• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


நவீன மதன காமராஜன்?


இளம் ஜோடிகள் 1006 ஒரே முகூர்த்தத்தில்,

இணை சேர்ந்து, இல்வாழ்வில் நுழைந்தனர்.

விலைவாசி உயர்வில், தாலி உட்படத் தந்து,
தலைமை தாங்கி J J அம்மா நடத்தக் கண்டு,

ஆச்சரியத்துடன் ஆனந்தம் வர, இன்னொரு
ஆச்சரியம் தரும் திருமணம் செய்தியானது!

தள்ளாடும் 112 வயது வயோதிகன், 17 வயது
இல்லாளைத் தேர்வு செய்து, மணந்தானாம்!

மனைவியர் ஐந்து, வாரிசுகளாகப் பதினெட்டு,
மாபெரும் கூட்டமாகப் பேரன்கள், பேத்திகள்

தொண்ணூற்றியாறு என, ஒரு ஊர் போலவே
எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பெற்றும்,

இன்னும் பிள்ளை வரம் கேட்கும் முதியவன்,
என்ன பெயர் பெறுவான்? மதன காமராஜன்?


:hat: . . . :love:
 

நவீன மதன காமராஜன்?

WTF! 112-Year-Old Man MARRIES 17-Year-Old Girl - WENDYISTA


112yrs_vs_17yrs.jpg
 

அரக்கு மாளிகை?


மகாபாரதக் கதையில் வரும் துரியோதனன்,
மிகக் கொடிய எண்ணத்துடன், பாண்டவர்கள்

அழிந்து போய்விட, எளிதில் பற்றிக்கொண்டு

எரிந்து போகும் அரக்கு மாளிகை கட்டினான்!

இக்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து,
அக்காலத்து அரக்கு மாளிகைபோல, உயர்ந்த

கட்டிடங்களை மாற்றுவது மிகக் கொடுமை!
சட்டெனத் தீ அணைக்க இயலாதது மடமை!

அழகான அடுக்கு மாளிகைகள் கட்டினாலும்,
எளிதாகத் தீ அணைக்கும் உபகரணங்களை

எப்போதுமே தயார் நிலையில் வைக்குமாறு
தப்பாது செய்வது மிகவும் தேவை அல்லவா?

நேற்றைய தீ விபத்து மனத்தைக் கலக்கியது!
ஏற்ற பாதுகாப்பும் இராதது வருந்த வைத்தது!

லஞ்சம் கொடுப்பதிலும் குறைவு கிடையாது;
வஞ்சம் செய்வோரைத் தடுக்கவும் முடியாது!

:evil: . . . :pout:
 

கோடிகள் சேர்க்கப் புதிய வழி!


விலைவாசி உயர்வில் உலகமே இன்று

நிலை குலைந்திட, வாழ்க்கைத் துணை

தேடிக்கொள்ள, இந்தச் சமுதாயம் நன்கு
ஓடி அலைகின்றது! மாதம் ஒன்றிலேயே

லகரம் சம்பாதிக்கும் வரன்களைத் தேடிட,
லகரம் வரை செலவு செய்ய விழைகிறது!

கணினி மயமாகிவிட்ட இந்தக் காலத்தில்,
கணிசமான பொருள் சேர்க்க என்ன வழி?

இரு மனங்களை இணைக்கும் பாலமாகத்
திருமணம் மையங்கள் அமைப்பதே அது!

திருமண மையங்களைத் தேடி, பெற்றோர்
திருமண வயதுப் பிள்ளையின் விவரங்கள்

பதிவு செய்து, வரன் வேட்டை ஆரம்பித்து,
பதிவு செய்த பிறரின் விவரங்களை அலசி,

நூறு சதம் திருப்தி வரும் வரை, தேடலை
வேறு வழியின்றிச் செய்வார், தொடர்ந்து!

இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை
இருக்கின்றன, வித விதமான பதிவுகள்!

கோடிகளில் தொடர்ந்து பணம் கொட்டிட,
நாடிவிட்டனர் பலர், இந்தப் புது வழியை!

:popcorn:
 

பழத்திலும் இனிஷியலா?


கொத்துக் கொத்தாகத் தொங்கும்

புத்தம் புதிய சிறு பலாப் பழங்கள்!

அரும் சுவை கொண்டாலும், அது
பெறும், இருபது சுளைகள் மட்டும்!

எங்கள் தோட்டப் பலாப் பழங்கள்,
தங்கள் இனிஷியல் போல ஏதோ

எழுத்துக்கள் அல்லது வடிவங்கள்,
அழகாகக் கொண்டது அதிசயமே!

:high5:

 

இப்படியும் அம்மாக்களா?


வலைத் தேடல் செய்யும்போது, செய்தி ஒன்று
நிலை குலைய வைத்தது! பெண் சிசுக்களைப்

பிறந்ததும் வதைப்பது, நம் இந்திய தேசத்தில்
பரவலாகப் பேசப்படும் ஒரு விஷயம். ஆனால்,

ஒரு பத்து மாதக் குழந்தையையும், பிறந்த பின்
ஒரு சில நிமிடங்களே ஆன பெண் சிசுவையும்

துணி துவைக்கும் எந்திரத்தில் போட்ட பெண்-
மணிகள் பற்றிய செய்தி, அதிர்ச்சி அளித்தது!

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களே!
பெண் குழந்தையின் தாயே பேயாக ஆனாளே!

பிறந்தாலும் நல்ல தாய்க்கு மகளாக வேண்டும்;
இறந்து போவோம், பேய் தாயாக அமைந்தால்!

:washing: . . . :baby: . . . :evil:
 
Last edited:

பெண்ணும், பொன்னும்!


புன்சிரிப்பே போதும் பெண்ணுக்கு; பல

பொன் நகைகள் எதற்கு என்பர். ஆனால்,

பொன் நகையை விரும்பாத பெண் யார்?
என் சீதனம் என்று பெருமை கொள்வார்!

கேரள மக்கள் அணியும் பட்டை நகைகள்
ஏராளம்! அரைப் பவுன் வளைகள் அடுக்கி,

குறைந்த பவுனில் செய்த நெக்லஸ்களை
நிறைந்து விளங்க எளியோரும் அணிவர்!

செல்வச் செழிப்பும் இருந்தால், பின் என்ன!
செல்வர் அடுக்கடுக்கான நகைகளின் பின்!

அழகுப் பெட்டகமான இந்த இளம் நங்கை,
அழகுக்கு அழகு சேர்ப்பதைக் காணுங்கள்!


48565d1340192725t-muthoot-fin-corp-daughters-wedding-ceremony-gold-image003.jpg
 

வேங்கடத்தான் நினைத்தால்!


சென்ற முறை, வேங்கடத்தானைத் தரிசிக்கச்

சென்ற போது, ஏழு மணி நேரம் நெரிசலிலே!

'இனி தரிசனம் காண, சிங்காரச் சென்னையின்
இனிய கோவிலுக்கே வந்திடுவேன்!' என்றேன்!

'உன்னை நான் விடமாட்டேன்!' என்பதுபோல,
என்னை அழைக்கின்றான், மீண்டும் தரிசிக்க!

இதுதானோ அவன் திருவிளையாடல் என்பது?
இது
தான் பாக்கியம் என்றும் நினைக்கின்றேன்!


:pray2: . . . :high5:

 

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து, 'நீ கவிஞனா?' எ
ன்று


கருணாநிதி கேட்டதற்கு, கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள் !!



அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.
 

நவீன மதன காமராஜன்?


இளம் ஜோடிகள் 1006 ஒரே முகூர்த்தத்தில்,

இணை சேர்ந்து, இல்வாழ்வில் நுழைந்தனர்.

விலைவாசி உயர்வில், தாலி உட்படத் தந்து,
தலைமை தாங்கி J J அம்மா நடத்தக் கண்டு,

ஆச்சரியத்துடன் ஆனந்தம் வர, இன்னொரு
ஆச்சரியம் தரும் திருமணம் செய்தியானது!

தள்ளாடும் 112 வயது வயோதிகன், 17 வயது
இல்லாளைத் தேர்வு செய்து, மணந்தானாம்!

மனைவியர் ஐந்து, வாரிசுகளாகப் பதினெட்டு,
மாபெரும் கூட்டமாகப் பேரன்கள், பேத்திகள்

தொண்ணூற்றியாறு என, ஒரு ஊர் போலவே
எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பெற்றும்,

இன்னும் பிள்ளை வரம் கேட்கும் முதியவன்,
என்ன பெயர் பெறுவான்? மதன காமராஜன்?


:hat: . . . :love:
dear madam !
i heard one comment
in this marriage mela for how many person first marriage,second marriage etc.
guruvayurappan
 

வேங்கடத்தான் நினைத்தால்!


சென்ற முறை, வேங்கடத்தானைத் தரிசிக்கச்

சென்ற போது, ஏழு மணி நேரம் நெரிசலிலே!

'இனி தரிசனம் காண, சிங்காரச் சென்னையின்
இனிய கோவிலுக்கே வந்திடுவேன்!' என்றேன்!

'உன்னை நான் விடமாட்டேன்!' என்பதுபோல,
என்னை அழைக்கின்றான், மீண்டும் தரிசிக்க!

இதுதானோ அவன் திருவிளையாடல் என்பது?
இது
தான் பாக்கியம் என்றும் நினைக்கின்றேன்!


