• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

மிக்க நன்றி நண்பரே! :yo:

முதலில் 'கண்டதை' என்று படித்ததும் :fear: அடைந்தேன்.

பின் 'கண்ணால் பார்த்த காட்சிகள்' என்று அறிந்தேன்! :high5:



ஹ..ஹா..."சிலேடை" எப்பிடி..?


முதலில் எழுதியது: "காண்பதற்க்கு தூண்டிடும் பயண விரிவுரைகள்.."


tvk






 
திரு ராஜி ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கண்டதை என்று சொன்னால் தவறில்லை
கண்டவற்றை சொன்னால் தான் தவறு

குருவாயுரப்பன்
 
Hello RR Mam ,wow its very nice to see your post I hope 2yrs have just passed as few days !!!! .Mam any way ,very happy to see your creations ,contribution,As usual keep rocking.
 

This is senior citizen special!! :)

ஒட்டாது இருக்க அறிவோம்...


சிறு வயதில் ஓடி ஓடி உழைத்தாலும், அது
முது வயதில் முடியாது போய்விடுகிறது!

கூட்டுக் குடும்பங்கள் அருகிடும் காலமிது;
கூடி வாழாவிடிலும், சிலர் முதுமையிலே

தம் மக்களுடன் வாழ வேண்டி வருகிறது!
தமது வாழ்வின் இறுதிப் பகுதியிலும் கூட,

தம் விருப்பபடி வாழ்ந்திட வேண்டுமெனத்
தம்முடன் இருப்பவரை, அதிகாரி போன்று

அதிகாரம் புரியும் சிலர், மற்றவர் செய்யும்
எதிலுமே திருப்தி இல்லாது வருந்துவார்!

தம் வாரிசுகளும் அவர்களின் வாழ்வினை,
தாம் வாழ ஆசைப்படுவார் என்று அறியார்!

நம்மால் முடிகின்ற வேலைகளைச் செய்து,
நம்மால் மற்றவர் துயரடையாதும் வைத்து,

ஒட்டாத தாமரை இலை மேல் நீரைப்போல்
ஒட்டாது இருந்து, அமைதியும் பெறுவோம்!


:peace:
 
Hello RR Mam,to your post 1532,I just when through the touchy words its 100% true ,but the bitter true fact is it can make any one who go through this ,when they feel it from the bottom of their heart to heavy heart.Mam you always give us the facts in sweet ,polished way.:yo:
 

நினைவுகள் பல இனித்தால், அனுபவப் பரிமாற்றம் தொடரும் ...... :typing:
 

இது பெற்றோருடன் வாழும் வாரிசுகளுக்கு!
--------------------------------------------------------------------------------

அன்பே வெல்லும்!


ஈன்ற பொழுது முதல், கனிவுடன் சீராட்டி,
சான்றோன் ஆகச் செய்பவர், பெற்றோரே!

எத்தனை பெயரும் புகழும் வரினும், அவர்
எத்தனை நன்மைகள் நமக்குத் தந்தாரென

மறந்து போவது நற்பண்பாகாது! அவரைச்
சிறந்த முறையில் காப்பது நல்ல கடமை!

அன்பைப் பொழியும் பெற்றோர் இருப்பின்,
அன்பு காட்டுவதும் எளிதாகவே இருக்கும்!

அதிகார வர்க்கமாய்ச் சிலர் மாறும்போதும்,
அதைப் பொருட்படுத்தாது இருத்தல் நலம்!

ஒதுங்கி இருக்கச் சொல்லாமல், அன்போடு
மெதுவாக அவர்களின் மனம் மாற வைத்து,

அவர்களின் விருப்பங்களையும், அன்புடன்
அவர்களிடம் கேட்டு அறிந்து, முதுமையை,

மன அமைதியோடு கழித்திட உதவுவோம்!
தினம் அவர்களது வாழ்வினை மதிப்போம்!


:pray2: . . . :)
 
post 1532 #
ராஜி ராம் அவர்களே !
எதிலுமே திருப்தி இல்லாது வருந்துவார்!
தம் வாரிசுகளும் அவர்களின் வாழ்வினை,
தாம் வாழ ஆசைப்படுவார் என்று அறியார்!
எல்லோரும் மனதில் கொள்ளவேண்டியதை மிக அருமையாக கூறிவிட் டீர்கள்

புரிந்து விட்டால் சோகமில்லை
குருவாயுரப்பன் i
 
post 1536 #
ராஜி ராம் அவர்களே !அதிகார தோரணை நிறைந் த வயதான்வர்களிடம் சொல்லி சரிசெய்ய முயல்வது பல நேரங்களில் விவகாரம் ஆகிவிடும்.பிடிக்காத விஷயம் வரும்போது .மௌனம் சாதிப்பது நன்மைதரும்
குருவாயுரப்பன் i
 
........எதிலுமே திருப்தி இல்லாது வருந்துவார்! ......... எல்லோரும் மனதில் கொள்ளவேண்டியதை மிக அருமையாக கூறிவிட் டீர்கள். ..........
நன்றி, குரு ஸார்!
எல்லாம் பல சூப்பர் சீனியர்களைப் பார்த்ததில் வந்த எண்ண அலைகளே! :decision: . . . :typing:
 
.......பிடிக்காத விஷயம் வரும்போது .மௌனம் சாதிப்பது நன்மை தரும்
மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

'மௌனம் கலக நாஸ்தி', என்று சும்மாவா சொன்னார்கள்? :tape:

 

புதிய மாற்றம்!


இரண்டு நாட்கள் முன்பு, ஜி - மெயிலைத்
திறந்த போது, 'அ' வைக் காணவில்லை!

