• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


Dear Bala Sir,

I appreciate your efforts to enlighten people with your posts. I started this thread for the purpose quoted below - the OP.

So, please leave ONLY your valuable comments about my posts in this thread. Thank you!
:)

யதார்த்த வாழ்வில் எத்தனை இன்பங்கள், துன்பங்கள்!

யதார்த்த நடையில் வரும் எளிய இந்தத் தொகுப்பில்

மேன்மையாக இறை அளித்த இம் மனிதப் பிறவியை,

மென்மையான கவிதைகளால் மாற்ற முனைகிறேன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 

இனிய உளவாக ...


இனிய உளவாக இன்னாத கூறல் என்பது

கனி இருக்கக் காய் கவர்வதைப் போன்றது!

இனிய உளவாக இன்னாத செய்தலும் கூட,
கனி இருக்கக் காய் கவர்வதைப் போன்றதே!

மனம் மயக்கும் இன்னிசை வடிவங்கள் பல;
மனம் கெடுக்க, இசை வடிவாக உள்ளன சில!

உயர்ந்த இசையைத் தந்திட இயலும் அந்தச்
சிறந்த சிறுவர், சிறுமியர் பலர் இருந்தாலும்,

ஒரு சமூகத்தினரை நக்கல் செய்யும் விதம்,
ஒரு நீண்ட நிகழ்ச்சியை அளித்தது, வேதனை!

திருமணத்தன்று நல்ல நேரம் பார்த்து, அந்தத்
திருமணப் பெண்ணுக்கு அணிவிக்கும் உடை,

கேலிக்கூத்தான ஒரு நிகழ்ச்சியில் தோன்றிய
மேலான அந்தச் சிறுமிகளுக்கு உடுத்தப்பட்டு,

கலாச்சாரம் அவமதிக்கப்படுகிறது; தடுத்திடக்
கலாச்சாரக் காப்பாளர்கள் யாரும் இல்லையா?


:noidea:

 
Thank you very much for your input.

A person who closes his eyes, would be able to see the dark only
While a person who keeps the eyes open can see the light and the universe
A person who frequently sleeps embraces only the sleep
While a person who is alert, always remain happy in the life
Cat things that if it closes its eyes, the Universe is not there
While a few think that if they think the destiny can be changed
Destiny and Destination is not decided by a human, though it may be short lived
But some do not purely depend on the destiny alone nor desires to have a frequent sleep
Thus one cannot be signed off just like that.

Balasubramanian
Ambattur
 

செல்வம்...


'செல்வம்' என்று ஏன் பெயர் வந்தது எனில்,

செல்லும் அது ஓரிடத்திலிருந்து வேறிடம்!

'கைக்குக் கை மாறும் பணமே, உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே' என்ற இரு

வரிகள், திரையிசைப் பாடலில் வந்தாலும்,
சரியான மன நிலை உரைத்திடும் வரிகள்!

பொன்னை வாங்கினால், காப்பது கடினம்;
மண்ணை வாங்கினால், வந்திடும் லாபம்!

இந்த எண்ணத்தால், பலர் இறங்கியுள்ளார்,
சொந்தத் தொழிலாக நில வியாபாரத்தில்!

கொலைகள் கூடச் செய்யும் அளவுக்கு, இது
நிலை குலைய வைக்கும் தொழில்தானாம்!

பண வெறி நன்கு தெரிய, ஒரு நிகழ்ச்சியில்,
பணம் சேர்க்க வழிகளை எடுத்துக் கூறினர்!

போதுமென்ற மனமே இன்றி, இவர்கள் எப்-
போதும் செல்வம் பெருக்க விழைந்து, நல்

வாழ்வின் அறவழிகளை மறந்து, இவ்வுலக
வாழ்வில் நிம்மதியையே இழக்கின்றனரே!

:twitch:
 

Emu birds - the recent target of attack in Chennai!

Picture courtesy: Google images.


emu-12.jpg
 

பண மோகம்!


