• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

கல்யாண வைபோகமே ..... XIV

அங்கு மணி சாமான்கள் 'கான்ட்ராக்டில்' ஒரு பகுதி;
இங்கு அலங்கரித்தன, சமையலறையின் ஒரு பகுதி!

எடுத்த கல்யாண வீடியோ சிடிக்கள் கிடைத்தன;
அடுத்த இரு நாட்களில் சென்னையில் வரவேற்பு.

நானூறு பேர் வருவாரென எதிர்பார்த்த வரவேற்பில் ,
நூறு பேர் வராததால், ஸ்வீட் மூட்டை வீடு வந்தது!

'ஐஸ்கிரீம்' நிறையப் பெட்டிகள் மிஞ்சியதால், எம்
'ஐஸ்கிரீம் பிரிய' சுற்றத்துக்கு அள்ளித் தந்தோம்!

பலவகை பக்ஷணத்துடன், ஸ்வீட்டும் சேர்ந்ததால்,
பலநாட்கள் நிற்க வேண்டாம், 'ஸ்நாக்' செய்வதற்கு!

நலமுடன் வாழ்வு தொடர, திருப்பதி சென்று வரணும்;
குல தெய்வம் கும்பிட்டுப் பிரார்த்தனை முடிக்கணும்.

ஆந்திர அரசு ஏற்பாட்டில் அருமையான பேருந்து;
இந்திர லோக வாகனம்போல் அலுங்காது போகிறது!

பேருந்து வழிகாட்டி பேச ஆரம்பித்தவுடன்,
'ஏதிந்தப் புது மொழி?' என எண்ணி வியந்தோம்!

மறக்க முடியாத ஆங்கிலத்தை(!) கேட்டால்,
மறக்கும் நம் ஆங்கிலம்; மீண்டும் படிக்கணும்!

"பஸ்ஸின் உள்ளே அமருங்கள்", என்பதற்கு,
"BUS INSIDE SIT, PLEASE" என்று சொன்னார்.

இதேபோலப் பேசும் போட்டி ஒன்று வைத்தால்,
அதோ கதிதான் நமக்கு! நிச்சயம் அம்பேல்!

மாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு, நடு நிசி
வேளைக்கு முன், திருப்பதி அடைந்தோம்!

நல்ல உணவகத்தில் நிறுத்தி, சிறிது ஓய்வும்,
நல்ல உணவும் தந்தனர், செல்லும் வழியில்.

இரண்டு பேருக்கு ஒரு அறை எமக்கு அளித்து,
இரண்டு மணி நேரத்தில், அடித்து எழுப்பினர்!
(கதவைத்தான்!!)

கொதிக்கும் வெந்நீர் வரவு குழாயில்; நீராடி,
குதித்துக் கிளம்பினோம், இறை தரிசனத்திற்கு!
:clap2:
தொடரும் .....
 
கல்யாண வைபோகமே ..... XV

சில்லென்ற காற்றும், வளைந்த மலைப்பாதைப் பயணமும்,
சொல்லொணா ஆனந்தம்; அனைத்தும் இறைவன் அருள்!

வழிகாட்டி, பயணிகளில் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து,
வழிகாட்டிச் சென்றார் - பத்துப் பத்துப் பேர் அணிகளாக.

அருகில் தெய்வ தரிசனம் பெற, அறுபது மணித் துளிகள்;
'ஜருகு' என உந்துவதை மீறி, எழும் கண்ணீர்த் துளிகள்.

'தலைவர்' போய், சுவாமிப் பிரசாதம் பெற்று வந்தார்;
தலைக்கு இரண்டு லட்டு எனப் பிரித்து அளித்தார்.

அளவாக முப்பத்தி இரண்டு ரூபாய்தான் ஒருவருக்கு;
அளவிலாச் சிற்றுண்டி, விலையேற்றத் தாக்கமின்றி!
( 2005 - ம் ஆண்டின் விலை இது! )

தாயார் தரிசனம் திருச்சாணூரில் பெற்றுவிட்டு,
சேயின் ஆர்வத்துடன், காலஹஸ்தி சென்றோம்.

பக்தர் கூட்டம் நிரம்பியதால், ஐயனை நன்கு காணவில்லை;
பக்தியுடன் ஒரு கடையில் 'பாக்கெட் போட்டோ' வாங்கினேன்!

'திருப்பதியில் திருமலையான் திருவடிவம் காணவில்லை;
திருப்பதியில் வாங்கிய 'போட்டோ'வில் கண்டுகொண்டேன்!',

என என்றோ என் அண்ணன் சொன்னது,
அன்று என் நினைவில் நிழலாடியது!

விடுதியில் இறக்கினர், வழியில், மதிய உணவுக்காக;
சடுதியில் வெளியே வந்தோம், பசியே இல்லாததால்.

நான்கு மணியானது வீடு வந்து சேரும்போது - இருபத்தி
நான்கு மணி நேரத்தில் செய்த யாத்திரை பெரும் பேறு!

திருமலையான் திருவருள் அனைவருக்கும் கிடைக்கணும்;
அருமையாய், இனிமையாய் என்றென்றும் வாழணும்!
:angel:
தொடரும் ......
 
கல்யாண வைபோகமே ..... XVI

அம்மா அனைவருடனும் இரு நாட்கள் - மருமகளின்
அம்மாத் தாத்தா அளித்த ஒரு அருமையான டின்னர்,

சகோதரிகள் உதவியுடன் சமாராதனைச் சாப்பாடு,
சரியான நேரத்தில் விசா ஏற்பாடு, கோவில் வழிபாடு,

'மாப்பிள்ளை விருந்து' அளித்து சுற்றத்தார் உபசரிப்பு,
மாப்பிள்ளை பெண்ணுடன் சென்ற மறுவீட்டழைப்பு,

பட்டியலிட்டு, அதில் வேண்டிய பரிசுகளைத் தேர்ந்தெடுத்து,
பெட்டியிலிட்டுப் PACK செய்தல், எனப் பத்து நாட்கள் பறந்தன!

'அம்மா', 'அப்பா' என்றழைத்து, எங்களைச் சுற்றி வந்து,
அன்புடன் இருக்கும் பெண்ணைப் பிரிவதே கடினம்.

இத்தனை ஆண்டுகளில், ஒரு நாளும் பிரியாத மகளை,
எத்தனை தூரம் அனுப்பவேண்டும்! இது அம்மாக் கவலை!

வழியனுப்பும்போது விழிநீர் கூடாது என்று - கண்ணீர்
வழியும் விழி கொண்ட 'அம்மா' விடம் கூறினேன்.

'பிறந்த நாள், அவருக்கு!' என்று நாணி, புறப்படுமுன்,
சிறந்த பால் பாயசம் எங்கள் பெண்ணரசி செய்தாள்.

எல்லாம் வல்ல சக்தி விநாயகரைத் தரிசித்தோம்;
எல்லா நலன்களையும் அளித்தருள வேண்டினோம்.

தொலைபேசியில் அனைத்துச் சுற்றத்துக்கும் சொல்லி,
தொலைதூரப் பயணத்துக்கு அழகாக அனுப்பினோம்.

பெட்டிகளின் சோதனையில், விமான நிலையத்தில்,
பெட்டி ஒன்றைத் திறக்க வைத்தார், உயர் அதிகாரி!

கட்டிவைத்த பொருட்களில், கைத்துப்பாக்கி எனப் பயந்து(?)
பெட்டியைத் திறந்த அவர் கண்டார், முறுக்கு 'மிஷின்'!

நல்லபடி ஊர் போய்ச் சேர்ந்த நல்ல செய்தி வந்தவுடன்,
நல்லபடி இவர்களுக்கருள, இறையை இறைஞ்சினோம்...

உலகம் உய்ய வேண்டும்,:pray2:
ராஜி ராம்
 
திருமண வைபவம் இனிதாக நிறைவடைந்தது - இனி
திருவள்ளுவரைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

என் மனம் கவர்ந்த சில குறட்பாக்களை, இங்கு
முன் வைத்திட, மேலும் வரும் சில பக்கங்கள்!

உலகம் உய்ய வேண்டும்:peace:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 1

அற நெறி வாழ்வு...

அற நெறி தவறா வாழ்வுக்கு நல்வழி அறிய,
அற நெறி கூறும் வள்ளுவரை நாடுதல் எளிது!

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்,
இழுக்கா இயன்றது அறம்', என வழி காட்டியுள்ளார்!

மற்றவர் பெயர் புகழ் கண்டு பொறாமை வேண்டாம்;
மற்றவர் ஆள்வதைத் தனதாக்கப் பேராசை வேண்டாம்.