'என் அருமைத் தமிழை, இனி எப்படி நான்
என் கணினியில் எளிதாக எழுதிடுவேன்?'

ஒரு நொடியில் மனம் முழுதும் சோகமே!
மறு நொடியில் கண்டேன் மாற்றங்களை!

கணினித் திரையின் வலது புற ஓரத்தில்
இனிதாய்த் தெரிந்தது 'த' என்ற எழுத்து!

அதில் 'க்ளிக்' செய்ய, எல்லா மொழியுமே
எளிதில் தட்டெழுதப் பட்டியல் ஒன்று வர,

தமிழ் (போனெடிக்) ஐத் தேர்வு செய்ததும்,
தமிழில் எழுதத் தேன்றியது ஒரு keyboard!

உயிர் எழுத்துக்களைக் குறில் நெடிலாக்க
உதவ, ஆங்கில small CAPITAL எழுத்துக்கள்!

ரகர - றகரம்; லகர - ளகரம்; னகர - ணகரம்,
சுகமாய் வரும் SHIFT KEY யின் உதவியால்!

பிழைகளைத் திருத்தும் பட்டியல் வராது!
பிழைகளை உடனுக்குடன் திருத்திடலாம்!

மிக எளிதானது என் இனிய தமிழ் எழுத்தே!

மிக அருமையான மாற்றம் என்பது நிஜமே!


:dance:
 
Last edited:
Hello RR Mam,to your post 1541,its very clearly seen ,told your affinity ,dedication towards your work and mam your lovable tamil language.The smiley clearly states your mind set .I just like it very much.
 
dear RR !
எனக்கும் தங்களை போல 3 நாட்களுக்கு முன்பே இந்த அதிர்ச்சி கிடைத்தது .ஆனால் இது மேம்பட்டு இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது
guruvayurappan
 

பிஞ்சிலே பழுக்க வைத்து .....

நெஞ்சை அள்ளும் பல இன்னிசைப் பாடல்கள்,
பிஞ்சு வயதினர் பாட, திரையிசையில் இருக்க,

விரக தாபத்துடனும், மோகத்துடனும் வருகின்ற
விகாரப் பாடல்களைத் தேர்வு செய்து கொடுத்து,

உணர்ச்சி ததும்பப் பாட வைத்து மகிழ்வதுதான்,
தனக்கு நிகரில்லை என்று பெருமை கொள்ளும்

இசை நிகழ்ச்சிக்கு உயர்வோ? இதுதான் புதுமை!
இசை பாடும் சிறுவர், சிறுமியரை, பிஞ்சிலேயே

பழுக்க வைத்து, அவர்களின் கண்ணோட்டத்திலே
இழுக்கு வர வைப்பாரோ என்பது எனது சஞ்சலம்!

புகழ் வர வேண்டுமானால், எதுவுமே செய்யலாம்!
புகழோடு வீடும் கிடைத்தால், எதுவுமே பாடலாம்!


:peace:
 
திருமதி ராஜி ராம்
Airtel super singer நிகழ்சிகளை பார்க்கும் பொழுது மனதிற்கு நெறுடல்...
எங்கே போகிறது நம் பண்பாடு? அதைவிட நமது கதாநாயகர்கள் மேற்கத்திய நாடுகளின்
வீதிகளில் காதல் காட்சிகளில் போடும் பல்ட்டி- குட்டிகரணம் முன்னதை மறந்து சிரிக்க வைத்துவிடுகிறது!
 
After all this is only a competition to prove their capability and talent.
I don't think there is any harm in doing so.
Dear Sir,

It is really awkward to see a tiny tot of ten years sing songs with 'viraha thAbam' and the judges appreciate for the

'best expression' given. Then he is asked to 'propose' to girls who are older to him, with a suitable film song! Do you think

there is no harm in doing so? Sorry Sir, I do not agree with your views!
 
......... Airtel super singer நிகழ்சிகளை பார்க்கும் பொழுது மனதிற்கு நெறுடல்...எங்கே போகிறது நம் பண்பாடு? .........!
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஷண்முகம் சார்!

நம்மைப்போ
ல, 'பிஞ்சிலே பழுக்க வைக்காதீர்கள்!' என்று சொல்பவர்களை, 'மடி சஞ்சி' என்றும்,

'பட்டிக்காடு' என்றும் அழைப்பார்கள், புதுமை விரும்பிகள்! இதெல்லாம் காலத்தின் கோலம்தான்

என்று சொல்ல வேண்டும். :dizzy:
 

நலம் தரும் நவராத்திரி!


சக்தி வடிவமாகப் பெண்களைக் கண்டு,
சக்தி படைத்த முப்பெரும் தேவியரை

நினைத்து வழிபட வருவது நவராத்திரி!
அனைத்து நங்கையரும் மிக்க மகிழ்ந்து,

பட்டுப் புடவை சரசரக்கப் பவனி வந்து,
எட்டுத் திசைகளிலும் நட்பை அழைத்து,

கொலுப்படிகளில் பொம்மைகள் வைத்து,
அலுக்காது அவற்றை நன்கு அலங்கரித்து,

தம் இல்லத்திற்கு வருகிற பெண்களுக்கு,
நம் கலாச்சாரப்படித் தாம்பூலம் அளித்து,

தினம் ஒரு வகைச் சுண்டலைப் படைத்து,
நலம் வேண்டிப் பூஜைகளும் பல செய்து,

நவாவரணக் கீர்த்தனைகள் பாடி மகிழ்ந்து,
சுவாசினிகளாகப் பெண்களை ஆராதித்து,

வண்ண மயமாகக் கொண்டாடிக் களித்து,
எண்ண இனிக்க வைப்பர் இந்த நாட்களை!


அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்! :high5:
 

Latest ads

Back
Top