Raji Ram
Active member
இப்படி ஒரு வைத்தியம்!
மனித மூச்சு தன்னிச்சைச் செயலாக இராது,
மனிதரை ஆஸ்த்மா நோய் தாக்கும்போது!
நூற்றி அறுபத்து ஏழு ஆண்டுகளாக, மக்கள்
நூற்றுக் கணக்கிலே கூடுகின்றார், ஆந்திரத்
தலைநகரில், வினோத வைத்தியத்திற்கு!
அலை மோதும் கூட்டத்தில், நோயாளிகள்,
நீரில் ஓடும் குட்டி மீனைக் கையிலே ஏந்தி,
நேரில் வந்து மருத்துவரிடம் தந்திட, அவர்
மீனின் வாயில் மருந்தை இட்டு, உடனேயே
மீனை நோயாளியின் வாய்க்குள் உயிருடன்
திணித்துவிட, அது வயிற்றில் சென்றதும்,
திண்டாடித் தன் வாயை மூடி மூடித் திறக்க,
மருந்து பரவி, நோயை குணப்படுத்துமாம்!
மருத்துவ உலகில் இப்படி ஒரு வைத்தியம்!
இப்போது 'மீன் பிரசாதம்' என்ற அந்தஸ்து
இதற்குக் கிடைத்துள்ளதும் வினோதமே!
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட நாளிலே
தப்பாது நடந்திடும் இந்த வைத்தியத்திலே,
இந்த ஆண்டு நெருக்கடியால், அங்கு ஒருவர்,
இனிய உயிரை இழந்துவிட்டது, கொடுமை!
இருநூறு பேர்களுக்கு அடி பட்டுவிட, பலரும்
சரியாக நீர் அருந்தாததால், மயங்கினராம்!
இனி இதுபோன்ற கூட்டங்களை சமாளிக்கத்
தனிப் படை அமைப்பதுவே சாலச் சிறந்தது!
:bump2:
Last edited: