• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வணக்கம் திருமதி ராஜிராம்.

இத்தகு கவிதைகள்
எழுதுவது அழகு
படிப்பது இனிமை.

மேலுள்ள சிறு கவிதை ஆசிரியத் தாழிசையில் வருவது.

நண்பர்கள் அனவருக்கும்:

கவிதைகள் அலகிட்டுப் பார்க்க ஒரு சிறந்த மென்பொருள் தளம்:
Avalokitam - Virtual Vinodh
இந்த மென்பொருளைத் தரவிறக்கமும் செய்யலாம்.
 

நண்பர் திரு. சாய்தேவோ அவர்களே,


தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
இதோ என் விளக்கம்!


நான் முயலும் புதுக் கவிதைகளில்,

நான் முனைவது எதுகை, மோனை!

வரிகளில் முதல் இரு எழுத்துக்களும்
சரியாக அமைந்துவிட்டால் போதும்!

கணினியில் தட்டெழுதினால், நீளம்
கணக்காக அமைந்
தில் வேண்டும்!

சொல்ல நினைக்கும் கருத்துக்களை
மெல்ல உணர வேண்டும் படிப்போர்!

'யாப்பிலக்கணம் முழுதும் கற்றறிந்து
யாவரும் போற்றும் வண்ணம் எழுது!'

என்று எனை வற்புறுத்தினால், நான்
இன்று படைப்பவை நின்று போகும்!

நட்புடன்,
ராஜி ராம் :)


(அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவருதல் 'மோனை' ஆகும்;

இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் 'எதுகை' ஆகும்.)
 

இப்படி ஒரு வலை அதிதி!

வலைத்தளத்தில் பழகினால் நல்ல நட்பு

நிலையாகக் கிடைக்கும்; அது உண்மை!

போகிற போக்கில் நுழைந்துவிட்டு, மனம்
போகிற போக்கில் ஒரு தனிப்பட்ட மடலை

அனுப்பிவிட்டு, விரசமான விவரங்களை
அலுங்காமல் எழுதினால், அது வேதனை!

'அதிதி தேவோ பவ', என உரைத்தாலும்,
அதிதி இதைப் போன்று வராததே நலம்!


குறிப்பு:


இது
வேறோர் இணையதளத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்! :pout:
 

எங்கே போனது பசுமை!


மழைத் தேவன் இந்திரனும், நீர் நிலைகள்
நன்கு
மழை நீரால் நிரம்ப, அவற்றைக் கருணையுடன்

காக்கும் வருண தேவனும் வெகுண்டுவிட்டால்,
தாக்கும் பசியும், பஞ்சமும் பூமியை! வைகையில்,

ரோகம் தாக்கிய சோழன் கை வைக்க, அவனுக்கு
ரோகம் நீக்கிய கருணையால், வைகை ஓடுகின்ற

அந்த ஊரை, 'சோழன் உவந்தான்' என்று அழைத்து,
வந்தது 'சோழவந்தான்' என மருவிய பெயர் பின்பு!

அதன் தென்கரையிலே அமைந்த ஊர் 'தென்கரை'!
அந்த ஊர்களை இணைக்க அமைத்திருந்த பாலம்,

கடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட, அங்கு
நெடும் பாலத்தை அழகாகக் கட்டினர்! இப்பொழுது,

சொட்டு நீர்கூட ஓடாத வைகையை அங்கே காண,
சொட்டுகிறது நமக்கு ரத்தக் கண்ணீர்! முன்பிருந்த

பசுமை எங்கே போனது? மக்கள் வாழ்விலும், இனி
பசுமையும், வளமையும் திரும்பும் நாள் வருமோ?


:pout:
 

கணினி பெண்ணா, ஆணா?


கணினி பெண்ணே என்றனர் ஆண்கள்! ஏனெனில்,

1. அதைப் படைத்தவனுக்கே அதன் செயல்பாடுகள் புரியாது!

2. தங்களுக்குள் பேசும் பரிபாஷை, மற்றவர்களுக்குப் புரியாது!

3. சின்னத் தவறும் கூட நெடு நாட்கள் சேமிப்பில் இருந்து, பின்பு நினைவில் திரும்பும்!

4. ஒன்றைப் பெற்றதுமே, அதற்கு வேண்டியவை வாங்கச் சம்பளத்தில் பாதி போய்விடும்!


கணினி ஆண்தான் என்றனர் பெண்கள்! ஏனெனில்,

1. எதிரில் அமர்ந்து சொன்னால்தான் எதுவும் செய்யும்!

2. எல்லா விஷயமும் தெரிந்தும், தா
னா யோசிக்கா
து!

3. பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய அதுவே பல சமயம் பிரச்சனை ஆகிவிடும்!

4. ஒற்றைத் தேர்வு செய்து பெற்றதும், அதைவிட நல்லது கண்ணில் படும்!

 
Hello RR Mam,wow romba nalla irrukku ,all the previous posts .too good.Mam post 1482 font size differs ,IMPOV ,previous font you used has your touch and style.may be pls think I know its easy to suggest ,but author has to decided.:yo:
 

Dear Dr. Narayani,

I could not fix the caption for that post due to some problem in the server!

Finally, it turned out to be in a bigger size! That is all. Thank you for your nice comment. :)
 

முன்நாள் தென்கரை கிராமம்.


வைகை ஆற்றின் தென்கரையிலே உள்ள இதை
வைகறை நேரம் ரயில் சென்று அடைந்துவிடும்.

மாட்டு வண்டி ஒன்றுதான் முன்நாளில் வாகனம்;
ஓட்டும் வண்டிக்காரர் எல்லோரையும் அறிவார்!

பட்டணத்துப் பிள்ளைகளின் வரவில் அகமகிழ்ந்து,
சட்டென வந்தழைத்து, வண்டியில் அமர வைத்து,

மணிகள் ஜல் ஜல் என ஒலிக்க, மெதுவாகப் பெண்-
மணிகளை அழைத்து வருவார் அவர்கள் வீட்டிற்கு!

ஆண்கள் பொடி நடையாகவே வந்து சேருவார்கள்,
பெண்கள் இறங்கி வீட்டினுள்ளே செல்லும் முன்பே!

அழகான தண்டட்டிகளாலே காதின் மடல்கள் நீண்ட
வயதான மூதாட்டிகள், வழியிலே கண்டு சிரிப்பார்!

பொய்யான சிரிப்பைப் பட்டிணத்தில் கண்ட பின்பு,
மெய்யான அந்தச் சிரிப்பு சிலிர்க்க வைத்துவிடும்!

மண் தரை இருபுறமும் இருக்க, நடுவில் மட்டுமே
கண் காணுவோம் தார் இட்ட கருப்புத் தெருக்களை.

குப்பை கூளங்களைக் காலால் கீறியபடி, கொஞ்சிக்
குலவும் தன் குஞ்சுகளைத் தாய்க் கோழிகள் அங்கு!

கோலி குண்டுகளும், பம்பரங்களும் போதுமென்று
கேலியும் கூத்துமாய் விளையாடுவார் சிறுவர்கள்!

பள்ளிப் படிப்பைப் பற்றிய கவலையே படாது, தமது
துள்ளி விளையாடும் பருவத்தினை அனுபவிப்பார்!

கிணற்றில் நீர் இறைத்துத் தொட்டிகளிலே நிரப்பிட
கணக்காக ஒருவன் வந்திடுவான் அதிகாலையிலே!

மாடு கன்றைப் பராமரிப்பதும், பால் கறப்பதும் கூட
மாறாது அவன் செய்யும் தினப்படி வேலைகளாகும்!

தூய மனதுடன் மக்கள் சுற்றிலும் வாழ, சுவாசிக்கத்
தூய காற்றும் கிடைத்த அருமையான இடமே அது!


:grouphug: . . . :peace:
 

மாறிய கிராமக் காட்சிகள்!


மெத்து மெத்தென்ற மண் தரை மாறி, இப்பொழுது,
மெல்ல இட்டுவிட்டார்கள் 'கான்க்ரீட்' தெருக்களை!

மழை பொழிவது அதிசயமாகிவிட, பெய்கிற சன்ன
மழை நீரும், நிலத்தினுள் செல்ல வழியே இல்லை!

மாட்டு வண்டிகள் காணமல் போய்விட, துள்ளுந்து
ஓட்டும் பலர் கண்களில் படுகின்றார்கள்; அதனால்

காற்றின் தூய்மையும் அழிகின்றது! இனி தென்றல்
காற்றினை அங்கு அனுபவித்திட வழி இருக்குமோ?

பெருகி ஓடிய வைகை ஆற்றில், நீர் மட்டுமல்லாது
அருகிவிட்டது ஆற்று மணலும், பலர் திருடுவதால்!

வேலையாட்கள் கிடைப்பதும் கடினமானதால், தம்
வேலையைக் குறைக்க கிணற்று நீருக்கு மோட்டார்!

கிணறுகள் வற்றிப் போய்விட, மோட்டார் இருந்தும்
கிணற்று நீரை இறைக்கவே வழியின்றிப் போகிறது!

கல்வியின் அவசியத்தைப் புரிந்த சிறுவர், சிறுமியர்
கல்விக் கூடங்களுக்கு மிதிவண்டியில் செல்கின்றார்.

தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் உள்ளார்; ஆனாலும்
தன் பாட்டைப் பார்த்துக்கொண்டு சிரிக்க மறுக்கிறார்!

இன்றும் குப்பைக் கூளங்கள் உள்ளதால், கோழிகளும்
இன்று உலவுகின்றன தம் குஞ்சுகளைக் கொஞ்சியபடி!

அக்ரஹாரத்தில் வசித்த பல குடும்பங்கள் இடம் மாற,
அக்ரஹாரம் புது விதமாக மாறித்தான் போய்விட்டது!

சில வீடுகளில் சூரிய ஒளியாலே மின்சாரம் தயாரித்து,
பல மணிகள் மின்வெட்டை நன்றாகச் சமாளிக்கிறார்.

புதுமைகள் கொஞ்சம் புகுத்தினால், இந்த கிராமத்தில்,
பொதுவாக அமைதியான வாழ்வினை வாழ்ந்திடலாம்!

இரு புறமும் கோவில்கள் மிக அருமையாய் அமைந்த
ஒரு கிராமம் இதுவென்று திட்டவட்டமாகக் கூறலாம்!


:thumb:
 
Whatever it is, the old culture is disappearing in some quarters. Those days
after food is served and consumed by the guests and hosts, that place is used to be cleaned
by the cowdung from acharam point of view. From Cement Floor to Mosaic Floor and so on.
People do not eat on the floor and prefer only dining table. Everybody eats together
for the purpose of convenience and the plates go to the wash basin where other utensils
are gathered for cleaning. This is present day culture.

Balasubramanian
Ambattur
 
தண்டட்டியின் இன்னொரு பெயர் பாம்படம்.
http://ta.wiktionary.org/wiki/பாம்படம்

நான் வங்கியில் வேலைபார்த்தபோது, நல்ல எடையுள்ள பாம்படம் போன்ற நகைகளை கிராம மக்கள் நகைக் கடனுக்காக அடைமானம் வைத்தபோது இருபதுக்கும் மேற்பட்ட பலவிதமான அந்த நகை செட்களைப் பார்த்து வியந்ததும் வருந்தியதும் உண்டு. பெரும்பாலான நகைகள் காலப்போக்கில் மீட்கப் பட்டாலும் சில ஏலத்தில் விடப்படும்போது இன்னும் வருத்தமாக இருக்கும். உழவே முக்கியத் தொழிலாக இருந்த அன்றைய கிராமங்களின் செல்வச் செழிப்பில் விளைந்த இதுபோன்ற தங்க நகைகளை இன்று நம் ஏளிய மக்கள் அணியவோ, செய்யவோ முடியாமலிருப்பது நம் பொருளாதாரத்துக்கு வீழ்ச்சிதான்.

http://ta.wiktionary.org/wiki/பகுப்பு:அணிகலன்கள்
 
தண்டட்டியின் இன்னொரு பெயர் பாம்படம்.
http://ta.wiktionary.org/wiki/பாம்படம் .....
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தண்டட்டியும், பாம்படம் என்பது வேறு வடிவங்களாக இருக்குமோ?

இதோ நீங்கள் தந்த பக்கத்தில் நான் படித்த குறிப்பு:


"தென்னிந்தியாவின் காதணிகளில் தண்டட்டி, முடிச்சு, பாம்படம் என
பல வகைகள் உள்ளன. முடிச்சு, பாம்படம்

போன்ற நகைகளை தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள

வேளாளர் இனப் பெண்களும் பயன்படுத்துகிறார்கள்."

 

டாஸ்மாக் வாழ்க!?


குடிமகன்களை உற்சாகம் கொள்ள வைப்பவை,

குடித்து மகிழ வைக்கும் டாஸ்மாக் கடைகளே!

தெரு விளக்குகள் இரவில் எரியுமோ எரியாதோ,
தெருவில் டாஸ்மாக் கடைகள் ஜகஜ்ஜோதியே!

சிறுவர், முதியோர் என்ற வயது பேதமே இன்றி,
வருவர், குடித்து, களித்து, வாழ்வை அனுபவிக்க!

உடல் நொந்து நூலாகிப் பணமெல்லாம் பாழாகிக்
குடல் வெந்து போனாலும் அரசுக்கு ஏன் கவலை?

மாதம் ஒன்றுக்கு வருவாய் கோடிகளிலாம்! ஆம்!
மாதம் விற்பனை ஆயிரத்தி ஐநூறு கோடிகளாம்!

வந்த லாபம் ஐந்தில் ஒரு பங்கு என்றால் கூட, அது
வந்து கஜானாவில் விழுமே முந்நூறு கோடிகளாக!

மக்களைச் சீரழித்துக் கிடைக்கின்ற இப்பணத்திலே,
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டுவாராம்!

தீமை பரவுகின்றதே என்று வருந்துவதா? அல்லது,
தீமையில் நன்மை என்று இதையே பாராட்டுவதா?


:noidea:
 
Dear Raji Maam,

Post 1492 was beautifully written, my thoughts were also in the same line when the tasmac near our office opens at 830 itself and closes at about 1130 or so. There are no timings and many good textile and other shops in the complex have cloised down due to this tasmac shop. There is so much dirt and filth around ths place. If it is a drinking place is that a curse for the near by places to be so bad ? why cant they keep the area at least clean? the whole building looks like " booth banglow" and a shaddy place.

Cheers.
 
........ Post 1492 was beautifully written ........
Dear Sir,

Thank you very much. When the government boasts about the profit earned by selling liquor in Tasmac shops, it pains me a lot.

What is the use of minting money by tempting even school going children to 'drink' and enjoy life? :pout:
 
I read in a news item that jayalalitha has sent a study team to gujarat to find out how the gujarat government manages without liquor revenue.

Restriction and obsolete laws too lead to funny(!) situations. Last month, in the outskirts of pune, a resort owned by a SIT (police) officer was raided and about 50 people (mostly yuppie/IT/boy/girl crowd) were detained and about 40 were charged for consumption of drinks. One needs a permit to buy and consume liquor; the permit fee is about rs 20 for one month or about rs 500 for life.




டாஸ்மாக் வாழ்க!?


குடிமகன்களை உற்சாகம் கொள்ள வைப்பவை,

குடித்து மகிழ வைக்கும் டாஸ்மாக் கடைகளே!

தெரு விளக்குகள் இரவில் எரியுமோ எரியாதோ,
தெருவில் டாஸ்மாக் கடைகள் ஜகஜ்ஜோதியே!

சிறுவர், முதியோர் என்ற வயது பேதமே இன்றி,
வருவர், குடித்து, களித்து, வாழ்வை அனுபவிக்க!

உடல் நொந்து நூலாகிப் பணமெல்லாம் பாழாகிக்
குடல் வெந்து போனாலும் அரசுக்கு ஏன் கவலை?

மாதம் ஒன்றுக்கு வருவாய் கோடிகளிலாம்! ஆம்!
மாதம் விற்பனை ஆயிரத்தி ஐநூறு கோடிகளாம்!

வந்த லாபம் ஐந்தில் ஒரு பங்கு என்றால் கூட, அது
வந்து கஜானாவில் விழுமே முந்நூறு கோடிகளாக!

மக்களைச் சீரழித்துக் கிடைக்கின்ற இப்பணத்திலே,
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டுவாராம்!

தீமை பரவுகின்றதே என்று வருந்துவதா? அல்லது,
தீமையில் நன்மை என்று இதையே பாராட்டுவதா?


:noidea:
 

நாய் விற்ற காசு ...


'நாய் விற்ற காசு குறைக்காது' என்பதனை

நாம் அறிவோம் என்ற எண்ணத்திலேதான்,

'குடி குடியைக் கெடுக்கும்' என்று எச்சரித்து,
'குடிமகன்கள்' உருவாக வழிகள் பல செய்து,

வரும் நோய்களைப் பற்றிக் கவலைப்படாது,
பெரும் பணம் ஈட்டி வருகின்றது நமது அரசு!

மக்களை அழித்துப் பெறும் பணத்தில், நல்ல
அக்கறையோடு நல்வாழ்வும் அளிப்பாராம்!


:ohwell:
 

ஜாதி, மத,
வயது, பேதமில்லை! :thumb:

tas_0.jpg.crop_display.jpg


Photo courtesy: Google images.
 
post 1466 #
dear RR !
3 பற்றி பேசும் போது ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது
லிப்டில் மேலே போகும் போது என் நண்பர் சொன்னார் மூனுக்கு போகலாமா என்று கேட்டபோது முழிச்சேன் .அபபறதான் தெரிந்தது அவர் தமிழில் 3 தளம் போகலாம் என்றார் என்று
guruvayurappan
 

Latest posts

Latest ads

Back
Top