Raji Ram
Active member
கையூட்டு அதிகாரிகள்!
மெய் வருந்த வேலை செய்து பொருள் ஈட்டாது,
கையூட்டுப் பெற்று, பொருள் ஈட்டுகிறார் இன்று!
காயலான் கடையில் போடவேண்டிய பேருந்து,
காலனாக மாறியது ஒரு சிறுமியின் வாழ்விலே!
எளிய வாழ்க்கை வாழும் ஒருவர், தன் மகள் மீது
பெரிய நம்பிக்கை வைத்துப் பள்ளிக்கு அனுப்ப,
அடித்தளம் வலுவாக அமைத்திடாத பேருந்தின்
அடியில் நழுவி விழுந்து, இன்னுயிர் துறந்தாள்!
நாங்கள் நால்வரைக் கைது செய்தோம் என்றும்,
நாங்கள் பேருந்தை எரித்தோம் என்றும் சொல்லி,
காவல் துறையும், பொதுமக்களும் பூரித்தாலும்,
கேவலமான லஞ்சத்தை ஒழித்திட முடியுமோ?
நெஞ்சில் கொஞ்சம் கருணையுடன், அதிகாரிகள்
லஞ்சம் பெற்று, வஞ்சம் செய்யாது இருப்பாரோ?
கையூட்டு அதிகாரிகள் இனி அஞ்சி நடுங்குமாறு,
கை வெட்டும் தண்டனையைத் தர வேண்டுமோ?
:fear: