• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Dear Sir,

I still wonder how the marriage of my mother and father decided by selecting one packet from the two containing red and white flowers and the marriage of my eldest uncle and aunt who had 5th star combination (supposed to be opposed by both 'east' and 'west' astrologers) were very successful!

Still we go to astrologers ........ one for the father's side and one for the mother's side! :peace:

Regards,
Raji Ram

i can only think that parents are so concerned, frightened, anxious, awed by the immensity (particularly of failure) and above all a deep intense love for their child to have a marriage - to realize perhaps their own unfilled dreams in thaambathiyam.

there may be a lot of trepedition mixed with hope. what do they do when there is two opposing views? do they go to a third one for the deciding vote? i am not mocking anybody, but only curious as to what most people do. i cannot believe the faith to jaadhagam, as the deciding factor in an arranged marriage. in fact i think, this is the starting point. is it not?

que sera sera!
 
கல்யாண வைபோகமே ..... II

உன் போல நல்ல பெண்ணாய்ப் பார்த்திடு!' என்பதே
என அருமை மகனின் கட்டளை ஆனது!

ஒற்றைப் பிள்ளை அதிகம் தாயிடமே பழகுவதால்,
சற்றே அதிகமாய்த் தாய்ப் பாசம் இருந்துவிடும்.

அன்பாகப் பழகி, இனிமையாகப் பேசி,
இன்முகம் கொண்டு, புன்னகை சிந்தி,

நகைச்சுவை உணர்வு, கூர்மதி நுட்பம்,
இசைக்கலை அறிவு அனைத்தும் பெற்ற

குணவதியாயுள்ள பெண் ஒன்றைக் காட்டிடு!'
கணபதியை வேண்டினேன், தினமும் மறவாது!

எத்தனை சிறந்தது என்னைப் பற்றிச் சுயமதிப்பீடு!
அத்தனையும் உண்மையா, ஒரு நூறு விழுக்காடு?

சதுர்த்தி விரதத்துடன், சஷ்டி விரதமும் சேர்ந்தது;
நிவர்த்தி வேண்டுமே, ராகுவின் பிடியிலிருந்து!

கட்டங்கள் தினமும் பார்த்துப் பார்த்து, என்
கண்கள் மிகவும் சலித்தன; மனமும்தான்!

நவக்கிரஹங்கள், மிகுந்த பிரகாசமான
நவமணிகள் போலக் கனவில் சுழன்றன!

அன்புள்ள உடன் பிறப்புக்களின் உதவி கிடைத்தது;
பண்புள்ள 'வரன் வேட்டை' தொடர்ந்து நடந்தது!
:grouphug:

தொடரும் .....
 
கல்யாண வைபோகமே ..... III

'ஐந்தாம் நட்சத்திரம் பொருந்தவே பொருந்தாது என்பார்;
ஐந்தாம் நட்சத்திரம் கொண்ட எங்கள் மாமா, மாமி,

அன்புடன் அனைவரையும் அரவணைத்துப் பெருவாழ்வு
தெம்புடன் வாழவில்லையா? பின் ஏன் ஜாதகம்?' - என

தொடர்ந்து மனத்துள் போராட்டம் நடந்தாலும், ஜாதகம்
தொடர்ந்து பார்த்தோம், முதற் கட்டப் பொருத்தமாக!

தெய்வத் திருவருளால் மகனின் இந்தியப் பயணம்;
தெய்வத்தின் அருள், நல்வாழ்க்கைத் துணை தரணும்.

கன்னட தேசத்தில் நம் இனத்தில், புன்னகை அரசி;
கற்கண்டாய்க் குரல் வளமும், ஞானமும் உண்டு.

பெங்களூரில் அலுவலக வேலையாக வந்து மகன்
தங்கினபோது, 'அவளை'ப் பார்க்க வைத்தோம்!

நல்ல குடும்பம்; உடன் பிறப்பு உண்டு; அவளின்
நல்ல பண்பும், நயமான பேச்சும் எமக்குப் பிடித்தன.

இக்காலப் பிள்ளைகள்போல, பல நாட்கள் உடன் சுற்ற,
எக்காரணமும் இல்லை என மகன் கூற, மகிழ்ந்தோம்!

சில நிமிடங்களில் கண்டான், அவள் தனக்கேற்றவள் என்று;
பல நாட்கள் பட்ட பாடு, வெண்பனி போல மறைந்தது அன்று!

தெய்வத் துணையுடனும், பெரியோர்களின் ஆசியுடனும்,
மெய்யான அன்பு கொண்டு, வாழ்வாங்கு வாழவேண்டும்! :hail:

தொடரும் .....

 
Last edited:
raji,

cho chweeet your son, ... :)

i agree with you... these are all gifts from God. what language do they converse (apart from the language of love)?

i used to know two people who did not have a common language, yet fell in love and married happy.

he was a chinese sailor from hong kong (my friend's brother) who skipped ship in florida and became illegal in the usa. she was from south korea and already an illegal in the usa. they met at a flea market where they both had booths next to each other

(flea markets are stalls in a hall or open air, with private vendors, selling anything and everything, supposed to be cheap, but you don't get the best price till your bargain..much like an oriental bazaar)

as with most illegals, they knew only a few words of english. but somehow what transgressed between them must have been the language of love because within 6 months they married and soon a daughter was born. my friend used to say that even 5 years their english was rusty, and the young baby used to be the translator for her parents to the outside world.

my friend cheung had no answer to the same query that i had you.. what language did they communicate? i guess it would be english and love for your son/dil. for the korean/chinese it must have been only love :)

cheers...
 
Last edited:
Dear Sir,

You have read my write up very fast! The bride is from Bangalore but please note:

கன்னட தேசத்தில் நம் இனத்தில், புன்னகை அரசி;
கற்கண்டாய்க் குரல் வளமும், ஞானமும் உண்டு.

Her parents are Tamil Brahmins from Trichy and our புன்னகை அரசி can read and write Tamil faster than my son!

Regards,
Raji Ram
 
Dear Sir,

You have read my write up very fast! The bride is from Bangalore but please note:

கன்னட தேசத்தில் நம் இனத்தில்,
புன்னகை அரசி;
கற்கண்டாய்க் குரல் வளமும், ஞானமும் உண்டு.

Her parents are Tamil Brahmins from Trichy and our புன்னகை அரசி can read and write Tamil faster than my son!

Regards,
Raji Ram

raji

cho chweet !! :) :)
 
கல்யாண வைபோகமே..... IV

'வரன் வேட்டை' முடிந்தது; மனங்கள் மகிழ்ந்தன;
வரும் நல்ல நாட்களில் சுப வேலைகள் வந்தன!

இரு வாரங்களே மகன் இந்தியாவில் இருப்பான்;
சிறு இடைவெளியில் 'நிச்சியதார்த்தம்' செய்யணும்.

சிங்காரச் சென்னையில் இந்த ஏற்பாடு ஆரம்பம்;
பாங்காக வேண்டியவை வாங்கி வைக்கணும்.

சுற்றம் நட்புக்கெல்லாம், தொலைபேசி வழியே
உற்ற நேரத்தில் வந்தடைய, அழைப்புச் சென்றது!

மோதிரம் கூட அணிய விரும்பாத மகனுக்கு - சிறு
மோதிரம் நாங்களே தேர்வு செய்து வாங்கினோம்!

அமெரிக்கா சென்றால் அந்த 'எங்கேஜ்மென்ட் ரிங்'
அமரிக்கையாகக் காட்ட வேண்டுமே, நண்பரிடம்!

கெஞ்சிக் கூத்தாடாத குறையாக அவனிடம் சொல்லி,
கொஞ்ச நாட்கள் மோதிரம் அணிய வேண்டினோம்!

பட்டுச் சேலை, மோதிரம் அவர்களே வாங்கிவிட,
பண்ணிய செலவுத் தொகைகள், பின் கை மாறின!

அவளின் மோதிரமும், பட்டுச் சேலையும் எங்கள் வகை;
மகனின் மோதிரமும், புத்தாடையும் அவர்கள் வகை!

சுற்றமும் நட்பும் கூடிச் சேர, பெண் வீட்டாரும் வர,
பெற்றவர் மனம் மகிழ, அந்த விழா நிறைவடைந்தது!

திருமணத் தேதியும் அன்று குறிக்கப்பட்டது; அந்தத்
திருமண நாள் ஆறு மாதத்தில் வந்துவிடும் இனிதே!
:bounce:
தொடரும் .....
 
கல்யாண வைபோகமே ..... V

'காலமிது, காலமிது, கண்ணுறங்கு மகளே;
காலமிதைத் தவறவிட்டால், தூக்கமில்லை மகளே!'

வண்ணத் திரையிசைத் தாலாட்டு, என்றும் எப்போதும், என்
எண்ண அலைகளில் மோதும்; பெண் நிலைமை அதுதானே!

'பிள்ளை வீட்டுக் கல்யாணம்; என்ன செலவு?' என்றிடுவார்;
கொள்ளைச் செலவு ஆவதை, அனுபவத்தில் அறிந்திடுவார்!

பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெரும் பொருள் வந்துவிடும்;
புகுந்த வீட்டுப் பரிசுகளும் வீட்டில் குவிந்துவிடும் - ஆனால்,

சென்னை வாழ் சுற்றத்தார் போக வர 'டிக்கட்' எடுத்து,
சென்னை வாழ் நண்பர்களுக்கு வரவேற்பு விருந்தளித்து,

எல்லோருக்கும் உடை எடுத்து, நேரில் சென்று அழைத்து,
பல்வேறு ஏற்பாடுகள் செய்ய ஓடுவது மிகக் கடினம்தானே?

கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்திருந்த காலத்தில்,
வீட்டில் எவரேனும் 'அழைக்க'ச் சென்றிடுவார்!

தனியாகக் குடும்பம் நடத்திவரும் இக்காலத்தில்,
தனியாக எல்லாம் செய்யவே விட்டுவிடுவார்.

ஆறு மாதக் காலம் திருமணத்திற்கு இருந்தாலும்,
ஆறாக வியர்வை சிந்தி உழைக்க வேண்டி வந்தது!

வெளிய சுவர்கள் அனைத்தும் வண்ண மயமாச்சு;
உள்ளேயும் கதவு ஜன்னல் வண்ணம் பூசியாச்சு.

இருபது ஆண்டுகள் ஆண்டுவரும் மரச் சாதனங்கள்,
இருபது மணி நேரத்தில் தச்சனால் சரியாச்சு.

சகலகலாவல்லி போல இன்னும் வேறு வேலைகள்
சகலமும் செய்ய வேண்டும். இனி நல்ல உறக்கமேது?

தரை மாற்ற நேரமில்லை; உடம்பில் தெம்புமில்லை;
விரைவாக வெள்ளை சிமென்ட்டால் 'பட்டி' பாத்தாச்சு.

மரத்தில் பூசும் பெயின்டையே வெள்ளைப் பட்டியில் பூசி,
தரமான தரைபோல வீட்டுத் தரையை மாத்தியாச்சு!

தொடரும் .....

பின் குறிப்பு: எங்கள் இல்லத் தரை இப்போது மின்னுகிறது.
அந்த அனுபவமும் இந்'நூலில்' முன்பு அளித்துள்ளேன்! (# 42, # 44 ) :first:
 
raji,

this is like when i read வாஷிங்கடனில் திருமணம் which i read in vikatan serial .. oh maybe 45+ years ago or so. so fun to read. i hope you don't mind comments from an ardent fun of such occassions.

i believe வரன் வேட்டை can be the most exciting of all வேட்டைஸ். in my teens i was fortunate enough to participate in atleast 10 வேட்டைஸ் on behalf of cousins, the majority of them female. always constrained by money, it was even more challenging.

particularly for my dad, as he was the uncle who sponsored and conducted three of those weddings on tight tight budgets. on one of the weddings, my girl cousin married a hotelier. there was a lot of sambhar left from the lunch, and my poor dad in all innocence went to the sambandhi and asked him how to convert this to rasam - much to my aghast mother, to whom he reassured that such things were common on the hotel industry !!! :) :)

my poor horrified mother almost died of loss of மானம் that aft, and after almost 45 years later, and my parents long gone, i cannot but treat myself to a chuckle to a tearful chuckle.. such was my dad's innocence, and also having preconceived notion of the hospitality industry of those times.

it is interesting that you note about the expenses on the boys' side. just because you mentioned it, i am wont to whisper here, about the expenses on the girl's side - as to the multifold in terms.. no irrespect or critique meant here. just looking at the other side of the mirror, which i was so familiar with...

on a side note.. i had come to chennai to attend my sister's wedding ( a love marriage to a tambram). i met my wife through an arranged பொண் பார்க்கல் and agreed to marry her within one second... but then this is your thread.. and will wait for further progression on your beloved son's wedding..

i may be fast forwarding here...but .. naah... i will wait.

fondly...yours..
 
கல்யாண வைபோகமே ..... VI

எங்கு நோக்கினும் 'லிஸ்ட் பேப்பர்கள்' தெரிந்தன,
தங்கு தடையின்றி வேலைகள் மறவாது செய்திட!

ஆங்கிலம் தமிழ் மொழிகளில் அமைந்த அழைப்பிதழ்,
பாங்குடன் தயார் செய்யப் 'பாரீசில்' சொல்லி வந்தோம்.

'விசா' வாங்க ஒரு நல்ல நாள் கிடைப்பது அப்போது
லேசா? பலமுறை கணினியைத் தட்டினோம் தப்பாது!

எட்டாம் தேதி என்று நன்நாளும் கிடைச்சாச்சு - நம்மை
விட்டால் போதும் எனக் கணினி விட்டது பெருமூச்சு!

ரயில் நிலையம் சென்று பயணம் சென்று வர,
ரயில் டிக்கட் எடுத்தபின், வந்தது ஒரு வம்பு!

இரு வழி டிக்கட்டிலும், இருபத்தி ஒன்பதாம் தேதி
ஒருபோல உள்ளது - அங்கேயே பார்க்கவில்லை!

ஐம்பது பேர்களைப் பதிவு செய்த டிக்கட் தாள்கள்,
ஐந்து அடி நீளத்தில் இருந்ததால் வந்த தொல்லை!

