• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Dear Prof. MSK Sir,

Very / really crazy and absolute crazy both mean craziness, right?

Still wonder why such a comment? Awaiting Sri. Bala's answer.

Regards..........
 

புதிய சாகசங்கள்!


மனிதனுக்கு என்றுமே புதுமையாக ஏதேனும்

இனிதே முயல ஆர்வம் இருப்பது நிஜம்தான்.

இன்று தொலைக்காட்சி ஒளிபரப்பியவற்றில்,
நன்கு மனத்தைக் கவர்ந்தது, டெல்லி நிகழ்ச்சி.

இரு சக்கர வாகனங்களிலே, புதிய சாகசங்கள்,
ஒரு நிமிடமும் கண் சிமிட்டாது கண்டு மகிழ!

வண்டியின் கைப்பிடியைக் கைகளால் தொடாது,
வண்டியில் ஏறிச் செய்தனர், அந்த விந்தைகளை!

முதலாவதாக ஒருவர் பைக்கில் நின்றபடி வர,
இரண்டாவது ஒருவர் பத்மாசனம் போட்டு வர,

அதைத் தொடர்ந்து வந்த பலரும், வித்தைகள்
அதைவிடச் செய்து, பாராட்டுகளைப் பெற்றனர்.

ஏணியை வைத்து ஒருவர் சாய்ந்து அமர, அந்த
ஏணியின் உச்சியில் ஒருவர் புத்தகம் படித்திட,

இருவர் நின்றபடிப் பிடித்திருந்த ஒரு கோலில்,
ஒருவர் கவிழ்ந்து படுத்த நிலையிலே வந்திட,

பதினைந்து, இருபது என்ற எண்ணிக்கையில்
பதவிசாகப் பலர் ஒரே வண்டியிலே பயணிக்க,

நிற்கும் வீரர்களைப் பற்றியவாறு, சில வீரர்கள்
விற்போல அழகாக வளைந்து நின்றபடி வந்திட,

அடுக்கி வைத்தது போல. நாற்பத்தியொருவர்
தடுக்காது ஒரு வரிசை வண்டிகளில் நின்று வர,

வீரர்களில் உறுதியும், நீண்ட காலப் பயிற்சியும்,
நேரில் கண்டது போல, நாங்களும் மகிழ்ந்தோம்!

:dance:
 
எளிய வாழ்வு!

கூட்டம் முட்டி மோதும், பேருந்தில் ஏற

நாட்டம் இல்லை, வயதின் காரணத்தால்!

ஐந்து மணி நேரம், வாடகைச் சீருந்திலே,
சென்று சுற்றத்தைப் பார்த்து வருவோம்.

எளிய வாழ்வு வாழ்ந்திட விரும்புவதால்,
ஏ. சி. சீருந்தை மறுக்கவே விழைவோம்.

ஆனால், இன்று நிலை வேறு; வெளியே
போனால், ஏ. சி வண்டிதான் கிடைக்கும்!

குளுமை வேண்டாம் என்று மறுத்தாலும்,
குளுமை வண்டியின் வாடகை தரணும்!

நெருக்கடியைக் குறைத்திட, இதுவும் ஒரு
அருமையான யோசனைதான்; இனிமேல்,

அத்தியாவசியத் தேவை இல்லையெனில்,
அனைவரும் வீட்டிலே அடைந்து கிடப்பர்!

:lock1:


 
Really very nice. Ambition and Desire are the result by-products of thought waves.
Everyone has an aspiration. The aspiration builds up a tower in a person. Aspiration
include or contain the major factor of satisfaction. These days, some are very much
conscious of the Supreme Power indestructible Tree and have started inching towards
the top, which also carries them the tremendous satisfaction because of their thought
waves.

Balasubramanian
Ambattur
 

குடுமியோ குடுமி!


உயர் குலத்தினர் என்று அலையாளம் காட்ட,

உயர்வாக எண்ணிப் போற்றினர், குடுமிகளை!

காலத்தின் கோலத்தால், சில வகுப்பினர், ஒரு
காலத்தில், குடுமிகளை வெட்டிட முயன்றனர்!

ஆங்கில ஆதிக்கத்தால், ஒட்ட வெட்டிய சிகை,
பாங்காக ஏற்கப்பட்டது, பாதுகாப்புக் காரணமாய்!

சரித்திரம் மீண்டும் திரும்பும் என்பர்; அதுபோல,
விசித்திர வருகையாகக் குடுமி திரும்புகின்றது!

பெண்களும் குட்டை முடி வைக்கும் காலத்தில்,
ஆண்கள் நீண்ட முடி வைக்க விழைகின்றனர்!

எந்த நாடு, எந்த இனம் என்ற பாகுபாடு இல்லாது,
வந்தது இந்தப் பழைய சிகை அலங்காரம்! அதில்,

அழகாய் ரப்பர் வளையம் இடுவதும் உண்டு; மிக
அழகாய்ப் பின்னல் போல் பின்னுவதும் உண்டு!

அமெரிக்க நாட்டில், என் காமராவில் சிறைப்பட்ட
அமர்க்களமான ஒரு சிகை அலங்காரம், இதோ!

DSCN7154.JPG

 
Thought Waves

A person has different types of thought waves. I would like to cite ONE such thing,
which we see in our life. Each and Every thought has a special significance in a person's
life. Sometimes, knowingly or unknowingly the end result, we create thoughts and if it
is successful, we cherish too. We generally hear the words viz. Desire and Ambition. These
two are too simple words. But then, it has many intricacies in real practical applications.
Desire sometimes terminate in frustration or dejection. At times, the frustration leads to
destruction aspects. If we are successful in silencing our thought waves and direct it
towards spiritual applications, and listen to our heart waves, we can certainly extend our
affectionate message of the Supreme to others too.

Balasubramanian
Ambattur
 
Last edited:

வன்முறை ஏன்?


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்ததுதான்.

இளம் பருவத்தில் மனத்திலே விதைத்திடும்
அரும் பண்புகள், நன்மக்களை உருவாக்கும்.

இன்று வெளிவரும் சில செய்திகள், நிம்மதி
கொன்றுவிடும் வகையிலே இருக்கின்றன.

பள்ளிச் சிறுவன் ஒருவன், தனக்குப் பிடிக்காத
பள்ளி ஆசிரியையைக் குத்திக் கொன்றான்!

தாய்க்கு இணையாக உள்ள ஆசிரியையிடம்
சேய் போலப் பழகாத காரணம்தான் என்ன?

வன்முறையைக் காட்டும் திரைப்படங்களா?
வன்முறையை வளர்க்கும் video game களா?

பணிவையே கற்றுத் தராத பெற்றோர்களா?
பண்பையே கற்பிக்காத பாடத் திட்டங்களா?

நம் சமுதாயத்தைச் சீர் கெடுக்கும் இவற்றை,
நம் முயற்சிகளால் மாற்றவே முடியாதோ?

:noidea:
 
Please refer to your post # 1024 and Sri. Kunjuppu's post # 1025 and Prof. M S K 's post # 1027, in this thread, Bala Sir!

Even after your explanation, I wonder whether you appreciate me or not!! :noidea:
 

வாலண்டைன் தினமே வருக!


புதிய தலைமுறை வேண்டுவது, என்றும்
புதிய விதமான கொண்டாட்டங்களையே!

வித விதமாகப் பணம் செலவு செய்து, புது
விதக் கேளிக்கைகளை நாட விழைகிறார்!

காதலர் தினம் என்று வாலண்டைன் தினம்,
காதலர் எல்லோரும் எதிர்பார்க்கும் தினம்!

இந்த தினம் பற்றி வேடிக்கையாக உலவுகிற
இந்த விஷயத்தை பகிரவே, எழுதுகின்றேன்!

அழகிய பெண் ஒருத்தி, வாழ்த்து அட்டைகள்
அழகாக அடுக்கிய கடைக்குச் சென்றாளாம்.

'எனக்கு, நீ மட்டுமே முதலும், கடைசியுமான
மனதிற்குப் பிடித்த வாலண்டைன்' என்பதை,

எழுத்துக்களாய் வடித்த அட்டையைக் கேட்க,
எழுந்தது கடைக்காரருக்கு மனதில் ஆனந்தம்!

'இது போன்ற பெண்ணை, நான் இது வரையில்
பொதுவாகப் பார்த்தது இல்லை, அம்மா!' எனச்

சிரித்தவாறு சொல்லி, ஓர் அட்டையை எடுக்க,
சிரித்தவாறே அவள் கண்களை மூடி, எண்ணி,

மெதுவாக விரல்களாலும் எண்ணி, கேட்டாள்,
'விரைவாக ஒன்பது அட்டைகள் தாருங்களேன்!'

:grouphug:
 
God has created the Mankind with the Great Powerful Weapon of the Mind
Only the One who can conquer the Mind perhaps possibly attain victory in this Universe
One cannot imagine or anyone who is the Salve of the Mind
can possibly think of obtaining either Happiness or Mental Peace.

Balasubramanian
Ambattur
 

ஏன் அதே நேரம்?


மருத்துவமனையின் I C U அறை
ஒன்றில்,

மருத்துவம் பெற வருகின்ற நோயாளிகள்

யாராய் இருப்பினும், ஞாயிறு காலையில்,
யமன் அழைத்ததுபோல, ஒன்பது மணிக்கு

மேலுலகம் சென்றுவிட, அதன் காரணத்தை
மேலதிகாரி முதலாக, எல்லா மருத்துவரும்

அறியாது விழிக்க, சிலர், ஏதோ சாபம் எனத்
தெரியாது சொல்லிக் குழப்ப, நம்பாதவர்கள்

எல்லோரும் சேர்ந்து, ஒரு ஞாயிறு காலை,
மெல்லச் சென்று, அறையில் ஒளிந்திருக்க,

ஞாயி
ற்றுக் கிழமைகளில் மட்டும் வருகின்ற,
ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வேலைக்காரன்,

அங்கே உள்ள Ventilator Plug ஐ எடுத்துவிட்டு,
அங்கு சுத்தம் செய்ய அவன் கொண்டு வந்த

ஒரு vacuum cleaner Plug ஐ அதிலே சொருக,
ஒன்பது தடவை அடித்தது பெரிய கடிகாரம்!

:clock:. . . :rip:
 
Last edited:
யூகம் எப்போதும் சரியே!

அனுபவம் மிக்க மருத்துவர் ஒருவர்; தன்னை
அணுகும் கர்ப்பவதிகளுக்குப் பிறக்கப் போவது

என்ன குழந்தை என்பதை, மிகவும் துல்லியமாக
எண்ணிச் சொல்லுவார், முதல் வாரத்திலேயே!

தான் மறக்காதிருக்க, தனது பெரிய 'டைரி'யிலும்,
தானே குறித்து வைப்பார், சொன்ன மறு நிமிடம்!

சரியாகக் குழந்தை பிறந்தால், இனிப்பு வந்திடும்!
சரியில்லை எனச் சிலருக்கு, சந்தேகம் வந்திடும்!

சந்தேகப்படுவோரிடம், தனது டைரியைக் காட்டி,
சந்தேகம் தீர்ப்பார், சரியாக யூகித்ததாக! அவர்கள்,

அவசரத்தில் தாங்கள் தவறாக எண்ணிவிட்டதாக
அவரிடம் உரைத்து, இனிப்பும் வழங்கிடுவார்! இது

எப்படி சாத்தியம் என்ற வியப்பு வருகிறதா? இதோ
எப்படி இது சாத்தியம் என்று விளக்கிக் கூறுகிறேன்.

ஆண் குழந்தை என்று கூறிவிட்டால், பெண் என்றும்
பெண் குழந்தை என்று கூறிவிட்டால், ஆண் என்றும்

அந்த 'டைரி'யில் எழுதிவிடுவார் அவர்! சரியாகவே
அந்த யூகம் இருந்தால், சந்தேகமே வந்து விடாதே!

தவறாக யூகம் இருந்தால்தான், சந்தேகம் வந்திடும்;
தவறில்லை எனக் காட்ட, 'டைரி' குறிப்பு உதவிடும்!

:peace:
 
In olden days, elderly Ladies at home, on seeing the movement and structure
of the expectant mothers, they claimed to have intuition about the gender of
the unborn baby. We do not know whether it is a myth or experience. They
used to say that a woman will carry a boy low and a girl high. How far ..
Those days, there was no sonogram or genetic test.

Balasubramanian
Ambattur
 
புதிய பரிசோதனை!

குருதிப் பரிசோதனைகள் பல உண்டு; அவையே
உறுதி செய்யும், என்ன நோய்கள் உண்டு என்று!

ஒரு புதிய பரிசோதனை பற்றிச் செய்தி வந்தது;
ஒரு மனிதனின் ஆயுட் காலம் எது வரை என்று

அது துல்லியமாகச் சொல்லிவிடுமாம்! அடடா!
இது நடைமுறைக்கு வந்தால், எத்தனை துயரம்!

இந்த நாளில் மரணம் வரும் என்று அறிந்தால்,
எந்த மனிதன்தான் அமைதியுடன் இருப்பான்!

எதிர்காலம் என்றும், எப்போதும், அக்காலத்தை
எதிர்பார்ப்பதாக அமைந்தால்தான் மன நிம்மதி!

ஆனால், இனிமேல் வங்கிகளில் கடன் வாங்கப்
போனால், இப் பரிசோதனை தேவை என்பாரோ?

:noidea:
 

சிவராத்திரி.


சிவராத்திரி பற்றி, பழமொழி ஒன்று உண்டு;

சிவராத்திரி வந்தால், சிவ சிவ என்று குளிர்

போகும் என்று! இந்த வருடம் புதுமை ஒன்று!
நாளும் காலை அலாரம் போல எழுப்பி விடும்

பேரோசையுடன் போகும் சில விமானங்கள்,
பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்க, மிகவும்

குளிர் வந்து உடலை வாட்டி வதைக்க, பெரும்
புதிர் போல இருந்தது, நேற்று விடியற்காலை!

