• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


நல்வழிப் படுத்த!


தொல்லைகள் பல தருவார் என பயம் தரும்

பிள்ளைகள் நல்வழிப்பட என்னதான் வழி?

எளிய வழி ஒன்றைத் தன் செய்தியாக, ஒரு
இனிய பழம் பெறும் நடிகர் உரைத்தார்! அது

நம் வாழ்வில் ஒழுக்கம் இருந்தால், அவர்கள்
தம் ஒழுக்கம் சிறப்பாகக் கற்பாரே நம்மிடம்!

பெற்றோர் அனைவரும் நல்வழி நடந்தால்,
பெறுவோம் ஒரு புது உலகினை அல்லவா?

:angel: . . . :dance:



Nice. Whatever it is, if the parents follow good conduct and character and adopt
good principles, automatically children will be in good shape. Some have unhealthy
life style habits and mingle with the children at home. Some have bad eating habits
besides wrong dishes, which not only leads to obesity and also other side effects.
To get rid of such things, such people consume pills, which the children also notice.
Unless the elders adopt good steps, it is difficult to correct the children if they go wrong.

Balasubramanian
Ambattur
 

புது முயற்சி!


நண்பர் ஒருவரின் ஈடுபாட்டால்,

நண்பகல் இன்று சிறிய மீட்டிங்!

இரு மாதங்கள் ஏலம் போட்டும்,
வருபவர் நான்கு நண்பர் மட்டும்!

புது முயற்சி; முதல் முயற்சியே!
இது போதுமென ஆனந்திப்பேன்!

இனிய இல்லம் வருவோருடன்,
இனிய பொழுது நன்கு மலரும்!

:grouphug: . . . :)
 
Everybody's aim is to achieve happiness in life. Happiness can not be bought
but can be achieved through illustrious people's association. Lord Krishna says
in Bhagavad Gita, that unless a person is united to God, one cannot have
happiness and without peace one cannot be happy. Thus, we ought to have
intellectual human pursuits and an association of Satsang.

Balasubramanian
Ambattur
 
Success mainly depends on what one is willing to sacrifice in life to attain that.
Similarly, success does not remain true happiness as true happiness is the chief
key to success. One should cultivate a habit of not finding fault on others and
avoid complaining about others in life and ignore certain flaws unnoticed. This
in turn will make other person to become good. In order to do that, one has to
slightly change the attitude, if one really needs peace. It is easier to protect our
feet with a proper guard than to carpet the floor.

Balasubramanian
Ambattur
 
Post # 1257

தருமனிடம் உலக மக்களைப் பற்றிக் கேட்டபோது, 'எல்லோரும் நல்லவரே!', என்று உரைத்தான்;

அதே கேள்வியை துரியோதனனிடம் கேட்டபோது, 'உலகில் எல்லோரும் கெட்டவர்கள்!' என்றான்!

நம் கண்ணோட்டமே உலகை நல்லதாகவும் அல்லதாகவும் மாற்றுகிறது! 'சந்தோஷம் உனக்குள்ளே'

(Happiness is within yourself) என்று சும்மாவா சொன்னார்கள்? :D
 
#1257. Excellent quote.

We have two things in our life. One that has just passed i.e. yesterday and the other
one is tomorrow, i.e. yet to come, we do not as to how it is going to be, for some it
may not be. As Madam says, it takes days, months and years to bring truth and faith
but it takes a very little time, may be few seconds, like Duryodhana to destroy.
Sometimes, Duryodhana talks in frustration and he doesn't talk on his own but is guided
by his volatile Uncle. No matter how things get mysterious, no matter how difficult it is
to attain it. One has to try to do his/her best, the Universe i.e. the Almighty knows to
do its part. It is the general law and things will turn around.

Balasubramanian
Ambattur
 

வானுலகு போன பின்!


உலகில் வாழும்போது கண்டுகொள்ளாது,

வானுகில் சென்று சேர்ந்த பின்னர், பலரும்

எண்ணங்களைப் பகிர்ந்து, மாண்டவரையே
எண்ணி இருந்ததுபோல, நன்கு நடிக்கிறார்!

காதல் தேவனாக முன்பு உலவிய ராஜேஷ்
கன்னா மறைந்தவுடன், பல சானல்களிலே,

சினிமா உலகமே அவரால் வாழ்ந்ததுபோல்,
இனிதே பொய்யுரை கூறி வதைக்கின்றார்!

அன்புடன் நாம் வேண்டுவது இது மட்டுமே;
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

:angel: . . . :rip:

 
A question may arise, why should we rehash or remember our past
events. In the process, if one recalls of himself/herself, he/she will
automatically recall of the events of the past, by which we may
have benefited or lost in our life. This action in turn automatically
enables us to recollect almost spiritual acts too and God's blessings.
Even a painful memory can become a valuable one. This process
takes us to get an awakening in us towards delivering faithfullness
to the God and refresh our mind of the past events. When we work
to have a better memory, God (brain) helps us to remember. He too
reminds us of the things we we need to do in life.

To be precise, some say that they do not have time to worship or pray
regularly or daily. But when some crisis or problem arises, then one remembers
about the prayer to the God. Suppose when one needs something from a
friend or a relative, don't they call them and ask about their welfare prior to
their request. Perhaps, it is just a reflection of the above. Don't we take
time to ask someone about the help but also seek solution to solve the problem.
If then, can we not spare sometime to God also to enquire about HIS welfare.

Balasubramanian
Ambattur
 

இதென்ன கொடூரம்!

மனித நேயம் இல்லாது, கொடுமையான

மனிதர் இன்று செய்த செயல், மாபாதகம்!

துப்பாக்கிச் சூடு திரையில் வரும்பொழுது,
துப்பாக்கியால் நிஜமாகச் சுட்ட கொடுமை!

திரை அரங்கில், பச்சிளம் குழவி முதலாக,
உயிரை நீத்தனர், பதினான்கு பேர்கள்! ஒரு

கண்மூடித்தனமான வெறிச் செயலினால்,
கண்மூடித் திறக்குமுன் மாண்டுவிட்டனர்!

சுய புத்தியில்லாத பைத்தியமா? இல்லை,
தயவு தாட்சண்யம் இல்லா மிருகம்தானா?

இனிய பொழுது போக்கிற்குப் போனவர்கள்,
இனிய உயிர் நீத்ததில், மனம் கலங்குகிறது!

:sad:

 

நிலையிலா உலக வாழ்வு!


யாருக்கு எத்தனை ஆண்டு ஆயுள் என்பது,

யாருமே அறியாதது, நாம் வாழும் உலகில்!

எண்பதில் வானுலகு சென்ற தன் தந்தையை
ஐம்பதில் நல்லடக்கம் செய்த இளைய மகன்.

நெஞ்சில் ஈரமில்லா எமன் பாசக் கயிறு வீச,
நெஞ்சு அடைத்து, உலகை நீத்தான்! எங்கள்

தந்தையின் உடன் பிறப்பின் மகன்; என்றும்
சிந்தையில் நிற்கும் இனிய தம்பியே அவன்!

வலைத்தளத்தில் என் ஊஞ்சல் பாட்டினை
நிலையாகச் செய்து, அதிலே மகிழ்ந்தவன்!

இனியவனை இனி காண முடியாது என்பதே,
இன்று வந்த, வேதனை தந்த, கொடிய செய்தி!

கடல் கடந்து வாழும் அவன் குடும்பத்திற்கு,
உடன் சென்று ஆறுதல் சொல்லிட இயலாது!

அன்பின் இருப்பிடமான அவனது ஆத்மா,
என்றும் சாந்தி பெற வேண்டவே இயலும்!


May his noble soul rest in peace!
:pray2:
 

நிலையிலா உலக வாழ்வு!


யாருக்கு எத்தனை ஆண்டு ஆயுள் என்பது,

யாருமே அறியாதது, நாம் வாழும் உலகில்!

எண்பதில் வானுலகு சென்ற தன் தந்தையை
ஐம்பதில் நல்லடக்கம் செய்த இளைய மகன்.

நெஞ்சில் ஈரமில்லா எமன் பாசக் கயிறு வீச,
நெஞ்சு அடைத்து, உலகை நீத்தான்! எங்கள்

தந்தையின் உடன் பிறப்பின் மகன்; என்றும்
சிந்தையில் நிற்கும் இனிய தம்பியே அவன்!

வலைத்தளத்தில் என் ஊஞ்சல் பாட்டினை
நிலையாகச் செய்து, அதிலே மகிழ்ந்தவன்!

இனியவனை இனி காண முடியாது என்பதே,
இன்று வந்த, வேதனை தந்த, கொடிய செய்தி!

கடல் கடந்து வாழும் அவன் குடும்பத்திற்கு,
உடன் சென்று ஆறுதல் சொல்லிட இயலாது!

அன்பின் இருப்பிடமான அவனது ஆத்மா,
என்றும் சாந்தி பெற வேண்டவே இயலும்!


May his noble soul rest in peace!
:pray2:

I also pray for his noble soul to have a peaceful rest.

Balasubramanian
Ambattur
 
[FONT=&quot]தங்களின்[/FONT] [FONT=&quot]துயரத்தில்[/FONT] [FONT=&quot]பங்குகொள்கிறேன்[/FONT]...
 
"அன்பின் இருப்பிடமான அவனது ஆத்மா,
என்றும் சாந்தி பெற வேண்டவே இயலும்!"
நானும் அந்த வேண்டுதலில் சேர்ந்துகொள்கிறேன்.
 
"அன்பின் இருப்பிடமான அவனது ஆத்மா,
என்றும் சாந்தி பெற வேண்டவே இயலும்!"
நானும் அந்த வேண்டுதலில் சேர்ந்துகொள்கிறேன்.
தங்கள் ஆறுதலான சொற்களுக்கு மிக்க நன்றி!
 

ஐந்தில் வளையாதது!


'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!'

பிஞ்சுக் குழந்தைக்கு நற்குணம் வர வைப்பது

தேவை என்பதைக் காட்டுகின்ற பழமொழியே!
சேவை திரை இசைக்கு, என்கின்ற பெயரிலே,

சின்னஞ் சிறு குழந்தைகள் பலரை அழைத்து,
என்னவெல்லாமோ பாட வைப்பது வேதனை!

காதலும், காமமும் ததும்பும் பாடல்கள் பற்பல
காதல் பற்றி அறியக் கூடாத வயதிலே வந்து,

பிஞ்சில் பழுத்ததுபோல் ஆடிப் பாடும் சிறுவர்,
நெஞ்சில் வேதனை எழுந்திட வைக்கின்றனர்!

'நல்ல உணர்ச்சி வெளிப்பாடு காட்டும் குரல்;
நல்ல மதிப்பெண் தருகிறோம்!' எனும் Judges!

புதிய வீடு ஜெயிக்கும் ஆசையில் பெற்றோர்;
இனிய குழந்தைகளைக் கெடுப்பது அறியாது!

'மச்சி, ஃபிகரு, சைட்டு, ரூட்டு விடு', இன்னபிற
மெச்சும் செந்தமிழ் சொற்களும் செழிக்கின்றன!

எங்கு போய் முட்டிக் கொள்ள எனத் தெரியாது
இங்கு வந்து புலம்பலை எழுதுகின்றேன் நான்!

துளியும் சமுதாய அக்கறை காட்டாத செயல்
கலியின் மாற்றங்களில் முதன்மை ஆனதோ?

மனம் வருந்தும்,
ராஜி ராம் :pout:
 

ஐந்தில் வளையாதது!


'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!'

பிஞ்சுக் குழந்தைக்கு நற்குணம் வர வைப்பது

தேவை என்பதைக் காட்டுகின்ற பழமொழியே!
சேவை திரை இசைக்கு, என்கின்ற பெயரிலே,

சின்னஞ் சிறு குழந்தைகள் பலரை அழைத்து,
என்னவெல்லாமோ பாட வைப்பது வேதனை!

காதலும், காமமும் ததும்பும் பாடல்கள் பற்பல
காதல் பற்றி அறியக் கூடாத வயதிலே வந்து,

பிஞ்சில் பழுத்ததுபோல் ஆடிப் பாடும் சிறுவர்,
நெஞ்சில் வேதனை எழுந்திட வைக்கின்றனர்!

'நல்ல உணர்ச்சி வெளிப்பாடு காட்டும் குரல்;
நல்ல மதிப்பெண் தருகிறோம்!' எனும் Judges!

புதிய வீடு ஜெயிக்கும் ஆசையில் பெற்றோர்;
இனிய குழந்தைகளைக் கெடுப்பது அறியாது!

'மச்சி, ஃபிகரு, சைட்டு, ரூட்டு விடு', இன்னபிற
மெச்சும் செந்தமிழ் சொற்களும் செழிக்கின்றன!

எங்கு போய் முட்டிக் கொள்ள எனத் தெரியாது
இங்கு வந்து புலம்பலை எழுதுகின்றேன் நான்!

துளியும் சமுதாய அக்கறை காட்டாத செயல்
கலியின் மாற்றங்களில் முதன்மை ஆனதோ?

மனம் வருந்தும்,
ராஜி ராம் :pout:

Super Super Raji. Ungaludaiya Vaiyukku Sarkarai than poda vendum. Besh. You have brought
out very nicely.

Balasubramanian
Ambattur
 
Last edited:

Thank you Bala Sir. I was very upset with the 'love theme round' in one of the music competitions.

Hence this write-up. Can God save this world? :noidea:
 
Hence this write-up. Can God save this world? :noidea:
உங்கள் கவிதை அற்புதம் ராஜி மேடம். உலகம் நிச்சயம் மாறும். மாற்றம் இன்றியமையதது. இதுவும் கடந்து போகும். வருந்ததீர்கள். Once the viewrs start rejecting such programmes they will die naturally. Lets hope we avoid vewing.. Cheers.
 

Latest posts

Latest ads

Back
Top