வீட்டில் வந்து இதைக் கண்டுபிடித்ததும் தோன்றியது,
நாட்டில் ஏன் படுத்தும் பதிவாளர்களும் உள்ளனர்?

ஒரு வேலைக்கு இரு வேலை; மறு நாளும் அங்கு சென்று,
ஒருவாறு சரியான தேதிகளில் டிக்கட் எடுத்து வந்தோம்.

நான்கு நாட்களில் பத்திரிக்கைக் கட்டு கிடைத்தது;
நான்கு நாட்களில் அனைவருக்கும் அனுப்பவேண்டும்.

'குரியர் சர்வீஸ்' மிக வசதி நமக்கெல்லாம்;
சீரிய பணியைச் சிறப்பாகச் செய்கின்றார்!

வீட்டில் இருந்தபடியே, உலகில் உள்ள எந்த
வீட்டுக்கும் அனுப்பலாம், எதையும் எளிதாக! :biggrin1:

தொடரும் .....

 
Last edited:
கல்யாண வைபோகமே ..... VII

இரு நாட்களே திருமணத்திற்கு என்றிருந்த வேளையில்,
அருமை மகன் வந்துவிட்டான், மிக அதிகாலையில்!

'தலை முடி நிறைய இருக்க வேண்டும் - திருமண நாளில்
அலை பாயும் கேசனாய் இருக்கணும்', என்று சொன்னேன்.

இருபது நாட்கள் முன்பே 'இ மெயில்' அனுப்பி வைத்து,
இருபது 'இன்ஸ்ட்ரக்ஷன்' இது போலக் கொடுத்திருந்தேன்!

சொன்ன சொல் தட்டாத மகன் இருந்தால் மகிழ்ச்சிக்கு
என்ன குறை? தாய்மையே பேரின்பம் ஆகுமே!

'கான்ட்ராக்ட்' காலம் இது; சுற்றமும் நட்பும் தவிர!
'கான்ட்ராக்ட்டில்' அனைத்தும் அழகாகப் பெறலாம்!

மணம் முடிக்க மந்திரங்கள் சொல்லும் பண்டிதரும்,
பண முடிப்பும் முன்பாகவே கேட்டுவிடும் காலமிது!

சாஸ்த்திரிகளுடன் குட்டி சாஸ்த்திரியும் வந்துவிட்டார்;
சாஸ்த்திரப்படி 'யாத்ராரம்பம்' நன்கு செய்துவிட்டார்.

பிள்ளையார் பூஜை முறைப்படிச் செய்தபின், மாப்-
பிள்ளையுடன் அனைவரும் பெங்களூர் புறப்பட்டோம்.

சிதர் தேங்காய் உடைச்சாச்சு; வேனில் ஏறியாச்சு;
பதறாமல் மெதுவாக வண்டி ஓட்டச் சொல்லியாச்சு!

எல்லோருக்கும் ரயிலேறிப் படுத்தவுடன் உறக்கம்;
எப்போதும்போல் எனக்கு அரைத் தூக்க மயக்கம்!

பெங்களூர் ஸ்டேஷனுக்குச் சம்பந்திகள் வந்தனர்;
எங்களுக்கு மணக்கும் காபி களிப்புடனே தந்தனர்.

அழகான பேருந்தில் அனைவரையும் ஏற்றினர்;
பழகாத சாலைகளில் எம்மை அழைத்துச் சென்றனர்.

ஆரத்தியுடனே மண்டபத்தில் வரவேற்பு - அதற்கு முன்
தூரத்திலிருந்தே துரத்திப் பாயும் நல்ல ஒளி விளக்கு.

வீடியோக்காரர்தான் - அவருடன் தொடந்தது
ஆடியோவாக நாதஸ்வர இசை விருந்து!

வசதியாகத் தங்க அறைகள், 'அட்டாச்ட் பாத்துடன்';
அசதி தீரும், இரட்டைக் கட்டில் மெத்தை பார்த்ததும்!
:sleep:

தொடரும் .....
 
Last edited:
கல்யாண வைபோகமே ..... VIII

இரண்டு நாட்களும் 'மாமி' உடையில் சுற்ற வேண்டுமே;
இரண்டு 'மடிசார்' புடவைகள் கைவசம் வேண்டுமே!

'ரெடிமேட்' ஆடை போல, மூன்று கெஜம் தைத்தால்,
மடிசார் கட்டுவதை மிகவும் எளிமைப் படுத்தலாம்.

தைத்துக் கட்டக் கூடாது என்ற பயமுறுத்தலை ஓரமாய்
வைத்து, இரண்டு புது மடிசார்கள் 'ரெடி' பண்ணியிருந்தேன்!

அஞ்சியபடி மேலும் கீழும் நடக்க வேண்டாம் - மேலும்
எஞ்சிய ஆறு கெஜத்தை, புடவையாகவும் உடுத்தலாம்!

அவையிலிருந்த மாமிகள் கண்டுபிடித்தனர், இதை அன்று;
அவ்வை ஷண்முகி போல என் அனாயாச நடை கண்டு!

விரதம் செய்ய ஆயத்தம்; அனைவருக்கும் பலகாரம்;
விரதம் செய்யும் எங்களுக்குக் கஞ்சியே ஆகாரம்.

கஞ்சி செரித்து, பசி எடுத்து அமர்ந்திருந்த வேளையில்
'எஞ்சிய முறுக்கு இது!' என்று அளித்தாள் அன்பு அக்கா!

கிருஷ்ணனால் வந்த 'அஷ்டமி' முறுக்கை - ஸ்ரீதர் கோபால
கிருஷ்ணன் கையில் பிடிக்க, சிலேடையாய், அண்ணன்,

'பாருங்கள்! இதுதான் மாப்பிள்ளை முறுக்கு!' எனக் கூறி,
'தாருங்கள் எனக்கும் ஒன்று', என்று தன் கரம் நீட்டினான்!

பன்னிரண்டு மணிக்கு முன்னே முதல் அழைப்பு வந்தது;
துள்ளிச் சென்று அமர்ந்தோம், சாப்பிடும் அறை நுழைந்து!

கூப்பிட்டதும் வரமாட்டார் என அரிசி வேகும் முன்னே அழைப்பு;
சாப்பிட்டால் போதும் என, அமர்ந்து பொறுமையாக எதிர்பார்ப்பு!

இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்த பின்பு, நாங்கள்
திரண்டு சென்று அமர்ந்தோம், நிச்சியதார்த்தத்திற்கு!

பாதிப் பேருக்கு நன்கு உண்ட மயக்கம் - அதனால்
மீதிப் பேர் போல வெளியே வந்துவிடத் தயக்கம்.

நிச்சியதார்த்தம் முடிந்ததும் மீண்டும் சிறு ஓய்வு;
நிச்சியம் தேவை, கொஞ்சம் படுக்கையில் சாய்வு!
:couch2:
தொடரும் ......
 
கல்யாண வைபோகமே ..... IX

எறும்பு போல் ஓயாமல் வேலை செய்யும் பணியாளர்;
விரும்பும்படி அலங்காரம் செய்தனர் மிகப் பணிவாக!

தூண்கள் பல நிறுத்தி, தொங்கும் பூத்தொட்டிகள் வைத்து,
'காணுங்கள்' என அவர்கள் கைத் திறமை காட்டிடுவார்.

மேடை வரை சாய்வான பாதைதனை அமைத்திடுவார்;
சோடை போகாது வண்ண விளக்குகள் பல வைத்திடுவார்.

அலை அலையாகத் துணிகளை அழகாக அடுக்கிக் கட்டி,
அலை பாயவிடுவார் நம் மனத்தை, அதன் அழகில்!

வண்ணமயப் பூக்களில் அலங்கார நிபுணர்கள்,
திண்ணமாகச் சொல்லுவேன், அந்த ஊர் மக்கள்தான்!

'மேக்கப்' போட, எட்டு நூறு கேட்டு ஒருவன் அறையுள் வர,
''பேக்கப்' செய் இங்கிருந்து', என்று கூறி அனுப்பினோம்!

மாலையில், கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்து,
மாலையுடன் 'லைட் மேக்கப்'பும் போட்டேன் மகனுக்கு.

மயில் தோகை போலச் சுருண்ட கூந்தல் அலங்காரம்;
மயில் வண்ணச் சேலை; மணமகள் முகத்தில் சிருங்காரம்.

மணமக்கள் கைகளில் மாலை ஏந்தியபடி, நடை பயின்று,
மணமேடையை மிக மெதுவாகச் சென்று அடைந்தனர்.

'போட்டோ செஷன்' என்று கேமராமேன், இருவரையும்
போட்டோக்கள் எடுத்துத் தள்ளினார், ஸ்டில்களாக!

அயராத கூட்டமாய் ஆயிரம்பேர் திரண்டு வந்தாலும்,
வயிறார உணவளிக்க BUFFET முறை வைத்திருந்தார்.

மெனு கார்டு கொடுத்து, அவரவர் தேவைக்கேற்ப
மெனு தேர்ந்தெடுக்கவும் வசதிகள் செய்திருந்தார்.

காய்கறிகளில் வடிவமைத்த குட்டிப் பறவைகள் - பச்சை
காய்கறி சாலடுகள், இனிப்புகள், பல்வேறு வகையில்

உணவுகள் என, நல்ல சாப்பாட்டுப் பிரியர்களின்
கனவுகளை நனவாக்கும் சுவை மிகுந்த கூடமது!

வெத்தலை போடுவதில் இத்தனை வகைகளா?
எத்தனை பாடுபட்டு நேர்த்தியாக அமைத்துள்ளார்!

பல ஆண்டு கழித்து சந்தித்த நண்பர்கள் கூட்டம்;
பல ஆண்டுகளாகப் பழகும் சுற்றத்தார் கூட்டம்.

கச்சேரி என்று கலைஞரை அழைத்து, நம் பேச்சுக்
கச்சேரியால் வதைக்க வேண்டாம் எனச் சொன்னதால்,

சுற்றிலும் 'சானல்' இசை மென்மையாக வந்தது;
சுற்றம் நட்புடன் நன்கு அளவளாவ முடிந்தது.

மனம் நிறைந்து மகிழ்ந்தது, அந்த இனிய மாலை;
கணம் நினைத்தாலும் பெருமிதம் தரும், அந்த வேளை!
:grouphug:
தொடரும் .....
 
கல்யாண வைபோகமே ...... X

சுதர்சன் என்று ஓர் அதிசய மனிதர் 'கேடரிங்' குழுவில்;
சுதர்சனச் சக்கரம்போல மண்டபத்தைச் சுற்றி வந்தார்!

எல்லோரின் தேவைகளையும் பணிவுடன் கவனித்தார்;
எல்லோரின் அன்புக்கும் அவர் பாத்திரமாகிவிட்டார்.

சீப்பு வேண்டுமா, பேஸ்டு வேண்டுமா, துண்டு வேண்டுமா,
காபி வேண்டுமா, கூல் டிரிங்க் வேண்டுமா, வரும் உடனே!

ஒடிசலான, நெடிய, மெல்லிய 'ஊதினால் பறக்கும்' தேகம்;
கடைசிவரை மாறவில்லை அவர் நடையின் மித வேகம்.

விடிந்தால் கல்யாணம் என்ற நிலை வந்ததும், அந்த
விடியலுக்காகக் காத்திருந்தேன், மௌனம் காத்தேன்!

நாதஸ்வரம் பூபாளம் வாசித்து எங்களை எழுப்பும்போது,
நான் நீராடி, 'தைத்த' ஒன்பது கெஜம் உடுத்தியிருந்தேன்!

மாமியும், நான்கு அத்தைகளும் 'பிசி'யாக இருந்ததால்,
சுவாமியை நமஸ்கரித்து, 'கௌரி கல்யாணம்' பாடி, மகனுக்கு,

எண்ணெய் வைத்தேன், மங்கல ஸ்நானத்துக்கு - மணமகளோ,
'எண்ணெய் வைச்சுக்கோ எல்லாரிடமும்', எனத் தாத்தா சொல்ல,

எண்ணெய்க் குவளையை, நாரதர் போல் ஏந்தி, சுற்றி வந்து,
எண்ணெய் வழியும் முகத்துடன் நீராடச் சென்றாளாம்!

ஊஞ்சல் பாட்டு எழுதவில்லையே! இன்னும் இரண்டு மணியில்
ஊஞ்சல் ஆரம்பித்திடுமே! உடனே பேனாவை எடுத்தேன்!

நேசத்துடன் 'நக்கீரி' என்று என்னை அழைக்கும் என்
பாசமிகு அண்ணனிடம் சென்று அமர்ந்தேன்; யோசித்தேன்.

மேகம்போல விரைந்து ஓடும் பல எண்ண ஓட்டங்கள்,
வேகமாய்ச் சொற்களாய் மாறின; எல்லாம் 'அவன்' அருள்!

சின்ன Note pad -இல் எழுதிய ஊஞ்சல் பாடல் வரிகளை,
சின்ன ஒத்திகை பார்த்தேன், பாடும் உடன் பிறப்புக்களுடன்.
:lalala:
தொடரும்.....
 
இந்த இணைய தளத்தில், எழுத்துக்களின் அளவினால்,
சொந்தம் ஆக்குகிறேனோ பெரும் பகுதி என ஓர் ஐயம்!

தொடரும் பக்கங்களில், படைப்புக்கள் அனைத்தும்,
மலரும் சிறிய எழுத்துக்கள் வடிவிலே! வணக்கம்.

உலகம் உய்ய வேண்டும்,:pray2:
ராஜி ராம்
 
கல்யாண வைபோகமே ..... XI

காசி யாத்திரை தொடக்கம்; மைத்துனன் குடை பிடிக்க,
ஆசை மாமன் மாலை போட, அத்தைகள் 'திருஷ்டி' மை இட,

புறப்பட்டான் புது மாப்பிள்ளை, அன்னை தந்தை உடன் வர,
எதிர்ப்பட்டார் பெண்ணின் பெற்றோர், அன்புடன் அழைத்து வர.

மாலையிட்ட மங்கையவள், மாலையிட எதிரில் வர ,
மலையிட மகன் செல்ல, மாமன்கள் அவளைத் தூக்க,

நம்மவரும் விட்டாரா? சிறுசுகள் சில சேர்ந்துகொண்டு,
எம் ஆறடிப் பிள்ளையை, 'தம்' பிடித்துத் தோள் தூக்க,

சிரித்தபடி அனைவரும் கரகோஷம் செய்து மகிழ,
குறித்த நேரத்தில் மாலை மாற்றல் நடந்தேறியது!