இனிய பயணங்களைத் தடுத்திடும், மிக அடர்
பனி மூட்டம்! Scarf உடன் மனித நடமாட்டம்!

தொலைக்காட்சி செய்திகளில்தான் தெரிந்தது,
தொலை தூரம் செல்லும் விமானம் முதலாக,

உள்நாட்டு விமானங்களும் திசை திரும்பியது!
உண்மையில் இது அடிக்கடி நடக்காத சம்பவம்!

சென்னையை விட்டுக் குளிர் செல்லும் முன்பு,
தன்னை முழுமையாக வெளிப்படுத்தியதோ?

:smow:


 

பத்தாவது கிரஹம்!

மணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகத்தில்
தினப் பொருத்தம் முதல், கிரஹப் பொருத்தமும்

தேடித் பார்ப்பது, நடைமுறையில் நாம் காண்பது!
நாடிச் செல்வது, திறமை உள்ள ஜோசியர்களை!

ஆனால், இந்த ஒன்பது கிரஹங்களைத் தவிரவும்
ஆளும் பத்தாவது கிரஹம், முன் நாளில் இருந்தது!

மாப்பிள்ளை எனும் ஒரு புதிய கிரஹம்தான் அது!
மாப்பிள்ளை என்று கூறித் துரும்பைப் போட்டால்,

அதுவும் துள்ளிக் குதித்தது, அந்தக் காலம்! அவன்
எதுவும் செய்வான் என்று பயமே எல்லோருக்கும்.

அவன் விருப்பப்படிப் பெண் வீட்டார் மாறுவதும்,
அவன் முதல் மரியாதை பெறுவதும் தொடரும்!

உணவு விஷயத்திலும் அவனுக்கே முன்னுரிமை;
உணவு வகைகள் தயாராகும், அவன் விருப்பப்படி!

இன்று பெண்கள் உயர் கல்வி கற்பதால், நிலைமை
இன்று மாறிவிட்டது! பத்தாவது கிரஹம் இல்லை!

:peace:
 

அரைகுறை விசாரணை!

மெத்தப் படித்த பெண்; ஜாதகமும்
சுத்தம்! பொருத்தம் தேடுவது கடினம்!

தொடர்ந்து ஜாதகங்கள் தேடித் துருவி
ஆராய்ந்து, கிடைத்தது நல்ல ஜாதகம்!

மணமகனுக்கு வேலை உள்ளது என்று
மனம் மகிழ உரைத்தனர், உயர்ந்த ஒரு

மென்பொருள் கம்பெனியின் பெயரை!
துன்பம் தீர்ந்ததே என்றபடிப் பெற்றோர்

திருமணத்தை முடித்து சந்தோஷிக்க,
திருப்பமாகக் வந்தது, செய்தி ஒன்று!

மணமகன் அக் கம்பெனிக் காண்டீனில்,
தினம் செல்கிறார் வேலைக்கு, என்று!

:hungry:
 
'கிரிகெட்' மதி கேடா, சீர் கேடா?

வெவ்வேறு விதமான பைத்தியங்கள் பிடிக்கும்,
வெவ்வேறு மனிதர்களுக்கு! பணம், புகழ், இசை,

நாடகம், நாட்டியம், உடைகள், நகைகள் என்று,
தாகம் கொள்ளும், பலவிதமான பைத்தியங்கள்!

விளையாட்டுப் பைத்தியங்கள் இதில் ஒரு வகை.
விளையாட்டைக் கண்டே, ஆனந்தம் அடைவார்.

'கிரிகெட்' என்ற இந்த விளையாட்டிலே ஒன்றி,
மதிகெட்டு இருப்போர், பரந்த உலகில் ஏராளம்!

காண்பதுடன் நில்லாது, பல போட்டிகளில் கலந்து
கொள்வதுடன், பணம் கட்டி விளையாடுகின்றார்!

ஒரு ஓவரில் எத்தனை ஓட்டங்கள் எடுப்பார்கள்?
இது ஒரு கேள்வியாகி, பரிசும் அளிக்கிறது! பலர்

அலைபேசியும் கையுமாக.... இல்லை, காதுமாக
அலைவதை கண்டால், மனதில் வேதனைதான்!

படு தோல்வி அடையும் அதே குழு, மறு தினமே
படு வேகமாக விளையாடி, வெற்றி பெறுகிறதே!

பெரும் பணம் புரளாமல், இவ்வித மாற்றங்கள்
வருவது என்பது, எப்படி சாத்தியம்? அல்லவா?

'கிரிகெட்' பரப்புவது மதிகேடா இல்லை சமூகச்
சீர்கேடா என்று பட்டி மன்றமே நடத்தலாமோ?

:argue:
 
Last edited:

Latest ads

Back
Top