Raji Ram
Active member
கண்பட்டதாலோ?
கல்லடி பட்டாலும் கண்ணடி, படக்கூடாது எனச்
சொல்வது பொதுவாக எல்லோருமே அறிந்தது!
உலகை மயக்கிய அந்த அழகு 'மர்ஃபிக் குழந்தை'
உலகை விட்டுப் போனதாக வதந்தியும் வந்தது!
எளியோரும் வாங்க இயலும் 'நிர்மா' சோப்புக்கு
பளிச்சென்று நடனம் ஆடிய குட்டிச் சிறுமியும்,
அதிக ஆண்டுகள் உலகில் வாழாது சென்றதாக,
அதிர்ச்சி தரும் செய்தியும் முன்பு பரவி வந்தது!
கோடையில் தாகம் தணிக்கத் தயாரித்த, அந்தச்
சோடை போகாத பானம்தான், இனிய 'ரஸ்னா'!
கன்னங்களில் குழியுடன் அதை விரும்பியவள்,
சின்னஞ் சிறு அழகுப் பெட்டகமான இனியவள்!
'முக்திநாத்' செல்லும் ஒரு புனிதப் பயணத்தில்,
முக்தி தந்தான் ஆண்டவன், அந்தச் சிறுமிக்கும்!
தனியே சுவர்கத்திலே தவிப்பாளே என்பதாலே,
தனியே விடாது, அவளின் தாயும் சென்றாளோ?
கண்பட்டதால்தான் இந்தச் சோகங்கள் என நான்
எண்ணுவதில் தவறுண்டோ, சொல்லுங்களேன்!
out: