எண்ண அலைகள்: பின்னூட்டம்
துப்பாக்கிக் குறள்! (அஞ்சல் 129)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
நானும் என் நண்பன் ஒருவனும் உயர்நிலைப்பள்ளி நாட்களில் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அவற்றின் பின்னணியில் நாங்கள் இந்தக் குறளை இவ்வாறு பொருள்படுத்தினோம்:
துப்பு ஆய்வோர்க்கு துப்பு ஆய (உதவுவது) துப்பாக்கி; (அதுவன்றி) துப்பு ஆய்வோர்க்கு
துப்பு ஆய்வதற்கு உதவும் மழை(யும்).
(மழை பெய்தபின் கால் தடங்கள், கார் டயர் தடங்கள் போன்றன நன்கு பதிவதால் மழை துப்பார்க்கு உதவியது என்றோம்.)
வேடிக்கை ஒருபுறம் இருக்க, இந்த ’துப்பு’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி ஒன்பது வகையான விளக்கங்களைத் தருகிறது:
(ஆதாரம்:
Tamil lexicon)
--துப்பு: வலிமை; அறிவு; சாமர்த்தியம்; முயற்சி; உற்சாகம்; பெருமை; நன்மை; பொலிவு; பற்றுக்கோடு; துணை; துணைக்கருவி; ஆயுதம்; தன்மை.
--துப்பு: நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; நெய்.
--துப்பு: தூய்மை.
--துப்பு: பகை (துப்பின் எவனாவர் மற்கொல்--குறள் 165)
--துப்பு: ஆராய்ச்சி; உளவு.
--துப்பு: துரு.
--துப்பு: பவளம்.
--துப்பு: உமிழ்தல்.
--துப்பு: உமிழ்நீர்.
துப்பாக்கி: குறிநோக்கிச் சுடும் கருவி; கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய்.
துப்பார்: உண்பவர்.
துப்பாள்: உளவறியும் ஆள்.
துப்புக்கூலி: உளவு கண்டுபிடித்தற்கு உதவும் கூலி.
*****