இன்முகம் விடுத்துக் கோபம் காட்டுதல் வேண்டாம்;
இன்னாச் சொல் எவரிடமும் பேசுதலும் வேண்டாம்.

சொல்லுவது எளிது; செய்வது கடினமே - எனினும்
வள்ளுவன் வழி நடக்க இதை மேலும் ஆராய்வோம்!

போற்றுவதைக் கற்றால், பொறாமை மறைந்துவிடும்;
ஏற்றமுடைய எளிமை மேற்கொண்டால், அவா ஓடும்!

கோபம் ஒழியும், அனைத்திலும் ஆனந்தம் கண்டால்;
கோபம் ஒழிந்தால், இன்னாச்சொல் என்றுமே இல்லை!

'நாலும் அறிந்து கொள்' என்பதற்கு, இதுதான் பொருளோ?
நாளும் இவ்வழியில் சென்றால், உய்யுமே இவ்வுலகம்! :happy:

(குறள் எண்: 35)
 
thank you raji for a very heartwarming journey. it is a gift to have children, to see them grow up, and get married. i notice that this is your only child, a son.

i come from a small family, only son for 8 years, before sister popped out. on the gist of it, to me, you appear to have practised enlightened parenting - it is a rare son, who would consider his mother his friend without being tied to her ஏத்தாப்பு.

often i wonder, how mum and dad handled my separation at age 18, when i left home for hostel and then never came back to live. those were the days when there were no internet and skype, and transatlantic phone calls have to be booked, and the connections received 4 hours later @ $4 per minute.

nowadays, when the children, all spread out in montreal and nyc, if they don't call atleast once a day, my wife gets upset. mother daughter talk atleast 4 times a day if not more. i myself am not so phone friendly, but am amazed at the ease of communication these days and such other marvels of technology.

there may be physical parting, but atleast the pains of separation are bandaided with these tools including the videocam.

i have found that in laws turn into good friends if the initial encounter is pleasant. after all you both have so much in common and so much to look forward. it looks like you had a lucky break here too.

i have this gripe against thirupathi, as you probably have now guessed, that i always expect more. in amritsar, the holy of holies of the sikhs, there is the langar, which feeds free every pilgrim. i do not know how wealthy the amritsar temple is, but they are never want of food or volunteers.

in this context, i am somewhat uncomfortable with the thirupathi habit of selling prasaadams. you can even get them in chennai at the ttd offices in t'nagar. i guess these chennai laddus have never seen the thirupathi prahaarams, but still considered prasaadams. so much so for faith. all from a temple whose coffers are overflowing with all types of material wealth.

would our God want such behaviour? i don't know raji, sometimes what our religion stands for anymore, considering these practices. sad to say, my dad used to take a morning bus to thirumalai from madras, pay a ransom money, and go to the top of the queue and be back home in chennai by nightfall. he would not directly answer my critiques, and laugh away any accusation of hypocracy. even now, 45 years later, i have this feeling of discomfort...

i would like to share new english from china. please enjoy. thank you.

Funny Chinese Signs Gallery, China

God Bless your son & dil.

ps.. very soon after marriage, mum's notes use to contain some enquiries about 'good news'. the dumbhead in me had no idea, and used to write back all the good or fun things that happened here. .. till my smart pathni enlightened me. here's wishing you would get some 'good news' soon, if not already so...best wishes
 
Thanks for the long reply Sir!

God has been very kind to bless us with a wonderful son and daughter-in-law. And, the 'good news' has come and we are expecting our little grand daughter during end of December 2010. :happy:

About Tirupathi Dharshan, we DID have a very nice and close dharshan of The Lord, with the help of one of the board members and I have written about it in post # 47 captioned திருப்தியான ஒரு திருப்பதி தரிசனம்.... in the same thread!

I will write a 'kavithai' in Tamil, to describe the position of bakthaas in Tirupathi, ( of course in a lighter vein ) in the following post !!!

Regards,
Raji Ram
 
Last edited:
குறிப்பு: நகைச்சுவை உணர்வுடன் படிக்க வேண்டுகிறேன்!

பாலாஜி படும் பாடு!

திருப்பதிக்கு வந்த ஒரு மிகப் பெரும் செல்வந்தர்,
திருப்தியான தரிசனம் பெற, மிகவும் விழைந்தார்!

முதல் விஜயம் என்பதால், ஒன்றும் புரியாது,
முதல் வினாவாக அதிகாரியை வினவினார்,

'இது என்ன இத்தனை வரிசைகள் தரிசனத்திற்கு
வித வித வளைவுகளாகச் செல்கின்றனவே?'

'ஒரு வரிசை தரும தரிசனம் செய்ய; இவர்கள்
இரு நாட்களாகும் திருமலையானைக் காண!

இன்னொன்று, நூறு ரூபாய் வரிசை; இதில் சென்று
முன்னின்று இறையை, நாளை காணலாம் நன்று!

மற்றொன்றில், ஐநூறு கொடுத்தவர்கள்; இவர்கள்
சற்று விரைவாக, இன்று இரவிலே தரிசிப்பார்கள்!

வேறொன்று, ஆயிரம் அளித்தவர்களின் வரிசை;
ஏதொரு தடையுமின்றி, ஆறு மணியில் காணலாம்!'

இவ்வாறே அடுக்கடுக்காய்ச் செய்திகள் வர, சொன்னார்
இவ்வாறு, 'என்னிடம் உள்ளது, ரூபாய் பத்துக் கோடி!'

'பத்துக் கோடியா?' என வியந்தவர் விளம்பினார்,
'பத்து நொடியில் வருவார் உங்களிடம், பாலாஜி!'

உலகம் உய்ய வேண்டும், :hail:
ராஜி ராம்

 
Dear Raji Ram,

When I was in Tirupathi some 20 years ago, I also got perturbed by the crass commercialisation of Lord Venkateswara by TTD. Then I jocularly told my wife, "See, very soon TTD may start 'Bangaru Inti Seva' for those who pay Rs.1 lac. If one pays for this seva, Perumal will be brought from the temple and kept inside his/her house for an hour".

Though it was a joke, I was pained to note how people's sentiments, weaknesses and bhakthi are exploited by those in power.

In the name of Arjitha Sevas, these things happen now and I want to put an end to them permanently.

I suggest the following.

1. No cottage must be allotted to whoever applies for it on the hills.

2. Instead, bus, rope-rail and other modes of public transport may be allowed to ply every 10 minutes. Private vehicles also not to be allowed during
11-30 P.M. and 04-00 A.M.

3. Suprabhatham at 04-30 A.M. and Archana at 05-00 A.M. are to be conducted. No visitors to be allowed for these, as there is very limited space
inside.

4. Paid sevas (arjitha sevas) to be totally abolished.

5. Only free dharshan is to be arranged for everybody.

6. In a very rare case, say 1 out of 10,000, special entry may be arranged for VIPs.

7. Any devotee shall not be allowed to stay overnight on the hills, even in any private accommodation.

8. All touts and agents who promise quick darshan or prasadams to be arrested.

9. Politicians shall not interfere in the temple administration.

10. A team of well known and honest devotees is to be formed for administering the affairs of the temple.

11. All income of the temple to be utilised for improving the amenities on the hills (including free food for all), for the maintenance and repairs of poor
Hindu temples and for propagating Hindu Dharma across the world.
 
Dear Sir,

Thanks for your reply.


"In the name of Arjitha Sevas, these things happen now and I want to put an end to them permanently.

I suggest the following..........."


But, we are not the 'rule makers', sir! Almost all the temples have become money oriented and we have to get along in this world with bhakthi towards the Lord!

Some may argue that when the Lord is in our hearts, why go to temple? But, I strongly feel that ONLY the fear of the Lord makes (threatens?) at least a portion of the human beings select the right path to live!

This 'debate' should be taken to some other thread!!! :argue:

உலகம் உய்ய வேண்டும் :hail:
ராஜி ராம்
 
மீண்டும் வள்ளுவரைப் பார்ப்போம்!

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 2

கற்பவை கற்போம்!

'பிச்சை புகினும் கற்கை நன்றே!' என்றனர் பெரியோர்.
இச்சை இருந்தால் வயது ஒரு பொருட்டு அல்ல, கற்க!

கற்பது பற்றியும் வள்ளுவர் நல்வழி கூறியுள்ளார்;
கற்பவை கற்க வேண்டும் என்றே உரைத்துள்ளார்!

'கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்,
நிற்க அதற்குத் தக' - என்பது குறள்.

கசடின்றித் தெளிவாகக் கற்க வேண்டும்; அவை
கசடில்லா நல்லவையாக இருத்தல் வேண்டும்.

கற்றால் மட்டும் போதாது; வாழ்வில் நாம்
கற்றதை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

நல்லவை தெளிவுறக் கற்று, அவ்வண்ணம்
நல்வழியில் வாழ்ந்தால், உலகம் உய்யுமே!
:first:

 
வள்ளுவரைத் தொடர முடியாது ஒரு சிறு திருப்பம்;
சொல்லுவதை விரைவாய்ச் சொல்லவே விருப்பம்.

புதுமையான மாற்றங்களை ஏற்கும்போது வரும்,
புதுமையான கொடுமைபற்றிச் சில வரிகள் தொடரும்.

மனம் பதற வைத்த ஒரு உண்மைச் சம்பவம் - அதற்கு
மனம் வருந்தத் தருகிறேன் ஒரு கவிதை வடிவம்.

தொடரும் கவிதை காண்க.....:faint2:

 
புதுமை செய்த கொடுமை..

பழையன கழிதலும், புதியன புகுதலும், அனைவரும்
விழைவதே எனினும், புதுமை கொடுமை செய்யும்!

நெருங்கிய சுற்றத்தில், மிகச் செல்வந்தர் ஒருவர்;
அருமையாய் இனிய இல்லம் அமைத்திருக்கிறார்.

புதுமையான முறைகளில் உபயோகப் பொருட்கள்;
புதுமையாக அதில் ஒரு மின்னும் கண்ணாடி மேசை.

வெற்றிடப் பிடிப்பான்கள்* தாங்கும் கண்ணாடியை;
பற்றுவதற்கு வேறு எந்தத் திருகுகளும் இல்லை!

சின்னக் குழந்தை அவருக்கு; அறியாச் சிறு பருவம்;
என்ன பௌதீக அறிவு அதற்கு இருக்க முடியும்?

விளையாட்டாய் வந்து, மேசை ஓரத்தைப் பற்றி,
விளையாடியது, ஓரத்தில் தொங்கித் தொங்கி!

கண்ணாடி கொஞ்சம் சரியச் சரிய, காற்றும் கொஞ்சம்
கண்ணாடியின் பிடிப்பான்களின் வெற்றிடத்தில் நுழைய,

பெரும் ஓசை எழுப்பியபடி, கண்ணாடி முழுதும்
சிறு குழந்தை மீது சரிந்து, விழுந்து, நொறுங்க,

குழந்தை மூர்ச்சையாகிவிட, பெற்றோர்கள் பதற,
குழந்தை சில நொடிகளில் மருத்துவமனை சேர,

இரு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழிய,
பெரும் செலவு செய்தாலும் பயன் என்ன?

விதியின் விளையாட்டு வினோதம்தானே!
விதியால் முடிந்தது, குழந்தையின் வாழ்வே!

கேட்டாலே நடுங்க வைத்திடும், இந்தச் சம்பவம்
கேட்டேனும் பாதுகாப்பை முதன்மை ஆக்குவோம்!

விதி வலியது; அதன் விளைவே இது எனினும்,
சதி செய்ய, அந்தப் புதுமைதானே முன் நின்றது!
:doh:

குறிப்பு: * வெற்றிடப் பிடிப்பான் vacuum holders இன் தமிழாக்கம்.

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 3

நீங்குதல் நலம்...

நலவாழ்வுக்குக் குறுகிய குறளால், உலகினருக்கு
நல்வழி பற்பல கூறினார், உயரிய நம் வள்ளுவர்.

'நீங்குதல் நலமா? என்ன புதினம்?' இக் கேள்விக்கு
பாங்காக பதில் உரைக்கிறார், இரு வரிகளிலே!

'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்' என்பதே வரிகள்!

பெரும் பொருள் ஈட்ட வேண்டி மிக உழன்றால்,
பெரும் பொருள் சென்றுவிடும், மருத்துவரிடம்!

உணவே பிரதானமென நினைத்து உண்டால்,
தனியே வந்து சேரும், பற்பல உபாதைகள்!

அளவுக்கு மீறிப் பிள்ளைப் பாசம் கொண்டால்,
தளரும் நெஞ்சம், அது திரும்பி வராதபோது!

உதவி செய்தாலும், அளவில்லாது போனால்,
உதவி தேடும் நிலை அவருக்கே வந்துவிடும்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்;
அளவுகோல் நினைவில் கொள்ளவே இக்குறள்.

எதிலுமே பற்று அதிகம் வைக்காது நீங்கினால்,
எளிதிலே நோதல் என்பது நம்மை அண்டாது!

:couch2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 4

பற்றுக பற்றினை...

பற்று விடுதல் பற்றிக் கண்டோம் முந்தைய குறளில் ;
பற்று விடுதல் எவ்வாறு செய்வது? இதோ ஒரு வழி!

'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு' என்பார் வள்ளுவர்.

பற்றினை விட எளிய வழி உரைக்கின்றார்,
பற்றுங்கள் இறைவனின் பாதங்களை, என்று.

பற்றற்ற இறைவன், வேண்டும் நலவாழ்வை
உற்றவருக்கு அளிக்கவே உள்ளான், அல்லவா?

:pray2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 5

கவலை மறைய....

பிறக்கும் நாள் முதலாக இவ்வுலக வாழ்வைத்
துறக்கும் நாள் வரை, எத்தனை கவலைகள்!

வலை போலப் பின்னி, அலைக்கழிக்கும்
கவலை போக என்ன வழி வள்ளுவத்தில்?

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது!' தத்துவம் பெரிது!

இறைவனுக்கு இணையாக யாரைக் கூற முடியும்?
இறைவன் தாள் சேர்வதே விழைய வேண்டும்!

'அவன்' பாதம் பற்றிச் சரணடைந்தால், நாம்
தவம் செய்த பலனே பெற்று விடலாமே!

இறையைப் பணிந்து, அவன் தாள் சேராவிடில்,
மறையாது மனக்கவலை என அறிந்திடுவோம்!

:amen:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 6

மாசிலா மனது....

அற வாழ்வே நல வாழ்வு என்பது திண்ணம்;
அற வாழ்வு வாழ, வேண்டும் நல்லெண்ணம்.

நல்லவை புகாது, மனதில் மாசு நிறைந்தால்;
அல்லவை நீங்கும், மாசுதனைக் களைந்தால்.

குற்றங்களை நோக்கியே எண்ணங்கள் இருந்தால்,
சுற்றங்களும் கூட விலகி விலகிப் போகுமே!

நல்ல எண்ணங்கள் மட்டுமே மேலோங்கினால்,
நல்ல மனம் தூய்மையாய் உருவாகும், எளிதில்!

மாசிலா மனது இருப்பதே எல்லா அறமும், என
மாசிலா மனதை உயர்வாக்குகிறார் வள்ளுவர்.

மாசிலா மனதே அமைதியும் கொள்ளும் - வேறு
மாசுகள் பெருகினால், ஆரவாரமே ஓங்கும்!

'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற' - இதை அறிந்து சிறப்போம்!
:angel:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 7

இனியவை உரைப்போம்!

இனிப்புச் சுவையே அனைவரும் விரும்புவர்;
புளிப்பைக் கண்டால் கொஞ்சம் விலகுவர்!

இனிக்கும் கனி கிடைக்கும்போது, எவருமே
புளிக்கும் காயை உண்ண விழைய மாட்டார்!

'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என,
வாய்ச் சொல் பற்றி ஒரு வாசகம் உள்ளதே!

இன் சொற்களை வள்ளுவர் இனிய கனியாகவும்,
இன்னாச் சொற்களைக் காயாகவும் கொள்கிறார்.

'இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று!'

இனியவை உரைத்தல் என்றும் சிறந்தது!
இனிய வாழ்வு இனிதே அமைக்க உகந்தது.:blah:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 8

நீந்த முடியும் ...

சம்சாரத்தைச் சாகரம் என்றுதான் குறிப்பிடுவர்;
மின்சாரமாக மாற்றியது புதுமை வேண்டித்தான்!

பெரிய கடலைக் கடக்க நீந்த வேண்டுமே! அதற்கு
அரிய சக்தியும் நம்மிடம் இருக்க வேண்டுமே!

சக்தி பெறும் எளிய வழியைக் குறளில் கூறுகிறார்;
பக்தி ஒன்றே அச் சக்தி அளிக்கவல்லது என்கிறார்.

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்' என்பது குறள்.

இறைவனடி சேருவதே கடல் தாண்டும் வழியாகும்;
இறைவனடி சேராதார் கடல் தாண்ட வழியில்லை!

எளிய இந்த வழியைப் பின்பற்ற நாம் அறிவோம்;
எளிதாய்ப் பெருங்கடல் நீந்தி 'வீடு' அடைவோம்!

:help:

 
ள்ளுவரைப் போற்றுவோம் ..... 9

மூன்று கடல்கள்

முப்பால் உரைத்த வள்ளுவர், பிறவிக் கடலை
முக்கடல் போலவே பிரித்துக் கூறுகிறாரோ?

அறம், பொருள், இன்பம், வீடு, இவையே
திறம்படப் பிரித்த நான்கு நிலைகளாகும்.

அறவாழி அந்தணன் என்று இறையைக் கூறி,
பிறவாழி பற்றியும் அங்கே குறிப்பிடுகிறார்.

'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது' என்கிறார் தன் குறளில்.

அறக் கடவுளின் தாள் பற்ற மறந்தால், அரிதே
பொருள், இன்பம் ஆகிய கடல்களையும் நீந்துதல்!

இறைவன் தாள் பற்றி முக்கடலையும் நீந்தினால்,
நிறைவான 'வீடு'தனை அடைதலும் உறுதிதான்!

:peace:
 
Last edited:
ள்ளுவரைப் போற்றுவோம் ...... 10

கற்றதன் பயன்

கல்வி கற்றால் பயன் வேண்டுமே! கற்ற
கல்வி பயனின்றிப் போனால் வீணாகுமே!

கல்வியை முழுப் பயன் உள்ளதாகச் செய்ய
நல்வித வழி ஒன்றைச் செவ்வனே அறிவோம்!

வள்ளுவர் நமக்களித்த குறள் அமுதத்தில்
தெள்ளிய, துல்லிய வழிகள் பல கூறுகிறார்!

கற்றதன் பயனே இறைவனைப் பணிதல்;
மற்றவை எல்லாம் முழுப் பயன் தராது.

இறையைத் தொழாது, பெருமிதம் கொண்டால்,
நிறைவாய் நாம் கற்ற கல்வியும் திகழாது!

'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்', என்பது வள்ளுவம்.

:pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 11

என்றும் துன்பம் இல்லை!

துன்பம் இல்லாத வாழ்வை வேண்டாதார் யார்?
இன்பம் வந்திடும் வழியே, உலகில் அதுதானே!

வேண்டியவை, வேண்டாதவை என்று பிரித்து
ஆண்டிடும் தன்மை, இறைவனிடம் இருக்காது.

அனைத்தையும் ஒருபோல நோக்கி அருளி,
அணைத்துக் காப்பவனும், அவன் ஒருவனே!

அவன் தாள் மலரைத் தஞ்சம் அடைந்ததும்,
அவன் களைவான் துன்பம் அனைத்தையும்.

இன்றே வள்ளுவர் காட்டும் நல்வழி அறிவோம்;
நன்றே வாழ்வுதனை அமைத்து மகிழ்வோம்!

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல', என்கின்றது வள்ளுவம்!

:biggrin1:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 12

நீடூழி வாழ வழி!

உலகிலே நீடூழி வாழ விழைவோர் எல்லோரும்,
அலகில்லா இறை அன்பையே பெறவேண்டும்.

அன்பைப் பெறும் எளிய வழி அவன் தாள் சேர்தல்;
அன்பைப் பெற்றால், நம் துன்பம் எல்லாம் நீங்கும்.

துன்பம் நீங்கினால், சாதனைகள் செய்யலாம்;
இன்பம் பெருகி, சிறப்புற நாமும் உய்யலாம்!

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்றாலும், அவன்
தங்கும் இடம், நம்முடைய இதயங்கள் அல்லவா?

இதய மலரில் அமரும் இறைவனை, எப்போதும்
இதயம் கனிந்துருக, வேண்டி வணங்கிடுவோம்!

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்', என்பது வள்ளுவம்!


:pray:
 
Last edited:
கற்பது கடினம் என்றே அனைவரும்
கற்க அஞ்சும் 'கடுகு'க் குறளையும்
கற்கண்டு போல இனிக்க வைக்கும்
கற்பனை வளம் தான் என்னே!
 

Latest posts

Latest ads

Back
Top