You are right, Dr. C. N. The basic tune is same but we have to adjust to sing a few words!Hello RR Mam ,quiet interesting ,but then still ,when i try for the beat, I feel we have to be a bit faster in few words to spell so as to match the thalam and sruthi as original song and beat.(mam need your :lalala:clarification.)
dear madam !
முன் குறிப்பு:
நேற்று நான் பங்கேற்ற ஐயப்ப பூஜையில்,
காற்றில் பரவி வந்தது ஒரு கீதம்! அடடா!
தேச பக்திப் பாடலின் மெட்டையே 'சுட்டு'
நேசமுடன் எழுதிய பக்திப் பாடல் ஒன்று!
பாட்டின் வரிகள் கேட்டு ரசித்தும் - நான்
பாட்டை எழுத முடியவில்லை! அதனால்
என் எண்ண அலைகள் தந்த புதுப் பாடலை,
முன் வைக்கிறேன், உங்கள் பார்வைக்கு!!
இதோ ஒரு புதிய பக்திப் பாடல்!!
ஜனங்களின் மனக் குறை போக்கிடும் தேவா!
பாரிலே பாக்யங்கள் தா! தா! - அஞ்
சாத நெஞ்சுடனே மண்டலம் ஒன்று,
சாதுவாய் விரதங்கள் நோற்று,
சிந்தையில் உன்னையே தியானம் செய்து,
தந்தை போல் குருவைச் சேர்ந்து,
இரு முடி கட்டி வருவேன்;
திருவடி தரிசனம் செய்வேன்;
திருவருள் நிறைவுடன் பெறுவேன்!
பதினெட்டுப் படிகளைத் தாண்டி வந்தோர்க்கு,
பாரிலே பாக்யங்கள் தா! தா!
சுவாமியே! சரணம்! ஐயப்பா!
சரணம் சரணம் ஐயப்பா!
:hail: ... :hail: ... :hail:
dear balu !
What does the wave tell?
My post was NOT about that sAmiyAr in particular.once again that samiyar absconding!!
dear madam !
இயற்கை மருத்துவமா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால்,
என்னவெனக் கேட்கும் காலத்தில், பலரும்
மூட்டு வலியால் நொந்து நூலாவதை, நாம்
கேட்டு வருகிறோம், சிறு வயதினரிடமும்!
பரவலாகப் பேசப்படுகிற இயற்கை மருந்து,
பலராலும் பாராட்டுப் பெற்றதாகச் சொல்லி,
மூன்று மாத உபயோகத்தில், எப்படிப்பட்ட
மூட்டு வலியும் மறைவதாக உரைத்து, நம்
இணைய தளத்திலும் தரிசனம் தருகிறது,
இனிய காலைப் பொழுதிலிருந்து! இதிலே
முக்கியப் பொருள், மாடு, எருமைகளின்
முன் அழகு கூட்டும் கொம்புகள் தருவதே!
கொம்புகள் தரும் பொருளை, எப்படி நாம்
நம்புவது, சைவ உணவில் சேர்த்தி என்று?
மருத்துவம் படித்த சகோதரர் சொன்னதால்,
கருத்துடன் நானும் கேட்டுக் கொண்டேன்!
விலங்குகள் தந்திடும் பொருள் சேர்த்ததை,
அலுங்காமல் இயற்கை மருந்தே என்கிறார்!
இயற்கையாய் வளரும் கொம்புகள்; மருந்து
இயற்கையே என்று இதனால் கூறுகிறாரோ?
:noidea:
dear raji ram !
இப்படி ஒரு விவசாயி!
விவசாயிகள் என்றவுடன், நிலத்தில் சென்று
வியர்வை சிந்தி உழைக்கும் ஏழைகளே நமது
மனத்தில் தோன்றுவார்கள். எப்பொழுதேனும்,
பணத்தில் மிதக்கும் ஒருவரை நினைப்போமா?
இன்று செய்தியிலே வந்த விவசாயி ஒருவரை
நன்கு அறியுங்கள், இனிய நண்பர்களே! தனக்கு
ஒன்று என்ற இலக்கத்தில் மகிழ்வுந்து வந்திட,
ஒரு கோடிக்கு மேல் பணம் கொடுத்துள்ளார்!
அந்த SUV வண்டியின் விலையே 98 லகரங்கள்;
அந்த எண் ஒன்று என்று கிடைக்க, ஏல ஆரம்பம்
25 ஆயிரங்கள்; அவரது கடைசி ஏலத் தொகை
17 லட்சங்கள்! நம்ப முடிகின்றதா செய்தியை?
:faint:
dear raji ram !
கல்யாணமாம் கல்யாணம்!
'நான் ஒரு மென்பொருள் பொறியாளர்-
தான், அதுவும் அமெரிக்காவிலே' என்று
அறிவித்தால், பெண்கள், பெற்றோரும்
அறியாமல், திருமணம் செய்திடுவார்!
அமெரிக்க I T பொறியாளர் என்று கூறி,
அமெரிக்க நாடு செல்ல ஆவல் கொண்ட
பெண்கள் பதினேழு பேர்களை, ஒருவன்
தன் மனைவிகள் ஆக்கிக்கொண்டான்!
பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு, இது
ஏற்ற உதாரணம் ஆகின்றது அல்லவா?
பெற்றோர் அறியாது மணப்பது, மேலும்
பெற்றோர் விசாரிக்காது விடுவது, என
இரண்டு காரணங்கள், ஏமாற்றுவோரை
இந்த தைரியம் கொள்ள வைக்கின்றது!
திருமணம் செய்வது, மணந்த இருவரும்
அருமையான வாழ்வினை அமைக்கவே
என்று, எப்போது மக்கள் அறிவார்களோ,
அன்று வந்திடும் மணவாழ்வுக்கு மதிப்பு!
:high5:
The movie '47 naatkaL' is uploaded in youtube in 14 parts!! :ranger:
Here is the first part:
47 Naatkal part 1 - YouTube
Yes Sir!! I gave the link for those who are interested.Is it that story written by Sivasankari... ? Sorry.. I don't have patience to sit & see the movie..