• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


நிரம்பி வழிகின்றது கூட்டம்; சாந்தோம் கடற்கரை!

IMG_3281.JPG
 

கடல் அலைகள் Bench போல வடிவமைத்து வைத்த


கடல் அருகில், சுடும் மணலில், கிடைத்த இடத்தில்,


வசதியாக அமர்ந்தோம் நாங்கள்!

IMG_3281.JPG
 

நினைத்ததும், கிடைத்ததும் - 2


சிவப்பு நிற உருண்டையாக மாற முனைந்து,
உவப்பு மிக எனக்கு எழச் செய்தான் ஆதவன்!

மெதுவாக ஒளியைக் குறைத்தான்; மேகங்கள்
மெதுவாகப் படர, ஒளிந்து விளையாடினான்!

சென்னைக்கு விடை தந்து, மறைய முனைந்து,
இன்னும் இறங்கி, கட்டிடங்களில் மறைந்தான்!

நிலவின் வருகைக்காகக் காத்துச் சோர்ந்தோம்;
நிலவின் தரிசனம் கெடுக்க, வந்தன மேகங்கள்!

தாகம் கொண்ட பூமியின் வேட்கை தீர்க்க, மழை
மேகம் கொண்ட எண்ணத்தால், கரும் திரைகள்!

மழை காலிறங்கிக் கடலிலே பொழிய, கரு நிறப்
போர்வை ஒன்று போர்த்திக்கொண்டது, வானம்!

கடலை ஒட்டிப் பெரிய அளவு நிலவு எழும் என்று
கனவைச் சுமந்து வந்த எனக்கு, ஏமாற்றம்தான்!

சில நிமிடங்கள் சென்றதும், மெல்லிய ஒளியை
நிலவு தந்தபடிக் கண்களில் பட்டது! ஆனால் அது

தொடுவானத்தைத் தாண்டி மிகவும் உயரத்தைத்
தொடும் வண்ணம் சென்றுவிட்டது! இருந்தாலும்,

இன்னும் சில மணித் துளிகளில், தனது ஒளியை
இன்னும் சிறிது கூட்டிப் பிரகாசமானது சந்திரன்!

காண நினைத்தது, நிலவைத் தொடுவானத்தில்;
காணக் கிடைத்தது, அழகிய சூரிய அஸ்தமனம்!

சூரியனும், சந்திரனும் இறையின் கண்கள்தானே!
சீரிய அழகை எது தந்தாலும், மன நிறைவுதானே!

இயற்கை அன்னையைப் போற்றுவோம்! :hail:

 

சிவப்பு நிற உருண்டையாக மாற முனைந்து,

உவப்பு மிக எனக்கு எழச் செய்தான் ஆதவன்!

IMG_3257.JPG
 
.................................................................. மேகங்கள்
மெதுவாகப் படர, ஒளிந்து விளையாடினான்!

IMG_3261.JPG
 

மழை காலிறங்கிக் கடலிலே பொழிய, கரு நிறப்

போர்வை ஒன்று போர்த்திக்கொண்டது, வானம்!

IMG_3280.JPG

 
மெல்லிய ஒளியை நிலவு தந்தபடிக் கண்களில் பட்டது...

IMG_3279.JPG
 

இன்னும் சில மணித் துளிகளில், தனது ஒளியை

இன்னும் சிறிது கூட்டிப் பிரகாசமானது சந்திரன்!

IMG_3288.JPG
 

கடற்கரைக் காவல்!


கடற்கரையில் காதலர்கள் செய்வார் காதல்;

கடற்கரையில் காவலர்கள் செய்வார் காவல்!

பயம் சுனாமியால் வந்த பின்னர், காவலர்கள்
அபயம் தரச் செய்திடும் ரோந்துப் பணி புதிது!

குதிரை மீது ஏறி, அவர்கள் வரும் பவனியால்,

சிறிது களை கூடியது சிங்காரச் சென்னையில்!

கடல் அலைகள் தமது கால்களை வருட, அவை
உடல் அலுங்காது போவது சிறந்த காட்சிதான்!

:thumb:

 
குதிரை மீது ஏறி, அவர்கள் வரும் பவனியால்,

சிறிது களை கூடியது சிங்காரச் சென்னையில்! :thumb:


IMG_3274.JPG
 

A special picture.... especially for Ozone Sir!!

Can we make the Moon glow blue??

Yessssssssssss... With a 'creative kit' and mind :thumb:

Here it is:

IMG_3290.JPG
 
hello R R ,so nice snaps, post 1086 ,i think it was CHITTRAI POORNAMI ,on that day ,so she was in her own glow.(as poetic people compare moon towards women ,like yours)
 
Dear Dr. Narayani,
Thank you! I always say: தங்கள் ஊக்கம், எந்தன் ஆக்கம்! :popcorn:


 

என்று வரும்?


திருமண பந்தங்கள் கேலிக் கூத்தாகி,

திருமணத் தம்பதி பிரிந்து விலகிடும்

கொடுமைகள் அதிகம் நிகழ்வது ஏன்?
மடமையான எண்ணங்களாலேதான்!

திருமணம் பந்தம், இருவர் மட்டுமன்றி,
இரு குடும்பங்களும், இன்ப துன்பங்கள்

பகிர்ந்திடவே, என்ற எண்ணம் வராது,
பகிரங்கமாகச் செய்ய முடியாத, அந்த

அந்தரங்கச் செயல்களைச் செய்திடும்
அந்த உரிமை தம்பதிக்கு வரும் என்ற

கொச்சையான எண்ணம் எழுவதால்!
மெச்சும் வாழ்க்கை வாழ, பரஸ்பரம்

அன்பும், அரவணைப்பும், இரு தரப்பில்
என்றும் காட்டினால், திருமண முறிவு

என்ற சொல்லும் அகராதியிலிருந்தே
சென்று மறையும் நன்நாளும் வருமே!

:dance:


 

The above post is the outcome of the article that Sri. TBS sent, in the other thread,
about the increase in divorce cases in India. :ranger:
 
mothers_day_comment_graphic_14.gif



என் அன்னை!


மங்கையாகப் பிறந்தது மாதவம் என எண்ணி,
மங்காப் புகழ் தரும் தாய்மைப் பேறும் பெற்று,

அன்புடன் அமுதமூட்டி, ஆவலுடன் தாலாட்டி,
பண்புடன் வழிகாட்டி, நேசமுடன் மருந்தூட்டி,

எப்போதும் மகிழ்வூட்டி, ஊர் மெச்சச் சீராட்டி,
தப்பாது பாசம் காட்டி, நான் உயரக் கரம் நீட்டி,

என் சிறப்பே உன் பரிசு என்பதும் நிலை நாட்டி,
என் உயர்வே உன் வாழ்வு என வாழ்ந்து காட்டி,

என்றும் கருணை மிக்க அன்னையே! உன்னை
இன்று மட்டுமா என் உள்ளத்தில் நினைப்பேன்?

அன்னையர் தினம் இன்றே எனினும், மறவாது
உன்னையே வாழ்த்துவேன், தினமும் தவறாது!

தாய்மை வாழ்க! :high5:

 

Attachments

  • mothers_day.gif
    mothers_day.gif
    180 KB · Views: 326

யாருக்கும் வெட்கமில்லை!


கேடிகள் போலக் காரியங்கள் புரிந்ததால்

கோடிகள் சேர்த்து, எப்படியோ ஒரு நாள்

பிடிபட்டு, பதினைந்து திங்கள் சிறையில்
அடைபட்டு, 'பெயிலிலே' வெளி வந்தவர்,

நேராகச் செல்லுகின்றார், பாரளுமன்றம்!
தேறாத இந்த மனிதர்களை கௌரவிக்க,

வீடியோ கலைஞர்கள் ஓடுகின்றார், அந்த
வீர மனிதரைப் படம் பிடித்து, ஒளிபரப்ப!

தொலைக்காட்சி நிலையங்களும், தத்தம்
அலைவரிசையில் காட்ட முந்துகின்றார்!

பாருக்குள் நல்ல நாடு என்ற நாட்டினிலே,
யாருக்கும் வெட்கம் இல்லாது போனதே!

:mad2:

 
சாதிக்கொரு நீதி

அக்கினிப் பூக்களுக்குப் போடவேண்டாம் ஆடைகள்
உதிரப்போகும் எங்களுக்கு வேண்டாம் பந்தங்கள்
மண்ணில் பிறந்தோம் எங்கோ நாங்கள்
இன்றோ மண்ணோடு மண்ணாய்ச் சாய்கின்றோம்
தாயின் வயிற்றில் சூல் கொள்ளவில்லை
தமிழின் வயிற்றில் சூல் கொண்டோம்
ஏடு கொடுக்கவில்லை எங்களுக்கு அங்கே
தோட்டாக்களை மட்டுமே பரிசாகக் கொடுத்தார்கள்
விடியலின் பூபாளத்தைப் பார்க்க நினைக்கின்றோம்
இங்கோ வெடிச் சத்தத்தில் உறங்கத் துடிக்கின்றோம்
சாதிக்கத் துடிக்கும் எங்களுக்கு இங்கே
சாதிக்கொரு நீதி என்றே கூறுகின்றனர்
 
சிந்தனையைத் தூண்டும் கவிதை!

நன்றி, சண்முகம் சார்! :)
 

Latest ads

Back
Top