நாட்டுக் கோழிகளைக் கொல்வது போதாதென, வேற்று
நாட்டுக் கோழிகளைக் கொல்லத் திட்டங்கள்; இதனால்

கொள்ளைச் செல்வம் சம்பாதிக்கலாம் என உரைத்துக்
கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம்; நம் மக்களுக்கோ

எந்த முதலீட்டில் பணம் கொழிக்கும் என்ற நோக்கிலே
சிந்தனைதான் மனதில் எழுந்து வருகின்றது எந்நாளும்!

ஈமூ கோழிகளால் லாபம் பல லட்சம் என்று அறிவித்து,
ஈமூ கோழிப் பண்ணைகளை அமைக்கப் பணம் பெற்று,

பண முதலீட்டளர்கள் பலர் சிக்கியதும், அவர்கள் தந்த
பணத்தில் ஏதோ பெயருக்குப் பண்ணைகள் அமைத்து,

கொடிய வெய்யிலால் ஈமூக்களும் மாண்டுவிட, அந்தக்
கொடுமையாளர் பணத்துடனே மாயமாகப் போகிறார்!

ஈமூக்களைக் கொன்று பணம் பெருக்க விரும்பிய பலர்,
ஈமூக்கள் பராமரிப்பின்றி இறக்க, ஏமாந்து போகின்றார்!

பிற உயிர் கொன்று தன்னுயிர் வளர்க்கும் குணம் மாறி,
பிற உயிர்க்கு உதவும் தன்மை வளரும் நாளே நன்நாள்!

:angel:
 
Every one talks about Sanatana Dharmam. In fact, it discloses the importance
and value of the God incarnated to re-establish the Dharmam in this Universe.
Lord Krishna has its own special place amongst various Avatars. Our Ithihasas
amply explain HIS manifestation of divinity (purna avatar), HIS Lilas (divine play),
etc . One can find all the facets of a human life in his Avatar. The traits in HIS
Avatar explains about Compassion, Love, Brotherhood, Guru and the role of a disciple
besides affection and valour, etc. Lord Krishna influences all the spheres of life in
his manifestation.

Balasubramanian
Ambattur
 
.............. Lord Krishna influences all the spheres of life in his manifestation. ....
பெறும் பணம் பெரும் பணமாக வழிதேடி, இடையூறுகளில் மாட்டிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றி,

சில எண்ணங்களைப் பதிக்கின்றேன்! அதற்கும் கண்ணன் அவதாரத்துக்கும் என்ன சம்பந்தம்? :confused:
 

மந்திரத்தில் மாங்காய்!


மந்திரத்தில் மாங்காய் வர வைப்பது, பல

தந்திரக்காரர்கள் செய்துகாட்டும் வித்தை!

ஒரு லட்சம் முதலீடு; ஒவ்வொரு மாதமும்
வரும் ஐயாயிரம், பல ஆண்டுகளுக்கு என,

கொடுக்கவே முடியாத வட்டி விகிதங்கள்,
கொடுப்பதாகக் கூறி ஏமாற்றிடும் கூட்டம்!

ஒரு சில மாதங்கள் தரும் பணத்தை நம்பி
வேறு பலரும் திட்டத்தில் சேர்ந்ததும், தாம்

சேர்த்த கோடிகளுடன், ஏமாற்றும் கூட்டம்
சேர்ந்துவிடும்,
ஏதோ கண்காணாத தேசம்!

நல்ல உழைப்பால் வந்த செல்வமே, என்றும்
நல்ல விதமாய்த் தங்கும் என்று அறிவோம்!

:decision: . . . :high5:
 
Lord Krishna Manthram can help in any form to earn money, to acquire wealth,
to acquire property and to acquire prosperity and to escape from difficulties
if found guilty. Some great leaders first chant Krishna Manthram before starting
any activity. Even a thief, when he goes to some house to steal, he prays
to God that he should not get caught while stealing and till he escapes from that place.

Balasubramanian
Ambattur
 

Dear Bala Sir,

Please do not give new ideas to the thieves! Already, Sing. Chennai has lots of thefts and let NOT Lord Krishna also come to

support the thieves! BTW, did this idea occur to you because Krishna is called 'kaLLa Krishna'?

I adore a scene in Ramayana, where Ravana comes in the disguise of Rama to cheat Sita but when he comes in front of her,

Rama's 'eka pathni vratham' comes into his mind and so he goes away without disturbing her, who is not his pathni! :angel:

Regards,
Raji Ram
 

புது யுக்தி!


வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றால்,
வீட்டின் பூட்டை உடைத்துத் திருடுவார், முன்பு!

ஜன்னலை உடைத்து, அலமாரியை அருகிழுத்து,
ஜன்னல் வழியே தமக்கு வேண்டியதை எடுப்பார்!

இரவு வேளை வீட்டினுள்ளே நுழைந்து, மெதுவாக
இரவின் அமைதியையும் கெடுக்காது, உறங்கிடும்

மக்களின் உறக்கமும் கெடுக்காது, அலமாரியைப்
பக்கத்தில் இருக்கும் வெட்டவெளியில் உடைக்க,

ஓசைப்படாமல் எடுத்துச் செல்லும் புது யுக்தியை
ஓசைப்படாமல் கையாண்டு, அதில் வெற்றியோடு,

தங்கமும், பணமும் கொள்ளை அடித்தவர், இங்கு
சிங்காரச் சென்னையில் உலவுகின்றார்! அவர்கள்

தாம் பிடிபடாமல் இருக்க, இறைவனை வேண்டித்
தம் பங்காகக் காணிக்கையும் போட்டுவிடுவாரோ?


:hail: . . . :pray:
 
All yours quotes are really very excellent including the one that you have
brought about Sri Ravana, which some may not know. I have no words
to express my feeling about your "Kavithai Nayam and Expression of facts".
Let God bless you to give us many more such things to relish.

Balasubramanian
Ambattur
 

வதந்திகள்!


அழகே ஆபத்து என எல்லோரும் அறிவர்;
அழகு செய்யும் பொருட்களிலும் ஆபத்தே!

கைககளை அலங்கரிக்க மருதோன்றியின்
இலைகளைப் பறித்து அரைக்கச் சோம்பல்!

பொடியை வாங்கிக் குழைத்துப் போட்டனர்;
முடிவில் வந்தது 'இன்ஸ்டன்ட்' வண்ணம்!

தெருவோரம் இவற்றை இட்டுவிடுவோர்,
ஒருபோதும் தீங்குகளை எண்ண மாட்டார்!

பற்பல ரசாயனங்களும் சேர்க்கப்படுவதால்,
பற்பல தோல் நோய்களைப் பரப்புகின்றார்!

மணலைக் கயிறாகத் திரிப்பது நம்முடைய
மக்களுக்குக் கைவந்த கலையே அல்லவா?

வண்ணங்களில் விஷம் இருப்பதாக, வதந்தி
எண்ணற்ற செல்லுலாக்களுக்குச் சென்றிட,

மருத்துவமனைகளில் நிரம்பியது கூட்டம்!
கருத்துடன் கவனித்த மருத்துவர்கள், அங்கு

வந்த பெண்கள் ஐநூறு ஆயினும், சிலருக்கே
வந்தது கொஞ்சம் பாதிப்பு, என்றனர்! இப்படி

சஞ்சலம் தரும் வதந்திகளைப் பரப்புவோர்,
கொஞ்சமேனும் பிறர் நலன் நினையாரோ?

:noidea:
 

ஒரே ஊரில் இருந்தும்!


சிறு வயதில், ஓடி விளையாடி மகிழ்ந்து,
சிறு சண்டைகள் போட்டு, பிறகு சேர்ந்து,

பெற்றோர் வீட்டில் வளரும் சகோதரர்கள்,
உற்ற நேரத்தில் மணம் செய்து, மனைவி

மக்களுடன் வாழும்போது, பெற்றோரும்,
தக்க நேரத்திலே இறைவனடி சேர்ந்ததும்,

ஒரு வருடம் சேர்ந்து கிரியைகள் செய்து,
மறு வருடம் முதல், ஒற்றுமையே இன்றி,

ஒரே ஊரில் வாழ்ந்தும், பெற்றோருக்காக,
ஒரே நாள் வருடத்தில் செய்யும் கிரியை,

தனித் தனியாகச் செய்திட விழைகி
ன்றார்!
மனிதர் ஏன் இவ்வாறு மாறிவிடுகின்றார்?

தன்னை நினைக்கும் நாளில், முன்னோர்
தன்னைக் காக்கை வடிவில் காட்டிடுவார்

எனச் சொல்லக் கேட்கிறோமே! என்றால்,
தனக்கென எந்த வீட்டை அவர் நாடுவார்?


:noidea:
 
வணக்கம் திருமதி ராஜி ராம்.

பிள்ளைகள் மணமாகித் தனித்தனி வீடுகளில் தனித்தனி அடுப்புகளில் சமையல் செய்து குடும்பம் நடத்தினால் ஒவ்வொரு பிள்ளையும் தன் குடும்பத்துடன் தனித்தனியே பெற்றோர் ஸ்ரார்த்தம் ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இது சரியா தவறா என்று இங்குள்ள சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறலாம்.

இதுபோல அமாவாசை ஒரு நிறைந்தநாள் என்ற வழக்கம் தமிழகத்தில் இருந்தாலும் அன்று சந்திர பலம் பூரணமாக இல்லாததால் அந்த நாளில் நல்ல காரியம் தொடங்குவது சரியல்ல என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

*****
 

Dear Saidevo Sir,


பள்ளிப் பருவத்தில், ஆண்டு விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்போம்! ஏனெனில், பாட்டியின் 'ஸ்ராத்தம்' செய்ய,

வெளியூரில் வசித்த எங்கள் மூன்று சித்தப்பாக்கள், குடும்பங்களுடன் வருவார்கள்! இப்போது, ஒரே ஊரில் வசிப்பவர்கள்,

பிரிந்து செய்வது என் மனதை வருத்தியது. அதனால்தான் எண்ண அலைகளில் பதித்தேன்.


சிங்காரச் சென்னையில், அமாவாசையைப் பல வகுப்பினர் 'நிறைந்த நாளாக'க் கொள்வதும், எனக்கு ஆச்சரிய
த்தைத் தந்த விஷயம்!
 
dear Raji RAM !
one more request from a leading writer like Mrs.VR to BALA sir .
it is high time sri Bala sir to start his own thread since he is having many information .
but i think ,he is comfortable in conveying matters when sharing.
guruvayurappan
 

நீல நிலவு!


நான்கு பருவங்களாக ஓர் ஆண்டைப் பிரித்தால்,
நான்கு முழு நிலவுகள் ஒரு பருவத்தில் வந்தால்,

அதில் மூன்றாவது நிலவைத்தான், முன்நாளில்,
அதி அற்புதமான நீல நிலவு என்று கூறுவார்கள்.

இரண்டு அல்லது மூன்றாண்டுகளில், ஒரு முறை
இவ்வாறு வந்திடும் முழு நிலவே இது; அதனால்,

என்றேனும் நிகழும் நிகழ்வை, 'Once in a blue moon'
என்றே குறிப்பிடுவதும் ஒரு வழக்கம் ஆயிற்றாம்!

என்றாலும், இந்நாளில், ஓரே ஆங்கில மாதத்தில்
தோன்றும் இரண்டாவது முழு நிலவே, நீல நிலவு!

இதன் நிறம் நீலமாக இல்லாவிடில் என்ன? நாமே
இதன் நிறத்தை மாற்றிவிடலாமே, வடிகட்டியால்!

முயலின் உருவம் அல்லது மூதாட்டி உருவம் என,
நிலவின் கறையை நினைப்பது மக்களின் வழக்கம்!

நிலவு உதயத்தில் நேராக நிற்கும் இவ்வுருவங்கள்,
நிலவு மறையும் போது தலைகீழாவது மிக அழகே!


:high5:
 

இதன் நிறம் நீலமாக இல்லாவிடில் என்ன? நாமே

இதன் நிறத்தை மாற்றிவிடலாமே, வடிகட்டியால்!

Photo courtesy: Google images.


blue-moon620x350.jpg
 

நிலவு உதயத்தில் நேராக நிற்கும் இவ்வுருவங்கள்,

நிலவு மறையும் போது தலைகீழாவது மிக அழகே!

Photo courtesy: Google images.

0.jpg
 

This is a click in my camera on Chithra paurnami day and the blue glow

created with the help of 'creative kit' provided by Picasa.


IMG_3290.JPG
 

Latest posts

Latest ads

Back
Top