Superb Raji Maam!! அற்புதமான வார்த்தை ஜாலம்...வாழ்த்துக்கள்புனிதமான இசை பாட இயலும் சிறுமி,
புதினமான இசை பாடி, அதில் காணும்
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!Superb Raji Maam!! ....
மூன்று!
சங்கடம் தீர்க்கும் இறையின் திருநாளில்,
சங்கடம் தந்துவிட்டது, இந்த எண் மூன்று!
மூன்றெழுத்து சூப்பர் ஸ்டாரின் மருமகன்,
மூன்றெழுத்து நாயகனுக்கு, திறமை மிக்க
மூன்றெழுத்து உலக நாயகனின் மகளான,
மூன்றெழுத்து நாயகியே ஜோடியான படம்!
'கொல வெறி' பாட்டைப் பிரசித்தம் ஆக்கி,
இள வயதுக் குழந்தை முதல் பாடவைத்து,
சாதனை போல் சொல்லுவதைவிட, என்ன
சாதித்தது இது, என்று வியந்தே போனேன்!
பக்குவமில்லாத வயதிலே காதலில் மாட்டி,
பக்கத்தில் வந்துவிடச் சந்தப்பங்களை நாடி,
படிப்பு முடித்தவுடன், தாத்தாவின் சொத்தை
அடித்துக் கேட்கும் ஒரு இரு துருவ நாயகன்!
பிள்ளைகள் பற்றி ஏதும் அறியாத பெற்றோர்!
பிஞ்சில் பழுத்த, காதலைப் போற்றும் தங்கை!
அழகு இருப்பினும், இல்லாவிடினும், வதனம்
அழகாக உணர்ச்சிகள் காட்டாத இளம் ஜோடி!
பார்க்க ஆரம்பித்த கொடுமைக்காக, முழுதும்
பார்த்தேன், கதையின் முடிவினை அறிந்திட!
எளிதாகப் புரியும் விதமாய்க் காட்டினார்கள்,
தெளிவான கடைசிக் காட்சியால்! என்னவா?
கதையை ஆராயாதீர்கள்; அப்படி ஆராய்ந்தால்,
கதாநாயகன் செய்யும் கடைசி வேலை ஆகும்!
படம் பார்க்காதவர்களுக்குக் குறிப்பு:
கதாநாயகன், தானே தன் கழுத்தை அறுத்துக் கொள்கிறான், கடைசிக் காட்சியில்! :violin:
Super Punch KK4646 Sir!! Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers.இது ஒரு படம்....இதற்க்கு... ஒரு விமர்சின புதுக் கவிதை....!!
கஷ்டம்டா சாமி...!!
Super Punch KK4646 Sir!! Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers.
நண்பரே!.......... இது ஒரு படம்....இதற்கு... ஒரு விமர்சின புதுக் கவிதை....!! கஷ்டம்டா சாமி...!!
How about this smiley punch:Super Punch KK4646 Sir!! Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers.
மூன்று மணி நித்திரை வேளையிலே வந்ததோ ....
மூன்று - தொடர்ச்சி .....
மூன்று, என்னை விடவில்லை; இரவில்
இரண்டரை மணி வரையில், விநாயகர்
ஊர்வலத்தை நடத்திய சிலர், வெடிகளை
ஊர் முழுதும் அதிர்ந்து முழங்க வெடித்து,
நித்திரா தேவியை எவரும் நாட விடாது,
நித்திரையைக் கலைத்துவிட்டனர்! பின்,
முடிவாகக் கண் அயரும் நேரம் கண்டது,
கடிகாரத்திலே அதிகாலை மணி மூன்று!
:yawn: . . . . . :clock:
என்ன கொடுமையான சாபம்![/b]......... "மூன்று" எனும் திரைப் படத்தை காண்பீரே ...
மூன்று முறைதான் என சபித்ததோ....?
தங்கள் ஊக்கம், எந்தன் ஆக்கம்! நன்றி.nice post ! thanks
'மூஷிகம்' என்றாலே மூஞ்சூறு!என்ன கொடுமையான சாபம்!
எண்ணவே மனத்தில் சோகம்!
ஒரு முறை காண்பதுவே அரம்!
மறு முறை பார்ப்பேனோ படம்!
தங்களது கவிதைக்கு நன்றி!
அங்கு எனக்கொரு சந்தேகம்!
'மூஷிகம்' என்றாலே மூஞ்சூறு!
'மூஷிக வாகனரே' பிள்ளையார்!
மூஷிகம் மூஷிகத்தில் ஏறுமா?
'மூஷிகர்' ஆவாரோ விநாயகர்?