:pray2: . . . :high5:



It happens to almost all of us. Btw, I thought you are in the U.S. Are you back?
 
#1211

There is a Temple at Mugappeir behind Wavin Stop. It is a very old Temple.
The temple is called yet another as Chinna Tirupathy. The temple is very famous for people
who visit for getting issues. Moolavar is Santhana Srinivasa Perumal. It is worth visiting
once.

Balasubramanian
 
...... Btw, I thought you are in the U.S. Are you back?
It is exactly one year since Ram met with an accident! It was on 28th June 2011, two weeks after we landed in Boston!

We came back safe and sound in November 2011. I wrote about our trip to Tirupati in Jan 2012, in PayaNak ka(vi)thaigaL.

Probably, you missed it. I wrote about Chithra PourNami in this thread - post # 1075 - # 1092. But, you may remember that

Ram had to shell out a huge chunk of money, to celebrate our grand daughter's 'Ayush hOmam' in Sing. Chennai!! :grouphug:
 
Last edited:

ஓய்வு?


அலுவலகம் செல்லுவதே தொழில்; வேறு

அலுவல்கள் எதிலும் ஈடுபாடு கிடையாது!

ஓய்வு பெற்ற காலத்தில், வீட்டில் அடைந்து
ஓய்விலேயே காலம் கழித்திடுவார் சிலர்!

வெளியூர் செல்லலாம் என்றால், மழையோ
வெய்யிலோ காரணம் காட்டி மறுப்பார்! தன்

சுற்றமும், நட்பும் காணச் செல்வதே வெறும்
சுற்றல் என எண்ணி, வீட்டில் அமர்ந்திடுவார்!

எதிலும் ஈடுபாடும் இல்லாது, வயதானதால்
எதையும் புதிதாகவும் கற்றுக்கொள்ளாது, தன்

வாழ்க்கையை வாழ்ந்தால் பயன்தான் என்ன?
வாழ்க்கையில் தினமும் புதியவை கற்போம்!

:ranger:
 
Hello RR Mam ,too good and so nice .it just remainds me the tamil song of late mr.sivaji ganesan ,Vaazha nenaithal vaazam.... ,so their is no age ,gender bar ,I feel its the attitude which takes us for long way in our life .thanks for your wonderful creation.:thumb:
 
Dear Dr. Narayani,

I visited Mahabalipuram and Tirupati in the past two days. Write ups will soon appear in PayaNak ka(vi)thaigaL thread.

Had a great time with one of my quick witted nephews! :)
 

இதுதானோ புண்ணியம்!


திருவேங்கடத்தான், நொடியும் ஓய்விலாது

திருவருள் புரியவே, கல்லாகி நிற்கின்றான்!

நெரிசல் எப்போதும் குறைவதில்லை; அந்த
நெடும் வரிசைக்கு என்றும் குறைவில்லை!

ஏழு நொடிகளே கிடைத்த தரிசனத்தில், எம்
ஏழுமலையானைக் கண் கொட்டாது நோக்கி,

நிறைவாக அருளும் அவன் திரு உருவத்தை
நிறைவாகக் கண்டதே புண்ணியம் அன்றோ?

:pray:
 
மாமல்லபுரம்

Dear Dr. Narayani,

I visited Mahabalipuram and Tirupati in the past two days. Write ups will soon appear in PayaNak ka(vi)thaigaL thread.

Had a great time with one of my quick witted nephews! :)
திருமதி ராஜி ராம்
மாமல்லபுரம் என்றே உச்சரியுங்கள்…மகாபலிபுரம் என்பது தவறு…
நன்றி.
 
Last edited:

Mahabalipuram
, derived from 'Mamallapuram' (
Tamil: மாமல்லபுரம்) is the prior and colloquial name of a town in Kancheepuram

district
in the Indianstate of Tamil Nadu, now officially called Mamallapuram. It has an average elevation of 12 metres (39 feet).


Mahabalipuram was a 7th century port city of the
South Indian dynasty of the Pallavas around 60 km south from the city of Chennai in

Tamil Nadu. The name Mamallapuram is believed to have been given after the Pallava king
Narasimhavarman I, who took on the epithet

Maha-malla (great wrestler), as the favourite sport of the Pallavas was wrestling. It has various historic monuments built largely between

the 7th and the 9th centuries, and has been classified as a UNESCO
World Heritage Site.

Source: Wikipedia.
 
மாமல்லபுரம்

Of course, the name Mamallapuram is believed to have been given after the Pallava king Narasimhavarman I, who took on the epithet, rightly known as Mahabalipuram in 7th century, in my opinion this is righteous to say Mamallapuram as observed presently.
 
Last edited:

Latest ads

Back
Top