடுங்கியது! அதைச்

சுற்றிக் காக்கைகள் கரைவதை நிறுத்தாது
சுற்றி வந்தபடியே இருக்க, சில நொடிகளில்

மரத்தடியை விட்டு உயரப் பறந்து, தோட்ட
மரம் ஒன்றில் அமர்ந்து நோட்டமிட்டது!

தனது குடும்பத்தைப் பிரிந்த காரணமோ?
தன் துணை தேடி அலையும் காரணமோ?

என்ன காரணம் ஆயினும், ஆந்தையின்
சின்ன அசைவுகளைச் சிறைப் பிடித்தேன்!

Here is the video:
Owly.AVI - YouTube

 

சாக்கலேட் கிளாஸ்!


என்னிடம் இசை பயின்ற மாணவி;
இன்று முதுகலைப் பட்டம் பெற்றிட

அமெரிக்க நாட்டில் படிப்பவள்; ஒரு
அதிகாலை என்னிடம் பேசினாள்.

விடுமுறைக்கு இந்தியா வந்ததால்,
எடுக்க வேண்டும் சில கிளாஸ்கள்

என்று வேண்ட, நான் சரி என்றேன்!
நன்று என்று, சாக்கலேட் கொஞ்சம்

எடுத்து வந்து கொடுத்து, விடாது
எடுத்துக் கொண்டாள், கிளாஸ்கள்!

எட்டு வகுப்பு முடிந்த நன்னாளில்,
குட்டிக் கண்ணம்மாவின் வருகை!

நேர நெருக்கடி; அதனால் கிளாஸ்
நேரம் ஒதுக்க முடியாது போனது!

வந்தாள் முன்தினம் அந்த மாணவி;
செய்தாள் எங்களுக்கு நமஸ்காரம்!

சென்றாள் விடை பெற்றுக்கொண்டு;
சென்றாள் என் Fees தராமலே! நான்

தேங்காய் மூடிக் கச்சேரி சிலமுறை
பாங்காய் செய்துள்ளேன், சிறுமியாக!

இப்போதுதான் தெரிந்தது, அதேபோல
இப்போது தேங்காய் மூடி = சாக்கலேட்!

:tsk:
 
வருவார்; போவார்!

வலை நட்பு என்பது எப்போதும் ஒரு

நிலையான இன்பம் தருவதில்லை!

நண்பியாய் வந்து பழக ஆரம்பித்து,
நம்பியுள்ளபோது தாக்குவார், சிலர்.

உறுதுணையாக ஆதரவு அளிப்போர்
மறு யோசனைக்கே இடம் தராமல்

வேறுபாடுகள் சிலவற்றை எண்ணி,
வேறு திசை சென்றிடுவார், பிரிந்து!

நேரில் பாராமல் இருப்பினும், தினம்
நேரில் பார்த்த மகிழ்வைத் தருகின்ற

இணைய தள நண்பர்கள், என்றுமே
துணை வராவிடில், வருத்தம்தானே!

:pout:

 
வருவார்; போவார்!

வலை நட்பு என்பது எப்போதும் ஒரு

நிலையான இன்பம் தருவதில்லை!

நண்பியாய் வந்து பழக ஆரம்பித்து,
நம்பியுள்ளபோது தாக்குவார், சிலர்.

உறுதுணையாக ஆதரவு அளிப்போர்
மறு யோசனைக்கே இடம் தராமல்

வேறுபாடுகள் சிலவற்றை எண்ணி,
வேறு திசை சென்றிடுவார், பிரிந்து!

நேரில் பாராமல் இருப்பினும், தினம்
நேரில் பார்த்த மகிழ்வைத் தருகின்ற

இணைய தள நண்பர்கள், என்றுமே
துணை வராவிடில், வருத்தம்தானே!

:pout:


dear raji,

i think web 'friendship' should be taken in the light of the environment. let us take this forum, for a change.

all of us are anonymous, in the sense, we present a moniker here, which may or may not be our true self. which is not so, with 'skin touch and pinch' friendship. for the latter, there are more facets of the friendship, and there are more filters.

whereas, here in the forum, we go selectively, from topic to topic, and go whether it is applicable, and whether we should bypass, and what 'avatar' we should adopt for the same.

also, we are provided the benefits of instant reaction, and removing any misunderstandings. you might notice, how are, are posts, requesting clarifications. most of them, are almost, immediate reactions, and if found wanting even 1% agreeement, the default tendency is to jump on the person poster, and rarely on the topic itself.

for every point that you say, that you have been betrayed, could there be occassions, that you too have betrayed, belittled or insulted someone here, without knowing ofcourse, and who has not had the courage or the inclination to point it out? would that person not be surprised, when all of sudden, the last straw drops on the camel's back, and up comes a flare up, completely out of proportion?

my own inclination is not to point out insults, most of the time. with people whom i react more often, and some with whom, i exchange pr msgs, i am more forthright. others, i just stop reacting, and responding, because to me it is a pain, to maintain an interest in a person/posting, if that person, ever 'insults' me. and that is my perception of 'insult', because, we all write in english, and much depends on the tone in which it is read.

one needs to be very careful and gentle when nurturing web friendships. one should never mock or sound mocking. to me that would be a death blow to any inclination to proceed. and damage control would be extensive.

hope you dont mind my thoughts on this post of yours. i suspect you feel someone has hurt you. maybe you need to ask them for clarification, and clear the air? to me, if i really cared, that is what i would do.

btw, many a times, to be frank, when i read two sentence cryptic posts, i am at a loss, to distinguish between catty remarks, one upmanship, pure humour, repartees and plain simple answers. add to the confusion is all those animated electronic caricatures - for example someone blowing a whistle..what does that imply? all these are simply above and beyond me - only to prove, that web communication is not as simple as talking to someone face to face.

haveagooddaygoodlady!

ps. as a rule, i never meet my web friendships. for i have heard, that whenever that happens, it is a huge disappointment. a one dimension 'friendship' in a forum, may not, i think, transfer successfully, to flesh and blood.

pps. i have found that any feedback, including this one, sounds harsh. i dont know if you got the same impression, but if you did, i request you to discount the harshness, and substitute your usual soft gentle tone in reading this. that is all this post is meant to be. no more. no less. thank you. :)
 
Last edited:

சாக்கலேட் கிளாஸ்!


என்னிடம் இசை பயின்ற மாணவி;
இன்று முதுகலைப் பட்டம் பெற்றிட

அமெரிக்க நாட்டில் படிப்பவள்; ஒரு
அதிகாலை என்னிடம் பேசினாள்.

விடுமுறைக்கு இந்தியா வந்ததால்,
எடுக்க வேண்டும் சில கிளாஸ்கள்

என்று வேண்ட, நான் சரி என்றேன்!
நன்று என்று, சாக்கலேட் கொஞ்சம்

எடுத்து வந்து கொடுத்து, விடாது
எடுத்துக் கொண்டாள், கிளாஸ்கள்!

எட்டு வகுப்பு முடிந்த நன்னாளில்,
குட்டிக் கண்ணம்மாவின் வருகை!

நேர நெருக்கடி; அதனால் கிளாஸ்
நேரம் ஒதுக்க முடியாது போனது!

வந்தாள் முன்தினம் அந்த மாணவி;
செய்தாள் எங்களுக்கு நமஸ்காரம்!

சென்றாள் விடை பெற்றுக்கொண்டு;
சென்றாள் என் Fees தராமலே! நான்

தேங்காய் மூடிக் கச்சேரி சிலமுறை
பாங்காய் செய்துள்ளேன், சிறுமியாக!

இப்போதுதான் தெரிந்தது, அதேபோல
இப்போது தேங்காய் மூடி = சாக்கலேட்!

:tsk:

dear raji,

people are cheap. i have found, especially, when phoren people return to india, expect huge hospitality and favours, and in return, hand over some chocolates, or a polyester sari.

this generalization, like all, ofcourse errs, but many many occassions, i have heard this complaint.

which makes me, doubly sensitive, whenever i seek anything from my indian relatives. i would rather pay a professional , and get the job done, than currying favours from blood, knowing how busy they are. but this approach is also a double edged sword, for sometimes, this too is taken as an insult. 'why would they go to someone else, when i am around'? they ask.

no matter what, it is tough to win. with relatives. :)

in your case, you would not be wrong, if you wrote an email with details of your bill. nothing wrong with that. otherwise, this girl will never know how cheap she was. probably taught that way, by her parents.
 

Latest ads

Back
Top