மணமகள் கரம் பிடித்து, மெதுவாக அழைத்து வந்து,
மணமகன் அமர்ந்தான் ஊஞ்சலில், அனைவரும் சூழ.

ஆசு கவிபோல, அன்று காலை எழுதிய பாடலை,
மாசு மருவின்றிப் பாடினோம், கோஷ்டி கானமாக.

பாட்டில் தம் பெயரும், தமக்குப் பிடித்தவர் பெயரும்,
ஏட்டில் பார்த்தபடி பாடியபோது, எழுந்தது கரவொலி!

'என் பெயர் வரும்போது கை தட்ட யாருமில்லை!', என
என்னிடம் வந்து பெண்ணின் தாத்தா சொன்னபோது,

'காசு கொடுத்து ஆட்கள் தயார் நிலையில் வைத்திருந்தால்,
மேசை அடித்து, ஆரவாரம் செய்திருப்பாரே!', என்றேன்!

பால் சொட்டுக்கள் கால்களில் இட்டு, பட்டால் துடைத்து,
பால், பழக் கலவை சிறு வெள்ளிக் கிண்ணியில் கொடுத்து,

மணமக்களைச் சுற்றி வந்து, வண்ண உருண்டைகளால்,
மணமக்களுக்கு திருஷ்டி கழித்து, ஆரத்தி சுற்றியபின்,

கன்னூஞ்சல் முடிவுற, கன்னியவள் கரம் பிடித்து,
கண்ணான எங்கள் மகன், மணமேடை ஏறினான்.
:thumb:

தொடரும்
.....
 
Dear Sir,

The wedding was in 2005. I stitched the first three yards of the saree to fit me. (Just to simplify). The second piece was worn in the traditional way.

I have heard from my friends that the ready made 'madisars' are very much available in a few leading textile stores in Chennai. But, I have not seen them yet!
 
இந்த இணைய தளத்தில், எழுத்துக்களின் அளவினால்,
சொந்தம் ஆக்குகிறேனோ பெரும் பகுதி என ஓர் ஐயம்!

தொடரும் பக்கங்களில், படைப்புக்கள் அனைத்தும்,
மலரும் சிறிய எழுத்துக்கள் வடிவிலே! வணக்கம்.

உலகம் உய்ய வேண்டும்,:pray2:
ராஜி ராம்

Not at all. Please continue to write your poems till your thoughts dries out.

All the best
 
கல்யாண வைபோகமே ..... XII

பெண்கள் அனைவரும் சிரிப்பலையுடன் சுழல,
கண்கள் அனைத்துமே மேடையைப் பார்த்து மகிழ,

தரை வார்த்து அன்பு மகளைக் கன்னிகாதானம் செய்தார்;
கூறை உடுத்து வந்த மகள், தந்தை மடியில் அமர்ந்தாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க,
மங்கல நாண் பூட்டினான்; கிருஹஸ்தனாய் மாறினான்!

எல்லாம் வல்ல இறைவன் இவர்களைக் காக்க வேண்டும்;
எல்லா நலன்களும் அளிக்க, அருளுடன் நோக்க வேண்டும்!

மாமி கையால் மெட்டி அணிந்து, தம்பி தந்த பொரி இட்டு,
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மணமக்கள் மேடையில்.

விருந்தினரை உபசரித்து, உணவளித்து, பக்ஷணப்பை கொடுத்து,
மருந்திற்கும் ஓயவில்லை எமக்கு; 'மாரத்தான்' ஓட்டம்தான்!

அடுத்த கட்டமாக, கிருஹப்பிரவேசம்; எங்கள் அறைக்கு,
எடுத்த நாதஸ்வரத்தை இசைத்தபடி முன் சென்றார்

வித்துவான்; அவர் பின்னே மேள தாளங்கள்; நாங்கள்
எத்தனை முயன்றும் உள்ளே செல்ல முடியவில்லை!

தாளக்காரரோ அறை வாசலை மறைத்து, சிரித்தபடி
தாளத்தைத் தட்டினார்... தட்டிக்கொண்டே இருந்தார்!

ஐநூறு அளித்தும் அதைத் தமக்குக் கிடைத்த நல்ல
கைமாறாகக் கருதாமல், வழிமறித்தே நின்றார்!

தங்கை ஓடி வந்து, 'தாம்பூலம் தரவேண்டும் அவருக்கு;
தங்கள் ஊரில் அப்பா தருவது நினைவில்லையா?' என,

ஒரு நூறு மீண்டும் தாம்பூலப் பையுடன் அளிக்க,
ஒரு நொடியில் மாயமாய் மறைந்து போய்விட்டார்!

அந்த நல்ல வேளை பார்த்துப் பெண்ணை அழைத்தாச்சு; புதுச்
சொந்தமான பெண்களுக்கு ரவிக்கைத் துணி கொடுத்தாச்சு! :blabla:

தொடரும் .....

 
கல்யாண வைபோகமே ..... XIII

காலை முதல் சாப்பிடாத பசி இப்போ எடுத்தது - முதல்
வேலையாகக் கால்கள் சாப்பாட்டறை நோக்கி நடந்தன.

வயிறார உண்டபின், திருமணப் பதிவு செய்து வந்தோம்;
உயிரான உடன் பிறப்புகளைக் கண்டு, நன்றி உரைத்தோம்!

'நலுங்கு' என்ற பெயரில் 'ராகிங்' வேண்டாம் என்றேன்;
அலுங்காமல் அமர்ந்து, இசை பாடச் சொல்லியிருந்தேன்.

அழகான பொன் மாலை; வட்டமாகச் சுற்றி அமர்ந்து,
அழகாகப் பாமாலைகள் பாடினோம், இசை அறிந்தோர்!

இனிமையாகக் கழிந்த அந்த நூறு நிமிடங்கள், என்றும்
பசுமையாக எல்லோரும் தம் நினைவிலே பதியுங்கள்!

ஒற்றுமையாய் அனைவருக்கும் இரு தினங்கள் கழிந்தன;
பற்றும், பாசமும் உள்ள இரு குடும்பங்களும் இணைந்தன.

இறைவன் அருளால், இதே அன்பு தொடர வேண்டும்;
நிறைவான நல்வாழ்வும், என்றும் தொடர வேண்டும்.

பெற்றோருடன் சிலர் தங்கிவிட, இரவு நேரத்திற்குள்,
மற்றவர்களை வழி அனுப்பினோம், அவரவர் ஊருக்கு.

மறு நாள் காலை நீராடி, பாலிகைக் கிண்ணங்கள் எடுத்து,
சிறு அண்டாத் தண்ணீரில் கரைத்து, சுற்றிக் கும்மியடித்து,

சின்னப் பூஜை செய்து, அக் கிண்ணங்களைக் கட்டி வைத்து,
சின்ன ஔபாசனப் பானையில் அக்ஷதை இட்டு வைத்து,

'வேன்' ஒன்றில் பெட்டிகளை ஏற்றி, சென்னை நோக்கி,
வேகமாய்ப் பயணித்தோம், முக்கியமானோர் எல்லோரும்.

துளியும் சலிக்கவில்லை நல்ல சாலை வழிப் பயணம்;
களிப்புடன் 'கடி' ஜோக்குகள்; இடையிடையே சயனம்!

கட்டுச் சாதக் கூடை இல்லை; FOIL PACK - கள்தான்;
எட்டு மணி ஆனாலும், புதிது போன்றே ருசித்தன! :hungry:

தொடரும் ......
 
raji,

the site of the first lunch together by the couple is a sight to cherish.

the fashionable young lady of yesterday, suddenly is transformed into a kutty mami, cute but with a certain dignity. i will not go into the sexyness i find in the madisar, as this is a family forum.

but the tired couple, eyes fatigued by the smoke, and usually among the last to eat, with cold food and left often to the care of the caterer and a few others, brings tears in my eyes.

however, there is always some idiot, asking each one to feed the other and some other unhygienic practices best left unsaid. these days i thinks are toned down, though some form of one feeding the other with their ecchil still happens. atleast the ones i have participated, even as late as last a year ago.

kutty mamis are a delight and i don't know how many girls ever reuse the koorai podavai again in their lives.
 
'மடிசார்' உடுத்தும் விதத்தில் இருக்கிறது சார்! நான் அறிந்து, எத்தனையோ பெரியவர்கள் எங்கள் சுற்றத்தில், தழையத் தழைய அழகாக உடுத்துவார்கள்! சில 'டிப்ஸ்' அறிந்துகொண்ட பின்னரே நான் என்னுடைய உடையைத் தயாரித்தேன்! என் சகோதரிகளும், புகுந்த வீட்டில் சிலரும் என்னையே நாடுவார், மடிசார் உடுத்திவிட!

மணமக்கள் 'ராகிங்' இந்நாளில் மிகக் குறைந்துவிட்டது! சாப்பிடும்போது அடிக்கும் லூட்டிகளும்தான்! நாங்கள் எங்கள் திருமணத்திலும், மகன் திருமணத்திலும் நலுங்கு என்ற 'ராகிங்'கை மறுத்தவர்களே!

'நலுங்கு' என்ற பெயரில் 'ராகிங்' வேண்டாம் என்றேன்;
அலுங்காமல் அமர்ந்து, இசை பாடச் சொல்லியிருந்தேன். :lalala:

Regards,
Raji Ram
 

Latest posts

Latest ads

Back
Top